19. திருச்சபை நிறுவனமும், ஏழு உதவிக்காரர்களை தெரிந்தெடுத்தலும் (அப்போஸ்தலர் 6:1-7)
அப்போஸ்தலர் 6:1-7
1 அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். 2 அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல. 3 ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். 4 நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள். 5 இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு, 6 அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள். 7 தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
1 அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். 2 அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல. 3 ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். 4 நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள். 5 இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு, 6 அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள். 7 தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
சீஷர்களின் எண்ணிக்கை பெருகிய போது, பந்தி விசாரிப்பில் பிரச்சனைகள் ஆரம்பித்தது. திருச்சபையை ஒழுங்குமுறைப்படுத்தி நிர்வாகிப்பது என்பது தேவையாய் இருந்தது. இந்தக் காரியம் இன்று நமது சபைகளில் எழும்பும் உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளைத் தீர்ப்பது பற்றிய பாடங்களை கற்றுக்கொடுக்கிறது. இந்தக் காரியம் நான்கு பிரச்சனைகளை உள்ளடக்கியிருந்தது. பிரச்சனைகளை தீர்க்கும்படி பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளை ஆறு வழிகளில் வழிநடத்தினார்.
அக்காலத்தில் மத்திய கிழக்கு பகுதியில் விதவைகள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேவந்து வேலைசெய்யும்படி அனுமதிக்கப்படவில்லை. உதவி செய்யும் பெண்களாக யூதக்கிறிஸ்தவர்கள் இந்த விதவைகளை நியமித்தார்கள். கணவன் இறந்தபின்பு மறுமணம் செய்ய முடியாத நிலையில் உள்ளோர், வியாதியுற்றோர் அல்லது குழந்தைகள் இல்லாதோர் இப்படிப்பட்ட பணிகளைச் செய்தார்கள். விசுவாசிகளான விதவைகளுக்கென்று ஓர் பந்தியை ஆதித் திருச்சபை ஏற்படுத்தியது. அப்போஸ்தலர்கள் பொதுவான நிதியை நிர்வாகித்து வந்தார்கள். மேலும் பந்தி விசாரணையை சிறப்பான வழியில் நிறைவேற்றும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.
ஆதித் திருச்சபையில் அரமேயு மொழி பேசும் யூதர்கள் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து முன்வந்தார்கள். அவர்கள் பாலஸ்தீனாவை விட்டுச் செல்லவில்லை. அவர்களது சொந்த நாட்டிலேயே இருந்தார்கள். அரமேயு அல்லது எபிரெயம் தெரியாத கிரேக்க மொழி மட்டும் பேசும் ஹெலனிஸ்டிக் யூதர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்தார்கள். அவர்கள் தங்களது சொந்த நாட்டில் அந்நியர்களைப் போல காணப்பட்டார்கள். அரமேயு மொழியை எளிதாக உச்சரிக்கவோ அல்லது பேசவோ முடியாத நிலையில் இருந்தார்கள். ஆகவே அவர்களால் பிரச்சனைகளின்றி காரியங்களை புரிந்துகொள்ளவோ, அல்லது பரிமாறிக் கொள்ளவோ முடியாதிருந்தது. ஹெலனிஸ்டிக் யூதர்களைச் சேர்ந்த விதவைகள் முழுமையான கவனிப்பைப் பெறாததினால் மகிழ்ச்சியிழந்து இருந்தார்கள். தூர தேசங்களில் இருந்து வந்த கிறிஸ்தவர்களாகிய பர்னபா மற்றம் ஒரு சிலர் மிகப்பெரிய தொகையை ஏழைகளின் நலனுக்காக வழங்கியிருந்தும் இப்படிப்பட்ட நிலை காணப்பட்டது.
பிரசங்கங்கள், விண்ணப்பங்கள், உபதேசித்தல், கூட்டங்கள், வீடு சந்திப்புகள், குணமாக்குதல், பொது நிதியை நிர்வகித்தல், விசுவாசிகளை உறுதிப்படுத்துதல் என்று பல்வேறு காரியங்களில் அப்போஸ்தலர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த கூடுதல் பணியை துல்லியமாகவும், சரியாகவும் செய்யும் திறமையோ அல்லது அதற்கு போதுமான நேரமோ அவர்களுக்கு இல்லை. ஆகவே தங்களுடைய தேவைகளை அரமேயு மொழியில் வெளிப்படுத்த தெரியாதவர்களாக அந்த விதவைகள் இருந்தபடியால், அவர்கள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டார்கள். இன்றைய நாளிலும் பிஷப்மார்கள் மற்றும் ஊழியர்கள் நிர்வாக மற்றும் ஆவிக்குரிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, எந்த ஒரு பணியையும் நன்றாகவும், சரியாகவும் செய்யமுடியாத நிலையில் உள்ளார்கள்.
