இதயத்தில் இளைஞர்
(சி. சாமுவேல்)
“அவர்கள் முதிர் வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாய் இருப்பார்கள்” சங்கீதம் 92:15.
எண்பது வயதினிலே
எண்பது வயதைக் கடந்துவிட்ட ஒரு தோட்டக்காரரின் வயதைக் கேட்டபோது, “I am an Octogeranium” என்று பதில் அளித்தார், அவர் சொல்ல எத்தனித்தது “எண்பது வயதுகள்” என்று பொருள்படும் ‘Octogererian’ என்ற சொல். “Geranium” என்பது ஒரு மலர். அவர் சொன்னது
தவறான சொல் என்றாலும், பொருள்பொதிந்தது. இறைவன் ஒரு மனிதனைத் தாங்கி நடத்தும்போது, அவன் மலரைப்போல் பிறருக்கு இன்பமூட்டுகிறவனாய் இருப்பான். அப்படிப்பட்ட முதியவர் இதயத்தில் இளைஞராய் இருப்பார். வயதாகிவிட்டாலும் புத்திகூர்மை உள்ளவராய் இருப்பார். ப
ழங்கால மனிதராயினும் முன்னோக்குள்ளவராய் இருப்பார்.

ஆன்மாவில் இளைஞர்
காலத்தின் சேதங்களுக்கு ஒருவரும் தப்பமுடியாது – பெலனிழக்கும் உடல், மங்கும் கண்கள், மந்தமாகும் செவிகள். ஆனால் ஆண்டவர் ஏந்திக்கொள்ளும்போது, நடை தளர்ந்தாலும் இயேசுவோடு நடைபோடுவோம். கண்கள் மங்கினாலும் மீட்பரைத் தெளிவாகத் தரிசிப்போம். செவிகள் மந்தமாயினும் இறைமேய்ப்பரின் மெல்லிய குரலை நன்றாகக் கேட்போம். யோவானைப்பற்றிய ஓர் ஆங்கிலக் கவிதை உண்டு. ஏறக்குறைய நூறு வயதாகிவிட்ட யோவான் கூறுகிறார்: “நான் முதுமைமிக்கவனாகிறேன்; இயேசுவின் மார்பில் நான் சாய்ந்திருந்த நாட்கள் ஒரு கனவைப்போல் பறந்தோடிவிட்டன. ஆண்டுகளின் பாரத்தினால் என் தலை வளைந்து களைத்துப்போயிற்று. நான் முதுமைமிக்கவன் – அன்றாட வாழ்க்கையில் நான் சந்திக்கும் முகங்களை நினைவிற்கொள்ளமுடியவில்லை; அவ்வளவு முதியவனாகிவிட்டேன். ஆனால் மற்ற முகங்கள் மங்கி மறைந்தாலும், அந்த நேசமுகமும், அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மேலும் மேலும் தெளிவாகிக்கொண்டே இருக்கின்றன. ஆகவே உயிரோடிருக்கிறவர்களைக் காட்டிலும் அவருடனும், மறைந்துபோன பரிசுத்தரோடும் அதிகமாய் வாழ்கிறேன்.
அறிவில் இளைஞர்
விமரிசகர் சிலர் கலை, விஞ்ஞானம், அரசியல் போன்ற துறைகளில் தலைசிறந்து விளங்கிய 400 பெரிய மனிதர்களைத் தெரிந்தெடுத்தனர். அவர்கள் ஒவ்வொரு பெயருக்கும் எதிரில் அவர்கள் சாதித்தவைகளிலெல்லாம் மிகப்பெரிய சாதனையை எழுதினார்கள். பிறகு எந்த வயதில் அதைச் சாதித்தார்கள் என்றும் எழுதினார்கள். அவர்கள் கண்டுபிடித்தது? அவர்கள் சாதனைகளில் 35 சதவீதம் 60வயதுகளிலும். 23 சதவீதம் 70 வயதுகளிலும், 6 சதவீதம் 80 வயதிற்குப் பிறகும் நிறைவுபெற்றது எனக்கண்டார்கள். ஆகவே 60 வயதிற்குப் பிறகே பெரும்பாலான சாதனைகள் (64 சதவீதம்) நிகழ்ந்தன. அந்த வயதிற்குக் கீழே எவ்வளவு சாதனைகள்? 50 வயதுகளில் 25 சதவீதம், 40 வயதுகளில் 10 சதவீதம். அதற்கும் கீழே? ஒரு சதவீதம் மட்டுமே!

