மத்தேயு 1:1
போதகர். சார்லஸ் சதீஷ் குமார்
WMM ICA, Veppamkuppam, Vellore.
ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: மத்தேயு 1:1
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆபிரகாமும், தாவீதும் கர்த்தருடைய வாக்குத்தத்தங்களுக்கு சுதந்தரவாளிகளாக இருந்தார்கள். மேசியாவை
குறித்து முன்னறிவிக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள்
இவர்களிடம் ஒப்புவிக்கப்பட்டது. ஆபிரகாமின்
சந்ததியில் இயேசு கிறிஸ்து பிறப்பார் என்பது
ஆதியிலே முன்னறிவிக்கப்பட்ட வாக்குத்தத்த மாகும்.
உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உண்ணைச் சபிக்கிறவனைச்சபிப்பேன் பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார் (ஆதி 12:3) அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன்தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப்பார்த்துக்கொள்வார் என்றான்; அப்புறம்இருவரும் கூடிப்போய் (ஆதி 22:3)
மெசியா தாவீதின் குமாரனாக பிறப்பார்
என்றும் பழைய ஏற்பாட்டுக் காலத்தில்
முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது.
உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடேநித்திரை பண்ணும்போது, நான் உனக்குப்பின்புஉன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியைஎழும்பப்பண்ணி அவன் ராஜ்யத்தைநிலைப்படுத்துவேன் (2சாமு 712). என்னால் தெரிந்து கொள்ளப்பட்டவனோடேஉடன்படிக்கைபண்ணின, என் தாசனாகியதாவீதை நோக்கி (சங் 89:3).
மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் இயேசு
கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று
அழைக்கப்படுகிறார். தங்களுக்கு ஒரு மேசியா
வருவார் என்றும், அவர் தாவீதின் குமாரனாக
இருப்பார் என்றும் யூதர்கள் நம்பினார்கள்.
கிறிஸ்துவுக்கு உரியவர்கள் கிறிஸ்துவைதாவீதின் குமாரன் என்று அழைப்பார்கள்.மத் 15:22; 20:31; 2115).
தாவீதின் தோள்கள் மீது ராஜ்ஜியபாரம் அமர்ந்திருக்கும். அந்த தாவீதின் குமாரன் என்று இயேசு கிறிஸ்து அழைக்கப்படுகிறார். ஆபிரகாமை பற்றி குறிப்படும்போது அவர் பலதேசங்களுக்கு பிதாவாக இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து அப்படிப்பட்ட
வாக்குத்தத்தத்திற்கு உரியவராக ஆபிரகாமின்
குமாரன் என்று அழைக்கப்படுகிறார்
ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின்
குமாரனான இயேசு கிறிஸ்து
என்னும் வாக்கியத்தில் தேவன் தம்முடைய
வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதில்
உண்மையுள்ளவர் என்னும் சத்தியம்
தெளிவாகிறது. தேவன் தாம் அறிவித்த
ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற்றுவதில்
உண்மையுள்ளவராக இருக்கிறார்.
வாக்குத்தத்தம் நிறைவேறுவதில் காலதாமதம்
ஏற்படலாம். தேவனுடைய வாக்குத்தத்தமான
கிருபைகளை பெற்றுக்கொள்வதில் காலதாமதம்
உண்டாகலாம் காலதாமதம் ஏற்படும்போது நமது
பொறுமை சோதிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட
சூழ்நிலைகளில் நம்முடைய நீடிய பொறுமையை
நாம் உண்மையோடு காத்துக்கொள்ள வேண்டும்
ஆபிரகாமின் குமாரனாகவும், தாவீதின் குமாரனாகவும் இயேசு கிறிஸ்து பிறப்பார் என்று பல வருஷங்களுக்கு முன்பு வாக்குத்தத்தம்
பண்ண பட்ட போதிலும், ஆயிரக்கணக்கான
வருடங்களுக்கு பின்பு தான் இந்த
வாக்குத்தத்தம் நிறைவேறிற்று.
யூத ஜனங்கள் மேசியாவைப்பற்றிய
வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்கான
காலத்திற்காக காத்து கொண்டிருந்தார்கள்.
