அப்போஸ்தலர் 4:1-7
1 அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து, 2 அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோரிலிருந்து உயர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு, 3 அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள். 4 வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. 5 மறுநாளிலே ஜனங்களுடைய அதிகாரிகளும் மூப்பரும் வேதபாரகரும், 6 பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி, 7 அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
1 அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து, 2 அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோரிலிருந்து உயர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு, 3 அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள். 4 வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. 5 மறுநாளிலே ஜனங்களுடைய அதிகாரிகளும் மூப்பரும் வேதபாரகரும், 6 பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி, 7 அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
இறைவனின் ஆசீர்வாதம் எங்கெல்லாம் தோன்றுகிறதோ அங்கு நரகத்தின் வல்லமையும் வெளிப்படுகிறது. பேதுரு மற்றும் யோவான் மூலமாக இயேசு சப்பாணியை சுகமாக்கினார். பெருங்கூட்ட மக்கள் நற்செய்தியைக் கேட்க திரண்டு வந்தார்கள். ஆலய காவல்காரர்கள் தலையிட்டு குறுக்கீடு செய்தார்கள். ஏனெனில் அந்த அற்புதம் சந்தேகத்துக்கிடமின்றி வெளிப்படையாக நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது. மக்கள் பெருந்திரளாய் கூடியது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் காணப்பட்டது. மதத்தலைவர்கள் ஆசாரியர்களுடன்
கைகோர்த்து நின்றார்கள். அவர்கள் ஆலயத்தில் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பை உடையவர்களாக இருந்தார்கள். கல்வியில் சிறந்து விளங்கிய சதுசேயர்கள், மக்கள் கூட்டத்தை வெகுவிரைவில், அனுமதியின்றி பெருந்திரள் கூட்டத்திற்கு பிரசங்கித்த குற்றமற்ற மீனவர்கள் மீது எதிராக திரும்பும்படி தூண்டினார்கள். ஏனெனில் பொது இடத்தில் பேசுவதற்குரிய தகுதி வேத நிபுணர்கள் மற்றும் தத்துவஞானிகளுக்கு மட்டுமே உரியதாகக் காணப்பட்டது. அவர்களது நம்பிக்கைக்கு எதிராக கலிலேயாவில் இருந்து வந்த மனிதர்கள் இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று கூறியது, அவர்களுக்கு எரிச்சலூட்டியது. அவர்கள் மனதை துன்புறுத்தியது. ஒளியூட்டப்பட்ட கல்விமான்கள் உயிர்த்தெழுதலின் கொள்கையை மறுதலித்தார்கள். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் குறித்து சாட்சி கூறியது தான் அப்போஸ்தலர்கள் சிறைபிடிக்கப்படுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது. அவர்கள் ஆலய காவல்காரர்களால் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். குளிர்மிகுந்த அந்த இரவில் அவர்கள் சப்பாணியை சுகமாக்கிய இயேசுவின் வெற்றியை நினைத்து, விண்ணப்பம் செய்து, துதிகளை ஏறெடுத்து, நன்றி செலுத்தினார்கள். ஆலயத்தில் பெருந்திரளான மக்களுக்கு இயேசுவை குறித்து சொல்ல கிடைத்த வாய்ப்பிற்காக அவர்கள் ஆண்டவரை மகிமைப்படுத்தினார்கள். அடுத்த நாளிற்கான போராட்டத்திற்காக அவர்கள் விண்ணப்பத்துடன் தங்களை ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போஸ்தலர்களின் நம்பிக்கை மிகுந்த செய்தி பெருந்திரள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சிலுவையில் அறையப்பட்டு, மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த இயேசுவை அநேகர் நொறுக்கப்பட்ட இருதயத்துடன் விசுவாசித்தார்கள். அவர்கள் பாவமன்னிப்பை பெற்றுக்கொண்டார்கள். ஆதித்திருச்சபையில் இயேசுவை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை ஐயாயிரமாக உயர்ந்தது. அவர்கள் பேராலயத்தையோ அல்லது மாளிகை வீட்டையோ, பெற்றிருக்கவில்லை இருப்பினும் அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். ஆண்டவர் அவர்களுக்குள் தங்கியிருந்து, அவர்கள் மூலமாக செயல்பட்டார். இயேசுவின் நிமித்தமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தோருக்காக அவர்கள் விண்ணப்பம் பண்ணும்படி கூடினார்கள்.
மறுநாள் யூதர்களின் உயர்நீதிமன்றமான சனகெரிப் ஆலோசனைச் சங்கம் விசாரனைக்காக கூடினார்கள். இந்த ஆலோசனைச் சங்கத்தில் இயேசுவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்ட பிரதான ஆசாரியனின் குடும்ப உறுப்பினர்கள் இருந்தார்கள். இறைதூஷணம் செய்தார் என்று குற்றம் சுமத்தி அவருக்கு மரணதண்டனை கோரினார்கள். அவர்கள் மத்தியில் இறைவனின் குமாரன் கட்டப்பட்டவராக நின்றுகொண்டிருந்த போது இவ்வாறு கூறியிருந்தார். “இதுமுதல் மனுஷகுமாரன் பிதாவின் வல்லமை பொருந்திய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதைக் காண்பீர்கள்” அந்த இறைவனின் வல்லமை மெய்யாகவே இந்த இரண்டு அப்போஸ்தலர்கள் மூலமாக மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டு செயல்பட்டது.
பேதுருவும், யோவானும் தந்திரம் நிறைந்த காய்பா மற்றும் அதிகாரம் நிறைந்த அன்னா முன்பாக நின்று கொண்டிருந்தார்கள். இருப்பினும் இயேசு, தன்னை துன்புறுத்தியவர்களான நீதிபதிகளுக்கு மனந்திரும்பும்படியான வாய்ப்பை மீண்டும் ஒருமுறை வழங்கினார். இந்த கூடுகை அப்போஸ்தலர்களை விட அந்த நீதிபதிகளுக்கே மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவர்களுக்கு இப்போதும் மனந்திரும்பி, உயிருள்ள, வெற்றிசிறந்த ஆண்டவராகிய கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைக்கும்படியான வாய்ப்பு இருந்தது.
நீதிமன்றத்தை நிர்வாகித்த திறமைபடைத்த அவர்கள் ஆரம்பநிலைக் கேள்விகளுக்குள்ளே மெதுமெதுவாகச் செல்லவில்லை. அவர்கள் சீஷர்களிடம், உங்களை அனுப்பியது யார்?” என்று கேட்டார்கள். அவர்களில் செயல்படும் வல்லமை, அதிகாரத்தின் தன்மையைக் குறித்து வினவினார்கள். திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசுவிடம் கேட்ட அதே கேள்வி தான் இது. அவர்கள் இறைவனின் வல்லமையை உணர்ந்தார்கள். அற்புதங்களைக் கண்டார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளையோ அல்லது செயல்களையோ புரிந்துகொள்ளவில்லை. இறைவனின் வார்த்தையின் வல்லமையை அவர்கள் அடையாளம் காண முடியவில்லை. ஆண்டவரின் சத்தத்தைக் கேளாதபடி தங்களை கடினப்படுத்தினார்கள். அவர்களது இருதயம் பெருமை, கர்வத்தினால் நிறைந்திருந்தது. நியாயப்பிரமாண சட்டதிட்டங்களில் உறுதியாக காணப்பட்டார்கள். காதுகளால் கேட்டும், கண்களால் கண்டும் உணராதிருக்கிற காது மற்றும் கண்ணுடன் இருப்பது ஓர் துரதிர்ஷ்டவசமான காரியம்.
அப்போஸ்தலர் 4:8-11
8 அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே, 9 பிணியாளியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக் குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால், 10 உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது. 11 வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.
