கடவுள் ஏன் தீமையை அனுமதிக்கிறார்? (1)
மனிதர்களால் யுகங்களாக தேடப்பட்ட பதில்
உலகத்தில் அழிவுகள், நாசங்கள், மனிதர்களிடையேயுத்தம், ஏன்? கடவுள் என்று ஒருவர் இருப்பாரானால், ஏன்இந்த அழிவு? ஏன் தீமை செயல் படுகிறது? நோய்களமரணம் ஏன்? கடவுள் அன்பாக இருக்கிறார் எனில் ஏன்மனிதர்கள் வதை பட தீமையில் உழழ அனுமதிக்கிறார்? இக் கேள்விகள் மனிதர்களுக்கு எப்பொழுதுமே புரிபடாதவிடை தெரியாத கேள்விகளாகவே இருந்துவந்திருக்கிறது. பல தத்துவ ஞானிகளுக்கும் குழப்பமானபுரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருந்துவந்திருக்கிறது.
ஆனால் வியக்கவைக்கும் வகையில் உற்சாகமூட்டும், பகுத்தறிவுக்கு ஏற்ற பதிலை வேத எழுத்துக்கள் கொடுக்கின்றன.
கடவுள் தீமைக்கு காரணர் அல்ல, தீமையை அவரால் செய்ய முடியாது
தேவன் இயற்கையிலும் மனுஷரிடையேயும் சூழ்ந்திருக்கிற தீமையான காரியங்களை நேரடியாக உண்டுபண்ணாதிருந்தாலும், அத்தீமையை மனுஷருடைய கீழ்படியாமை, பாவத்திற்கான நியாயமான பின்விளைவாக அனுமதித்திருக்கிறார். இருப்பினும், மனிதனின் தீமைவிளைவிக்கும் கடுங்கோபத்தையும், மனிதர்களுடைய பாவச்செயல்களையும், தேவனுக்கு எதிரான சாத்தனுடைய பகைமையையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாத உயரிய திட்டத்தை செயல்படுத்த உபயோகபடுத்துகிறார். தேவபிள்ளைகள் அவருடைய வார்த்தையின் வெளிப்பாடாகிய வேதத்தின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமாக மட்டுமே அதனை அறிகிறார்கள்.
உதாரணமாக தேவ ஆட்டுக்குட்டியானவரை அவமாரியாதை செய்தபோதும், கேலி செய்தபோதும், சிலுவையில் அறையும்போதும் சாத்தானுக்கும் அந்த கெடுநோக்கம் கொண்ட யூதகுருமார்களுக்கும், பரிசேயர்களுக்கும் மற்றும் இதயமில்லாத ரோம வீரர்களுக்கும் தாம் தேவ திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உதவுகிறோம் என்பதை எவ்வளவு குறைவாகவே அறிந்திருந்தார்கள்!.
சிலர் எல்லா காரியங்களையும் செய்யக்கூடிய தேவன் சாத்தானுடைய திட்டங்கள் முழுவதுமாக நிறைவேறுமுன்னே அதை தடுக்க ஏற்ற சமயத்தில் தலையிட்டிருக்க முடியாதா? எனக் கேட்கின்றனர். சந்தேகமின்றி முடியும், ஆனால் அப்படியான தலையீடு தேவனுடைய உயரிய நோக்கத்தை நிறைவேறவிடாமல் தடுத்திருக்கும். அவருடைய நோக்கமானது அவருடைய பிரமாணத்தின் தவறற்ற நிலை, அதின் மாண்பு, அதின் நீதியான அதிகாரம் பற்றி வெளிப்படுத்துவதும் மற்றும் அப்பிரமாணத்தை மீறுவதின் மூலம் உண்டாகும் தீமையான பின்விளைவுகளை மனிதர்களுக்கும், தேவதூதர்களுக்கும் மெய்ப்பிப்பதுவே. இதுதவிர இயல்பாகவே வேத வாக்கியங்கள் கூறுகிறபடி தேவனாலேயும் சில காரியங்களை செய்ய முடியாது. தேவனால் “எவ்வளவேனும் பொய்யுரைக்க” முடியாது, (எபிரெயர் 6:18), “அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்” (2 தீமோத்தேயு 2:13). அவரால் தவறு (தீமை) செய்யக்கூடாது.
