வெளிப்படுத்தின விசேஷம்
Revelation Whatsapp group post :02
புதிய ஏற்பாட்டின் வரலாற்று யும், அதன் சட்ட நூல்களையும் வெளிப்படுத்தின
விசேஷம் முடித்து வைக்கிறது. எழுதப்பட்ட வரிசையில் அது முந்தினதாகவோ அல்லது
இறுதியானதாகவோ எப்படி இருந்தாலும், அதன் சிந்தனைகளைப் பொறுத்தவரை, அது இறுதியானது. ஏனெனில் பூமியில் ஒரு அமைப்பாக நிறுவப்பட்டுள்ளதும், தன் பணி நிறைவுற ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பதுமான திருச்சபையின் எதிர்பார்ப்பை அது தன்னகத்தே கொண்டுள்ளது.
பல வழிகளில் வெளிப்படுத்தின விசேஷம் தனிச் சிறப்பு வாய்ந்தது. புதிய ஏற்பாட்டில்
தீர்க்கதரிசனத்துக்கென்றே முழுவதுமாய் அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரே புத்தகம் இதுதான்.
அதில் சொல்லப்பட்டுள்ள உருவகங்கள் அனைத்தும் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனப் புத்தகங்களில் காணப்படும் உருவங்க
ளை ஒத்துள்ளன. அதன் பொருளடக்கத்தின் பெரும்பகுதி எதிர்காலத்தைப் பற்றி முன்னுரைக்கிறது. தனக்குக் கடைசி தரிசனம் கொண்டு வந்த தூதுவன் "சீக்கிரமாய்ச் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும் பொருட்டு பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர்" என்று இந்நூலாசிரியர் வெளிப்படையாக அறிவிக்கிறார். வெளிப்படுத்தின விசேஷம் 22:6 தொடர்ந்து வரும் அடுத்த வசனத்தில் இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்கள் என்று குறிப்பிடுகிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் உலகத்தின் எதிர்காலம் குறித்து முன்னுரைக்கும் தீர்க்கதரிசன வசனங்களைக் கொண்ட இலக்கியங்களின் வகையைச் சேர்ந்தது. இத்தகைய தீர்க்கதரிசன இலக்கியங்கள் பொதுவாக நெருக்கமும் உபத்திரவமும் நிறைந்த காலத்தில் தங்கள் விசுவாசத்துக்காகத் துன்பம் அனுபவிப்போரை உற்சாகப்படுத்தும் வகையில் எழுதப்பட்டன. அவைகளில் பொதுவாக, பின்வரும் அம்சங்கள் காணப்பட்டன.
1. நிகழ் காலத்தில் பயங்கரமான துன்பச் சூழ்நிலையும் அதே அளவுக்கு எதிர் காலத்தில் தெய்வம் அவர்களுக்காக இடைப்படப் போவதற்குரிய நம்பிக்கையும்
2. உருவக மொழி நடை, கனவுகள் தரிசனங்கள்.
3. தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுகிற முன்னேற்றப் பணியில் வானுலக சக்திகளும் பிசாசின் சக்திகளும் அறிமுகப்படுத்தப்படுதல்,
4. துன்மார்க்கர் களுக்கு அழிவு தரும் நியாயத் தீர்ப்பும் நீதிமான்களுக்கு இயற்கைக்கு மேலான விடுதலையும்
5. ஆக்கியோன் புனைபெயர் வேத சரித்திரத்திலிருந்து புகழ் பெற்ற நபரின் பெயரை எடுத்துக்காட்டாக எஸ்றா (2 எஸ்ட்ராஸ் அல்லது ஏனோக்கு ஏனோக்கின் புத்தகம் பயன்படுத்துதல்
வெளிப்படுத்தின சுவிசேஷத்தில் இந்த இயல்புகளில் பெரும்பான்மையானவை
உள்ளன. ஆனால் நூலாசிரியர் தமது பெயரை அறிவிக்கிறார். கடந்த காலத்தில் ஒரு புகழ் பெற்ற நபராகவும், நிகழ் காலத்தில் அவர் யாருக்கு எழுதுகிறாரோ அந்த மக்களின் சுக துக்கங்களில் பங்கு பெற்றவராகத் தம்மை அவர் கருதுகிறார்.
