5. பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுதல் (அப்போஸ்தலர் 2:1-13)
அப்போஸ்தலர் 2:1-4
1பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். 2 அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. 3 அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. 4 அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

சூரியன் பூமியின் மீது விழுந்தால் என்னவாகும் என்று நினைக்கிறீர்கள்? வாயுக்களால் ஆன இந்த மிகப்பெரிய உருண்டை நம்முடைய பூமிக்குச் சற்று அருகில் வந்தால்கூட, பூமி அதிலுள்ள அனைத்துப் படைப்புகளோடும் அழிந்துபோய்விடும். அப்படியிருக்கும்போது பூமியின் மீது சூரியன் விழுவதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கவே முடியாது. கண்ணிமைக்கும் நேரத்தில் நாம் ஆவியாகிவிடுவோம். இந்தச் சூரியன் நம்மிடத்தில் வராவிட்டாலும் அதைப் படைத்தவரே அக்கினிச் சுழல்காற்றில் இவ்வுலகத்திற்கு வந்தார். அவர் உலகத்திலிருப்பவர்களை நியாயம் தீர்க்கும்படி வராமல், அவருக்காகக் காத்திருந்தவர்கள்மேல் இரக்கம் காண்பிக்கும்படி வந்தார். இறைவன் மனிதனிடத்திற்கு வருகிறார். இதைப் புரிந்துகொள்பவர்கள் அவரை ஆராதனை செய்கிறார்கள். மேலும் இறைவன் மனிதனில் வாழ்கிறார். இந்த உண்மை மனிதர்களாகிய நமது புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது. திருச்சபையின் தோற்றத்தைக் குறித்த இந்த வரலாற்றுக் குறிப்பை கவனமாக வாசித்துப் பாருங்கள். தீமை நிறைந்த இந்த உலகத்திற்கு இறைவனுடைய அன்பும், கிருபையும், பொறுமையும் எவ்வாறு வந்தது என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள்.
யூதர்களுடைய பண்டிகையாகிய பஸ்காவிற்குப் பிறகு ஐம்பது நாட்கள் சென்று அவர்கள் கொண்டாடும் பழங்காலப் பண்டிகைதான் பெந்தகொஸ்தே பண்டிகையாகும். அது கோதுமை அறுவடைக்காக நன்றி செலுத்தும் ஒரு தருணமாகும். கிறிஸ்து ஒரு கோதுமை மணியைப் போல விழுந்து தம்முடைய உயிரைக் கொடுத்தார். அவருடைய உயிர்த்தெழுதல், இறைவனுக்குப் படைக்கப்படும் முதற்பலன்களைப் போல, இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் அவருக்குப் பிரியமான பலியாகக் காணப்பட்டது. சீடர்களும் தங்கள் கர்த்தருக்காகக் காத்திருந்து விண்ணப்பிக்கும்போது இறைவனுடைய முழுமையான அறுப்பின் முதற்பலன்களாகவே காணப்பட்டனர். ஆவிக்குரிய அறுவடை இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் கோதுமை மணியாகிய கிறிஸ்துவினால் விளைந்த பலனாயிருக்கிறோம். நாம் இன்று அறுவடை செய்துகொண்டிருக்கும் பலன்களைத்தான் தீர்க்கதரிசிகள் காண ஆசைப்பட்டார்கள். குமாரன் மரணத்தை அனுபவித்தபடியால் பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகத்திற்கு வந்தார்.
கிருபையின் ஆவியானவர் எல்லா மனிதர்களுக்கும் இரக்கத்தையும் வெளிச்சத்தையும் காண்பிப்பதில்லை. எருசலேம் தலைநகரத்தில் இருந்த அனைவரும் இறை அன்பைப் பெற்றுக்கொள்ளவில்லை. இறைவனுடைய அன்பின் சுழல்காற்று கிறிஸ்துவை நேசித்து அவரிடம் விண்ணப்பித்துக் கொண்டிருந்தவர்களையே சூழ்ந்துகொண்டது. இறைவனுடைய வல்லமை எருசலேமிலிருந்த தேவாலத்தைத் தொடவில்லை. அங்கிருந்த ரோம இராணுவமும் இறைவனுடைய நித்திய வாழ்வினால் தொடப்படவில்லை. பிதாவினுடைய வாக்குத்தத்தத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தவர்கள் மட்டுமே பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நிரப்பப்பட்டார்கள்.
அங்கிருந்த மக்களில் இயேசுவின் சீடர்களும் அவருடைய குடும்பத்தவர்களும் இருந்தனர். அவர்கள் அனைவரும் கிறிஸ்து எழுந்தருளிச் சென்ற வானத்திலிருந்து பலத்த சத்தத்தை திடீரெனக் கேட்டபோது அவர்கள் பயமும் அதிர்ச்சியும் அடைந்திருப்பார்கள். அது பயங்கரமான பெருங்காற்றின் சத்தத்தைப் போல இருந்தது. அந்த காற்றின் சத்தத்தினால் ஜன்னல்கள் அசைக்கப்படவில்லை, கதவுகள் அடிபடவில்லை, இலைகள் அசையவில்லை. ஆனால் அது அவர்கள் கூடியிருந்த வீடு முழுவதையும், அறைகள் முழுவதையும், ஏன் அந்த வீடிருந்த பகுதி முழுவதையும் சூழ்ந்துகொண்டது. அவர்கள் ஆச்சரியத்தினால் தங்கள் கண்களையும் காதுகளையும் அகல விரித்தவர்களாய் உட்கர்ந்திருந்தார்கள். அவர்கள் புயல்காற்றை உணரவில்லை. ஆனால் அதன் சத்தத்தைத் தெளிவாக தங்கள் காதுகளினால் கேட்டார்கள். அவர்கள் விண்ணப்பம் செய்துகொண்டிருக்கும்போதே இந்த நிகழ்வு நடந்தேறியது. அவர்கள் தங்கள் இருதயத்தைக் கர்த்தரிடத்தில் திறந்துகொடுத்தார்கள். அவருடைய வல்லமை அவர்களில் விளங்கியது. திடீரென அவர்கள் அக்கினி மயமான நாவுகள் அந்த புயல்காற்றிலிருந்து அவர்கள் மேல் விழுவதைப் பார்த்தார்கள். ஆனால் அந்த நெருப்பு மேலும் கீழும் அசையவோ அல்லது அங்கிருந்த வீட்டையோ வீட்டுப் பொருட்களையோ எரித்துப் போடவோ, அவர்களைச் சுட்டெரிக்கவோ இல்லை. அவை அவர்களுடைய விண்ணப்பங்களின் மேல் அமைதியாக வந்தமர்ந்தது. இந்த வித்தியாசமான அக்கினி மயமான நாவுகள் அவர்கள் மூலமாக கிறிஸ்து என்ன செய்யவிருக்கிறார் என்பதைக் காண்பித்தது. அசுத்தமும், பொய்யும் உலக ஞானமும் நிறைந்த அவர்களுடைய நாவுகள் எரிக்கப்பட்டு நீக்கப்படும் என்பதையும் அதற்குப் பதிலாக இறைவன் அவர்களுக்கு புதிய வல்லமையான நாவுகளைக் கொடுப்பார் என்பதையும் அதன் மூலமாக அவர்கள் இறைவனுடைய தெய்வீக அன்பைப் பற்றிப் பேசுவார்கள் என்பதையும் அவை சித்தரித்தன.
கர்த்தருடைய ஆவியினால் நிறைந்தவர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சியையும் ஆழமான ஆறுதலையும் பெற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய பாவத்தின் பாரம் அவர்களை விட்டு நீங்கிற்று, அவர்களுடைய இருதயம் மென்மையானது, அவர்களுடைய துக்கங்கள் கடந்துபோனது, அவர்களுடைய மங்கிய கண்கள் பிரகாசமடைந்தது, அவர்களுடைய சோர்வுற்ற நாவுகள் இறைவனைத் துதிக்க ஆரம்பித்தன. “பிதாவே, உம்முடைய குமாரனுடைய மரணத்தினாலே நீர் எங்களுடைய பிதாவானீர். அவருடைய இரத்தம் எங்களுடைய பாவங்களை மன்னித்தது. தகுதியற்ற எங்களில் உம்முடைய ஆவியானவர் வாழ்ந்து, எங்களை முற்றிலும் பரிசுத்தப்படுத்துகிறார். உம்முடைய கிருபையின் மகிமையினால் நீர் எங்களுக்கு வாழ்வளித்திருப்பதால் நாங்கள் உம்மை மகிமைப்படுத்தி, உம்மைத் துதிக்கிறோம்.”
இறைவனுடைய அன்பின் புயல்காற்று, நன்றிப் பெருக்கை உண்டுபண்ணியது. அது பரிசுத்த வார்த்தைகளையும் அறியப்படாத பரலோக சிந்தனைகளையும் பல வாய்களிலிருந்து புறப்படப்பண்ணியது. பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய பேச்சை வழிநடத்தி, அவர்களுடைய சிந்தைகளை நிரப்பி, அவர்களுடைய சித்தங்களை ஆசீர்வதித்தார். அவர்கள் தங்கள் மனிதத் தன்மையில் கிளர்ச்சியடைந்தவர்களாகக் காணப்படவில்லை. மாறாக, மனதையும் ஆத்துமாவையும் கூட கட்டுப்படுத்தும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தார்கள். அவருடைய வல்லமையும் நற்குணமும் வெளிப்பட்ட காரணத்தினால், அவர்கள் முழுவதும் இறைவனுடைய ஆலயமாக மாறிப்போனார்கள்.
தயவு செய்து கவனியுங்கள். பேதுருவும் யோவானும் மட்டும் பரிசுத்த ஆவியானவரினால் நிறையப்படவில்லை. அங்கிருந்த அனைவரும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தார்கள். தெய்வீக புயல்காற்றில் இறங்கிவந்த அக்னி மயமான நாவுகளினால் அவர்கள் வருத்தப்படவில்லை, மாறாக அவர்கள் இறைவனுடைய பிரசன்னத்தினால் சூழப்பட்டார்கள். பிதாவினுடைய வாக்குத்தத்தம் அப்பொழுது நிறைவேறியது. அப்போது விண்ணப்பித்துக் கொண்டிருந்த அனைவரும் இறைவனுடைய பிள்ளைகளானார்கள். அவர்கள் இறைவனுடைய பிள்ளைகளாக தத்தெடுக்கப்பட்டு அவருடைய சத்தியம், அன்பு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றினால் நிறையப் பெற்றார்கள். பெந்தகொஸ்தே நாளன்று மரணத்திற்கு உட்பட்ட இந்த உலகத்தில் தெய்வீகமானதும், இவ்வுலகத்திற்கு அப்பாற்பட்டதுமான காரியம் நிகழ்ந்தது. இவ்வாறு நம்பிக்கையும் ஆன்மீக எழுப்புதலும், பரிசுத்த திரித்துவ இறைவனுக்குச் செலுத்தப்படும் துதியோடும் நன்றிகளோடும் எருசலேமிலிருந்து புறப்பட்டு வரத்தொடங்கியது.
அப்போஸ்தலர் 2:5-13
5 வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். 6 அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். 7 எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? 8 அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? 9 பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, 10 பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும், 11 கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். 12 எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 13 மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.

அக்னி மயமான நாவுகளுடைய வல்லமைக்குக் கீழாக இருந்த சீடர்கள் என்ன பேசினார்கள் என்று நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? நீங்கள் 11-ம் வசனத்தைப் படித்துப் பார்ப்பீர்களானால் அவர்கள் இறைவனுடைய மகத்துவங்களைப் பற்றியே பேசினார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள். இவ்வுலகத்தைப் படைத்ததற்காக இறைவனை அவர்கள் துதித்தார்கள். குற்றவாளிகளான அவருடைய பிள்ளைகளை அவர் பொறுமையோடு நடத்துவதற்காக அவருக்கு நன்றி செலுத்தினார்கள். அவருடைய நியாயப்பிரமாணத்தை மகிமைப்படுத்திப் பேசி, தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாக அவர் தமது சித்தத்தை வெளிப்படுத்தியபடியால் அவருக்கு நன்றி செலுத்தினார்கள். குமாரனுடைய பிறப்பிற்காகவும், அவருடைய மனுவுருவாதலுக்காகவும், அவர்களுடைய கண்களுக்கு முன்பாகத் தோன்றியதும் அவர்கள் கண்ணாரக் கண்டு, காதாரக் கேட்டதுமான அவருடைய அன்புக்காகவும் அவர்கள் பிதாவிற்கு நன்றி செலுத்தினார்கள். அவருடைய அற்புதங்களுக்காக அவர்கள் கர்த்தரைத் துதித்தார்கள். அவருடைய வார்த்தைகளைத் திரும்பச் சொல்லி அவருடைய சிலுவை மரணத்திற்காகவும் உயிர்த்தெழுதலுக்காவும் அவரைத் தொழுதுகொண்டார்கள். அவர்கள் உயிருள்ள கிறிஸ்துவை தங்கள் வாழ்வில் சந்தித்ததற்காக இறைவனைத் துதித்தார்கள். அவர்கள் அவருடைய பரமேறுதலை நினைத்து மகிழ்ந்து, நீண்ட காலம் காத்திருந்த வாக்குத்தத்தம் நிறைவேறியதை எண்ணி உவகையடைந்தார்கள். உலகத்திற்கு நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டிய தேவையை அவர்கள் நம்பி, அனைவரும் இரட்சிப்பைக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற இறைவனுடைய சித்தத்தினால் நிறைந்தார்கள். நீங்களும் இறைவனுடைய அற்புதமான செயல்களை நினைத்து அவருக்கு துதிகளைச் செலுத்துகிறீர்களா? உங்கள் நன்றி எங்கே? நீங்கள் உங்களையே கனப்படுத்திக் கொள்கிறீர்களா? அல்லது இறைவனை மகிமைப்படுத்துகிறீர்களா? நீங்கள் உங்களை மறந்து பரலோகத்தில் இருக்கும் இறைவனை மட்டுமே மகிமைப்படுத்துங்கள்.