நமக்கு நித்திய சந்தோஷமான வாழ்வை கொடுக்கவே விரும்புகிறார்
தேவன் மனித இனம் சமாதானத்தோடும், சந்தோஷத்தோடும், இசைவாகவும் ஜீவிக்க விரும்புகிறார். அவருடைய இந்த விருப்பம் ஒவ்வொருவரும் நீதியின் கோட்பாடுகளையும் அன்பின் கோட்பாடுகளையும் பின்பற்றி செயல்படுத்தும்போதும் மட்டுமே நிறைவேறும் என்பதை அறிந்திருக்கிறார். இல்லையெனில், துன்பம் மற்றும் சந்தோஷமின்மை ஆகிய பின்விளைவுகளையுடைய தீமையே உண்டாகும்.
மனிதன் தன சிருஷ்டிகருடனும் (தேவனுடன்) மற்றும் சக மனிதருடனும் இசைந்து வாழ தேவன் விரும்பினார். மனிதன் முழுவதுமாக நீதியின் கோட்பாடுகளால் ஊக்குவிக்கப்பட்டால் மட்டுமே உண்மையாகவே மனிதன் தன்னுடைய சந்தோஷத்தை அடைவதற்கும் மற்றும் சக மனிதருடைய சந்தோசம் பற்றிய அக்கறையுடைய மனப்பான்மையோடு நிலைத்திருக்கவும் முடியும் என தேவன் அறிந்திருந்தார்.
மனித இனத்தின் சுயசித்தம்
சுயமாக சிந்தித்து செயல்படும் தன்மை.
கோள்களின் அமைப்பு இயந்திரத்துக்குரிய ஒழுங்கோடு நகருகின்றன. உயிரினங்கள் (பொதுவான) இயல்பான உள்ளார்ந்த உந்துனர்வால் இயக்கப்படுகின்றன; ஆனால் தேவன் மனித இனத்தை சுய சித்தம் உடையவர்களாக இருக்கவும் மற்றும் அவர்கள் “ஆவியோடும் உண்மையோடும்” (யோவான் 4: 24) தம்மை தொழுதுகொள்ள விரும்பினார். தேவன் மனிதனை செயல்முறைத்திட்டம்பண்ணி தவறுகள் செய்யா மனிதனையும் அதன் மூலமாக குறைகளற்ற பூரணமான ஒரு உலகை உண்டாக்கியிருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட மனிதன் ஒரு யந்திர மனிதனைவிட எந்த விதத்திலும் சிறந்தவனாக இருந்திருக்க மாட்டான். அவனால் சந்தோஷமாக இருக்கவும் முடியாது. ஆதியாகமத்தின் 3வது அதிகாரம் தெய்வாதீனமாக கொடுக்கப்பட்ட மனிதனுடைய சுயாதீனம் மற்றும் அவனுடைய விருப்பத்தேர்வு குறித்து விளக்கும் ஒரு வரலாறு. மனிதன் நீதியை நடப்பித்தால் அவன் நித்தியமாக ஜீவிக்கலாம் என அறிவுறுத்தியிருந்தார். அவன் கீழ்படியவில்லையெனில், “செத்துக்கொண்டே சாவான்”. மரணம் என்பது துக்கமும் துன்பமும் கல்லறையோடுகூட உச்சநிலை அடையும் ஒரு செயல்பாடு. இங்கு குறித்துக்கொள்ள வேண்டியது “பாவத்தின் சம்பளம் மரணம்”, நித்திய வேதனை அல்ல. (ஆதியாகமம் 2:17, சங்கீதம் 146:4).
