அகப்படுதல் - FOUND
அகப்படுதல் என்பதற்கு "பெற்றுக் கொள்ளுதல், காணப்படுதல், சிக்கிகொள்ளுதல்,
கிடைக்கப்பெறுதல்" என்றும் பொருள் கூரலாம்.
"நோவாவிற்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது" (ஆதி 6:8).
இதுபோன்று கர்த்தருடைய கிருபையைப் பெற்றுக் கொண்டவர்களின் விவரம் பல
வசனங்களில் கூறப்பட்டிருக்கிறது (ஆதி 18:3; 19.19; 19:19; 30:14; 33:10;
39:4: 47:29;50:4- யாத் 33:12-17; 34:9; எண் 11:11,15; 32:5; நியா 6:17; ரூத் 2:10; 1சாமு 20:3,29
27:5; 2 சாமு 14:22; எஸ்தர் 5:8; 7:3; 8:5)
ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி அங்கே சுரக்கும் நீரூற்றைக்
கண்டார்கள் (ஆதி 26:19,32)
பழைய ஏற்பாட்டில் "அகப்படுதல்" என்பதற்கான எபிரெய வார்த்தைகள் - bo - 935, khaw-mal -2550, - yaw-koshe' - 3369, - yaw-rat' - 3399, maw-tsaw 4692, naw-fal 5307, - paw-khakh' - 6351, -raw-aw' -7200, -shek-akh'-7912 என்பனவாகும்.
ஒருசிலர் அக்கிரமத்திலும் (சாமு 16:8), இடுக்கணிலும் (2சாமு 2434)
சிறையிருப்பிலும் (2 நாள் 29:9) இக்கட்டிலும் (நெகே 9:37) வலையிலும் (சங் 66:11, 141:10,
பிர 9.12), ஆபத்திலும் (பிர 9121 அகப்பட்டுக் கொள்வார்கள். வேறுசிலர் கண்ணியிலும்
(ஏசா 2418), கெபிகளிலும் (ஏசா 42:22), படுகுழியிலும் (புல 4:20) வருத்தத்திலும்
(ஆப 3:7) அகப்பட்டுக்கொள்வார்கள்.
நாம் இருளில் அகப்பட்டுக்கொள்ளக் கூடாது (யோவா 12:35)
ஊழியக்காரர்களிடம் குற்றம் காணப்படக் கூடாது. குற்றம் சாட்டப்படாதவர்கள் உதவிக்காரராக ஊழியம் செய்யலாம் என்று பவுல் கூறுகிறார் (1 தீமோ 3:10), கிருபையின் காலத்தில் நமது இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும்
காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏசா கண்ணீர் விட்டு கவலையோடே தேடியும் மனமாறுதலைக் காணாமல் போனான் (எபி 12171
இயேசு கிறிஸ்து கிருபை நிறைந்தவர். அன்புள்ளவர். அவருடைய வாயில்
கிருபையான வார்த்தைகளே காணப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் வாயிலே வஞ்சனை
காணப்படவில்லை (1பேதுரு 2:221).
வெளிப்படுத்தின விசேஷத்தில் ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்ட ஒரு
புஸ்தகத்தைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும்,
அதைப் பார்க்கவும் ஒருவனும் பாத்திரவானாகக் காணப்படவில்லை (வெளி 5:4)
நம்முடைய பெயர் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஜீவபுஸ்தகத்தில்
எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்படுவான்
(வெளி 2015)
"அகப்படுதல்" என்பதற்கான கிரேக்க வார்த்தைகள் - agreuoo-64,
empiptoo - 1706, katadynasteuoo - 2616,
katalembanoo - 2638. pagideuoo - 3802,
peripiptoo - 4045, Synarpaz00 - 4884
என்பனவாகும்.