மத்தேயு 1:4-5 இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இடம் பிடித்த 4 பெண்கள்

மத்தேயு 1:4-5 இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இடம் பிடித்த 4 பெண்கள்
போதகர். சார்லஸ் சதீஷ் குமார்
WMM ICA Veppkuppam, Vellore.

ஆராம் அம்மினதாபைப் பெற்றான்,அம்மினதாப் நகசோனைப் பெற்றான்,நகசோன் சல்மோனைப் பெற்றான். மத்தேயு 1:4சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான், போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்,ஓபேத் ஈசாயை பெற்றான். மத்தேயு 1:5

இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில்
நான்கு ஸ்திரீகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன
அவர்களில் இருவர் இஸ்ரவேல் தேசத்தை
சேர்ந்தவர்கள் அல்ல. ராகாப் ஒரு கா
னானிய ஸ்திரீ. இவள் ஒரு வேசி. ரூத் ஒரு மோவாபிய ஸ்திரி. இவர்கள் இருவரும் இஸ்ரவேலின் காணியாட்சிக்கு புறம்பானவர்களாக இருந்தார்கள். ஆயினும் இவர்களுடைய பெயர்களும்
இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில்
இடம்பெற்றுள்ளன. இயேசுகிறிஸ்துவிற்குள்
யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமில்லை அந்நியர்களும் பரதேசிகளும்
இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகளாகுமாறு
அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.

இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில்
கூறப்பட்டுள்ள நான்கு ஸ்திரீகளில் இரண்டு
ஸ்திரீகள் வேசித்தனம் பண்ணினார்கள்.
தாமாரும் பத்சேபாளும் விபசாரம்
செய்தவர்கள். இயேசுகிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இவர்களுடைய பெயரும்
இடம்பெற்றிருப்பதினால் இயேசுகிறிஸ்துவின்
தலைமுறையின்மீது ஒரு களங்கம் உண்டாயிற்று.
தேவன் தம்முடைய குமாரனாகிய
இயேசு கிறிஸ்துவை பாவ மாம்சத்தில் சாயலாக
அனுப்பினார். அவரை பாவத்தை போக்கும்
பலியாக அனுப்பி மாம்சத்திலே பாவத்தை
ஆக்கினைக்குள்ளாக தீர்த்தார் (ரோம 8:3).
ஒருவன் எவ்வளவு பெரிய பாவியாக
இருந்தாலும் அவன் தான் செய்த
பாவங்களுக்காக மனம் வருந்தி, மனந்திருந்தி,
இயேசு கிறிஸ்துவினிடத்தில் வரும்போது அவர்
அவனை அன்போடு ஏற்றுக்கொள்கிறார்.
இதற்கு இயேசுவின் வம்ச வரலாறு
அட்டவணையில் ராகாப் பத்சேபாள்
இடம்பெற்றிருப்பது ஒரு வரலாற்று சான்றாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.