மனிதன் துன்பம் மற்றும் மரணம் என்றால் என்ன என அறியாதிருந்தான். அவன் கீழ்படியாமற்போனான். இப்போது தேவன், மனிதனுக்கு கட்டுபடுத்தப்பட்ட அளவிலே தீமையோடு அனுபவத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாம் “மனுபுத்திரர் இந்தக் கடுந்தோல்லையின் அனுபவம் மூலம் அதை அறியும்படிக்கு அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்”என பிரசங்கி 1:13ல் மற்றும் பிரசங்கி 3:1௦ல் படிக்கிறோம். (Young’s literal translation பார்க்கவும்). மனிதனின் தீமையுடனான நீண்ட தொடர்பின் நோக்கம், அவன் அதினால் ஒரு சில பாடங்களை கற்பதுவே.
சுதந்திரமாக செயல்படுவதில் உள்ள சிக்கல்
மனிதன் தேவனுக்கு எதிராக கலகம் செய்யலாம்.மனிதன் இந்த சுயாதீனத்தின் முழு பொறுப்பாளியவதற்கு முன்பாக தனக்கு அன்பானதை இழக்க நேரிடும் என தேவன் நன்றாக அறிந்திருந்தபோதிலும், தேவன் சுயாதீனம் கொடுக்க விரும்பினார். என்னே ஓர் வியகத்தகுந்த வல்லமை!. மனிதன் வணங்காகழுத்துடையவனாக தன் சிருஷ்டிகருக்கு எதிராக அடங்காமல் நிற்கலாம். அவருடைய அதிகாரத்திற்கு கீழ்படிய மறுக்கலாம். அவன் தேவனுடைய தயவை ஏற்க மறுக்கலாம் மற்றும் சுயாதீனத்தின் மூலமாக மனிதன் மனிதனாக இருக்கிறான். மிருகம் போலவும் இயந்திரம் போலவும் அல்லாமல் தேவனுடைய சாயலில் உருவாக்கப்பட்டிருக்கிறான்.
ஒரு தந்தை நெருப்பை தொடக்கூடாது என தன் குழந்தையிடம் அறிவுறுத்தலாம். ஆனால் அனலினால் சுடப்படுவதைக் குறித்து குழந்தைக்கு என்ன தெரியும்?. அறிவுள்ள தந்தை வெப்பத்தின் விளைவை தெரிந்துகொள்ளும் முன் குழந்தையை அடுப்பை தொடுவதிலிருந்து தடுப்பது கூடாத காரியம் என்பதை அறிந்திருக்கிறான். ஞானமுள்ள தந்தை கட்டுபடுத்தப்பட்ட அளவில் சூட்டினை உணரும் அனுபவத்தை உண்டாக்குவான். குழந்தையின் கையை பிடித்து அனல் குறைவாகவுள்ள இடத்தில லேசாகவும் துரிதமாகவும் தொடச்செய்வதன் மூலம் நெருப்பின் ஆபத்தை உணரச்செய்ய முடிகிறது.. மேலும் பிள்ளைகள் சில பாடங்களை கடினமான அனுபவத்தின் மூலமாக மட்டுமே கற்றுக்கொள்வார்கள் என்பதை அறிந்த பெற்றோர்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் பிள்ளைகளை எச்சரித்துக்கொண்டேயிருப்பார்கள்.
அவருடைய திட்டம் என்ன
இப்போதுள்ள தீமையின் ஆளுகையை தேவன் ஏன் அனுமதித்தார்?, அவர் நம் முற்பிதாக்களை பூரணராகவும் நீதி நேர்மையுடையவராகவும் சிருஷ்டித்த பின்னர் ஏன் சாத்தானை அவர்களை சோதிக்கும்படியாக அனுமதித்தார்?. சாத்தான் தீமை செய்தபோது தேவனால் அவனை அழிக்கமுடியவில்லையா?. ஏன் அவர் தடைசெய்யப்பட்ட மரத்தை நல்ல மரங்களின் நடுவே இடம் பெற அனுமதித்தார்?. இப்படியான கேள்விகளுக்கு பதில் தேடிய பின்னர் கடைசியாக தேவன் மனிதனுடைய வீழ்ச்சிக்கான எல்லா சாத்தியகூறுகளையும் தடுத்திருக்ககூடாதா? என கேள்வி எழும்பும். சந்தேகமின்றி இப்படியான கேள்வி உருவாக தேவனுடைய திட்டத்தை புரிந்துகொள்வதில் உள்ள குறைபாடே காரணம்.
