வெளி 10ஆம் அதிகாரம் விளக்கம்

வெளி 10ஆம் அதிகாரம் விளக்கம்

அப்போஸ்தலர் யோவான் பலமுள்ள வேறொரு தூதனைக் காண்கிறார் திறக்கப்பட்ட ஒரு சிறு புத்தகம் அந்த தூதனுடைய கையில் இருக்கிறது (வெளி 10:1-3). ஏழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழக்குகிறது (வெளி 10:4). சமுத்திரத்தின் மேலும் பூமியின் மேலும் நிற்கிற தூதன், வானத்திற்கு நேராக தன் கையை உயர்த்தி ஆணையிடுகிறார் (வெளி 10:5-7). அப்போஸ்தலர் யோவானுக்குக் கொடுக்கப்படுகிற கட்டளை (வெளி 10:3-11)

பலமுள்ள வேறொரு தூதன் வெளி 10 :1-4

வெளி 10:1. பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வர கண்டேன் மேகம் அவனைச் சூழ்த்திருத்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.

வெளி 10:2. திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலது பாதத்தைச் சமுத்திரத்தின் மேலும் தன் இடது பாத திரைப் பூமியின் மேலும் வைத்து,

வெளி 10:3. சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல் மகாசத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தது ஏழு இடிகளும் சத்திமிட்டு முழங்கின.

வெளி 10:4. அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கியபோது நான் எழுத வேண்டு மென்றிருத்தேன். அப்பொழுது ஏழு இடி முழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.

அப்போஸ்தலர் யோவானுக்கு பரலோகத்திலுள்ள ஒவ்வொரு சம்பவங்களையும் தரிசிக்கிற சிலாக்கியம் கிடைத்திருக்கிறது. பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வருகிறார். அந்தத் தூதனை யோவான் காண்கிறார் அந்தத் தூதனை மேகம் சூழ்ந்திருக்கிறது. தூதனுடைய முகம் சூரியனைப்போலவும், அவருடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருக்கிறது.

தூதன் தன் வலதுபாதத்தை சமுத்திரத்தின் மேலும், தன் இடது பாதத்தை பூமியின் மேலும் வைத்திருக்கிறார். அவருடைய கையில் திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் இருக்கிறது இந்தப் புஸ்தகம் ஒருவேளை இத
ற்கு முன்பு சொல்லப்பட்ட முத்திரிக்கப்பட்ட புஸ்தகமாக இருக்குமென்று வேதபண்டிதர்கள் சொல்கிறார்கள் அந்தப் புத்தகத்தின் முத்திரைகள் இப்போது உடைக்கப்பட்டு, அது இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். அவையெல்லாம் நிச்சயமாய் ஏற்றக்காலத்தில் நிறைவேறும்,

பலமுள்ள அந்த வேறொரு தூதன், சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகா சத்தமாய் ஆர்ப்பரிக்கிறார். அந்தத் தூதன் ஆர்ப்பரித்த போது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்குகிறது தேவனுடைய சிந்தையை அறிவதற்கு ஏழுவழிகள் உள்ளன. அவை பரிசுத்தமான வழிகள். அதே வேளையில் அந்த வழிகள் பயங்கரமானவையாகவும் இருக்கும்.

அப்போஸ்தலர் யோவான் எழுஇடிகளும் சத்தமிட்டு முழங்குகிறதைக் கேட்கிறார். அப்பொழுது யோவானுக்கு எழுதவேண்டும் என்னும் விருப்பமுண்டாயிற்று. அவர் தான் பார்த்ததையும், கேட்டதையும் எழுதுவதற்கு ஆயத்தமாயிருக்கிறேன் அப்போது யோவானுக்கு வானத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று இந்தத் சத்தத்தை யோவான் கவனித்துக் கேட்கிறார். "ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரை போடு என்று அந்தச் சத்தம் யோவானுக்குச் சொல்லிற்று அந்த இரகசியத்தை எழுதுவதற்கு இன்னும் ஏற்றகாலம் வரவில்லை . காலம் நிறைவேறும்போது தேவனுடைய சித்தத்தின் பிரகாரமாக, தேவனால் நியமிக்கப்பட்டிருக்கிற காரியங்களெல்லாம் ஒவ்வொன்றாய் நிறைவேறும்.

