பரிசுத்த ஆவியானவர்" - ஓர் விளக்கம்! (Bro.Sundar)

பரிசுத்த ஆவியானவர்" - ஓர் விளக்கம்! (Bro.Sundar)


ஆதியில் தேவஆவியானவர் ஜலத்தின் மீது அசைவாடி அனைத்தையும் படைத்தார் என்று வேதாகமம் சொல்கிறது. அந்த தேவ ஆவினானவருக்கு "எலோஹீம்" என்ற பன்மையை குறிக்கும் பதம் பயன்பட்டுள்ளது. 

அடுத்து

பழையஏற்பாட்டு காலத்தில் "கர்த்தருடைய ஆவியானவரின்" செயல்பாடுகள் பற்றி அனேக இடங்களில் பார்க்க முடியும்.  சில குறிப்பிட்ட நோக்கத்தோடு   ஒருசிலரை மட்டும் கர்த்தர் தனது ஆவியால் அபிஷேகம்  செய்து,  தனது  நோக்கைத்தை நிறைவேற்றி இருப்பதை   காணமுடியும்.
 
ஆனால் புதிய ஏற்பாட்டுக்கு வருவோமானால்  "ஆவியானவர்"  எனப்படும் "பரிசுத்த ஆவியானவரின்" செயல்பாடுகள் பற்றி அனேக இடங்களில் எழுதப்பட்டுள்ளது.
 
இயேசு  திருமுழுக்கு  பெறும்போது அவர்  இறங்கிவந்தார்.
 
மாற்கு 1:10 அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.
 
இவ்வாறு   இறங்கிவரும் ஆவியானவர் இயேசு மரித்து   உயிர்த்தபிறகு பெந்தெகொஸ்தே நாளில் மீண்டும் அநேகர் மேல் வந்து இறங்கினார் என்பதை கீழ்க்கண்ட வசனம் சொல்கிறது.
 
அப்போஸ்தலர் 2:4 அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
 
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து பரிசுத்த ஆவியானவரை பற்றி பல்வேறு வெளிப்பாடுகளை வழங்கியிருந்தார்
 
யோவான் 14:16 நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
 
யோவான் 14:17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

யோவான் 14:26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.
 
யோவான் 15:26 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.
 
யோவான் 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
மேல்கண்ட வசனங்களை ஆராய்ந்தால் பரிசுத்த ஆவியானவர்  பற்றிய   சில முக்கிய  கருத்துக்களை 
அறிய முடியும்!  

1. அவர் பிதாவால்  அனுப்பப்படும்  வேறொரு தேற்றவாளர் 
    (அதாவது   இயேசுவோ  தேவனோ அல்ல இன்னொருவர்)

2.  அவர் என்றென்றைக்கும் நம்மோடு கூட இருப்பார்.

3. உலகத்தாராலும் உலக மூளையால் ஆராயபவர்களாலும்  அவரை  அறியமுடியாது!

4. நமக்குள்ளே தங்கியிருப்பதால் நம்மால் அவரை அறியமுடியும்      
(அப்படிஎன்றால் அறியமுடியாதவர்கள் மற்றும்    இல்லை என்று  சாதிப்பவர்கள் எல்லாம்    உலகத்தார்)

5. அவர் நமக்கு போதித்து இயேசுவின் வார்த்தைகளை நினைப்பூட்டுவார்.

6. அவர் இய்சுவை குறித்த சாட்சியை கொடுப்பார்    

7. அவர் நம்மை சத்தியத்துக்குள் வழி நடத்துவார்

8. அவர் சுயமாக எதையும் பேசமாட்டார். வரப்போகும் காரியத்தை முன்னறிவிப்பார்.
 
இவ்வளவு காரியங்களை செய்யும் அவர் நிச்சயமாக வெறும் வல்லமை  மட்டும்  அல்ல என்றும், நம்முடன் பேசி /போதித்து  நம்மை வழிநடத்தும் ஒரு  நபராகவே செயல்படுவார்  என்பதையும் அறியலாம்.
 
