…
வெளி 1:3-4 விளக்கம்
…
_Revelation Whatsapp group post :11_
…
வசனம் 3 இல் உள்ள முக்கிய வார்த்தைகளுக்கான கிரேக்க வார்த்தைகள்
…- 1. Makarios 3107 - Blessed பாக்கியவான்கள்
- 2. anaginooskoon 314 readed வாசிக்கிறவன்
- 3. akouontes 191 hear கேட்கிறவர்கள்
- 4. logos 3056 words வசனங்கள்
- 5. profeeteias 4394 prophecy தீர்க்க தரிசனம்
- 6. teerountes 5083 keep
கைக்கொள்ளுகிறவர்கள்
- 7. gegrammena 1125 which are written எழுதியிருக் கிறவைகள்
- 8. kairos 2540 time காலம்
- 9. engus1451at hand சமீபமாயிருக்கிறது
…
வசனம் 4 இல் உள்ள முக்கிய வார்த்தைகளுக்கான கிரேக்க வார்த்தைகள்
…- 1. Iooánnees 2491 John யோவான்
- 2. heptá 2033 seven ஏழு
- 3. ekkleesiais 1577 churches சபைகள்
- 4. Asia 773 Asia ஆசியா
- 5. charis 5485 Grace கிருபை
- 6. humin 5213 unto you உங்களுக்கு
- 7. eireenee 1515 peace சமாதானம்
- 8. oon 5607 is இருக்கிறவர்
- 9. erchomenos 2064 is to come
வருகிறவருமானவர்
- 10.Pneumátoon 4151 Spirits ஆவிகள்
- 11.enoópion 1799 before முன்பாக
- 12. thrónou 2362 throne சிங்காரம்
- 13. autoú 846 his அவருடைய
வசனங்களுக்கான விளக்கம்:-
…
அப்போஸ்தலர் யோவான் சபையாருக்கு தன்னுடைய அப்போஸ்தல ஆசீர்வாதத்தைச் சொல்லுகிறார். தேவனுடைய வெளிப்பாட்டோடு அப்போஸ்தல ஆசீர்வாதமும் சேர்ந்திருக்கிறது இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவர்களும், கேட்கிறார்கள்,
இவற்றைக் கைக்கொள்கிறவர்கள் எல்லோரும் பாக்கியவான்கள். தேவனுடைய
தீர்க்கதரிசனங்களை அறிந்திருப்பது நமக்கு
ஆசீர்வாதம் தேவனுடைய தீர்க்கதரிசன
வசனங்களுக்கு பங்குள்ளவர்களாகயிருப்பது நமக்குக் கிடைத்திருக்கிற சிலாக்கியம். தேவனுடைய வசனங்களை வாசிக்கிறவர்கள்
பாக்கியவான்கள். தேவனுடைய வசனங்களை நாம் வாசிப்பது மாத்திரமல்ல, மற்றவர்கள் இந்த வசனங்களை வாசிக்கும் போது, நாம் அவற்றைக் கேட்டு ஆசீர்வாதம் பெறவேண்டும்.
…
கர்த்தருடைய தீர்க்க தரிசன வசனங்களை
வாசித்தால் மாத்திரம் போதாது. அவற்றைக் கேட்டால் மாத்திரம் போதாது. இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை நாம் கைக்கொள்ளவும் வேண்டும். அப்போதுதான் நமக்கு ஆசீர்வாதம் உண்டாகும். இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற தீர்க்கதரிசனங்களெல்லாம் நிறைவேறும்
காலம் சமீபமாயிருக்கிறது.
…
அப்போஸ்தலர் யோவான் ஆசியாவிலுள்ள
ஏழு சபைகளுக்கு அப்போஸ்தல ஆசீர்வாதம் சொல்லுகிறார். எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா ஆகிய ஏழு சபைகளுக்கும் யோவான் எழுதுகிறார். இந்த சபை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக விசேஷித்த செய்திகளையும் சொல்லுகிறார். இந்த ஏழு சபையாருக்கும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக என்று
வாழ்த்துகிறார். தேவன் நமக்குக் கொடுக்கிற
நன்மையே அவருடைய கிருபை அவர்
நமக்குள் நடப்பிக்கிற நற்கிரியைகளெல்லாம்
அவருடைய கிருபையாயிருக்கிறது.
தேவனுடைய கிருபை நமக்குள் இருக்கிறது
என்பதற்கு சமாதானமே அத்தாட்சியாக இருக்கிறது.
…
தெய்வீக ஆசீர்வாதங்களெல்லாம்
தேவனிடமிருந்தே வருகிறது. பிதாவாகிய
தேவன் திரித்துவ தேவன். பிதா, குமாரன்,
பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவரில்
யோவான் முதலாவதாக பிதாவானவர் பற்றிச் சொல்லுகிறார் அவரை, "இருக்கிறவரும், இருந்தவரும், வருகிறவருமானவர்" என்று சொல்லுகிறார். அவர் நித்தியமானவர். நேற்றும் இன்றும், என்றும் மாறாதவர்.
…
யோவான் பரிசுத்த ஆவியானவரை பற்றி சொல்லும்போது "ஏழு ஆவிகள்" என்னும் வார்த்தையைப் பயன்படுத்துகிறார். தேவனுடைய ஆவியானவர் பரிபூரணம் உள்ளவர். ஏழு ஆவிகள் என்னும் வார்த்தை தேவ ஆவியானவருடைய பரிபூரணத்தைக்
குறிப்பிடுகிற வார்த்தையாகிய. தேவ ஆவியானவருக்குள் ஏராளமான வரங்களும் ஏராளமான கிருபைகளும் கிரியைகளும் உள்ளன. பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பு இருக்கிறார். தேவன் தம்முடைய ஆவியான வராலே சகலவற்றையும் சிருஷ்டித்தார். தம்முடைய சர்வசிருஷ்டிகளையும் தம்முடைய ஆவியானவராலே ஆளுகை செய்கிறார்.
…