இயேசு இனிதாக்குவார்
(சி. சாமுவேல்)
“அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள்” யோவான் 2:5.
முதல் அற்புதம்
“இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்” யோவான் 2:11.
ஒரு சிற்றூர், ஓர் எளிய இல்லம், மகிழ்ச்சி மிக்க கொண்டாட்டத்தின் நாள். ஒரு கிராமத்து இளைஞனும் இளம் பெண்ணும் ஓர் இளவரசனும் இளவரசியும் போல் அமர்ந்திருக்கிறார்கள். அங்கு கூடியிருந்த அனைவரின் கண்களும் அவர்கள் மேல் பதிந்திருந்தன. ஏன்? இது அவர்கள் திருமணத்தில் இணைக்கப்படும் நாள். குதூகலம் நிறைந்த இந்நேரத்தில் எதிர்பாராத சிக்கல், அக்குடும்பத்தாரைத் தலைகுனிய வைக்கும் பிரச்சினை. மூத்தோர் செய்வதறியாது தவிக்கின்றனர். கொண்டாட்டம் திண்டாட்டமாக மாறுகிறது. காரணம்? திராட்சரசம் குறைவுபட்டது. இந்நாட்களில் திருமண விருந்தில் சாப்பாடு குறைவுபட்டால் எவ்வளவு அவமானமோ அவ்வளவு அவமானம் அந்நாட்களில் திராட்சரசம் குறைவுபடுவது. இந்த இக்கட்டான வேளையில் ஒரு தாய் கூறும் அறிவுரை:”அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள்.” அவர் என்ன சொன்னார்? விந்தையான கட்டளை! அறிவுக்குப் பொருந்தாத, விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ள முடியாத, பைத்தியக்காரத்தனமான கட்டளை. ஆயினும் பணியாட்கள் கேள்வி கே
ட்காமல், இயேசு என்ன சொன்னாரோ, அதின்படியே செய்தார்கள்.“இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்” யோவான் 2:11.
ஒரு சிற்றூர், ஓர் எளிய இல்லம், மகிழ்ச்சி மிக்க கொண்டாட்டத்தின் நாள். ஒரு கிராமத்து இளைஞனும் இளம் பெண்ணும் ஓர் இளவரசனும் இளவரசியும் போல் அமர்ந்திருக்கிறார்கள். அங்கு கூடியிருந்த அனைவரின் கண்களும் அவர்கள் மேல் பதிந்திருந்தன. ஏன்? இது அவர்கள் திருமணத்தில் இணைக்கப்படும் நாள். குதூகலம் நிறைந்த இந்நேரத்தில் எதிர்பாராத சிக்கல், அக்குடும்பத்தாரைத் தலைகுனிய வைக்கும் பிரச்சினை. மூத்தோர் செய்வதறியாது தவிக்கின்றனர். கொண்டாட்டம் திண்டாட்டமாக மாறுகிறது. காரணம்? திராட்சரசம் குறைவுபட்டது. இந்நாட்களில் திருமண விருந்தில் சாப்பாடு குறைவுபட்டால் எவ்வளவு அவமானமோ அவ்வளவு அவமானம் அந்நாட்களில் திராட்சரசம் குறைவுபடுவது. இந்த இக்கட்டான வேளையில் ஒரு தாய் கூறும் அறிவுரை:”அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள்.” அவர் என்ன சொன்னார்? விந்தையான கட்டளை! அறிவுக்குப் பொருந்தாத, விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ள முடியாத, பைத்தியக்காரத்தனமான கட்டளை. ஆயினும் பணியாட்கள் கேள்வி கே
“இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்தி விசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்” யோவான் 2:7,8.
ஆம், அவர் என்ன சொன்னாரோ, அதின்படியே செய்தார்கள். அதன் விளைவு? அற்புதம்! இகழ்ச்சி புகழ்ச்சியாக மாறியது. கவலை களிப்பாக
மாறியது. இரட்டிப்பான மகிழ்ச்சி, இரட்டிப்பான இனிமை, இரட்டிப்பான ஆசீர்வாதம், மறப்பதற்கரிய திருமணம். அத்தம்பதி தங்கள் வாழ்நாளெல்லாம் அதைக்குறித்துப் பேசிக்கொண்டே இருந்திருப்பார்கள். ஒரு சாதாரண திருமணம் ஓர் அற்புதத் திருமணமாக மாறியது. இந்த அதிசய மாற்றத்தின் காரணம்? இயேசு கிறிஸ்து. அன்று “உணர்வுள்ள தண்ணீர் தன் இறைவனைப் பார்த்து முகம் சிவந்தது” என்று கூறுகிறார் ட்ரைடன் என்ற பக்தர்.
