எபேசு சபை வெளி 2:1-7
_Revelation Whatsapp group post :17_
வெளி 2:1. எபேசு சபையின் தூதனுக்கு
நீ எழுதவேண்டியது என்னவெனில்
ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய
வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு,
ஏழுபொன்குத்துவிளக்குகளின்
மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர்
சொல்லுகிறதாவது.
ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய
வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன்
குத்துவிளக்குகளின் -மத்தியிலே
உலாவிக்கொண்டிருக்கிறவர், முதலாவதாக
எபேசு சபையின் தூதனுக்கு இந்தச்
செய்தியைச் சொல்லுகிறார். கர்த்தராகிய
இயேசு கிறிஸ்து தம்முடைய வலது கரத்தில்
ஏழு நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருக்கிறார். நட்சத்திரங்கள் இயேசுகிறிஸ்துவின் ஊழியர்களைக் குறிக்கிறது கர்த்தர் தம்முடைய
ஊழியக்காரரின் நன்மைகளை விசாரிக்கிறவர். கர்த்தருடைய உழியக்காரர்கள் அவருடைய விசேஷித்த பாதுகாப்பிலும், பராமரிப்பிலும் இருக்கிறார்கள்.
கர்த்தருடைய ஊழியக்காரர்கள் அவருடைய பலத்த கரத்தில் இறங்கியிருக்கிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய
ஊழியக்காரர்களைத் தாங்குகிறார்.
ஊழியக்காரர்களுக்கு இயேசு கிறிஸ்துவே
பாதுகாப்பாக இருக்கிறார். கர்த்தர் ஊழியக்கார்களைத் தூங்கவில்லையென்றால்,
அவர்கள் சீக்கிரத்தில் கீழே விழுந்துவிடும்
நட்சத்திரங்களாக இருப்பார்கள்.
நாம் கர்த்தருடைய கரத்தில் இருக்கும்
வரையில்தான் நம்மால் நன்மையான
ஊழியங்களைச் செய்யமுடியும். கர்த்தருடைய கரம் நம்மோடு கூட கிரியை நடப்பிக்கிறது. நாம் கர்த்தருடைய கரத்திலுள்ள கருவிகளாக பயன்படுத்த படுகிறோம்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
ஏழுபொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே
உலாவி கொண்டிருக்கிறார். இயேசுகிறிஸ்துவுக்கும் அவருடைய சபைகளுக்கும் இடையிலுள்ள ஐக்கியத்தை இந்த வாக்கியம் தெளிவு படுத்துகிறது. கிறிஸ்துவானவர் இப்போது
பரலோகத்திலிருந்தாலும், பூமியிலுள்ள
தம்முடைய சபைகள் மத்தியிலே அவர்
எப்போதும் உலாவிக்கொண்டிருக்கிறவர்.
எபேசு ஆசியா மைனரில் உள்ள
முக்கியமான வணிக மையம். காய்ஸ்டர் நதி
ஆகியான் கடலில் கலக்கும் இடத்தில்
கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும்
முக்கியமான வியாபார மையம்
சிமிர்னாவிலிருந்து தெற்கே 50 மைல்
தூரத்தில் இப்பட்டிணம் அமைந்திருக்கிறது.
இங்கு தியானாளின் கோவில் உள்ளது. ஆதி
காலத்து அற்புதங்கள் தியானாள்
கோவிலையும், ஒரு முக்கியமான அற்புதமாகக் கருதினார்கள். (அப் 19:7) தற்பொழுது இப்பட்டிணம் இடிந்து சிதைந்து
காணப்படுகிறது.(வெளி 2:5 ஆவது வசனம்
இப்பட்டணத்திற்கு நிறைவேறிற்று.
அறிந்திருக்கிறேன் வெளி 2 : 2,3
உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்,
வெளிப்படுத்தின விசேஷம் 2:2
நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:3
கர்த்தர் எபேசு சபையைப்பற்றி நல்ல
வார்த்தைகளினால் புகழ்ந்து பேசுகிறார்.
