ஏழு சபைகள் (Rev 1:11-16)


ஏழு சபைகள் (Rev 1:11-16)

_Revelation Whatsapp group post :15_

அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில்எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது. வெளிப்படுத்தின விசேஷம் 1:11

அப்பொழுது என்னுடனே பேசினசத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன், திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,
வெளிப்படுத்தின விசேஷம் 1:12

அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகேபொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். 
வெளிப்படுத்தின விசேஷம் 1:13

அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது, அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தது,
வெளிப்படுத்தின விசேஷம் 1:14

அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது, அவருடைய சத்தம்பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 1:15

தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார், அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது, அவருடைய முகம்வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 1:16

யோவான் ஆவிக்குள்ளானபோது
எக்காள சத்தம் போன்ற பெரிதான ஒரு
சத்தத்தைக் கேட்டார். "நீ காண்கிறதை
ஒரு புஸ்தகத்திலே எழுது" என்று அந்தச்
சத்தம் விளம்பினதை. மேலும் எக்காள
சத்தம் போன்ற பெரிதான இந்தச் சத்தத்தை
பேசுவது யார் என்பதையும் அந்தச் சத்தம்
தெளிவுபடுத்திற்று, "நான் அல்பாவும்
ஓமெகாவும் முந்தினவரும்
பிந்தினவருமாயிருக்கிறேன்" என்று அந்தச்
சத்தம் விளம்பின து யோவான் தான்
காண்கிறதை ஒரு புஸ்தகத்தி
லே எழுதி,
ஆசியாவிலே இருக்கிற ஏழு சபைகளுக்கும்
அனுப்ப வேண்டும்.

யோவான் அந்தச் சத்தத்தைக் கேட்டபோது, தன்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினார். திரும்பியபோது அவர்
ஒரு மகிமையான தரிசனத்தை கண்டார்.
ஏழு பொன்குத்துவிளக்குகளையும், அந்தக்
குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி
தரித்து மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த
மனுஷகுமாரனுக்கு ஒப்பானவரை யோவான்
கண்டார் (வெளி 1:12,13). ஏழு பொன் குத்து விளக்குகள் ஏழு சபைகளுக்கு அடையாளம்
சபைகள் குத்துவிளக்குகளுக்கு ஒப்புமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
குத்துவிளக்கு வெளிச்சத்தைக் கொடுக்கும்.
அதைப்போன்று சபைகள் சுவிசேஷத்தின்
வெளிச்சம் உலகத்திற்கு பிரகாசமாகக்
கொடுக்கவேண்டும்.

யோவான் ஏழு பொன் குத்து விளக்குகள்
நடுவிலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை கண்டார். இயேசு கிறிஸ்துவின் மகிமையான தரிசனத்தை யோவான் இவ்வாறு விரிவாக எழுதுகிறார்.

  • 1. அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த
மலையைப் போலவும் வெண்மையாக இருந்தது;

  • 2. அவருடைய கண்கள்
அக்கினிஜுவாலையைப் போலிருந்தது

  • 3. அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது

  • 4. அவருடைய சத்தம் பெருவெள்ளத்தில்
இரைச்சல் போலிருந்தது.

  • 5. தமது வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களை ஏந்தி கொண்டிருந்தார்;

  • 6. அவர்  வாயிலிருந்து இருபுறமும்
கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது

  • 7. அவருடைய முகம் வல்லமையாய்ப்
பிரகாசிக்கிற சூரியனை போலிருந்தது.

கிறிஸ்துவைக் குறித்த வர்ணனை

  • 1. நிலையங்கி தரித்து மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்தவர்
(வெளி 1:13; தானி 10:6)

  • 2. அவருடைய சிரசும் மயிரும்
வெண்பஞ்சைப்போலவும் உறைந்த
மழையைப் போலவும் வெண்மையாயிருந்தது.
(வெளி 1:14: தானி 7:9)

  • 3. அவருடைய கண்கள் அக்கினி
ஜூவாலையை போலிருந்தது.
வெளி 1:14: வெளி 19:12; தானி 10:6
எபி 4:12),

  • 4. அவருடைய பாதங்கள் உலைக்களத்தில்
காய்ந்த பிரகாசமான வெண்கலம்
போலிருந்தது. (வெளி 1:15; வெளி 10:1;
தானி 10:6)

  • 5. அவருடைய சத்தம் பெருவெள்ளத்து
இரைச்சலைப்போலிருந்தது. (வெளி 1:15;
வெளி 8:5; வெளி 10:2-4; வெளி 11:15;
வெளி 14:2; வெளி 16:17-18; வெளி 19:5; சங் 29; எபி 12:26; தானி 10:6)

  • 6. அவர் தமது வலதுகரத்திலே ஏழு
நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருந்தார்
அந்த எழு நட்சத்திரங்களும் எழு சபைகளின் தூதர்களாம். (வெளி 1:16, 20).

  • 7. அவர் வாயிலிருந்து இருபுறமும்
கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது.
(வெளி -1:16; வெளி 2:12, 16; வெளி 19:15,21; எபே 6:17; எபி 4:12).

  • 8.அவருடைய முகம் வல்லமையாய்ப்
பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது
(வெளி 1:16; வெளி 10:1; தானி 10:6)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.