வெளி 1:7-8 விளக்கம்


வெளி 1:7-8 விளக்கம்

_Revelation Whatsapp group post :13_

இதோ, மேகங்களுடனே வருகிறார், கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள், பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். 
வெளிப்படுத்தின விசேஷம் 1:7

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார். 
வெளிப்படுத்தின விசேஷம் 1:8

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
இந்த உலகத்தை நியாயந்தீர்க்கிற
நியாயாதிபதியாக வருவார். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை முன்னறிவித்து வெளிப்படுத்தின விசேஷம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதே சத்தியம்
மறுபடியும் சொல்லி இந்தப் புஸ்தகம் முடிவு
பெறுகிறது. யோவான் அ
ந்த நாளில் தான்
கண்டதை அப்படியே எழுதுகிறார். "இதோ,
மேகங்களுடனே வருகிறார் என்று
அவருடைய வருகையைத் தரிசித்து
எழுதுகிறார். நம்முடைய மனக்கண்களும்
பிரகாசமுள்ள தாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் கர்த்தர் மேகங்களுடனே
வருவதை நம்மால் காண முடியும் மேகங்கள்
என்பது அவருடைய ரதங்களையும்
சேவைகளையும் குறிக்கிற வார்த்தை
இயேசு கிறிஸ்து மேகங்களுடனே வரும்போது கண்கள் யாவும் அவரைக் காணும், எல்லா ஜனங்களுடைய கண்களும் அவரைக் காணும் அவருடைய சிநேகிதன் கண்களும் சத்துருக்களின் கண்களும் இயேசு கிறிஸ்து மேகங்களுடனே வருவதைக் காணும்.

இயேசு கிறிஸ்து மேகங்களுடனே
வரும்போது அவரைக் குத்தினவர்களும்
அவரைக்காண்பார்கள். இயேசு கிறிஸ்துவை
சிலுவையில் அறைந்தவர்கள் அவரை
வாரினால் அடித்தவர்கள், அவருடைய
அரசின் மீது முள் முடி சூட்டியவர்கள்,
அவருடைய விலாவிலே ஈட்டியால்
குத்தினவர்கள் ஆகிய எல்லோரும் அவரைக் காண்பார்கள் அவருடைய வருகைக்கு முன்பாக இவர்களெல்லாம்
மனந்திரும்பி இருக்க வேண்டும்.
இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாக
தூஷண வார்த்தைகளைப் பேசியவர்கள்
தங்கள் பாவங்களை அறிக்கை செய்து
மனந்திரும்பி இருக்க வேண்டும். மனம்
திரும்பாத பூமியின் கோத்திரத்தார் எல்லாரும், இயேசு கிறிஸ்து மேகங்களுடனே வரும்போது
அவரைப் பார்த்து புலம்புவார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மைப்பற்றி இங்கு வெளிப்படுத்துகிறார். தம்மை இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்" என்று சொல்லுகிறார். மேலும், "நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்" என்று தம்மைப்பற்றி திருவுளம் பற்றுகிறார் இயேசுகிறிஸ்துவே எல்லாவற்றிற்கும் ஆரம்பமும் முடிவுமாக இருக்கிறவர் எல்லா காரியங்களும் அவரிடமிருந்தே வந்திருக்கிறது. எல்லா காரியங்களும் அவருக்காகவே நடை பெறுகிறது. அவரே சர்வவல்லமையுள்ள தேவன். அவர் நித்தியமானவரே. அவர் என்றும் மாறாதவர்.

இயேசு கிறிஸ்து எருசலேமில் வந்து
இறங்கும் போது அங்குள்ள யாவருடைய
கண்கள் அவரைக் காணும் (சக 14:1-5
பூமியின் மற்ற பகுதியிலுள்ளவர்கள் சிறிது
காலத்திற்குப் பின்பு அவரைக் காண்பார்கள்.
(ஏசா 2:2-4) இயேசு கிறிஸ்து சிலுவையில்
அறையப்பட்டிருந்த போது அவரைக் குத்திய யூதருடைய சந்ததியார். (சக 12:10), இயேசு கிறிஸ்து இந்தப் பூமிக்கு வரும்போது
எருசலேமைச் சுற்றியிருக்கும் எல்லாத்
தேசங்களின் சேனைகளும் அவரைக்
காண்பார்கள். (சக 14:1-5; மத் 24:29-31).

அல்பாவும் ஓமெகாவும் என்னும்
வாக்கியம் கிரேக்க மொழியின் முதல்
எழுத்தும், கடைசி எழுத்தும் ஆகும். இந்த
வாக்கியம் வெளிப்படுத்தின விசேஷம்
புஸ்தகத்தில் நான்கு முறை பயன்படுத்தப் பட்டிருக்கிறது (வெளி- 1:8, 11: வெளி 21:5; வெளி 22:13; வெளி 1:17 வெளி 2:8), வெளி 21:6 மற்ற வசனங்களில் எல்லாம் இந்த வாக்கியம் இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும். வெளி 1:8 ஆவது வசனத்தில் இயேசு கிறிஸ்துவைக் குறிப்பதற்கு "சர்வவல்லமையுள்ள கர்த்தர்" என்னும் வாக்கியம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.