வெளி 11ஆம் அதிகாரம் விளக்கம்
அப்போஸ்தலர் யோவானுக்கு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் கொடுக்கப்படுகிறது. இந்த அளவுகோலினால் யோவான் தேவனுடைய ஆலயத்தை அளந்து பார்க்கவேண்டும் (வெளி 11:12) தேவனுடைய இரண்டு சாட்சிகள் (வெளி 11:3-13). ஏழாம் எக்காளம் (வெளி 11:14-19)
அளவுகோல் வெளி 11 : 1,2
வெளி 11:1. பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுத்து, தேவனுடைய ஆலயத்தையும், பலி பீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்து பார்.
வெளி 11:2. ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.
அப்போஸ்தலர் யோவானுக்கு ஒரு அளவுகோல் கொடுக்கப்படுகிறது. இது கைக்கோலுக்கு ஒப்பாயிருக்கிறது. அப்பொழுது ஒரு தேவதூதன் யோவானுக்கு அருகிலே நிற்கிறார். - அவர் யோவானைப்பார்த்து, "நீ எழுந்து , தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்து பார்" என்று சொல்லுகிறார்.
தேவதூதன் யோவானிடத்தில் சொன்ன இந்தச் சம்பவம் போல எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும் ஒரு சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது. எசேக்கியேல் தேவனுடைய ஆலயத்தைத் தெரிவித்தார் எசேக்கியேல் தரிசித்த ஆலயத்தின் அளவு அளக்கப்பட்டது (எசே 40:3) அந்த சம்பவம் போலவே இங்கு தேவதூதன் யோவானிடம் தேவாலயத்தை அளந்து பார்க்குமாறு சொல்லுகிறார்.
கர்த்தருடைய கோபாக்கினை பூமியின் மீது வரப்போகிறது. உலகமெங்கும் பேரழிவு உண்டாகப்போகிறது. வரப்போகிற நியாயத்தீர்ப்பைக் குறித்து கர்த்தர் ஏற்கெனவே முன்னறிவித்திருக்கிறார். துன்மார்க்கருக்கு மாத்திரமே அழிவு வரும் கர்த்தருடைய பிள்ளைகளோ அந்த அழிவுகளிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். தேவதூதன் யோவானிடம், தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்கிறவர்களையும் அளந்து பார்க்குமாறு சொல்லுகிறார். இவர்கள் தேவனால் பாதுகாக்கப்படுவார்கள். இவர்களுக்கு ஒரு சேதமும் உண்டாகாது. இதை அளந்து பார்த்து உறுதி செய்துகொள்ளலாம்.
தேவதூதன் யோவானிடம் ஆலயத்தை அளப்பது பற்றிச் சொல்லும்போது, அதை எப்படி அளக்கவேண்டும் என்றும் சொல்லுகிறான் தேவனுடைய ஆலயத்தை அளக்கவேண்டும் ஆலயம் என்பது பொதுவாக சுவிசேஷ சபையைக் குறிக்கிற வார்த்தை. புதிய ஏற்பாட்டுக்காலத்திலுள்ள எல்லா சபைகளையும் இந்த வார்த்தை பொதுவாகக் குறிப்பிடுகிறது.
யோவான் தேவனுடைய ஆலயத்தை அளக்கும்போது அதிலுள்ள பலிபீடத்தையும் அளக்கவேண்டும். சபைகளில் உண்மையான பலிபீடம் இருக்க வேண்டும் விசுவாசிகள் பலிபீடத்தண்டையில் வந்து உங்களை கர்த்தரிடத்தில் ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும்.
யோவான் தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அளக்கும் போது அதில் தொழுதுகொள்கிறவர்களையும் அளந்து பார்க்க வேண்டும் அவர்களுடைய இருதயத்தை ஆராய்ந்து அளந்து பார்க்க வேண்டும் அவர்கள் தேவனுடைய ஆலயத்திலே கர்த்தரை மெய்யாகவே மகிமைப்படுத்துகிறார்களா என்பதை அளந்து பார்க்க வேண்டும் தேவனுடைய வார்த்தை அவர்களுடைய ஜீவியத்தை ஆளுகை செய்கிறது என்பதையும் அளந்து பார்க்க வேண்டும் ஆலயத்திலே வந்து தொழுதுகொள்ளுகிறவர்கள் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஜீவிக்கிறார்களா என்பதையும், அவர்கள் கர்த்தருக்கு சாட்சியாக ஜீவிக்கிறார்களா என்பதையும் அளந்து பார்க்க வேண்டும்.