அப்படிப்பட்ட நேரங்களில் விசுவாசிகள் ஒருவருக்கொருவர் ஒளிவுமறைவின்றி பேசினால் அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். பிரச்சனைகள் தீர்க்கப்படாதபட்சத்தில் மிகப்பெரிய குறைகூறுதல் சபையில் எழும்பும். அன்பும், அனலும் மிக்க அவர்களது அன்பின் ஐக்கியம் உடைக்கப்பட ஏதுவாகும்.
சபையின் எல்லாப் பணிகளையும் அப்போஸ்தலர்கள் நிறைவேற்ற முடியவில்லை என்பதை உணர்ந்தார்கள். ஏனெனில் அப்போது சபையின் அங்கத்தினர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போனது. ஆகவே எல்லா நற்செயல்களை செய்வதற்கும், பணிகளை நிறைவேற்றவும் உதவியாளர்கள் அவர்களுக்கு தேவைப்பட்டதை அழுத்தமாக உணர்ந்தார்கள். அவர்கள் தங்களது நண்பர்கள், உறவினர்கள், மற்றும் இயேசுவின் குடும்பத்தை சேர்ந்தவர்களை இந்த சபையின் புதிய பணிக்கென்று தெரிவுசெய்யும்படி பரிசுத்த ஆவியானவர் அவர்களை வழிநடத்தவில்லை. உணவுகளை வாங்குவதற்கு, சமைப்பதற்கு, பரிமாறுவதற்கு என்று உதவியாளர் தேவைப்பட்டபோது, அவர்கள் முழு சபையையும் அழைத்தார்கள். அவர்களிடம் இந்த பணிக்கென்று ஏழு பேரை தெரிவுசெய்யும்படி கேட்டார்கள்.
எப்படி அப்போஸ்தலர்கள் இந்த தெரிவுசெய்தலின் அவசியத்தை நிரூபணம் செய்தார்கள்?
அவர்கள் கூறினார்கள் “எங்களால் போதுமான அளவு பிரசங்கிக்க இயலவில்லை” விண்ணப்பம் மற்றும் இறைவனின் வார்த்தை உணவை விட மேலானது, “மனிதன் அப்பத்தினாலே மாத்திரம் அல்ல, இறைவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” ஆகவே அப்போஸ்தலர்கள் இதை முன்னிட்டு உபதேசித்தல் பிரசங்கித்தல் இவைகளை விட விண்ணப்பம் பண்ணுதல் மிகவும் முக்கியம் என்பதை தெளிவுபடுத்தினார்கள். இறுதியாக நாமும் பேசுவதற்கு முன்பாக விண்ணப்பத்தின் அவசியத்தை உணருவோம். இல்லையெனில் நமது உபதேசித்தல் மற்றும் பிரசங்கித்தல் வீணாக இருக்கும். பிரியமான விசுவாசியே, நீ தொடர்ந்து விண்ணப்பம் பண்ணுகிறாயா?