இந்த நூலின் உள்ளடக்கத்தைப் படித்தால், அதிலிருந்து, இந்நூல் எந்தச் சூழ்நிலையில் எழுதப்பட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இது ஆசியாவில் உள்ள ஏழு திருச்சபைகளுக்கு எழுதப்பட்டுள்ளது அவை சில காலம் இருந்த. அவைகளில்
ஆவிக்குரிய எழுச்சியும், வீழ்ச்சியும் இடம் பெற்றன. உபத்திரவம் சீக்கிரம் வரும் அல்லது ஏற்கனவே வந்து விட்டது என்னும் குறிப்புகள் இந்த திருச்சபைக்கு எழுதப்பட்டுள்ள நிருபங்களில் உள்ளன. சிமிர்னா சபை உபத்திரவ படப் போகிறது" பத்து நாள் உபத்திரவம் இருக்கும்" (வெளிப்படுத்தின விசேஷம் 2:10 பெர்கமுலில் அந்திப்பா இரத்தச் சாட்சியாகக் கொலை செய்யப்பட்டான் (2:13) பிலதெல்பியா "உபத்திரவ காலத்துக்குத் தப்புவிக்கப்படும் ( இந்தப் பகுதிகளெல்லாம் எதிர்காலத்தைக் குறித்தாலும் கூட, வெளிப்படுத்தின விசேஷத்தின் சுற்றுச் சூழ்நிலை எதிர்ப்பையும், நெருக்கத்தையுமே பற்றிப் பேசுகிறது இந்நூலின் முக்கிய பகுதியில் அதன் பின்னணியின் சாதாரண நிலைகளாக பஞ்சம், போர் கொள்ளை நோய், பொருளாதார நெருக்கடி ஆகியவையே கருதப்படுகின்றன.
கிறிஸ்தவத்துக்கு எதிரியாக வெளிப்படுத்தின விசேஷம் கூறும் அரசாட்சிக்கு ரோமே மாதிரியாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு கோத்திரத்தின் மேலும்,
பாஷைக்காரர் 'மேலும், ஜாதிகள் மேலும்" மிருகத்துக்கு அதிகாரம் கொடுக்கப் பட்டது.
வெளிப்படுத்தின விசேஷம் 13.7 அதனுடைய மாதிரி சீசர்களின் கீழ் ஒரே குடையின் கீழாக ஆட்சி செய்த ரோமில் இருந்தது. கொடுக்கல், வாங்கல் செய்ய வேண்டியதற்காக கட்டாயமாக மனுஷருக்கு அளிக்கப்படும் முத்திரை, 13:16-17), உயில்கள், ஒப்பந்தங்கள், விற்பனை ரசீதுகள் போன்ற மற்றும் பல பத்திரங்கள் சட்ட பூர்வமான அங்கீகராம் பெற்றதாக ஆவதற்கு ரோம ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட ராஜ முத்திரை பெற வேண்டும் மகா பாபிலோன் என்னும் வேசி பரிசுத்தவான்கள், இரத்தச் சாட்சிகள் ஆகியோரிடையே இரத்தத்தினால் வெறி கொண்டவளாக ஏழுமலைகளின் மேல் உட்கார்ந்திருக்கிறாள் (17:19). இந்த எண் ரோமில் உள்ள மலைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. இறுதிக் காலத்தில் இந்த தீர்க்கதரிசனப் புத்தகங்கள் ரோமைக் குறித்தாலும் குறிக்காவிட்டாலும், முதலில் கிறிஸ்தவர்களால் வாசிக்கப்பட்டபோது அது நிச்சயமாக ரோமுக்குத் தான் பொருத்தமாக இருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் எந்தக் காலத்துக்காக எந்தச் சூழ்நிலைக்காக எழுதப்பட்டது என்பதைப் பற்றி இரண்டு வகையான கருத்துகள் உள்ளன ஒரு கூட்டத்தினர், ரோம் பற்றியெரிந்த தினால் கிறிஸ்தவர்களினுடைய உபத்திரவக் காலம் தொடங்கின நீரோவின் காலத்தைக் குறிப்பிடுகின்றனர். இதற்கு ஆதரவாக முக்கியமாக இரண்டு கருத்துக்கள் உள்ளன செபதேயுவின் குமாரனான யோவான்தான் வெளிப்படுத்தின விசேஷம் அத்தையும். யோவான் சுவிசேஷம், நிருபங்கள் ஆகியவற்றையும் எழுதினாரெனில், இவைகளுக்கிடையில் திட்டம் தெளிவான வேறுபாடு மொழியில், மொழி நடையிலும் காணப்படுகிறது. இதற்குக் காரணம். யோவான் கிரேக்க மொழியில் புலமை பெறுவதற்கு முன், ஆரம்பக் காலத்தில் வெளிப்படுத்தின சுவிசேஷம் எழுதப்பட்டிருக்க வேண்டும் சுவிசேஷம் நிருபங்களும், பிற்காலத்தில் யோவான் கிரேக்க மொழியில் நல்ல திறமை பெற்ற பின்னர் எழுதப்பட்டிருக்கும். மேலும் அந்த மர்ம எண்ணான அறுநூற்று அறுபத்தாறு (வெளிப்படுத்தின விசேஷம் 13.8) நீரின் கெசார் (Neron Keser) என்னும் பெயரை எபிரெய எழுத்துக்களில் எழுதி அவற்றின் எண் மதிப்புகளை கூட்டும் போது கிடைக்கும் தொகை என்றும் அதனால் அந்த அதிகாரத்தில் விவரிக்கப்படும் நபர் நீரோவாக இருக்கக் கூடுமென்றும் கருதப்படுகிறது. இத்தகைய வலுவற்ற காரணங்கள் குறிப்பாக எந்த விதமான பாரம்பரிய ஆதரவும் புறத்தே இல்லாத போது. இவைகளைக் கொண்டு ஒரு திட்டமான முடிவை அடையப் போதுமானவையல்ல.
