…
வெளி 1:9-10
…வெளி 1:9-10
_Revelation Whatsapp group post :14_
…
உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:9
…
கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன், அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். வெளிப்படுத்தின விசேஷம் 1:10
…
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை தரிசிக்கும்
சிலாக்கியம் யோவானுக்கு கிடைத்திருக்கிறது. கிறிஸ்துவைத் தரிசித்தபோது தன்னுடைய நிலைமை எப்படியிருந்தது என்பதை யோவான்
விவரிக்கிறார். யோவான் உபத்திரவ படுத்தப்பட்டார். தேவவசனத்தினிமித்தமும்,
இயேசுகிறிஸ்துவைப்பற்றிய
சாட்சியினிமித்தமு
ம், யோவான் பத்மு என்னும் தீவிலே சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.…
சபையாருக்குத் தன்னைப்பற்றி எழுதும்போது தன்னை அவர்களுடைய சகோதரன் என்று சொல்லுகிறார். யோவான் ஒரு அப்போஸ்தலர் இருந்தாலும் தன்னை அவர்களுடைய சகோதரன் என்று சொல்லி, தன்னையே தாழ்த்துகிறார்.
…
யோவான் இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கு உடன் பங்காளியாக இருக்கிறார். கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் உபத்திரவங்களை அனுபவிக்கும் போது, அவற்றை தனியாக அநுபவிப்பதில்லை . மற்ற விசுவாசிகள் உபத்திரவங்களை அனுபவிப்பது போல யோவானும் உபத்திரவங்களை
அனுபவிக்கிறார். இயேசுகிறிஸ்துவினுடைய
ராஜ்யத்திற்கும், அவருடைய பொறுமைக்கும், அப்போஸ்தலர் யோவான் மற்ற விசுவாசிகளுக்கு உடன் பங்காளனாக இருக்கிறார்.
…
மற்ற விசுவாசிகள் உபத்திரவங்களை
அனுபவிக்கும் போது யோவான்
அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறார்.
அவர்களுடைய உபத்திரவத்தில் அவர்களுக்கு ஆறுதலையும் ஆலோசனையையும் சொல்லுகிறார் யோவான் தரிசனம் கண்டபோது அவர் பத்மு என்னும் தீவிலே இருக்கிறார். இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தம் யோவான் இந்தத் தீவிலே சிறைவைக்கப்பட்டிருக்கிறார்.
சிறைவாசமாகயிருந்தாலும் அப்போஸ்தலர்
யோவான் கிறிஸ்துவுக்குள் சமாதானமாகவும்
சந்தோஷமாகவும் இருக்கிறார்.
…
யோவான் தீமைகளைச் செய்து பாடுகளை
அனுபவிக்கவில்லை . தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய
சாட்சியினிமித்தமுமாகவே அவர் இந்தத்
தீவிலே - சிறைவைக்கப்பட்டிருக்கிறார்.
கர்த்தருடைய பிள்ளைகள் தீமை செய்து
பாடநுபவிக்கக்கூடாது. நன்மை செய்து
பாடநுபவிப்பதே நமக்கு ஆசீர்வாதம்.
…
அப்போஸ்தலர் யோவான் பத்மு தீவில்
சிறைவைக்கப்பட்டிருந்தபோது
ஆவியானவருடைய மகிமையும் தேவனுடைய கிருபையும் அவர்மீது வந்து அமர்ந்து. யோவான் உபத்திரவங்களை அநுபவித்தாலும் தேவனுடைய தெய்வீக பிரசன்னம் அவருக்கு மிகுந்த ஆறுதலாகவும், சந்தோஷமாகவும்,
சமாதானமாகவும் இருந்தது.
…
யோவான் தான் தரிசனங்கண்ட
நாளைப்பற்றித் தெளிவாகச் சொல்லுகிறார்.
கர்த்தருடைய நாளில் யோவான்
தரிசனங்கண்டார். அந்தநாளில் யோவான்
ஆவிக்குள்ளானார். யோவான் தரிசனத்தைப்
பெற்றுக்கொள்வதற்கு முன்பாகவே அவர்
ஆவியிலே - வானத்திற்கு
எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று
வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். கர்த்தர்
தம்மைக்குறித்த விசேஷித்த வெளிப்பாடுகளை நமக்குக் கொடுப்பதற்கு முன்பு, அந்த வெளிப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு அவர் நம்மை ஆயத்தம் பண்ணுகிறார்
இயேசுகிறிஸ்துவினுடைய தரிசனத்தைப்
பெற்றுக் கொள்வதற்கு முன்பாக, கர்த்தருடைய நாளிலே, யோவான் ஆவிக்குள்ளானார்.
…
யோவான் ஆவிக்குள்ளான போது.
அவருக்குப் பின்னாலே எக்காள சத்தம்
போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக்
கேட்டார். இந்தச் சத்தம் கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவின் சத்தமாகும்.
…
பத்மு சாமோசிற்குத் தென்மேற்கே 30
மைல் தூரத்தில் அமைந்துள்ள ஒரு தீவு
இந்தத் தீவு 6 மைல் நீளமும், 10 மைல்
அகலமும் கொண்டது. இந்தத் தீவில் மரங்கள் இல்லை. இங்கு பாறைகளும், எரிமலைகள் அதிகம். மிகவும் கொடிய குற்றவாளிகளை ரோமப்பேரரசினர் இந்தத் தீவிற்கு நாடுகடத்தி தண்டனை கொடுப்பது வழக்கம்.
…
யோவான் நாடு கடத்தப்பட்டதற்குக்
காரணங்கள்
…- 1. தேவவசனத்தைப் பிரசங்கம் பண்ணினார்.
- 2. இயேசு கிறிஸ்துவிற்குச் சாட்சி பகிர்ந்தார்.
ஆவிக்குள்ளானேன் என்னும் வாக்கியம்
ஒருவர் தன்னை பரிசுத்த ஆவியானவருக்கு
முழுவதுமாக ஒப்புக்கொடுத்து, அவரோடு
பூரணமான ஐக்கியத்தில் இருப்பதை
விளக்குகிறது -
…
ஆதித்திருச்சபையில் விசுவாசிகள்
வாரத்தின் முதல் நாளைக் கர்த்தருடைய
நாள் என்று அறிவித்தார்கள். இந்நாள்
கர்த்தர் உயிர்த்தெழுந்த நாள்.
ரோமப்பேரரசாரும் தங்களுடைய பேரரசரை
வணங்குவதற்காக ஒரு குறிப்பிட்ட நாளை
நியமித்து அதற்கு "அகஸ்துவினுடைய நாள்" என்று அறிவித்தார்கள். ஞாயிற்றுக்
கிழமையே கர்த்தரை ஆராதிக்கும்
கர்த்தருடைய நாளாகும்.
…
கர்த்தர் சீனாய் மலையின் மேல்
இறங்கியபோது எக்காள சத்தம் தொனித்தது.
மோசே தேவனிடத்தில் பேசினார். தேவனும்
தம்முடைய வாக்கினால் அவருக்கு மறுமொழி கொடுத்தார். (யாத் 19:16-19)
…