இப்படி செயல்படும் அந்த ஆவியானவர் யார்?      இன்னொரு புதுதேவனா?  அல்லது தேவனின் ஆவியா?  இயேசுவின் ஆவியா?  அல்லது வெறும் வல்லமைதானா?  என்பதை நாம் தொடர்ந்து ஆராயலாம்.

ஆவியானவர் யார் என்றும் அவரின் தன்மைகள் என்ன வென்பதையும் பற்றி தியானித்து வருகிறோம்!
 
தொடர்ந்து ஆவியானவர் செயல்பாடுகள் பற்றி வேதாகமம் சொல்லும் வசனங்களை நமது தியானத்துக்கு எடுத்துகொண்டு ஆராயலாம்!
  
ஆவியானவரால் ஒருவருடன் பேசமுடியும்!   
 
அப்போஸ்தலர் 8:29 ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்;
 
இங்கு  ஆவியானவர் பிலிப்புவுடனே  பேசி  அவனை எத்தியோப்பிய மந்திரி செல்லும் ரததுடனே சேர்ந்துகொள்  என்று கூறுகிறார்.  இவ்வசனம் ஆவியானவர் ஒரு மனிதனுடன் பேசி  அவனை நடத்தமுடியும் என்பதை தெளிவாக காட்டுகிறது. ஆவியானவர் பேசமுடியாது,  வெறும்  வல்லமை  மற்றும்   வேதவசனத்தின்  அடிப்படையில்  தேவனை அறிவதுதான் ஆவியின் அபிஷேகம் என்பதெல்லாம் தவறான கருத்து என்பதை இவ்வசனம் நமக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கறது.  
 
ஆவியானவரால் ஒருவரை கொண்டு போகமுடியும்
 
அப்போஸ்தலர் 8:39 அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்
 
இருவர் சேர்ந்து தண்ணீரில் இறங்குகின்றனர் ஆனால் கரை ஏறியவுடன்  ஆவியானவர் பிலிப்புவை  மட்டும் எங்கேயோ கொண்டுபோயவிட்டர். இவ்வாறு மனிதனின் செயலையும் தாண்டி ஆவியானவரால் ஒருவரை கொண்டுபோக  முடியும் நடத்த முடியும் என்பதையும் இவ்வாசனம் நமக்கு விளக்குகிறது  
 
ஆவியானவரால் ஒருவருக்கு  கட்டளையிட முடியும்  
 
அப்போஸ்தலர் 11:12 நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார்
 
இவ்வசனங்களில் ஆவியானவர் எனக்கு கட்டளயிட்டார் என்று பேதுரு மிக தெளிவாக கூறுகிறார். ஆவியில் அபிஷேகம் பெற்றிருந்தால் அவரது கட்டளையை நமது இருதயத்தில் கேட்க முடியும் அதற்க்கு ஒருவர் கீழ்படிகிறாரா இல்லையா என்பது அவரவர் மனநிலையை பொறுத்தது. ஒருவர் கீழ்படியாமல் நடக்கிறார் என்பதற்காக ஆவியானவர் அவருக்கு கட்டளையிடவில்லை என்று கருதமுடியாது!
 
 
ஆவியானவரால்  வரும் காரியத்தை முன்னறிவிக்க முடியும்!
 
அப்போஸ்தலர் 20:23 கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.
 
ஆவியானவரால் எதிர் வரும் காரியங்களை முன்னறிவிக்க முடியும் என்ற பல வசனங்கள் வேதத்தில் இருக்கிறது. தேவ மனிதர்கள் சொல்லும் தீர்க்கதரிசனம் எல்லாம் பொய் என்றும் ஆண்டவர் பேசியிருக்க வாய்ப்பில்லை என்று சொல்வதெல்லாம ஆவியானவரை அறியாதவர்கள்    சொல்லும் அர்த்தமற்ற வார்த்தைகள்.  
 