தேவனுடைய ஆலயத்தை அளக்கும்போது, தேவாலயத்திலுள்ள எந்தப் பகுதிகளை அளக்கவேண்டுமென்றும், எந்தப் பகுதிகளை அளிக்கக்கூடாது என்றும் தேவதூதன் யோவானுக்குச் சொல்லுகிறார். தேவாலயத்திலே புறம்பேயிருக்கிற வெளிப்பிரகாரம், புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. யோவான் வெளிப்பிரகாரத்தை அளிக்கக்கூடாது அதைப் புறம்பாக்கிப்போடவேண்டும். ஏரோது ராஜா தேவாலயத்தை செப்பனிட்டு புதுப்பித்துக் கட்டினார். அப்போது ஏற்கெனவே இருந்த தேவாலயத்தில், மேலும் சில பகுதிகளை சேர்த்துக் கட்டினார் தேவாலயத்திலுள்ள வெளிப்பிரகாரம் ஏரோது ராஜாவினால் கட்டப்பட்டது இது தேவாலயத்திற்கு உரியதல்ல வெளிப்பிரகாரத்தை புறஜாதியாரின் பிரகாரம் என்று பேரிட்டு அழைத்தார்கள். வெளிப்பிரகாரத்தை தேவாலயத்
தின் ஒரு பகுதியாக கர்த்தர் அங்கீகரிக்கவில்லை கர்த்தர் வெளிப்பிரகாரத்தை பரிசுத்தமான பகுதியாக ஏற்றுக்கொள்ளவில்லை ஆகையினால் ஆலயத்திற்குப் புறம்பேயிருக்கிற வெளிப்பிரகாரத்தை அளவாமல், அதைப் புறம்பாக்கிப்போடுமாறு தேவதூதன் யோவானிடம் சொல்லுகிறார்.
தேவனுடைய ஆலயமும், எருசலேம் நகரமும் உபத்திரவத்திற்கு ட் படுத்தப்படும் இந்த உபத்திரவம் நித்திய காலமாய் இருக்காது உபத்திரவப்படுத்துகிறவர்கள் தேவாலயத்தையும், பரிசுத்த நகரமாகிய எருசலேமையும் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள். உபத்திரவம் இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரமே இருக்கும்.
வெளிப்பிரகாரத்தில் ஆராதிக்கிறவர்கள் கர்த்தரை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க மாட்டார்கள் அவர்களுடைய இருதயத்தில் உண்மைக்குப் பதிலாக மாய்மாலம் இருக்கிறது மாய்மாலமான ஆராதனையை கர்த்தர் அங்கீகரிப்பதில்லை. தேவனுடைய ஆலயத்தில் உட்பிரகாரத்தில் ஆராதிக்கிறவர்களை மாத்திரமே கர்த்தர் அங்கீகரிக்கிறார். திரைச்சீலைக்குள்ளே ஆராதிக்கிறவர்கள் மாத்திரமே கர்த்தருடைய சுதந்தரத்திற்குரியவர்கள். திரைச்சீலைக்கு வெளியே, வெளிப்பிரகாரத்திலிருந்து ஆராதிக்கிறவர்கள் இஸ்ரவேலின் காணியாட்சிக்குப் புறம்பானவர்கள்
வெளிப்பிரகாரத்தில் -ஆராதிக்கிற புறஜாதியார்கள், கர்த்தரை ஆராதித்தாலும் அவர்கள் மாய்மாலமான இருதயத்தோடு ஆராதிக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவதில்லை. தேவனுடைய பரிசுத்த நகரத்தை பரிசுத்தப்படுத்துவதில்லை. அவர்கள் பரிசுத்த நகரத்தை நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.
இரண்டு சாட்சிகள் வெளி 11: 3,4
வெளி 11:3. என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்கள ாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.
வெளி 11:4. பூலோகத்தின் ஆண்டவருக்குமுன்பாக திற்கிற இரண்டு ஒலிவ மரங்களின் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே
கர்த்தருடைய பிள்ளைகளுக்கு எவ்வளவு உபத்திரவம் வந்தாலும், ஒரு கூட்டம் ஜனத்தார் கர்த்தருக்கு மீதியான ஜனமாக பாதுகாக்கப்படுவார்கள். கர்த்தருக்காக மீந்திருக்கிறவர்கள் எல்லா தேசங்களிலும், எல்லா ஜாதியார் மத்தியில் எல்லா பாஷைக்காரரிடத்திலும் இருக்கிறார்கள் கர்த்தர் தமக்காக உண்மையுள்ள சாட்சிகளை நியமித்து வைத்திருக்கிறார்.
கர்த்தருடைய சாட்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் ஒரு சாட்சி இருந்தால் சத்தியம் தெளிவாக அறிவிக்கப்படும். இரண்டு சாட்சிகள் இருக்கும் போது, சத்தியம் உறுதி பண்ணப்படும் இரண்டு சாட்சிகள் போதுமானது. கர்த்தர் தமக்காக இரண்டு சாட்சிகளை இங்கு வைத்திருக்கிறார். இவர்களுடைய வாயிலிருந்து வரும் வார்த்தையினால் சத்தியம் உறுதி பண்ணப்படும் இயேசு கிறிஸ்து என்னுடைய சீடர்களை ஊழியத்திற்கு அனுப்பும்போது, அவர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்பினார் இரண்டுபேரும் சேர்ந்து ஒரே சுவிசேஷத்தை சாட்சியாய் அறிவித்தார்கள்.
