இறைவார்த்தையும் இறையொழுக்கமும்
(சி, சாமுவேல்)
“பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து: அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” நீதிமொழிகள் 22:6.
முதலீடு
“நடத்து” என்ற சொல் மூலமொழியில் “பயிற்சி கொடு” என்று பொருள்படும். ஆம், சிறு வயதிலிருந்தே பிள்ளைகளைப் பயிற்றுவிக்கவேண்டும். அதது தானாக வளரும் என்று சொல்வோருண்டு. இது அறிவற்றப் பேச்சு. விலங்குகளும் பறவைகளும் கூட தங்கள் குட்டிகளை, குஞ்சுகளைப் பயிற்றுவிக்கின்றன. அப்படியானால் ஆரறிவு படைத்த மனிதன் பிள்ளைவளர்ப்பில் கவனம் செலுத்துவது எவ்வளவு அவசியம்! இறைவார்த்தையிலும் இறையொழுக்கத்திலும் வளர்க்கப்படும் பிள்ளை “அதை விடாதிருப்பான்”. ஆகவே இளமைப்பயிற்சி ஒரு நல்ல முதலீடு என்றால் அது மிகையாகாது. ஏனெனில், அதன் நற்பலனை வாழ்நாள் முழுதும், முதிர்வயதிலும் அவன் அறுப்பான். மட்டுமன்று, இளமைப்பயிற்சி அவன் நித்தியத்தையே நிர்ணியிக்கும்.
பிள்ளைப்பயிற்சி பெற்றோரின் கூட்டுப்பொறுப்பு, முழு பொறுப்பு. பிள்ளைகள் வளரும்போது, பெற்றோர்தவிர மற்றோரிடமிருந்தும் நன்மை தீமைகளைக் கற்றுககொள்வார்கள். ஆகவே பிள்ளைகளிடத்தில் பெற்றோரின் செல்வாக்கு மற்றோரின் செல்வாக்கை மிஞ்சியதாய் இருக்கவேண்டும்.

பெற்றோரே, பிள்ளைகள் இறைவனால் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டச் செல்வங்கள். நன்மையானாலும் தீமையானாலும் அவர்களைக்குறித்து நீங்களே அவருக்குக் கணக்குக் கொடுக்கவேண்டும் என்பதை மறவாதீர்.
பிதாக்களே!
“பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல்…வளர்ப்பீர்களாக” எபேசியர் 6:4.
பிள்ளைகளுக்கு எரிச்சல் உண்டாக்குவதும் தவறு, பெற்றோர் எரிச்சல்படுவதும் தவறு. அடிக்கடி குற்றம் கண்டுபிடித்தல், உதவாக்கரை என்பது, அச்சுறுத்தல், மிதிமிஞ்சிய எதிர்பார்ப்புகள், பட்சபாதம் போன்றவை பிள்ளைகளுக்கு ஆத்திரமூட்டும். பிள்ளைகள் தவறு செய்யும்போது, அவர்களைக் கண்டித்துத் திருத்துவது அவசியம். ஆனால் தேவையான திருத்தத்துக்கும், தேவையற்ற ஆத்திரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு புரிந்துகொண்டு செயல்படவேண்டும். முரட்டுத்தனமான தண்டனை முரட்டாட்டமான பிள்ளையை உருவாக்கும். ஆகவே பெற்றோரே, எரிச்சல்படாமலும் எரிச்சலுண்டாக்காமலும் உங்கள் பிள்ளைகளைத் திருத்த முற்படுங்கள்.

பிள்ளைகளே!
“பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள்… உனக்கு நன்மை உண்டரியிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாம் கற்பனையாயிருக்கிறது” எபேசியர் 6:1-3.
நீங்கள் ஆசிமிக்க தீர்க்காயுசை விரும்புகிறீர்களா? அப்படியானால், உங்கள் பெற்றோரைக் கனம்பண்ணுங்கள். உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆயினும் “கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள்” என்ற சொற்களைக் கவனியுங்கள். கர்த்தருக்குப் பிரியமில்லாததைச் செய்யும்படி பெற்றோர் தூண்டினால், அதற்குக் கீழ்ப்படிய வேண்டியதில்லை. ஆனால் ஆண்டவருக்குப் பிரியம் இல்லாததைச் செய்யமாட்டேன் என்பதை மிகவும் மரியாதையுடன் கூறவேண்டும்.