ஆவியானவர் எதிர்  வரும் காரியங்களை பலருக்கு முன்னறிவிக்கிறார் ஆனால் இதில் சில கள்ளதீர்க்கதரிசன  ஆவியும் சேர்ந்து செயல்படுவதால், சில காரியங்கள் நிறைவேறாமல் போகின்றன பலவேறுபாடான காரியங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. உலகில் எல்லாவற்றிக்குமே ஒரு டூப்ளிகேட் உண்டு! அதற்காக ஒரிஜினல் என்று ஒன்றும் இல்லைஎன்று ஆகிவிடாது. ஆவிகளை பகுத்தறிய 
தெரிந்தவரால் எது உண்மை எது போலி என்று சுலபமாக  கண்டுகொள்ள முடியும்!. மற்றபடி  எல்லாம் போலி என்று கருதுவது வசனத்துக்கு புறம்பானது.
 
ஆவியானவர் நமக்காக தேவனிடம் மான்றாடுகிறார்!
 
ரோமர் 8:26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக் கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
 
ஆவியானவர் ஒருவரே தேவனின் ஆழங்களை அறிந்தவர் எனவே தேவனின் மனநிலைக்கு ஏற்ப நாம் எப்படி வேண்டுதல்கள் செய்ய வேண்டும் எந்தெந்த தேவையற்ற காரியங்களை செய்ய கூடாது என்பதை குறித்து நமக்கு உணர்த்துவதோடு நாம் தவறும் நேரங்களிலும் நாம் தேவனிடம் மற்றாட முடியாமல் சோர்ந்து போகும் நேரங்களிலும் நமக்காக அவர் வேண்டுதல் செய்வதை  நம் இருதயத்தில் நம்மால் அறியமுடியும்.
 
தெரிவுக்கு (CHOICE) உதவி செய்பவர்!

அப்போஸ்தலர் 13:2
அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார்.
 
நாம் அனேக நேரங்களில் இதை செய்யவா அதை செய்யவா என்று குழம்புகிறோம். இப்படிப்பட்ட  நிலைகளை ஒரு தெளிவான முடிவுக்குவர  ஆவியானவர் நமக்கு உதவி செய்யமுடியும்  என்பதை மேல்கண்ட வசனம் உணர்த்துகிறது!  
  
தேவையற்ற இடங்களுக்கு போகவிடாமல் தடுப்பவர்!
 
அப்போஸ்தலர் 16:7 மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்
 
மனிதர்களாகிய நமக்கு எந்தெந்த இடங்களில்  எந்தெந்த  கட்டுகள்   இருக்கிறது என்பது தெரியாது. சிலர் சுவிசேஷம் சொன்ன உடன் ஏற்றுக்கொள்வர் சிலர் என்னதான்  போதித்தாலும் தங்கள் நிலைகளில் இருந்து வெளியே வரமாட்டார்கள்.  மனிதர்களின் இந்நிலைமை ஆவியானவருக்கு தெரிவதால், சில நேரங்களில் சில மனிதர்களிடம் பேசுவதையோ அல்லது சில இடங்களுக்கு போவதையோ ஆவியானவர் தடை செய்து நமது தேவையற்ற பிரயாசத்தை தடுக்க கூடியவர் அவர் பேசுவதை ஒருவரால் கேட்க முடியும்  என்பதை மேல்கண்ட வசனம் சொல்கிறது.   
 
ஆவியானவரை ஒரு மனிதனால்  துக்கப்படுத்த முடியும்
 
எபேசியர் 4:30 அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்
 
ஆவியானவர் மிகவும் மென்மையானவர் நாம் தவறு செய்யும் போது அவர் மிகுந்த துக்கப்படுகிறார். ஒரு மனிதனைதான் இன்னொரு மனிதனால் துக்கப்படுத்த முடியும். அனால் இங்கு ஆவியானவரை மனிதனால் துக்கப்படுத்த  முடியும் என்று வேதம் சொல்வதால், இவர் ஓர் ஆள்தத்துவம்  உள்ளவர் என்பதை எவ்விதத்திலும் அறிய முடிகிறது.      
 