இந்த பந்தி விசாரிப்புப் பணிகளை செய்வதற்கு தகுதியானவர்கள் யார்? பரிசுத்த ஆவியினாலும், ஞானத்தினாலும் நிறைந்திருப்பவர்களே இதற்குத் தகுதியானவர்கள். முதலாவது நிபந்தனை இரண்டாவது பிறப்பு ஆகும். பரிசுத்த ஆவியின் நிறைவோடு அன்பு, பொறுமை, நம்பிக்கை விண்ணப்பத்தின் வல்லமை மற்றும் ஆர்வமுடன் பிரசங்கித்தல் இவைகளை நிறைவேற்ற வேண்டும். இரண்டாவது தகுதி என்பது அவர்களது வாழ்வின் அனுபவத்தை வெளிப்படுத்துகிறது. ஞானம் என்பது மக்களுடன் இடைபடுவதை குறிக்கிறது. பணத்தை திறமையாக நிர்வாகித்தல், வாங்குவதில் தேர்ச்சி , பந்திவிசாரிப்பை சரியாக செய்தல் போன்ற காரியங்களை உள்ளடக்கியதாகும். ஆகவே சபையில் இந்தப் பணிக்கான நிபந்தனை இரண்டு பகுதிகளை உடையதாக இருந்தது. முதலாவது கிறிஸ்துவின் மீது விசுவாசத்துடன், மிகுந்த தாழ்மையோடு, நிறைவான அன்பை வெளிப்படுத்துவது ஆகும். இரண்டாவது நடைமுறை சேவைப் பணிகளில், போதுமான அனுபவம், மற்றும் பந்திவிசாரிப்பு காரியங்களில் ஞானம் மற்றும் அறிவுடன் செயல்படுவது ஆகும்.
அவர்களை தேர்வு செய்வதில் அப்போஸ்தலர்கள் பங்கேற்கவில்லை. சபையாக அனைவரும் முன்வந்து பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும், ஞானத்தினாலும் நிறைந்திருந்த ஏழு பேரை தெரிந்து எடுத்தார்கள். விதவைகளுக்கு பந்தி பரிமாறுகிற பணியில் இயேசு சரியான மனிதர்களை தெரிந்தெடுக்கும் படி அப்போஸ்தலர்கள் விண்ணப்பம் செய்தார்கள். தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியலை பார்ப்போமென்றால், அவர்களில் அநேகர் கிரேக்கர்கள் அல்லது ஹெலனிஸ்டிக் யூதர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் அந்த பெயர்கள் கிரேக்கப் பெயர்கள். அவைகள் எபிரெய மொழி பெயர்களாக இல்லை. நாம் ஸ்தேவான் மற்றும் பிலிப்புவைக் குறித்து அதிகம் வாசிக்கிறோம். இங்கே நாம் அந்தியோகியா என்ற பெயரை முதல் முறையாக வாசிக்கிறோம். இதுவே பின்பு, அருட்பணிக்கான மையமாகத் திகழ்ந்தது. கிறிஸ்தவராக மாறும் முன்பு, புறமதத்திலிருந்து யூதமதத்திற்கு மாறியிருந்த நிக்கானோர் மற்றும் நற்செய்தியாளர் லூக்கா இந்த சபையில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். திருச்சபையில் ஆக்கப்பூர்வ செயல்கள் ஹெலனிஸ்டிக் யூதர்களிடம் இருந்து வெளிப்படுவதை இந்நேரம் முதற்கொண்டு நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் வாசிக்கமுடியும். அவர்கள் கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்து வந்தார்கள். நற்செய்தி பரவுவதற்கு மிகப்பெரிய பங்கை அவர்கள் நிறைவேற்றினார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் கூட இப்படிப்பட்ட குழுவில் ஒருவராகத் தான் இருந்தார்.
திருச்சபையானது ஏழுபேரைத் தெரிவு செய்த பிறகு, அவர்களை அப்போஸ்தலர்களுக்கு முன்பு நிறுத்தியது. அவர்கள் கரங்களை அவர்களுடைய தலைகளின் மேல் வைக்கும் படியாக அப்படிச் செய்தார்கள். அப்போஸ்தலர்களுக்கு அருளப்பட்ட வல்லமை புதிதாக நியமிக்கப்பட்ட மனிதர்களுக்கு கடந்து சென்றது. அந்த ஏழு பேரும் ஏற்கெனவே பரிசுத்த ஆவியைப் பெற்று, ஆவியானவரால் நிறைந்திருந்தார்கள். இருப்பினும் அப்போஸ்தலர்களில் தங்கியிருந்த விசேஷித்த வல்லமையை விசுவாசிகள் அறிந்திருந்தார்கள். ஆகவே திருச்சபையானது தெரிந்தெடுக்கப்பட்ட மனிதர்களை, அவர்களுடைய பணிக்கென்று அப்போஸ்தலர்கள் பிரதிஷ்டை செய்யும்படி கேட்டுக்கொண்டது. பொறுப்பு வகித்த அப்போஸ்தலர்கள் மற்றும் முழுசபைக்கும் இடையே காணப்பட்ட ஐக்கியத்தின் மூலம் இந்த காரியம் நடைபெற்றது. அவர்கள் அனைவரும் அப்போஸ்தலர்கள் கைகளை வைத்து விண்ணப்பம் செய்த போது ஆண்டவருடைய வல்லமை அவருடைய ஏழு ஊழியர்களை ஆட்கொள்ளும்படி விண்ணப்பம் செய்தார்கள்.