முன்னோக்கில் இளைஞர்
வயோதிபர் என்றால், அவர்கள் பழங்காலத்து மனிதர், அவர்களுடைய எண்ணங்கள், பழக்கவழக்கங்கள், கருத்துக்கள், நோக்கங்கள் அனைத்தும் பழமையானவைகளாகவே இருக்கும் என்பது வாலிபரின் பொதுவான கருத்து. ஆனால் அது எல்லாருக்கும் பொருந்தாது. என் தாய்வழி தாத்தா தம் பேரப்பிள்ளைகளுடன் ஒத்தக்கருத்துடையவராய் இருந்தார்கள். எங்களோடு சரிசமமாய்ப்பேசி, விளையாடி, சிரிப்பார்கள். குறிப்பாக கிறிஸ்துவுக்குள் இருப்பவர்கள் புதிய சிருஷ்டிகளாய் இருப்பதால், அவர்கள் புதுநோக்குடையவர்களாய், முன்னோக்கில் இளைஞர்களாய் இருக்கக்கூடும். அவர்கள் முன்னோக்குகளில் தலைசிறந்தது விண்ணைக் குறித்த சிந்தனை. தாங்கள் இவ்வுலகில் வெறும் பயணிகள், தங்கள்
எதிர்காலம் இளமைமிக்க விண்வாழ்க்கை என்ற நோக்குடன் முன்னேறுவர்.

திருமறை முதியோர்
திருமறையில் சாதனைகள் பல புரிந்து முதியோரின் நீண்ட பட்டியலைக் காணலாம். பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம், மோசே முதலானவர்கள் தங்கள் முதிர்வயதிலேயே அதிகம் சாதித்தார்கள். காலேப் முதியோருக்கு ஒரு சவால்! எண்பத்தைந்து வயதிலும் மலைநாட்டைக் கேட்டார் – யோசுவா 14:10-14.
ஆம் முதியோரே, கர்த்தர் நம்மோடிருப்பாரானால், முதிர்வயதிலும் நாம் பெரிய காரியங்களைச் சாதிக்கமுடியும். புதிய ஏற்பாட்டிலும் சில குறிப்பிடத்தக்க முதியோரின் பெயர்களைக் காண்கிறோம் – இயேசு பாலகனைப் பார்த்து, “உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது” என்ற சிமியோன் (லூக்கா 2:32); நிக்கொதேமு (யோவான் 3:4); பவுல் (பிலேமோன் 8); பேதுரு (யோவான் 21:18); யோவான். ஆனால் இவர்கள் எய்திய வயது கொடுக்கப்படவில்லை. ஒரு முதாட்டியின் வயது மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது – லூக்கா 2:36-38.
திருமறையில் இரண்டு அன்னாள்கள் உண்டு- பழைய ஏற்பாட்டு அன்னாளும், புதிய ஏற்பாட்டு “மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி” சாமுவேலைப் பெற்றுக்கொண்டாள். இன்னொருத்தி “இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம் பண்ணி” “தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவாகிய” இயேசுவைக் காணப்பெற்றாள். இருவரும் தேவாலயம் சென்றார்கள். ஒருத்தி ஆண்டுதோறும் சென்று வந்தாள்; இன்னொருத்தி அங்கேயே தங்கிவிட்டாள். ஒருத்தி மட்டும் “மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்”. முதியோரே, அந்த அன்னாளைப் பின்பற்றுவோம். அவள் ஒரு ஜெப வீராங்கனை மட்டுமல்லாமல், ஒரு சுவிசேஷகியாகவும் இருந்தாள். அவ்விரு மகத்தான பணிகளையும் எந்த வயதிலும் செய்யலாமே!

இளைஞர் எதிரொலி
“நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல” 1 இராஜாக்கள் 19:4.