8 அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே, 9 பிணியாளியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக் குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால், 10 உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது. 11 வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.
இச் சம்பவம் நடப்பதற்கு சில வாரங்கள் முன்பு பேதுரு தனது உயிரைக் குறித்த பயம் நிமித்தமாக இயேசுவை மூன்று முறை மறுதலித்தார். ஆண்டவருடைய நாமத்தை ஒரு போதும் கேள்விப்படாதவனைப் போல அவர் சபித்தார். ஆனால் இப்போது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவராய் பேசினார். அவருக்குள் கிறிஸ்துவின் வாக்குத்தத்தம் நிறைவேறியது. “மத்தேயு 10:18-20 18.அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள். 19.அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.20.பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
யூதேயா தேசத்தின் அதிபதிகள் முன்பு கிறிஸ்துவின் சாட்சிகளாக இரண்டு அப்போஸ்தலர்கள் நின்றார்கள். அவர்கள் பழித்துப் பேசவில்லை. இறைவனின் மக்களை வழிநடத்தும்படி இறைவன் முன்பு பொறுப்புள்ளவர்கள் அவர்கள் என்பதை உணர்ந்து எல்லாத் தாழ்மையோடும் பேசினார்கள். இறைவன் அருளிய ஞானம், பொறுமை மற்றும் நற்குணங்களைப் பெற்றுள்ள மூப்பர்களை எண்ணி, அவர்களை கனப்படுத்தினார்கள்.
பரிசுத்த ஆவியானவர் அவர்களை இவ்விதம் சொல்லும்படி வழிநடத்தினார். அவர்களை சிறையிலடைத்தது முறையான காரியம் அல்ல. பிறவியிலே சப்பாணியாய் இருந்த மனிதனை சுகமாக்கிய நற்செயலுக்காக கேள்வி கேட்பது சரியானது அல்ல. அவர்களை இரவு முழுவதும் சிறையில் அடைத்து வைத்திருந்த செயலை ஓர் அநீதியான காரியமாக ஆவியானவர் கருதினார்.
இரண்டு சீஷர்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியின் நிமித்தம் அவர்கள் பெரிதாக ஒன்றும் பாதிக்கப்படவில்லை. சுகமானதைக் குறித்து அவர்கள் பேசவில்லை அல்லது அவர்களது வார்த்தைகளின் வல்லமை குறித்துப் பேசவில்லை. பேதுரு நேரடியாக குற்றச்சாட்டின் கருப்பொருளுக்குச் சென்றார். இயேசு கிறிஸ்துவில் இறைவன் அடைந்த வெற்றியை வெளிப்படையாக அறிவித்தார். அவர் பயம் அடைந்து பேசவில்லை அல்லது திறமையாகவும் பேசவில்லை. அந்த அதிகாரிகள் மற்றும் மக்களிடம், அந்த நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து எளிமையான மொழிநடையில் பேசினார். அந்த தேசத்தின் அதிகாரிகள் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்படியான அழைப்பை கொடுக்கும்படி ஆண்டவர் பேதுருவை தகுதிப்படுத்தியிருந்தார். கிறிஸ்து யார் என்பதைக் குறித்ததான காரியத்திற்கு எவ்வித சந்தேகத்திற்கும் அவர் இடம் கொடுக்கவில்லை. கிறிஸ்து சாதாரண மனிதனை போல வாழ்ந்து மறைந்து போகவில்லை. அந்த தேசத்தின் அதிகாரிகள் சிலுவையில் அறையும்படி ஒப்புக்கொடுத்திருந்த நாசரேத்தூரைச் சேர்ந்த வாலிபன் இயேசு தான் கிறிஸ்து என்பதை பேதுரு தெளிவுடன் அறிக்கையிட்டார். பேதுரு அவர்களை புகழ்ந்து பேசவில்லை. அவர்களை கொலைகாரர்கள் என்று அழைத்தார். இறைவனுடைய எதிரிகள் என்று அழைத்தார். அவர்கள் தனிப்பட்டவிதத்தில் கிறிஸ்துவை சிலுவையில் அறைந்திருந்தார்கள். என்ன ஓர் அருமையான காட்சி, இரண்டு மீனவர்கள் குற்றவாளிகளாக நிற்கவில்லை. அவர்கள் நீதிபதிகளாக செயல்பட்டு இறைவனுடைய குமாரனை கொலை செய்தவர்கள் மீது குற்றம் சாட்டினார்கள். கனத்திற்குரிய, நீதிமன்ற அதிகாரிகள் பழைய ஏற்பாட்டு வரலாற்றின் பொருளை தவறவிட்டு விட்டார்கள் என்பதை அவர்கள் தெளிவாக காண்பித்தார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கிறிஸ்துவிற்கு மரணத்தை கொண்டுவந்ததின் நிமித்தம் அவர்கள் இறைவனுக்கும் அவருடைய மக்களுக்கும் இடையில் இருந்த உடன்படிக்கையை உடைத்துப் போட்டார்கள். இறைவனின் நாமத்தில் பேதுரு, தங்களுடைய ஆண்டவருக்கு எதிரான அந்த அதிகாரிகளின் அக்கிரமத்திற்காக, குற்றச் சாட்டை முன் வைத்தார். அவர்கள் இயேசுவுக்கு எதிராக மட்டும் பாவம் செய்யவில்லை, மாறாக இறைவனுக்கு எதிராக பாவம் செய்தார்கள் என்பதை நிரூபித்தார்கள். அந்த இரண்டு மீனவர்களும் பிரதான ஆசாரியர்களை குற்றம் சுமத்தினார்கள். பரிசுத்தமானவர், அவர்களை உயர்த்தாமல் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த இயேசுவை உயர்த்திக் காண்பித்தார். அதுபோலவே அவர்களும் கிறிஸ்துவை மகிமைப்படுத்தினார்கள்.பழைய ஏற்பாட்டு மதரீதியான அமைப்புகளை இறைவன் அங்கீகரிப்பதில்லை என்பதை அவர்கள் வெளிப்படையாக தாக்கிப் பேசினார்கள். அவர்களை மேற்கொண்டார்கள். இப்போது இறைவன் தமது தாசனாகிய இயேசுவை பின்பற்றுபவர்களில் எளிய விசுவாசிகளுக்கு இப்போது அதிகாரத்தை தந்தார்.
இயேசு என்னும் நாமத்தில் மிகப்பெரிய இரகசியம் மறைந்துள்ளது. மரணத்துக்கேதுவான விஷத்தைவிட இந்த நாமத்திற்கு நரகம் நடுங்குகிறது. ஆனால் பரலோகம் இந்த நாமத்தை துதிப்பதினால் நிறைந்து காணப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் உலக இரட்சகரை மகிமைப்படுத்தினார். இறைவன் இயேசுவை தமது வலது பாரிசத்தில் அமரும்படி செய்தார். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் நித்தியமான இறைவனுடன் கிறிஸ்து ஆளுகை செய்கிறார். அவர் பூமியில் இருந்தபோது செய்த அற்புதங்களைவிட அதிகமானவைகளை இப்போது செய்கிறார். அவர் தமது ஆயிரமாயிரம் பணிவிடைக்காரர்கள் மூலமாக புதுப்பிக்கப்படுகிறார். வாழும் கிறிஸ்து செயல்படுபவர், உண்மையுள்ளவர், வெற்றி சிறந்தவர் ஆவார். அவரை விசுவாசிப்பவர்கள் அவரது வல்லமையில் பங்கெடுக்கிறார்கள்.