இந்த உதவிக்காரர்களின் பணியை விட அப்போஸ்தலர்களின் பணி உயர்வானது என்று கருதப்படவில்லை. அவர்கள் அனைவரும் ஒரே ஆண்டவரைப் பெற்றுள்ளார்கள். ஒரே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டுள்ளார்கள். அப்போஸ்தலர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அப்போஸ்தலப் பணிகளை மட்டும் அவர்கள் நிறைவேற்றினார்கள். உதவிக்காரர்களின் பணியோ, வெறுமனே பந்தி விசாரிப்புடன் நின்றுவிடவில்லை. ஏழுபேரில் ஒருவனாகிய ஸ்தேவான் கிறிஸ்துவுக்கு மிகப்பெரும் சாட்சியாக மாறினான். பின்பு கிறிஸ்தவத்தில் முதல் இரத்த சாட்சியாக மரித்தான். பிலிப்பு ஓர் நற்செய்தியாளராகவும் செயல்பட்டார். எத்தியோப்பிய மந்திரிக்கு ஆண்டவருடைய வல்லமையைக் குறித்து பிரசங்கித்தான். அவனுக்கு திருமுழுக்கு கொடுத்தான். அந்த உதவிக்காரர்கள் பந்திவிசாரிப்புப் பணிகளை செய்வதோடு நின்றுவிடாமல், கிறிஸ்துவின் வலிமை மிகுந்த சாட்சிகளாக காணப்பட்டார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.
எண் 3 என்பது பரலோகத்தின் குறியீடாக உள்ளது. எண் 4 என்பது பூமியின் குறியீடாக உள்ளது. அப்போஸ்தலர்கள் எண்ணிக்கை 12 ஆக இருந்தது. 12 என்பதை 3 பெருக்கல் 4 எனக் குறிப்பிட முடியும். உதவிக்காரர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்தது. அதாவது 3+4 என்பது இரண்டு காரியங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கிறிஸ்துவால் தெரிந்தெடுக்கப்பட்ட இவர்களில் பரலோகமானது பூமியுடன் இணைக்கப்பட்டது.
விசுவாசிகள் மத்தியில் வார்த்தை மாம்சமாகி வெளிப்பட்டதைப் போல, சபையின் இந்தப் பணி மூலம், அது வளர்ச்சியடைய ஆரம்பித்தது. நற்செய்தியாளர் கூறுகிறார். “வசனம் எங்கும் பரம்பிற்று”. எருசலேமில் விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகியது. ஆலோசனைச் சங்கம் இயேசுவின் நாமத்தைக் குறித்த சாட்சியை தடை செய்திருந்தும், சபை வளர்ந்தது. பன்னிரெண்டு அப்போஸ்தலர்கள் தங்கள் முதுகுகளில் வலி மற்றும் வேதனையுடன் கூடிய அடையாளங்களை இன்னமும் பெற்றிருந்தார்கள்.
பிரதான ஆசாரியர்கள் திருச்சபையின் மோசமான எதிரிகளாக காணப்பட்ட போதிலும், அநேக ஆசாரியர்கள் தங்களை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்து வந்தது ஓர் ஆச்சரியமான காரியம். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களில் இவ்விதம் வல்லமையாக செயல்பட்டார். இறைவனுடைய அன்பின் வல்லமையை ஆசாரியர்களும் அனுபவித்தார்கள். அநேகர் மனந்திரும்பினார்கள், நற்செய்திக்கு கீழ்ப்படிந்தார்கள். அவர்களது புதிய விசுவாசத்தின் விளைவாக அவர்களது பணிக்கு ஆபத்து நேரிட்டது. இருப்பினும் கிறிஸ்துவின் அழைப்பு அவர்களைத் தொட்டது. அநேகர் உண்மையாய் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அவர்கள் புதிய விசுவாசத்திற்கு கீழ்ப்படிந்து வந்தார்கள்.
