வியாக்கியானம்
Revelation Whatsapp group post :05
வெளிப்படுத்தின விசேஷம் புதிய ஏற்பாட்டின் இறுதி நூல்களாகிய இலக்கியங்களின் மொழி நடையில் அமைந்துள்ளது. இந்நூலுக்கு ஒரு திட்டவட்டமான நூலாசிரியர் உண்டு.
அவரே தமது பெயரைக் குறிப்பிடுகிறார். ஒரு திட்டவட்டமான நோக்கமும் இந்த நூலுக்கு உண்டு எனவே இந்த வரிசையைத் சேர்ந்த மற்ற நூல்களிலிருந்து இந்த விஷயங்களில் இந்நூல் குறிப்பாக மாறுபடுகிறது. திருச்சபை சரித்திரத்தின் எல்லா விஷயங்களையும் முன்னறிவிப்பது அவருடைய முக்கிய நோக்கமாக இல்லை. தற்காலத்தில் பொதுவான போக்குகளையும், அவை ஆண்டவராகிய இயேசுவின் வருகையில் அடையும் இறுதி முடிவையும் காட்டுவதே அவர் நோக்கம். இறுதி முடிவுரையில் உள்ள "இதோ நான் சீக்கிரமாய் வருகிறேன்" 22:7,12,20 என்று மூன்று முறை கூறப்பட்டுள்ள சவாலான
அறிவிப்பு தமது திருச்சபைகளுக்கு அவரளித்த வாக்குத்தத்தை 2:16; 3:11 உறுதிப்படுத்தி, இந்த நூல் முழுவதையும் உலகுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் தேவனுடைய பிள்ளைகளுக்கு ஒரு ஊக்குவித்தலாகவும் செய்கிறது.
சில ஒருமைப்பாடுகள் இந்த நூல் முழுவதிலும் விரவிக் காணப்படுகின்றன. கிறிஸ்து - ஒரு நபராக ஓங்கி நிற்கிறார். முதலாவது பிரகாச
மான முகத்துடன், வெள்ளுடை தரித்தவராய் திருச்சபையைக் கண்காணிப்பு. கண்டித்து ஆலோசனை கூறுபவராக மகிமை நிறைந்த உருவில் அவர் தோன்றுகிறார். அவர் முத்திரையிடப்பட்ட தோல் சுருளின்
அதிகாரத்தின் கீழ் நியாயத் தீர்ப்புச் செய்ய உரிமை கோருபவர் ஆட்டுக் குட்டியானவர்
அவரே. அவர்தான் தமது இரட்சிப்பின் பணியினிமித்தம் அந்த உரிமையைப் பெற்றுக் கொண்டவர் (5:4-7 ) நியாயத் தீர்ப்புச் செய்யும் போது, ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா" (1916) என்னும் பட்டத்துடன் வெள்ளைக் குதிரையின் மேல், வெற்றி கொண்ட ரோமத்
தளபதி போல் (19:11), வருகிறவர் அவரே எல்லாம் நிறைவுறும் வேளையில் தமது
ஜனங்களின் மணவாளனாக வருகிற அவர், தமது இரட்சிப்பின் காரணமாக மறுபடியும்
ஆட்டுக்குட்டியானவர் என்றழைக்கப்படுகிறார்.
வெளிப்படுத்தின விசேஷத்தின் வரிசைக் கிரமம் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. வரலாற்று விளக்கம் தருவோர். அது எழுதப் பட்ட காலத்திலிருந்து கிறிஸ்துவின் வருகை
வரை உள்ள முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் குறிக்கப்பட்டுள்ள நாள்காட்டியாக வெளிப்படுத்தின விசேஷத்தைக் காண்கின்றனர். எதிர்கால விளக்கம் தருவோர் கிறிஸ்துவின் வருகைக்கு முந்தின எழு வருடங்களின் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இடம்
பெற்றுள்ளன என்று கருதுகின்றனர். கடந்த காலத்தைப் பற்றியது என்போரும், உயர்ந்த
கருத்துடையோர் இவற்றில் வரலாற்று
நிகழ்ச்சிகளில் வரிசை இருப்பதாக
கருதவில்லை. இருப்பினும் சில உண்மைகள் தெளிவாக உள்ளன. முதல் மூன்று
அதிகாரங்களில் உள்ள நிருபங்கள் இந் நூல் 'எழுதப்பட்ட காலத்தில் அதாவது
நூலாசிரியரின் காலத்திலேயே ஆசியாவின் நகரங்களில் இருந்த திருச்சபைகளுக்கு
எழுதப்பட்டுள்ளது நான்காவது அதிகாரத்தில் தொடக்கத்தில் "இனிச் சம்பவிக்க வேண்டியவைகள் (4:1) தரிசனம்
என்று இந்ததொடங்குகிறது தரிசனங்கள்
நூலாசிரியரின் காலம் தொடங்கி முடிவுறும் காலம் கொடுக்கப்படாமல் தொடர்கின்றன.