தாவீதின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரவேல்
தேசம் பலம்மிக்கதாக விளங்கிற்று. செல்வ
செழிப்போடு இருந்தது. இஸ்ரவேலின்
வரலாற்றில் இந்த செழிப்பு மங்கி, அவர்கள்
அந்நிய தேசத்தின் சிறையிருப்பிற்கு
உட்பட்டவர்கள். தங்களை இரட்சிப்பதற்கு
மேசியா வருவார் என்று எதிர் பார்த்தார்கள்.
ஆனால் அவர்கள் எதிர்பார்த்த பிரகாரம்
மேசியா உடனே வந்து விடவில்லை.
யூதர்கள் ரோமப்பேரரசின் ஆளுகைக்கு
உட்படுத்தப்பட்டார்கள் பல துன்பங்களை
அனுபவித்தார்கள் இதனால் யூதர்கள்
மத்தியில் மேசியா வருவார் என்னும் நம்பிக்கையும் குறைந்துபோயிற்று.
வாக்குத்தத்தம் நிறைவேறுவதில் காலதாமதம்
ஏற்பட்டதினால் யூதர்கள் சோர்ந்துபோகார்கள்.
பலர் மேசியாவைப்பற்றிய
வாக்குத்தத்தத்தை மறந்து விட்டார்கள்.
வாக்குத்தத்தத்தின் மீது யூதர்களுக்கு நம்பிக்கை
குறைந்து போயிருந்த அந்தக்
காலத்தில் தான் இயேசு கிறிஸ்து பிறந்தார்.
ஆபிரகாம் வித்தாகிய யூத ஜனங்களை
ரோமப்பேரரசின் ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டு
துன்பங்களை அனுபவித்தார்கள். தாவீதின்
சிங்காசனத்தில் வீற்றிருக்ககூடிய ராஜாக்கள்
யாரும் ரோமப்பேரரசில் எழும்பிவரவில்லை .
தாவீதின் குடும்பத்தினர் இருந்த இடம்
தெரியாமல் வரலாற்றில் மறைந்து போய் விட்டார்கள். தாழ்த்தப்பட்ட
தரையிலிருந்து இயேசு கிறிஸ்து துளிர்த்து
எழும்பினார்.
இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில்
ஆபிரகாமின் காலத்திலிருந்து இயேசு
கிறிஸ்துவின் காலம் வரைக்கும் 42
தலைமுறைகளைப்பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆபிரகாமின்
சந்ததியைப்பற்றிய விவரம் நாளாகமம்
புஸ்தகத்தின் முதல் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வம்ச வரலாற்றில்
ஒருசில ஆவிக்குரிய சத்தியங்கள் உள்ளன.
இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களின்
அட்டவணையில் இடம்பெற்றிருக்கும்
ஒருசிலருக்கு சகோதரர்கள் இருந்தார்கள்.
குடும்பத்தின் மூத்த சகோதரர்கள் இயேசு
கிறிஸ்துவின் முன்னோர்கள்
இடம்பெறவில்லை அதற்குப் பதிலாக,
பல சம்பவங்களில் இளைய சகோதரர்களே
இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களாக
கூறப்பட்டிருக்கிறார்கள். ஆபிரகாம், யாக்கோபு,
யூதா, தாவீது, நாதான், ரேசா ஆகியோர்
குடும்பத்தின் இளைய சகோதரர்கள் ஆவார்கள்.
யூதர்களுடைய பாரம்பரிய முறைமையின்
பிரகாரமாக இயேசு கிறிஸ்து இந்த பூமியில்
ஆதரிக்கவில்லை. இயேசு கிறிஸ்துவின்
முன்னோர்கள் எல்லோருமே அவர்களுடைய
குடும்பங்களில் மூத்த சகோதரர்கள் அல்ல.
இயேசு கிறிஸ்து யூதர்களுடைய
தீர்மானத்தின் பிரகாரமாக இந்த பூமியில்
அவதரிக்காமல் தேவனுடைய தெய்வீக
சித்தத்தின் பிரகாசமாகவும், அவருடைய
அநாதிதீர்மானத்தின் பிரகாரமாகவும் பிறந்தார்.
கர்த்தர் தாழ்மையில் உள்ளவர்களை
உயர்த்தக்கூடியவர். கீழாக இருப்பவர்களை
மேலாக ஆக்கக்கூடியவர். ஒன்றுமில்லாத
காரியங்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்க கூடியவர். ஆகாது என்று
தள்ளப்பட்ட கல்லை மூலைக்கு தலைக்கல்லாக
ஆக்கி அதற்கு முக்கியத்துவம் தரக்கூடியவர்.