வார்த்தையும் பிரம்பும்
“பிதாக்களே… உங்கள் பிள்ளைகளைக்…கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்… வளர்ப்பீர்களாக” எபேசியர் 6:4.
கர்த்தருக்கேற்ற சிட்சை + கர்த்தருக்கேற்ற போதனை – இதுதான் பிள்ளைவளர்ப்பின் இரகசியம், சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்கு இறைவார்த்தையைப் புகட்டவேண்டும். இதுவே இறைமக்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை- உபாகமம் 6:6-9.
இக்கட்டளையின்படி நாங்கள் எங்கள் பிள்ளைகளை வளர்த்தோம். நாள் தவறினாலும் குடும்ப ஜெபம் தவறாது. ஆனால் சிறுபிள்ளைகள் சலித்துப்போகாவண்ணம் குடும்ப ஜெபம் சுருக்கமாகவே இருக்கும். லெந்து நாட்களில் சற்று நேரமெடுத்து, பிள்ளைகளுக்குக் கூடுதலாய் வசனங்களை விளக்கி, ஜெபிப்போம். இதன் விளைவாய் என் மூத்தமகள் 10 வயதிலும், இரண்டாவது மகள் 9 வயதிலும் இரட்சிக்கப்பட்டார்கள். பிள்ளைகளுக்குக் கருத்தாய் மட்டுமன்றி, ஞானமாயும் போதிக்கவேண்டும். அவர்களைக் கட்டாயப்படுத்தி, மிரட்டி, அடித்து, கற்றுக்கொடுத்தால், அது எதிர்மாறான பலனையே கொடுக்கும். மிதமிஞ்சிய மருந்து தீமையை விளைவிக்கும். நாம் ஆவிக்குரிய பெற்றோராய் இருந்தால் போதாது, ஞானமுள்ள பெற்றோராயும் இருக்கவேண்டும். பிள்ளைகளுக்குத் திருவசனத்தைக் கருத்தாய் போதிக்கக் கட்டளையிடும் திருமறை அவர்களைக் கண்டித்து வளர்க்கவும் கட்டளையிடுகிறது.
“பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்” நீதிமொழிகள் 22:15.
“தண்டனையின் பிரம்பு” என்பது ஆங்கிலத்தில் “திருத்தும் பிரம்பு” என்றிருக்கிறது. ஆம் பெற்றோரே, பிரம்பைக் கையாளும்போது, அதைத் தண்டனையின் பிரம்பாகக் கருதாமல், திருத்தும் பிரம்பாகக் கருதுங்கள். வளரும் பிள்ளைகள் முதலில் மதியீனமாகத்தான் தவறிழைப்பார்கள். ஆரம்பத்திலேயே அவர்களைத் திருத்தாவிடால், பின்னால் அவர்கள் துணிகரப் பாவங்களில் ஈடுபடுவார்கள். திருத்தும் பிரம்பு அன்பின் பிரம்பு. ஏனெனில்,
“பிரம்பைக் கையாடதவன் தன் மகனைப் பகைக்கிறான். அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்” நீதிமொழிகள் 13:24.
ஆம், அறிவற்ற அன்பு பகைக்குச் சமானம். ‘ஏற்கனவே’ என்ற சொல் ஆங்கிலத்தில் உடனடியாக என்றுள்ளது. ‘ஏலி வளர்த்த பிள்ளை’ என்ற பழமொழிக்குக் காரணகர்த்தாவான ஏலி, தீயவழி சென்ற தன் மக்களைக் காலங்கடந்து, அதுவும் மென்மையாய்த் திருத்த முயன்றான். அது பயன் அளிக்காது போயிற்று. நான் சிறுவனாய் இருந்தபோது, ஒரு நாள் வெற்றிலைக் கடையிலிருந்து ஒரு வெற்றிலையைக் கடைக்காரருக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டேன். அது தவறு என்று அறியாது, மதியீனமாகச் செய்த செயல். ஆகவே அதைப் பெருமையாக என் தாயாரிடம் கூறினேன். ஆனால் என் தாயாரோ அதை என் தகப்பனாருக்குச் சொல்ல, அவர் என்னைப் பார்த்து, “நீ உடனே இந்த வெற்றிலையைக் கடைக்காரரிடம் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு, நீ இதைத் திருடியதற்காய் மன்னிப்புக் கேட்கவேண்டும்” என்று உத்தரவிட்டார்கள். வெட்கம் என்னை ஆட்கொண்டது. என் தகப்பனார் என்னை அடித்திருந்தால்கூட நான் பொருட்படுத்தி இருக்கமாட்டேன். அதுவே என் முதல் திருட்டாகவும், கடைசித் திருட்டாகவும் இருந்தது. ஒரு பிள்ளை தெரியாமல் தவறிழைக்கும்போது, அதன் மூலம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ளக் கூடும். வேண்டுமென்றே தவறிழைத்தால், தகுந்த தண்டனை உடனடியாக, தவறாமல் கொடுக்கப்படவேண்டும். ஆனால் முரட்டுத்தனமாய், கண்மூடித்தனமாய், சீற்றத்துடன் அடிக்கக்கூடாது.
“நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய், ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே” நீதிமொழிகள் 19:18.
அவனுக்குத் தேவை “உள்ளத்தில் உறைக்கும் அடிகள்”. அது அவனைச் சுத்திகரிக்கும் (நீதிமொழிகள் 20:30). ஆனால் தேவையானபோது,
“பிள்ளையைத் தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே” நீதிமொழிகள் 23:13-14.
ஆம், உன் பிள்ளை நித்திய நரகத்தில் வேதனை அனுபவிப்பதைவிட பெற்றோரிடம் அடிப்படுவது தீமையானது அன்று. மேலும்,
“பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும். தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்” நீதிமொழிகள் 29:15.
பிள்ளையைச் சிறுவயதிலிருந்தே தக்க சமயத்தில், தக்க விதமாய்க் கடிந்து கொண்டு வளர்த்தால், பிரம்பைக் கையாளும் அவசியமே இருக்காது. எங்கள் பிள்ளைகளைச் சிறுவயதிலிருந்து கண்டிப்புடனும், அதே சமயத்தில் மிகுந்த அன்புடனும் வளர்த்தோம். பிள்ளைகளை அடிக்க நேர்ந்தால், சிறிது நேரம் கழித்து, அவர்களை மடியில் தூக்கிவைத்து, அரவணைத்து, முத்தமிட்டு, அவர்களை அடிக்கும்போது எங்கள் உள்ளமும் எவ்வளவாய் வேதனைப்பட்டது என்பதைக் கூறுவோம். பிரம்பைக் கனிவுடன், ஞானமாய்க் கையாளவேண்டும். ஒழுக்கம் தேவை. ஆனால் அது ஆழமான புண்ணை, ஆறாத காயத்தை உண்டாக்காத ஒழுக்கமாய் இருக்கவேண்டும். உண்மை, சிட்சை வேதனையைத் தரும். ஆனால் அது நித்திய பேரின்பத்தை விளைவிக்கும் தற்காலிகமான வேதனை. பிரசங்கி கூறுகிறார்:
“தழுவ ஒரு காலம் உண்டு, தழுவாமலிருக்க ஒரு காலம் உண்டு” பிரசங்கி 3:5.
அதாவது பெற்றோரின் சிட்சை அன்பும் கண்டிப்பும் கலந்ததாய் இருக்கவேண்டும். ஒரு போதகரின் மகன் தொடர்ந்து மூன்று நாட்கள் பள்ளிக்குப்போகாமல் ஒரு பூங்காவில் விளையாடிவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான். இதைக் கண்டுபிடித்துவிட்ட பெற்றோர் மூன்று நாட்களுக்கு அவன் தன் அறையைவிட்டு வெளியே வரக்கூடாது என்று கட்டளை இட்டனர். முதல் நாள் இரவு தாய்க்கு மனம் கேட்கவில்லை. செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்த கணவனை அணுகினாள். அவர் செய்தித்தாளைத் தலைகீழாகப் பிடித்திருந்தார். ஆம், அவரும் கலங்கிக்கொண்டுதான் இருந்தார். போதகர் மனைவியைப் பார்த்து, “மகன் அறையை விட்டு வெளியே வரக்கூடாது. ஆனால் நாம் அவனிடம் போகத் தடையில்லை” என்று கூறி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, அவன் அறையில் போய், அவனுக்குத் துணையாகப் படுக்கச் சென்றார். இதைக்கண்ட மகன் ஓடிவந்து தன் தகப்பனைக் கட்டிப்பிடித்தவண்ணம், “அப்பா, உங்கள் அன்பை உணர்கிறேன். இனிமேல் உங்கள் மனம் நோகும்படி எதையும் செய்யமாட்டேன்” என்று அழுதுகொண்டே சொன்னான்.