மூலைக்கல்லைக் குறித்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தை பேதுரு அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினார். இயேசுவே அஸ்திபாரமானவர், வல்லமைமிக்கவர், கிரீடம் போன்றவர், இறைவனுடைய ஆவிக்குரிய ஆலயத்தை கட்டுபவர். அந்த ஆலயம் இன்றும் உலகம் முழுவதிலுள்ள நாடுகளில் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும் மக்கள் மூலமாக கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. கிறிஸ்துவே ஆவிக்குரிய சரீரத்திற்கு தலையாக இருந்து அனைத்தையும் வழிநடத்துகிறார். அனைத்து உறுப்புகளையும் அவர் வழிநடத்துகிறார். கிறிஸ்துவின் ஆவிக்குரிய சரீரம் என்பது நம் காலத்து இரகசியம் ஆகும். அது சிலுவையில் அவருடைய வெற்றியின் விளைவு ஆகும். அருமையான சகோதரரே, நீங்கள் கட்டப்பட்டுள்ளீர்களா? கிறிஸ்துவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளீர்களா? அல்லது யூத அதிகாரிகளைப் போல இயேசுவை புறக்கணிக்கிறீர்களா? கிறிஸ்துவில் வெளிப்பட்ட இறைவனின் மிகச்சிறந்த, வலிமையான அன்பை புரிந்துகொண்டீர்களா?
அப்போஸ்தலர் 4:12-18
12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். 13 பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள். 14 சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது. 15 அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு: 16´இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.17 ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்தவேண்டுமென்று சொல்லிக்கொண்டு,18 அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். 13 பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள். 14 சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது. 15 அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு: 16´இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.17 ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்தவேண்டுமென்று சொல்லிக்கொண்டு,18 அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
பேதுரு கிறிஸ்துவின் நாமத்தினாலே சப்பாணியாய் இருந்த மனிதனை குணமாக்கினார். இந்த மனிதன் சுகமாக்கப்பட்டது மூலமாக மனிதனை முழுமையாக இரட்சிப்பது மற்றும் அவனுக்கு நித்திய வாழ்வை கொடுப்பது என்ற இயேசுவின் நோக்கம் நிறைவேறுகிறதை அப்போஸ்தலர்கள் அறிந்தார்கள். ஆண்டவர் விசுவாசிகளுக்கு உதவுவதில், குறைவுவைக்காமல், முழுமையாக இரட்சிக்கிறார். அவனது சரீரம், ஆவி ஆத்துமாவை இரட்சிக்கிறார். நமது நம்பிக்கை மற்றும் புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டு இறைவனின் அன்பு செயல்படுகிறது. அப்போஸ்தலர்களில் மூத்தவர்கள் தாங்கள் வாதாடிய காரியத்தை நன்கு அறியப்பட்ட ஓர் வாக்கியத்தின் மூலமாக சுருக்கிச் சொன்னார்கள். “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. கற்றறிந்த இறையியல் நிபுணர்கள் மற்றும் அதிகாரமிக்க நீதிபதிகள், அவர்களுடைய வேத அறிவின் மத்தியிலும் குருடர்களாயிருந்ததை திபேரியா ஏரியின் எளிய மீனவர்கள் நிரூபித்தார்கள். பட்டங்களைப் பெறுவது, அதிகமாக வாசிப்பது, மத நூல்களை வாசிப்பது இரட்சிப்பைக் கொண்டு வராது. சிலுவையில் அறையப்பட்டு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த உயிருள்ள இயேசுவின் மீது விசுவாசம் வைப்பது, பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம்பண்ணுவது இவைதான் இரட்சிப்பைக் கொடுக்கும்.
இரட்சிப்பு என்றால் என்ன? அது இறைவனுடைய கோபாக்கினையிலிருந்து விடுதலை ஆகும். கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் பரிசுத்தமாக்கப்படுதல் ஆகும். இரட்சிப்பு, என்பது மரணத்தின் மீது வெற்றிகொண்டு நித்திய வாழ்வுக்கு நம்மை நடத்துவது ஆகும். கிறிஸ்து தரும் இரட்சிப்பு பாவத்தில் விழாமல் இறைவனின் வல்லமையை பெற்று நல்ல செயல்களை செய்வதை வலியுறுத்துகிறது. உண்மையான இரட்சிப்பு என்பது மக்கள் அறிந்திருப்பதைவிட உயரமானது, ஆழமானது, அகலமானது, பலம் நிறைந்தது. இயேசுவின் மீது விசுவாசம் வைப்பவன் மீது சாத்தானுக்கு அதிகாரம் கிடையாது. இரட்சகருக்கு தன்னை அர்ப்பணிப்பவன் அவருக்குள் வெற்றியை பெறுகிறான்
கிறிஸ்து எல்லா மனிதர்களுக்குமான இரட்சிப்பை நிறைவேற்றி முடித்தார். நமக்குப் பதிலாக அவர் சிலுவையில் மரித்தார். அநீதியானவர்களுக்கு பதிலாக நீதியுள்ளவராக, அழிந்து போகக் கூடியவர்களுக்கு பதிலாக அழியாதவராக மரித்தார். ஆண்டவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு அகற்றினார். இலவசமாய் நம்மை நீதிமான்களாக்கினார். நம்மை யாரும் இரட்சிக்க இயலாது என்பதை அவர் அறிந்திருந்தார். இறைவனின் குமாரன் மனுஷகுமாரன் ஆனார். அதன் மூலம் மனிதனின் குமாரர்கள் இறைவனின் குமாரர்கள் ஆகிறார்கள். நாம் புத்திர சுவீகாரம் அடையும்படி கிறிஸ்து நம்மை மீட்டெடுத்தார். பரிசுத்தமுள்ள கனத்திற்குரிய நீதிபதி நமக்கு எதிராக இல்லை. அவர் நம்முடைய அன்புள்ள பிதாவாக இருக்கிறார். கிறிஸ்து தமது மரணத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவரை நமக்கு அருளியுள்ளார். நம்முடைய இருதயங்களில் இறைவனின் அன்பு ஊற்றப்படுகிறது.
கிறிஸ்து தரும் இரட்சிப்பை பெற்றுக்கொள்ளும்படி அனைத்து மனிதர்களும் அழைக்கப்படுகிறார்கள். ஏனெனில் எவரிடத்திலும் இரட்சிப்பு இல்லை. தெய்வீக சந்தோஷத்தை பெற்றுக்கொள்வதற்கு மதங்கள், தத்துவங்கள், மனித கருத்தாக்கங்கள். மற்றும் நற்செயல்கள் போதுமானவை அல்ல. நம்முடைய விடுதலை கிறிஸ்துவின் இரத்தத்தில் மாத்திரமே உள்ளது. அது இல்லையெனில் நாம் அழிந்துவிடுவோம். ஆகவே கிறிஸ்துவின் ஒப்புரவாக்குதலை ஏற்றுக்கொள்வது மற்றும் அவருடைய உடன்படிக்கையில் இணைவது அவசியமானதும், தெய்வீகமானதுமான கடமையாக உள்ளது. இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவன் இறைவனின் அன்பை புறக்கணிக்கிறான். அவன் இரட்சிப்பைக் காணமாட்டான். இயேசுவின் மூலமாக இரட்சிப்பைத் தருவதை தவிர இறைவனுக்கும் வேறு வழி இல்லை.
