சிமிர்னா வெளி 2:8-11



சிமிர்னா வெளி 2:8-11

_Revelation Whatsapp group post :18_

வெளி 2:8.சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்:
முந்தினவரும் பிந்தினவரும்,
மரித்திருத்து பிழைத்தவருமானவர்
சொல்லுகிறதாவது;

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிமிர்னா
சபையின் தூதனுக்கு இந்த நிருபத்தை
எழுதுகிறார். கிறிஸ்துவானர் முந்தினவரும்
பிந்தினவருமாயிருக்கிறார் நாம் இந்த
உலகத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில்
மாத்திரமே ஜீவிக்கிறேன். ஒரு தரம்
பிறப்பதும், பின்பு மரிப்பதும் மனுஷருக்கு
நியமிக்க பட்டிருக்கிறது. நம்முடைய
கர்த்தராகிய" இயேசு கிறிஸ்துவே நித்திய
ஜீவன் உள்ளவராயிருக்கிறார்
அவரே
முந்தின வரும் பிந்தினவருமாய் இருக்கிறார்.

இயேசு கிறிஸ்து மரித்திருந்து
பிழைத்தவருமானவர். அவர் நம்முடைய
பாவங்களுக்காக மரித்தார். ஆனாலும் அவர்
உயிரோடிருக்கிறார். அவர் நித்திய காலமாக
உயிரோடிருக்கிறவர். நித்திய ஜீவனுள்ள
இயேசு கிறிஸ்து பிதாவினிடத்தில் நமக்காகப் பரிந்து பேசுகிறார்.

சிமிர்னா துருக்கியில் உள்ள ஐசுவரியம்
மிகுந்த பட்டணம். இதன் தற்காலத்து பெயர்
இஸ்மீர் என்பதாகும். ஆகியான் கடலில்
எபேசுவிற்கு 50 மைல் வடமேற்காக இந்தப்
பட்டணம் அமைந்திருக்கிறது.

அறிந்திருக்கிறேன் வெளி 2:9

வெளி 2:9. உன் கிரியைகளையும், உன்
உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும்
உனக்கிருக்கிற தரித்திரத்தையும்,
தங்களை யூதரென்று சொல்லியும்
யூதராயிராமல் சாத்தானுடைய
கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும்
தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.

சிமிர்னா சபையின் விசுவாசிகள்
ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி
பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஐசுவரியம் உள்ளவர்கள், ஆனாலும் அவர்களில் சிலர்
உலகப்பிரகாரமான தரித்திரராய் இருக்கிறார்கள். அவர்கள் தரித்திரராயிருந்தாலும், தங்கள் ஆவிக்குரிய ஜீவியத்திலே
ஐசுவரியவான்களாய் இருக்கிறார்கள். அவர்கள் விசுவாசத்திலும், நற்கிரியைகளைச்
செய்வதிலும் ஐஸ்வர்யம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். நம்மிடத்தில் ஆவிக்குரிய ஐசுவரியம் இருக்க வேண்டும். ஆவிக்குரிய
ஐசுவரியம் உள்ளவர்கள் உலகப்பிரகாரமான
தரித்திரத்தை பொறுமையோடு சகித்துக் கொள்வார்கள். தங்கள் தரித்திரத்திலும்
கர்த்தருக்குள் சந்தோஷமாக இருப்பார்கள்.

சிமிர்னா சபையாரின் கிரியைகளையும்,
அவர்களுடைய உபத்திரவத்தையும்,
அவர்களுக்கு இருக்கிற தரித்திரத்தையும்
கர்த்தராகிய  இயேசு கிறிஸ்து அறிந்திருக்கிறார். அவர்களுடைய உபத்திரவத்தின் ஒவ்வொரு பகுதியையும் கர்த்தர் அறிந்திருக்கிறார். நாம் கர்த்தருடைய பலத்த கரத்தில்
அடங்கியிருக்கிறோம் கர்த்தருக்கு மறைவான காரியம் ஒன்றுமேயில்லை. எல்லாம் அவருக்கு வெளிச்சமாகும், தெளிவாகவும் தெரியும். அவர் நம்முடைய கண்ணீர்களையும் உபத்திரவங்களையும் அறிந்திருக்கிறார். அவரே நம்முடைய ஆறுதலின் தேவன்.

சிமிர்னா சபையாருக்கு ஆவிக்குரிய
சத்துருக்கள் இருக்கிறார்கள். அவர்கள்
தூஷணமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள். தூஷணமான கிரியைகளைச் செய்கிறார்கள் அவர்கள் தங்களை யூதர்களென்று சொல்லுகிறார்கள். ஆனால் அவர்கள் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமா இருக்கிறார்கள். கர்த்தர் அந்தத் தூஷணக்காரையும் அறிந்திருக்கிறார்.