வாழ்க்கையில் வேகமாய் முன்னேறிக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து, அவர் வெற்றியின் இரகசியத்தைக் கேட்டபோது, “முழங்காலில் நின்று ஜெபித்த என் தாயும், நான் தவறு செய்தபோது, முழங்காலில் நிற்கவைத்து சிட்சித்த தகப்பனும்” என்றாராம். பெற்றோரே, உங்கள் பிள்ளைகளுக்குத் திருவசனத்தைக் கற்றுக்கொடுங்கள். அவ்வப்போது தட்டிக்கொடுங்கள். தேவையானபோது அது சற்றுப் பலமான தட்டுதலாய் இருக்கட்டும். வார்த்தையையும் பிரம்பையும் எதிர்க்கும் மனோநிபுணர்கள், பிள்ளைகளைக் கட்டுப்படுத்தாமல் வளரவிடவேண்டும் என்று கூறும் மேதாவிகள் சமுதாயத்தைக் கெடுப்பவர்கள். இது பிசாசின் சூழ்ச்சி. வேடிக்கை என்னவென்றால், “பிள்ளை உரிமை” எனக் கூச்சலிடும் மேனாடுகளில்தான் “பிள்ளைக்கொடுமை” பெருகி வருகிறது. ஆகவே “பிள்ளை உரிமைக்கொள்கை” சர்ச்சைக்கு உரியதாகிவிட்டது. பிள்ளைகளைப் பெற்றோர் நியாயமாய்த் தண்டித்தால்கூட பெற்றோர்மேல் வழக்குத் தொடரும்படி சிறுவர் சிறுமியர் தூண்டப்படுகிறார்கள். இன்று அமெரிக்காவின் பொதுப்பள்ளிகளைப்பற்றி ஒருவர் கூறுகிறார்: “ஆசிரியர்கள் தலைமை ஆசிரியருக்குப் பயப்படுகிறார்கள். தலைமை ஆசிரியர் மேற்பார்வையாளருக்குப் பயப்படுகிறார். மேற்ப்பார்வையாளர் பள்ளி வாரியத்துக்குப் பயப்படுகிறார். வாரிய உறுப்பினர் பெற்றோருக்குப் பயப்படுகின்றனர். பெற்றோர் பிள்ளைகளுக்கு பயப்படுகின்றனர். பிள்ளைகளோ யாருக்கும் பயப்படுவதில்லை.” இதற்கெல்லாம் காரணம் மனோநிபுணர் என்றழைக்கப்படும் மனோவஞ்சகரே. எது உண்மையான அன்பு? பிள்ளைகளை மனம்போன போக்கில் விட்டு விடுவதன்று. கண்டிப்பும் கனிவும் கலந்த பிள்ளைவளர்ப்பே மெய்யான அன்பு.

முன்மாதிரி
“நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாய் இரு” 1 தீமோத்தேயு 4:12.
ஒரு போதகனுக்துகு எழுதப்பட்ட இந்த அறிவுரை பெற்றோருக்கும் பொருந்தும். பிள்ளைகளைக் “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” வளர்த்தாலும், நம்முடைய பேச்சு, நடத்தை, விசுவாசம், தூய்மை போன்றவைகளில் நாம் முன்மாதிரிகளாய் இல்லாவிடில், அது எப்பயனும் அளிக்காது. திருமறையில் சில பின்மாதிரியான பெற்றோர்களையும், அதன் தீயவிளைவுகளையும் காண்கிறோம். ரெபெக்காள் தன் கணவனை ஏமாற்றினாள்; அவள் மகன் யாக்கோபு தன் தமையனை ஏமாற்றினான்; யாக்கோபை அவன் மாமன் ஏமாற்றினான். இப்படியாக வஞ்சகச்சங்கி லி தொடர்ந்தது. இதற்கு மாறாக தீமோத்தேயுவின் தாயும் பாட்டியும் நன்மாதிரிகளாய்த் திகழ்ந்தார்கள். பிள்ளைகள் உறிஞ்சும் கடற்பஞ்சைப் போன்றவர்கள். நன்மையானாலும் தீமையானாலும் பெற்றோரைப் பார்த்துக் கற்றுகொள்வார்கள். இது இயற்கை. இறைப்பற்றிலும், நல்லொழுக்கத்திலும், நற்குணத்திலும் முன்மாதிரியாய் இருக்கும் பெற்றோரைக் கொண்ட குடும்பம் நன்கு பிணைக்கப்பட்டக் குடும்பமாய்த் திகழும். வலுவாய்ப் பிணைக்கப்பட்ட குடும்பம் மாபெரும் ஈவு. இப்பேர்ப்பட்ட குடும்பங்களில் பெற்றோர் பிள்ளைகளுக்கு நண்பர்களாய் இருப்பார்கள்.
