தலைப்பின்முக்கியத்துவம்



….
தலைப்பின்முக்கியத்துவம்
….
_Revelation Whatsapp group post :08_
….
புத்தகத் தலைப்பின் முக்கியத்துவம்
….
இயேசு கிறிஸ்துவினால் போவானுக்கு
திறந்து வெளிக்குக் கொண்டுவரப்பட்ட அல்லது திரையை நீக்கிக் காட்டப்பட்ட காரியங்கள்
….
மிகச் சிறிய அதிகாரம்:-
அதிகாரம் 15 (8 வசனங்கள்)
….
மிக நீண்ட அ
திகாரம்:-
அதிகாரம் 2 (29 வசனங்கள் )
….
மொத்த அதிகாரங்கள்: 22
….
முக்கிய வேத வசனம்:-
….
வெளிப்படுத்தின விசேஷம் 1:19
"நீ கண்டவை களையும், இருக்கிறது களையும், இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது"
….
முன்னுரை:-
….
புதிய ஏற்பாட்டு புத்தகங்களில் இந்த ஒரு
புத்தகம் மாத்திரம், தீர்க்கத் தரிசனங்களுக்கு
மட்டும் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. முக்கிய வசனம் , அதிகாரம் 1:19 வசனத்தில், பொதுவான சுருக்க வருணனையைக் காணலாம். இருக்கிறவைகளையும் அதிகாரம்( 2.3) மற்றும் "இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவை களையும்" அதிகாரம் (4-22). இந்தப் புத்தகத்தில் எண்களுக்கு சிறப்பான கவனம் கொடுக்கப்படுகிறது உதாரணமாக "எழு" என்ற எண் புத்தகம் முழுவதிலும் காணப்படுகிறது. எழு
(உண்மையாகவே சபைகள், 2:1,8,12,18 ; 3:1.7,14) தேவனுடைய ஏழு ஆவிகள் (4:5), ஏழு முத்திரைகள் 6:1,3,5,7,9,12 ;8:1), ஏழு
எக்காளங்கள் (8:6,7,8,10,12; 9:1,13; 11:15), ஏழு இடி முழக்கங்கள் (10:3) எழு கலசங்கள்
(16:1,2,4,8,10,12,17), மற்றும் ஏழு ஆசீர்வாதங்கள் அல்லது பாக்கியங்கள். (1:3; 14:13; 16:15; 19:9 20:5; 22:7,14), ஆகிய இவைகளெல்லாம் அதில் அடங்கும். மேலும், எண்கள், 24 (24 மூப்பர்கள் 4:4),  நான்கு (4:6 வசனத்திலுள்ள நான்கு ஜீவன்கள்) மற்றும் 12 (12 வாசல்கள்) 21:12; 21:14 வசனத்தில் உள்ள 12 அஸ்திபாரங்கள்; 22:2 வசனத்திலுள்ள ஜீவ விருட்சத்தின் 12 விதமான கனிகள் ஆகிய இவைகளும் குறிப்பிடத்தக்கது. இதில் அடங்கிய காரியங்கள் மற்றும் இதன் கருத்துக்களின் தன்மையின் காரணமாக, இந்தப் புத்தகம், வேதாகமம் முழுவதற்கும், இயல்பான ஒரு
முடிவுரையைக் கொடுக்கிறது. அத்துடன் இதனை வாசிப்பவர்கள் வருங்காலத்தைச் சந்திக்க ஆயத்தப்படுத்துகிறது.
….
புத்தகத்தின் பொதுவான சுருக்க வருணனை:-

  • 1. முன்னுரையும், புத்தகத்தைப் பற்றிய
விளக்கமும் அதிகாரம் (1)
  • 2. ஏழு சபைகளுக்கு செய்திகள் (அதிகாரம் (2-3)

  • அ. எபேசு சிமிர்னா, பெர்கமு
தியத்தீரா. (அதிகாரம் 2)
  • ஆ. சர்தை,  பிலதெல்பியா, லவோதிக்கேயா (அதிகாரம் 3)

  • 3. தேவனுடைய சிங்காசனம் (அதிகாரம் 4-5)

  • அ தேவனுடைய சிங்காசனத்தின் தரிசனம் (அதிகாரம் 4)

  • 4. எழு முத்திரைகள் திறக்கப்படுகின்றன (அதிகாரம் 6)
  • 5. பரிசுத்தவான்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் : 144000 மற்றும் எல்லாக்
காலங்களிலும் மீட்கப்பட்டவர்கள் (அதிகாரம் 7)
  • 6. எக்காள நியாயத் தீர்ப்புகள் -
மூன்றில் ஒரு நியாயத்தீர்ப்புகள் (அதிகாரம் 8-9)

  • அ. சுல் மழையும் அக்கினியும், சமுத்திரத்தில் மலை நட்சத்திரம் சூரியன் சந்திரன் முதலியன இருளடைந்தது. (அதிகாரம் 8)
  • ஆ. பாதாளக் குழியிலிருந்து தேள்அவிழ்த்துவிடப்பட்டது மூன்றிலொரு பங்கு மனிதர்கள் மரித்தார்கள்
(அதிகாரம் 9)

  • 7. புத்தகத்துடன் ஒரு பலமுள்ள தூதன். போவான் அந்தப் புத்தகத்தைப் புசித்தான்
(அதிகாரம் 10)
  • 8. இரண்டு சாட்சிகள். (அதிகாரம் 11)
  • 9. ஸ்தீரீயும் வலுசர்ப்பமும் (அதிகாரம் 12)
  • 10. இரண்டு மிருகங்கள் (அந்திக்
கிறிஸ்துவும் கள்ளத் தீர்க்கத்தரிசியும்) (அதிகாரம் 13)
  • 11. ஆட்டுக்குட்டியானவரும், 144000 பேர்களும் (அதிகாரம் 14)
  • 12. கலச நியாயத்தீர்ப்பு (அதிகாரம் 15-16)

  • அ. எழு வாதைகளையுடைய
ஏழு தூதர்கள், (அதிகாரம் 15)
  • ஆ. ஏழு நியாயத்தீர்ப்புகள்
ஊற்றப்பட்டது. (அதிகாரம் 16)

  • 13. மிருகத்தின்மீது உட்கார்ந்திருக்கும் ஸ்திரி (அதிகாரம் 17)
  • 14. பாபிலோனின் வீழ்ச்சி (அதிகாரம் 18)
  • 15. இரண்டு விருந்துகள்: கலியாண
விருந்து மற்றும் பறவைகளின் விருந்து
(அதிகாரம் 19)
  • 16.ஆயிர வருட அரசாட்சி (அதிகாரம் 20)
  • 17. நித்தியம் (அதிகாரம் 21-22)

  • அ. புதிய வானம், புதிய பூமி, மற்றும்
  • புதிய எருசலேம் (அதிகாரம் 21)
  • ஆ. தேவனுடைய சிங்காசனத்தில் இருந்து புறப்பட்டு ஓடுகிற நதி.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.