இரண்டாவதாக இந்த தீர்க்கதரிசன நூல் முதலாம் நூற்றாண்டின் இறுதியில் டொமிடியனின் ஆட்சிக் காளையாகிய கி. 81 முதல் 96 வரையுள்ள காலத்தில் எழுதப்பட்டதெனக் கருதப்படுகிறது. இவ்வாறு காலம் குறிப்பதற்கு வெளிப்படையான புற ஆதாரம் (வேதத்துக்கு வெளியான ஆதாரம் யோவான், ரொம்பக் காலத்துக்கு முன்னர் அல்ல.
ஏறத்தாழ நமது காலத்திலேயே டொமிடியனின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் தமது தரிசனம் கண்டேன்" என்றும் கருத்து உள்ளது. டொமிடியனின் ஆட்சியில் உபத்திரவ காலம் தொடர்ந்து நீண்ட காலம் இருக்கவில்லை. ஆனால் அவன் தன்னையே எல்லாரும் தெய்வமாக வணங்க வேண்டுமென்றான். அவனுடைய சர்வாதிகார ஆட்சி கொடுங்கோலாட்சியாக இருந்தது. இவையெல்லாம் அவனைக் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு எதிரான நிலையில் கொண்டு வைத்தது. மேலும் வெளிப்படுத்தின விசேஷத்தில் தீர்க்கதரிசனமாக உடைக்கப்பட்டுள்ளது போன்ற சமுதாய பொருளாதார, சமய நிலைகள் வளரக் கூடுமென்பதற்கு முன்னடையாளங்களாகவும் இருந்தது.
எனவே, ரோம ராஜ்யத்துக்கும் திருச்சபைக்குமிடையே வளர்ந்து வந்த பகைக்கு வெளிப்படுத்தின விசேஷம் சாட்சியாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் துன்புறுத்த வேண்டும் என்னும் ஒரு கொள்கை உலகம் முழுவதிலும் கடைப்பிடிக்கப்பட்டது அது கூறவில்லை. ஆனால் தேவனற்ற ஒரு ராஜ்யத்துக்கும், கிறிஸ்தவத் திருச்சபைக்கும் ஒரு போதும் ஒத்துப் போகாது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. தேவனற்ற தன்மையின் விளைவு சர்வாதிகாரத்தனம். இது எல்லா அரசியல் உறவுகளையும், எல்லாப் பொருளாதார ஆதாரங்களையும், எல்லா சமய அனுசாரங்களையும் எல்லாத் தனிப்பட்ட தொழுகைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆட்சியாளரை வணங்குவதற்கு கட்டாயம் பண்ணும். ஆதித் திருச்சபை இடம் ரோம் காட்டி வந்த சகிப்புத் தன்மை, யூதத் தலைவர்களால் பவுல் விசாரணைக்குக் கொண்டு வரப்பட்ட போது சந்தேகமாக மாறியது.