கர்த்தர் எங்களுக்குக் கொடுத்தது இரு பெண்பிள்ளைகள். எங்கள் குடும்பம் அன்பினால் நெருக்கமாய்ப் பிணைக்கப்பட்டக் குடும்பம். எங்கள் மூத்தமகள் நிறைமாத கர்ப்பிணியாய் இருந்தபோது, அவளுக்கு உதவிச்செய்ய என் மனைவி டெல்லி செல்லவேண்டியிருந்தது. என் மனைவி வேலூர் திரும்பியபின், எங்கள் மகள் ஓர் அழகான நன்றி அட்டை அனுப்பியிருந்தாள். அதில் பின்வருமாறு எழுதி இருந்தாள்:
“என் விலைமிக்க அம்மா, அப்பா,
பெற்றோருக்கு எப்படி நன்றி செலுத்துவது? எங்களைப் பராமரித்ததற்காக, பிரசவ அறையில் என்னைக் கவனித்துக் கொண்டதற்காக, கண்விழித்திருந்த இரவுகளுக்காக, இளைப்பாறாத பிற்பகல்களுக்காக, எனக்காகவிட்ட கண்ணீர்களுக்காக, எனக்காக நீங்கள் இருவரும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்திருந்ததற்காக நான் எப்படி நன்றி கூறுவேன்? நான் ஒன்றுதான் சொல்லமுடியும்: இயேசுவே, என் பெற்றோருக்காக உமக்கு நன்றி!”
அளவற்ற அன்பும் முத்தங்களும்.
பெர்லீ (Pearly)
என் எழுபதாவது பிறந்தநாளின்போது என் சின்னமகள் எழுதியிருந்த கடிதம்:
என் மிக்க அன்புக்குரிய அப்பா,
கடந்தகால நினைவுகள்! அம்மா ஊருக்குச் சென்றிருந்தபோது, இரு மகள்களும் ஆளுக்கொரு கரத்தைக் பிடித்திருக்க, வெளியே உணவருந்தக் கூட்டிச் சென்றது… கணக்கியலில் பயிற்சி கொடுத்தது அதில் விருப்பத்தை உருவாக்கினீர்கள். நன்றாகச் செய்தபோது வெகுமதிகள் கொடுத்து, ஊக்குவித்தீர்கள். அம்மா தைத்துக்கொடுத்த உடைகளில் நான் அழகாக இருப்பதாகக் கூறியதை நினைவுகூருகிறேன். சொற்பொழிவு கலையில் பயிற்சிக் கொடுத்தது, ஏமாற்றங்களில் பெலனாயிருந்தது, பாதுகாப்பு, ஞானம் மிக்க அறிவுரைகள்… மனதைவிட்டு நீங்கா நினைவுகள்… இன்றும் உங்கள் ஜெபத்தை அதிகமாய்ச் சார்ந்திருக்கிறேன்.
எங்கள் இல்லத்தில் நடக்கும் திருமறை ஆராய்ச்சிக்குழுவில் உங்களைப் பற்றி அதிகமாய்ப் பேசுவேன்… நீங்கள் எங்களுக்குக் கொடுத்த ஆழமான, அடிப்படை விசுவாசம், நீங்கள் அதைக் கற்றுக்கொடுத்ததோடு கடைப்பிடித்தது… என் ஆவிக்குரிய வளர்ச்சியில் நீங்கள் சொன்ன உவமைகள், உதாரணங்கள்… எங்களை நீங்கள் எப்படி ஆணித்தரமான, வலுவான விசுவாசத்திலும் போதனையிலும் வளர்த்தீர்கள் என்பதை நான் அடிக்கடி கூறுவதைக் கேட்டு, எங்கள் குழுவில் உள்ளவர்களுக்கு “போர்” அடித்திருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் நீங்கள் கொடுத்த விலைமதிக்க முடியாத ஈவு இதுவே. இப்போதும் நம் வீட்டுக்கு வரும்போதெல்லாம், அது இறைவனின் பிரசன்னத்தினால் நிறைந்திருப்பதை உணர்கிறேன்.