தேவனின் ஆழங்களை அறிந்தவர்!  
 
I கொரிந்தியர் 2:10 நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.
 
வேதாகமத்தில் வசனங்கள் இரண்டு புறமும் பேசுவதால் தேவனின் உண்மை தன்மை அவரின் இருதய நிலை இவைகளை வேதாகமத்தை படித்து மட்டும் மட்டும் ஒரு மனிதனால் அறியமுடியாது. இந்நிலையில்  தேவனின் ஆழங்களை அறிந்த ஆவியானவர் துணையுடம் அதை ஆராய்வதன் மூலமே,  உண்மையில் இங்கு நடப்பது என்ன? தேவன் மனிதனிடம் எதிர்ப்பார்ப்பது என்னவென்பதை சரியாக அறியமுடியும்!  
 
இப்படி தேவனுக்கு இணையாக அனைத்து காரியங்களையும் நம்முள்ளேயே இருந்த நடப்பிக்கும் இவர் யார்?
 
திருத்துவ கொள்கையில் வரும் இவர் ஒரு தனிப்பட்ட தேவனா?  

பரிசுத்த ஆவியானவரின் செயல்பாடுகள் அவரின் தன்மைகள் எல்லாவற்றையும் நாம் அறிந்துகொண்டோம். அவர் ஒரு ஆள்த்தத்துவம் உள்ள தேவன் என்பதை மறுக்க முடியாத அளவுக்கு அனேக வசனங்களை சாட்சியாக  பார்த்துவிட்டோம்!
 
இப்பொழுது இந்த பரிசுத்த ஆவியானவர் ஒரு தனிப்பட்ட தேவனா இல்லையா என்பதை ஆராய நாம் கீழ்க்கண்ட  வசனங்களை ஆதாரமாக எடுத்துகொள்வோம்:
 
மாற்கு 12:35. இயேசு தேவாலயத்தில் உபதேசம்பண்ணுகையில், அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்?
36. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே.
37.தாவீதுதானே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்
 
மேற்கண்ட வசனங்கள் மூலம் தாவீது கிறிஸ்த்துவை  ஆண்டவர் என்று  குறிப்பிட்டிருக்கிறார் என்பதை புரியமுடிகிறது!  இந்த ஆண்டவராகிய கிறிஸ்த்துவை பார்த்து  யகோவா தேவனாகிய கர்த்தர் சொல்கிறார் 
சங்கீதம் 110:1 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும்."  என்று     
எனவே இயேசுவானவர் தனக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றியபிறகு தேவனின் வலதுபாரிசத்தில் அமர்ந்தார்
 
எபிரெயர் 12:2 அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்
 
தேவனின் வலதுபாரிசத்தில் அவர்  அமர்ந்த பிறகு  சத்துருவை பாதப்படியாக்கிபோடும் வேலையை இன்று  செய்துகொண்டிருப்பவர்  கத்தராகிய தேவனே.
 
ஆண்டவராகிய  இயேசு  மரித்தபிறகுஇந்த  உலகத்துக்கு  வல்லமையாக அனுப்பபட்டவர் பரிசுத்த  ஆவியானவர். இந்த யுகத்தை ஆவியானவரின் யுகம் என்று சொன்னால் மிகையாகாது. ஏனெனில் இந்த கடைசி யுகத்தில்  நடக்கும்  எல்லா கிரியைகளும் ஆவியானவர் மூலமே நடைபெறுகிறது அதை இயேசுவும்  முன்னறிவித்து  சென்றிருக்கிறார்.
 