அருமையான சகோதரனே, நற்செய்தியின் நல்ல அம்சத்தை நீ புரிந்து கொண்டாயா? நீ இறைவனுடைய அழைப்பைப் பெற்றுள்ளாயா? பரிசுத்த ஆவியானவரின் அழைப்புக்கு நீ கீழ்ப்படிந்தாயா? விண்ணப்பத்துடன் கிறிஸ்துவுக்கு உன்னை ஒப்புக்கொடு. நீ அவரை அறியாதிருந்தும் அவர் உனக்காக தனது உயிரை கொடுத்துள்ளார்.
20. ஸ்தேவானின் வலிமைமிக்க சாட்சி (அப்போஸ்தலர் 6:8-15)
அப்போஸ்தலர் 6:8-15
8 ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.9 அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள்.10 அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.11 அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி;12 ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;13 பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷணவார்த்தைகளை ஓயாமற்பேசுகிறான்;14 எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக்கேட்டோம் என்றார்கள்.15 ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள்.
8 ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.9 அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள்.10 அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.11 அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி;12 ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;13 பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷணவார்த்தைகளை ஓயாமற்பேசுகிறான்;14 எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக்கேட்டோம் என்றார்கள்.15 ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள்.
பரிசுத்த ஆவியானவர் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரத்தசாட்சியான ஸ்தேவானின் வாழ்க்கையைப் பற்றி வாசித்துப் பாருங்கள். அப்போது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு தன்னை முழுவதும் ஒப்புக்கொடுக்கிறவனிடத்தில் பரிசுத்த ஆவியானவர் எவ்விதம் செயல்படுகிறார் என்பதை அறிய முடியும்.
ஸ்தேவான் என்பதற்கான கிரேக்கப்பெயரின் (ஸ்டெபனோஸ்) அர்த்தம் கிரீடம் என்பதாகும். மலர்களினால் செய்யப்பட்ட மாலை போன்ற அக்கிரீடம் பண்டிகைக் காலங்கள் ஓட்டப்பந்தயங்கள், விளையாட்டுகள் மற்றும் போர்களில் அடையும் வெற்றியை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வு மற்றும் தேவையை வெளிப்படுத்தும் ஒரு படமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. பரலோக ஓட்டப்பந்தயத்தில் இரத்தசாட்சிக்கான கிரீடத்தைப் பெறும் முதல் நபராக ஸ்தேவான் இருப்பது, அவனது பெயருடன் ஒத்துப்போகும் சிறப்பான ஓர் அம்சமாக காணப்படுகிறது. அவன் கற்களால் எறியுண்டு கொல்லப்பட்டு, தன்னுடைய ஆண்டவரை பின்பற்றி மகிமையில் பிரவேசித்தான்.
கிரேக்கனாயிருந்த ஸ்தேவான் இரட்சிப்பிற்கான நற்செய்தியைக் கேட்டான், கிறிஸ்துவின் வல்லமை வெளிப்பட தன் இருதயத்தை திறந்து கொடுத்தான், பாவமன்னிப்பை பெற்றுக்கொண்டான். அவன் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்திருந்தான். ஆவியானவரின் அநேக ஆவிக்குரிய வரங்கள் அவனிடமிருந்து வெளிப்பட்டன. ஸ்தேவான் தன்னில் தானே நீதியுள்ளவன் அல்ல, ஆனால் அவன் கிறிஸ்துவின் ஆவியினால் புதுப்பிக்கப்பட்டிருந்தான். அவன் தனது சொந்த தேவபக்தியினால் நீதிமானாக்கப்படவில்லை. கிறிஸ்து தனது விலையேறப்பெற்ற இரத்தத்தால் இலவசமாய் அவனை சுத்தப்படுத்தியிருந்தார். ஒரு பாவியின் வாழ்வில் இறைவன் செய்யும் இச்செயல்கள் “கிருபை” என்ற வார்த்தையில் உள்ளடங்கியுள்ளது. கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பவரைத் தவிர வேறுஎவரும் இறைவனின் கிருபைகளை பெற்றுக் கொள்ளமுடியாது. அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லோரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம். (யோவான் 1:16)
இந்த ஆசீர்வாதங்களின் சாராம்சம் இறைவனுடைய வல்லமையாக உள்ளது. சர்வ வல்லமையுள்ளவரின் பெலன் பரிசுத்த ஆவியானவர் மூலமாக விசுவாசியின் அன்பு, தாழ்மை மற்றும் தூய்மையில் காணப்படுகிறது. கிறிஸ்துவின் வல்லமை அவரை பின்பற்றுபவர்களில் செயல்படுகிறது. அவர்கள் பரிசுத்தவான்கள் மத்தியில் தாழ்மையாக வாழும்போது, அவர்களது சுயபெருமை நொறுக்கப்படும்போது அற்புதங்கள் மற்றும் அடையாளங்கள் மூலம் கிறிஸ்துவின் வல்லமை வெளிப்படுகிறது. கிறிஸ்து தனது சாட்சிகள் மூலம் செயல்படுகிறார். அவர்கள் மத்தியில் செயல்பட்டு இரட்சிக்கிறார், குணமாக்குகிறார் மற்றும் ஆசீர்வதிக்கிறார். அவர் பூமியில் நடமாடிய போதும் இதையே செய்தார்.
