ஏழு குத்து விளக்குகள் (வெளி 1:17-20)
…
_Revelation Whatsapp group post :16_
…
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில்விழுந்தேன், அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்,
வெளிப்படுத்தின விசேஷம் 1:17
…
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:18
…
நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது, வெளிப்படுத்தின விசேஷம் 1:19
…
என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது, அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம், நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:20
…
இயேசு கிறிஸ்து தம்முடைய மகிமையிலே
யோவானுக்குத் தரிசனங்கொடுத்தார்.
இதுவரையிலும் யோவான் இப்படிப்பட்ட
மகிமையான தரிசனத்தைக் கண்டதில்லை.
அவர் இயேசுவை கண்ட போது
செத்தவனைப்போல அவருடைய பதத்தில்
விழுந்தார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை
மகிமையுள்ள வராக இருந்தாலும், அவர்
கிருபையுள்ளவராகவும் இருக்கிறார்.
தம்முடைய சீஷரிடத்தில் அன்புள்ளவராய் இருக்கிறார்.
…
தம்முடைய பாதத்தில்
செத்தவனைப்போல விழுந்துகிடக்கிற
யோவான்மேல் தம்முடைய வலதுக
ரத்தை
வைத்து, யோவானை நோக்கி, "பயப்படாதே,
நான் முந்தின வரும் பிந்தின வரும்,
உயிருள்ள வருமாயிருக்கிறேன். மரித்தேன்,
ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும்
உயிரோடிருக்கிறேன் ஆமென் என் று
சொன்னார்.
…
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யோவானிடம்
அன்போடு "பயப்படாதே" என்று சொல்லுகிறார் தம்மைப்பற்றி வெளிப்பாட்டை இயேசு கிறிஸ்து
யோவானுக்குச் சொல்லுகிறார். தாம் யார்
என்பதையும் தம்முடைய தெய்வீகம்
சுபாவத்தையும் கர்த்தர் யோவானுக்கு
வெளிப்படுத்துகிறார். இயேசு கிறிஸ்து
யோவானுக்கு ஆறுகாரியங்களை
வெளிப்படுத்துகிறார்.
…
அவையாவன :
…- 1. 'நான் முந்தினவரும் பிந்தி வரும்,
உயிருள்ள வருமாய் இருக்கிறேன்" இந்த
வாக்கியம் இயேசுகிறிஸ்துவின் தெய்வீக சுபாவத்தைக் குறிப்பிடுகிறது.
- 2. "மரித்தேன்". இயேசு கிறிஸ்து
ஏற்கெனவே தம்முடைய மாம்சத்தில்
பாடுகள் அநுபவித்திருக்கிறார். நம்முடைய
பாவத்தினிமித்தமாய் கிறிஸ்துவானவர்
சிலுவையில் மரித்தார்.
- 3. "ஆனாலும், இதோ , சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்" இயேசு கிறிஸ்துவே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறார். அவர் மரணத்தை வென்றவர். நித்திய ஜீவனுள்ளவர்.
- 4. "நான் மரணத்திற்கும்
பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை
உடையவராய் இருக்கிறேன்" இயேசு கிறிஸ்து வுக்கு மரணத்தின் மீது சர்வ
அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்
மரணத்தை ஜெயித்தவர். சர்வலோகத்திற்கும்
கிறிஸ்துவானவரே அதிபதியாக இருக்கிறவர்.
- 5. "நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது" கிறிஸ்துவானவர் தம்முடைய சந்தோஷத்தையும் தம்முடைய சித்தத்தையும் வெளிப்படுத்தி, அதை எழுதுமாறு சொல்லுகிறார்.
- 6. "என் வலதுகரத்தில் நீ கண்ட
ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது: அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்கள்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகள்" ஏழு நட்சத்திரங்கள் ஏழு குத்து விளக்குகள் ஆகியவற்றின் இரகசியங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யோவானுக்குச் சொல்லுகிறார்.
…
கிறிஸ்துவின் தரிசனத்திற்குப் பின்பு
உடனடியாக ஏழு சபைகளுக்கு செய்திகள்
கொடுக்கப் படுகிறது. வெளி 2-3 ஆகிய
அதிகாரங்கள் வெளிப்படுத்தின விசேஷத்தின் இரண்டாம் பகுதியாகும். தற்போதுள்ள சபைகளின் காரியங்களை இந்தப் பகுதி விளக்குகிறது. சபை எடுத்துக் கொள்ளப்படும் வரையிலும் சபைகளுக்கு இந்தச் செய்தி பொருந்தும்.
…
"ஏழு சபைகள்" என்பதன் வியாக்கியானங்கள்
…- 1. யோவானின் நாளில் இருந்த ஏழு ஸ்தல
சபைகள். துருக்கி தேசத்தின் மேற்குக்
கரைப்பகுதியில் சின்ன ஆசியா
அமைந்துள்ளது. அதிலுள்ள ஏழு ஸ்தல
சபைகளின் நிலைமைகள் இங்கு
விவரிக்கப்பட்டிருக்கிறது. (வெளி 1:4,11,20)
- 2. தற்காலத்திலிருந்து சபை எடுத்துக்
கொள்ளப்படும் காலம்வரையிலுமுள்ள
எல்லா சபைகளுக்கும் கூறப்படும் தீர்க்கதரிசன செய்தி. ஸ்தல சபைகளின்
ஆவிக்குரிய நிலைமைகளை ஏழு சபைகளுக்கும் கூறப்பட்டிருக்கும் செய்திகள் விவரித்துக் காண்பிக்கிறது.
- 3. ஒவ்வொரு சபையிலுமுள்ள தனி
நபர்களை இந்த வாக்கியம் குறிக்கிறது.