மாற்றம்
இயேசு ஒரு திருமணத்தைப் புனிதப்படுத்த கானாவூர் சென்றார். களங்கமற்ற மகிழ்ச்சி நிறைந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். தீயவன் அந்த மகிழ்ச்சியைக் கெடுக்க (ஆண்டவருக்குச் சவால்!) முற்படுகிறான். ஆனால் பணியாட்கள் அவர் என்ன சொன்னாரோ, அதின்படி செய்தார்க்ள. தண்ணீர் திராட்சரசமாக மாறியது. கேலிக்குள்ளாகும் நிலை பாராட்டுக்குரியதாய் மாறியது.
அதே கானா ஊருக்கு வருகிறான் ஓர் உயர்குடிமகன்-யோவான் 4:46-53. “ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும்” என்பது அவன் வேண்டுகோள். “நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான்” என்பது பதில். அம்மனிதன் அவர் வார்த்தையை விசுவாசித்து, அவர் சொன்னபடியே திரும்பிப்போனான். நோய் நலமாக மாறியது.
திபேரியா கடற்கரையில் ஐயாயிரம் ஆண்களும், அவர்கள் குடும்பத்தாரும் கூடியிருக்கிறார்கள். அவர்கள் சரியான உணவருந்தி மூன்று நாட்களாயிற்று. பசித்திருக்கும் கூட்டம். ஐந்தே அப்பங்களையும் இரு சிறு மீன்களையும் ஆசீர்வதித்து, அப்பெருங்கூட்டத்திற்குக் கொடுக்கும்படி பணித்தார். சீஷர்கள் அவர் என்ன சொன்னாரோ, அதின்படியே செய்தார்கள். பசி திருப்தியாக மாறியது.
கலிலேயா கடலில் கடும்புயல். கடல்கொந்தளிக்கிறது. பேரலைகள் சீறி எழுகின்றன. சீஷர்கள் அலறுகிறார்கள். இயேசு எழுந்து நின்று, காற்றையும் கடலையும் அதட்டி “அமைதலாயிருங்கள்” என்று கட்டளையிடுகிறார். காற்றும் கடலும் அவர் என்ன சொன்னாரோ, அதின்படியே செய்தன. சீற்றம் அமைதியாக மாறியது. கொந்தளிப்பு சாந்தமாக மாறியது. அச்சம் ஆச்சரியமாக மாறியது.
தேவாலயத்திற்கு வெளியே ஒரு குருடன். இருளில் பிறந்து இருளில் வாழ்கிறவன். இயேசு அவன் கண்களில் சேறு பூசி,”நீ போய், ஸீலோவாம் குளத்திலே கழுவு” என்றார். அவன் அவர் என்ன சொன்னாரோ, அதின்படியே செய்தான். இருள் ஒளியாக மாறியது.
இயேசு பெத்தானியாவுக்குப் போகிறார். நான்கு நாட்களுககு முன்பு மரித்துப் போயிருந்த ஒரு மனிதனின் கல்லறைக்கு முன் நின்று, “லாசருவே, வெளியே வா” என்று கட்டளை கொடுக்கிறார். மரித்தவனும் அவர் என்ன சொன்னாரோ, அதின்படி செய்தான். சாவு வாழ்வாக மாறியது.
திபேரியா கடற்கரையில் உயிர்த்தெழுந்த கிறிஸ்து நிற்கிறார். இரவெல்லாம் கடுமையாக முயற்சி செய்தும் ஒரு மீன்கூட பிடிபடவில்லை. மீன்பிடிப்பதில் வல்லுனர்கள் அவர்கள். அவர்களைப் பார்த்து இயேசு கூறுகிறார்: “நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள்.” அவர்கள் அவர் என்ன சொன்னாரோ, அதின்படியே செய்தார்கள். தோல்வி வெற்றியாக மாறியது.
ஆம் தம்பதியரே, “அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள்.” அப்பொழுது உங்கள் கவலை களிப்பாக மாறும். நோய் நலமாக மாறும். குறைவு நிறைவாக மாறும். கொந்தளிப்பு அமைதியாக மாறும். இருள் ஒளியாக மாறும். சாவு வாழ்வாக மாறும். தோல்வி வெற்றியாக மாறும்.”