தேவரகசியம் நிறைவேறும் வெளி 10:5-7

வெளி 10:5. சமுத்திரத்தின் மேலும் பூமியின்மேலும் திற்கிறதாக தான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி:

வெளி 10:6. இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊத போகிறது போது தேவரகசியம் திறைவேறும் என்று,

வெளி 10:7. வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதில் உள்ளவைகளும் சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னார்

வானத்திலிருந்து இறங்கி வந்த பலமுள்ள வேறொரு தூதன் தான் சொன்னவற்றை தேவன்மேல் ஆணையிட்டுச் சொல்லுகிறார். பலமுள்ள தூதன் சமுத்திரத்தின் மேலும் பூமியின் மேலும் நிற்கிறார் அவருடைய வலது பாதம் சமுத்திரத்தின் மேலும், அவருடைய இடதுபாதம் பூமியின் மேலும் நிற்கிறது. அந்தத் தூதன் தன்னுடைய கையை வானத்திற்கு நேராக உயர்த்தி ஆணையிடுகிறார்.

"இனி காலம் செல்லாது. சுவிசேஷத்தில் உள்ள தேவரகசியம் நிறைவேறும் என்று தூதன் ஆணையிடுகிறார். தேவரகசியம் நிறைவேறுவதில் இனிமேல் காலதாமதம் ஏற்படாது. இந்தச் சுவிசேஷத்தைத் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்கு அறிவித்திருக்கிறார்.

வானத்திலிருந்து இறங்கி வந்த தூதன், இந்தத் தேவரகசியம் நிறைவேறும் காலத்தையும் முன்னறிவிக்கிறது ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே, அவன் எக்காளம் ஊதப்போகிறபோது, சுவிசேஷத்தில் சொல்லப்பட்டிருக்கிற தேவரகசியம் நிறைவேறும் இந்த ரகசியம் நிறைவேறுவதற்கு இதற்குமேல் காலதாமதம் உண்டாகாது தேவனுடைய ரகசியம் நிறைவேறும்போது, அதற்குப் பின்பு ஒரு காலமும் வராது எல்லா காலமும் முடிந்து போகும்

வானத்திலிருந்து இறங்கி வந்த தூதன், தான் சொன்ன வார்த்தைகளை தேவன் மேல் ஆணையிட்டுச் சொல்லுகிறார். தேவனைப்பற்றி சொல்லும்போது அவருடைய சர்வ வல்லமையும் சிருஷ்டிக்கும் வல்லமையையும் விசேஷமாக எடுத்துச் சொல்லுகிறார். கர்த்தர் வானத்தையும் அதில் உள்ளவைகளும் பூமியையும் அதில் உள்ளவைகளும் சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவர். அவர் சர்வ சிருஷ்டிகரே தேவன் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் அப்பேற்பட்ட சர்வவல்லமையுள்ள தேவன்மேல் வானத்திலிருந்து இறங்கி வந்த தூதன் ஆணையிட்டுச் சொல்லுகிறார்.

சிறு புத்தகம் வெளி 10:8,9

வெளி 10:8. நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின் மேலும் பூமியின் மேலும் திற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல, 

வெளி 10:9. நான் தூதனிடத்தில் போய் அத்த சிறு புத்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதுரமாயிருக்கும் என்றான்.