இந்நூலின் இறுதி இரு தரிசனங்களும் இன்னும் நிறைவேறவில்லை. அவை வரவிருக்கும் கடைசி காலத்துக்குரியது. இவ்வாறாக வெளிப்படுத்தின விசேஷத்தின் ஒரு பகுதி இறந்த காலத்துக்கும், ஒரு பகுதி நிகழ் காலத்துக்கும், ஒரு பகுதி எதிர் காலத்துக்கும் உரியது.
இறுதி இரு பகுதிகளும் ஒன்றுக்கொன்று இணையாக உள்ளன. வெளிப்படுத்தின
விசேஷம் 17:1 முதல் 21:8 வரை முன்பகுதி, பாபிலோன் என்னும் வேசியைக் கொண்டு
குறிக்கப் படுகிற தீமையான உலக அமைப்பின் அழிவைக் குறித்துக் கூறுகிறது. 21:9 முதல் 22:5 வரையுள்ள இரண்டாம் பகுதி கிறிஸ்துவின் மணவாட்டி இறுதியாகத் தோன்றுவதையும் புதிய எருசலேமையும் விவரிக்கிறது. இந்த இரு பகுதிகளிலும் உள்ள இணை அமைப்பில் ஒற்றுமைகளும் உள்ளன. வேற்றுமைகளும் உள்ளன. இரண்டுமே எழு கலசங்களை உடைய ஏழு தூதரில் ஒருவரால் அறிமுகப்படுத்தப் படுகின்றன. இந்தக் காட்சியைக் காணும் நபரை, பரலோக தூதன் "இங்கே ஏறிவா" என்னும் சொற்களை கொண்டு அழைக்கிறான். இரண்டும் ஒவ்வொரு நோக்கத்தின் முடிவைக் குறிக்கின்றன. ஒன்று தேவனை விட்டு விலகிச் செல்லும் வழியின் முடிவு, அடுத்தது மீட்பின் முடிவு.
இந்த இணை அமைப்பில் உள்ள வேற்றுமைகளும் தெளிவாக உள்ளன. முதல் பகுதி ஒரு வேசியை அறிமுகப்படுத்துகிறது. பிந்தின பகுதி ஒரு மணப்பெண்னை அறிமுகப்படுத்துகிறது. முதல் நிகழ்ச்சி வனாந்தரத்தில் நடைபெறும் காட்சி (17:3) அடுத்தது ஒரு மலையில் நடைபெறும் நிகழ்ச்சியின் காட்சி (20:10) அந்த வேசியின் மேல் தூஷணமான நாமங்கள் காணப்பட்டன. (17:3) பன்னிரு கோத்திரத்தாரின் பெயர்களும்,
பன்னிரு அப்போஸ்தலர் பெயர்களும் பரிசுத்த நகரத்தில் பொறிக்கப்பட்டன (21:12,14) முன்னது ஊழல் நிறைந்ததும், நியாயத் தீர்ப்புக்குப் பாத்திரமானதுமான பாபிலோன் நகரத்தை முன் வைக்கிறது (17:5) பின்னது பரிசுத்தம் கற்பமுள்ளதாக பரலோகத்திலிருந்து இறங்கி வரும் புதிய எருசலேமை வருணிக்கிறது. (21:40) முன்னது நியாயத் தீர்ப்பில் அழிகின்றது பின்னது நித்திய ஒளியில் வாழ்கின்றது. முன்னது சபிக்கப்பட்டது. பின்னது ஆசீர்வதிக்கப்பட்டது.
