வெளிப்பாடு - REVELATION
Revelation Whatsapp group post :01
தேவன் தம்மைப்பற்றி ஜனங்களுக்கு வெளிப்படுத்துவது. தேவன் தம்முடைய சுபாவம்,இரட்சிப்பைக் குறித்த தமது திட்டம் ஆகியவற்றை மனுஷருக்கு வெளிப்படுத்துகிறார்.
தேவன் ஆவியாக இருக்கிறார். அவர் பரிசுத்தமுள்ளவர். மனுஷருடைய கண்களாலும், பாவமுள்ள மனதினாலும் தேவனை தரிசிக்க முடியாது ஆனாலும் தேவன் மனுக்குலத்தின்மீது கிருபையாக இருந்து மனுஷருக்கு தம்மைத்தாமே வெளிப்படுத்துகிறார்.
இயற்கையின் மூலமாகவும், மனுஷருடைய மனசாட்சியின் மூலமாகவும் தேவன் மனுஷருக்கு நன்மை, தீமையை வேறுபிரித்து காண்பிக்கிறார். தேவன் சர்வஞானம் உள்ளவர். அ
வருடைய மகிமையை எல்லோருக்கும் வெளிப்படுத்தியிருக்கிறார் (சங் 19:1-6)
இயேசு கிறிஸ்து மூலம் தேவன் தம்மை மனுஷருக்கு பரிபூரணமாக வெளிப்படுத்தியிருக்கிறார் "பூர்வகாலங்களில் பங்கு பங்காகவும் வகைவகையாக வும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார் இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரை கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார் (எபி 1:1-2).
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் (யோவா 118). அதற்கு இயேசு: பிலிப்புவே இவ்வளவு காலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான். அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்" (யோவா 14:9), “நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்" (யோவா 17.8)
"ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒரு தரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே
கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார் (1பேது 3:18).
இயேசு கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களை தெரிந்தெடுத்து தம்முடைய மரணத்தையும், தம்முடைய உயிர்த்தெழுதலும் மனுஷருக்கு உபதேசம் பண்ண பயிற்சிகொடுத்தார். அவர்கள் சபையை ஸ்தாபித்து புதிய ஏற்பாட்டுப் புஸ்தகங்களை எழுதினார்கள். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் கண்ணாரக்கண்ட அவர்களுடைய வார்த்தைகளை நாம் விசுவாசிக்கவேண்டும் பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன்" (2பேது 3.2).
கிறிஸ்து இயேசுவை பற்றும் விசுவாசத்தினாலே இரட்சிப்பிற்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறு வயது முதல்
அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்" (2 தீமோ 3:15)