மனிதர்களைப் பிடிக்கும் மீனவனாயிருந்த பேதுரு இந்த அரிய உண்மைகளையெல்லாம் ஆலோசனைச் சங்கத்து பிரதான ஆசாரியர்கள், இறையியலாளர்கள், வேதபாரகர், சட்ட நிபுணர்களுக்கு சொன்னார். அவர் அதிகம் பேசவில்லை. நற்செய்தியை ஒரே வாக்கியத்தில் சுருக்கிக் கூறினார். நீதிபதிகள் அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். ஏனெனில் அவன் புரியக்கூடிய எளிய மொழிநடையில் பகட்டான சொல்நடையின்றி பேசினான். எளிமையான வாக்கியங்களை பயன்படுத்தினான். அவர்கள் அவனையும் அவனுக்கு பின் நின்று கொண்டிருந்த சுகமாக்கப்பட்ட வாலிபனையும் படிப்பறிவற்றவர்களாகக் கண்டார்கள். அவர்களால் மறுதலிக்க முடியவில்லை. இந்த இருவரில் வெளிப்பட்ட இறைவனின் வல்லமை அப்போது அங்கு இல்லை. ஆனால் பேதுருவின் வார்த்தைகளில் மீண்டும் கிறிஸ்துவின் வல்லமை தோன்றியது. அந்த ஜனத்து அதிகாரிகள் தான் கொலைக்காரர்கள் என்பதை உறுதிப்படுத்தியது. அதே சமயத்தில் அவன் இயேசுவின் நாமத்தினால் இறைவனின் இலவசமான இரட்சிப்பை வழங்கினான்
அந்த நீதிபதிகள் அப்போஸ்தலர்களின் குற்றச்சாட்டை பெரிதாக கருதவில்லை. அவர்களுக்கு அருளப்படும் இரட்சிப்பைக் குறித்தும் எண்ணவில்லை. இவைகளைக் குறித்து கருத்தாய் யோசிக்க அவர்கள் விருப்பமின்றி இருந்தார்கள். ஆனால் அவர்கள் வாயிலிருந்து புறப்பட்ட இயேசு என்னும் நாமம் அவர்களை தொந்தரவுபடுத்தியது. அவர்கள் அந்த பெயரை மறக்க விரும்பினார்கள். அதை தவிர்க்க எண்ணினார்கள், அதை மறுபடியும் கேட்க விரும்பவில்லை. இறைவனின் கோபாக்கினைக்குட்பட்ட ஏழை பிச்சைக்காரன் சுகமாக்கப்பட்டதைக் குறித்து அவர்கள் அக்கறைப்படவில்லை. இந்த மாய்மாலமான, நாகரீகமான மனிதர்கள் அன்பற்றவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய முதன்மையான அக்கறை அவர்கள் புத்தகங்கள், மதரீதியான போதனைகள் மற்றும் அவர்களது கடமைகளில் இருந்தது
தண்டனைக்குப் பயப்படாதிருந்த இரண்டு அப்போஸ்தலர்களின் தைரியம் மற்றும் வீரம் அந்த ஜனங்களைப் பாதித்தது. மேலும் சுகமாக்கப்பட்ட அந்த மனிதனின் நிமித்தம் அப்போஸ்தலர்கள் மீது இறைநிந்தனை குற்றச்சாட்டை நீதிபதிகள் முன்வைப்பதற்கு கடினமாக இருந்தது. ஆகவே அவர்கள் இரகசியமாக கூடினார்கள். பின்பு ஆலோசனை சங்கத்தை விட்டு அவர்களை அனுப்பிவிட்டார்கள்.
இயேசுவின் நாமத்தைக் குறித்து பிரசங்கிக்க கூடாது என்று தடுப்பதைத் தவிர வேறு எந்த முடிவையும் இறுதியில் அவர்களால் எட்ட இயலவில்லை. இந்த பெயர்தான் அவரைப் பின்பற்றுபவர்களின் வல்லமைக்கு காரணம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அது அந்த தேசத்திற்கும் அதனுடைய வழிமுறைமைகளுக்கும் ஆபத்தானது என்று கருதினார்கள். இயேசுவின் நாமத்தில் இன்னும் அற்புதங்கள் நடந்துவிடுமோ என்று பயந்து அந்த நாமத்தைக் குறித்து பேசவோ, போதிக்கவோ, அறிவிக்கவோ கூடாது என்று இரண்டு அப்போஸ்தலர்களுக்கும் அவர்கள் கட்டளையிட்டார்கள். சாத்தானின் திட்டத்தின் சுருக்கத்தை இது குறிப்பிடுகின்றது. அவன் இயேசு என்னும் நாமத்தில் பிரசங்கிப்பதை தடுக்க விரும்புகிறான். இறைவனின் வல்லமை அதன் மூலம் வெளிப்பட்டு மனித இருதயங்களை இரட்சிப்பதை அவன் தடுக்க விரும்புகிறான். அருமையான சகோதரனே!இயேசுவின் நாமத்தை தொடர்ந்து பேசுவதில் நீ உறுதியாய் இருக்கிறாயா? நீ அவருக்கு சாட்சி பகர்கின்றாயா? இரட்சிப்பு வேறு எவரிலும் இல்லை. மற்றவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு இந்த நாமத்தைக் குறித்து பேச வேண்டிய பொறுப்பு உனக்கு உண்டு. சாட்சியின் அறிக்கை இல்லாமல் இரட்சிப்பு இல்லை.
அப்போஸ்தலர் 4:19-22
19 பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள். 20 நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள். 21 நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள். 22 அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.
19 பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள். 20 நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள். 21 நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள். 22 அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.
இரண்டு அப்போஸ்தலர்களும், சுகமாக்கப்பட்ட மனிதனும் இயேசுவின் நாமத்தில் இனி ஒருபோதும் பிரசங்கிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்மானித்தது. அந்த இரண்டு சாட்சிகளும் இறைவனுடைய சித்தம் மற்றும் மனிதர்களுடைய ஆலோசனை இரண்டுக்கும் இடையே எதை தெரிந்தெடுப்பது என்று வரும் போது இறைவனுக்கு கீழ்ப்படிவதை தவிர வேறு வழி இல்லை என்று பதிலளித்தார்கள். மாய்மாலமான உண்மையின் அனைத்து வடிவங்களையும், பாவனைகளையும் அவர்கள் எதிர்த்து நிற்க வேண்டியதாய் இருந்தது. புரட்சியைக் கொண்டு வரும் ஆவியினால் இந்த எதிர்ப்பு வரவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு கீழ்ப்படிவதின் மூலம் இது ஏற்பட்டது. ஆயுத புரட்சிக்கு இவர் விசுவாசிகளை வழிநடத்தாமல், இயேசுவிற்காக தைரியமாய் சாட்சிபகரும்படி வழிநடத்தினார்.
இரண்டு அப்போஸ்தலர்களும் இணைந்து பதிலளித்தார்கள். “நாங்கள் கண்டதையும். கேட்டதையும் குறித்து எங்களால் பேசாமலிருக்கக் கூடாது,. மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுடனான அனுபவங்களால் அவர்களது இருதயங்கள், வாழ்வுகள் நிறைந்திருந்தது. இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். ஆகையால் பிரியமான சகோதரனே, நாள் முழுவதும் நீ எப்படி பேசுகிறாய்? எத்தனை முறை நீ இயேசுவின் நாமத்தை உச்சரிக்கிறாய்? ஆண்டவரின் ஆவியானவர் உனக்குள் வாசம் பண்ணுகிறாரா? அல்லது பணம், ஒழுக்கமின்மை, பேதங்கள் இவைகளின் ஆவிகள் உன்னை ஆளுகை செய்கிறதா? நீ என்ன பேசுகிறாயோ அதுவாகவே நீ இருக்கிறாய். நீ எதைக் குறித்து அமைதியாக இருக்கிறாயோ அதுவல்ல நீ. இயேசுவின் பரிசுத்தமான சாட்சிகள் அவர்களுடைய உயிருள்ள ஆண்டவரை மகிமைப்படுத்துவதற்கு உதவுவதில்லை. அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுள்ளார்கள். அவர் இயேசுவிற்கு சாட்சிகளாய் இருக்கும்படி அவர்களை உருவாக்குகிறார். இது அவர்களுடைய பணி, ஊழியம், அதிகாரம் ஆகும். இறைவனின் வல்லமை என்பது இயேசுவின் செயல்கள் மற்றும் வார்த்தைகளைக் குறித்த சாட்சியை உள்ளடக்கியுள்ளது. ஆகவே பேசுங்கள். அமைதியாய் இருக்க வேண்டாம். நீங்கள் பேசும் முன்பு விண்ணப்பம் பண்ணுங்கள். இல்லையெனில் நீங்கள் சத்தமிடும் வெண்கலம் அல்லது கொட்டு அடிக்கும் டிரம் போல இருப்பீர்கள்.