பரிசுத்தமும், அமைதியும், துதியும் நிறைந்த அந்த இனிமையான நேரம் நீடிக்கவில்லை. கர்த்தருக்காகக் காத்திருந்த மற்றவர்களும் அந்த புயல் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்கு வேகமாகக் கூடிவந்தார்கள். அங்கு கூடியிருந்த கலிலேயர்கள் தங்கள் நாட்டின் எல்லைகளைவிட்டு வெளியே எங்கும் செல்லாதவர்களாகவும் வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ளாதவர்களுமாயிருந்தும் பல்வேறு மொழிகளைப் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தவர்ளாக நின்றார்கள். இறைவன் தனது கோபத்தினால் மக்களுடைய மொழிகளைத் தாறுமாறாக்கி உலகெங்கிலும் சிதறிப்போகச் செய்ததால் ஏற்பட்ட விளைவுகளைப் படைப்பாற்றலுள்ள பரிசுத்த ஆவியானவர் பெந்தகொஸ்தே நாளில் மேற்கொண்டார். ஆதியில் மனிதர்கள் தங்கள் பெருமையினால் பாபேல் கோபுரத்தைக் கட்டுவதன் மூலமாக இறைவனுடைய நிலையை அடைய நினைத்தார்கள். இப்பொழுது கிறிஸ்து தம்முடைய சீடர்களுடைய பெருமையாகிய பாவத்தை மன்னித்திருந்தார். இங்கு விண்ணப்பதித்துக் கொண்டிருந்தவர்களின் இருதயத்தில் கிறிஸ்துவினுடைய ஆவியின் சாந்தமும் மனத்தாழ்மையும் குடிகொண்டிருந்தது. அவர்களில் யாரும் மற்றவர்களைவிட தங்களை சிறந்தவர்கள் என்றோ, அறிவாளிகள் என்றோ, பெரியவர்கள் என்றோ நினைக்கவில்லை. அவர்களில் பெலமுள்ளவன் பெலவீனனுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து, தன்னை அனைவரிலும் கடையானவனாகக் கருதினான். பரிபூரணத்தின் கட்டாகிய அன்பினால் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் நடுவில் தம்மை வெளிப்படுத்தியிருந்தார். வித்தியாசமானவர்களும் சிதறப்பட்டவர்களாகவும் இருந்த பல மக்கள் கூட்டத்தை அவர் ஒன்றாக இணைத்திருந்தார். இவ்வாறு சிதறப்பட்ட இனங்களின் ஒன்று கூடுகையை பற்பல பாஷைகளின் வரம் அடையாளப்படுத்தியது. பெந்தக்கொஸ்தே நாளிலிருந்து இறைவனுடைய மக்கள் நடுவிலிருந்த மொழி மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகள் அனைத்தும் கொள்கையளவில் அகற்றப்பட்டு விட்டது. அவர்கள் நடுவில் கற்றுத் தேர்ந்த ஞானிக்கும் மனநலம் குறைந்தவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அழிவிற்குரிய மனிதனை நித்திய பிதாவின் நிலைக்கு உயர்த்தும் மாபெரும் கொடையாகிய பரிசுத்த ஆவியானவரினால் அனைவரும் இறைவனுக்குள் ஒன்றாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமற்றவர்களுமாயிருப்பதற்கு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே அவர்களை அவர் பரிசுத்தமாக்கினார்.
பெந்தகொஸ்தே நாளில் இறைவனுடைய இருப்பிடமாகிய எருசலேமில் பல மக்களுடைய பிரதிநிதிகள் ஒன்றாகக்கூடி அறுவடையின் இறுதியில் இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள். பெர்சியா, மெசப்பொத்தாமியா, சின்ன ஆசியா, வட ஆப்பிரிக்கா, இத்தாலி மற்றும் கிரேத்தா போன்ற நாடுகளிலிருந்த யூதர்கள் எருசலேமில் கூடிவந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் கலிலேயர்கள் தங்கள் மொழிகளில் இறைவனுடைய மகத்துவங்களைப் பற்றிப் பேசக்கேட்டார்கள். முதலில் அவர்கள் புயல்காற்றின் சத்தத்தைக் கேட்டார்கள். இரண்டாவது அவர்கள் நெருப்பு நாவுகளின் வடிவத்தைக் கண்டார்கள். மூன்றாவது அவர்கள் கலிலேயருடைய மொழியைப் புரிந்துகொண்டார். ஏனென்றால் இறைவனே அந்நாளில் அனைத்து மொழிகளின் மொழிபெயர்ப்பாளராக தன்னை வெளிப்படுத்தினார்.
அங்கு கலிலேயருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் எகிப்திலும் அரேபியாவிலும் இருந்து போனவர்களும் இருந்தார்கள். பரிசுத்த ஆவியானவர் வெளிப்பட்ட ஆரம்பத்திலேயே அரேபியர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் மாபெரும் இரட்சிப்பின் செய்தி பரிசுத்த ஆவியினால் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த மொழிகளில் எதுவும் அவருக்கு அந்நியமானவைகளோ கடினமானவைகளோ அல்ல. அவர் தம்முடைய அன்பினாலே அவைகளைத் திருப்தியாக்கி, அவைகளின் பொருளைப் பரிசுத்தத்தினாலே நிரப்பினார். நீங்கள் உங்கள் சொந்த மொழியில் இந்த திரியேக இறைவனைத் தொழுகொள்கிறீர்களா? உங்கள் நாவையும், இருதயத்தையும், தீர்மானத்தையும், உங்கள் பெலன் முழுவதையும் அவரிடம் ஒப்படையுங்கள். அப்பொழுது இறைவனுடைய துதியின் மகிழ்ச்சியில் நீங்கள் நிலைத்திருப்பீர்கள்.
இந்தப் பெருங்காற்றின் சத்தத்தைக் கேட்கும்படி ஓடிப்போனவர்கள் அதிவிரைவாக இரண்டுபட்டுப் போனது ஆச்சரியமாயுள்ளது. ஒரு பிரிவு மக்கள் நடைபெற்றவற்றை மிகவும் கவனமாகக் கவனித்தார்கள். மற்றவர்கள் நடைபெற்றதைக் கண்டு பரியாசம் செய்தார்கள். முதல் தரப்பு மக்கள் பரிசுத்த ஆவியின் இரகசியத்தை முழுவதும் அறிந்துகொள்ள விரும்பினார்கள். மற்றவர்கள் இறைவனில் மகிழ்ந்து பேசியவர்களுடைய பேச்சை குடிபோதையில் உள்ளவர்களுடைய உளறலாகக் கருதினார்கள். அவர்கள் தங்கள் அனுபவத்தில் அப்போஸ்தலர்களுடைய நிலையை ஏற்கனவே அனுபவித்திருப்பார்கள் போலும். ஆனாலும் அவர்கள் இறைவனுடைய மகிழ்ச்சியையும் நித்திய அன்பின் வல்லமையையும் அறிந்துகொள்ள முடியாதவர்களாயிருந்தார்கள். அவர்களுடைய இருதயம் பகைமையினால் மேலும் மேலும் கடினப்பட்டுப் போனது.
6. பெந்தகொஸ்தே நாளில் பேதுருவின் பிரசங்கம் (அப்போஸ்தலர் 2:14-36)
அப்போஸ்தலர் 2:14-21
14 அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். 15 நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. 16 தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. 17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; 18 என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள். 19 அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். 20 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். 21 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.

அந்நிய மொழியில் பேசுவது முக்கியமானது. ஆனாலும் தீர்க்கதரிசனம் உரைப்பது அதிலும் முக்கியமானது. அந்நிய பாஷையில் பேசுவது பரிசுத்த ஆவியின் வரமாகும். அந்நிய மொழியில் பேசும் ஒருவர் இறைவனுக்கு நன்றி செலுத்தவும், துதி செலுத்தவும், விண்ணப்பிக்கவும் ஆரம்பிப்பார்கள். ஆனாலும் அதன் பொருள் அவருக்குப் புரியாது. இருப்பினும் உண்மையான தீர்க்கதரிசனம் என்பது கேட்பவர்களுடைய உள்ளத்தை உணர்த்தி அவர்களை இறைவனுடைய சமூகத்தில் நிறுத்துகிறது.
மகிழ்ச்சியும் துதியும் நிறைந்து அந்நிய மொழிகளினால் அப்போஸ்தலர்கள் துதித்துக்கொண்டிருந்ததைக் கண்ட யூதர்களுடைய இருதயத்தை பேதுருவின் வாயிலிருந்து புறப்பட்ட பரிசுத்த ஆவியின் பிரசங்கம் உணர்த்தியது. இறைவனுடைய பரிசுத்த ஆவியானவர் தோன்றி, தம்முடைய வருகைக்கான காரணத்தை வெளிப்படுத்தினார் என்பதற்கு அப்போஸ்தலர்கள் தெளிவாக சாட்சி பகர்ந்தார்கள்.
தன்னுடைய பேச்சுத் திறமையை வெளிப்படுத்தவும் தனக்குச் செவிகொடுத்தவர்களுக்குக் கிளர்ச்சி உண்டுபண்ணவும் பேதுரு அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை. மாறாக பன்னிரெண்டு அப்போஸ்தலர்களும் ஒன்றாகக் கூடி விண்ணப்ப வீரர்களாக பேச்சாளரைப் சுற்றி நின்றார்கள். ஏற்கனவே ஆயத்தம் செய்யாதபடியால் அப்போது பேசுவதற்கு பேதுரு பயப்பட்டிருக்கலாம். ஆகிலும் சத்திய ஆவியானவர் அவருடைய இருதயத்தை அமைதிப்படுத்தி, அவருடைய இருயத்தை உற்சாகப்படுத்தினார். சில நாட்களுக்கு முன்பு மற்றவர்களுக்குப் பயந்து அறையைப் பூட்டிக்கொண்டு உள்ளிருந்த பேதுரு இப்போது தைரியமாகப் பேசத்தொடங்கினார். இறைவனுடைய வல்லமை அவர்களை நிரப்பியபோது அவர்களுடைய நாவுகள் சரளமாகப் பேசத்தொடங்கின. பரிசுத்த ஆவியிடமிருந்து வந்த வார்த்தைகள் அவர்களுடைய இருதயத்தை நிரப்பியதால் அவர்கள் மூலமாக இறைவன் பேசத்தொடங்கினார். தனக்குச் செவிகொடுத்தவர்களுக்கு முன்பாக பேதுரு பரவச நிலையை அடையவில்லை. மாறாக அவர்களுக்கு முன்பாக நின்று, தைரியத்தோடும் கனத்தோடும் பேசினார்.
முதலாவது, பேதுரு இப்படிப்பட்ட ஒரு சமய நம்பிக்கை நிறைந்த நகரத்திலே காலை ஒன்பது மணிக்கெல்லாம் மக்கள் குடிபோதைக்கு உள்ளாவது சாத்தியமில்லை என்று அவர்களுடைய தவறான குற்றச்சாட்டிற்கு பதிலுரைத்தார். அப்படிப்பட்ட செய்கையை அயலகத்தார் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அப்படிப்பட்ட குடிகாரர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்.