இவ்விரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரம் உடுத்திக்கொண்டிருக்கிறார்கள். கர்த்தருடைய சத்திய வசனத்தை இவர்கள் தீர்க்கதரிசனமாகச் சொல்ல வேண்டும் தீர்க்கதரிசன ஊழியம் செய்வதற்கு கர்த்தர் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார் இவர்களுடைய ஊழியக்காலமும் ஒரு வரையறைக்குட்பட்டதாயிருக்கிறது. தாய் இருக்கிறது. அவர்கள் ஆயிரத்து இருநூற்று அறுபது நாளனவும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள் இந்தக் கால அளவு, அந்திக்கிறிஸ்துவினுடைய ஆளுகையின் கால அளவுக்கு ஒத்திருப்பதாக வேதபண்டிதர்கள் வியாக்கியானம் சொல்கிறார்கள்
இவ்விரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரம் உடுத்தி, ஆயிரத்து இருநூற்று அறுபது நாள்ளவும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் துக்கம் அனுசரிக்கிறார்கள் இரட்டு உடுத்திக்கொள்வது வழக்கம். சபைகளின் நிலை பரிதாபமாகவும் துக்கரமாகவும் இருக்கிறது சபைகளுக்குச் சொல்லப்படுகிற தீர்க்க தரிசன | வார்த்தைகளும் துக்கம் நிறைந்ததாகவே இருக்கிறது.
ஆகையினால் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தும் வண்ணமாக இவ்விரண்டு சாட்சிகளும் | இரட்டு வஸ்திரம் உடுத்திக் கொண்டிருக்கிறார்கள் இவ்விரண்டு சாட்சிகளும் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிறார்கள் கர்த்தராகிய தேவன் சர்வஉலகத்திற்கும் ஆண்டவராயிருக்கிறார். இந்தப் பூலோகத்திற்கு கர்த்தரே ஆண்டவர் இவ்விரண்டு சாட்சிகளும் பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாய் நிற்கிறார்கள். தேவனானவர் இவ்விரண்டு சாட்சிகளையும் செருபாபேல் போலவும் யோசுவாவைப்போலவும் ஆக்கியிருக்கிறார்.
சகரியா தீர்க்கதரிசி தரிசனத்திலே ஒலிவமரங்களையும் விளக்குத்தண்டுகளையும் தரிசித்தார். இந்த சம்பவம் சகரியா தீர்க்கதரிசியின் புஸ்தகத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான் : இதோ முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதன் உச்சியில் அதன் கிண்ணமும் அதின்மேல் அதின் ஏழு அகல்களும், அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற எழு குழாய்களும் இருக்கிறது அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்" (சக 4:2,3).
சகரியா கண்ட தரிசனம் போலவே யோவானும் பரலோகத்தில் தரிசனம் காண்கிறார். பரலோகத்திலே இரண்டு சாட்சிகள் பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிறார்கள் அவர்கள் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களாகவும், இரண்டு விளக்குத்தண்டுகளாகவும் இருக்கிறார்கள்.
இரண்டு சாட்சிகளின் அதிகாரம் வெளி 11: 5,6
வெளி 1:5 ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும்.
வெளி 11:6. அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தம் மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வா தங்களால் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.
இரண்டு சாட்சிகளும் செருபாபேல் போலவும் யோசுவாவைப்போலவும் இருக்கிறார்கள். அவர்கள் கர்த்தருடைய வார்த்தை ஆயிரத்து இருநூற்று அறுபது நாளளவும் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும். கர்த்தர் இவர்களுக்கு ஊழிய அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். இவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற காலத்திலே தேவனுடைய பாதுகாப்பு இவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இவர்களை யாரும் எளிதாக சேதப்படுத்த முடியாது.
இரண்டு சாட்சிகளுக்கு விரோதமாக இவர்களை சேதப்படுத்த யாராவது வந்தால், சாட்சிகளுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சித்துப்போடும். இரண்டு சாட்சிகளையும் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனா இருந்தாலும் அவன் கொல்லப்படுவான்.
இவ்விரண்டு சாட்சிகளும் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ஊழியம் செய்த எலியாவைப்போல வல்லமையுடையவர் களாயிருக்கிறார்கள். எலியாவைப் பிடிக்க போர்ச்சேவகர்கள் ஒருசமயம் வந்தார்கள். அப்பொழுது எலியா நான் தேவனுடைய மனுஷனானால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது'' என்று சொன்னார். உடனே தேவனுடைய அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது (2ராஜா 1:10,12). எலியா தேவனுடைய மனுஷன். எலியா சொன்ன போது அக்கினி வந்து, அவருடைய சத்துருக்களைப் பட்சித்துப்போட்டது.
அதுபோலவே இரண்டு சாட்சிகளையும் சேதப்படுத்த யாராவது மனதாயிருந்து அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சித்துப்போடுகிறது. கர்த்தர் தமக்கு சாட்சியாக ஊழியம் செய்கிறவர்களை பாதுகாக்கிறார். அவர்களுடைய சத்துருக்களைப் பட்சித்துப் போடுகிறார்.
இவ்விரண்டு சாட்சிகளும் தீர்க்கதரிசனம் சொல்லி வருகிற நாட்களிலே, கர்த்தர் என்னுடைய தீர்க்கதரிசன வார்த்தைகளை அற்புதங்கனினாலும் அடையாளங்களினாலும் உறுதி பண்ணுகிறார் இவர்கள் ஊழியம் செய்யும்போது, வானத்தை அடைக்கிற அதிகாரத்தை கர்த்தர் இவர்களுக்குக் கொடுக்கிறார். இவர்களுடைய வார்த்தையின் பிரகாரம் மழையும் பனியும் பெய்யும். அதுபோலவே இவர்களுடைய வார்த்தையின் பிரகாரம் மழையும் பனியும் பெய்யாதிருக்கும். கர்த்தருடைய இரண்டு சாட்சிகளும் வானத்தை அடைத்துவிடுவார்கள்.