ஜனங்களின் அதிகாரிகள் எவ்விதத்தில் இவர்களை தண்டிப்பது என்று தெரியாமல் இருந்தார்கள். ஜனங்களின் மத்தியில் ஏற்பட்ட பேரார்வத்தை தடுக்கமுடியவில்லை. கிறிஸ்துவின் சாட்சிகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர்களது சொந்த அதிகாரம் ஆபத்துக்குள்ளாவதை தடுக்க முடியவில்லை. ஆகவே அவர்களை எச்சரித்தார்கள். அவர்கள் பயமுறுத்தும் முறையை நம்பினார்கள். கிறிஸ்துவின் இயக்கத்தின் கழுத்தை நெறித்து கொல்ல நினைத்தார்கள். ஆனாலும் முழு எருசலேமும் இறைவனின் துதியால் நிரம்பிக் காணப்பட்டது மிகவும் ஆச்சரியமான ஒரு காரியம். இந்த அற்புதமான சுகமாக்குதலினால் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்திருந்தார்கள். உன்னதமானவரின் பிரசன்னம் இன்றும் தங்களது பட்டணத்தை விட்டு விலகவில்லை என்பதை அவர்கள் உடனடியாக உணர்நது கொண்டார்கள். அந்த மனிதனுக்கு நடந்ததை கண்டு கொண்டார்கள். கிறிஸ்துவின் சாட்சிகள் மூலமாக இரட்சிப்பின் வல்லமை செயல்பட்டது.
12. திருச்சபையின் பொதுவான விண்ணப்பம் (அப்போஸ்தலர் 4:23-31)
அப்போஸ்தலர் 4:23-31
23 அவர்கள் விடுதலையாக்கப்பட்ட பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள். 24 அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர். 25 புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும், 26 கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. 27 அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, 28 ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள். 29 இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, 30 உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள். 31 அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.
23 அவர்கள் விடுதலையாக்கப்பட்ட பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள். 24 அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர். 25 புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும், 26 கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. 27 அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, 28 ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள். 29 இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, 30 உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள். 31 அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.
இரண்டு அப்போஸ்தலர்களும் விடுவிக்கப்பட்டவுடன் மீண்டும் அந்த மேலறைக்கு சென்றார்கள். அங்குதான் சில சகோதரர்கள் இணைந்து, தொடர்ச்சியாக விண்ணப்பம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சிறையில் இருக்கும் வரை, அவர்கள் முறை வைத்து தொடர்ந்து விண்ணப்பம் செய்தார்கள். சிறையில் இருப்பவருக்கு ஆண்டவர் வல்லமை, ஞானம், தைரியம், வழிநடத்துதல், மற்றும் பாதுகாப்பு தரும்படி விண்ணப்பம் செய்தார்கள். பேதுருவும் யோவானும் திரும்பிப்போனார்கள். தேசத்து அதிகாரிகள் முன்பு இயேசுவின் நாமத்தைக் குறித்தும், இரட்சிப்பைக் குறித்தும் சாட்சி பகர ஆண்டவர் எவ்விதம் உதவினார் என்று சொன்னார்கள். அனைவரும் அகமகிழ்ந்தார்கள், இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள். அதே சமயத்தில் இயேசுவின் நாமத்தில் பிரசங்கிக்கக் கூடாது என்ற ஆலோசனைச் சங்கத்தாரின் கட்டளையை நினைத்து வருத்தப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் அனைவரும் இந்த முடிவிற்கு உட்பட்டவர்களாக இருந்தார்கள். அந்த அதிகாரிகள் அனைவரும் மனந்திரும்ப வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களின் இருதயமோ இயேசுவிற்கு நேராக மேலும் கடினப்பட்டது. அவர்கள் பிரதான ஆசாரியர்கள் மற்றும் மூப்பர்களின் இரட்சிப்பிற்காக விண்ணப்பம் செய்தார்கள். ஆனால் விளைவோ புறக்கணிப்பும், பயமுறுத்தலுமாக இருந்தது.
இரண்டு அப்போஸ்தரும் விடுதலை ஆனவுடன் மேலும் ஒரு அற்புதம் நடந்தது. இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பேசுவதை தடைசெய்யும் கட்டளையை எதிர்த்து செயல்படும் சிறந்த வழியை திருச்சபை கலந்தாலேசித்தது. அதனுடைய அங்கத்தினர்கள் ஒத்துப்போவதையோ, எதிராகப் பேசுவதையோ அல்லது அனுகூலமான நேரங்களுக்கு காத்திருப்பதையோ முன் மொழியவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் முழங்கால்படியிட்டு விண்ணப்பம் செய்தார்கள். அவர்கள் வானத்தையும், பூமியையும், அனைத்தையும் உண்டாக்கின சர்வ வல்லமையுள்ள இறைவனை நோக்கித் திரும்பினார்கள். மக்கள், சம்பவங்கள் மற்றும் அதிகாரங்களை விட்டு அவர்கள் திரும்பினார்கள். உன்னதமானவர் அவர்களுடைய பிதாவாக இருக்கிறார். அவரிடம் அனைத்து கேள்விகளையும் அவர்கள் கேட்க முடியும். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு காரணமாக இருந்த ஆலோசனைச் சங்கத்தாரின் பயமுறுத்தலை அவருக்கு முன்பாக அவர்கள் எதிர்கொள்ள முடியும்
சங்கீதம் 2-ல் உள்ள சில வசனங்களைக் கொண்டு இவர்கள் அனைவரும் ஒரே குரலில், இறைவனின் குடும்பமாய் விண்ணப்பம் பண்ணும்படி பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தினார். யூதர்களின் இருதயங்களில் நிறைந்து காணப்பட்ட துதியின் சங்கீதங்களில் இதுவும் ஒன்று. தீர்க்கதரிசன ஆவியினால் அவர்கள் அனைவரும் தீர்க்கதரிசிகளாக மாறினார்கள். அவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான இயக்கங்கள், ரோம பேரரசின் முன்னேற்றங்களில் இறைவன் மற்றும் அவருடைய கிறிஸ்துவிற்கு எதிரான மனிதனின் கலகத்தன்மையை கண்டார்கள். நமக்கும் இப்படிப்பட்ட தீர்க்கதரிசன பார்வை தேவை. நமது சூழலில் தற்போதைய அரசியல், பொருளாதாரம் மற்றும் ஆன்மீக முன்னேற்றங்கள் இவைகளில் நம்முடைய நிலை குறித்து அறிவது அவசியம். உலகம் காலத்துடன் போட்டிபோட்டு வேகமாய் இயங்குகிறது. வேறுபட்ட மக்கள், நாடுகள் அந்திகிறிஸ்துவின் கீழ் ஒரே பெரிய உலகமாய் இணைக்கப்பட உள்ளார்கள். இறைவனுக்கும் அவருடைய கிறிஸ்துவிற்கும் எதிராக யுத்தம் செய்ய உள்ளார்கள்.