இரண்டாவது, மக்களைப் பிடிக்கிறவனாகிய பேதுரு, தனக்குச் செவிகொடுத்த மக்களை நோக்கித் திரும்பினார். பரிசுத்த ஆவியானவர் அவர்களிடத்தில் வரும்படி அவர்கள் செவிகொடுத்து, தங்கள் இருதயத்தைத் திறக்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார். பேதுரு அவர்களுடன் பேசும்போது கண்ணீர்விட்டு, உணர்வுபூர்வமாக, உளவியல் ரீதியாக அவர்களிடம் பேசவில்லை. அவர்கள் சித்தத்தை அசைக்கத்தக்கதாக கடுமையான தண்டனையைப் பற்றியும் பேசவில்லை. மாறாக, அவர் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்களையும் அவை வரலாற்றில் எவ்விதமாக நிறைவேறியுள்ளது என்பதையும் பற்றி பேசினார். அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வுகளை அவர் வேதாகமத்தின் வார்த்தைகளைக் கொண்டு அவர்களுக்கு விளக்கப்படுத்தினார். அவர்களுடைய கண்களுக்கு முன்பாக பரிசுத்த ஆவியானவர் சீடர்கள் மீது வந்திறங்கிய அந்த நிகழ்வு இறைவன் தம்முடைய வார்த்தையில் ஏற்கனவே முன்னறவித்த நிகழ்வுதான் என்று பேருது அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
யூதர்களுடைய வேதாகமத்தில் நன்கு அறியப்பட்டிருந்த வேதபகுதியில் இருந்து அப்போஸ்தலருடைய தலைவன் மேற்கோள் காட்டினார். “இதுதான் தீர்க்கதரிசியாகிய யோவேலினால் முன்னறிவிக்கப்பட்டது” என்று அவர் எடுத்துரைத்தார். அந்தத் தீர்க்கதரிசனம் வெளிப்படையாக நிறைவேறியது. இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகத்தில் வந்து வாசம்பண்ணுகிறார். ஆகவே நாம் மீண்டும் வரவேண்டும் என்று விண்ணப்பிக்கத் தேவையில்லை. ஒரு சிறு பிள்ளை ஒரு பரிசைப் பெற்றுக்கொள்வதைப் போல நாமும் அவரைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் அவருக்காக இறைவனைத் துதிப்பதை மட்டுமே செய்ய வேண்டும். நற்செய்தியில் கிறிஸ்து நம்மை மனம் மாற்றி நம்முடைய இருயத்தைப் புதிதாக்குவதைப் போல, இந்த ஆவியானவர் வார்த்தையிலிருந்து நம்முடைய இருதயத்திற்குள் ஊடுருவிச் செல்வார். உபவாசமோ, துறவறமோ அல்லது எந்த கடுமையான சுயவெறுப்போ நம்முடைய சரீரத்தை நல்ல ஆவியின் பிறப்பிடமாக மாற்றாது. திரித்துவத்தின் இந்த தெய்வீக நபர் நம்முடைய இருதயத்தைத் திறந்து அவரை நாம் வரவேற்க வேண்டும் என்று நம்மிடம் எதிர்பார்க்கிறார். “பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று இயேசு தம்முடைய சீடர்களுக்குச் சொன்னதை நாம் மகிழ்ச்சியோடும் நன்றியோடும் நினைவுகூருகிறோம்.
ஆண்களும் பெண்களும், வாலிபரும் வயோதிபரும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வார்கள் என்று தீர்க்கதரிசியாகிய யோவேல் முன்னறிவித்திருந்தார். கிறிஸ்துவின் வாக்குத்தத்தம் யூதர்களுக்கு மட்டும் உரியதல்ல. இந்தத் தீர்க்கதரிசனம் யூதர்களுக்கு மிகப் பெரிய அற்புதமாயிருந்தது. ஏனெனில் ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இது ஆணுக்கும் பெண்ணுக்கும், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும், அடிமைகளுக்கும் சுயாதீனருக்கும், யூதர்களுக்கும் புறவினத்து மக்களுக்கும் இடையிலுள்ள அனைத்து ஏற்றத்தாழ்வையும் நீக்குவதாயுள்ளது. இன்று இறைவனுடைய சந்தோஷத்திற்குள் யாரும் நுழையலாம். அவருடைய மகிழ்ச்சி முழு உலகத்தையும் ஆட்சி செய்கிறது. சிலுவையில் அறையப்பட்டு, கொலை செய்யப்பட்டு, உயிரோடு எழுந்தவரை விசுவாசிக்கும் மக்களுடைய நொருங்குண்ட இருதயத்தில் அந்த மகிழ்ச்சி உணரப்படுகிறது.
இறைவன் யோவேல் தீர்க்கதரிசி மூலமாகவும் அப்போஸ்தலனாகிய பேதுரு மூலமாகவும் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவது இறுதி காலத்தின் ஒரு அடையாளம் என்பதைக் கூறினார். ஆயிரக்கணக்கான வருடங்களாக இறைவன் தீயவர்களுடைய நடவடிக்கைகளைப் பொறுமையோடு சகித்துக்கொண்டு வந்தார். ஆனால் இறைவனுடைய மகனாகிய கிறிஸ்து சிலுவையிலே நம்முடைய பாவங்களை மன்னித்தார். ஆகவே எந்தத் தடையுமின்றி பரிசுத்த ஆவியானவர் புறப்பட்டு வரக்கூடியதாயிருந்தது. பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறவர்கள் தீர்க்கதரிசனம் கூறுகிறார்கள், இறைவனை அறிந்துகொள்கிறார்கள், அவரைத் துதித்து, கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிறார்கள். இறைவனுடைய ஆவியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் நியாயத்தீர்ப்புக்கு உள்ளாகிறார்கள். அந்த நியாயத்தீர்ப்பு இறுதி நாளில் வரப்போகும் ஒன்று மட்டுமல்ல. அது பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்ட நாளிலிருந்தே ஆரம்பித்து விட்டது. அழியாத வாழ்வைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் நியாயந்தீர்க்கப்படுகிறார்கள். இறைவனுடைய ஆவிக்குத் தங்களைத் திறந்துகொடுக்கிறவர்கள் அழியா வாழ்வை அனுபவிக்கிறார்கள். அவர்கள் இறைவனையும் அவரது விருப்பத்தையும் அறிந்துகொள்கிறார்கள். மேலும் யாருடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் வாழ்கிறாரோ அவர்கள் இறைவனுடைய பிள்ளைகளாகிறார்கள்.
இந்தக் கிருபையின் நற்செய்தி அறிவிக்கப்படும்போது, இந்த முழு உலகமும் இருளடைந்து, புழுதியாகி அழிந்து போவதும் அறிவிக்கப்படுகிறது. உலக யுத்தங்களில் இரத்த ஆறு ஓடும், பூமியதிர்ச்சிகள் பூமியைப் பிளந்துபோடும், கிறிஸ்துவின் ஆவியினால் முத்திரை போடப்படாத அனைவரும் பிசாசினால் சோதிக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள்.
அதன் பிறகு கர்த்தருடைய நாளாகிய இறுதி நாள் வரும். அப்போது கிறிஸ்து வானத்தில் மின்னல் போல பேரொளியாக மேகங்கள் மீது பிரகாசத்துடன் தோன்றுவார். வரப்போகிறவரைக் குறித்த பயத்தினால் இவ்வுலகமே நடுங்கித் தவிக்கும் என்ற உண்மை அப்போது தெளிவாகத் தெரியும். நரகத்தின் சக்திகள் தங்கள் இறுதி அழிவிற்கு முன்பாக தங்களுடைய இறுதி யுத்தத்திற்கு ஆயத்தப்படும். நியாயத்தீர்ப்பு நாளைக் குறித்த அறிவும் போதனையும் அந்நாளில் நடைபெறவிருக்கின்ற அற்புதங்களும் புதிய ஏற்பாட்டின் அடிப்படைப் போதனைகளாகும்.
தன்னில் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருப்பவர்கள் பரலோகத்தின் வழியாகக் கடந்து வந்தவர்கள். அவர்களுடைய அழிவிற்குரிய உடலில் இறைவனுடைய உயிர் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் விண்ணப்பத்தின் ஆவியாயிருக்கிற காரணத்தினால் அவர்கள் பதில் கிடைக்கும் விண்ணப்பங்களை ஏறெடுக்கிறார்கள். அவர்களுடைய விண்ணப்பங்களில் கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லிக்கூப்பிடும்படி பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய நாவுகளில் கிறிஸ்துவின் நாமத்தை எழுதுகிறார். நம்முடைய விண்ணப்பங்களுக்கு கிறிஸ்து நிச்சயமாக பதில் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையினால், கிறிஸ்துவினுடைய இரத்தம் தெளித்தலோடு விண்ணப்பம் செய்கிறவர்கள் நிச்சயமாக விடுவிக்கப்படுகிறார்கள். இதுவே நம்முடைய ஆறுதலாகவும், நிச்சயமாகவும், பரிசுத்த ஆவிக்குள்ளான அச்சாரமாகவும் இருக்கிறது. இறுதி நியாயத்தீர்ப்பு நாளில் இறைவனுடைய கோபம் பற்றி எரியும் போது, கிறிஸ்து தன்னுடையவர்களை நிச்சயமாகப் பாதுகாப்பார்.
அப்போஸ்தலர் 2:22-23
22 இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். 23 அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.

பரிசுத்த ஆவியானவர் தம்மைப் பற்றிப் பேசாமல் கிறிஸ்துவையே மகிமைப்படுத்துகிறார். அவர் அன்பாக இருப்பதால் அவரிடத்தில் சுயநலமில்லை. பரிசுத்த திரித்துவத்திலுள்ள ஒவ்வொரு நபர்களும் ஒருவரையொருவர் நேசித்து, ஒருவர் மற்றவரிடத்தில் நம்மை நடத்துகிறார்கள். குமாரன் பிதாவை மகிமைப்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் குமாரனை மகிமைப்படுத்துகிறார். இரட்சிப்பை நிறைவேற்றும்படி குமாரன் பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதைப் போல, வானத்திலும் பூமியிலும் அனைத்து அதிகாரமும் உடைவராக குமாரனைப் பிதா தந்தருளினார். இறைவனை அறிய விரும்புகிறவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரிடையே உள்ள அன்பை கவனித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில் இறைவன் அன்பாகவே இருக்கிறார். அவருடைய ஐக்கியம் அன்பில் தொடருகிறது.
பேதுரு அதிக நேரம் பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்படுவதைப் பற்றிப் பேசிக்கொண்டிராமல், இயேசு கிறிஸ்துவைக் குறித்து உடனடியாகச் சாட்சிபகரத் தொடங்கிவிட்டார். தம்மையே பலியாகக் கொடுத்த கிறிஸ்துவினை ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் தனது கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்தவராக தரிசித்த காட்சி சீடர்களுடைய உள்மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. அவர்கள் விண்ணப்பித்து, இந்தக் காரியங்களைப் பற்றிச் சிந்தித்து, அவற்றைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை உற்றுப் பார்த்து, ஒரு தெளிவான புரிந்துகொள்ளுதலுக்குள் அவர்கள் வந்திருந்தார்கள். பரிசுத்த ஆவியானவர் ஏன் ஊற்றப்பட்டார் என்பதை அங்கிருந்த மக்கள் புரிந்துகொள்ளும்படி பேதுரு நாசரேத்தூர் இயேசுவை அவர்களுக்கு முன்பாக விளக்கிக் காண்பித்தார்.
இயேசுவைப் புறக்கணித்துக் கொலை செய்த யூதர்களுடைய பாவத்தை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கண்டித்து உணர்த்துகிறார் என்பதை பேதுரு தன்னுடைய ஆழ்மனதில் நன்கு அறிந்திருந்தார். அழகான வார்த்தைகளையும் ஆசீர்வாதமான வாக்குறுதிகளையும் கொண்டு பேதுரு அவர்களுடன் பேசவில்லை. அவர்கள் குற்றவாளிகள் என்பதையே பேதுரு முதலாவது அவர்களுக்கு அறிவிக்க வேண்டியிருந்தது. ஆகிலும் இந்த உண்மையை அவர் கடுமையாகவோ தீவிரமாகவோ எடுத்துரைக்கவில்லை. அவர் அவர்களுடைய பாவத்தை படிப்படியாக உணர்த்தினார். அன்பின் வார்த்தைகளினால் பேசி அவர்களுடைய குற்றத்தை அவர்களுக்கு முழுவதுமாக உணர்த்தினார். பேதுரு தன்னுடைய பிரசங்கத்தில் இயேசுவைக் குறிப்பதற்கு “கிறிஸ்து” என்ற வார்த்தையையோ “இறைவனுடைய மகன்” என்ற வார்த்தையையோ பயன்படுத்தாமல், “இறைவனுடைய மனிதன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர்கள் கடைசிவரை தன்னுடைய பிரசங்கத்திற்குச் செவிகொடுக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் இடையிலேயே கோபப்பட்டு கொதித்து எழுந்துவிடக்கூடாது என்பதிலும் அவர் அதிக கவனத்துடன் பிரசங்கித்தார்.