நம்முடைய பிதாவாகிய தேவன், பாவம், கீழ்படியாமை மற்றும் அவைகளின் கொடிய பின்விளைவுகளை பற்றிய எச்சரிப்பை மனிதன் புரிந்துகொள்ளமாட்டான் என்பதை அறிந்திருந்தார். ஆகவே தேவன், மனிதன் தன் சுயாதீனத்தின்படி (சுயதெரிந்தெடுப்பின்படி) முதலாவது தீமையை குறித்த அனுபவங்களையும் அதன் பின்னர் நீதியை குறித்த அனுபவங்களை பெறும்படியும் (தேவனுடைய இராஜ்ஜியத்தில்) ஒரு திட்டத்தை முறைபடுத்தினார். இப்படியான மாறுபாடான அனுபவங்கள் தவிர வேறு எந்த விதமான செயல்முறையும் அனுபவமும் தேவனுடைய பிரமாணத்தின் அழகையும் நீதியையும் அதை மீறுவதின் மூலமாக வருகிற கொடிய பின்விளைவுகளையும் மெய்பித்து காண்பிக்க பயன்படாது.
நமது சிருஷ்டிகரின் உன்னத திட்டம்
அவரால் தவறு (தீமை) செய்ய முடியாது. ஆகையால் சில சமயங்களில் நமது கிட்டப்பார்வையானது இத்தகைய எல்லையற்ற ஞான ஊற்றை குறித்து தெளிவாக தெரிந்துகொள்ள முடியாதிருப்பினும், தேவன் தமது சிருஷ்டிகளை உயிர் கொடுத்து அறிமுகபடுத்துவதற்கு ஞானமான மிகச் சிறந்ததொரு திட்டத்தையே அல்லாமல் வேறெதையும் தெரிந்தேடுக்கமாட்டார்.
நன்மைகள் நிறைந்த தமது திட்டங்களை செயல்படுத்துவதில் சில காலத்திற்கு தீமையையும் தீமை செய்பவரையும் பங்கு பெற அவர் அனுமதிக்கிறார். இருப்பினும் இது தீமையின் நலனுக்காகவோ அல்லது அவர் பாவத்தோடு ஒத்து இணைவாக இருக்கிறார் என்பதற்காகவோ அல்ல. ஏனெனில் அவர் “துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல“ என அறிவிக்கிறார் (சங்கீதம் 5:4). தீமையை எல்லா கருத்திலும் எதிர்த்தாலும் தேவனுடைய ஞானமானது தமது சிருஷ்டிகளுக்கு தீமையைக் குறித்த நிரந்திரமான அருமையான பாடமாக அமையும் ஒரு வழியாக பார்த்தபடியால் தேவன், தீமையை சில காலத்திற்கு அனுமதிக்கிறார். (அதாவது அதை தடுப்பதில்லை).
இதுகுறித்து பலரும் சரிவர அறியாதிருந்தாலும், தேவனுடைய ஆழங்களை அறியும்படிக்கு “பரலோக இராஜ்ஜியத்தின் இரகசியங்களை அறியும்படிக்கு அருளப்பட்ட” மெய்யார்வம் மிக்க எல்லாருக்கும் இவைகள் வெளியரங்கமாயும் தெளிவாகவும் உள்ளது (மத்தேயு 13:11, 1 கொரிந்தியர் 2:10௦). இவர்கள் இப்பிரபஞ்சத்தின் அதிபதியாகிய சாத்தானின் மேற்பார்வையில், தீமையின் ஆளுகையும், பாவம் மற்றும் மரணத்தின் ஆளுகையும் இரு காரணங்களுக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்துகொள்கிறார்கள்.