வானத்திலிருந்து இறங்கி வந்த தூதன் சமுத்திரத்தின் மேலும் பூமியின் மேலும் நிற்கிறார் அவர் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவன் மேல் ஆணையிட்டுச் சொல்லுகிறார். அப்போஸ்தலர் யோவான் அந்தத் தூதன் தரிசிக்கிறார் அவர் சொன்ன வார்த்தைகளைக் கவனித்துக் கேட்கிறார். இந்தத் தூதன் வானத்திற்கு நேராக தன் கையை உயர்த்தி பேசுவதற்கு முன்பாக, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. அந்தச் சத்தம் யோவானிடம், ஏழு இடி முழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு" (வெளி 10:4) என்று சொல்லிற்று அந்தச் சத்தம் இப்போது மறுபடியும் யோவானோடு பேசிற்று.

வானத்திலிருந்து இறங்கி வந்து சமுத்திரத்தின் மேலும் பூமியின் மேலும் நிற்கிற தூதனுடைய கையில் திறக்கப்பட்ட ஒரு சிறு புத்தகம் இருக்கிறது. அந்தப் புஸ்தகத்தை போய் வாங்கிக் கொள்ளுமாறு வானத்திலிருந்து பிறந்த சத்தம் யோவானிடம் சொல்லிற்று யோவான் அந்தச் சத்தத்திற்குக் - கீழ்ப்படிந்து, சமுத்திரத்தின் மேலும் பூமியின் மேலும் நிற்கிற தூதனிடத்தில் போய் இந்தச்- சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும்" என்று கேட்கிறார்.

அந்தத் தூதன் யோவானிடம், "நீ இதை வாங்கி புசி" என்று சொல்லுகிறார். ஏஎழுஇடிகளும் உங்கள் சத்தங்களை முழங்கினபோது யோவான் எழுதவேண்டுமென்றிருந்தார் (வெளி 10:4), அப்போது வானத்திலிருந்து ஒரு சத்தம் அவரை எழுதவிடாமல் தடைபண்ணிற்று. யோவான் தேவரகசியங்கள்

எழுதுவதற்கு முன்பாக, அந்த ரகசியங்களை அவர் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் தேவனுடைய சத்தியங்களைக் குறித்த தெளிந்த ஞானம் அவருக்கு இருக்கவேண்டும். தனக்குப் புரியாத ஒன்றை யோவான் எழுதக்கூடாது. ஆகையினால்தான், சமுத்திரத்தின் மேலும் பூமியின் மேலும் நிற்கிற தூதன் யோவானிடம், "நீ இந்தப் புஸ்தகத்தை வாங்கிப் புசி" என்று சொல்லுகிறார்.

யோவான் எழுதுவதற்கு முன்பாக அந்தப் புஸ்தகத்தை முழுவதுமாகப் படிக்க வேண்டும் அதில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற தேவரகசியங்கள் யோவானுடைய இருதயத்தில் நிரம்பியிருக்க வேண்டும் சத்திய வசனம் ஆவிக்குரிய போஜனம். சரீரப்பிரகாரமாக போஜனத்தைப் புசிப்பதுபோல, ஆவிக்குரிய போஜனத்தையும் புசிக்க வேண்டும்

திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை வைக்கும்போது அதன் சுவை எப்படியிருக்கும் என்பதையும் தூதன் யோவானுக்கு சொல்லுகிறார் அந்தப் புஸ்தகம் யோவானுடைய வயிற்றுக்கு கசப்பாய் இருக்கும் ஆனால் அவருடைய வாய்க்கு இது தேனைப்போல மதுரமாயிருக்கும். யோவான் திறக்கப்பட்ட அந்தச் சிறு புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசனங்களையெல்லாம் தியானித்து அவற்றின் தாற்பரியங்கள்

புரிந்து கொள்ளும் போது அதிலுள்ள சத்தியங்கள் அவருக்கு மிகவும் கசப்பாயிருக்கும் இனிமேல் நடைபெறப்போவதாக முன்னறிவிக்கப்பட்டிருக்கிற சம்பவங்களெல்லாம் மிகவும் பயங்கரமானதாக இருக்கும் அந்தச் சம்பவங்கள் நடைபெறும்போது மனதிற்கு மகிழ்ச்சி இருக்காது பயங்கரமான சம்பவம் இனிக்காது. அது கசப்பாகவே இருக்கும்

அப்போஸ்தலர் யோவான் வெளி 10 : 10-11

வெளி 10:10. நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலி ருத்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அது தேனைப்போல் மதுரமாயிருத்தது நான் அதைப் புசித்தவுடனே என் | வயிறு கசப்பாயிற்று.

