விளக்கங்கள்



விளக்கங்கள்

Revelation Whatsapp group post :03

தற்கால விளக்கவுரையாளர்களில் வெளிப்படுத்தின விசேஷ நூலுக்கு நான்கு
வகையில் விளக்கம் தருகின்றனர்.

1. கடந்த காலத்தை பற்றியது என்பவர்கள்

இந்த வகையினர் வெளிப்படுத்தின விசேஷத்தின் குறியீடுகள் அது எழுதப்பட்ட
காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளையே குறிக்கும் என்று கருதுகின்றனர். முத்திரை, எக்காளம்
கலசம் போன்ற எல்லா உருவகங்களுக்கும் எதிர்காலத்துக்கும் எந்தச் சம்பந்தமும்
இல்லாதவை. எதிர்காலத்தில் வரும் நியாயத் தீர்ப்பைப் பற்றிக் கூறும்போது, தமது காலத்தில் ஏற்பட்ட துன்பங்களினால் தமக்கு உண்டான நியாயமான கோபத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சுதந்திர நோக்குடைய கல்விமான்களில் பெரும்பான்மையோர்
இவ்வாறு கருதுகின்றனர். இதன்படி பார்த்தால் வெளிப்படுத்தின விசேஷத்தை அது எழுதப்பட்ட காலத்தின் வரலாற்று நிகழ்ச்சிகளுடன் தொடர்புபடுத்திக் காணக்கூடும் ஆனால் முன்னறிவிக்கும் தீர்க்கதரிசனத்துக்கு இடமேது மி
ல்லை.

2. உயர்ந்த கருத்துடையோர்

இந்த வகையினரின் கருத்து கடந்த காலத்தைப் பற்றியது என்பவர்களுடைய கருத்துடன் நெருங்கிய தொடர்புடையது. நன்மைக்கும், தீமைக்கும். கிறிஸ்தவத்துக்கும்
வேறு மதங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு போராட்டத்தை குறிக்கும் படம் வெளிப்படுத்தின விசேஷம். வெளிப்படுத்தின விசேஷத்தின் குறியீடுகள் எல்லாம் கடந்த காலத்திலோ அல்லது வருங்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளைக் குறிப்பவை
அல்ல அவை வெறுமனே நிலைகள், அல்லது கருத்துக்களே. இப்பிரிவினரின் பொதுவான விளக்கமாவது:

இப்போது வெளிப்படுத்தல்" என்ற சொல்லின் பொருள் என்னவென்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். இது உலகத்தின் இறுதியில் வரப்போகும் எதிர்கால மர்மங்கள் அல்ல
ஆயிரம் வருஷ அரசாட்சி யோ, அல்லது நியாயத்தீர்ப்பையோ குறிப்பதல்ல. பரலோகத்தின் மகிமைகளையும் இரட்சிக்கப்பட்டவர்களின் ஆசீர்வாத நிலையையும் குறிப்பதுமல்ல. இது
ஆதி அந்த மற்ற இரட்சிப்பதற்கு வல்லமையுள்ள தேவனின் வெளிப்படுத்துதல் தேவனுடைய
பிள்ளைகள் ஆறுதலும் உற்சாகமும் அடையத்தக்கதாக சர்வ வல்லமை கொண்ட தேவனின் எல்லாவற்றையும் ஜெயிக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவது என்பதாகும்.