தன்னுடைய பிரசங்கத்தின் அடுத்த பகுதிக்குப் போவதற்கு முன்பாக, பெருமூச்சு விட்டவராக, அவர்கள் அதைக் கவனமாகக் கவனிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அவர், “உங்கள் அனைவருக்கும் நசரேயனாகிய இயேசுவைத் தெரியும். அவர் இதுவரை வந்த தீர்க்கதரிசிகளைக் காட்டிலும் அதிகமான அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் இறைவனால் ஆதரிக்கப்பட்டவராயிருந்தார். அவர் இறந்தவர்களை உயிரோடு எழுப்பினார். பிசாசுகளைத் துரத்தினார், பாவங்களை மன்னித்தார், ஐந்து அப்பங்களினால் ஐயாயிரம் பேருடைய பசியைத் தீர்த்தார், கடுமையான காற்றையும் புயலையும் அமைதிப்படுத்தினார். இந்த அற்புத செயல்கள் சாதாரண மனிதனுடைய செயல்கள் அல்ல, அவை இறைவனுடைய செயல்கள். மனிதனாகிய இயேசு உன்னதமான இறைவனுடைய சித்தத்தோடு இணைந்து வாழ்ந்த காரணத்தினால், சர்வ வல்லவர் இயேசுவின் மூலமாகச் செயல்பட்டார். இவ்வாறு பரலோகத்தின் வல்லமை பூமியிலே பரவத் தொடங்கியது. இவர் தம்முடைய பிதாவாகிய இறைவனுடைய விருப்பத்திற்கு அப்பாற்றபட்டவராகப் பணிபுரியவில்லை. அவர் முழுவதும் பரிசுத்த பிதாவின் சித்தத்தைச் செய்யும்படி அவருடன் முற்றிலும் ஒன்றுபட்டவராயிருந்தார். “என்னை அனுப்பியவருடைய சித்தத்தைச் செய்து முடிப்பதே என்னுடைய உணவாயிருக்கிறது” என்று அவர் சொன்னார் என்றார்.
இறைவனுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் யூதர்கள் எதிர்த்து நிற்பது விந்தையாயிருக்கிறது. இயேசு யூதர்களால் புறக்கணிக்கப்பட்டதற்கு சனகதரின் சங்கத்தாரும் பிரதான ஆசாரியர்களும்தான் காரணம் என்று பேதுரு கூறவில்லை. தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களே இயேசுவைப் புறக்கணித்தவர்கள் என்று பேதுரு குற்றப்படுத்துகிறார். அவர்கள் தங்கள் தலைவர்களுக்குப் பயந்திருந்தார்கள். அதனால் அவர்கள் நசரேயனாகிய இயேசுவை விட்டு விலகி அவரைக் கொலைகாரர்களுடைய கையிலிருந்து காக்கத் தவறிவிட்டார்கள். அவர்களில் சிலர் “இவனைச் சிலுவையில் அறையுங்கள், சிலுவையில் அறையுங்கள்” என்று கூக்குரலிட்டவர்களாகவும் இருந்தார்கள். பேதுரு பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையினால் நிறைந்தவராக அவர்களுடைய மனசாட்சியை குத்தும் வண்ணமாகப் பிரசங்கித்தார். “இறைவனால் ஏற்படுத்தப்பட்ட மனிதனை நீங்கள்தான் கொலை செய்தீர்கள். அதுவும் சாதாரணமாக கல்லெறிந்து நீங்கள் அவரைக் கொல்லவில்லை. அவரை புறவினத்து மக்களாகிய ரோமர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுத்தீர்கள். அவர்கள் மூலமாக நீங்கள்தான் அவரைச் சிலுவையில் அடித்துக் கொலைசெய்தீர்கள். இது உங்கள் நிந்தையை இரட்டிப்பாக்குகிறது” என்று அவர்களைக் குற்றஞ்சாட்டினார். தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்பவர்களிடத்தில், கொள்ளை, அசுத்தம், பொய் போன்ற பாவங்களைப் பற்றிப் பேசவில்லை. அவர்கள் இயேசுவை நடத்திய முறையே அவர்களுடைய அறியாமையையும், கீழ்ப்படியாமையையும், குருட்டுத் தனத்தையும், இறைவனிடமான அவர்களுடைய பகைமையையும் காண்பிக்கிறது என்று பேதுரு கூறினார். இந்தப் பிரசங்கம் பரிசுத்த ஆவியின் நியாயத்தீர்ப்பை குறிக்கவில்லை. ஆகிலும் அது மனிதனுடைய கீழ்ப்படியாமையிலும் பகைமையிலும் காணப்படுகிற அனைத்து தீய செயல்களையும் உணர்த்தி, தீய நோக்கங்களை வெளிப்படுத்துகிறதாயுள்ளது.
ஆயினும் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபடியினால் இறைவன் இந்த யுத்தத்தில் தோல்வியடைந்துவிடவில்லை. அதன் மூலமாக அவர் தம்முடைய முன்னறிவின்படி வழங்கும் இரட்சிப்பை நிறைவேற்றினார். அந்த அதிர்ச்சியளிக்கும் குற்ற நடவடிக்கையின் ஊடாக அவர் தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். இறைவனுடைய திட்டத்தை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது. கீழ்ப்படியாமையுள்ள பாவிகளுடைய கரங்களில் தம்முடைய மகனைப் பலியாக ஒப்புக்கொடுப்பதன் மூலமாக மட்டுமே உலகத்தை விடுவிக்க முடியும் என்பதை அறிந்தவராகவே அந்த விடுவிப்பின் செயலை நிறைவேற்றி முடிக்கும்படி இறைவன் தம்மில் தீர்மானித்திருந்தார். சிலுவை இறைவனுடைய முன்னறிவின் வெற்றிச் சின்னமாகவும் உலகத்தின் மீது அவர் வைத்திருக்கும் அளவிடமுடியாத அன்பின் அடையாளமாகவும் காணப்படுகிறது. இறைவனுடைய இந்த முன்தீர்மானம் யூதர்களை பகடைக்காய்களாக மாற்றவில்லை. ஏனென்றால் பரிசுத்த ஆவியானவரினால் நிறைந்து பேதுரு அவர்களைப் பார்த்து, “நீங்களே கொலைகாரர்களாகவும் இறைவனுடைய எதிரிகளாகவும் இருக்கிறீர்கள்” என்று குற்றம் சாட்டியது முற்றிலும் உண்மையாயிருக்கிறது.
பேதுருவின் பிரசங்கத்தின் ஆரம்பமும் முடிவும் எவ்வளவு வித்தியாசமாயிருக்கிறது பாருங்கள். முதலில் அப்போஸ்தலர்கள் மகிழ்ச்சியினாலும் நன்றியினாலும் நிறைந்தவர்களாக இறைவனைத் துதித்துக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுடைய பாவத்தைக் கண்டித்து உணர்த்தும்படி பரிசுத்த ஆவியானவர் அவரை வழிநடத்தினார். இறைவனுடைய அன்பு மென்மையாகவும் மேலோட்டமானதாகவும் இருக்காமல், பரிசுத்தமானதாகவும் மெய்யானதாகவும் இருக்கிறது.
அப்போஸ்தலர் 2:24-28
24 தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை ஏழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது. 25 அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை ஏப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்; 26 அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; 27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்; 28 ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.

மரணத்தின் மீதான இறைவனுடைய வெற்றியே கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் ஏந்தி நிற்கும் வெற்றிக்கொடியாகும். மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பப்பட்ட கிறிஸ்துவே இந்த வெற்றியின் அடையாளமாயிருக்கிறார். கிறிஸ்து உயிரோடிருக்கிறார். இனி அவர் ஒருபோதும் இறப்பதில்லை. அவரே நம்முடைய உயிர்த்தெழுதலின் உத்தரவாதமாகவும், நம்முடைய நித்திய வாழ்வின் காப்புறுதியாகவும் இருக்கிறார்.
யூதர்களுடைய எதிர்ப்பை இறைவன் மேற்கொண்டார் என்பதை பேதுரு வெளிப்படையாக அறிவித்தார். அவர்கள் புறக்கணித்த இந்த நசரேத்து வாலிபனாகிய இயேசுவை இறைவன் ஏற்றுக்கொண்டு, உயிரோடு எழுப்பினார். அவர் மரணத்தின் கட்டுக்களை அவிழ்த்து அவரை விடுவித்தார் (சங்கீதம் 18:5-6). ஏனெனில் கல்லறை அவரை தொடர்ந்து வைத்திருக்க முடியவில்லை. அவர் பரிசுத்தராயிருந்தபடியால் மரணத்திற்கு அவர்மேல் வல்லமையிருக்கவில்லை. அவர் நம்முடைய பாவங்களுக்காக மரணத்தை ருசிபார்த்து, நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக உயிரோடு எழுப்பப்பட்டார். கிறிஸ்து இவ்வாறு உயிரோடு எழுப்பப்பட்டது யூதர்கள் மீதான கடுமையான நியாயத்தீர்ப்பாயிருந்தது. அதேவேளையில் அது கிறிஸ்தவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாயிருக்கிறது.
இதைத் தொடர்ந்து தாவீது கிறிஸ்துவைக் குறித்து தனக்கிருந்த ஞானத்தினாலே எவ்வாறு பரிசுத்த திரித்துவத்தின் இரகசியங்களை அறிந்துகொண்டார் என்பதை பரிசுத்த ஆவியானவர் பேதுருவின் மூலமாக தெளிவுபடுத்தினார். பிதாவினுடைய மகிமை முழுவதையும் குமாரன் எல்லாக்காலத்திலும் கண்டு மகிழ்வுற்றிருந்தார் என்பதை பேதுரு அறிக்கை செய்தார். இயேசு கிறிஸ்து இரண்டாவது ஆதாமாகவும், இறைவனுடைய மனமகிழ்வாகவும், அவருடைய மெய்யான உருவமாகவும் இருக்கிறார். அவர் வல்லமையும், அழகும், மகிமையும் நிறைந்தவராக, பிதாவுடன் முழுமையான ஒற்றுமையுள்ளவராக எப்போதும் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுபவராக இருக்கிறார்.
சிலுவை மரணத்திற்கு முன்பாக கிறிஸ்து பிதாவை அவருடைய வலதுபக்கத்திலிருந்து பார்த்தார். அவர் பரமேறிய பிறகும் பிதாவினுடைய வலது பக்கத்தில் அமர்ந்தார் என்பதை நாம் அறிவோம். இந்த இடத்தில் நாம் மறுபடியும், பரிசுத்த திரித்துவத்தின் நபர்கள் ஒவ்வொருவரும் தாழ்மையுடன் எப்போதும் மற்றவர்களைக் கனப்படுத்தி, தங்களை கடையானவர்களாகக் கருதுகிறார்கள் என்பதைக் கவனிக்கிறோம். இந்தத் தீர்க்கதரிசனத்தில் கிறிஸ்து இறைவனுடைய வெற்றியில் தொடர்ந்து முன்னேறுவார் என்றும், அவர் பிதாவைப் பார்த்து கலக்கமடைவதில்லை என்பதும் அறிவிக்கப்படுகிறது. நாமும் பாவச் சோதனையில் விழுந்துவிடாதபடி எப்போதும் பிதாவை நோக்கிப் பார்க்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.
பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலிருக்கிற தொடர்ச்சியான ஐக்கியம், பெருமையினாலோ, பாவத்தினாலோ ஒருபோதும் தடைசெய்யப்படுவதில்லை. ஆனால் அது சந்தோஷமும், இன்பமும், அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக எப்போதும் நிலைத்திருக்கிறது. “நீர் என்னுடைய குமாரன். உம்மில் நான் பிரியமாயிருக்கிறேன். துக்கப்படாதீர்கள், கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்கள் பெலன்” என்று சொல்லும்போது அவர் மகிழ்ச்சியின் இறைவனாயிருக்கிறார் என்பதை அவரே அறிவித்திருக்கிறார்.
இறைவனுடைய ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து தம்முடைய சிலுவை மரணத்திற்கு முன்பாகவே தம்முடைய மரணத்தை அவர் அறிந்திருந்தார். அவருடைய ஞானம் மரணத்தையும் கடந்து நித்தியம் வரை சென்றது. அவர் நம்பிக்கையற்றவராக சிலுவையில் மரிக்காமல் நம்பிக்கையோடு மரித்தார். அவருடைய ஆவியும் ஆத்துமாவும் இறந்தவரகளோடு சிறைப்பட்டிராது என்பதை அவர் அறிந்திருந்தார், ஏனெனில் அவர் தம்முடைய ஆவியைப் பிதாவினுடைய கரத்தில் ஒப்புக்கொடுத்திருந்தார். இயேசு பரிசுத்தராயிருக்கிறபடியால் அவருடைய சரீரம் அழிவைக் காணாது என்பதை தாவீது முன்னறிவித்திருந்தார். இது கிறிஸ்தவர்களுடைய நம்பிக்கையாகவும் மாறியிருக்கிறது. காரணம் அவர்களுடைய சரீரங்கள் பரிசுத்தமாக்கப்பட்டு உயிரோடு எழுப்பப்படும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைத்திருக்கும் பாவமன்னிப்பு முழுமையானதாக இருப்பதால் அவர்களுடைய சரீரம் முழுவதுமாகச் சுத்திகரிக்கப்படும். இந்த சுத்திகரிப்பு சிருஷ்டிகருடைய கொடையாயிருக்கிறது. கிறிஸ்துவின் உயிர்தெழுதல் நம்முடைய வல்லமையாகவும், மகிழ்ச்சியாகவும், நமது நன்றியுணர்விற்கான காரணமாகவும் இருக்கிறது. இயேசு அனைத்து இரகசியங்களையும் நித்திய வாழ்விற்கான வழிகளையும் அறிந்திருக்கிறார். ஏனெனில் அவர்: “நானே உயிரும் உயிர்த்தெழுதலுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிப்பவன் மரணமடைந்தாலும் மீண்டும் உயிர்ததெழுவான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் ஒருபோதும் மரணமடையமாட்டான்” என்று சொல்லியிருக்கிறார். கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலில் நாம் அனைத்து விசுவாசிகளுடைய உயிர்த்தெழுதலையும் காண்கிறோம். அவர் தம்மைப் பின்பற்றுகிற அனைவருக்கும் உயிர்கொடுப்பவரானார். அவரின்றி உண்மையான வாழ்வு மனிதருக்கில்லை.