எலியா கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணினார். அவருடைய வார்த்தையின்படியே கர்த்தர் வானத்தை அடைத்துப்போட்டார் எலியா மறுபடியும் சொல்லும் வரையில் தேசத்தில் பனியும் மழையும் பெய்யாதிருந்தது இராஜா 17:11. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கர்த்தர் எலியாவுக்கு அதிகாரம் கொடுத்தது போல இந்த இரண்டு சாட்சிகளுக்கும் இப்போது அதிகாரம் கொடுத்திருக்கிறார்.
இரண்டு சாட்சிகளும் தண்ணீர்களை இரத்தம் மாற்றக்கூடியவர்கள். தங்களுக்கு வேண்டிய போதெல்லாம் பூமியை சகலவித வாதைகளாலும் சாதிக்கக்கூடியவர்கள் இந்தக் காரியங்களையெல்லாம் இரண்டு சாட்சிகளும் தங்களுடைய சுயவல்லமையினால் செய்யவில்லை, இவற்றை செய்வதற்கு சர்வவல்லமையுள்ள கர்த்தர் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார். கர்த்தர் தம்முடைய வார்த்தைகளை அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் உறுதி பண்ணுகிறவர். இரண்டு சாட்சிகளும் தீர்க்கதரிசனம் சொல்லி ஊழியம் செய்கிற ஆயிரத்து இருநூற்று அறுபது நாள்ளவும், கர்த்தர் இவர்களுக்கு இந்த விசேஷித்த அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறார்.
பாதாளத்திலிருந்து ஏறுகிற மிருகம் வெளி 11:7-10
வெளி 11:7. அவர்கள் உங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலி ருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்று போடும்
வெளி 11:8. அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என் றும் என் றும் எகிப்து ஞானார்த்தமாய் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.
வெளி 11:9. -ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்று நாள் வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்.
வெளி 11:10. - அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.
கர்த்தருடைய இரண்டு சாட்சிகளும் ஆயிரத்து இருநூற்று அறுபது நாள்ளவும் தீர்க்க தரிசனம் சொல்லுவார்கள். அவர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஊழிக்காலத்தில் அவர்களை யாரும் சேதப்படுத்த முடியாது. கர்த்தர் அவர்களுக்கு விசேஷித்த அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனாலும் அவர்கள் தங்கள் சாட்சியை சொல்லி முடிக்கும்போது, அவர்கள் கொல்லப்படுவார்கள். கர்த்தருடைய இரண்டு சாட்சிகளும் இரத்தசாட்சிகளாக மரித்துப்போவார்கள். நீங்கள் சொன்ன சாட்சிகளை அவர்கள் உங்களுடைய இரத்தத்தினால் முத்திரையிடுவார்கள்.
இரண்டு சாட்சிகளும் சாட்சிகளைச் சொல்லி முடிக்கும் வரையிலும் அவர்களுக்கு ஒரு சேதமும் உண்டாகவில்லை ஆனால் அவர்கள் உங்கள் சாட்சியை சொல்லி முடித்திருக்கும்போது அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் கர்த்த ர் அவர்களுக்கு நியமித்திருக்கிற ஊழியத்தைச் செய்து முடிக்கும் வரையிலும் அவர்களுக்கு மரணம் நேரிடவில்லை. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கும் கர்த்தர் ஊழியம் கொடுத்திருக்கிறார். அந்த ஊழியத்தை நாம் உண்மையாக பக்தியாய் நிறைவேற்ற வேண்டும் கர்த்தர் கொடுத்திருக்கிற ஊழியத்தை நாம் நிறைவேற்றும் வரையிலும் நமக்கு மரணம் உண்டாகாது.
இரண்டு சாட்சிகளும் உங்கள் சாட்சியை சொல்லி முடித்திருக்கும்போது பாதாளத்திலிருந்து ஒரு மிருகம் ஏறுகிறது. அந்த மிருகம் அவர்களோடே யுத்தம் பண்ணுகிறது யுத்தத்தில் அவர்கள் ஜெயித்து அவர்களைக் கொன்றுவிடுகிறது அந்திக்கிறிஸ்து கர்த்தருடைய இரண்டு சாட்சிகளுக்கு விரோதமாக | பயங்கரமாய் யுத்தம் பண்ணுகிறான் சாட்சிகளோடு முரட்டுத்தனமாக மோதுகிறான். இந்த யுத்தத்தில், சத்துரு ஜெயிப்பதற்கு தம்முடைய சாட்சிகள் தோற்றுப்போவதற்கும் கர்த்தர் அனுமதி கொடுக்கிறார்.
அந்திக்கிறிஸ்து நித்திய ஜெயம் பெறுவதில்லை. கர்த்தருடைய சாட்சிகளும் நித்தியமாய்த் தோற்று போவதில்லை ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் மாத்திரமே கர்த்தருடைய சாட்சிகளுக்கு தோல்வி உண்டாயிற்று இந்தத் தோல்வியும் அவர்களுக்கு மிகவும் பயங்கரமான தோல்வியாயிற்று பாதாளத்திலிருந்து ஏறுகிற மிருகம் இவர்கள் இருவரையும் கொன்றுபோடுவதோடு தன்னுடைய
கொலைவெறியை தணித்துக்கொள்வதில்லை. அவர்களுடைய உடல்களை மகாநகரத்தின் விசாலமான வீதியிலே தூக்கி எறிகிறது அந்தப் வீதியிலே இரண்டு சாட்சிகளுடைய உடல்களும் கிடக்கிறது.