ஸ்தேவான் தளராமல் உழைக்கின்ற ஓர் பிரசங்கியாளர். அவர் தனது சொந்த விடுதலைக்காக வாழவில்லை. சபையில் நான்கு சுவர்களுக்குள் வசதியாக வாழ்வதில் அவர் திருப்தியடையவில்லை. அவர் மதப்பற்றுமிக்க யூதர்களின் ஜெப ஆலயங்களுக்கு சென்றார். சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்தூர் இயேசுவே மெய்யான மேசியா என்பதையும், அவர் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்பதையும் அவர்களுக்கு சாட்சியாக அறிவித்தார். அப்போஸ்தலர்கள் மட்டுமே கிறிஸ்துவின் ஒரே சாட்சிகளாக திகழவில்லை. மாறாக பரிசுத்த ஆவியினால் நிறைந்துள்ள ஒவ்வொருவரும் இறைவன் அன்புள்ளவர் என்பதை அறிவிக்கிறார்கள். இறைவன் சிலுவையில் மரித்த தனது குமாரன் மூலமாக மனிதர்களை தன்னோடு ஒப்புரவாக்குகிறார். பாவிகளும் மூடர்களும் நிறைந்த இந்த உலகம் இரட்சிக்கப்பட அவர் இவ்விதம் செயல்படுகிறார். ஆனால் உலகமோ, இந்த மாபெரும் சத்தியத்தை அறியவில்லை.
கிரேக்கப் பண்பாட்டுடைய யூதர்களின் ஜெப ஆலயத்துக்கு ஸ்தேவான் வந்தார். சிதறிப்போன யூதர்கள் கிரேக்க மொழியில் பழைய ஏற்பாட்டை நன்கு வாசித்திருந்தார்கள். அதனுடைய அர்த்தங்களை முறையாக அறிந்து தியானித்து இருந்தார்கள். அவர்கள் மற்ற யூதர்களைப் போல வெறுமனே நற்செய்தியை மட்டும் கவனிக்கவில்லை. அதனுடைய கருத்துகளின் வெளிச்சத்தில் தங்கள் மனங்களை பழக்குவித்தார்கள். இருப்பினும் அவர்கள் கீழ்ப்படியாமை மற்றும் அவிசுவாசத்தின் எதிர்மறையான விளைவுகளை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் பழைய ஏற்பாட்டு முறைமையின்படி ஸ்தேவானுடைய நிலை குறித்து தர்க்கம் பண்ணினார்கள். ஆனாலும் தத்துவரீதியாக பயிற்றுவிக்கப்பட்டிருந்த யூதர்கள் ஸ்தேவானிடமிருந்து வெளிப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் ஞானத்திற்கு எதிர்த்து நிற்க முடியவில்லை.
அவர்களது விசுவாசத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஓர் கலகம் ஏற்படுவதை உணர்ந்தார்கள். அறிவுமிக்க விரிவுரையாளர்கள் கொதித்தெழுந்தார்கள். அவர்கள் இந்த புதிய ஏமாற்றுக்காரருக்கு எதிராக மக்கள், மூப்பர்கள் மற்றும் வேதபாரகர்களை தூண்டி விட்டார்கள். அவர்கள் இவனை உளவு பார்த்தார்கள். இவனை அவமதித்தார்கள். இறுதியில் அவர்கள் ஒரு நேரத்தை குறித்து ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக அவனை நிறுத்தினார்கள். அதில் மூப்பர்களும், குறிப்பிடத்தக்க சிலரும் இருந்தார்கள்.