இறுதி நாளில் தம்முடைய மரணத்தினால் எண்ணற்றோர் உயிரடைவதைப் பார்த்து கிறிஸ்து மகிழ்ந்திருப்பார். அவர்கள் அவரோடு நிலைத்திருக்கவும், இறைவனுடைய கிருபாசனத்திற்கு முன்பாக வரவும் அவருடைய மரணம் அவர்களைத் தகுதிப்படுத்தியிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் அவர்களை அவருடைய ஆன்மீக உடலின் அங்கங்களாக மாற்றி, இறைவனுடைய அன்பின் ஆட்சிக்குள் அவர்களைக் கொண்டுவந்து, முடிவற்ற வாழ்வின் உண்மையை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். நம்முடைய விசுவாசம் மகிழ்ச்சியிலும், சந்தோஷத்திலும் நம்பிக்கையிலும் கட்டப்பட்டிருப்பதால் மிகப்பெரியதாயிருக்கிறது.
அப்போஸ்தலர் 2:29-32
29 சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. 30 அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை ஏழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால், 31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். 32 இந்த இயேசுவை தேவன் ஏழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.

பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அப்போது இறைவனுடைய குடும்பத்தில் அங்கமாகாதிருந்தபோதிலும் பேதுரு அவர்களைச் “சகோதரரே” என்றுதான் அழைத்தார். பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய இருதயத்தில் செயல்படுவதை அவர் கவனித்தார். தாவீதின் தீர்க்கதரிசனம் (அப்போஸ்தலர் 2:25-28), தாவீதைக் குறிக்கவில்லை. ஏனெனில் தாவீதுக்குப் பல குழந்தைகள் பிறந்தார்கள் என்பதோடு அவர் இறந்துபோய்விட்டார். இதை பேதுரு அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார். அந்த மக்கள் நன்கு அறிந்திருந்த தாவீதின் கல்லறையைவிட்டு அவர் வெளியேறவில்லை. தாவீது அபிஷேகம் பண்ணப்பட்டவரும், வேறு எந்த தீர்க்கதரிசியோ, அரசனோ, அல்லது ஆசாரியனோ பெற்றுக்கொள்ளாத வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டவருமாகிய மெய்யான தீர்க்கதரிசியாயிருக்கிறார். அவருடைய பிள்ளைகளில் ஒருவர் இறைமகனாவார் என்பதை அந்த தீர்க்கதரிசனம் முன்னுரைக்கிறது. அந்த இறைமகனுடைய அரசு அழிவைக் காண்பதில்லை (2 சாமுவேல் 7:12-14). கிறிஸ்துவைக் குறித்த இந்த வாக்குத்தத்தத்தை யூதர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். ஆகவே அவர்கள் மனுமகனும் இறைமகனுமாகிய ஒருவருக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள். வேதபாரகர்கள் கிறிஸ்துவின் வருகையைப் பற்றி அதிகம் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். கிறிஸ்துவானவர் பரிசுத்த ஆவியினால் பிறப்பவராயிருப்பதால் அவர் மரணத்தை மேற்கொள்வார் என்பதை அறிந்துகொள்ளும்படி அவர்கள் வேதாகமத்தை ஆய்வு செய்தார்கள். ஆகவே அவருடைய உடல் அழிவடையாது, அவருடைய ஆன்மாவை மரணத்தின் சக்தியினால் கட்டுப்படுத்த முடியாது. அவர் மரணத்தின் வல்லமையை வெற்றிகொண்டதால் அவருடைய அரசு முடிவில்லாத அரசாக இருக்கும். அவர் மன்னாதி மன்னனும் பிதாவோடு ஒன்றானவருமாயிருப்பதால் அழிவிற்குரிய தற்காலிக அரசனைப்போல் அவர் ஆட்சிசெய்வதில்லை.
அதன் பிறகு பரிசுத்த ஆவியானவர் ஏவியபடி பேதுரு, புறக்கணிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட இயேசு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தாவீதின் மகன் என்றும் இறைவனால் உயிருடன் எழுப்பப்பட்ட நித்திய அரசன் என்றும் வெளிப்படையாக சான்று பகர்ந்தார். பேதுரு தம்முடைய எதிரிகளைப் பார்த்து அஞ்சவுமில்லை, அனைத்துக் காரியங்களையும் அவர்களுடன் விவாதிக்கவும் இல்லை. இறைவனுடைய வல்லமையினால் நிறைவேறி முடிந்த இந்த மாபெரும் உண்மைக்கு அவர் எளிமையாக சான்று கூறினார். அவர் தம்முடைய சொந்தக் கண்களினாலேயே இறைவனுடைய இந்த வெற்றியைக் கண்டு, தன்னுடைய சொந்தப் பாவங்களுக்கான மன்னிப்பின் வார்த்தைகளை உயிருள்ள இயேசுவினிடமிருந்து பெற்றுக்கொண்டவர். இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு தம்முடைய சீடர்களுடன் உணவருந்தினார். தம்முடைய உயிர்த்தெழுந்த சரீரத்தோடு அவர் அவர்களைச் சந்தித்து, தம்முடைய உள்ளங்கைகளில் இருந்த ஆணி பாய்ந்த அடையாளத்தை அவர்களுக்குக் காண்பித்தார். இறைவனுடைய மகன் இறந்துபோய்விடவில்லை, அவர் மறுபடியும் உயிரோடு எழுந்தார். எனக்கு அன்பான விசுவாசிகளே நாம் அவருக்கு சாட்சிகளாயிருக்கிறோமா?
இந்தக் கூற்றோடு பேதுருவினுடைய பிரசங்கத்தின் இறுதிப் பகுதி நிறைவடைந்தது. முதலாவது, பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்பட்டது யோவேலுடைய தீர்க்கதரிசனத்தின் விளைவாக நடைபெற்றது என்பதை அவர்களுக்கு அறிவித்தார். இரண்டாவது, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைக் கொலைசெய்தவர்கள் யூதர்களாகிய அந்த மக்களே என்பதை அவர்களுக்கு உணர்த்தினார். மூன்றாவது, கிறிஸ்து மெய்யாகவே இறந்தவர்களிடமிருந்து உயிரோடு எழுந்து வந்தார் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தினார்.
அப்போஸ்தலர் 2:33-36
33 அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். 34 தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும், 35 நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான். 36 ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.

இரட்சிப்பைக் குறித்த ஒரு நீண்ட அறிமுகத்திற்குப் பிறகு, இறைவனால் அனுப்பப்பட்டு, சிலுவையில் அறையுண்டு மரணத்தைத் தழுவி, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்படுவதற்கும் இடையிலான தொடர்பை பேதுரு எடுத்துரைக்கிறார். இயேசுவின் வருகையும், மரணமும், உயிர்த்தெழுதலும் ஒரு புதிய யுகத்தின் தொடக்கத்திற்கு இன்றியமையாதவை. ஏனெனில் அவருடைய மரணமும் உயிர்த்தெழுதலுமின்றி பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகத்திற்கு வர முடியாது.
இயேசு தம்முடைய பிதாவின் சித்தம் அனைத்தையும் இசைவாக நிறைவேற்றி, பரமேறி, அவருடைய வலது பக்கத்தில் அமர்ந்தார். யூதர்களால் அவமதிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டவருக்கு இறைவன் மிக அதிகமான கனத்தையும் மகிமையையும் பொழிந்தருளினார். வானத்திலும் பூமியிலும் அனைத்து அதிகாரங்களையும் பிதா குமாரனுக்குக் கொடுத்தார். மேலும் பிதாவினுடைய வாக்குத்தத்தை நிறைவேற்றும் அனைத்து வல்லமையையும் அவருக்குக் கொடுத்திருந்தார். தம்மை விசுவாசித்து, தம்மிடம் விண்ணப்பம் செய்யும் தமது சீடர்களுடைய உள்ளத்தில் வாழும்படி அவர் தம்முடைய பரிசுத்த ஆவியைப் பொழிந்தருளினார். கிறிஸ்து சிலுவையின் மூலமாக நம்மைப் பிதாவோடு ஒப்புரவாக்கிய காரணத்தினாலேயே பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டார். அவர் நமக்காக பரிசுத்த பிரதான ஆசாரியனாக நமக்காகப் பரிந்துபேசுகிறார். கிறிஸ்துவின் பரிந்துபேசும் பணியே பரிசுத்த ஆவியானவரை நமக்குப் பொழிந்தருளியது.
உண்மையில் இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு யாரும் இறைவனுடைய கிருபாசனத்தை நெருங்கி நமக்காக பரிந்துரை விண்ணப்பத்தை ஏறெடுக்க முடியாது. அனைத்து தீர்க்கதரிசிகளும், அரசர்களும், அனைத்து மதங்களை நிறுவியவர்களும் ஒன்று தங்கள் கல்லறைகளில் புதைக்கப்பட்டு அதில் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது ஆபிரகம், மோசே, மற்றும் எலியா ஆகியோரைப் போல பரலோகத்தில் இளைப்பாறுகிறார்கள். கிறிஸ்து மட்டுமே பிதாவாகிய இறைவனோடு இணைக்கப்பட்டு மிக நெருக்கமாயிருக்கிறார். நித்திய காலமாகவே குமாரனில் பிதாவும், பிதாவில் குமாரனும் வாழ்கிறார்கள். பரிசுத்த ஆவியின் வெளிப்பாட்டில் தீர்க்கதரிசியாகிய தாவீது பிதாவிற்கும் குமாரனுக்கும் இடையிலான ஐக்கியத்தைக் கண்டார். தூதர்களுடைய துதிப்பாடல்களினால் சூழப்பட்டவராக, குமாரன் மீண்டும் பரலோகத்திற்கு எழுந்தருளிச் சென்றபோது, பிதா குமாரனிடத்தில் என்ன சொன்னார் என்பதை தாவீது காதுகொடுத்துக் கேட்டார். “நீர் உம்முடைய சிங்காசனத்தில் அமர்ந்து ஓய்ந்திரும். உம்முடைய மனித உடலில் பட்ட பாடுகளினால் நீர் உம்முடைய பணியை நீர் முடித்திருக்கிறீர். நீர் இரட்சிப்பை நிறைவேற்றி விட்டீர். இப்போதிலிருந்து நான் என்னுடைய பரிசுத்த ஆவியின் வல்லமையோடு செயல்படப் போகிறேன். அவர் என்னை மெய்யாகத் தேடுகிற அனைவர் மீதும் இரட்சிப்பைப் பொழிந்தருளி, அநியாயக்காரரையும், அகங்காரிகளையும் நியாயத்தீர்ப்பில் கொண்டுவந்து நிறுத்துவார்.
பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்பட்டதிலிருந்து மனிதர்கள் மீதான நியாயத்தீர்ப்பு ஆரம்பமாகிவிட்டது. கிறிஸ்துவை யூதர்கள் விசுவாசித்து, மனந்திரும்பாவிட்டால் அவர்கள் அவருக்குப் பாதபடியாகிப் போவார்கள் என்று அவர்களுடைய முகத்திற்கு முன்பாகவே பேதுரு அறிவித்தார். அவர்கள் கண்ணீரோடு மனந்திரும்பி இறைமகனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்கள் மீது தண்டனை வரும். இந்தப் பயங்கரமான எச்சரிப்பின் வார்த்தைகள் பூமியன் அனைத்துக் கண்டங்களில் இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும். மனிதர்களுடைய பல்வேறு பிரிவுகளுக்கும் மதங்கள் அனைத்துக்கும் இந்த நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் பொருத்தமானவைகளே. இறைமகனை ஏற்றுக்கொள்ளாதவர்கள், கட்டப்பட்டு நித்திய காலத்திற்கும் கிறிஸ்துவின் பாதத்தின் கீழ் வைக்கப்படுவார்கள்.