சாட்சிகள் இருவரும் செத்துப்போன பின்பும், அவர்களுடைய உடல்களைக் கண்ணியமாக அடக்கம்பண்ண மிருகம் அனுமதி கொடுக்கவில்லை. அவர்களுடைய உடல்களை கல்லறைகளில் வைக்க அனுமதி இல்லை . அதற்குப் பதிலாக, மிருகம் அவர்களுடைய உடல்களை நகரத்தின் விசாலமான வீதியிலே தூக்கியெறிந்து போடுகிறது அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய் சொல்லப்படும். அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையில் அறையப்பட்டார்.
மகாநகரத்தின் விசாலமான வீதியிலே நாட்கள் வரையிலும் கிடக்கும், அந்த இரண்டு சாட்சிகளுடைய உடல்களும் மூன்று உடல்களை ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் பார்ப்பார்கள். மூன்று நாட்கள் வரைக்கும் உடல்களை வீதியிலே பார்ப்பார்கள். அந்த உடல்களை கல்லறைகளில் வைப்பதற்கு யாரும் அனுமதி கொடுக்க மாட்டார்கள் பாதாளத்திலிருந்து ஏறுகிற மிருகம் மிருகம், இரண்டு சாட்சிகளை கொன்றுபோட்டதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்களுடைய மரித்துப்போன உடல்களையும் வாதிக்கிறது.
கர்த்தருடைய இரண்டு சாட்சிகளின் மரணம் துன்மார்க்கருக்கு மிகுந்த சந்தோஷமாயிருக்கும் இந்த உலகம் துன்மார்க்கத்தில் நிரம்பியிருக்கிறது. அந்திக்கிறிஸ்துவே அவர்களுடைய அதிபதியாயிருக்கிறான். இவ்விரண்டு சாட்சிகளும் அந்திக்கிறிஸ்துவுக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் சொன்னார்கள். இவர்கள் கர்த்தருடைய சத்திய வார்த்தைகளை தீர்க்கதரிசனமாகச் சொல் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினார்கள். இப்போதோ இரண்டு தீர்க்கதரிசிகளும் கொலை பண்ண பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய உடல்களை கல்லறைகளில் வைக்க முடியாதபடி அவை மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கிறது. இதைப் பார்த்து பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டு களிகூருவார்களாக தங்களுக்கு ஜெயமுண்டாயிற்று என்று நினைத்து ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள். கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு துன்பம் வரும்போது, துன்மார்க்கர்கள் சந்தோஷப்படுகிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் இரத்தசாட்சியாய் மரிக்கும்போது. பாவிகள் மகிழ்ந்து களிகூறுகிறவர்கள்
ஜீவஆவி வெளி 11:11
வெளி 11:11. மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலி ருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள் அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.
பாதாளத்திலிருந்து ஏறுகிற மிருகம் கர்த்தருடைய இரண்டு சாட்சிகளோடே யுத்தம் பண்ணி அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுவிடுகிறது அவர்களுடைய உடல்களும் கல்லறைகளில் வைக்கப்படாமல் வீதியில் கிடக்கிறது. தங்களுக்கு நித்திய | ஜெயம் கிடைத்திருப்பதாக நினைத்து பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டு களிகூறுகிறவர்கள் ஆனால்
அவர்களுடைய சந்தோஷம் நிலைத்திருக்க வில்லை அவர்களுடைய ஜெயமும் நிலைத்திருக்க வில்லை
மூன்றரை நாளைக்குப் பின்பு கர்த்தர் தம்முடைய | இரண்டு சாட்சிகளையும் உயிர்த்தெழச் செய்கிறார். கர்த்தருக்காக உண்மையாய் ஊழியம் செய்தவர்களை துன்மார்க்கர் கொன்றுபோடும்
கர்த்தருடைய பிள்ளைகளோ மரித்தாலும் மறுபடியும் பிழைப்பார்கள். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை மறுபடியும் பிழைக்கச் செய்வார் தம்முடைய ஊழியத்தை தடையில்லாமல் நடைபெறச் செய்வார். இரண்டு சாட்சிகளும் செத்துப்போன போது, தீர்க்கதரிசன ஊழியம் முடிந்துபோயிற்று என்று பூமியில் குடியிருக்கிறார்கள் நினைத்தார்கள். ஆனால் கர்த்தருடைய ஊழியம் முடிந்து போகவில்லை.
இரண்டு சாட்சிகளும் மரித்துப் போனார்கள் அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கிறது. மூன்று நாட்களாக வீதியில்தான் கிடக்கிறது எல்லோரும் அவர்களுடைய சடலங்களை பார்த்து மகிழ்ந்து களிகூறுகிறவர்கள் மூன்றரை நாளைக்குப் பின்பு, தேவனிடத்திலிருந்து ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்கிறது.
மரித்துப்போன -உடல்களுக்குள் தேவனுடைய ஜீவ ஆவி பிரவேசிக்கிறது. அப்போது இரண்டு சாட்சிகளும் மறுபடியும் உயிரோடு எழுப்ப படுகிறார்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே செத்தவர்களாகக் கிடந்த சாட்சிகள் இப்போது உயிர்பெற்று காலூன்றி நிற்கிறார்கள். அவர்களை பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.