பெற்றோர்களைச் சாதாரணமானவர்களாய்க் கருதுவோர் பலர். உங்களை அப்படிக் கருத நாங்கள் ஒருக்காலும் அனுமதிக்கமாட்டோம். ஏனெனில் நீங்கள் எல்லோரிலும் மேலான ஓர் அப்பா.
நிலையான அன்புடன்,
டில்லி பாப்பா

இன்று பல கிறிஸ்தவக் குடும்பங்களில் இவ்வித பிணைப்பு இல்லாததின் காரணம் குடும்பத்தலைவர்கள் குடும்பத்திற்கு முதலிடம் கொடுத்து, குடும்பத்துடன் கூடுதலான, தரமான நேரம் செலவிடாததே. மாவட்ட ஆட்சித் தலைவராய் இருந்த வில்ஃப்ரட் டேவிடார் தம் பொறுப்பு மிக்கபணியிலும் தம் குடும்பத்திற்கென்று தனிநேரம் ஒதுக்கத் தவறியதில்லை என்றும், ஞாயிற்றுக்கிழமைகளைத் தம் குடும்பத்துக்கும் தம் இறைவனுக்கும் ஒதுக்கி வைத்திருப்பதாகவும் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.
பெற்றோரே, சற்று சிந்தித்துப் பாருங்கள். எது முக்கியம்? பொருளையும் புகழையும் பதவியையும் நாடி ஓடுவதா? அல்லது அன்பு, கண்ணியம், ஐக்கியம் போன்ற நற்பண்புகளின்மேல் கட்டப்படும் குடும்பமா? எது முக்கியம்? சமுதாயத்தில் முன்னேற்றமா? அல்லது இயேசுவின் குடும்பம் என்று அறியப்பட்டிருப்பதா? ஒரு நாட்டின் மேன்மைக்கு நல்ல குடும்பங்களே காரணம். மேனாடுகள் காலங்கடந்து இதை உணரத்தொடங்கி இருக்கின்றன. அன்புநிறைந்த நல்ல குடும்பங்கள், கிறிஸ்துவாகிய அடித்தளத்தின்மேல் கட்டப்பட்டதாயும் இருக்குமென்றால், அவைகளே உலகத்திற்கு இறைவன் வைத்திருக்கும் திட்டத்தை நிறைவேற்றும் கருவிகள். அவைகளே உறுதியற்ற உலகிற்கு உறுதியைக் கொண்டுவரும் சாதனங்கள்.

அடிச்சுவடுகள்
“நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப்பின்பற்றுகிறவர்களாய் இருங்கள்” 1 கொரிந்தியர் 11:1.
“என்னைப் பின்பற்றுங்கள்”… இன்று எத்தனை ஊழியர்கள் தைரியமாய் இப்படிக் கூறமுடியும்? இன்று எத்தனை பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பார்த்து, “எங்களைப் பின்பற்றுங்கள்” என்று கூறமுடியும்? நாம் பிள்ளைகளைக் “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்”, கண்டிப்புடனும் கனிவுடனும் வளர்த்தாலும், நம்முடைய சாட்சி, நம்முடைய முன்மாதிரி சரியாக இல்லாவிட்டால், நம் பிள்ளைகளை நல்வழியில் நடத்துவது அரிது. நம்மைப் பார்க்கும் நம் பிள்ளைகள் படைப்பின் இறைவனை மட்டுமின்றி, அவரால் உண்டாக்கப்பட்ட படைப்பையும் கனப்படுத்தக் கற்றுக்கொள்ளவேண்டும். ஒரு பிள்ளை தன் பெற்றோரின் தாலந்துகளைச் சுதந்தரிக்காதிருக்கலாம். ஆனால் அவர்களுடைய இறைப்பற்றையும் நற்பண்புகளையும் பின்பற்றினால் போதும்.
ஒரு தகப்பனும் மகனும் கடற்கரை மணல்மேல் நடந்து சென்றனர். அப்பொழுது மகன் மணல்மேல் பதிந்திருந்த தன் தகப்பனின் அடிச்சுவடுகளில் தன் பாதங்களை வைத்து நடந்தவண்ணம், “அப்பா, இதோ பாருங்கள்! நான் உங்கள் அடிச்சுவடுகளில் நடக்கிறேன்” என்றானாம். ஆம் பெற்றோரே, இதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்கள் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவார்கள். உங்கள் அடிச்சுவடுகளில் நடக்கும் சின்னபாதங்கள் உங்கள் கண்கள்முன் எப்பொழுதும் இருக்கட்டும்.