பிரதான ஆசாரியர்கள், சட்ட நிபுணர்கள் இவனை சிறைபிடித்ததினால் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். கமாலியேலின் ஆலோசனையின் விளைவாக அமைதி காத்த இவர்கள் தடைசெய்யப்பட்ட இயேசுவின் நாமத்தை உச்சரித்த இந்த பிரதிநிதி மீது கோபத்துடன் பொங்கியெழுந்தார்கள். (அதிகாரம் 5:34-40) அவர்களில் ஒரு சாரார் நியாயப்பிரமாணத்திற்கும், முற்பிதாக்களின் முறைமைகளுக்கும் உண்மையுள்ளவர்களால் இருந்தார்கள். எருசலேமின் ஆதித்திருச்சபை அங்கத்தினர்கள் முழுமையாக யூதர்களாகவும், அதே சமயத்தில் உண்மையுள்ள கிறிஸ்தவர்களாகவும் இருந்தார்கள்.
ஆனால் மதத் தலைவர்கள் ஒரு புதிய ஆவிக்குரிய எழுப்புதல் ஏற்படுவதையும், கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்த கிரேக்க யூதர்கள் யூதமுறைமையிலிருந்து பிரிந்து போவதையும், இந்த நிகழ்வுகள் மூலம் உணர்ந்தார்கள். பன்னிரெண்டு அப்போஸ்தலர்களுக்கும் மரணத்தண்டனை தீர்ப்பை பிரதான ஆசாரியன் வழங்கவில்லை என்பதை இதற்கு முன்பாக கண்டோம். ஏனெனில் அவர்கள் சட்டத்தின்படி சரியாக நடந்துகொண்டார்கள். தங்களின் கருத்தான விண்ணப்பங்களை தேவாலயத்தில் ஏறெடுத்து கனப்படுத்தினார்கள். அப்போஸ்தலர்களின் மீது வைத்த முந்தைய குற்றச்சாட்டுகளை விட, ஸ்தேவானின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு வேறுபட்டதாக இருந்தது. அவன் தேவாலயம் மற்றும் நியாயப்பிரமாணம் இரண்டிற்கும் எதிராக செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டான். வசனப்பகுதிகளை நாம் கவனமாக வாசித்தால் பொய்சாட்சிகளால் ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக கொண்டுவரப்பட்ட இந்த குற்றச்சாட்சியில் ஆறு குறிப்புகள் இருப்பதை காண முடியும். ஸ்தேவானின் பிரசங்கத்தை தவறாக புரிந்து கொண்டதின் அடிப்படையில் அவர்கள் பொய்யாய் குற்றம் சாட்டினார்கள்.
இயேசு சிலுவையில் மனிதர்களுடைய எல்லா பாவங்களையும் மன்னித்தார் என்று ஆலயத்திலே ஸ்தேவான் சொல்லியிருந்தான். எனவே கிரேக்க யூதர்கள் இவ்வாறு தங்கள் வாதத்தை முன் வைத்தார்கள். “ஆகவே உனக்கு தேவாலயம் தேவையில்லை. அதிலே தினமும் செலுத்தப்படும் பலிகள் தேவையில்லை. நீ தேவாலயம் மற்றும் பலி தொடர்புடைய நாட்டின் அனைத்து உயர்ந்த சடங்குகளையும் மறுதலிக்கிறாய்”.
மனிதனின் இரட்சிப்பு என்பது இயேசுவின் மீது வைக்கும் விசுவாசத்தை மட்டும் சார்ந்துள்ளது என்று ஸ்தேவான் யூதர்களுக்கு சொல்லியிருந்தார். எனவே பண்டிதர்கள் உடனடியாக அவனுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து, அவனை குற்றம் சாட்டினார்கள். “நியாயப்பிரமாணம் என்பது இறைவனுடைய நியாயப்பிரமாணம் என்பதை நீ நம்பவில்லை” என்று கூறினார்கள். அதன் கட்டளைகளை கைக்கொள்வதின் மூலமும் உயர்ந்த நன்னடைக்கையின் மூலமும் ஒரு மனிதன் நீதிமானாக்கப்படுகிறான். நியாயப்பிரமாணம் நல்லது, பரிசுத்தமானது. ஆனால் மனிதனுடைய இருதயம் தீமையானது. அதை முழுமையாக கைக்கொள்ள மனிதன் இயலாதவனாக இருக்கிறான் என்பதை ஸ்தேவான் அவர்களுக்கு தெளிவாக விளக்கியிருந்தான் இறைவனின் நியாயப்பிரமாணம் நம்மை ஆக்கினைக்குட்படுத்துகிறது. நம்மை அழிக்கின்றது. அது நம்மை ஒரு போதும் இரட்சிப்பதில்லை.