யோவான் 14:17  அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்
 
இவ்வாறு  நமக்கு வந்து தங்கி நம்மை வழி நடத்ததி இன்று வல்லமையாக கிரியை செய்துக்கொண்டிருக்கும்  ஆவியானவரே,  இறுதியில் எல்லா சத்துருக்களையும்  இயேசுவுக்கு பாதபடியாக்கி போடகூடியவர். 
 
இவ்வாறு பார்த்தால் பழையஏற்பாட்டு காலத்தில் சில குறிப்பிட்ட செயல்களை செய்ய சில குறிப்பிட்டவர்களை அபிஷேகம் செய்த  கர்த்தரின் ஆவியானவேரே புதிய ஏற்பாட்டு காலத்தில் அநேகர் மேலிறங்கி  கிரியை செய்யும்  ஆள்தத்துவம் உள்ள ஆவியானவர் ஆனார். அதற்காக அவர் வரம்பெற்றார் என்று சங்கீதகாரன் சொல்கிறான்     
 
சங்கீதம் 68:18 தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்;
 
இது இயேசுவின் கிரியை.
 
இவ்வாறு இயேசு மரித்து உயிர்த்ததின் மூலம் தேவனாகிய கர்த்தர் மனிதனுக்குள் வாசம் பண்ணும் வரத்தை பெற்றார் என்று தெளிவாக வேதம் சொல்கிறது
 
சங்கீதம் 68:18 தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும் பொருட்டு   துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்
 
இவ்வாறு மனுசனுக்குள் வந்து வாசம்செய்து அனைத்து கிரியைகளையும் நடப்பிக்கும் ஆவியானவர் என்பவர்  கர்த்தரின் ஆவியானவரே! அவரே சகல சத்துருக்களையும் ஒரு முடிவுக்கு கொண்டுவருவார் இதைதான் கர்த்தரும் 
 
சகரியா 4:6  பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்  
 
ஆம்! சகலமும் பரிசுத்த ஆவியாக செயல்படும் அவரின் ஆவியாலேயே ஆகும்!  இன்று ஆவியானவர் என்று மனிதனுக்குள் வந்து தங்கி அதிசயங்களை செய்பவர் தேவனாகிய கர்த்தரின் ஆவியே
 
II கொரிந்தியர் 3:௧௭   கர்த்தரே ஆவியானவர்
 
ஆம்! ஆவியானவர் எனப்படுவபவர் கர்த்தரே!   யகோவா தேவனை அறிந்திருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் அனேக கிறிஸ்த்தவர்கள்,அவரே இக்காலத்தில் ஆவியானவராய்  கிரியைசெய்கிறார் என்பதை அறியாமலும்  அந்த ஆவியானவரை தன்னுள் பெற்றுக்கொள்ள வாஞ்சை யில்லாமலும் அப்படி ஒருவர்  இல்லை என்று சாதிப்பதும் மிகுந்த  ஆச்சர்யமே!
 
இன்னும்கூட ஒருவசனத்தை சாட்சியாக இங்கு கூறமுடியும்
   
அப்போஸ்தலர்5:9 பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன?
 
என்று கூறுவதன் மூலம் நம்முள் வந்து தங்கி வாசம் செய்பவர் கர்த்தருடைய ஆவியானவரே என்பதை அறியமுடியும்.
 
II கொரிந்தியர் 6:16   நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன்
 
மனிதனுக்குள்  வந்து  வாசம்பண்ணுவேன் என்று சொன்னவரும் கர்த்தரே!  
 
இவ்வாறு தேவ குமாரனும்   (இயேசு கிறிஸ்த்து)  பரிசுத்த ஆவியாகிய கர்த்தரின் ஆவியானவரும் (யகோவா தேவன்)  இரண்டு ஆள்தத்துவம் உள்ளவர்கள் என்பதை அறியமுடியும்!  
 
