மீதியான் பிரபு ஓரேப்
பெத்பரா கன்மலை ஓரேப்
கர்த்தருடைய பர்வதமாகிய ஓரேப்
- சார்லஸ் MSK
ஒரேப் - ORE, OREB
“ஓரேப்" என்னும் எபிரெயர் பெயருக்கு (எபிரெய குறியீடு எண்- 6157) “வண்டு " "a
Swarm; the probable meaning from 'mixture' and 'incessant or
involved motion" என்று பொருள்.
பழைய ஏற்பாட்டில் "ஒரேப் " என்னும் பெயரில் ஒரு நபர் ஓர் இடம்
உள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:
1.மீதியானியருடைய இரண்டு பிரபுக்களில் ஒருவர் ஓரேப். கிதியோன் அவர்களைத்
தோற்கடித்தார். யோர்தான் நதிக்கு அருகில் எப்பிராயீமியர் இவர்களை சிரச்சேதம்
பண்ணினார்கள். (நியா 7:25: 8:3; சங் 83:1).
2. பெத்பாராவிற்கு அருகில் உள்ள கற்பாறைக்கு ஓரேப் என்று பெயர். இது யோர்தான் நதிக் அருகில்
உள்ளது. இங்கு மீதியானியருடைய பிரபுவான ஒரேப் கொலை பண்ணப்பட்டான்
(நியா 7:25; ஏசா 10:26).
ஒரேப் - MOUNT HOREB (கர்த்தருடைய பர்வதம்)
| “ஓரேப்" என்னும் எபிரெயர் பெயருக்கு (எபிரெய குறியீடு எண்- 2722) “வனாந்தரம்"
"desert" என்று பொருள்.
தேவனுடைய பர்வதம் (யாத் 18.5). இது சீனாய் மலையின் மறுபெயர். இங்கு
எரிகிற முட்செடியில் இருந்து தேவன் மோசேயோடு பேசினார் (யாத் 3:13. இஸ்ரவேல்
புத்திரருக்கு தேவன் இங்கு மோசேயின் மூலம் நியாயப்பிரமாணத்தை
கொடுத்தார்.
ஓரேப் என்பது ஒரு சிறிய கன்மலை. 15 அடி நீளமும், 10 அடி அகலமும், 12 அடி
உயரம் உடையது. மோசே அந்தக் கன்மலையை அடித்தான். இந்தக்
கன் மலையிலிருந்து இலட்சக்கணக்கான ஜனங்களுக்கு தேவையான தண்ணீர்
புறப்பட்டு வந்தது. பின்பு இந்த தண்ணீர் நின்று போயிற்று. மறுபடியும் அற்புதம்
செய்து கண் மலையிலிருந்து தண்ணீர் வர வேண்டியதாயிற்று. (எண் 20:8-11).
ஓரேப் என்பது நாம் தேவனிடத்தில் பேசும் இடம் அல்ல தேவன் நம்மோடு பேசும் இடம் ஆகும். நாம் தேவனிடத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் தேவன் நம்மோடு பேசுவதற்கு அவர் நியமித்த இடம் ஓரேப். ஓரேப் என்பது கர்த்தர் பேசும் இடம், கர்த்தருடைய சத்தத்தை உணரும் இடம், கர்த்தர் தம்முடைய திட்டத்தை, சித்தத்தை, செயலை வெளிப்படுத்தும் இடம் ஆகும்.
ஓரேப் தேவனுடைய சித்தத்தை அறியும் இடம் (யாத் 3:10)
தேவன் மோசேயை குறித்து பெரிய திட்டம் வைத்திருந்தார். எனவேதான் மரிக்க வேண்டிய அவனை குழந்தைப் பருவத்திலிருந்து காப்பாற்றி அவனை அறிவிலும் கல்வியிலும் ஞானத்திலும் பேச்சிலும் செயலிலும் வல்லவன் ஆக்கினார் (அப் 7:22). இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனை குறித்தும் கர்த்தருக்கு என்று திட்டங்களும் விருப்பங்களும் இருக்கின்றன. நாம் எப்படி வாழவேண்டும் எங்கு இருக்க வேண்டும் எப்படி பேச வேண்டும் எப்படி செயல்பட வேண்டும் எதை செய்ய வேண்டும் எங்கு இருக்க வேண்டும் போன்ற அனைத்து பற்றின திட்டங்களும் கர்த்தரிடத்தில் உண்டு. ஆனால் நாம் எவரும் இதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதும் இல்லை ஆய்வு செய்வதும் இல்லை.
மோசே இதற்கு விதிவிலக்கு அல்ல அவன் தான் செய்து கொண்டிருந்த ஆடு மேய்க்கும் வேலை அதுவே போதும் என்ற மனநிலையில் வாழ்ந்து கொண்டு வந்தான். அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று விரும்பினான் அதற்கென்று அவன் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன அதற்குப் பின் அவன் இஸ்ரவேல் ஜனங்களை விட்டு தனிமையான ஒரு இடத்திற்கு வந்து விடுகிறான். இப்பொழுது மோசே தான் என்ன செய்ய வேண்டும் எங்கு இருக்க வேண்டும் போன்ற கேள்விகளுக்கு பதிலை தேவனிடத்தில் அல்ல அவனாக சிந்தித்து செயல்பட்டு வருகிறார்.