யூதர்கள் தேவனுடைய விசேஷித்த
உடன்படிக்கையின் ஜனங்கள். இவர்களுடைய சத்துருக்களோ சாத்தானுடைய கூட்டத்தார்.
ஆனால் அவர்கள் தங்களை யூதர் என்று
சொல்லுகிறார்கள். தாங்களும் தேவனுடைய
விசேஷித்த உடன்படிக்கையின் ஜனங்கள்
என்று தூஷணமான வார்த்தைகளைச் சொல்லுகிறார்கள். இவர்கள் சாத்தானுக்கும்,
அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்காளிகள்.

கர்த்தருடைய சுதந்தரத்தில் சாத்தானுடைய
கூட்டத்தாருக்கு பங்குமில்லை. பாத்தியமுமில்லை. தேவனுடைய
சபையை விட்டு சாத்தானுடைய கூட்டத்தார்
விலகி வெளியேறி போய்விட்டார்கள். கர்த்தர் இஸ்ரவேலின் தேவன். அவரை
விசுவாசிக்கிறவர்களெல்லோரும் இஸ்ரவேலின் காணியாட்சிக்குட்பட்ட வர்கள். சாத்தானுடைய கூட்டத்தாரோ தேவனுடைய காணியாட்சிக்குப்
புறம்பாக்கப்பட்டவர்கள்.

சிமிர்னா சபையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் காரியங்கள்

1. கிரியைகள்
2. உபத்திரவம்
3, ஐசுவரியமுள்ளவர்களாயிருந்தும்
அவர்களுக்கு இருக்கும் தரித்திரம்.

சிமிர்னா விலுள்ள ஒரு பிரிவினர்
யூதமார்க்கத்தைப் பின்பற்றினார்கள். ஆனால் அவர்கள் தேவனைத் தூஷித்து சாத்தானைச் சேவித்தார்கள்.

ஜீவகிரீடம் வெளி 2:10

வெளி 2:10. நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே இதோ தீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாக பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்து நாள் உபத்திரவ படுவீர்கள். ஆகிலும் நீ
மரணபரியந்தம் உண்மையாயிரு,
அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத்
தருவேன்.

நம்முடைய கர்த்தர் நம்மைப்பற்றிய
எல்லா காரியங்களையும் அறிந்திருக்கிறார்.
நமக்கு இதுவரையிலும் நடந்தது இப்போது
நடைபெறுவது, இனிமேல் நடைபெறப்போவது எல்லாவற்றையும் கர்த்தர் அறிந்திருக்கிறார். சிமிர்னா சபையாருக்கு இனிமேல் பாடுகள்
வரும். அவர்கள் படப்போகிற பாடுகள்
குறித்து எவ்வளவும் பயப்படவேண்டாம் என்று கர்த்தர் அவர்களுக்கு ஆலோசனை
சொல்லுகிறார். வரப்போகிற பாடுகளைக்
குறித்து தம்முடைய பிள்ளைகளுக்கு
முன்னெச்சரிப்பு சொல்லுகிறார்.

சிமிர்னா சபையார் ஏற்கெனவே
உபத்திரவத்தை அனுபவித்தார்கள். அந்த
உபத்திரவத்தில் இனிமேல் காவலில் வைக்கப்படப்போகிறார்கள். சிறைச்சாலையில் பாடுகளை அனுபவிக்க போகிறார்கள். இதைக்குறித்து அவர்கள்
பயப்பட வேண்டியதில்லை இனிமேல்
அவர்கள் படப்போகிற பாடுகளுக்கு கர்த்தர்
அவர்களைப் பலப்படுத்துகிறார். பாடுகளை
சகித்துக்கொள்வதற்கும், அவற்றை
எதிர்கொள்வதற்கும் கர்த்தர் அவர்களுக்குக்
கிருபை கொடுத்திருக்கிறார். இதினிமித்தமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர்களுக்கு ஒரு சில ஆலோசனைகள் சொல்கிறார்.

முதலாவதாக அவர்கள் படப்போகிற
பாடுகளை குறித்து எவ்வளவும்
பாட வேண்டியதில்லை. கர்த்தர் அவர்களை,
"பயப்படாதே" என்று கட்டளையிடுகிறான்.
இது கட்டளையின் வார்த்தை மாத்திரமல்ல.
இந்தக் கட்டளைக்கு அவர்கள்
கீழ்ப்படியும்போது கர்த்தர் அவர்களை
பாதுகாத்துக்கொள்வார் என்னும் நிச்சயமும்
இந்த வார்த்தையில் இடம்பெற்றுள்ளது.

கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு
பாடுகள் வந்தாலும் அது ஒரு
வரம்புக்குட்பட்டதாகவே இருக்கும். நமக்கு
நீண்டகாலமாக பாடுகள் இருக்காது. ஒரு
குறிப்பிட்ட காலம் வரையிலுமே பாடுகள்
இருக்கும். பாடுகளும் நாம்
தாங்கிக்கொள்ளக்கூடிய அளவில்தான்
இருக்கும். சிமிர்னா சபையின் விசுவாசிகள்
பத்துநாள் மாத்திரமே உபத்திரவ படுவார்கள். சோதிக்கப்படும் பொருட்டாகவே இவர்களுக்கு
பாடுகள் உண்டாயிற்று தம்முடைய
பிள்ளைகளை அழிப்பதற்கு கர்த்தர்
ஒருபோதும் பாடுகளை அனுமதிக்க மாட்டார்.

பிசாசானவன் எல்லா விசுவாசிகளையும் சோதிக்க மாட்டான் அவன் ஒரு சிலரை மாத்திரமே காவலில் போடுவான் என்று
கர்த்தர் திருவுளம் பற்றுகிறார். அவனால் நம்மை நித்தியகாலத்திற்கு காவலில் போட முடியாது, சாத்தான் மூலமாய் நமக்கு காவல்
உண்டானாலும், அது பத்து நாள் மாத்திரமே
அதாவது, குறுகிய காலம் மாத்திரமே
இருக்கும்.

நமக்கு எப்படிப்பட்ட பாடுகள் வந்தாலும்,
எவ்வளவு பெரிய உபத்திரவங்கள் வந்தாலும், நாம் மரணபரியந்தம் கர்த்தருக்கு
உண்மையாக இருக்க வேண்டும். அப்போது
கர்த்தர் நமக்கு ஜீவகிரீடத்தைத் தருவார்.
கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை,
அவர் செய்கிறதை மாத்திரமே
சொல்கிறவர். அவர் சொல்லுகிறதை
நிச்சயமாகவே செய்கிறவர். நம்முடைய
பாடுகளில் நாம் மரணபரியந்தம்
உண்மையாயிருக்கும்போது, கர்த்தர் தாம்
சொன்ன பிரகாரம், நிச்சயமாகவே நமக்கு
ஜீவகிரீடத்தைத் தருவார். கர்த்தருடைய
பிள்ளைகள் உலகப்பிரகாரமாக தரித்திரராயிருக்கலாம். நாம்
மரணபரியந்தம் உண்மையுள்ளவராய் இருக்கும் போது, நமக்கு கர்த்தர்
ஜீவகிரீடத்தை தருகிறார் நம்முடைய
உண்மையினிமித்தமும் விசுவாசத்தினிமித்தமும் பாடுகளைக் குறித்து பயப்படாததினிமித்தமும் கர்த்தர் நமக்கு ஜீவகிரீடத்தைத் தருகிறார். நாம்
கர்த்தருக்கு சிறிதுகாலம் உண்மையுள்ளவர்களாக இருந்தால் போதாது. நம்முடைய மரணபரியந்தம் நாம் அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க
வேண்டும்.

இரண்டாம் மரணம் வெளி 2:11

வெளி 2:11. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன்
கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.

கர்த்தர் சிமிர்னா சபைக்கு எழுதும்
நிருபத்தின் முடிவுரையில் இந்த
வார்த்தையை சொல்லுகிறார் இந்த உபதேசம்
எல்லா சபைகளுக்கும் பொதுவானது. கர்த்தர் தம்முடைய ஜனத்தை எப்படி பாதுகாக்கிறார், எப்படி பராமரிக்கிறார் என்பதை முழுஉலகத்தாரும் கவனித்துப் பார்க்க வேண்டும். ஜெயங்கொள்கிறவர்களுக்கு
கர்த்தர் வெகுமதி கொடுக்கிறார். தம்முடைய
கிருபையுள்ள வாக்குத்தத்தங்களை கர்த்தர்
அவர்களுக்குக் கொடுத்து அவர்களை
மேன்மை படுத்துகிறார்.

மனுஷருக்கு இரண்டு மரணம்
நியமிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய முதலாம் மரணம் நமக்கு சரீரப்பிரகாரமான மரணம் நம்முடைய இரண்டாம் மரணமோ நித்திய மரணம். முதலாம் மரணத்தைவிட இரண்டாம் மரணம் மிகவும் கொடியது. இது நம்முடைய ஆத்துமாவின் மரணம்.
ஜெயங்கொள்கிறவர்கள் இரண்டாம்
மரணத்தினால் சேதப்படுவதில்லை. கர்த்தர்
தம்முடைய பிள்ளைகளை இரண்டாம்
மரணமாகிய நித்திய மரணத்திலிருந்து
பாதுகாத்துக்கொள்வார். இரண்டாம்
மரணத்தினால் நமக்கு ஒரு சேதமும்
உண்டாகாது. முதலாம் மரணமும் நம்மைச்
சேதப்படுத்தாது. இரண்டாம் மரணம் நம்மைச் சேதப்படுத்துவதற்குப் பெலனற்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.