இயேசுவைக் கொல்லுவதற்கு இறைவனின் எதிரிகள் இணைந்து சந்தித்துக் கொண்ட போதே எருசலேமில் பிசாசின் ஆவியினால் வழிநடத்தப்பட்ட இந்த இயக்கம் தோன்றியது. யூதநாடும், ரோம அதிகாரிகளும் அடிப்படையில் வேறுபட்டாலும் ஆண்டவராகிய கிறிஸ்துவிற்கு எதிராக ஒன்றாக இணைந்தார்கள். ரோம ஆளுநர் பிலாத்து, ஏரோதுமன்னன், காய்பா, மற்றும் சூழ்ச்சி நிறைந்த நீதிபதிகள் அனைவரும் தோற்றுப் போனார்கள். அவர்களுடைய தீர்ப்பு நீர்த்துப்போனது, மதிப்பிழந்து போனது. ஆனால் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவோ கல்லறையில் அழிந்து போகவில்லை. அவர் உயிர்த்தெழுந்தார். மனிதர்களின் அனைத்து தீய நோக்கங்களையும் இறைவனின் வெற்றிக்கு நேராக திருப்பினார். இறைவனிடம் அன்பாய் இருக்கிறவர்களுக்கு அனைத்து காரியங்களும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது. உன்னதமானவரின் திட்டங்கள் புரிந்து கொள்ள முடியாதவை, கிருபை, இரக்கம் மற்றும் மனதுருக்கத்தால் நிறைந்தவைகளாய் உள்ளன. இறைவனின் எதிரிகளும் அவருக்கு சேவை செய்ய வேண்டும். பரலோகப் பிதாவின் சித்தமில்லாமல் இந்த உலகில் ஒன்றும் நடக்காது. மரணத்தின் கரங்களில் அவர் நம்மை விட்டுவிட மாட்டார்.
இந்த விசுவாசத்துடன், அந்த விண்ணப்பம் செய்யும் கூட்டத்தார் தைரியம் அடைந்து அதிகாரிகளின் பயமுறுத்தலை இயேசுவின் கரங்களில் வைத்து விட்டார்கள். அவர்கள் தங்களுடைய போராட்டம், சித்ரவதையை குறித்து அதிகம் பேசவில்லை. ஆனால் இயேசுவின் நாமத்தைக் குறித்து பேசக்கூடாது என்ற அநீதியாளர்களின் கட்டளையை குறித்த விஷயத்தில் அவர்கள் இறைவனை நம்பினார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்களை வழிநடத்தினார். இயேசு கிறிஸ்துவிற்கு சாட்சி பகர்கின்ற அவர்களுடைய பணியில் இன்னும் அதிகமான வல்லமையை ஆண்டவரிடம் கேட்டார்கள். இறைவனிடம் உதவியை நாடினார்கள். நாசரேத்தூர் இயேசுதான் உலக இரட்சகர் என்பதை மக்களுக்கு ஞானம், தைரியம் மற்றும் பெலத்துடன் வெளிப்படுத்த உதவும்படி கேட்டார்கள். இறைவனின் வார்த்தைக்கு இது ஓர் பரிசுத்தமான சாட்சி ஆகும். அவருக்கு சாட்சி பகரும் ஒருவர் மூலம் இறைவன் நேரடியாக பேசுகிறார், அவரது சாட்சியை ஆசீர்வதிக்கிறார். மனிதர்கள் மீட்கப்பட, சுத்தமடைய, பரிபூரணமடைய சிலுவைக்கு நேராக அனைவரையும் பரிசுத்தமானவர் அழைக்கிறார். பிரியமான விசுவாசியே, நீ இறைவனுக்காக உனது வாயைத்திறந்து பேசுகிறாயா? அல்லது இன்னமும் நீ பயப்படுகிறாயா? தைரியம், வல்லமையுடன் பேசக்கூடிய வரம், பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் இவைகளுக்காக நீ விண்ணப்பம் செய்கிறாயா?
விண்ணப்பம் செய்யும்படி மக்கள் கூடும்போது இறைவனின் வல்லமையால் அவர்கள் எழுப்பப்படுகிறார்கள். அவர்கள் தனிப்பட்ட நபர்களாக தங்களது விசுவாசத்தை உறுதிப்படுத்தும்படி அடையாளங்களை தேடவில்லை. ஆனால் தற்போது இரட்சகரின் நாமத்தை மகிமைப்படுத்தாமல் முழு சபையும் சுகமாக்குதல், அற்புதங்களுக்காக இறைவனைக் கெஞ்சுகிறது. அவர்களில் உள்ள விசுவாசம் சந்தேகத்திற்குரியது, பலவீனமானது. இயேசுவைத் தவிர பரலோகிற்கு செல்ல வேறு வழியில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும். இயேசுவே தமது கரங்களில் பரலோகம் மற்றும் நரகத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறார்.
இறைவன் தைரியமுள்ள விசுவாச விண்ணப்பத்தை கேட்டார். அதற்கு பதிலளித்தார். ஆதித் திருச்சபை செய்த விண்ணப்பங்களில் வேதத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரே விண்ணப்பம் இது. இறைவன் தன்னுடைய ஆசீர்வதிக்கும் கரங்களை அந்தக் கூட்டத்திற்கு நேராக நீட்டினார். அனைத்து இருக்கைகளும், அந்த இடமும் அசைந்தது. பெந்தேகொஸ்தே நாளின் போது நடந்தது போல அனைவரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். இறைவனின் அன்பின் ஆவியோடு ஒன்றிணைந்து நாம் விண்ணப்பம் ஏறெடுக்கும்போது, அவருடைய சத்தியத்தை வெளிப்படுத்தும்படி நாம் கேட்கும்போது, இறைவன் உடனடியாக, நிச்சயமாக நமது விண்ணப்பத்திற்கு பதிலளிக்கிறார். கிறிஸ்துவின் ஊழியர்களை இறைவன் பலப்படுத்துகிறார். அவர்களில் தைரியத்தை கொண்டுவருகிறார். விசுவாச நம்பிக்கையில் அவர்களை நிலைநிறுத்துகிறார். அவர் அன்பின் ஆவியால் அவர்களை நிரப்புகிறார்.
இந்த தனித்துவமான விண்ணப்பத்தின் விளைவு என்னவாக இருந்தது? இயேசுவின் நாமத்தை குறித்து பேசக்கூடாது என்று அந்த அதிகாரிகள் கட்டளையிட்டிருந்தாலும், அவர்கள் இரட்சகரை குறித்து மிகவும் தைரியமாக, வெளிப்படையாக பேசினார்கள். அவர்கள் அவருடைய நாமத்தைக் குறித்து வீடுகளில், சந்துகளில், தெருக்களில், ஆலயத்து பிரகாரத்தின் பாதைகளில் பிரசங்கித்தார்கள். ஆண்டவர் தம்முடைய ஆவியானவரால் அவர்களை புதுப்பித்து நிரப்பினார். அவருடைய சாட்சிகளாய் இருக்கும்படி பயிற்றுவித்தார். ஆதித் திருச்சபையின் இந்த பிரபலமான விண்ணப்பத்தின் அர்த்தங்களைக் குறித்து கவனமாக சிந்தித்து பார்க்கவேண்டும். பிரியமான விசுவாசியே, நீயும் விண்ணப்பத்துடன் இதை அறிவிப்பதில் பங்கெடுக்க முடியும்.