பெந்தகொஸ்தே நாளிலிருந்து பரிசுத்த ஆவியானவர் எந்தவிடத் தடையுமின்றி பூமியின் அனைத்து இடங்களிலும் வாழ்கிறார் என்று பேதுரு அந்த மக்களுக்குக் காண்பித்தார். கடவுளுக்கும் மனிதருக்கும் இடையிலிருந்த பிரிவினைச் சுவரைக் கிறிஸ்து அகற்றிவிட்டார். தெய்வீக அன்பின் அலை தொடர்ந்து வீசுகிறது. இன்று யாரெல்லாம் விசுவாசம்கொள்கிறார்களோ அவர்களுக்கு இரட்சிப்பு கிடைக்கிறது.
பெரும்பாலான யூதர்களின் உள்ளத்தில் சத்திய ஆவியானவர் வாசம்செய்ய முடியவில்லை. காரணம் கிறிஸ்துவின் மரணத்திற்குப் பிறகுகூட பழைய ஏற்பாட்டின் மக்களாகிய அவர்கள் அவரைப் புறக்கணித்துக் கொலைசெய்தார்கள். அவர்களுடைய இருதயங்களை உருவக்குத்தும் வார்த்தைகளைப் பேசும்படி பரிசுத்த ஆவியானவர் பேதுருவை வழிநடத்தினார்: “பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இறைவனுடைய வலது பக்கத்தில் அமர்ந்து நசரேத்து வாலிபனாகிய இயேசு நூறு சதவீதம் கர்த்தராகவே இருக்கிறார். அவர் மெய்யான இறைவனிடத்திலிருந்து வரும் மெய்யான இறைவன். நீங்கள் சிலுவையில் அடித்துக்கொலைசெய்தவரே அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்துவாயிருக்கிறார்.” இந்த வார்த்தைகளினால் யூதர்கள் தங்கள் வரலாற்றின் உச்சகட்டத்தை அவர்கள் கைப்பற்றத் தவறிவிட்டார்கள் என்பதை அப்போஸ்தலர்கள் அனைவரிலும் அதிக வெளிப்படையாகப் பேசும் தன்மையுடைய பேதுரு இங்கு அறிவிக்கின்றார். அவர்கள் இறைவன் தங்களோடு செய்த உடன்படிக்கையின் பொருளைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் அதை மீறிவிட்டார்கள். சர்வ வல்லவரின் பெயரினால் பேதுரு இவ்வாறு யூத இன மக்களுடைய மனதைக் காயப்படுத்தினார். இவ்வாறு அவர்கள் மனிதனால் நியாயத்தீர்ப்புக்கு உள்ளாகாமல், இருதயங்களை ஊடுருவி ஆராயும் இறைவனுடைய நியாயத்தீர்ப்புக்கு உட்பட்டார்கள்.
ஆரம்பத்தில் சீடர்கள் பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தினால் நிறைந்ததைப் பார்த்த சில யூதர்கள் அவர்கள் குடிபோதையில் உளறுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார்கள். அவர்களுக்கு பேதுரு வாதத்தின் மூலமாக உண்மையைப் புரியவைக்காமல் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அவர்களுடன் பேசினார். பரிசுத்த ஆவியானவர் யார் என்றும், அவர் எங்கிருந்து வருகிறார் என்றும், அவருடைய இருப்பிற்கான காரணம் என்ன என்றும் அவர் அவர்களுக்கு விளக்கினார். இறுதியாக, கிறிஸ்துவைக் கொலைசெய்ததே அந்த மக்களுடைய குற்றம் என்பதை அதிக கண்டிப்புடன் அவர்களுக்கு உணர்த்தினார். இதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தில் ஒருபோதும் சமரசம் செய்வதோ அல்லது பொய்யை சத்தியத்துடன் கலப்பதோ இல்லை என்ற உண்மையை நாம் காண்கிறோம். அவர் நம்முடைய கீழ்ப்படியாமையைக் கண்டித்து, நமது பெருமையை அழித்துப் போடுகிறார். இன்று நீங்கள் அவருடைய சத்தத்தைக் கேட்டால் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள்.
7. அப்போஸ்தலருடைய பணியினால் ஏற்பட்ட பயன் (அப்போஸ்தலர் 2:37-41)
அப்போஸ்தலர் 2:37-38
37 இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். 38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

ஒரு மனிதன் மெய்யாகவே மனந்திரும்பி தன்னுடைய பழைய வாழ்க்கையைப் புறக்கணிக்காவிட்டால் அவனில் பரிசுத்த ஆவியானவர் வாழமாட்டார். ஒவ்வொரு பாவமும் இறைவனுக்கும் அவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவருக்கும் எதிரான மீறுதலாயிருக்கிறது. அதனால்தான் பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்திற்குள் குடியிருப்பதற்கு வருவதற்கு முன்பாக அதிலிருக்கும் கீழ்ப்படியாமையை அவர் உடைக்கிறார். அதன் பிறகுதான் நாம் அவருடைய பரிசுத்த ஆலயமாக ஏற்படுத்தப்பட முடியும். பரிசுத்த ஆவியானவரின் இந்த நியாயத்தீர்ப்பு ஒரே வேளையில் மாபெரும் ஆசீர்வாதமாகவும், ஆசீர்வாதங்கள் அனைத்திலும் மேலானதாகவும் காணப்படுகிறது. பரிசுத்த ஆவியானவரின் இந்த நியாயத்தீர்ப்பையும் கடிந்துகொள்ளுதலையும் நொருங்குண்ட மனதோடு பெற்றுக்கொள்ளும் ஒருவர் நித்திய தண்டனையிலிருந்து தப்பித்து, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்கிறார்.
பரிசுத்த ஆவியானவரின் வருகையின்போது உண்டான சத்தத்தை அறிந்த யூதர்கள் சீடர்கள் இருந்த வீட்டிற்கு ஓடிச்சென்றார்கள். பேதுரு பேசியதைக் கேட்டபோது துக்கமும், எச்சரிக்கையும் அடைந்தார்கள். அவர்கள் உயிருள்ள இறைவனுக்கு முன்பாக நிற்கும் தாங்கள் கீழ்ப்படியாத சொலைகாரர்கள் என்பதையும் இறைவனுடைய கோபத்தினால் வரும் தண்டனைக்கு உரியவர்கள் என்பதையும் அறிந்துகொண்டார்கள். அவர்கள் தங்களை நியாயப்படுத்தவோ அவர்களுடைய குற்றத்தைப் பற்றி கேள்வி கேட்கவோ முற்படவில்லை. மாறாக, அவர்கள் பயத்தோடு, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். இந்தக் கேள்வி இரண்டு காரியங்களை வெளிப்படுத்துகிறது.
முதலாவது, ஒரு மனிதன் பரிசுத்த ஆவியினால் உணர்த்தப்பட்டு, தான் இறைவனை விட்டு விலகிச் செல்கிறேன் என்பதை அறிந்துகொள்ளும்போது தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாத பரிதாப நிலையில் இருக்கிறான். பேதுரு இயேசுவை மறுதலித்ததும் சேவல் கூவியபோது எவ்வாறு பேதுருவின் தன்னம்பிக்கை முற்றிலும் தகர்ந்துபோனதோ அதேபோல பாவ உணர்வு பெற்றவனும் தன்நம்பிக்கையை இழந்து போகிறான்.
இரண்டாவது, உள்ளம் உடைந்த ஒருவன் இறைவனையும் அவர் தனக்காக என்ன செய்திருக்கிறார் என்பதையும் முழுவதும் அறியாத நிலையில் இருக்கிறான். அவன் செய்யக்கூடியது “நான் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும்?” என்று தன்னிடமே கேட்டுக்கொள்வது மட்டும்தான். நம்முடைய செயல்கள் அனைத்தும் பரிசுத்தமுள்ள இறைவனுக்கு முன்பாக பயனற்றவையாகவும் அசுத்தமானதாகவும் காணப்படும். ஒவ்வொரு மனிதனும் தன்னில்தானே குதர்க்கமானவனாக காணப்படுகிறான். தன்னுடைய இரட்சிப்புக்காக தானே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று கருதும் மனிதன் இறைவனைத் தனக்காக எதையும் செய்வதற்கு அனுமதிப்பதில்லை. இயற்கை சுபாவமுள்ள மனிதன் தன்னைத் தானே திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறான். அவன் தன்னைத் தானே நீதிமானாக்கவும் சுய விடுதலையைப் பெற்றுக்கொள்ளவும் விரும்புகிறான். அவன் இறுதிவரை தன்னுடைய சுய பலத்திலேயே வாழ விரும்புகிறான். தீமையும் சீரழிவும் நிறைந்த சுயம் நியாயத்தீர்ப்பு நாள்வரையிலும் அவனை ஆட்கொள்கிறது.
மனந்திரும்பியவர்கள் சுயமாக என்ன செய்ய வேண்டும் என்று பேதுரு சொல்லவில்லை. அதற்காக நாம் இறைவனுக்க நன்றி செலுத்துவோம். அதற்கு மாறாக அவர்களுடைய சிந்தனையிலும் இயேசுவைக் குறித்த நம்பிக்கையிலும் மாற்றம் வேண்டும் என்று பேதுரு கோரினார். மனமாற்றம் என்பது சரீரத்திலோ மூளையிலோ ஏற்படும் மாற்றமல்ல. அது உள்ளத்திலும், சித்தத்திலும், ஆழ்மனதிலும் ஏற்படும் மாற்றமாகும். அது நம்முடைய சிந்தனைகள், உணர்வுகள், சித்தம் ஆகியவற்றில் ஏற்படும் முழுமையான மாற்றத்தை உள்ளடக்கியது. சர்வாதிகார நாடுகளில் நடைபெறுவதைப் போல அது மூளைச்சலைவையின் மூலமாக ஏற்படும் மாற்றம் அல்ல. புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி இறைவனுடைய வல்லமைக்கு ஒருவன் தன்னைத் திறந்துகொடுப்பதால் ஏற்படும் மனப்பூர்வமான மாற்றமாயிருக்கிறது. அதன் பிறகு அவன் கிறிஸ்துவின் வார்த்தைகளையும் அவருடைய அப்போஸ்தலருடைய வார்த்தைகளையும் மகிழ்ச்சியோடும் நன்றியுள்ள இருதயத்தோடும் கேட்டுப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறான்.
மனமுடைந்த மக்களைப் பார்த்து பேதுரு பேசுகிறார்: “உங்களுடைய தீய வழிகளை விட்டுத் திரும்புங்கள். உங்களை நீங்களே மீட்கும் முயற்சியைக் கைவிடுங்கள். உங்கள் வாழ்வின் தோல்விகளையும் இறைவனுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல் செய்த பாவங்களையும் அவரிடம் வெளிப்படையாக அறிக்கை செய்யுங்கள். பரிசுத்தருடைய கரங்களில் உங்கள் வாழ்வை ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது மட்டுமே உங்கள் நோக்கங்களும், எதிர்பார்ப்புகளும், திட்டங்களும் நிறைவடையும். உங்களுக்கான இறைவனுடைய சித்தத்தை நீங்கள் நிறைவேற்ற முடியும். உலக திட்டங்களிலிருந்தும் சுயநலத்திலிருந்தும் திரும்பி, இறைவனை நோக்கிச் செல்லும்படி ஒருவருடைய வாழ்வின் பாதையில் ஏற்படும் மாற்றமே உண்மையான மனமாற்றமாகும். அப்பொழுதுதான் அந்த நபர் இறைவனுடைய அன்பினால் நிறைந்திருக்க முடியும்.
நாம் இறைவனிடத்தில் வருவது நம்முடைய மீட்பையும், பரிசுத்தரிடத்திற்குத் திரும்புவது அழிவிலிருந்து விடுதலையடைவதையும் வெளிப்படையாகக் காண்பிக்கிறது. மனந்திரும்பிய மனிதனுடைய மனதில் இறைவன் இருந்து அவனுக்குப் பாதுகாப்பு அருள வேண்டியது அவசியமாயிருக்கிறது. அதனால்தான் அவர்கள் இயேசுவின் நாமத்தினால் திருமுழுக்குப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பேதுரு குறிப்பிட்டார். பழைய மனிதன் பாவத்திற்கு இறந்துபோவதையும் மீட்பருடைய புதிய உலகத்திற்குள் விசுவாசி நுழைவதையுமே அந்தத் திருமுழுக்கு காண்பிக்கிறது. கிறிஸ்துவுக்குள்ளாக திருமுழுக்குப் பெற்றுக்கொள்ளும் ஒருவர் அழிந்துபோகும் நபருக்கு ஒப்பாக இருக்கிறார். தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒருவர் இறைவனுடைய கிருபையினால் மீட்கப்படுகிறார். அவர் ஒரு புதிய படைப்பாக மாற்றப்பட்டு, உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படுகிறார். பிதாவினுடைய மகிமைக்காக கிறிஸ்துவினுடைய நீதி அவருக்கு அருளப்படுகிறது. நம்முடைய உள்ளான மனிதனில் உள்ள பாவங்களை நீக்கிச் சுத்திகரிக்கப்படுவது திருமுழுக்கின் முதல் பலனாயிருக்கிறது. கிறிஸ்துவோடு இணைக்கப்படும் ஒருவருடைய நெற்றியில் அவர் கர்த்தருக்குரியவர் என்பது யாருக்கும் தெரியாத எழுத்துக்களில் பொறிக்கப்படுகிறது. இறைவனுடைய மகனுடைய ஒப்புரவாகுதலினால் அவர் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறார்.
