வெளி 1:1-2 விளக்கம்


_Revelation Whatsapp group post :10_

வெளி 1:1-2 விளக்கம்

வசனம் 1 கிரேக்கம் - ஆங்கிலம் - தமிழ்

வசனம் 2



யோவான் 1:1-2 வார்த்தை விளக்கம்

1. தலைப்பும் ஆசிரியரும் - (1:1-11)

வெளி 1:1 சீக்கிரத்தில் சம்பவிக்க
வேண்டியவைகளைத் தம்முடைய
ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்
பொருட்டு தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை
அனுப்பி தம்முடைய ஊழியக்காரனாகிய
யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான
விசேஷம்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation)
- கிரேக்க வார்த்தை - apokalypsis -
(602)

பொருள்: 


 ஒளி, வெளிப்படுதல், காண்பித்தல், தெளிவு
(to unveil, uncover) - எல்லோரும்
காணும்விதமாகதிரையை விலக்குதல்,
மறைபொருளாக இருக்கும் இரகசியத்தை வெளிப்படுத்துதல்.
(எபே 3:3; கலா 1:12 ) அதரிசனமான
நபரைத் தரிசிக்கக் கூடியவராக
வெளிப்படுத்திக் காண்பித்தல் (வெளி :1; 
2 தெச 1:7; 1 பேதுரு 1:7,13.)

"தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு
ஒப்புவித்தல்" - 

சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டிய காரியங்களைத் தேவன் இயேசு கிறிஸ்துவிடம் ஒப்புவித்தார். இயேசு கிறிஸ்து மனுஷ அவதாரத்தில் இருந்தபோது மனுஷத்துவத்தின் வரையறைக்குட்பட்டிருந்தபடியினால், தேவன் இவருக்கு இந்தக் காரியங்களை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாயிற்று. (ஏசா 50:4; மத் 28:18; மாற்கு 13:32; லூக்கா 1:40,52)

"காண்பிக்கும் பொருட்டு - 

யோவானின் நாளிலிருந்து நித்திய காலம்வரைக்கும் தேவன் தம்முடைய ஊழியக்காரருக்கு எதையும் மறைக்காமல், காண்பிக்க வேண்டும் என்று சித்தம் கொண்டிருந்தார். (வெளி 21-22)

ஊழியக்காரர் (servants)
 - கிரேக்க வார்த்தை doulos - (1401)

பொருள்:- 

வேலைக்காரனாகிய,
ஊழியக்காரனாகிய, அடிமையாயிருக்கிற 

 புதிய ஏற்பாட்டில்
ஊழியக்காரர் என்னும் வாக்கியம் 111
தடவை பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
வெளிப்படுத்தின விசேஷத்தில் மட்டும்
இந்த வார்த்தை 14 தடவை
பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

"சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகள்" - 

வெளிப்படுத்தின விசேஷத்தின் மையக்கருத்தே சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குத் தேவன் வெளிப்படுத்துவதுதான். இந்தப் புஸ்தகத்தில் தேவன் பல நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவையாவன:-

  • 1. சபை காலம் முழுவதற்கும் உரிய
நிகழ்ச்சிகள், (வெளி 1-3)
  • 2. பரலோகத்தின் நிகழ்ச்சிகள்
(வெளி 4-5)
  • 3. தானியேல் எழுபதாவது வாரமாகிய
வருங்கால உபத்திரவத்தைக்குறித்த
நிகழ்ச்சிகள் (வெளி 6-19)
  • 4. ஆயிரம் வருஷ அரசாட்சியின்
நிகழ்ச்சிகள். (வெளி 20)
  • 5. புதிய வானம் புதிய பூமி
ஆகியவற்றின் நிகழ்ச்சிகள். (வெளி 21-22)

சீக்கிரம் (shortly) - 
கிரேக்க வார்த்தை tachos -(5034)

சீக்கிரத்தில் (சீக்கிரம்) (swiftness; speed; quickly) "shortly" (வெளி 11; வெளி 22:6; அப் 25:4;  ரோமர 16:20- "quickly" (அப்
12:7: அப் 22:18- வெளி 2:5); "speedily"
(லூக்கா 18:8)

"தம்முடைய ஊழியக்காரனாகிய
யோவானுக்கு" - 

வெளிப்படுத்தின விசேஷம்
புஸ்தகம் தேவனிடமிருந்து கிறிஸ்துவிற்கும்,
தேவதூதருக்கும், யோவானுக்கும்,
சபைகளுக்கும் , நமக்கும் கடந்து
வந்திருக்கிறது. (வெளி 1:1,11).