- எல்லா மனிதரும் பாவத்தின் அதீதமான பாவமுடைமையையும் அதின் நியாயமான பலனாகிய கசப்பான அனுபவங்களையும் முழுவதுமாக அனுபவிக்கவும்,
- தேவ பிள்ளைகள் தங்களின் தேவனுக்கான உண்மைத்துவம் குறித்து சோதனை மற்றும் வேதனையின் நிழலிலும், நலம் மற்றும் வளமிக்க வாழ்வின் வெளிச்சத்திலும் முழுமையாக சோதிக்கப்படவும்,
அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
மனித இனத்திற்கு மகத்தான பாடம்
தற்கால அனுபவங்கள் “பாவத்தின் சம்பளம் மரணம்”, “பாவம் செய்கிற ஆத்துமா சாகும்”, “துரோகிகளின் வழியோ கரடுமுரடானது” என்கிற பாடத்தை போதிக்கின்றன. பூரணமும் சுத்தமுமான சிருஷ்டிகள் மட்டுமே நிரந்திரமாக வாழ தகுதியுடையதாக மதிக்கப்படும் எனபது சிருஷ்டிகரின் தெளிவான அறிவிப்பாகயிருக்கிறது.
எனவே பாவத்தின் அதீத பாவமுடைமை குறித்து மெய்பித்துகாட்டப்படுகிறது. இவ்வாழ்க்கையில் சிலர் இப்பாடத்தின் மூலமாக இலாபமடைகிறார்கள் மற்றும் இவ்வாறானவர்களே முதன்மையாக பரலோக அழைப்பிற்கு அழைக்கப்பட்டார்கள். மனித இனத்தின் பெரும்பான்மையோர் பாவம், தீமை குறித்து மட்டுமே கற்கிறார்கள். தேவனால் முன்னேற்பாடு செய்யப்பட்ட மனித இனத்திற்கான எதிர்கால நீதியுடனான அனுபவங்கள் பெரும்பான்மையோரின் பார்வைக்கு புலப்படவில்லை. “கிறிஸ்துவின் மகிமையான சுவிஷேசத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்கு பிரகாசமாயிராதபடிக்கு இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதை குருடாக்கினான் (2 கொரிந்தியர் 4:4).
இருப்பினும் மேசியாவின் இராஜ்ஜியதிற்குரிய புதிய யுகத்தினுள் செல்லும்போது மகிமையான தேவனுடைய குணசீலம் குறித்த அறிவின் உண்மையான ஒளி எல்லா இடங்களிலும் வீசும் “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்” (ஏசாயா 35:4-10). தேவ அன்பின் மிகப்பெரிய வெளிப்பாடான, மேசியாவின் கிருபை நிறைந்த பூமிக்குரிய ஆட்சியின் நோக்கம் பெரும்பான்மையான நம்முடைய வீழ்ந்துபோன இனத்தை, ஏழ்மையானோரை உயர்த்துவதே ஆகும். மேசியாவின் ஆயிரவருட ஆட்சியிலே, மரித்தவர்கள் உயிரோடு எழும்பி இப்பூமியில் ஜீவிக்க வருவார்கள். இதன்மூலமாக, இப்பூமியில் அனைவருக்கும், இப்போதுபோல நீதியின் விரும்பத்தக்க தன்மை குறித்து அறிந்துகொள்ள முழுவதுமான வாய்ப்பு கொடுக்கப்படும். பாவத்தின் விரும்பத்தகாத தன்மை குறித்து ஏற்கனவே (இப்போதே) அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே எதிர்மறையான அனுபவங்கள் மூலம் அவர்கள் நன்மை மற்றும் தீமையின் உண்மைத்தன்மையையும் அவைகளின் பலன் குறித்தும் அறிந்து கொள்வார்கள். ஆயிரவருட ஆட்சியின் முடிவில் (கிறிஸ்துவின் இராஜ்ஜியம்) என்னே வியக்கத்தகுந்த பாடங்களை, நன்மை மற்றும் தீமை குறித்து கற்றிருப்பார்கள்!. பின்னர் அவர்களுக்கான தேர்வு (சோதனை) வரும் (வெளிப்படுத்தின விஷேசம் 20:7-9).