ஒவ்வொரு தனி நபருடைய ஆவிக்குரிய
நிலைமை விளக்கப்பட்டு, அவர்களுக்கு
எச்சரிப்பு கூறப்படுகிறது. (வெளி 1:3
வெளி 2: 7,1117,26 ; வெளி 3:5,12 ,21)
…
"ஏழு சபைகள்" என்னும் வார்த்தை
எல்லாச் சபைகளையும் குறிக்கும்
தீர்க்கதரிசன வார்த்தை என்பதற்கு ஆதாரங்கள்
…- 1. வெளிப்படுத்தின விசேஷம் முழுவதுமே
தீர்க்க தரிசன பண்புடையது. (வெளி - 1:3,19; வெளி 4:1; வெளி 22:18-19)
- 2. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சி
என்னும் வாக்கியமும் (வெளி 1:9;
வெளி 12:17) இயேசு கிறிஸ்துவைப்
பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின்
ஆவியாயிருக்கிறது (வெளி 19:10)
என்னும் வாக்கியமும், ஏழு சபைகள்
என்னும் வார்த்தை தீர்க்கதரிசன வார்த்தை
என்பதை உறுதிப் பண்ணுகிறது
- 3. வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில்
கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும்
இது தீர்க்கதரிசன வார்த்தை என்பதை
உறுதி பண்ணுகிறது (வெளி - 1:19; வெளி 4:1)
- 4. தேவனுடைய வார்த்தை என்னும்
வார்த்தை இது ஒரு தீர்க்கதரிசன
சம்பாஷணை என்பதை நிரூபிக்கிறது
(வெளி 1:39)
- 5. "சீக்கிரத்தில் சம்பவிக்க
வேண்டியவைகள் (வெளி 1:1;
வெளி 22:6-10) என்னும் வாக்கியமும்
இது ஒரு தீர்க்கதரிசனம் என்பதை உறுதி பண்ணுகிறது.
- 6. வெளி 2-3 ஆகிய அதிகாரங்களில்
எழுதப்பட்டிருக்கிற நிருபங்கள் மற்ற
நிருபங்களுக்கும் புதிய ஏற்பாட்டின்
எல்லாப் புஸ்தகங்களுக்கும் பொருந்தும்,
இது ஒரு தீர்க்கதரிசன வார்த்தை என்பதை
இந்தக் காரியமும் நிரூபிக்கிறது. (2 தீமோ 3:16-17)
- 7. ஜெயங்கொள்ளுகிறவர்களுக்குக் கூறப்
பட்டிருக்கும் வாக்குத்தத்தங்களும்,
இனிமேல் நடைபெறப்போகும்
காரியங்களும் இக்காலத்தில் உள்ள
விசுவாசிகளுக்கும் பொருந்தும்.
(வெளி 1-3)
…
ஏழு சபைகளுக்கும் எழுதப்பட்டிருக்கும்
திருப்பங்களில் காணப்படும் ஒற்றுமைகள்
…- 1. எல்லா நிருபங்களிலும் இயேசு
கிறிஸ்துவைப் பற்றிய விளக்கம்
உள்ள து. (வெளி 1:12-16)
- 2 ஒவ்வொரு நிருபமும் தூதனுக்கு அதாவது
மேய்ப்பருக்கு எழுதப்பட்டது கும்.
- 3. ஏழாவது சபையைத் தவிர மற்ற
சபைகளின் கிரியைகள் போற்றப்பட்டுள்ளன.
- 4. இரண்டாவது ஆறாவது சபைகளைத்
தவிர மற்ற சபைகள் அனைத்தும்
கடிந்து கொள்ளப்பட்டும் உள்ளன.
- 5. இரண்டு, நான்கு ஆறு ஆவது
சபைகளைத் தவிர மற்ற சபைகளுக்கு
மனந்திருந்த வேண்டும் என்னும்
கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது.
நான்காவது சபையிலும் மனந்திருந்த
வேண்டிய பாவமுள்ள து
ஆயினும் மனந்திருந்த வேண்டுமென்று அதற்கு கட்டளை கொடுக்கப்படவில்லை.
- 6. இரண்டு, ஆறு ஆகிய சபைகளைத்
தவிர மற்ற சபைகளுக்கு
நியாயத்தீர்ப்பின் எச்சரிப்புக்கள்
கொடுக்கப்பட்டிருக்கிறது.
- 7. ஒன்று இரண்டு, ஆறு ஆகிய
சபைகளைத் தவிர மற்ற சபைகள்
ஒன்றுக்கொன்று முந்திய சபையைவிட
மோசமானதா இருக்கிறது
- 8. ஜெயங் கொள்ளுகிறவர்களுக்கு எல்லா
நிருபங்களிலும் வாக்குத்தத்தங்கள்
கொடுக்கப்பட்டுள்ளன.
- 9. காதுள்ளவன் கேட்கக்கடவன் என்னும்
புத்திமதி எல்லா நிருபங்களில் கூற பட்டிருக்கிறது
- 10. இந்த நிருபத்தை எழுதவேண்டுமாறு
தேவன் யோவானுக்குக் கட்டளை
கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு
நிருபத்தையும் எழுதி முடித்த பின்பு,
இதை யாருக்கு எழுத வேண்டும்,
இதில் என்ன எழுத வேண்டும் என்பனவற்றை அடுத்த
அடுத்த நிருபத்தை முடிக்கும் முன்பு தேவன் யோவானுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
அதன்பின்பு "இவைகளுக்குப்பின்பு
சம்பவிப்பவைகளைச் சபைகளுக்கு
எழுது" என்னும் கட்டளையைத் தேவன்
யோவானுக்குக் கொடுத்தார்.
(வெளி 1:19; வெளி 4:1)
…