தம்முடைய இரண்டு சாட்சிகளுக்கும் தேவன் ஜீவனைக் கொடுத்ததோடு நிறுத்திக் கொள்ள வில்லை அவர்களுக்கு சரீரப்பலத்தையும் கொடுக்கிறார். இதனால் இரண்டு சாட்சிகளும் மறுபடியும் உயிர்பெற்று காலூன்றி நிற்கிறார்கள். அவர்களுடைய உடல்கள் வீதிகளிலே கிடந்து நாற்றமெடுக்கவேண்டும் என்றும், வெயிலிலும் மழையிலும் இந்த உடல்கள் அழுகிப் போக வேண்டும் என்றும் கிடந்து சத்துருக்கள் எதிர் பார்த்தார்கள் ஆனால் கர்த்தரோ மரித்துப்போன சரீரத்திற்கு ஜீவனைக் கொடுக்கிறார். பெலனற்று, உயிரற்று வீதியிலே கிடந்த உடல்களுக்கு ஜீவனையும் பலத்தையும் கொடுக்கிறது
வீதிகளில் கிடந்த உடல்களைப்பார்த்து பூமியில் "குடியிருக்கிறார்கள் சந்தோஷப்பட்டு களி கூர்ந்தார்கள் இப்போதோ இரண்டு சாட்சிகளும் காலூன்றி நிற்கிறார்கள். இவர்களைப் பார்த்தபோது பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று சந்தோஷப்பட்டு களிகூர்ந்தவர்கள் இப்போது மிகவும் பயப்படுகிறார்கள்.
பாதாளத்திலிருந்து ஏறுகிற மிருகம் கர்த்தருடைய ஊழியக்காரர்களை வஞ்சனையாக கொன்றுபோடும் ஊழியக்காரர்கள் மீது முரட்டுத்தனமாக முதலாம் பலவந்தமாக யுத்தம் பண்ணலாம் கர்த்தருடைய ஊழியக்காரர்கள் இரத்தசேதாரம் உண்டாகலாம். ஊழியக்காரர்கள் இரத்தசாட்சியாக மரிக்கவேண்டியது கூட வரலாம். ஆனாலும் கர்த்தர் நமக்கு ஜெயங்கொடுக்கிற வார்
கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் பாக்கியவான் கள் நாம் மரித்தாலும் மறுபடியும் உயிரோடு எழுந்திருப்பேன் உபத்திரவப்படுத்துகிற ஆவியையுடையவர்கள் துன்மார்க்கர்கள். இவர்கள் வீரர்களைப்போல மாய்மாலம் பண்ணுகிறார்கள் மெய்யாகவே இவர்கள் வீரர்களல்ல. இவர்கள் கோழைகள்.
வானத்திற்குப் போனார்கள் வெளி 11 : 12,13
வெளி 11:12. இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து உங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்கு போனார்கள் அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.
வெளி 11:13. அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்த்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொரு பங்கு இடித்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள் மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
தேவனிடத்திலிருந்து ஜீவ ஆவி செத்துப்போன சாட்சிகளுடைய உடல்களுக்குள் பிரவேசித்தது. அப்போது அவர்கள் மறுபடியும் உயிர்பெற்று காலூன்றி நிற்கிறார்கள். அந்தவேளையில், "இங்கே ஏறி வாருங்கள்'' என்று வானத்திலிருந்து அவர்களுக்கு பெரிய சத்தமுண்டாயிற்று இரண்டு சாட்சிகளும் பெரிய சத்தத்தைக் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்.
தேவன் அவர்கள் அழைக்கும் வரையிலும் இரண்டு சாட்சிகளும் வானத்திற்கு ஏறிப்போக முயற்சி பண்ண வில்லை. கர்த்தர் தங்களை மகிமைப்படுத்துகிற வேளை வரும் வரையிலும் அவர்கள் பொறுமையோடு காத்திருக்கிறார்கள். "இங்கே ஏறி வாருங்கள் என்று கர்த்தர் அவர்களை அழைத்த போது இரண்டு சாட்சிகளும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போகிறார்கள்.
கர்த்தருக்காக சாட்சி கொடுக்கிறவர்கள் -கர்த்தருடைய சத்தத்தைக் கேட்க வேண்டும் கர்த்தர் உங்களை அழைக்கும் வரையிலும் பொறுமையோடு காத்திருக்க வேண்டும் கர்த்தரிடத்திலிருந்து அழைப்பு வரும்போதோ, அவருடைய அழைப்புக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி, முன்னேறிச் செல்ல வேண்டும்.
இரண்டு சாட்சிகளும் மேகத்தில் ஏறி வானத்திற்குப் போகிறார்கள். அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்க்கிறார்கள். அவர்கள் இருவரும் மறுபடியும் உயிர்பெற்று காலூன்றி நின்றபோது பூமியில் குடியிருக்கிறவர்கள் அவர்களைப் பார்த்து பயந்தார்கள் இப்போதோ அவர்கள் இருவரும் மேகத்தில் ஏறி வானத்திற்குப் போவதைப் பார்க்கிறார்கள். அந்த நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது. உடனே அந்த நகரத்தில் பத்தில் ஒரு பங்கு இடிந்து விழுந்தது. மனுஷரில் ஏழாயிரம் பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்.