எபேசு சபையின் கிரியைகளை கர்த்தர்
அறிந்திருக்கிறார். கர்த்தருக்கு மறைவான
காரியம் எதுவுமில்லை. நம்மிடத்தில் தப்பிதம் இருக்கும்போது கர்த்தர் நம்மைக்
கடிந்துகொள்வார். நாம் நன்மையானவைகளைச் செய்யும்போது கர்த்தர் நம்மைப் புகழ்ந்து பேசுவார். கர்த்தர் நமக்குச் சொல்லுகிற எல்லா
வார்த்தைகளையும் கவனமாய்க்
கேட்கவேண்டும். அவர் நம்மைப் புகழ்ந்து பேசும் போதும் அவர் நம்மைக் கடிந்துகொள்ளும்போதும் நாம் அவருக்குச்
செவிக்கொடுக்க வேண்டும். தாம் என்ன
சொல்லவேண்டுமென்பது கர்த்தருக்குத்
தெரியும். அவர் தேவையில்லாமல் ஒரு
வார்த்தையும் பேசுகிறவர்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எபேசு
சபையை புகழ்ந்து பேசுகிறார். அவர்கள்
நற்கிரியைகளைச் செய்கிறார்கள்.
பிரயாசத்தோடு ஊழியம் செய்கிறார்கள்
அவர்களுக்குப் பாடுகள் வரும்போது
அவற்றைப் பொறுமையோடு
சகித்துக் கொள் கிறார்கள், கர்த்தருடைய
ஊழியக்காரர்கள் பிரயாசப்பட்டு
நற்கிரியைகளை செய்தால் மாத்திரம்
போதாது. அவர்கள் பொறுமையுள்ள வர்களாகவும் இருக்க வேண்டும். நம்மிடத்தில்
பொறுமை இல்லை யென்றால் நம்முடைய
ஆவிக்குரிய ஜீவியத்தில் நம்மால் வளர்ச்சி
பெறமுடியாது. பொறுமையில்லாதவர்களால்
இயேசுகிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப்
பின்பற்றிச் செல்லவும் முடியாது.
கர்த்தருடைய பிள்ளைகள்
சோதனைகளையும், வேதனைகளையும்,
பாடுகளையும், உபத்திரவங்களையும்
சகித்துக் கொள்ள வேண்டும். இவற்றிற்கு
மத்தியில் நாம் பொறுமையோடிருக்கவேண்டும் எபேசு சபையார் பொல்லாதவர்கள் சகிக்கக்கூடாமல் இருக்கிறார்கள். எபேசு
சபை பொல்லாப்புக்கு விரோதமாக
பக்தி விருத்தியில் வைராக்கியமாக இருக்கிறது. நாம் மனுஷரிடத்தில் அன்புகூரவேண்டும் அதே வேளையில் அவர்களுடைய பொல்லாத பாவங்களுக்கு விரோதமாக நாம் எதிர்த்து நிற்கவும் வேண்டும். அவர்களுடைய பாவங்களுக்கு நாம் பங்காளிகளாகி விடக்கூடாது.
அப்போஸ்தலர் அல்லாதவர்கள் தங்களை
அப்போஸ்தலர் என்று சொல்லுகிறார்கள்.
எல்லா காரியங்களையும் நாம் சோதித்து
அறியவேண்டும். ஆவிகளைப் பகுத்தறியும்
வரத்தை கர்த்தர் நமக்குக் கிருபையாகக்
கொடுத்திருக்கிறார். பொய்சொல்லுகிற
அப்போஸ்தலர்கள் எபேசு சபையார்
சோதித்துப் பார்த்து அவர்களை பொய்யன்
என்று கண்டறிந்தார்கள். நாம் சோதித்துப்
பார்க்காமல் யாரையும் நம்முடைய
சுய இஷ்டம் போல நியாயந்தீர்த்து விடக்கூடாது. நீதியாய் விசாரியாமல் யாரையும் ஒதுக்கி வைத்துவிடவும் கூடாது.
எபேசு சபையார் இயேசுகிறிஸ்துவின்
நாமத்தினிமித்தம் இளைப்படையாமல்
பிரயாசப்படு, நற்கிரியைகளைச்
செய்கிறார்கள் எபேசு சபையாருடைய
கிரியைகளையும், அவர்களுடைய
பிரயாசத்தையும், அவர்களுடைய
பொறுமையையும், அவர்கள் வார்த்தைகளைச் சோதித்துப் பார்ப்பதையும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
அறிந்திருக்கிறார்.