இவ்வாறாக இந்த வகையினர் தரும் விளக்கத்தினால் வாசகருடைய கவனம்
விவாதத்துக்குரிய குறியீடுகளின் புறமாகத் திரும்பாமல் வெளிப்படுத்தின விசேஷத்தின் பூமிக்குரிய ஆவிக்குரிய சத்தியங்கள் மீது ஒருங்க வைக்கப்படுகிறது. அதே சமயம் இவ்வாறு உருவகப்படுத்திக் கூறும் முறை, தீர்க்கதரிசன முன்னறிவித்தலுக்கு ஒரு வாகனம்
போன்றது என்ற உண்மையைக் குறைவாக மதிப்பிட்டு விடுகிறது. இந்தக் கருத்து
வெளிப்படுத்தின விசேஷத்தை முற்றும் ஆவிக்குரிய கருத்துடையதாகவே செய்து
விடுவதால் அதனுடைய முன்னறிவிக்கும் மதிப்பு அனைத்தையும் எடுத்து போடுகிறது. மேலும் வரலாற்றுத் தொகுப்பிலிருந்து வெளிப்படுத்தின விசேஷத்துக்கு எந்தக் சம்பந்தமுமின்றி அதைத் தனியே பிரித்து விடுகிறது. நியாயத் தீர்ப்பு நாள் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்டவராக கிறிஸ்து நாம் கண்ணால் காணக்கூடிய சிங்காசனத்திலேறும் நாள் அல்லவென்பதும் ஒரு பெரிய நன்னெறிப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் நாள் என்பதும் இவர்களின் கொள்கை.

3. வரலாற்று விளக்கம் தருவோர்

வெளிப்படுத்தின விசேஷம் பெந்தெகோஸ்தே நாள் முதல் கிறிஸ்துவின் வருகை வரை திருச்சபையின் சரித்திரத்தை குறியீடுகளால் வடிவமைத்துக் காட்டுகிறது என்று, அதற்கு வரலாற்று விளக்கம் தருபவர்கள் கூறுகின்றனர். குறியீடுகள் நடைபெறும் பெரிய நிகழ்ச்சிகளை வரிசையாகக் குறிப்பிடுகின்றன. எடுத்துக்காட்டாக, முத்திரைகள், ரோம
சாம்ராஜ்யம் ஆழம் தெரியாத குழியிலிருந்து வெட்டுக்கிளிகள் வருவது முகமதியப் படையெடுப்பு என்பதைப் போல
கிறிஸ்தவ வரலாற்றில் ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சியும் இவ்வாறு முன் நிழலாய்க்
குறித்து வைக்கப்பட்டிருப்பதனால், வெளிப்படுத்தின விசேஷம், நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் முன்னரே குறித்து வைக்கப்பட்டிருக்கும் நாட்காட்டியாகிறது. வெளிப்படுத்தின விசேஷத்தை ஆராயும் போது பல சீர்திருத்தவாதிகளும் பண்டைய விமர்சினங்களில் பெரும்பகுதியும், ஏ.ஜெ. கோர்டன், ஏ.பி. சிம்சன் போன்ற தற்காலப் பிரசங்களும் கூட இதே கருத்தைக் கூறுகின்றனர். இதற்கு முன்வைக்கப்பட்டுள்ள ஆதாரமாக, வெளிப்படுத்தின விசேஷம்
4:1 ல்------"இங்கே ஏறி வா. இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை
உனக்கு காண்பிப்பேன்-"என்னும்
வசனம் உள்ளது உயர் கருத்துடையோர்
விளக்கத்தை விட, வரலாற்று விளக்கம் தருவோரின் கருத்து சரியானதாகவே உள்ளது. ஆனால் ஒவ்வொரு குறியீடும்
எதனைக் குறிக்கிறது என்பதில் இதன்
ஆதரவாளர்களுக்கிடையே ஒரு ஒருமைப்பாடு இல்லை.  வரலாற்று விளக்கம் தருவோரிடையே எத்தனை விமர்சகர் உண்டோ அத்தனை விளக்கங்களும் உண்டு, எல்லாமே சரியானதாக இருக்க முடியாது. அவைகளுக்கிடையே பெரிய வேறுபாடுகள் காணப்படுவதால் அவர்கள் பயன்படுத்தும் முறைகளிலேனும் தவறு இருக்கும்.