வசனம் 2

வெளி 1.2 இவன் தேவனுடைய வசனத்தைக்
குறித்தும் இயேசுகிறிஸ்துவைப்பற்றிய
சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறது.

அறிவி (signified) - 
கிரேக்க வார்த்தை seemainoo - 4591 

பொருள் - 

குறி, அறிவி
எடுத்துக்காட்டு, வெளிப்படுத்து (to
show, point out; announce; to
make a note of) - 

எல்லாக் காரியங்களையும் வெளிப்படையாகப் புரிந்து கொள்ள முடியாது. ஆகையினால், அவற்றை அறிவிக்க வேண்டியது அவசியமா இருக்கிறது. வெளி 1:1; யோவான் 12:33;
யோவான் 18:32; யோவான் 21:19
அப் 11:28; அப் 25:27)

வெளி 1:1-2 வசன விளக்கம்

வெளிப்படுத்தின விசேஷம் கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவைப்பற்றிய வெளிப்பாடு
ஆகும். அப்போஸ்தலர் யோவான்
ஆதித்திருச்சபையிலே தீர்க்கதரிசியாக
ஊழியம் செய்கிறார் சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளை யோவான்
விசுவாசிகளுக்கு வெளிப்படுத்துகிறார். இந்தப் புஸ்தகத்தில் - எழுதப்பட்டிருக்கிற
வெளிப்பாடுகளை தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்தார். தேவனுடைய தெய்வீக வெளிப்பாடு
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கிறிஸ்துவானவரே பிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்.

தேவனிடமிருந்து நாம் எதிர்பார்க்கிற
எல்லா சத்தியங்களையும் இயேசு கிறிஸ்து
மூலமாகவே பெற்றுக்கொள்கிறோம். தேவன்
நம்மிடத்திலிருந்து எதிர்பார்க்கிற எல்லா
காரியங்களையும் இயேசு கிறிஸ்து மூலமாக
எதிர்பார்க்கிறார். கர்த்தராகிய
இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனுக்கும்
மனுஷருக்கும் நடுவே மத்தியஸ்தராக
ஊழியம் செய்கிறார். கிறிஸ்துவானவர்
தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய
ஊழியக்காரனா யோவானுக்கு
தம்மைப்பற்றி வெளிப்படுத்தியிருக்கிறார்.
தூதர்கள் தேவனுடைய தூதுவர்களாக இருக்கிறார்கள்.

கிறிஸ்துவினுடைய தூதனானவர்
தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட செய்தியை
யோவானுக்கு வெளிப்படுத்தின ார். இந்த
ஊழியத்தை செய்வதற்கு தேவன்
அப்போஸ்தலராகிய யோவானை
தெரிந்துகொண்டார். அப்போஸ்தலர்களில்
யோவான் மாத்திரமே இக்காலத்தில்
உயிரோடிருந்தார் என்று வேத பண்டிதர்கள்
சொல்லுகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் மற்ற சீஷர்களெல்லாம் இதற்கு முன்பாகவே
இரத்த சாட்சிகளாக மரித்துப் போனார்கள்.

- யோவான் இயேசு கிறிஸ்துவை பற்றி
வெளிப்பாட்டை சபைக்கு வெளிப்படுத்துகிறார். தேவனைப்பற்றிய சத்தியத்தை அறிந்துகொள்ளக்கூடிய உரிமை அவருடைய பிள்ளைகளுக்கு உண்டு.