எபேசு சபையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் காரியங்கள்
1. குறைவின் பத்து அம்சங்கள்
(வெளி 2:2-6)
2. குறைவின் ஒரு அம்சம். (வெளி 2:4-5)
3. ஆதியில் கொண்டிருந்த அன்பை
அவர்கள் விட்டு விட்டார்கள். (வெளி 2:4)
4. அவர்கள் இன்ன நிலைமையிலிருந்து
விழுந்தார்கள் என்பதை நினைத்து,
மனந்திரும்பி, ஆதியில் செய்த
கிரியைகளைச் செய்ய வேண்டும்.
(வெளி 2:5)
5. இல்லாவிட்டால் தேவன் சீக்கிரமாய்
அவர்களிடத்தில் வந்து, அவர்கள்
மனந்திரும்பாத பட்சத்தில், அவர்கள்
விளக்குத்தண்டை அதனிடத்தினின்று
நீக்கிவிடுவார். (வெளி 2:5)
6.. தேவன் கூறியிருக்கும்
நிபந்தனைகளுக்கு எபேசு
சபை கீழ்ப்படியவில்லையென்றால் அந்தச்
சபை முழுவதும் அழிக்கப்படும்
(வெளி 2:5)
7. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ
அவனுக்கு தேவனுடைய பரதீசின்
மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின்
கனியைத் தேவன் புசிக்க கொடுப்பார்.
(வெளி 2:7)
குறை உண்டு வெளி 2 : 4-6
வெளி 2:4. ஆனாலும், நீ ஆதியில்
கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று
உன்பேரில் எனக்குக் குறை உண்டு.
வெளி 2:5. ஆகையால், நீ இன்ன
நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை
தினைத்து மனத்திரும்பி, ஆதியில்
செய்த கிரியைகள் செய்வாயாக
இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய்
உன்னிடத்தில் வந்து, நீ
மனந்திரும்பாதபட்சத்தில், உன்
விளக்குத்தண்டை அதனிடத்தினின்று
நீக்கிவிடுவேன்.
வெளி 2:6. நான் வெறுக்கிற
திக்குவாய் மதஸ்தரின் கிரியைகளை
தீயும் வெறுக்கிறாய், இது
உன்னிடத்திலுண்டு.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எபேசு
சபையை புகழ்ந்து பேசினாலும்
அவர்களிடத்தில் காணப்படுகிற ஒரு சில
துர்க்கிரியைகளினிமித்தம், கர்த்தர்
அவர்களைக் கடிந்துகொள்ளவும் செய்கிறார். நமக்குள் எவ்வளவு நன்மையான காரியங்கள் இருந்தாலும் ஒரு சில தீமையான காரியங்கள் இருப்பதற்கும் வாய்ப்புள்ளது நற்பாவங்களுக்கு நடுவே தீயாக பாவங்களும் வாசம் பண்ண வாய்ப்பு இருக்கிறது.
எபேசு சபையார் ஆதியிலே கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டார்கள். அந்த அன்பை அவர்கள் முற்றிலுமாக விட்டு விலகிப் போக விடவில்லை. அன்பை மொத்தமாகப் புறக்கணித்து ஒதுக்கி விட வில்லை அன்பின் அளவில் குறைவு உண்டாயிற்று. ஆதியிலே அவர்கள் அதிக அன்புள்ளவர்களாயிருந்தார்கள்.
அதன்பின்பு அவர்களுடைய அன்பு குறைந்து போயிற்று.
விசுவாசிகள் ஆரம்பத்தில் இயேசுகிறிஸ்துவிடம் அதிகமாய் அன்பு கூறுவார்கள், அவர்களுடைய அன்பில் ஜீவனும், வேகமும் இருக்கும். அன்பில் உற்சாகமாயிருப்பார்கள். இந்த அன்பை நாம் காத்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் அன்பு அணைந்து போகும். பிரகாசமாயிருந்த அன்பு மக்கிப்போகும் உற்சாகமாயிருந்த அன்பு சோர்ந்து போகும். ஜீவனோடும் ஆரோக்கியத்தோடும் இருந்த
அன்பு நோய்வாய்ப்பட்டு பலவினமா இருக்கும். எபேசு சபையார் ஆதியிலே
தம்மேல் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டார்கள் என்று கர்த்தராகிய
இயேசு கிறிஸ்து அவர்கள் மீது குற்றம் சொல்லுகிறார்.