மாற்றத்தின் இரகசியம்
நம்முடைய இல்லறவாழ்க்கையில் அற்புத மாற்றங்களைக் காண விரும்பினால், அதற்கு ஒரே நிபந்தனை கீழ்ப்படிதல். நாம் ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய இரு தலையாய கேள்விகள் உண்டு. பவுல் இவ்விரு கேள்விகளையும் தமஸ்கு வழியில் கேட்டார். அது அவர் வாழ்க்கையைப் புரட்சிகரமாய் மாற்றிவிட்டது. என்ன அந்த கேள்விகள்?
“ஆண்டவரே, நீர் யார்?” அப்போஸ்தலர் 9:5.
“ஆண்டவரே, நான் என்னச் செய்ய சித்தமாய் இருக்கிறீர்” அப்போஸ்தலர் 9:6.
ஆம் அன்பர்களே! முதலாவது ஆண்டவர் யார் என்பதைத் திட்டவட்டமாக அறிந்து கொள்ளவேண்டும். இயேசுவே ஆண்டவர். இயேசுவே இரட்சகர். இயேசுவே உங்கள் வாழ்க்கையை அற்புதமாய் மாற்றக்கூடியவர். இரண்டாவது
“அவர் என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள்.”
“அவர்” – நமக்குக் கட்டளையிட அவருக்கே அதிகாரமும் உரிமையும் உண்டு. அவருக்கே நம்மேல் உண்மையான, ஆழ்ந்த கரிசனை உண்டு.
அவர் கட்டளைகள் எல்லாம் நமக்கு நன்மை தரும் கட்டளைகளே.
“என்ன”- ஆம், அவர் என்ன சொன்னாலும், அதின்படி செய்யும்போது, நம் இல்லற வாழ்க்கை அற்புதமாய் அமையும். முள் வேண்டாம். ரோஜா மட்டும் வேண்டும் என்று கேட்காதக் கீழ்ப்படிதல், அவர் சித்தத்திற்கு திருத்தம் செய்யாது அடிபணியும் கீழ்ப்படிதல் தேவை. இதற்கு இயேசுவே நம் முன்மாதிரி. “அவர் மனுஷகுமாரனாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைதாமே தாழ்த்தினார்” பிலிப்பியர் 2:8. “சொல்லுகிறாரோ” – அவர் சொல்வது நமக்கு எப்படித் தெரியும்? அவர் நம்முடன் எப்படிப் பேசுகிறார்? திருமறையின் மூலம், வேதவாக்கியங்களின் மூலம். இன்று பலர் இறைவனின் திருவார்த்தைகளைவிட தரிசனங்களையும் தீர்க்கதரிசங்களையுமே நம்புகிறார்கள். இது ஆபத்து. இப்படிப்பட்டவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு இறையாகிவிடுகிறார்கள். திருமறைக்கு ஒவ்வாத எந்த தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் நம்பவேண்டாம்.
“அதின்படி செய்யுங்கள்”- ஒருவர் பைபிளைப் பலமுறை படித்திருக்கலாம். கணிப்பொறிபோல் வசனங்களைப் பிழையின்றி ஒப்புவிக்கலாம். ஆனால் அதின்படி செய்யாவிட்டால் என்ன பயன்? இன்னொருவர் படிப்பறிவு குறைந்தவர். ஆனால் தாம் அறிந்துகொண்ட சத்தியத்தின்படி செய்கிறவர். இவரே ஆவிக்குரிய செயல்வீரர். பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்து தேசத்தை அரசாண்ட ஆறாம் எட்வர்ட் மிகவும் இறைப்பற்றுள்ளவர். ஞாயிறு ஆராதனைகளில் கலந்துகொண்டு, பிரசங்கத்தை நின்றுகொண்டே கேட்பாராம். குறிப்பெடுத்து, அந்த வாரம் முழுதும் தாம் கேட்ட சத்தியங்களின்படி நடக்க முயற்சி செய்வாராம். ஆம் அன்பர்களே, திருமறையை ஆராய்ந்து படியுங்கள். ஒவ்வொரு சத்தியத்தையும் விசுவாசியுங்கள். ஒவ்வொரு கட்டளைக்கும் கீழ்ப்படியுங்கள். ஒவ்வொரு வாக்குறுதியையும் பற்றிக்கொள்ளுங்கள். கீழ்ப்படியாத பல்லாண்டு வேதப்படிப்பிலும் மேலானது கீழ்ப்படியும் ஒரே செயல்.