பூமியில் குடியிருக்கிறவர்கள் இரண்டு சாட்சிகளும் மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனதையும் பார்க்கிறார்கள். தங்களுக்கு திடீரென்று வந்திருக்கிற பேரழிவையும் பார்க்கிறார்கள் மனுஷர் மத்தியிலே திகிலும், நடுக்கமும், - பயமும் உண்டாயிற்று எல்லோரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் தேவனைப்பற்றிய பயம் அவர்களுடைய உள்ளத்தில் உண்டாயிற்று மரித்துப்போனவர்களைத் தவிர, மீதியானவர்கள் பயமடைந்து, பரலோகத்தின் தேவனை மகிமைப் படுத்துகிறார்கள்.
தேவனுடைய ஊழியம் புதுப்பிக்கப்படுகிறது. அவருடைய இரண்டு சாட்சிகளும் மறுபடியும் உயிர்ப்பிக்கப்படுகிறார்கள். அப்போது பிசாசின் கிரியைகள் வீழ்ந்து போகிறது பிசாசினுடைய கூட்டத்தார் கர்த்தருக்கு முன்பாக தாழவிழுகிறார்கள். அவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப் படுத்துகிறார்கள் கர்த்தர் கிரியை செய்கிறார். கர்த்தர் யுத்தம் பண்ணுகிறார் கர்த்தர் ஜெயம் பெறுகிறார் யுத்தம் கர்த்தருடையது. சாத்தான் பாதாளத்திலிருந்து ஒரு மிருகம்போல ஏறிவந்தாலும் அவன் அழிந்து போகிறான் ஆரம்பத்தில் சாத்தானுக்கு வெற்றி கிடைப்பது போல் தெரிந்தாலும் முடிவில் அவருக்கு தோல்வியே உண்டாயிற்று
ஏழாம் எக்காளம் வெளி 11 : 14-18
வெளி 11:14. இரண்டாம் ஆபத்து கடத்துபோயிற்று; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வருகிறது.
வெளி 11:15. ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்குக் அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.
வெளி 11:16. அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள் மேல் உட்கார்ந்திருந்த இருபத்து நான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து:
வெளி 11:17. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறருவமாகிய சர்வல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம் தேவரீர் உமது மகா வல்லமைக் கொண்டு ராஜ்யபாரம் பண்ணுகிறார்.
வெளி 11:18. சாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது | உம்முடைய கோபம் முண்டது மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கு பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
ஆறாம் தூதன் எக்காளம் ஊதியவுடனே, ஏழாம் தூதன் எக்காளம் ஊதுவான் என்று ஒரு எதிர்பார்ப்பு உண்டாயிற்று ஆனால் ஏழாம் தூதன் உடனே எக்காளம் ஊத வில்லை இவன் எக்காளம் ஊதுவதற்கு முன்பாக ஒரு சில சம்பவங்கள் நடைபெறுகிறது. அந்தச் சம்பவங்களெல்லாம் முடிந்த பின்பு தான், ஏழாம் தூதன் எக்காளம் ஊதுகிறான். இதுவரையிலும் இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று. இனிமேல் மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வரப்போகிறது.
ஏழாம் தூதன் எக்காளம் ஊதியபோது பரலோகத்திலுள்ள பரிசுத்தவான்களும் தூதர்கள் கர்த்தருடைய சமூகத்தில் சந்தோஷமாய் ஆர்ப்பரிக்கிறார்கள்.
ஏழாம் தூதன் எக்காளம் ஊதும் போது, வானத்தில் கெம்பீர சத்தமுண்டாயிற்று. "உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்கும் உரிய ராஜ்யங்களாயின, அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்" என்று கெம்பீர சத்தங்களாய் வானத்தில் உண்டாயிற்று.
இருபத்து நான்கு மூப்பர்களும் தேவனுக்கு முன்பாக தங்கள் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். வானத்தில் உண்டான கெம்பீர சத்தத்தை இருபத்து நான்கு மூப்பர்களும் கேட்டபோது, அவர்கள் தங்கள் சிங்காசனத்திலிருந்து எழுந்திருந்து, தேவனுக்கு முன்பாக முகங்குப்புற விழுகிறார்கள். கர்த்தரைத் துதிக்கிறார்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வே உலகத்தின் ராஜ்யங்களை சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ண பாத்திரராய் இருக்கிறார்
உலகத்தின் -எல்லா ராஜ்யங்களும் கர்த்தருக்கே உரியது என்று சொல்லி மூப்பர்கள் கர்த்தரைத் துதிக்கிறார்கள் தேவனுடைய சர்வவல்லமையை மூப்பர்கள் அங்கீகரித்து அவர் நன்றியோடு துதிக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் ராஜ்ய பாரத்திற்கு முடிவில்லை அவர் சதாகாலங்களிலும் ஆட்சிபுரிகிறவர். கர்த்தருடைய கையிலுள்ள செங்கோலை யாராலும் பரித்துக்கொள்ள முடியாது.