4. எதிர்கால விளக்கம் தருவோர்

வெளிப்படுத்தின விசேஷத்தின் முதல் மூன்று அதிகாரங்கள் அந்த நூல் எழுதப்பட்ட காலத்துக்குப் பொருத்தமானவை அல்ல. ஆசியாவின் ஏழு சபைகள் என்பன அப்போஸ்தலர் காலத்தையும் கிறிஸ்துவின் வருகையையும் இணைக்கும் பாலமாக இவற்றுக்கிடையே உள்ள திருச்சபை வரலாற்றின் ஏழு காலக்கட்டங்களைக் குறிக்கின்றன என்று வெளிப்படுத்தின விசேஷத்துக்கு எதிர்கால விளக்கம் தருவோர் கூறுகின்றனர். இந்த அளவில் நோக்கும் போது எதிர்கால விளக்கம் தருவோரும் ஒரு வகையில், வரலாற்று விளக்கம் தருபவர்களே "இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை என்னும் (4:1) சொற்றொடரில்
ஆரம்பித்து, அதன் பின் இந்நூலில் வரும் விஷயங்களெல்லாம் "மகா உபத்திரவ காலம்" என்னும் காலக் கட்டத்தில் நடைபெறுபவை என்று இவர்கள் கூறுகின்றனர். இந்தக் கால
கட்டம் கிறிஸ்துவின் வருகைக்குச் சற்று முந்தின காலம். இது மூன்றரை முதல்
ஏழாண்டுகள் வரை இருக்கலாமென்று பல்வேறாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள நிகழ்ச்சிகளுக்கு அவற்றில் உள்ளபடியே விளக்கம் தரப்பட்டுள்ளது. மேற்கூறிய கால கட்டத்தில் அதாவது எதிர் காலத்தில்தான் அவை நடைபெற
இருக்கின்றன. ஜே.ஏ. செசிஸ், சிஐ. ஸ்காஃபில்டு, ஏ.சி காப்லெய்ன் எச்ஏ. அயர்ண்சைட் போன்ற பல விளக்கவுரையாளர்களும் எதிர்கால விளக்கம் தருவார்.

5. ஆயிர வருஷ அரசாட்சி பற்றிய கருத்துக்கள்

வரலாற்று நோக்கை விட்டு, மரணத்துக்குப்பின் வாழ்க்கை என்னும் நோக்கில் அணுகும் போது வெளிப்படுத்தின விசேஷம் மூன்று வகைப்பட்ட கருத்துக்களைத் தருகிறது. இவை இருபதாம் அதிகாரத்தைக் குறித்து பல்வேறு வகைப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் உண்டானவை. இந்த விளக்கங்களின் சுருக்கம் ஆயிரம் வருஷம் என்பது நிஜமாகவே எண் வழக்குப்படி ஆயிரம் வருஷம் தானா? அல்லது உருவகமாகச் சொல்லப்பட்டதொரு சொல்லா? மேலும் இந்த ஆயிரம் வருடங்கள் கிறிஸ்துவின் இரண்டாம்
வருகைக்கு முந்தினவையா அல்லது பிந்தைய?

ஆயிர வருஷத்துக்கு அப்பால் உள்ள நோக்கு இது உண்மையில் ஆயிரம் ஆண்டு அல்ல கிறிஸ்துவின் வருகைக்கு முன்வரும் ஒரு நீண்ட காலக் கட்டம் மட்டுமே என்று கூறுகிறது. இந்தக் காலக் கட்டத்தின் ஆரம்பத்தில் சுவிசேஷத்தின் வெற்றி ஒரு சமாதானமான ஆட்சியை அறிமுகப்படுத்தும் இந்த ஆட்சி கிறிஸ்து இறுதியில் நியாயந்தீர்க்க வருமளவும் நிலைத்திருக்கும்.

ஆயிர வருஷ அரசாட்சி இல்லை என்று ஒரு கருத்துக் கூறப்படுகிறது. அப்படி ஒரு
காலக்கட்டம் கிடையாது. ஒரு வேளை இறந்த பின் ஆன்மாக்கள் தாம் சேர வேண்டிய இடத்துக்குச் செல்லும் வரை உள்ள இடைப்பட்ட காலமெனலாம். கிறிஸ்து எந்த நேரமும் திரும்ப வரலாம். அவர் உலகத்தை நியாயந்தீர்த்து நீதிமான்களைப் புதிய வானமும் புதிய பூமியும் நித்திய மகிழ்ச்சிக்குள் நடத்துவார்.

