வெளி 1:5-6 விளக்கம்
…
_Revelation Whatsapp group post :12_
…
அப்போஸ்தலர் யோவான் கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவைக்குறித்து விசேஷித்த
வெளிப்பாடுகளைச் சொல்லுகிறார். இயேசு கிறிஸ்து உண்மையுள்ள சாட்சியாக இருக்கிறவர். அவருடைய சாட்சியின் மீது
நாம் பாதுகாப்பாக சார்ந்திருக்கிறோம் அவருடைய உண்மையுள்ள சாட்சிகளில் நமக்குப் பூரண பாதுகாப்பு உண்டு. அவர் நம்மை ஒருபோதும் வஞ்சிக்கமாட்டார்.
இயேசுகிறிஸ்துவையும் எக்காலத்திலும் யாரும் வஞ்சிக்க முடியாது
…
இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து
முதற்பிறந்தவராயிருக்கிறார். இவரே பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியாக இருக்கிறவர். ராஜாக்களுடைய அதிகாரம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குட்பட்டது. ராஜாதி ராஜாவாகிய இயேசுகிறிஸ்துவோ சர்வ அதிகாரம் உள்ளவர். அவர் சர்வவல்லமையுள்ள லவர் பூ
மியின்
ராஜாக்களுக்கு அதிபதியாயிருக்கிற
இயேசு கிறிஸ்துவின் ஆலோசனைபடி, பூமியின் ராஜாக்கள் -ஜனங்களை ஆளுகை
செய்கிறார்கள். ராஜாக்களின் ஆலோசனைகளை விட இயேசு கிறிஸ்துவின் ஆலோசனைகளே மகத்துவமுள்ளது கிறிஸ்துவின் ஆலோசனைகள் மாத்திரமே நிலைத்துநிற்கும் பூமியின்
ராஜாக்களெல்லோரும் தங்களுடைய
ஆளுகையைக் குறித்து இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக கணக்கு ஒப்புவிக்கவேண்டும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு கிருபையும் சமாதானமும் உண்டாயிருக்கிறது.
…
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மிடத்தில் அன்புகூருகிறார். தம்முடைய
இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற
நம்மைக் கழுவுகிறார். பாவம் ஆத்துமாவை
கறைபடியச் செய்துவிடும். பாவத்தின்
கறைகளெல்லாம் கழுவப்படவேண்டும்
அப்போதுதான் நம்முடைய ஆத்துமா
சுத்தமாகும். பாவத்தின் கறையை சாதாரண
ஜலத்தினால் கழுவி சுத்தப்படுத்த முடியாது
இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால்
மாத்திரமே பாவக்கறைகளை கழுவ முடியும்.
நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவுவதற்கு இயேசுகிறிஸ்துவின் இரத்தமேயல்லாமல் வேறு எந்த இரத்தத்திற்கும் பலனில்லை. நம்முடைய
பாவங்களைக் கழுவுவதற்கு
கிறிஸ்துவானவர் தம்முடைய சொந்த
இரத்தம் சிந்தினார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும்
ஆசாரியர்களுமாக்கினார். கிறிஸ்துவானவரே நம்மை நீதிமான்களாக்கி இருக்கிறார். அவரே நம்மை பரிசுத்தப்படுத்தியிருக்கிறார். அவரே
பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை
ராஜாக்களாக்கியிருக்கிறார். ராஜாக்கள்
இந்த உலகத்தை ஜெயிக்கிறவர்கள்
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் இந்த
உலகத்தை ஜெயிக்கிற ராஜாக்கள்.
…
அவர் நம்மை பிதாவாகிய தேவனுக்கு
முன்பாக ஆசாரியர்களாக்கினார்.
ஆசாரியர்கள் தேவனுடைய சமூகத்திற்கு
கிட்டிச்சேரும் சிலாக்கியம் பெற்றவர்கள்.
அப்படிப்பட்ட பெரிய சிலாக்கியம் கிறிஸ்துவின் மூலம் நமக்குக் கிடைத்திருக்கிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய், பிதாவாகிய
தேவனுடைய சமூகத்தில் பிரவேசிக்கும்
சிலாக்கியம் நாம் பெற்றிருக்கிறோம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு மேன்மையான ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறார். அவருக்கே மகிமையும்
வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக ஆமென்.
…
இயேசுகிறிஸ்துவைப் பற்றிய சத்தியங்கள்
…- 1. உண்மையுள்ள சாட்சி
- 2. மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவர்.
(வெளி 1:5; 1கொரி 15:20-23)
- 3. பூமியின் ராஜாக்களுக்கு அதிபதி
(வெளி 1:5)
- 4. நம்மிடத்தில் அன்பு கூர்ந்தார்.
(வெளி 1:5; யோவான் 3:16).
- 5. தமது இரத்தத்தினாலே நம்முடைய
பாவங்களற நம்மைக் கழுவினவர்
(வெளி 1:5; மத் 26:28; 1யோவான் 1:7),
- 6. தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு
முன்பாக நம்மை ராஜாக்களும்
ஆசாரியர்களுமாக்கினவர். (வெளி 1:6;
வெளி 5:10; வெளி 20:4-6)
- 7. அவருக்கு மகிமையும் வல்லமையும்
என்றென்றைக்கும் உண்டாயிருக்கும்
(வெளி 1:6; ஏசா 9:6-7; தானி 7:1314)
- 8. மேகங்களுடனே வரப்போகிறவர்.
மனுஷருடைய கண்கள் யாவும்
அவரைக் காணும் (வெளி 1:7;
தானி 7:13-14).