அப்போஸ்தலர் 4:32-37
32 விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது. 33 கர்த்தராகிய இயேசுவின் உயிரத்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது. 34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து, 35 அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை. 36 சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன், 37 தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
32 விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது. 33 கர்த்தராகிய இயேசுவின் உயிரத்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது. 34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து, 35 அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை. 36 சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன், 37 தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
பெந்தேகொஸ்தே நாளின் போது பேதுருவின் பிரசங்கத்தைத் தொடர்ந்து நற்செய்தியாளர் லூக்கா ஆதித்திருச்சபை எவ்விதம் அனைத்தையும் பொதுவாக வைத்திருந்தனர் என்ற தனது இறுதிக் கண்ணோட்டத்தை நமக்குத் தருகிறார். சப்பாணியாய் இருந்த மனிதன் சுகமாக்கப்பட்டவுடன் அதிகாரிகள் முன்பான அப்போஸ்தலர்களின் சாட்சியைக் குறித்து கூறுகிறார். பின்பு ஆதித்திருச்சபையின் உள்ளான வாழ்வு குறித்த தனது சிறப்பான கண்ணோட்டத்தை நமக்குத் தருகிறார். கிறிஸ்துவின் அன்பினால் அப்போஸ்தலர்கள் மட்டும் நிறைந்திருக்கவில்லை. எல்லா விசுவாசிகளும் காணக்கூடிய சரியான ஐக்கியத்தில் ஒருவருடன் ஒருவர் இணைந்து அன்பினால் நிரப்பப்பட்டிருந்தார்கள். நாம் இந்த ஐக்கியத்தைக் குறித்து சிந்திப்போமானால் அநேக குறிப்புகளை தெளிவாக அறியமுடியும்.
ஆதித்திருச்சபையின் இரகசியமானது அதனுடைய உண்மையான அன்பில் அடங்கியிருந்தது. வெறுமனே கடந்துபோகும் உணர்வாக அது இல்லை. அது பரிசுத்த ஆவியானவரின் கனியாக இருந்தது. கிறிஸ்துவின் மீதான அவர்களின் விசுவாசம் பொதுவான திட்டத்தில் அவர்களை இணைத்தது. அவர்கள் கூட்டமாக இணைந்து விண்ணப்பம் செய்ததினால் திருச்சபையின் மையமான அவர்களது ஆண்டவரிடம் இன்றும் அதிகமாக அவர்களை நெருக்கமாக்கியது. விண்ணப்பத்தின் மூலம் அவர்கள் ஒரே இருதயம், ஒரே சிந்தையுடன் வளர முடிந்தது. ஒவ்வொருவரும் பிறரின் தேவையை உணர்ந்தார்கள். அவர்கள் உபத்திரவம் மற்றும் சந்தோஷம் இரண்டையும் பகிர்ந்து கொண்டார்கள். அது ஒரு மனிதனின் இருதயம் மற்றவரின் மார்பில் துடிப்பதைப் போலவும், ஒருவருடைய ஆத்துமா மற்றவரின் சரீரத்தில் தங்கியிருப்பதைப் போலவும் இருந்தது. ஒவ்வொருவரும் தனித்துவமான ஆள்தன்மையை பெற்றிருந்தார்கள். ஆனாலும் ஒவ்வொருவரும் சுயத்தை மறுத்தார்கள். இவ்விதத்தில் சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் ஸ்தல சபையின் ஒரே ஆத்துமாவாக மாறப்போகிற ஒரு புதிய, அறிந்து கொள்ளக்கூடிய பொதுவான ஆத்துமாவை பெற்றார்கள்.
கிறிஸ்தவத்தில் காணப்படும் சகோதரத்துவம் ஒரு சிறந்த இரகசியம் ஆகும். சொத்துக்களிலும், செலவினங்களிலும் அது முடிகிறதில்லை. அது அநேக சூழ்நிலைகளில் அனுபவப்பூர்வமாக உணரப்படுகிறது. ஒவ்வொருவரும் பிறருடைய உதவிக்காக காத்திருப்பதில்லை. தேவையுள்ள சகோதரனுக்கு விரைவாக உதவும்படி ஒவ்வொருவரும் கொடுக்கிறார்கள். கொடுப்பது சந்தோஷமான காரியமாக இருந்தது. பண ஆசையை கிருபையற்ற ஒன்றாக அவர்கள் கருதினார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்காக வேலை செய்யவில்லை. தங்களின் வரங்கள், பணம், சொத்துகள் மூலம் பிறருக்கு பணிவிடை செய்தார்கள். ஆண்டவர் விசுவாசிகளை கஞ்சத்தனம், பொறாமை, பணஆசை, தனிப்பட்ட சொத்தை சார்ந்திருத்தல் ஆகியவைகளிலிருந்து விடுவித்திருந்தார். நற்செய்தியாளர் லூக்கா மற்ற நற்செய்தியாளர்களைவிட பணஆசையைக் குறித்த இயேசுவின் எச்சரிப்பை அதிகமாக தனது நற்செய்தியில் குறிப்பிடுகிறார். பண ஆசையோ அல்லது சொத்தின் மீதான சுயநல ஆசையோ ஆதி சபையில் இருக்கவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் சாட்சியிடுகிறார். அனைத்து காரியங்களும் அவர்களுடைய சகோதரர்களுடன் பொதுவாக நடந்தேறியது.
அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் உடனடி வருகையை எதிர்பார்த்து இருந்தார்கள். அவரை வரவேற்பதற்கு தங்களை பரிசுத்தப்படுத்திக் கொண்டார்கள். அவர்களுடைய இந்த எதிர்பார்ப்பின் மத்தியில் அப்போஸ்தலர்கள் வல்லமையோடும், மகிழ்ச்சியோடும் இயேசு உயிருடன் பிரசன்னமாயிருந்து தனது இரட்சிப்பை கொண்டு வருகிறார் என்பதை அறிவித்தார்கள். உயிருள்ள ஆண்டவர் மீது அவர்கள் வைத்திருந்த விசுவாசம் தான் அவர்களது வல்லமையாய் இருந்தது. விசுவாசத்தின் மூலமாக அவர்களும் அவருடன் மரணத்திலிருந்து எழுந்திருந்தார்கள். இறைவனின் ஜீவன் அவர்களுக்குள் தங்கியிருப்பதை அவர்கள் உறுதிப்படுத்தினார்கள். அவர்கள் வெறுமனே கொள்கைகளை போதிக்கவில்லை. மிகவும் பெரிதானதும் செயல்படுகிறதுமான வல்லமையுடன் பிரசங்கித்தார்கள்.
ஆண்டவர் அவர்களுடைய சாட்சியை உறுதிப்படுத்தினார். அவருடைய நாமத்தை அறிக்கையிடுபவர்களிடம் தமது கிருபையை அபரிமிதமாக வெளிப்படுத்தினார். அவருடைய வல்லமை செயல்பட்டது. அவர்களுடைய திறமைகள் மற்றும் வரங்களின் மூலம் அது வெளிப்பட்டது. அவருக்கு ஒப்புக்கொடுத்தவர்கள் தியாகம் மற்றும் அன்பின் ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள். விசுவாசிகளில் தங்கியிருந்த இறைவனின் வல்லமை மற்றும் கிருபையை பற்றிபேசும்போது, “பெரிதான” என்ற வார்த்தையை லூக்கா இரண்டு முறை குறிப்பிடுகிறார். நற்செய்தியில் நாம் இந்த வார்த்தையை பொதுவாக வாசிக்கிறதில்லை. இறைவனின் வரங்கள் பொங்கி வருகின்றது. இரட்சிப்பு முழுமையாய் வருகிறது. அப்போஸ்தலர்களின் தாக்கத்தை ஏற்படுத்தும் சாட்சியின் இரகசியத்தை நம்மால் உணரமுடிகிறது. சபை வாழ்வில் வெளிப்பட்ட ஒருமனத்தை உணரமுடிகிறது.