இரண்டாவது, திருமுழுக்கின் பயனாக ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்கிறார். யோவான் தான் கொடுத்த திருமுழுக்கு மனந்திரும்புதலுக்காகக் கொடுக்கப்பட்ட வெறும் அடையாளம் என்றும் அது கிறிஸ்துவினால் கொடுக்கப்படும் திருமுழுக்கிற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறது என்றும் அறிந்திருந்தார். அவர் வெளிப்படையாகவே அதைச் சொல்லியிருந்தார்: “எனக்குப் பின் வருகிறவர் என்னிலும் வல்லமையுள்ளவர். அவர் உங்களுக்கு ஆவியினாலும் அக்கினியினாலும் திருமுழுக்குக் கொடுப்பார்”. பெந்தகொஸ்தே நாளின்போது முதன்முதலாக வரலாற்றில் இந்த இரட்சிப்பு நிறைவேறும் தருணம் நடைமுறைக்கு வந்தது. தன்னைக் கொலைசெய்த பாவத்திலிருந்து மனந்திரும்பிய பாவிகளுக்கு கிறிஸ்து பரிசுத்த ஆவியினாலே திருமுழுக்குக் கொடுத்தார். அவர்கள் அதற்காக தண்ணீர் திருமுழுக்கினால் ஆயத்தம்செய்யப்பட்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் உள்ளத்தில் நொருக்கப்பட்டவர்களாக விசுவாச உலகத்திற்குள் நுழைந்தார்கள். இறைவனுடைய அன்பு அவர்கள் அனைவருடைய அறிவுக்கும் அப்பாற்பட்டதாயிருந்தது.
அன்புள்ள சகோதர, சகோதரியே, நீங்கள் திருமுழுக்குப் பெற்று விட்டீர்களா? நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டீர்களா? திருமுழுக்கு என்னும் வெளியான சடங்கு உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுத் தராது. அது நோயாளிக்கு போடப்படும் ஊசியைப் போன்றதல்ல. பரிசுத்த ஆவியானவர் காற்றைப் போல தமக்குச் சித்தமான இடத்தில் வீசுகிறார். எனவே விசுவாசமில்லாத திருமுழுக்குப் பயனற்றதாயிருக்கிறது. உங்களுடைய அன்பின் மூலமான கிறிஸ்து உயர்த்தப்பட்டு, மற்றவர்களுக்கு வெளிப்படும்படி உங்கள் சுயநலத்தை அழித்து உங்கள் திருமுழுக்கின் அனுபவத்தை உறுதிசெய்யுங்கள். ஒரு நாளில் அவரோடு நீங்கள் என்றும் வாழப்போகிறீர்கள். பரிசுத்த ஆவியானவரினால் திருமுழுக்குப் பெற்றவர்களுடைய சிறப்பான குணாதிசயங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அன்பு, சந்தோஷம், சமாதானம், சாந்தம், நீதி, விசுவாசம், இரக்கம், பொறுமை, இச்சையடக்கம் ஆகியவையே அவை. இந்த கொடைகளை நீங்கள் பரிசுத்த ஆவியிடமிருந்து பெற்றுவிட்டீர்களா?
அப்போஸ்தலர் 2:39-41
39 வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; 40 இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். 41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

தங்கள் மனதிலே குத்தப்பட்டவர்களாகி மனந்திரும்பிய அந்த மக்கள் கூட்டம் கிறிஸ்துவிடம் வரலாம் என்று பேதுரு அவர்களுக்குச் சொன்னார். அவர்கள் உண்மையில் மனந்திரும்பி, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளத் தக்கதாக திருமுழுக்கைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே காரியம். அவர் அவர்களை இந்த அறிவில் பலப்படுத்தி, இறைவனுடைய அன்பின் மேன்மையை அவர்களுக்கு தெளிவுபடுத்தும்படி அவர்களிடம்:
“பரிசுத்த ஆவியானவர் இறைவன் நமக்கு வழங்கும் கொடை, அவரை நாம் நம்முடைய முயற்சியினால் சம்பாதிக்க முடியாது.” இறைவன் நம்முடைய இருதயங்களில் வந்து வாழ்வதற்கு நம்மில் யாருக்கும் தகுதியில்லை. கிறிஸ்துவின் சொந்த இரத்தத்தினாலே அவர் சம்பாதித்த இந்தக் காரியம் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய சலாக்கியமாகும். கிறிஸ்து சிலுவையில் மரணத்தை ருசிபார்த்திருக்கவில்லை என்றால் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள நாம் தகுதியானவர்கள் அல்ல. அவர் நமக்காக மரணத்தை ருசிபார்த்து, அனைத்து மனிதர்களுடைய பாவங்களையும் நீக்கிவிட்டார். ஆகவே எந்தப் பிரச்சனையும் இன்றி நாம் அனைவருமே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் நாம் இறைவனுக்கு முன்பாக நம்முடைய நிலையை உணர்ந்து, மனந்திரும்பி, பாவங்களை அறிக்கை செய்து, அவற்றை விட்டுவிடும்படி தீர்மானிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தராயிருக்கிற காரணத்தினால் அவர் நம்முடைய பொய்களோடும் அசுத்தத்தோடும் ஒத்துப்போக முடியாது. சத்திய ஆவியாகிய அவர் குமாரனை மகிமைப்படுத்தி, நம்முடைய பெருமையைத் தாழ்த்துகிறார். நீங்கள் அவருடைய திட்டத்திற்கு உங்களை ஒப்புக்கொடுத்து, இறைவனுடைய மகனாகிய கிறிஸ்துவை விசுவாசித்தால் நீங்கள் இறைவனோடு ஒப்புரவாக்கப்படுவீர்கள். அப்பொழுது நீங்கள் நீதிமான்களாக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்படுவீர்கள். நீங்கள் கிறிஸ்துவுக்கும் பரிசுத்த ஆவியின் அன்புக்கும் உங்களை எவ்வளவாகத் திறந்துகொடுக்கிறீர்களோ, அவ்வளவாக நீங்கள் இறைவனுடைய வல்லமையினால் நிரப்பப்படுவீர்கள். உங்களைப் பிதாவினுடைய சாயலுக்கு ஒப்பாக மறுரூபப்படுத்த விரும்பும் பரிசுத்த ஆவியின் சத்தத்திற்கு நீங்கள் எதிர்த்து நிற்க வேண்டாம். அவர் இரக்கமுள்ளவராயிருக்கிறது போல நீங்களும் இரக்கமுள்ளவராயிருங்கள். உங்களை இறைவனுடைய சாயலுக்கு ஒப்பாக மாற்ற வேண்டும் என்பதே பரிசுத்த ஆவியானவருடைய பரிசுத்தமாகுதலின் நோக்கமாகும்.
பிதாவினுடைய வாக்குத்தத்தம் யூதர்களுக்கு மட்டும் உரியதல்ல. இறைவனுடைய அழைப்பைக் கேட்டு, இரட்சகரை விசுவாசித்து, தங்கள் கடந்த கால தீய வாழ்விலிருந்து மனந்திரும்பிய அனைத்து மனிதர்களுக்கும் அந்த வாக்குறுதி நிறைவேறும். அது நிறத்தின் அடிப்படையிலோ, ஞானத்தின் அடிப்படையிலோ, வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையிலோ யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. பரிசுத்த ஆவியானவர் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் வித்தியாசம் பார்க்கமாட்டார். யாரெல்லாம் மனந்திரும்பி கிறிஸ்துவின் சிலுவையை எடுத்துக்கொள்கிறார்களோ அவர்கள் இறைவனுடைய தத்துப் பிள்ளைகளாகிறார்கள். அவர்கள் இறைவனுடைய ஒரே மகனாகிய கிறிஸ்துவை அறிந்துகொண்டு, அவருடைய முழுமையில் பங்கடைகிறார்கள். அனைத்து மக்களையும் பரிசுத்த ஆவியானவர் அழைக்க வேண்டும் என்பதே நம்முடைய நோக்கமாயிருக்கிறது. யார் செவிகொடுப்பார்கள்? யார் அவரிடத்தில் வருவார்கள்? யார் தங்களுடைய பாவத்தை அறிந்துகொள்வார்கள்? யார் கிறிஸ்துவை விசுவாசித்து அவருடைய வல்லமையில் வாழத் தொடங்குகிறார்களோ அவர்களே.
பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் தனிப்பட்ட முறையில் அங்கு வந்தவர்களிடம் பேசி, இரட்சிப்பின் இரகசியங்களை அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்கள். அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் கொடுத்து, அவர்களுடைய இருதயத்தின் தீமையை அவர்களுக்கு வெளிப்படுத்தி, இறைவனுடைய அன்பின் மேன்மையை அவர்களுக்கு வெளிப்படுத்திக் காண்பித்தார். அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனைத்து மனிதர்களையும் “மாறுபாடுள்ள சந்ததி” என்று அழைக்கிறார்கள். எந்த மனிதனும் நீதியுள்ளவன் அல்ல. அனைவரும் தங்கள் நடத்தையில் தந்திரமானவர்களாகவும் தங்கள் உள்ளத்தில் கேடுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். யாரும் இந்த உலகத்தில் நல்லவர்களும் நேர்மையாளர்களாகவும் இருப்பதில்லை. அனைவரும் பொய், அநியாயம், ஏமாற்று, தந்திரம், வெறுப்பு, கொலை, பொறாமை, மற்றும் சுயநலம் ஆகியவற்றோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
பரிசுத்த ஆவியானவர் நம்முடைய சுயநலத்திலிருந்து நம்மை விடுவித்து, கிறிஸ்துவினிடத்தில் அழைத்து, நம்மை மீட்டுக்கொள்கிறார். அவர் இந்த உலகத்தைச் சீர்திருத்தாமல், விசுவாசிகளின் உள்ளான வாழ்க்கையில் மாற்றத்தை உண்டுபண்ணுகிறார். உங்கள் குணாதிசயம் மாற்றப்படவேண்டியதல்ல உங்கள் தேவை. உங்களுக்குத் தேவையானது இரட்சிப்பு. அனைத்து மனிதர்களைப் போலவும் நீங்கள் இறைவனுடைய கோபத்திற்கு ஆளானவராகக் காணப்படுகிறீர்கள். “இந்த மாறுபாடுள்ள சந்ததியிலிருந்து நீங்கள் உங்களை விலக்கிக் காத்துக்கொள்ள வேண்டும்” என்று பேதுரு உங்களுக்கு அழைப்பு விடுகிறார். நீங்கள் “பாதி இரட்சிக்கப்பட்டும் பாதி மாறுபட்டும்” இருக்க வேண்டும் என்றோ அல்லது “கிறிஸ்துவை விசுவாசித்து, உங்கள் பாவங்களில் நிலைத்திருங்கள்” என்றோ உங்களுக்குச் சொல்லப்படவில்லை. இல்லை. பெந்தகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் இவ்வுலகத்திற்கு வந்தார். கிறிஸ்துவை யாரெல்லாம் உண்மையாகவும் முழுமையாகவும் விசுவாசிக்கிறார்களோ அவர்களை அவர் தம்முடைய வல்லமையினாலே இரட்சிக்கிறார். நம்முடைய இரட்சிப்பு சிலுவையில் நிறைவேற்றி முடிக்கப்பட்டது. கிறிஸ்துவின் அன்பை நீங்கள் விசுவாசித்து, அவருடைய வல்லமைக்கு உங்களைத் திறந்துகொடுப்பீர்களானால், இந்த நன்மையை பரிசுத்த ஆவியானவர் அனுதினமும் உங்கள் வாழ்க்கையில் மெய்யாக்குவார்.
திருச்சபை பிறந்த நாளில் பரிசுத்த ஆவியானவருடைய அழைப்பைக் கேட்டவர்கள் எண்ணிக்கை மூவாயிரமாயிருந்தது. ஒரு மீனவரும், கல்லாதவருமாகிய பேதுருவின் பிரசங்கத்திற்கு கிடைத்த பலனைப்போல மிகச் சில பிரசங்கிகளுக்கே திருச்சபை வரலாற்றில் பலன் கிடைத்திருக்கிறது. இறைவன் அத்தருணத்தில் பேதுருவின் மூலமாகத் தனிப்பட்ட முறையில் மக்களோடு பேசினார்.