இந்தப் புஸ்தகத்தில் சீக்கிரத்தில் சம்பவிக்க
வேண்டியவைகள் எழுதப்பட்டிருக்கிறது. இந்த வெளிப்பாட்டின் மூலம் தேவனுடைய
தெய்வீக பராமரிப்பு பற்றி நாம் ஓரளவு
புரிந்துகொள்ளலாம் இந்தச்
சம்பவங்களெல்லாம் சீக்கிரத்தில் நிறைவேறும். நிச்சயமாகவே நிறைவேறும்.

யோவான் தேவனுடைய
வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவை பற்றிய சாட்சியைக் குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறார். கர்த்தராகிய
இயேசு கிறிஸ்து நடப்பித்த அற்புதங்களுக்கு
யோவான் கண்ணாரக் கண்ட சாட்சியாயிருக்கிறார். அவருடைய உபதேசங்களுக்கு காதாரக் கேட்ட
சாட்சியாகவும் இருக்கிறார். யோவான் தான்
கண்ட யாவற்றையும் சாட்சியாக
அறிவிக்கிறார். தான் கண்டவற்றில் எதையும்
 சாட்சியாக அறிவிக்காமல் விட்டு விடவுமில்லை. தாள் காணாததை கண்டதாகவும் அறிவிக்கவில்லை . தேவனுடைய ஆலோசனைகளை கூட்டாமல் குறைக்காமல் அப்படியே சொல்லுகிறார்.

வெளிப்படுத்தல் என்னும் வார்த்தைக்கு
எல்லோரும் காணும் விதமாக திரையை
விலக்குதல் , மறைபொருளாக இருக்கும்
இரகசியத்தை வெளிப்படுத்துதல் என்று
பொருள். அதரிசனமான நபரைத் தரிசிக்கக்
கூடியவராக வெளிப்படுத்திக் காண்பித்தல்
என்றும் இந்த வார்த்தைக்கு பொருள்
சொல்லலாம்.

சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டிய
காரியங்களைத் தேவன் இயேசு கிறிஸ்துவிடம் ஒப்புவித்தார். இயேசு கிறிஸ்து மனுஷ அவதாரத்தில் இருந்தபோது மனுஷத்துவத்தின்
வரையறைக்குட்பட்டிருந்தபடியினால், தேவன் இவருக்கு இந்தக் காரியங்களை
வெளிப்படுத்த வேண்டியது அவசியமாயிற்று. யோவானின் நாளிலிருந்து நித்திய காலம் வரைக்கும் தேவன் தம்முடைய ஊழியக்காரருக்கு எதையும் மறைக்காமல், காண்பிக்க வேண்டுமென்று சித்தம் கொண்டிருந்தார்.

வெளிப்படுத்தின விசேஷத்தின்
மையக்கருத்து சீக்கிரத்தில் சம்பவிக்க
வேண்டியவைகளைத் தம்முடைய
ஊழியக்காரருக்குத் தேவன்
வெளிப்படுத்துவதுதான். இந்தப் புஸ்தகத்தில் தேவன் பல நிகழ்ச்சிகள்
வெளிப்படுத்தியிருக்கிறார். அவையாவன:

1. சபைக்காலம் முழுவதற்கும் உரிய
நிகழ்ச்சிகள், (வெளி 1-3)
2. பரலோகத்தின் நிகழ்ச்சிகள், (வெளி
4-5)
3. தானியேல் எழுபதாவது வாரமாகிய
வருங்கால உபத்திரவத்தைக்குறித்த
நிகழ்ச்சிகள். (வெளி 6-19)
4. ஆயிரம் வருஷ அரசாட்சியின்
நிகழ்ச்சிகள். (வெளி 20)
5. புதிய வானம், புதிய பூமி ஆகியவற்றின்
நிகழ்ச்சிகள். (வெளி 21-22)

வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகம்
தேவனிடமிருந்து கிறிஸ்துவுக்கும்,
தேவதூதருக்கும். யோவானுக்கு, சபைகளுக்கும் நமக்கும் கடந்து வந்திருக்கிறது. எல்லாக் காரியங்களையும் வெளிப்படையாகப் புரிந்து கொள்ள முடியாது ஆகையினால்
அவற்றை அறிவிக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.