முந்தின ஆயிர வருஷ அரசாட்சி என்னும் கருத்துப்படி கிறிஸ்து தாமே தமது
ராஜ்யத்தை ஏற்படுத்தத் திரும்ப வருவார். மரித்த நீதிமான்கள் எழுப்பப்படுவார்கள். அவர்கள் அவரோடு சேர்ந்து பூமியில் ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள். அவருடைய ஆட்சியை அடுத்து ஒரு எதிர்ப்பு எழும். ஆனால் அது அடக்கப்பட்டுவிடும். துன்மார்க்கர் நியாயத்
தீர்ப்படைவர். நித்தியம் தொடங்கும்.

இந்த கருத்துகளுக்கும். முன்பு கொடுக்கப்பட்ட வரிசை கிரகம் விளக்கங்களுக்கும் தொடர்பு இருந்தாக வேண்டிய அவசியம் இல்லை. கடந்த காலத்தைப் பற்றியது என்பவர்களும், உயர்ந்த கருத்துடையோரும் இந்த ஆயிரம் வருஷம் என்பதை ஒரு குறியீடாக மட்டுமே கருதுகின்றனர். வரலாற்று விளக்கம் தருவோரும், எதிர்கால விளக்கம் தருவோரும் மட்டும் இதனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றனர்.

இந்தக் கொள்கைகளில் நன்மை எவ்வளவு பெரிதாயிருப்பினும், வெளிப்படுத்தின
விசேஷத்தை விளக்குவதற்குரிய உண்மையான திறவுகோல் அவற்றில் இல்லை. இந்நூல்
கிறிஸ்துவை-கிறிஸ்து என்னும் நபரை முன் வைக்கும் விதத்தில், அதன் அமைப்பில் அந்தத் திறவுகோல் உள்ளது.  இந்த நூலின்
தலைப்பாகிய சீக்கிரத்தில் சம்பவிக்க
வேண்டியவைகளைத் தமது ஊழியக்காரருக்குக் காண்பிக்கும் பொருட்டு, தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய
தூதனை அனுப்பி தம்முடைய
ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்" என்னும் வசனம், இந்நூலின் மையப் பொருள். எதிர்காலத்தை வெளிப்படுத்துகிற இயேசு கிறிஸ்து என்னும் நபர்தான் என்று சுட்டிக் காட்டுகிறது. இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்துதல்" என்று
சொல்லும்போது அது இயேசு கிறிஸ்து வாகிய நபரை வெளிப் படுத்துவதா, அல்லது அவர்
வெளிப்படுத்தி அவரிடமிருந்து வந்த வெளிப்படுத்தலா என்பது குறித்துச் சில கேள்விகள் எழுகின்றன. இவ்விரண்டில் முந்தியது இந்த நூலின் தலைப்பானால் வெளிப்படுத்தின விசேஷம் எதிர் காலத்துடன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் உறவுடன் கிறிஸ்து
என்னும் நபர் வெளிப்படுத்துவதாகிறது. பின்னதை எடுத்துக் கொண்டால் இதன் முக்கிய தலைப்பு கிறிஸ்துவின் மூலமாக எதிர்காலத்தைப் பற்றிய திட்டத்தை அறிவிக்கும். இலக்கணப்படி இரண்டுமே கூடிய காரியம் தான். இரண்டுமே கிறிஸ்துவை இந்நூலின் மையமாகக் கொள்ளுகின்றன. மரணத்துக்குபின் ஜீவனைப் பற்றிய தங்கள் கொள்கையை
கிறிஸ்துவைப் பற்றிய தங்கள் கொள்கை மீது சார்ந்து கொள்ளும்படி செய்து இந்நூலின்
இலக்கிய அமைப்பின் நடுநிலையில் நின்று விளக்கம் தருவோர் வெளிப்படுத்தின
விசேஷத்தை அணுகியிருப்பார்களெனில் பல முரண்பாடுகள் தவிர்க்கப்பட்டிருக்கும். இந்நூலின் பொருளடக்கம் பற்றிய மற்றொரு குறிப்பு நூலாசிரியரின் சொந்த அனுபவம் தந்த வடிவத்தில் தோன்றுகிறது. இந்நூலில் பல தரிசனங்கள் உள்ளன. ஒவ்வொன்றுமே ஒரு தனிப்பட்ட தொகுப்பு போன்றது. பின்னும் நான் பார்த்த போது" என்ற சொற்றொடருடன் அறிமுகமாகிற பல சிறிய தொகுப்புகள் உள்ளன. (5:1,11;6:1,9) "ஆவிக்குள்ளானேன்" என்னும் சொற்றொடருடன் அறிமுகமாகிற நான்கு முக்கிய பகுதிகள் உள்ளன (1:10; 4:2; 17:1-3; 21:9-10) இந்த பகுதிகள் எல்லாம் பொருளடக்கத்திலும் அளவிலும் வேறுபட்டது. ஆனால் இவை அனைத்தும் நூலுக்கு ஒன்றான ஒருங்கிணைந்த அமைப்பைத் தருகின்றன. ஆரம்ப முன்னுரையையும், இறுதி முடிவுரையும் சேர்த்து அவை வெளிப்படுத்தின
விசேஷத்தை ஆறு பகுதிகளாகப் பிரிக்கின்றன.