இப்படிச் சொன்னது யார்? பஞ்சகாலத்தில் காகங்களினால் உணவூட்டப்பட்டவர். பஞ்சகாலத்தில் சாறிபாத் விதவையிடமிருந்து ஒருபிடி மாவும் கொஞ்ச எண்ணெயும் ஏழு ஆண்டுகள் குறையாதிருக்கும் அற்புதத்தை நிகழ்த்தியவர். அப்பெண்ணின் மகன் மரித்தபோது, அவனை உயிருடன்
எழுப்பியவர். அப்பெண்ணின் மகன் மரித்தபோது அவனை உயிருடன் எழுப்பியவர். நாட்டின் மன்னனைப் பார்த்து, “கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்” என்று துணிவுடன் குற்றஞ்சாட்டியவர்(1 இராஜாக்கள் 18:18). கர்மேல் பர்வதத்தில் தீயை வரவழைத்து, “கர்த்தரே தெய்வம்” என்பதை நிலைநாட்டியவர். “கருத்தாய் ஜெபம்பண்ணி” மூன்றரை ஆண்டுகள் மழை பெய்யாதபடிச் செய்தவர். மீண்டும் ஜெபம்பண்ணி மழையைப் பொழியச் செய்தவர்”இவர் சொன்னதை இறைவன் செய்தார், ஒன்றைத்தவிர!-1இராஜாக்கள் 19:4. 3500 ஆண்டுகளாக அந்த விண்ணப்பம் அருளப்படவில்லை. அது கேட்கப்படும் நாள் வருகிறது (வெளிப்பாடு 11:7). இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் தலைசிறந்த பங்குள்ளவர். ஆயினும் கூறுகிறார்: “நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல”.

இன்றைய தலைமுறை
“எங்கள் பிதாக்களைப் பார்க்கிலும் நாங்கள் மேலானவர்கள்” என்று நினைக்கும் தலைமுறை! 50 ஆண்டுகளுக்குமுன் பொறியாளர்கள் கணக்கிட மட்டபலகை போன்ற slide rule என்ற கருவியை உபயோகித்தோம். அதைக்கொண்டு கணக்கிட வெகுநேரம் ஆகும். ஆனால் இன்று கணிப்பொறி கொண்டு மின்வேகத்தில் கணக்கிடலாம். தானியேல் முன்னறிவித்தபடி அறிவின்பெருக்கத்தை, இல்லை, அறிவின் வெடிப்பெருக்கத்தை எல்லாத்துறைகளிலும் காண்கிறோம். இதனால் இன்றைய தலைமுறை மூதாதையரைவிட அறிவிற் சிறந்தது என்று பொருள் இல்லை. பல நூற்றாண்டுகளாய் விருத்தியடைந்துகொண்டே வரும் அறிவுத்திரட்சியின் பலனை அனுபவிக்கிறது இன்றைய தலைமுறை. அவ்வளவுதான். ஆகவே இளைஞர்களே, நீங்கள் பிதாக்களைப் பார்க்கிலும் மேலானவர்கள் என்று மேன்மை பாராட்டவேண்டாம்.

யார் நல்லவன்?
எலியா, “நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் மேலானவன் அல்ல” என்று கூறவில்லை. “நல்லவன் அல்ல” என்றுதான் கூறினார். யார் நல்லவன்? எலியா தம் பிதாக்களைப்பார்க்கிலும் மேலான,வல்லமையான அற்புதங்களைச் செய்தவர். இப்போதோ மனமுறிவுடன், “நான் சாக வேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்” என்று மன்றாடுகிறார். எலியா விசுவாசவீரராய் இருந்தாலும் மனோபெலனை இழந்திருந்தார். ஆகவே பெரிய அற்புதம் செய்தவர் இப்போது ஒடி ஒளிந்துகொள்கிறார். இறைவனும் அவரை ஒட அனுமதித்தார். ஏனெனில் அவர் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் ஒன்றுண்டு. அது என்ன? கர்மேல் பர்வதத்தில் வெளிப்பட்ட எலியாவின் விசுவாசத்திற்கும் தைரியத்திற்கும் பின்னணியிலிருந்தது இறைவனின் வல்லமை. இறைவனில்லாத எலியா தம் பிதாக்களைப்பார்க்கிலும் சிறந்தவரல்ல, நல்லவரல்ல.
யார் நல்லவன்? பக்திவைராக்கியம் இருந்தால் போதுமா? “சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாய் இருந்தேன்…
உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்… என்றான்” 1 இராஜாக்கள் 19:14. சுயமேன்மை, சுயபாராட்டு, சுயநீதி தொனிக்கும் சொற்கள்! அதற்கு இறைவனளித்த பதில்? “பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை
முத்தம் செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்” 1 இராஜாக்கள் 19:18.