இதைத் தொடர்ந்து யூதர்கள் எரிச்சலுற்று கோபத்துடன் அவனிடம் கேட்டார்கள். “இறைவனுடைய இந்த உடன்படிக்கையை நமக்கு வழங்கியது மோசே அல்லவா? அவர், பரிசுத்தமானவருக்கும் நமக்கும் இடையில் இருக்கும் தனித்துவம் வாய்ந்த மத்தியஸ்தர் அல்லவா? ஸ்தேவான் அவர்களுக்கு இவ்விதமாக பதிலளித்தான். மரணத்தை வென்று எழுந்த ஒரே மனிதன் இயேசுகிறிஸ்து மட்டுமே. அவர் இறைவனுடன் வாழ்கிறார். நமக்காக பரிந்து பேசுகிறார். அவர் கிறிஸ்து மட்டுமே, மோசே அல்ல. நம்மை படைத்தவருடன் ஒப்புரவாக்குபவர் கிறிஸ்து மட்டுமே.
யூதர்கள் ஸ்தேவானிடம் தந்திரமாய் ஒரு கேள்வி கேட்டார்கள். “புறக்கணிக்கப்பட்ட, சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிருள்ள ஆண்டவராக இறைவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். தாவீதின் தீர்க்கதரிசனத்தின்படி அவரே கிறிஸ்து (மேசியா) என்பதை (சங்கீதம் 110) நீ கூறுகிறாயா? ஸ்தேவான் முழுமையாக இயேசுவின் தெய்வீகத்தை ஏற்றுக்கொண்டான். எனவே இறை நிந்தனை செய்ததாக அவன் மீது அவர்கள் குற்றம் சுமத்தினார்கள்.
இறைவனை பிரியப்படுத்துவதற்காக நியாயப்பிரமாணத்தின் அனைத்து கட்டளைகளையும் உறுதியாக கைக்கொள்ளும்படி யூத சட்ட நிபுணர்களிடம் பரிசேயர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால் இறைவனின் நியாயப்பிரமாணம் என்பது இறைவனுடைய அன்பை உள்ளடக்கியது. இந்த அற்புதமான அன்பு நம்மை எல்லா தடைகளிலிருந்தும் விடுவிக்கிறது. சுதந்திரமாய் நாம் இறைவனுக்கு சேவை செய்திட நம்மை பலப்படுத்துகிறது என்பதை ஸ்தேவான் அவர்களுக்கு உறுதிப்படுத்தினான்.
யூதர்களின் இருதயம் மிகவும் கடினப்பட்டது. பரிசுத்த ஆவியானவரின் தெளிவான சத்தத்திற்கு அவர்கள் எதிர்த்து நின்றார்கள். இறுதியாக ஸ்தேவான் அவர்களிடம் கிறிஸ்து சீக்கிரமாய் வருகிறார் என்று சொன்னான். அவர் வரும் முன்பாக இறைவனுடைய கோபம் எருசலேம் விழும். பழைய உடன்படிக்கையின் மக்கள் மனந்திரும்பவில்லையென்றாலும், அவர்கள் உலக இரட்சகரிடம் தவறை உணர்ந்து மனந்திரும்பவில்லை யென்றாலும் இறைவன் தேவாலயத்தை அழிப்பார் என்று கூறினான்.
பொய் சாட்சிகள் இந்த குற்றச்சாட்டை ஸ்தேவானுக்கு எதிராக உறுதிப்படுத்திய போது, தேசத்தின் தலைவர்கள் அவர்களை உற்றுப் பார்த்தார்கள். அவர்கள் மத்தியில் நின்று கொண்டிருந்த அந்த ஒப்பற்ற மனிதனை கோபத்துடன் பார்த்தார்கள். அந்த மனிதன் பரலோகத்தின் ஒளியை அவனுடைய முகத்தில் பெற்றிருந்தான். பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்தான்.