பரிசுத்த ஆவியானவர் அந்த மக்களுடைய இருதயக் கண்களைத் திறந்து, அவர்களுடைய மனதில் வெளிச்சத்தைக் கொடுத்தபடியால், அவர்கள் இருதயத்தில் குத்தப்பட்டவர்களாக உடனடியாக மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்தார்கள். அந்த மக்கள் கேட்ட செய்தியைப் பற்றிச் சிந்தித்து மனந்திரும்புவதற்கு அப்போஸ்தலர்கள் நேரம் கொடுக்கவில்லை என்பது எத்தனை ஆச்சரியமானது. அது மட்டுமல்ல, அவர்கள் இறைவனைக் குறித்த அறிவில் வளரவேண்டும் என்று காத்திராமல் அவர்களுடைய அந்த நிலையிலேயே அப்போஸ்தலர்கள் அவர்களுக்கு திருமுழுக்குக் கொடுத்ததையும் கவனிக்க வேண்டும். விசுவாசம் என்பது மேலோட்டமாக அறிவுசார்ந்ததோ, தெளிந்த புத்தியுடன் கூடிய ஆனமீக காரியமோ அல்ல. பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகள் மீது தமது இன்பத்தைப் பொழிந்தருளி, மனந்திரும்பாதவர்களை நியாயம்தீர்த்தார். பேதுரு தன்னுடைய பிரசங்கத்தில் விசுவாசத்தைப் பற்றிய விதிமுறைகளை மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார். அவை கிறிஸ்துவின் வாழ்வு, சிலுவை மரணம், உயிர்த்தெழுதல், பரலோகத்திற்கு எழுந்தருளிப் போய், பிதாவினுடைய வலது பக்கத்தில் அமருதல். இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு அவற்றை விசுவாசிப்பவர், கிறிஸ்துவின் திருமுழுக்கில் தனக்குத் தானே மரணிக்கிறார். அப்போது அவர் உடனடியாகப் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும் தகுதியுடையவராகிறார்.

8. ஆதித் திருச்சபையின் ஆவிக்குரிய வாழ்க்கை (அப்போஸ்தலர் 2:42-47)
அப்போஸ்தலர் 2:42-47
42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். 43 எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது. 44 விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். 45 காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். 46 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, 47 தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.

இதுவரை நற்செய்தியாளனாகிய லூக்கா, விசுவாசிகளுடைய உள்ளத்தில் வாழும்படி பரிசுத்த ஆவியானவரை கிறிஸ்து எவ்வாறு அனுப்பினார், இந்த தகப்பனாகிய ஆவியானவர் எவ்வாறு பொழிந்தருளப்பட்டார், மகிழ்ச்சியையும், சத்தியத்தையும், பரிசுத்தத்தையும் அன்புடன் கலந்து அன்பின் பெருங்காற்றாய் எவ்வாறு வீசினார் ஆகியவற்றைப் பற்றி விவரித்தார். இனிமேல் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு, ஏன் செயல்படுகிறார் என்பதைக் காண்பிக்கப்போகிறார். பிதாவினுடைய வாக்குத்தத்தம் நிறைவேறிவிட்டது; கிறிஸ்துவின் வல்லமை செயல்பட்டு வெற்றிகண்டு விட்டது. உண்மையில் அது இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஒரு புதிய கிருபையின் யுகம் பிறந்து விட்டது. கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுடைய சுயத்தை உடைத்து, அவர்களை அவர் சிறந்த மனிதர்களாக மாற்றுகிறார். அவர்களுடைய விசுவாசத்தின் மூலமாக இறைவனுடைய நன்மையினால் அவர்கள் நிரப்பப்படுகிறார்கள்.
பரிசுத்த ஆவியானவர் நடைமுறையில் எவ்வாறு தோன்றுகிறார்? லூக்கா பரிசுத்த ஆவியானவருடைய தன்மையைப் பற்றியும் அவருடைய செயலைப் பற்றியும் சுருக்கமாகவும், அழகாகவும், அடையாள மொழியிலும் விளக்குகிறார். முக்கியமாக அவர் இறைவனுடைய வார்த்தையின் முழுமைக்குள், சிறப்பாக அப்போஸ்தலருடைய போதனைகளுக்குள் அவர் விசுவாசிகளை நடத்துகிறார். கிறிஸ்து அனுதினமும் தம்முடைய மாணவர்களுக்குப் போதிக்கும் நற்செய்தியை ஆழமாகவும் தொடர்ச்சியாகவும் கற்றுக்கொள்ளாமல் தெய்வீக ஆவியிடமிருந்து நாம் வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியாது. அப்போஸ்தலர்களுடைய உபதேசம் இல்லாமல் நம்முடைய விசுவாசத்திற்கு அடிப்படையே இல்லை.
அனுதினமும் இறைவனுடைய வார்த்தையிலிருந்து பெற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய ஊட்டச்சத்தின் மூலமாக இறைவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளும் காரியம் தனிமையில் நடைபெறுவதில்லை. ஆதித்திருச்சபை விசுவாசிகள் ஒருவரோடொருவர் அன்பின் ஐக்கியம் உடையவர்களாக தங்களைவிட மற்றவர்களை மேன்மையாகக் கருதினார்கள். இறைவனுடைய ஆவியானவர் அன்பின் ஆவியானவராயிருப்பதால், இந்த அன்பின் ஐக்கியம் இல்லாமல் கிறிஸ்தவமே இல்லை.
ஆதிக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய இரட்சிப்பிலும் அன்பின் ஐக்கியத்தில் மட்டும் நிலைத்திராமல், அவர்கள் கர்த்தருடைய பந்தியிலும் பங்கெடுத்தார்கள். அப்பம், இரசம் ஆகிய அடையாளங்கள் மூலமாக கிறிஸ்து தங்களில் வாழ்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இவ்வாறு அவர்கள் எழுப்புதல் அடைந்து மகிழ்ச்சியிலும், நன்றியறிதலிலும் பெலப்படுத்தப்பட்டார்கள்.
இந்த அடிப்படையான கிறிஸ்தவ குணாதிசயங்களோடு விண்ணப்பங்கள், வேண்டுதல்கள், துதிப் பாடல்கள், பாவ அறிக்கைகள் மற்றும் மன்றாட்டுகள் ஆகியவையும் அவர்களுடைய வாழ்வில் மேலோங்கிக் காணப்பட்டன. அவர்களுடைய கூடுகைக்கு அடிப்படையாயிருந்தது உலக சிந்தையோ, தத்துவ ஞானமோ அல்ல, அவர்கள் எப்போதும் தொடர்பு வைத்திருக்கும் அவர்களுடைய பிதாவாகிய இறைவனுடன் அவர்களுக்கிருந்த உறவு ஆகும். அன்புள்ள சகோதரனே, நீங்கள் தொடர்ச்சியாக மற்ற சகோதரர்களுடன் இணைந்து விண்ணப்பிக்கிறவராயிருக்கிறீர்களா?
அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தது ஒரு மோலோட்டமான நம்பிக்கையினால் அல்ல. அவர்கள் இறைவனுடைய பரிசுத்தத்தின் மகிமையை அனுபவித்திருந்தபடியால் அவர்களுடைய விசுவாசம் ஆழமானதாக இருந்தது. அவர்கள் அவருக்கு முன்பாக உறுதியாக இருந்தார்கள். அவர்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரை நேசித்து, அவரையே நம்பியிருந்தார்கள். தாழ்மையும், பயபக்தியும், இறைவனுடைய மேன்மையைக் குறித்த பயமும் எப்போதும் அவர்களிடத்திலிருந்தது. நம்முடைய உயிருள்ள விசுவாசத்திற்கு அடிப்படையாயிருக்கக்கூடிய இறைவனிடமான பயத்தையும் அன்பையும் பரிசுத்த ஆவியானவர் நம்மில் உருவாக்குகிறார்.
பரிசுத்த ஆவியானவர் யாரில் குடிகொண்டிருக்கிறாரோ அவரில் பரிசுத்த திரித்துவ இறைவனுடைய தெய்வீக வல்லமை பரிசுத்தவான்களுடைய ஐக்கியத்தில் விளங்கும். நம்முடைய பிதாவானவர் தம்முடைய இரக்கத்தின் முழுமையிலிருந்து அனுதினமும் தம்முடைய பிள்ளைகளின் விண்ணப்பங்களுக்கு பதிலளித்து, அவர்களை இரட்சிப்பினால் ஆசீர்வதித்து, பாதுகாத்து, குணப்படுத்தி, பரிசுத்தப்படுத்தி, அவர்களை வழிநடத்துகிறார்.
பரிசுத்த ஆவியானவர் தாராளமாக மகிழ்ச்சியுடன் கொடுக்கும்படி விசுவாசிகளைத் தூண்டுவதால், அவர்கள் தங்கள் பணப்பையைச் சுருக்கிக்கொள்வதில்லை. “வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம்” என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார். ஆரம்ப காலத்து கிறிஸ்தவர்கள் தங்கள் சொத்துக்களை விற்று, பண ஆசையில்லாதவர்களாக, திருச்சபையின் பொதுவான தேவைக்காக அந்த வருமானத்தைக் கொடுத்தார்கள். அவர்கள் ஒரு குடும்பமாக வாழ்ந்து, ஒருவரோடொருவர் இணங்கிப் போனார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியினால் கஞ்சத்தனம், பகைமை, பொருளாசை ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டு, நடைமுறை அன்பில் வழிநடத்தப்பட்டார்கள்.
அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் வருகைக்காக காத்திருந்தார்கள். அவர்கள் உயிரோடிருக்கும்போதே கிறிஸ்துவின் மகிமையை தங்களால் காணமுடியும் என்று அவர்கள் நம்பினார்கள். அவர்கள் அவருடைய மகிமையின் அரசிற்காகக் காத்திருக்கும்போது, இரவும் பகலும் அவரை நினைத்து, தங்கள் இரட்சகராகிய அவரில் அதிகமாக அன்புகூர்ந்தார்கள். அவர்கள் தங்களுடைய விசுவாசம் உண்மையானதுதானா என்றோ, அவர்களுடைய அன்பு உறுதியானதா என்றோ, அவர்களுடைய நம்பிக்கை நிச்சயமானதுதானா என்றோ தங்களுக்குள் சந்தேகித்து விவாதிக்கவில்லை. அவர்கள் தங்கள் இருதயத்தினால் அவற்றை எளிமையாக விசுவாசித்து அதில் மகிழ்ந்திருந்தார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியானவருடைய சத்தியத்தில் மகிழ்வடைந்து, களைப்படையாமல் எப்போதும் இறைவனைத் துதித்தார்கள்.
கிருபையினால் தங்கள் விசுவாச வாழ்வை ஆரம்பித்த அவர்கள் தங்கள் வீடுகளில் கூடிவருவதை விட்டுவிடவில்லை. அவர்கள் வீடுகள் தோறும் கூடிவந்து அப்போஸ்தலருடைய உபதேசத்திற்குச் செவிகொடுத்து, பொதுவான விண்ணப்பங்களை ஏறெடுத்தார்கள். அவர்கள் தேவாலயத்தைப் புறக்கணிக்காவிட்டாலும் அவர்களே கைகளினால் கட்டப்படாத, பரிசுத்த ஆவியின் ஆலயங்களாக மாறியிருந்தார்கள்.
அப்படிப்பட்ட திருச்சபை இன்பமானது, கவர்ச்சிகரமானது. இந்த அன்பினால் கவரப்பட்ட அநேகர்: “நீங்கள் எவ்வாறு மாற்றமடைந்தீர்கள்?” என்றும் “இது எப்படி நடந்தது?” என்றும் கேட்டார்கள். அதற்கு அவர்கள் “உயிருள்ளவராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியாகிய தம்முடைய வரத்தை எங்களுக்குக் கொடுத்தார். அதனால்தான் நாங்கள் இவ்வாறு மாற்றமடைந்தோம்” என்று பதிலளித்தார்கள். அவர்கள் இவ்வாறு சாட்சிபகர்ந்ததன் காரணமாக புதிய மக்கள் அனுதினமும் திருச்சபையில் இணைக்கப்பட்டார்கள். அந்த எழுப்புதலினால் திருச்சபை வளர்ச்சியடைந்தது.
இந்த இடத்தில்தான் நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் “திருச்சபை” என்ற வார்த்தையை முதன்முதலில் வாசிக்கிறோம். இதுவரை நாம் அந்த மக்களைக் குறித்துக் கொடுத்த விளக்கங்கள் கிறிஸ்துவின் உயிருள்ள உடலாகிய திருச்சபையின் குணாதிசயங்கள் ஆகும். பரிசுத்த ஆவியானவருடைய செயல் வெறுமனே தனிப்பட்ட ஆத்துமாக்களில் மட்டும் செயல்படாமல் திருச்சபையாகிய பரிசுத்தவான்களின் ஐக்கியத்தில் முடிவடைகிறது. நம்முடைய இறைவன் அன்பாயிருக்கிறபடியால் அந்த அன்பு விசுவாசிகளுடைய ஐக்கியத்தில்தான் உணரப்படுகிற