இப்படி வாழ்ந்து கொண்டு வந்த மோசே ஒரு நாள் தேவனுடைய பர்வதம் ஆகிய ஓரேபிற்க்கு வருகிறார். எப்பொழுது மோசே ஒரேப் என்கிற அந்த இடத்திற்கு வந்தானோ அப்பொழுது அவனுடைய வாழ்க்கை முறை மாற்றப்பட்டது செயல்திட்டங்கள் மாற்றப்பட்டது. அதுவரைக்கும் சுய சித்தத்தின்படி வாழ்ந்து கொண்டு வந்த அவனுக்கு தேவ சத்தம் கேட்கப்பட்டு தேவ சித்தம் செய்ய அர்ப்பணிக்கிறான்.
நாம் செய்து கொண்டிருக்கிற வேலை நாம் நின்று கொண்டிருக்கிற இடம் நம்முடைய அனைத்து செயல்பாடுகள் இவை யாவும் நம்முடைய சுய சித்தத்தின்படி நடைபெறுகிறதா அல்லது தேவனுடைய திட்டத்தின்படி தான் நடக்கிறதா இந்த கேள்விக்கு ஒரு மனிதன் பதில் காண வேண்டும் ஆனால் அவன் ஓரேப்பிற்க்கு வரவேண்டும் காரணம் அதற்கு பதில் தரும் இடம் தான் ஓரேப் ஆகும்.
ஓரேப் தாகம் தீர்க்கப்படும் இடம் (எண் 20:8-11)
தாகம் என்பது நம்முடைய தேவையை குறிக்கிறது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை இருக்கிறது அதாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தாகம் அல்லது ஏக்கம் இருக்கிறது.
அது பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றியதாகவோ திருமண காரியங்கள் பற்றியதாகவோ குழந்தை பாக்கியம் பற்றியதாகவோ வேலையைப் பற்றி யதாகவோ இருக்கலாம். உங்கள் தேவை எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் கிடைக்கும் இடம் தான் ஓரேப் ஆகும்.
ஓரேப் தேவனுடைய திட்டத்தை அறிந்து கொள்ளும் இடம் (1இரா 19:8-18)
எலியா தன்னுடைய வாழ்க்கை முடிந்தன தனக்கு எதிர்காலம் இல்லை தான் எதிரிகளால் சாகப்போகிறேன் என்கிற சிந்தையோடு வாழ்ந்திருந்தான். ஆனால் தேவனுடைய திட்டம் அது அல்ல எலியாவை பகைக்கிறவர்களை வேரோடு அழிக்க வேண்டும் என்பது தேவனுடைய திட்டம். தேவனுடைய இந்த திட்டத்தை அவன் அறிந்து கொள்ளாததினால் தான்தான் தம்முடைய எதிரிகளின் கையில் சாகப் போகிறேன் என்று நினைத்துக் கொள்கிறான். எலியா எப்பொழுது ஓரேபிற்க்கு வந்தானோ அப்பொழுதே தேவ சத்தம் கேட்கப்பட்டு தேவன் செய்ய நினைத்த அனைத்து திட்டங்களையும் அறிந்து கொண்டான். அந்த ஓரேப் அவனுக்கு பயம் கலக்கம் நீக்கின இடம் மட்டுமல்ல தேவனுடைய முழுமையான திட்டத்தையும் அறிந்து கொள்ள உதவின இடம். நாமும் நம்முடைய வாழ்க்கையில் தேவன் நம்மை கொண்டு என்ன செய்யப் போகிறார் நம்மை குறித்த தேவ திட்டம் என்ன இவைகளை நாம் அறிந்து கொள்வதற்கு நாம் வர வேண்டிய ஒரு இடம் தான் ஓரேப் ஆகும்.
ஓரேப் என்றால் என்ன?
ஓரேப் என்றால் வனாந்திரம் என்று அர்த்தம் வனாந்திரம் என்பது தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இடம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் அவர் வனாந்தரத்தில் தனித்திருந்தார் இயேசு தன்னுடைய வாழ்க்கையில் சுயமாய் அவர் எதையும் செய்தது இல்லை அவருடைய ஒவ்வொரு செயல்களும் பிதாவின் திட்டத்தின்படி சித்தத்தின்படி இருந்தது பிதாவின் திட்டத்தையும் சித்தத்தையும் அறிந்து கொள்வதற்கு தான் அவர் வனாந்திரமான இடத்திலே அதிகமாய் தனித்திருந்தார் தேவனுக்கும் நமக்கும் இருக்கக்கூடிய தனிப்பட்ட உறவு தான் ஒரேப் என்று நான் சொல்லுகிறேன். நம்முடைய வாழ்க்கையில் நாம் தேவனோடு தனித்திருந்து உறவு கொள்ள நாம் தெரிந்து இருக்கும் இடம் தான் கர்த்தருடைய பர்வதம் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு நாளும் இந்த கர்த்தருடைய பருவத்திற்கு வந்து போகும் அனுபவம் இருக்கும் ஆனால் அவனுடைய வாழ்க்கையில் தேவனுடைய திட்டத்தை அறிந்து கொள்ள முடியும் அவனுடைய தாகம் தீர்க்கப்படும் அவனை குறித்த திட்டம் அவனுக்கு அறிவிக்கப்படும். நாம் நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருடைய பர்வதத்துக்கு எவ்வளவு நேரம் செல்லுகிறோம் தங்கி இருக்கிறோம் கர்த்தருடைய சத்தத்தை கேட்கிறோம் இவைகளையெல்லாம் சிந்தித்து நம்மை நாமே நிதானித்து தேவ பருவத்திற்கு முன்னேறி செல்ல தீர்மானம் எடுப்போம் தேவன் விரும்பின வாழ்க்கையை வாழ்ந்து தேவ நாமத்தை மகிமைப்படுத்துவோம்.