மாற்றத்தின் சூத்திரம்
அவர் என்ன சொன்னாரோ, அதின்படி செய்யுங்கள். தண்ணீர் திராட்சரசமாக மாறியது.
வேதியிலின்படி தண்ணீரின் சூத்திரம் H2O
H என்பது ஹைட்ரஜன் என்ற வாயுப்பொருள்.
O என்பது ஆக்ஸிஜன் என்ற வாயுப்பொருள்.
இவ்விரண்டு பொருட்களும் வெவ்வேறு தன்மைகள் உடையவை. ஆனால் தண்ணீரில் அவை தங்கள் பழைய தன்மைகளை இழந்து, ஒரு திரவப்பொருளாக மாறி, ஒருங்கிணைந்து, ஒரே விதமான தன்மைகளுடன் காணப்படுகிறது. இதுதான் தாம்பத்தியத்தின் இரகசியம். திருமணத்துக்கு முன் கணவனும்(H=Husband) மனைவியும் (O=Other Half) வெவ்வேறு குணவியல்புகளுடன் இருந்தவர்கள், திருமணத்துக்குப்பின் ஒருவரின் நற்பண்புகளை இன்னொருவர் பெற்றுக்கொண்டு, ஒருங்கிணைந்த நல்ல தம்பதியாய்க் காணப்படுவதே வெற்றியுள்ள திருமணம். ஆனாலும் தண்ணீருக்குச் சுவையுமில்லை நிறமுமில்லை. அது திராட்சரசமாக மாறும்போது, இனிய சுவையும் நிறமும் பெருகுகிறது.
திராட்சரசத்தின் சூத்திரம் C2H6O. இதில் கூடுதலாய்க் கலந்திருப்பது C சின்னங்கொண்ட கார்பன். அவ்விதமே இணைபிரியா ஒரு தம்பதியின் வாழ்க்கையில் கிறிஸ்துவும் (C for Christ) இணைந்துவிட்டால், அதற்கு ஈடான வாழ்க்கை எதுவுமிராது. அவ்வாழ்க்கை இனிமை நிறைந்ததாய், நிறம் மிக்கதாய் இருக்கும்.
இச்செய்தியை வாசித்த தம்பதியரே, இப்பொழுது உங்கள் திருமண வாக்கைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள். அத்துடன் நீங்கள் இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டிய ஒரு வாக்குறுதியும் உண்டு.

வாக்குறுதி
கணவன் (மனைவியிடம்): கிறிஸ்து சபையை நேசித்தது போல் நான் உன்னை நேசிப்பேன். எவ்வித கசப்பான உணர்ச்சிக்கும் இடம் கொடுக்கமாட்டேன். உன்னை வாஞ்சையுடன் பேணி, உன்னையே பற்றிக்கொள்வேன். உன்னுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு, மனநிறைவுடன் எப்போதும் உனக்கு உண்மையாய் இருப்பேன். நீயே எனக்கு இறைவனால் அளிக்கப்பட்ட ஏற்ற துணை என்பதை அறிக்கை செய்கிறேன்.

மனைவி (கணவனிடம்): சபை கிறிஸ்துவை எப்படி நேசிக்கவேண்டுமோ அவ்விதமே உம்மை நேசித்து, உமக்குக் கீழ்ப்படிவேன். நான் உம்மையே பற்றிக்கொண்டு, உமக்கே உண்மையாய் இருப்பேன். உமது தேவைகளை உணர்ந்து, பகுத்தறிவுடன் நடப்பேன். நம் குடும்பத்தைத் திறம்படக் கவனிப்பேன்.
இருவரும்: திருமணம் இறைவனால் நியமிக்கப்பட்ட கூட்டுறவு என்பதை உணருகிறோம். குடும்பத்தைக் கட்டும் பொறுப்பிலும், எங்கள் பிள்ளைகளை இறைவனை அறியும் அறிவிலும் பயத்திலும் வளர்க்கும் பொறுப்பிலும், ஒருவருக்கொருவர் தோள்கொடுக்க வாக்களிக்கிறோம். விண்ணரசைக் கட்டுவதில் நாங்கள் கிறிஸ்துவுக்குக் கூட்டாளிகள் என்பதை அறிக்கைச் செய்கிறோம். அதற்கான எங்கள் பங்கை முழுமனதுடன் நிறைவேற்றுவோம்.