மீதியான் மற்றும் மீதியானியர் பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க……..

மீதியான் மற்றும் மீதியானியர் பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க……..

போதகர். M.சார்லஸ் சதீஷ் குமார்
WMM ICA, Veppamkuppam, Vellore.

மீதியான்

"மீதியான்" என்னும் எபிரெய பெயருக்கு -- "சண்டை" (எபிரெயம் Midyan - 4080)
"strife" என்று பொருள்.

பழைய ஏற்பாட்டில் "மீதியான்" என்னும் பெயரில் ஒரு நபரும் ஓர் இடமும் உள்ளன.
அவற்றின் விவரம் வருமாறு:


1. ஆபிரகாம், கேத்தூராள் ஆகியோரின் குமாரன் (ஆதி 25:1-6). மீதியானுக்கு நான்கு
குமாரர்கள் இருந்தார்கள் (1நாள் 1:33). வேதாகமத்தில் மீதியானைப் பற்றி வேறு விவரம்
எதுவும் கூறப்படவில்லை.

ஆபிரகாமின் இரண்டாம் குடும்பத்தில் மீதியான் முக்கியமானவன். மீதியானும்
அவனுடைய குடும்பத்தாரும் வேதாகமத்தில் 67 இடங்களில் கூறப்பட்டிருக்கிறார்கள். ஏசா
மீதியானை வென்றான். (ஆதி 36:35), மோசே மீதியானுடைய தேசத்திற்குத் தப்பி
ஓடிப்போய், அங்கு மீதியானிய ஸ்திரீ ஒருத்தியை திருமணம் செய்து கொண்டான்.
(யாத் 2.15-16; யாத் 31; யாத் 4:19; யாத் 18:1), மீதியானியர் இஸ்ரவேலுக்கு ஒரு
கண்ணியாக இருந்தார்கள். (எண் 251-15) அவர்களின் யுத்தம் பண்ணுமாறு தேவன்
இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்டார். (எண் 25.16-18; எண் 31: 1-20), பல நூற்றாண்டுகளாக,
இஸ்ரவேலர்கள் மீதியானியரோடு அடிக்கடி யுத்தம் பண்ணினார்கள். (யோசு 13:21;
நியா 6:1-2; நியா 7.8-25; நியா நியா 9:17), கிதியோன் மீதியானியரை
முறியடித்தான். மீதியானியருடைய வீழ்ச்சி, “மீதியானியரின் நாளில்" "the day of Median
என்று அழைக்கப்படுகிறது. (ஏசா 9:4; ஏசா 10:26; சங் 83:9).

ஆபிரகாமின் குமாரன். கெத்தூராளுக்குப் பிறந்தவன். (ஆதி 25:2-4). மோசேயின்
காலத்தில் மீதியானியர் இஸ்ரவேல் புத்திரருக்குப் பலத்த சத்துருக்களாக இருந்தார்கள்.
(எண் 22:4-7; எண் 25:15-18; எண் 31:3-12; யோசு 13:21) மோசே மீதியானிய ஸ்திரீயை
விவாகம் பண்ணியிருந்தார். (யாத் 2:15-31; யாத் 4.19; யாத் 181-27). இவர்களுக்கு
இடையே காணப் பட்ட விரோதத்திற்கு காரணம் கூறப்படவில்லை. எண் 31 ஆவது அதிகாரத்தின்படி மீதியானியருடைய தேசம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. ஆனால்
அவர்கள் திரும்பவும் பலுகிப் பெருகினார்கள்
திரளான ஜாதிகளுக்குத் தலைவர்களானார்கள். கிதியோனின் நாட்களில் மீதியானியர் இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக எழும்பி வந்தார்கள். (நியா 6:1-8:28; நியா 9.17; ஏசா 9:4; ஏசா 10.26)

2. மீதியானின் சந்ததியார் சுதந்தரித்த தேசம். இது யோர்தான் நதி க்கும்
சவக்கடலுக்கும் கிழக்கே அமைந்துள்ளது.


