காலமும் இடமும்



காலமும் இடமும்

_Revelation Whatsapp group post :05_

கிவி. 96 ஆம் ஆண்டில் பத்மு தீவிலிருந்து இந்த நிருபம் எழுதப்பட்டது. (வெளி 1:9)

ஆசிரியர்

அப்போஸ்தலர் யோவான். (வெளி 1:4)

மையக்கருத்து

இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடு சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத்
தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும் பொருட்டு, தேவன் இயேசு கிறிஸ்துவிற்கு ஒப்புவித்து அவர் வெளிப்படுத்திக் காண்பித்தார், (வெளி 1:1) சம்பவிக்க - வேண்டிய
வைகள்" என்பது யோவானுடைய நாளிலிருந்து புதிய வானம், புதிய பூமி உண்டாகும் நிகழ்ச்சி வரையிலும் சம்பவிக்கும் காரியங்களுக்கும்.

இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக தொடர்ந்து நடைபெறும் இந்த முக்கிய நிகழ்ச்சிகளுக்கு இடையில் வேறுசில இணை நிகழ்ச்சிகளும் கோர்க்கப்பட்டுள்ளன. இவை முக்கிய நிகழ்ச்சிகளோடு நடைபெறும் துணை நிகழ்ச்சிகளாகும்

- வெளிப்படுத்தின விசேஷம் மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கலாம். (வெளி 1:19) ஒவ்வொரு பிரிவிலும் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளின் விவரம் வருமாறு:

1. நீ கண்டவைகள் "The things which thou
hast seen, ஏழு பொன்குத்துவிளக்குகளின் மத்தியிலே காணப்பட்ட இயேசு கிறிஸ்துவின் தரிசனம். (வெளி 1:12- 20) இந்தத் தரிசனம் இந்தப் புஸ்தகத்தின் முன்னுரையும் சேர்ந்து முதலாவது பிரிவாகும்.

2. "இருக்கிறவைகள்" “The things which are". ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும்
எழுதப்பட்டிருக்கும் எழு நிருபங்கள் இந்தப் புத்தகம் முழுவதும் அவர்களுக்கு எழுதப்பட்டிருக்கிறது. (வெளி 2:1-3:22). இந்தச் சபைகளுக்குக் கூறப்பட்டிருக்கும் செய்திகள் சபைக் காலத்திலுள்ள எல்லாச் சபைகளுக்கும் பொருந்தும் எடுத்துக் கொள்ளப் படும் காலம் வரையிலும் இந்தச் செய்திகளை எல்லாச் சபைகளுக்கும் கூறலாம். வருங்கால உபத்திரவ காலம், அந்திக்கிறிஸ்துவின் வருகை ஆகியவற்றிற்கு முன்பு வரையிலும்
எழு சபைகளுக்கும் கூறப்பட்டிருக்கும்
செய்திகளை எல்லாச் சபைகளுக்கும் கூறலாம். இக்காலத்தின் கடைசி ஏழு வருஷங்களில் அந்திக்கிறிஸ்து பூமியில் இருப்பான். (தானி 9:27; 2தெச 2:7-12; வெளி 6:1-19:21)

3. "இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகள்" "The things which shall be hereafter" சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு நடைபெறும் நிகழ்ச்சிகள் (வெளி 4:1-22:5) பரலோகத்தில் காணும் காட்சிகள் வெளி 4-5), எழு
முத்திரைகளும் அவற்றோடு தொடர்புடைய வாக்கியங்களும் (வெளி 14:1-19:21),
ஆயிரம் வருஷ அரசாட்சி (வெளி 20), புதிய வானமும், புதிய பூமியும் (வெளி 21:1-22:15), முடிவில் நடைபெறப் போகும் நிகழ்ச்சிகள் (வெளி 22: 6-21) ஆகியவை இந்தப் பிரிவில் அடங்கும்.

வெளி 4:1 ஆவது வசனத்தில் கூறப்பட்டிருக்கும் காரியங்கள் சபை காலத்திற்குப்பின்பு நடைபெறும். அதாவது வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள் சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு நிறைவேறும். தற்பொழுது நடைபெறும் காரியங்கள் அல்லது வரலாற்று நிகழ்ச்சிகளோ வெளி 4-22 ஆகிய அதிகாரங்களில் கூறப்படவில்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.