பின்னர் இந்தச் சந்தேகம் இன்னும் ஆழமாகி எரிச்சல் நிறைந்த வெறுப்பாகியது. முதலாம் நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவர்கள் எங்கும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைமையிலிருந்தனர். "நீங்கள் உலகத்தாராயிருந்தால் உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும். நீங்கள் உலகத்தாராயிராத படியினாலும் நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்ட படியினாலும் உலகம் உங்களைப் பகைக்கிறது" (யோவான் 15:19) என்று ஆண்டவராகிய இயேசு சொன்ன வார்த்தைகளின் சத்தியத்தை - அவர்கள் ஆரம்பித்திருந்தார்கள் அறிய இவ்வாறு வளர்ந்து வரும் பகையை உணர்ந்து கொண்டிருந்த திருச்சபைகள் ஊக்குவிப்பதற்காகவும், உலகத்தோடு எளிதில் ஒத்து வாழவேண்டுமென்று எண்ணி கவலையாகவும் அலட்சியமாகவும் வாழும் சோதனைக்குள் விழுந்து விட்ட கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கையாகவும் வெளிப்படுத்தின விசேஷம் எழுதப்பட்டது. முடிகின்ற நூற்றாண்டின் கடைசிக் குரல் இது.
நூலாசிரியர், அவரே கூறுவது போல், யோவான் என்னும் பெயரை உடையவர். தான்கண்ட காரியங்களுக்கு கண்கண்ட சாட்சியாக இருப்பவர் வெளிப்படுத்தின விசேஷம் 112 அவர் தமது விசுவாசத்துக்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்த பத்மு தீவில் இருந்தார். இது கிரீசின் கடற்கரைக்கு அப்பால் உள்ளதொரு தீவு (1:9 அவர் அங்கு இருக்கும் போது, அவர் விவரிக்கின்றன இந்தத் தரிசனம் அவருக்குக் கொடுக்கப்பட்டு, தமக்கு அறிமுகமான ஆசியாவின் ஏழு திருச்சபைகளுக்கும் அவைகளை அனுப்ப வேண்டுமென்ற கட்டளையும் அவருக்கு அருளப்பட்டது.
இந்த வெளிப்படுத்துதலின் நூலில் கிரேக்க மொழி சில இடங்களில் மோசனமானதாகவும் இலக்கண வரம்புக்கு உட்படாததாகவும் உள்ளது. நூலாசிரியர் சாதாரண மொழியைக் கொண்டு விவரிக்க முடியாத காட்சிகளை மனிதனின் வரம்புக்குட் பட்ட மொழியைக் கொண்டு விவரிக்க முயற்சிக்கிறார் என்பதை மனதில் கொள்ள வேண்டும் அதன் விளைவாகவே அவருடைய இலக்கண அறிவும், சொற்களஞ்சியம் இந்த முயற்சிக்குப் போதுமானதாக இல்லை. மேலும் அவர் அநேகமாக அராமிய மொழி பேசு பாரம்பரிய வழி சேர்ந்தவர் எனவே கிரேக்க மொழியில் விஷயங்களை வெளிப்படுத்துவதில் அவருக்கு சிரமம் இருந்திருக்கக் கூடும். குவிசேஷங்களும் நிருபங்களும் எழுதப்பட்ட போது அவருக்கு ஒரு திறமை வாய்ந்த உதவியாளர்
இருந்திருந்தால், வெளிப்படுத்தின விசேஷம் அவர் தாமாகவே எழுதியிருக்க மாட்டார்என்று கூறி, இந்த வித்தியாசங்களை எளிதில் விளக்கு விடலாம்.
வெளிப்படுத்தின விசேஷம் விளக்கப்பட வேண்டியது. நேரடியான எந்தக் குறிப்பும் தெரியாவிட்டாலும் பழைய ஏற்பாட்டுக் குறிப்புகள் ஏறத்தாழ நானூறு இந்நூலில் உள்ளன அதனுடைய உவமானங்களும் திட்ட அமைப்பும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களுடன் தொடர்புடையது. அவைகள் அதன் பொருளைப் புதிய சூழ்நிலையுடன் இணைகின்றன. ஆசியாவின் ஏழு சபைகளுக்கும் கொடுக்கப்படும். நியாயத் தீர்ப்பின் மூலம் திருச்சபையின் ஆவிக்குரிய நிலைமை பற்றிய ஒரு மதிப்பீட்டைத் வெளிப்படுத்தின விசேஷம் தருகிறது. தொடர்ந்து வரும் தரிசனங்கள் எம்முறையில் அவை விளக்கப்படும்-இந்தத் தரிசனங்களின் தொகுப்பு தேவனுடைய நோக்கத்தின் மொத்த வடிவமாகும். அதன் குறியீடுகள் எவ்வளவு விசித்திரமானவையாக இருந்தாலும், எதிர்காலத்தைப் பற்றி ஒரு
ஒழுங்காக அமைக்கப்பட்ட முன்னறிவிப்பு தரும் நூல் புதிய ஏற்பாடு முழுவதிலும்
வெளிப்படுத்தின விசேஷம் மட்டுமேயாகும்.