ஏழு ஏழாகப் பல தொகுப்புகள் இந்நூல் முழுவதிலும் காணப்படுகின்றன. ஏழு
திருச்சபைகள் 2:1,8,12,18; 3:1,7,14 தேவனுடைய ஏழு ஆவிகள் (4:5) ஏழு முத்திரைகள்
6:1,3,5,7,9,12; 8:1 ஏழு எக்காளங்கள் (8:6,7,8,10,12; 9:1,13,14,15) ஏழு இடி முழக்கங்கள் 10:3 ஏழு கலசங்கள் 16:1,2,4,8,10,12,17 ஏழு முக்கிய நபர்கள் 12:1,3,5,7; 13:1,11; 14 :1) எழு
பாக்கியங்கள் (1:3,14:13; 16:15, 19:9; 20:5; 22:7,14) இவற்றில் சில, இந்நூலின் இலக்கிய அமைப்பின் பகுதியாக தொடர்ந்து வரிசையாக அமைந்துள்ளன. மற்றவை அவ்வாறு அமையவில்லை. வெளிப்படுத்தின விசேஷம் ஏதோ ஆவி சம்பந்தமான குறியீடுகளின் மொத்தமான குழப்பமல்ல ஒரு தெளிவான சிந்தனை வடிவமே என்பதனை இந்த எழு என்னும் எண்ணைப் பயன்படுத்திருப்பது காட்டுகிறது.

மற்றும் சில எண் இணைப்புகள் அல்லது
தொகுப்புகள் ஆங்காங்கு காணப்படுகின்றன. இருபத்தி நான்கு மூப்பர்கள் (4:4) நான்கு ஜீவன்கள் (4:5) நான்கு குதிரை வீரர் (6:1-87) நான்கு தூதர்கள் (19:14) இரட்சிக்கப்பட்ட ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் (7:41;4:1) தேவனுடைய நகரத்தின் பன்னிரெண்டு வாசல்கள் (21:12) பன்னிரு அஸ்திபாரங்கள் (21:14) ஜீவ விருட்சத்தின் பன்னிரு கனிகள் இன்னும் பல

மற்றொரு சொற்றொடர் குறிப்பிடத்தக்கது. 4:5; 8:5; 11:9; 16 :18 ஆகிய வசனங்களில்
"மின்னல்கள் இடி முழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன என்று காணப்படுகிறது. இவற்றில் இறுதி மூன்று அடுத்தடுத்து வரும் நியாயத் தீர்ப்புகளின் இறுதியில் காணப்படுகின்றன. இவைகள் சாதாரணமாக திரும்பக் கூறப்படுகின்றனவா? அல்லது இந்த
நியாயத் தீர்ப்புகளின் முடிவுகளுக்குள்ள தொடர்பைக் காட்டுகின்றனவா? அதாவது
ஒவ்வொரு நியாயத் தீர்ப்பும் முன்னதின் பன்மடங்கு என்பதைக் காட்டுகின்றனவா?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.