நாம் நினைப்பவைகளை / சிந்திப்பவைகளை சாத்தானால் அறிய முடியுமா? வேத ஆதாரத்தோடு விளக்கம் தருக

நாம் நினைப்பவைகளை / சிந்திப்பவைகளை  சாத்தானால் அறிய முடியுமா? வேத ஆதாரத்தோடு விளக்கம் தருக


மனுஷன் எப்பொழுது சாத்தானின் சொல்லை கேட்டு தேவன் புசிக்கதே என்று சொன்ன கனியை புசித்தானோ அன்றே மனுஷனின் எண்ணம் மற்றும் இதயத்துக்குள் சாத்தான் புகுந்துவிடடான். பிறகு நாம் நினைப்பதை அவன் அறியாது இருப்பது எப்படி?
இது நடக்கும் வரை அவனுக்கு தெரியாது! எனவே அவன் வெளியில் இருந்து "தேவன் இப்படி சொன்னாரோ? அப்படி சொன்னாரோ? என்று கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தான்  
ஆதியாகமம் 8:21  மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது;  
பொல்லாத எண்ணங்கள் சாத்தனுடையது.  தேவனால் உண்டான மனுஷன் சுபாவப்படி பொல்லாதவன் அல்ல. மனுஷ மனசுக்குள் உண்டாகும் ஒவ்வொரு பொல்லாத தீய எண்ணமும் சாத்தானால் உண்டானதே சாத்தான்  சிந்தனையைத்தான் மனுஷன் செய்கிறான் செயல்படுத்துகிறான்.
மனுஷ இருதயத்தில் தோன்றும் ஒவ்வொரு நினைவுகளையும் எப்படி தேவனால் அறிய முடியுமோ அதேபோல் சாத்தனாலும் அறிய முடியும்.  காரணம் சாத்தானின் சொல்லை கேட்டு கனியை புசித்த மனுஷன் சாத்தானின் அடிமை ஆகிவிட்டான்.
ஆகினும் ஒரு மனுஷன்  தேவனை பற்றிய நினைவில் அவர் வார்த்தைகளில் கவனமாக இருக்கும்போது தேவ தூதர்கள் நம்மோடு இருப்பார்கள் தேவ உதவி நமக்கு இருக்கும் 
தாவீதை போல உப்பரிகையில் நின்று பிற ஸ்திரீயை நோக்கும் எண்ணம் வந்தவுடன்  சாத்தான் வந்துவிடுவான் தேவ தூதர்கள் விலகிவிடுவார்கள் இறுதியில் கொலை செய்யும் அளவுக்கு கொண்டுபோய் நிறுத்திவிடுவான். 
தேவனின் சிந்தனையை மட்டுமே சாத்தானால் அறிய முடியாது!
மற்றபடி உலகத்தில் மனுஷனாக பிறந்துவிடடால் நம் சிந்தனைகள் எல்லாமே சாத்தானின் அறிதலில்தான் இருக்கும்.
உதாரணமாக 
தாவீது பிறன் மனைவியை மனதில் இச்சித்த உடன் அவன் சிந்தனை சாத்தானுக்கு தெரிந்து அவளை அடைவதற்கான வழியை உண்டாக்கி கொடுத்தான் 
யுதாஸுக்கோ பணத்தின் மீது இருதயத்தில் ஆசை இருந்தது அதை அறிந்த சாத்தான் இயேசுவை பணத்துக்காக காட்டிக்கொடுக்கும் வழியை உண்டாக்கினான்.
யோபுவின் இருந்தயத்தில் எல்லா சம்பத்தும் போய்விடுமோ என்ற பயம் இருந்தது அதை அறிந்த சாத்தான் அவனை அனைத்தையும்  
இழக்க வைத்து சோதித்தான் 
சுருங்க சொல்லின் 
ஒருவன் தேவன் சிந்தனையிலேயே இருந்தால் அது சாத்தானுக்கு தெரியும் ஆனால் சாத்தானால் அங்கு எந்த கிரியையும் செய்யமுடியாது.
ஆனால் பொல்லாத சிந்தனையில் இருந்தால் அது சாத்தானுக்கு சாதகமாக இருப்பதால் அவனால் உள்ளே புகுந்து கிரியை செய்ய முடியும் தேவன் வெளியில் நின்றுதான் பிறர் மூலம் தடுக்க  நினைப்பாரேயன்றி வேறெதுவும் செய்ய முடியாது.

தேவன் ஏன் வெளியில் நின்று மாத்திரமா தடுக்க நினைப்பார்? தேவனால் எல்லாம் கூடுமே..


மனுஷன் பொல்லாத சிந்தனையில் இருந்தால் அது சாத்தானுக்கு சாதகமாக இருப்பதால் தேவனால்  உள்ளே புகுந்து கிரியை செய்ய விரும்புவது இல்லை.  (முடியாது என்று நான் குறிப்பிட காரணம் இருளும் ஒளியும் ஒரே இடத்தில் இருக்க முடியாது என்பதால்)  
ஆதாம் ஏவாள் பிசாசால் தூண்டப்பட்டு பாவம் செய்தபோது தேவன் தடுக்கவில்லை 
தாவீது பாவம் செய்ய திடடம் தீட்டியபோது தேவன் தடுக்கைவில்லை 
பொதுவாக தேவன் மனுஷனின் ஆவியோடு போராடுவது இல்லை!  

Edited by SUNDAR

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.