அன்பு குறைந்து போனவர்கள் மறுபடியும்
அந்த அன்பைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டுமென்று
கிறிஸ்துவானவர் தாமே தம்முடைய தெய்வீக ஆலோசனைகளை சொல்லுகிறார்.
முதலாவதாக நாம் இன்ன நிலைமையிலிருந்து விழுந்தோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நம்முடைய முந்திய நிலமையையும், தற்போதைய நிலையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாம் இப்போது இயேசுகிறிஸ்துவிடத்தில்
அன்புகூருவதைவிட, ஆதியிலே அவரிடத்தில் எவ்வளவு அதிகமாய் அன்புகூர்ந்தோம் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய அன்பு குறைந்து போனது நமக்கு தெரிய வரும்.
நாம் கர்த்தரிடத்தில் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டதை நினைத்து, மனந்திரும்ப வேண்டும். இதைத் தொடர்ந்து ஆதியில் செய்த கிரியைகளை செய்ய வேண்டும் நாம் செய்தவற்றை திரும்பவும் உற்சாகமாகச் செய்ய வேண்டும். நம்முடைய ஆதி அன்பை மறுபடியும் பெற்றுக்கொள்ளும் வரையிலும், மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்ய வேண்டும். அப்போது நம்மிடத்தில்
சோர்ந்துபோயிருக்கும் அன்பு
புதுப்பிக்கப்படும். குறைந்துபோயிருக்கிற
அன்பு நிறைவாயிருக்கும்.
கர்த்தருடைய ஆலோசனையை நாம்
ஏற்றுக்கொண்டு அதற்கு கீழ்ப்படிந்து
கிரியை நடப்பிக்கவேண்டும். கர்த்தருடைய
வார்த்தைகளை நாம் புறக்கணித்தால்
நமக்கு தண்டனை நிச்சயம் உண்டு, கர்த்தர்
மனந்திரும்பு என்று சொல்லும்போது, நாம்
மெய்யாகவே மனந்திரும்ப வேண்டும். நாம்
மனந்திரும்ப மறுத்துவிட்டால் கர்த்தருடைய
கோபாக்கினை நம்மீது வரும். நம்முடைய
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கிருபையும்
இரக்கமுமுள்ளவர். அவருடைய கிருபையும் இரக்கத்தையும் நாம் புறக்கணித்து விட்டால், நம்மால் கர்த்தருக்குப் பிரியமான பிள்ளைகளாக ஜீவிக்க முடியாது. கர்த்தர் நம்பிடத்தில்
என்று குறைவு உண்டு சொல்லுவார்
நம்முடைய குறைவை திருத்திக்கொள்ள
நாம் முன்வரவில்லையென்றால் நம்மைத்
தண்டிப்பார்.
நாம் தேவனிடத்தில் ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டால், நாம் உடனே மனந்திரும்ப வேண்டும். ஆதியில் செய்த கிரியைகளை மறுபடியும் செய்யவேண்டும். இல்லாவிட்டால், நம்முடைய கர்த்தர் சீக்கிரமாய் நம்மிடத்தில் வந்து, நாம் மனந்திரும்பாத பட்சத்தில், நம்முடைய விளக்குத்தண்டை அதனிடத்திலிருந்து நீக்கிப்போடுவார்.
நமக்கு இயேசுகிறிஸ்துவின் வெளிச்சம்
கிடைப்பதற்கு வாய்ப்பில்லாமல் போகும்
நம்மால் வெளிச்சத்தில் இருக்கமுடியாது
இருளில் இருப்போம் நாம் போகும் இடம்
எது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்போம்.
எபேசு சபையாரிடத்தில் ஒரு சில குறைகள் காணப்பட்டாலும், அவர்களிடத்தில் ஒரு சில நற்காரியங்களும் காணப்படுகிறது.
அதினிமித்தமாய் கர்த்தர் அவர்களைப்
புகழ்ந்து பேசுகிறார். கர்த்தர் நிக்கொலாய்
மதஸ்தரின் கிரியைகளை வெறுக்கிறார்.
எபேசு சபையார் அன்பில் குறைவு உள்ளவர்களா இருக்கிறார்கள். ஆனாலும் கர்த்தர் வெறுக்கிற கிரியைகளை எபேசு சபையாரும் வெறுக்கிறார்கள்.
நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசமுண்டு மெய்க்கும் பொய்க்கும் வித்தியாசமுண்டு, கர்த்தர் நன்மையானவர். அவர் மெய்யாண்டவர். அவரைப் பின்பற்றுகிற நாம் நன்மை செய்யவேண்டும். மெய்யைப்
பற்றிக் கொள்ள வேண்டும் நிக்கொலாய்
மதஸ்தரிடம் மெய்யான கிரியைகள்
எதுவுமில்லை. கர்த்தருக்குப் பிரியமான
கிரியைகள் எதையும் அவர்கள் செய்யவில்லை. கர்த்தர் அவர்களை வெறுக்கிறார். எபேசு சபையாரும் அவர்களை வெறுக்கிறார்கள். இதனால் கர்த்தர் எபேசு சபையார்மீது புரியப்படுகிறார்.
ஆனாலும் எபேசு சபையார் தேவனிடத்தில்
ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டார்கள். அதினிமித்தமாய்
கர்த்தர் அவர்கள் மீது கோப்படுகிறார்
கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து
கிரியை செய்யும் போது நாம் கர்த்தருக்குப்
பிரியமுள்ள பிரயோஜனமுள்ள
பிள்ளைகளாக இருப்போம் நம்மிடத்தில்
நற்கிரியைகள் இருக்க வேண்டும்.
பொறுமை இருக்க வேண்டும்.
இவையெல்லாற்றையும்விட நம்முடைய
கிரியைகள் தேவனுக்குப் பிரியமுள்ள தாயிருக்க வேண்டும். தேவன் வெறுக்கிற கிரியைகளை நாம் மிகுந்த செய்துவிடாதவாறு எச்சரிப்போடிருக்கவேண்டும்.
நிக்கொலாய் மதஸ்தர் என்பவர்கள்
நிக்கொலாயைப் பின்பற்றுகிறவர்கள். இவன்
ஒரு தேவப்புரட்டன். ஞானமார்க்கத்தில்
காணப்படும் அசுசியான பழக்கவழக்கங்களை இவர்களும் கடைப்பிடித்து வந்தார்கள் விபச்சாரம், வேசித்தனம். விக்கிரகங்களுக்குப்
படைக்கப்பட்டதைப் புசிப்பது ஆகியவற்றை இவர்கள் பாவமாகக் கருதவில்லை. பிலேயாம் தியத்தீராவின் யேசபேல் ஆகியோருடைய கொள்கைகளைப்போல நிக்கொலாய் மதஸ்தரின் கொள்கையும் அமைந்திருந்தது.
ஜீவவிருட்சத்தின் கனி வெளி 2:7
வெளி 2:7. ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன்
கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எபேசு
சபையின் தூதனுக்குச் சொன்ன செய்தியின்
முடிவுரையில் இந்த வாக்கியம்
சொல்லப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தி எபேசு சபைக்குச் சொல்லப்பட்டால், எல்லா
சபைக்கும் பொருந்துகிற பொதுவான
செய்தியாகும். ஜெயங்கொள்கிறவர்களுக்கு
கர்த்தர் தம்முடைய பெரிதான கிருபையையும் இரக்கத்தையும் வாக்குப்பண்ணுகிறார்.
நமக்கு ஆவிக்குரிய சத்துருக்கள்
உண்டு. அவர்கள் நம்மை மேற்கொள்ள
இடங் கொடுக்க கூடாது. நம்முடைய
சத்துருக்களோடு நாம் நல்ல போராட்டத்தைப் போராட வேண்டும்.
ஜெயங்கிடைக்கும் வரையிலும்
சோர்ந்துபோகாமல் தொடர்ந்து போராட வேண்டும் ஆவிக்குரிய போராட்டத்தில் நாம் ஜெயம்பெறும்போது நமக்கு மேன்மையும் வெகுமதியும் உண்டாகும்.
ஜெயங்கொள்கிறவர்கள் ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிப்பார்கள். இந்த விருட்சம் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிறது. ஜீவவிருட்சம் பூமிக்குரிய விருட்ச மெல்ல. இதன் கனியும் பூமிக்குரிய கனியல்ல. ஜீவவிருட்சத்தின் கனி பரலோகத்திற்கு உரியது. ஜெயங்கொள்கிறவன் எவனோ அவனுக்கு கர்த்தர் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின்
கனியை புசிக்கக் கொடுப்பார்.