வெளி 10:11. அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.

அப்போஸ்தலர் யோவான் தூதனுடைய கையிலிருந்து அந்தச் சிறு புஸ்தகத்தை வாங்குகிறார். வானத்திலிருந்து பிறந்த சத்தம் தனக்குச் சொன்னதுபோலவே அந்தச் சிறு புஸ்தகத்தை தூதனுடைய கையிலிருந்து வாங்கிக் கொள்கிறார் தூதன் அந்தப் புஸ்தகத்தைக் குறித்து யோவானுக்கு மேலும் ஒரு கட்டளையைக் கொடுக்கிறார். யோவான் அந்தப் புஸ்தகத்தை வாங்கி புசிக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கட்டளை யோவானும் தூதனுடைய வார்த்தையின் பிரகாரம், அந்தப் புஸ்தகத்தை அவனுடைய கையிலிருந்து வாங்கி அதைப் புசிக்கிறார். தூதன் சொன்ன பிரகாரம் அந்தப் புத்தகம் யோவானுடைய வாய்க்கு தேனைப்போல மதுரமாயிருக்கும். யோவான் அந்தப் புத்தகத்தைப் புசித்தவுடன் அவருடைய வயிறு கசப்பாயிற்று

யோவானுடைய சொந்த ஆர்வத்தை தீர்த்துவைப்பதற்காக தீர்க்கதரிசன புஸ்தகம்
அவருக்குக் கொடுக்கப்படவில்லை. மனுஷருடைய ஆசையை நிறைவேற்றுவது தீர்க்கதரிசனத்தின் நோக்கமல்ல. யோவான் தூதனுடைய கையிலிருந்து சிறுபுஸ்தகத்தை வாங்கி புசித்த போது அந்தத் தூதன் யோவானுக்கு மேலும் ஒரு கட்டளை கொடுக்கிறார். இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளை யோவான் இந்த உலகத்திற்கு அறிவிக்க வேண்டும் யோவான் மாத்திரம் அதைப் புசித்தால் போதாது. அந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகள் எல்லா ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட வேண்டும்.

தீர்க்கதரிசனத்தில் தேவனுடைய சித்தம் அவருடைய சிந்தையும் மறைந்திருக்கிறது. தீர்க்க தரிசிகள் கர்த்தருடைய வார்த்தைகளை அறிவிக்கிறார்கள். மனுஷரைக்குறித்த தேவனுடைய சித்தம் என்ன என்பதை தீர்க்க தரிசிகள் ஜனங்களுக்குத் தெளிவுபடுத்துகிறார்கள். முழு உலகத்திற்கும் தேவனுடைய வார்த்தை அறிவிக்கப்பட வேண்டும்

யோவான் மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையும் குறித்து தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும் கர்த்தருடைய தீர்க்கதரிசன வார்த்தைகள் எல்லா பாஷைகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் சர்வசிருஷ்டிகளுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும்

சகல ஜனங்களும், சகல ஜாதியாரும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைத் தங்கள் காதுகளால் கேட்க வேண்டும் அவற்றை தங்கள் இருதயத்தில் விசுவாசிக்கவேண்டும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தங்கள் ஆத்துமாவுக்கு இரட்சகராகவும், தங்கள் ஜீவனுக்கு ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் சர்வ சிருஷ்டியும் தங்களை சிருஷ்டித்த சர்வசிருஷ்டிகராகிய தேவனை துதிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.