கர்த்தராகிய தேவனே இருக்கிறவரும் இருந்தவரும் வருகிற வருமா இருக்கிறார் அவரே சர்வ வல்லமை உள்ளவர் தேவன் தமது மகாவல்லமையைக் கொண்டு ராஜ்யபாரம் பண்ணுகிறார் என்று இருபத்து நான்கு மூப்பர்களும், தேவனுக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, அவரை நன்றியோடு துதிக்கிறார்கள்,
தேவனுடைய வல்லமை இந்த உலகத்தில் வெளிப்பட்டபோது எல்லா ஜனங்களும் அவருடைய வல்லமையை ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத ஜாதிகள் தேவனுடைய வல்லமையைப் பார்த்து கோபித்தார்கள். அப்போது கர்த்தருடைய கோபமும் மூண்டது. துன்மார்க்கருடைய இருதயம் தேவனுக்கு விரோதமாக எழும்பிற்று அவர்கள் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணினார்கள். தங்களுடைய பாவமான கிரியைகளினால் தங்களுக்கு அதிகமாக அழிவை வருவித்துக் கொண்டார்கள். அவர்களுடைய துன்மார்க்கமான கிரியைகளெல்லாம் அவர்களுக்கு கேடாக லபித்தது
தேவன் தம்முடைய மகாவல்லமையைக் கொண்டு ராஜ்யபாரம் பண்ணுவதைப் பார்த்து, கர்த்தருடைய பரிசுத்தவான்கள் சந்தோஷப்பட்டார்கள். ஆனால் கர்த்தருக்கு விரோதமான துன்மார்க்கமான ஜாதிகளோ கோபித்தார்கள். கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள் தனக்கு விரோதமாக கோபிக்கிறவர்கள் மீது தேவனுடைய கோபம் மூண்டது தேவனுடைய கோபத்தை துன்மார்க்கரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. முதலில் கோபித்தார்கள். கர்த்தரை எதிர்த்தார்கள் கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். கர்த்தர் அவர்கள் மீது கோபம் கொண்டவன் துன்மார்க்கரால் கர்த்தருடைய கோபத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பரிதபித்தார்கள்.
-கர்த்தர் நீதியாய் ராஜ்யபாரம் பண்ணுகிறார். அவர் தமது மகாவல்லமையைக் கொண்டு ராஜ்யபாரம் பண்ணுகிறார் இருபத்து நான்கு -மூப்பர்களும் தேவனுக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து தேவனைத் தொழுது கொள்கிறார்கள் அப்போது மூப்பர்கள், "மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகள் உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின் மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி தேவனைத்
தொழுது கொள்கிறார்கள்
பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் வெளி 11:19
வெளி 11:19. அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியை பெருங்கல் மழையும் உண்டாயின.
பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டதை யோவான் தரிசிக்கிறார். தேவனுடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி இருக்கிறது. இந்தப் பெட்டி இருக்குற இடம் கர்த்தருடைய மகாபரிசுத்த ஸ்தலம். உடன்படிக்கை பெட்டியில் கர்த்தருடைய கட்டளை பலகைகள் வைக்கப்பட்டிருக்கிறது. யோசியாவின் காலத்திற்கு முன்பாக உடன்படிக்கை பெட்டி காணாமல்போயிற்று அது மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல
அந்திக்கிறிஸ்துவினுடைய ஆட்சிக்காலத்தில் தேவனுடைய உடன்படிக்கை பெட்டி எங்கு இருக்குமென்று தெரியாது. ஆனாலும் அந்திக்கிறிஸ்துவினுடைய ஆட்சி முடிவுபெற்றவுடன் தேவனுடைய உடன்படிக்கை பெட்டி தேவனுடைய ஆலயத்தில் காணப்படும். அந்திக்கிறிஸ்துவினுடைய ஆட்சிக்காலத்தில் தேவனுடைய பிரமாணத்திற்குப் பதிலாக, அந்திக்கிறிஸ்துவின் பிரமாணமே அமுலில் இருக்கும் தேவனுடைய ஆட்சி வரும்போது அவருடைய பிரமாணம் மறுபடியும் ஆளுகை செய்யும் தேவனுடைய சத்தியவசனங்கள் திறக்கப்படும். அது எல்லோரும் காணும்படியாக இருக்கும் பரலோகத்திலே தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்ட போது, அங்கு அவருடைய உடன்படிக்கை பெட்டி எல்லோருக்கும் காணப்படுகிறது எல்லோரும் அந்தப் பெட்டியிலுள்ள தேவனுடைய பிரமாணத்தை வாசிக்கலாம்.
கர்த்தர் சீனாய் மலையிலே மோசேக்கு பத்து கட்டளைகள் கொடுத்த போது அங்கு மின்னல்களும் சத்தங்களும் இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியில் பெருங்கல்மழையும் உண்டாயிற்று. அதுபோலவே தேவனுடைய ஆலயத்தில் உடன்படிக்கை பெட்டி காணப்பட்ட போதும் அங்கு மின்னல்களும் சத்தங்களும் இடிமுழக்கங்களும் பூமியதிர்ச்சியை பெருங்கல்மழையும் உண்டாயின. தேவன் நீதியுள்ளவர் அவர் பயங்கரமான கிரியைகளை நடப்பிக்கிறவர். தேவனுடைய பரிசுத்த ஆலயத்திலே ஏறெடுக்கப்படுகிற எல்லா வேண்டுதல்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் செவிகொடுக்கிறவன் கர்த்தர் பெரியவர். இப்போது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டிருக்கிறது.
