பத்து கட்டளைகள்
இஸ்ரவேல் ஜனங்களை தேவன் எகிப்தை விட்டு வெளியே கொண்டு வருவதற்கு முன்பு எகிப்து தேசத்திலே பத்துவிதமான வாதைகளை கொண்டு எகிப்து தேசத்து ஜனங்களை வாசித்தார். ஏன் இப்படி எகிப்து ஜனங்களை கர்த்தர் வாதைகளினால் அடித்தார் என்ற கேள்வி அனைவருக்கும் எழும்பும் அதற்கான விடையை காணவேண்டுமானால் தேவன் கூறிய வார்த்தைகளை கவனிக்க வேண்டும்.
ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார். அவர்கள் அப்படியே செய்தார்கள்.
யாத்திராகமம் 14:4
யாத்திராகமம் 14:4
எகிப்து ஜனங்கள் இவைகளை எல்லாம் தெய்வங்கள் என்று நம்பி வந்தார்கள் அவைகள் எல்லாம் தெய்வம் அல்ல கர்த்தராகிய நான் ஒருவரே தேவன் என்பதை அந்த ஜனங்கள் அறிந்து கொள்ளும் படிக்கிறான் கர்த்தர் வாதைகளை அனுப்பினார். ஒவ்வொரு வாதையும் அவர்கள் தெய்வங்களாக நம்பியிருந்த அவைகளை வைத்து வாதித்தார். அதைப் பற்றிய முழு விவரங்களை தான் கீழே கொடுத்திருக்கிறேன்.
வாதை
எண் |
வாதை
|
வேத குறிப்பு
|
வாதைக்குள்ளான எகிப்திய
| கடவுள் |
வாதை 1
|
நீர் இரத்தமாகுதல்
|
யாத்திராகமம்: 7:20-25 )
|
ஹப்பி (Hipi Apis)என்ற காளைக் கடவுள்,
இதிலிருந்துதான் நைல் நதி புறப்பட்டு வருகிறது, இசிஸ் (Isis) நைல் நதியின் கடவுள். குனும் (Khnum) நைல் நதியின் பாதுகாவலர், |
வாதை 2
|
தவளை
|
யாத்திராகமம்: 8:1-15
|
ஹெகட் (Hegel) பிறப்பிற்கான தேவதை.
தவளை முகமுடையது. |
வாதை 3
|
பேன்
|
யாத்திராகமம்: 8:16-19 |
|
செட் (Set) வனாந்திர கடவுள்
|
வாதை 4
|
வண்டு
|
யாத்திராகமம்: 8:20-24
|
உவட்சிட் (Catchite), வண்டு உருவம் கொண்ட
கடவுள். |
வாதை 5
|
கொள்ளை நோய்
|
மாத்திரமா களம் 9:1-7
|
ஓஹதார் (Hathor) பசு தலையுடைய தேவதை.
ஹப்பி (Hapi/ Apis) என்ற காளை உருவமுடைய கடவுள், இது செழிப்பைக் கொடுக்கக்கூடியது. |
வாதை 6
|
கொப்பளம்
|
யாத்திராகமம் 9:8-12
|
சிக்மெட் (Sekhinet) வியாதிக்கு மேல்
| அதிகாரமுடைய தேவதை. சுனு (Sunu) பாதுகாக்கும் கடவுள், |
வாதை 7
|
கல் மழை
|
யாத்திராகமம் 9:18-24
|
நட் (Nut) வானத்தின் தேவதை.
ஒசிரிஸ் (Osiris) பசுமை, செடி மற்றும் புயல் காற்றின் கடவுள், |
வாதை 8
|
வெட்டுக்கிளி
|
யாத்திராகமம் 10:1-20
|
ஒசிரிஸ் (Osiris) பசுமை, செடி மற்றும் புயல்
காற்றின் கடவுள், |
வாதை 9
|
காரிருள்
|
யாத்திராகமம் 10:21-23
|
ரே (RE) சூரிய கடவுள்.
ஹோரஸ் (Horus) சூரிய கடவுள். ஹதார் (Hathor) வானத்தை பாதுகாக்கும் கடவுள், |
வாதை 10
|
தலைபிள்ளை சங்காரம்
|
யாத்திராகமம் 12:29-40
|
மின் (Min) இனப்பெருக்கத்தின் கடவுள்.
இசிஸ் (Isis) குழந்தைகளை பாதுகாக்கும் தேவதை. பார்வோன் (Pharaoh) தலைப் பிள்ளை ஒரு கடவுள், பார்வோன் (தேசத்தை ஆளுகிறவர்) கடவுளாக கருதப்பட்டனர் |
போதகர். சார்லஸ் சதீஷ்குமார்
அகில உலக மிஷனரி இயக்கம்
இம்மானுவேல் கிறிஸ்டியன் அசெம்பிளி
வேப்பங்குப்பம் - வேலூர்.