மீதியானியர்

"மீதியானியர்" என்னும் எபிரெய பெயருக்கு -
"சண்டை " "strife" என்று பொருள்
(- Midyaniy - 4084)

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இஸ்ரவேல் புத்திரருக்கு சத்துருவாக இருந்தவர்கள்.
இவர்கள் மீதியானின் சந்ததியில் வந்தவர்கள். மீதியான் ஆபிரகாமின் குமாரன்
ஆகையினால் இவர்கள் இஸ்ரவேல் புத்திரரோடு தூரத்து உறவுக்காரர்கள் எபிரெய
ஜனங்களோடு இவர்கள் சிநேகமாக இருப்பதற்கு பதிலாக சத்துருவாக இருந்தார்கள்.
ஆபிரகாம் மீதியானின் குமாரர்களை கிழக்கு தேசத்திற்கு அனுப்பினார் (ஆதி 25.6)
இதன் பின்பு பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இவர்கள் கிழக்கத்திப்பத்திரர் என
அழைக்கப்பட்டார்கள் (நியா 6:3,33)

மீதியானியர்கள் இஸ்மவேலரோடு நெருக்கமாக இருந்தார்கள் (ஆதி 37:28; நியா
8.24). மீதியானியர்கள் யோசேப்பை அவனுடைய சகோதரரிடமிருந்து விலைக்கு வாங்கி
அவனை எகிப்து தேசத்தில் மறுபடியும் விற்றுப்போட்டார்கள் (ஆதி 37:25-36), மோசே
மீதியானிய ஸ்திரீயை விவாகம் பண்ணினார் (யாத் 2:15), சிப்போராளும், எத்திரோவும்
மீதியானியர்கள் (யாத் 2.21; 31). இவர்களுடைய காலத்திற்கு பின்பு இஸ்ரவேலரும்
மீதியானியரும் சிநேகமாக இல்லை.

மோசேயின் காலத்திற்கு பின்பு மீதியானியர்கள் இஸ்ரவேலருக்கு தொடர்ந்து
சத்துருவாக இருந்தார்கள். இவர்கள் மோவாபியரோடு சேர்ந்து கொண்டு, இஸ்ரவேலை
சபிப்பதற்காக, பிலேயாமை கூலிக்கு அமர்த்தினார்கள் (எண் 22:47). இஸ்ரவேல் புத்திரர் கானானை சுதந்தரிப்பதற்கு முன்பாக
மோவாப் மீதியானியர்கள்
விக்கிரகாராதனையையும், வேசித்தனத்தையும் செய்து வந்தார்கள். இவர்கள் மூலமாக
இஸ்ரவேல் புத்திரரில் சிலரும் அவர்களோடு சேர்ந்து வேசித்தனம் பண்ணினார்கள்.
இதனால் தேவனுடைய ஜனங்கள் மீது கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு வந்தது எண் 25:1-9)
மீதியானியர் வேறுபிரிக்கப்பட்டு அழிக்கப்பட்டார்கள் (எண் 25:16-18).

நியாயாதிபதிகளின் காலத்தில், கிமு 1100-ஆவது வருஷத்தில் மீதியானியர் இஸ்ரவேலருக்கு
பிரச்சனையாக இருந்தார்கள் பாலஸ்தீன தேசத்தின் மீது யுத்தம்பண்ணினார்கள். இஸ்ரவேல் புத்திரர் மலைப்பிரதேசத்திற்கு துரத்தப்பட்டார்கள். அவர்களுடைய கால்நடைகளும் தானியங்களும் கொள்ளையிடப்பட்டன (நியா 6.1-6).

மீதியானியருடைய கரங்களிலிருந்து இஸ்ரவேலரை விடுவிப்பதற்காக தேவன்
கிதியோனை எழுப்பினார். கிதியோனும் எப்பிராயீமரும் மீதியானியரை முறியடித்தார்கள்
(நியா 7:24-25). அவர்களை யோர்தான் நதிக்கு அப்பால் துரத்தினார்கள் (நியா 8.10-12)
கிதியோனுடைய வெற்றி பழைய ஏற்பாட்டுக்காலத்தின் பிற்பகுதியிலும் விவரித்துக்
கூறப்பட்டிருக்கிறது (சங் 83:9,11; ஏசா 9:4; 10:26)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.