இந்த தன்னார்வமான ஆவிக்குரிய சமூகஅமைப்பில் ஏழை, நாதியற்றவன், துன்புறுபவன், புறக்கணிக்கப்பட்டவன் அல்லது தகுதியற்றவன் என்ற நிலை இல்லாதிருந்தது. அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி, நெருக்கம், விண்ணப்பத்துடன் இணைந்திருப்பது, உயிருள்ள இறைவனுடன் இணைந்திருப்பது என்ற அனைத்தையும் அனுபவித்தார்கள். பாடுகள் மற்றும் போராட்டங்கள் திருச்சபையில் விண்ணப்பத்தின் வல்லமையினால் மேற்கொள்ளப்பட்டன. மறுப்புகள் பெருந்தன்மை மற்றும் துதியுடன் சரிசெய்யப்பட்டன. பரிசுத்த ஆவியானவர் மூலம் ஓர் பரலோக வல்லமை பூமியில் வாசம்பண்ணியது. அப்போஸ்தலர்கள் தங்களுடைய தேசத்தில் உள்ள ஆயிரக்கணக்கானோரின் தேவைகளுக்காக ஒரு தொண்டு நிறுவனத்தை பெற்றிருக்கவில்லை. ஆனால் தங்களுடைய சபையின் அங்கத்தினர்களின் தேவைகளை சந்தித்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே என்பதை உணர்ந்தார்கள். ஆகவே எந்த ஒரு போராட்டமும் அவர்கள் மத்தியில் தோன்றுவதற்கு அனுமதிக்கவில்லை.
கிறிஸ்துவுக்குள்ளான இந்த சகோதரர்கள் அனைவரும் தங்களுடைய வீடு பரலோகில் இருந்ததை அறிந்திருந்தார்கள். தங்களுக்கென்று சொந்தமாய் இருந்ததை அவர்கள் உரிமை கொண்டாடவில்லை. இறைவனுக்காக அனைத்தையும் மனப்பூர்வமாக இழந்தார்கள். அவர்கள் சிருஷ்டிகராகிய இறைவனே அனைத்திற்கும் சொந்தமானவர் என்பதை அறிந்திருந்தார்கள்.திருச்சபையில் பணம் ஆளுகை செய்யவில்லை. பரிசுத்த ஆவியானவரே ஆளுகை செய்தார். இந்த கொள்கையின் அடிப்படையில் யூத விசுவாசிகள் அனைவரும் உலகப்பொருளின் (மம்மோன்) மீதான ஆசையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்ததை நம்மால் காணமுடிகிறது. கிறிஸ்து கூறுகிறார் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.(மத்தேயு6:24)
திருச்சபை தனக்கு கொடுக்கப்பட்ட பணத்தை வீணடிக்கவில்லை. சொத்துகள் மூலம் பெறப்பட்ட பணமானது அப்போஸ்தலர்களின் பாதத்தின் கீழ் வைக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் இயேசுவிற்காக அனைத்தையும் இழந்தார்கள். வறுமையிலும் உறுதியுடன் அவரைப் பின்பற்றினார்கள். அப்போஸ்தலர்கள் அந்த பணத்தின் ஒரு சிறு பகுதியைக் கூட தங்கள் நலனிற்காக பயன்படுத்தமாட்டார்கள் எனற் நிச்சயத்தை சபை அங்கத்தினர்கள் அனைவரும் பெற்றிருந்தார்கள். மேலும் பரிசுத்த ஆவியானவர் எந்த ஒரு அநீதியான செயலும் நடைபெற அனுமதிக்கவில்லை. அவர் அனைவரையும் மகிமைக்கு நேராக வழிநடத்தினார்.
திருச்சபை அங்கத்தினர்களின் எண்ணிக்கை அந்நேரத்தில் உயர்ந்திருந்தது. மக்களைப் பார்ப்பதற்கும், அவர்களிடம் பேசுவதற்கும் அப்போஸ்தலர்கள் உயர்வான இடத்தில் அமரவேண்டிய அவசியம் ஏற்பட்டது. போதனைகள் மற்றும் பிரசங்கங்களைத் தொடர்ந்து தன்னார்வ காணிக்கைகள் அப்போஸ்தலர்களின் பாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் அருளப்பட்ட இறைவனின் அருட்கொடைக்காக அவர்கள் நன்றியை ஏறெடுத்தார்கள். பிரியமுள்ள விசுவாசியே, எந்த எல்லை வரைக்கும் நீ இறைவனுக்கு நன்றி செலுத்துகிறாய்?
திருச்சபையின் எதிர்கால பாதுகாப்பிற்காக அப்போஸ்தலர்கள் பணத்தை சேமித்து வைக்கவில்லை. அவர்கள் நன்கொடைகள் அனைத்தையும் உடனடியாக பகிர்ந்தளித்தார்கள். நிதியானது ஒரே சமயத்தில் நிரம்பி வழிந்தது. அதே சமயத்தில் வெறுமையாயும் இருந்தது. பேதுரு கூறியது போல “வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை என்ற நிலை காணப்பட்டது. எல்லா நேரங்களிலும் தேவையுள்ளளோருக்காக கொடுக்கப்பட்டது. ஆண்டவர் தங்களுடைய கரங்களில் பணத்தை கொடுக்கவில்லை என்பதை மனதில் வைத்திருந்தார்கள். தேவையுள்ளோருக்கு உடனடியாக அதைக் கொடுக்கும் மனது அவர்களிடம் இருந்தது
அப்போஸ்தலர் நடபடிகளில் அநேக இடங்களில் (9:27,11:22-30,13:12,14:12-28,15:2) வரும் பர்னபா என்ற பெயரைக் குறித்து ஆர்வமூட்டும் காரியத்தை லூக்கா நமக்கு குறிப்பிடுகிறார். அவன் “ஆறுதலின் மகன் என்பது மூல வார்த்தையில் “உற்சாகத்தின் மகன் என்று பொருள்படுகிறது. அவன் தெய்வீக ஆறுதல் தருபவர் மற்றும் உதவுபவராகிய பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருந்தான். இந்த வரத்தின் மூலமாக அவன் பொறுமையோடு அநேக மக்களை உற்சாகப்படுத்தி ஆண்டவருக்கென்று பணிசெய்தான். ஆறுதலின் மகன் சீப்புருதீவைச் சேர்ந்த ஒரு லேவியன் ஆவான். அவன் அல்லது அவனுடைய தகப்பன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி எருசலேமில் அதிக விலையுள்ள அடக்கநிலம் ஒன்றை வாங்கியிருந்தனர். முதல் சந்திப்பில் அவர்கள் அவரை பார்க்க எண்ணினார்கள். கிறிஸ்தவரல்லாத யூதர்களும் தங்கள் மிகுந்த இறைபக்தியினால் இப்படி எண்ணினார்கள். பர்னபா மெய்யான கிறிஸ்துவை அறிந்தான். வரப்போகும் மகிமைக்கு ஆதாரமாக அவனுக்குள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருந்தான். யூத முறைமைகளில் இருந்து அவன் விடுதலையாகி இருந்தான். இந்த விலையேறப்பெற்ற நிலத்தை விற்றான். இந்த விற்கப்பட்ட தொகையானது தள்ளப்பட்ட மீந்த யூதர்களுக்கு உரியது. இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார் என்ற எதிர்பார்ப்பிற்கு சாட்சியாக இருந்தது. இந்த பர்னபா தன்னுடைய பணத்தின் எந்த ஒரு பகுதியையும் தனக்கென்று வைத்துக்கொள்ளவில்லை. பூமியில் மீதமுள்ள தனது வாழ்விற்காக பரிசுத்த நகரத்தில் அவன் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக எதையும் எடுக்கவில்லை. அவனுடைய நிலத்தின் முழுத் தொகையையும் அவன் கொண்டுவந்து அமைதியுடன், தாழ்மையுடன் அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்தான்.