வெளிப்படுத்தின விசேஷமாகிய புத்தகம் வரலாற்றுக்கு ஒரு தெய்வீக நோக்கைக்
கொடுக்கிறது. அதனுடைய குறியீடுகளுக்கு எப்படி விளக்கம் தந்தாலும் அதன் திட்டு
மொத்த நோக்கம், திருச்சபைகளின் நிறைவுகளையும் குறைவுகளையும் உலகின் அழிவையும் நம்பிக்கையும் காணுகின்ற தெய்வீகப் பரிசுத்த நோக்கமேயாகும். திருச்சபைகளுக்கு அனுப்பப்படுகிறது. நியாயத் தீர்ப்பு செய்யப்படும் காட்சி தேவனுடைய சிங்காசனத்தை மையமாகக் கொண்டு நடக்கிறது (4:2-19:5) அதே சிங்காசனத்திலிருந்து தான் இறுதி நியாயத் தீர்ப்பும் அறிவிக்கப்படுகிறது. புதிய வானத்தையும் புதிய பூமியையும் விவரிக்கும் போது. ஜீவ நதியின் ஊற்று அந்தச் சிங்காசனம் இன்னும் மையமாகவே உள்ளது. (22:1) இவ்வாறு சிங்காசனத்துக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் வெளிப்படுத்தின
விசேஷத்தில் தேவனுடைய ராஜரீகத்தைத் தெளிவாக்குகிறது. மேலும் மனிதருடைய
காரியங்களில் நித்தியமாக அவருடைய ஆளுகையையும் தெளிவு படுத்துகிறது.
இந்நூலில் ஓங்கி நிற்கிற மகிழ்ச்சிக்கு எதிராக தீங்கைக் குறித்து அது தரும் சித்திரமும் உள்ளது. காலம் செல்லச் செல்ல உலகம் பெருமளவில் சரியாகிவிடும் என்பதற்கேதுவான குறிப்பெதையும் இது தரவில்லை. அல்லது இறுதியில் எல்லா மனிதர்களும் விசுவாசித்து மனந்திரும்பி தேவனிடம் வருவார்களென்றும் சொல்லவில்லை. இறுதிக் கலாச்சாரம் வளமுள்ளதாகவும் பண்பாட்டில் முன்னேறினதாகவும் முழுக்க முழுக்க
தேவனற்றதாகவும் இருக்குமென்று இது குறிப்பிடுகிறது (18:4-5) ஒருங்கிணைந்த மனித இனத்தின் இறுதிச் செயல் தேவனுக்கும் அவருடைய கிறிஸ்துவுக்கும் எதிராக ஆயுதமெடுத்துப் போராடுவதாக இருக்கும் (20:7-10 ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைகளைத் தவிர வேதத்தின் வேறு எந்த நூலிலும் பாவத்தின் இறுதி அழிவு இவ்வளவு பயங்கரமாகச் சித்தரிக்கப்படவில்லை (20:15)
இறுதிக் காலத்தை வெளிப்படுத்தும் இந்த நூல் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த மனிதனுக்கு, அவனுடைய தந்தை, தாத்தா ஆகியோருக்குத் தோன்றிய அளவுக்கு இறுதி காலத்தின் வெளிப்படுத்தலாகத் தோன்றவில்லை. பேசுகின்ற பிம்பங்கள் (13:15) வானத்திலிருந்து அக்கினி விழுவது. 13:13) பெரும் ஜனத்தொகையான மக்கள் மீது பொருளாதாரக் கட்டுப்பாடு (13:6,17) செயற்கையான ஒரு மதத்துக்குத் கட்டாயமாகக் கீழ்ப்படிவது (13:14) கடலில் சில வேறுபாடுகளாலும் சூரிய வெப்பத்தில் உண்டாகும் ஒட்டு மொத்த அழிவு (16:38) பூமியின் ராஜாக்கள் எல்லாரையும் யுத்தத்துக்கு அழைத்தல் (16:4) ஒரிருவர் மட்டும் தலைவராக இருந்து தேசங்களை நடத்துதல், ஒரு மணி நேரத்தில் நாகரிகத்தின் மையத்தின் வீழ்ச்சி ஆகியவை இன்று நடக்க முடியாத
காரியங்களல்ல. இன்னும் பலவகைகளில் பார்க்கப் போனால் உலகில் இருக்கிற புத்தகம் களிலெல்லாம் தற்காலத்துக்குரிய நூல் வெளிப்படுத்தின விசேஷமே.
"இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்னும் இறுதி வாக்குத் தத்தத்துடன் புதிய ஏற்பாடு முடிகிறது. தேவன் நியாயப் பிரமாணத்தின் மூலமும் தீர்க்கதரிசிகள் மூலமும் பேசினார். மறுபடியும் அவர் தமது குமாரனின் மூலம் பேசினார். அவர் தம்மைத் தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசி காலத்தில் ஒரே தரம் வெளிப்பட்டார். (9:26) அவர் தமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாகும் போது (எபிரெயர் 9:28) பெரியதொரு வெளிப்படுத்தல் வரவிருக்கிறது. அந்த வெளிப்படுத்தலையும் அந்த வெற்றியையும்தான் வெளிப்படுத்தின விசேஷம் சுட்டிக் காட்டுகிறது.