இவர்கள் இரண்டாக  பிரிந்து செயல்பட்டாலும் இவர்கள் ஒருவரே அதாவது இரண்டாக பிரிந்து செயல்படும் ஒருவர்.   
ஆவியானவர் பற்றிய  இன்னும் சில மறைபொருளான காரியங்கள் பற்றியும், திரித்துவத்தின் இன்னொரு நபர்  யார்? என்பது  பற்றியும் தொடர்ந்து ஆராயலாம்!

பரிசுத்த  ஆவியானவர்பற்றி  இன்னும் சில சத்தியங்களை தெரிந்து கொள்வது  அவசியம்  என்று கருதுகிறேன்.
 
ஒரு மொபைலுக்கு சிம்காட் எப்படி டவருக்கும் போனுக்கும் இடையில்  தொடர்பை
ஏற்ப்படுத்துகிறதோ,  அதேபோல மனிதனுக்குள் வந்து தங்கும் ஆவியான்வர் மூலம்  தேவனுக்கும்  நமக்கும் இடையே ஒரு தொடர்பு நிலை ஏற்ப்படுகிறது.
 
ஆவியானவர் நமக்கு கொடுக்கப்படும்  முதல்கட்ட தொடர்பு நிலைதான் ஆனால்  அந்த ஒரு சிம்கார்ட் மூலம் எப்படி இன்டர்  நெட்டில் இருந்து அனேக காரியங்களை மொபைலில் பார்க்க முடிகிறதோ அதுபோல் அந்த ஆவியானவர் என்ற ஒரே தொடர்பின் மூலம் திரித்துவ தேவனும் நம்முள் வரமுடியும் மற்றும் தேவனை பற்றிய ஆவிக்குரிய  அனேக ரகசியங்களை  அவர்மூலம்   அறியமுடியும்.    
  
இப்பொழுது கீழ்க்கண்ட வசனங்களை சற்று  ஆராய்வோம்:
 
ரோமர் 8:9  தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவி யில்லாதவன் அவருடையவனல்ல.
ரோமர் 8:11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
 
மேலே ஊதா கலரில் போல்ட் செய்யபட்ட இம்மூன்றும்தான் திரித்துவ தேவனின் மூன்று நிலைகள்.  ஆண்டவரிடம் மற்றாடி ஆவியானவரை பெறுவதன் மூலமும், கடுமையான ஜெபம் மற்றும் பரிசுத்தமான வாழ்க்கை  கீழ்படிதல்  மூலமும் தேவனின் இம்மூன்று  நிலைகளையும்  நம்மால் தனித்தனியே  அனுபவித்து பார்க்க முடியும்.
 
பொதுவாக  இம்மூன்று  ஆவியானவர்களும்  ஒரு மனிதனுக்குள் ஒரே நேரத்தில் வருவது இல்லை!  ஆனால் அப்படி அவர்கள் வந்தால்  "ஆ! அந்த நிலையை என்னால் வர்ணிக்கவே முடியாது!  நமது இருதயம் வெறும் பஞ்சாகபோய்  நாம் நடக்காமல் பறப்பதுபோல் உணர்வோம், இயற்க்கைக்கு அப்பாற்பட்டதை எல்லாம் பார்ப்போம்"   அதன் உண்மை தன்மையை விளக்க வார்த்தை இல்லை அதை   அனுபவித்துதான் அறியமுடியும்!  
 
 
திரித்துவ தேவனின் மூன்று  நிலைகள்: 
 
1. தேவனுடைய ஆவி  - பிதாவாகிய தேவன்
2. கிறிஸ்துவின் ஆவி - குமாரனாகிய கிறிஸ்த்து
3. இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி   
                                               -  தேவனாகிய கர்த்தர் (யகோவா)  
 
(அப்போஸ்தலர் 5:30 நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,- (முற்ப்பிதாக்களின் தேவன் - யகோவா தேவனே )  இம்மூவரும் ஒருவரே!
நம்புவதும் நிராகரிப்பதும் அவரவர் விருப்பம்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.