அகபு (Agabus)
"அகபு" என்னும் பெயர் கிரேக்க மொழியில்
- Agabos - 13 என்று அழைக்கப்படுகிறது.
அகபு எருசலேமில் வாசம் பண்ணிய ஒரு கிறிஸ்தவ தீர்க்கதரிசி. பவுல், பர்னபாவும்
சீரியாவிலுள்ள அந்தியோக்கியாவில் இருந்த போது அகபு அவர்களைச் சந்திப்பதற்காக
அங்கு சென்றான். "உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும்" என்று
ஆவியானவராலே
அறிவித்தான். அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று
(அப் 11:28). பின்பு பவுலும், அவருடைய உடன் ஊழியர் செசரியா பட்டணத்தில்
இருந்தார்கள். அங்கு தீர்க்கதரிசியாகிய அகபு யூதேயாவிலிருந்து வந்தான். எருசலேமிலுள்ள
யூதர் பவுலை புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுக்கும் விதத்தை அகபு தீர்க்கதரிசனமாக அறிவித்தான். அவன் பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும்
கட்டிக் கொண்டு: இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்
கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார்" என்றான்
(அப் 21:10-11).