யார் நல்லவன்? ஆளுபவர்களின் குற்றங்களைச் சுட்டிக்காட்டும் தைரியமிருந்தால் போதுமா?
யார் நல்லவன்? விசுவாசித்தால் போதுமா? “தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசவாசித்து, நடுங்குகின்றன” யாக்கோபு 2:19.
யார் நல்லவன்? திருமறை கூறுகிறது: “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை.” அப்படியானால் யார் நல்லவன்? இயேசுவினால் நீதிமானாக்கப்பட்டவனே – ரோமர் 3:22-24.
யார் நல்லவன்? இயேசுவின் திருரத்தத்தினால் கழுவப்பட்டு, இரட்சிக்கப்பட்டு, ஆவியில் நிறைந்து, பரிசுத்த சாட்சிகளாய் நிற்பவனே. கூட்டத்தோடு நிற்பது மனுஷீகம்; தனித்து நிற்பதோ தெய்வீகம். ஆதாயத்திற்காக மனசாட்சியை விற்றுப்போட்டு, உலகத்தோடு நடைபோடுவது மனித இயல்பு; சத்தியத்தில் உத்தமமாய் நிற்பது இறை இயல்பு. இப்படி நின்றவர் பவுல்: “ஒருவனும் என்னோடுகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்க்ள” (2 தீமோத்தேயு 4:16). நோவா தம்மைப் பரிகசித்தவர்களைப் பொருட்படுத்தாது, பேழையைச் செய்து, தனித்துப் பயணம் செய்தார். ஆபிரகாம் அலைந்து திரிந்து, தனிமையில் இறைவனை வழிபட்டார். எலியா பலிகொடுத்து, தனித்துநின்று, கர்த்தரைத் தொழுதுகொண்டார். எரேமியா தீர்க்கதரிசனம் உரைத்து, தனித்துக் கண்ணீர் விட்டழுதார். தானியேல் தனித்து உணவருந்தி, தனித்து மன்றாடினார்.
இயேசு அன்புகூர்ந்து, தனிமையில் மரித்தார்.
இன்று தேவை சத்தியத்திற்காக பெருவிலை கொடுக்க ஆயத்தமாய் இருக்கும் ஆண்களும் பெண்களும், வாலிபரும் வயோதிபரும். இளைஞரே! முதியோரே! உங்கள் எதிரொலி என்ன?
எலியா, “நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் மேலானவன் அல்ல” என்று கூறவில்லை. “நல்லவன் அல்ல” என்றுதான் கூறினார். யார் நல்லவன்? எலியா தம் பிதாக்களைப்பார்க்கிலும் மேலான,வல்லமையான அற்புதங்களைச் செய்தவர். இப்போதோ மனமுறிவுடன், “நான் சாக வேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்” என்று மன்றாடுகிறார். எலியா விசுவாசவீரராய் இருந்தாலும் மனோபெலனை இழந்திருந்தார். ஆகவே பெரிய அற்புதம் செய்தவர் இப்போது ஒடி ஒளிந்துகொள்கிறார். இறைவனும் அவரை ஒட அனுமதித்தார். ஏனெனில் அவர் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் ஒன்றுண்டு. அது என்ன? கர்மேல் பர்வதத்தில் வெளிப்பட்ட எலியாவின் விசுவாசத்திற்கும் தைரியத்திற்கும் பின்னணியிலிருந்தது இறைவனின் வல்லமை. இறைவனில்லாத எலியா தம் பிதாக்களைப்பார்க்கிலும் சிறந்தவரல்ல, நல்லவரல்ல.
யார் நல்லவன்? பக்திவைராக்கியம் இருந்தால் போதுமா? “சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாய் இருந்தேன்…
உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்… என்றான்” 1 இராஜாக்கள் 19:14. சுயமேன்மை, சுயபாராட்டு, சுயநீதி தொனிக்கும் சொற்கள்! அதற்கு இறைவனளித்த பதில்? “பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை
முத்தம் செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்” 1 இராஜாக்கள் 19:18.யார் நல்லவன்? ஆளுபவர்களின் குற்றங்களைச் சுட்டிக்காட்டும் தைரியமிருந்தால் போதுமா?