நன்மை தீமை குறித்து முழுவதுமான அறிவை (அனுபவத்தை) பெற்றபின் அவர்கள் எதை தெரிந்தெடுப்பர்?. நன்மையையும் மற்றும் அதின் பரிசாகிய நித்திய ஜீவனையே தெரிந்தெடுக்க தேவன் அனைவரிடமும் வருந்தி உந்துகிறார் (விரும்புகிறார்). இருப்பினும், அவர் வற்புறுத்தமாட்டார். ஒவ்வொரு தனி நபரையும் தேவ ஒழுங்குகளுக்கு இசைவாகவோ அல்லது எதிராகவோ, தன் சுயமாக தெரிந்தெடுக்க, தன் வழியைத் தானே உருவாக்கிக்கொள்ள விட்டுவிடுவார். இருப்பினும், நீதியின்மேல் பிரதானமாக அன்பு செலுத்துகிற, தீமையை வெறுக்கிற நிலையிலிருப்பவர்கள் மட்டுமே, பூமிக்குரிய இராஜ்ஜியத்தில் பங்குபெற தகுதியுள்ளவர்களாக கருதப்படுவர்.
இப்படியான எதிர்மறையான அனுபவம் அன்பு மற்றும் நீதியை நடப்பித்தலுக்கும், தீமை மற்றும் பாவத்தை தவிர்ப்பதற்கும் வழி நடத்தும். இம்முறையில் நித்திய ஜீவனுக்கு தகுதிபடுத்துவதை தவிர, நாம் எண்ணிப்பார்க்கும் வேறு எந்த முறையும் பெரும்பான்மையானோரை தகுதிப்படுத்தாது. ஏனெனில் அனுபவமே மிகச் சிறந்த ஆசான் (ஆசிரியர்) (ரோமர் 11:30-32, சங்கீதம் 90:14-17).
மரண தண்டனை படிப்படியாக அனுபவிக்க செய்தல்
ஜீவியத்தின் கிருபைகளை மனிதன் வசதியோடுகூட அனுபவிக்கும் பொருட்டும் மற்றும் அவனை சோதிக்கும்படி சரியான இடமாக அமையும் பொருட்டும் மட்டுமே தேவன் முன்னதாக வியக்கும் விதமாக ஏதேன் தோட்டத்தை ஆயத்தம்பண்ணினார் (ஆதியாகமம் 2:8) என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தேவன் மனிதனின் வீழ்ச்சியை முன்பாக அறிந்து பாவத்தின் தண்டனையை உடனடியாக செயல்படுத்தாமல், “செத்துக்கொண்டே சாவாய்” (ஆதியாகமம் 2:17, மார்ஜின் காண்க) என படிப்படியாகவே அனுபவிக்க செய்தார். சாதகமில்லாத சீதோஷ்ணநிலை, முட்கள், களைகள், நிலத்தின் தரிசலான தன்மை, புயல் (சூறாவளி), வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்றவைகள் கொண்ட பண்படாத பூமியின் சாதகமில்லாத நிலையை எதிர்த்து போராடுவதின் மூலமாக படிப்படியாக மரணதண்டனை செயல்படுத்த வேண்டியதாகிறது. பண்படாத பூமி, பூரணமான கீழ்படிதலுள்ள தேவனுடைய பிள்ளைகளாகிய மனிதர்கள் வாழும் வகையில் சீர்படுத்தி பண்படுத்தப்பட 7000 வருடங்கள் ஆகும்.
வேதவாக்கியங்களின்படி தண்டனையானது
“நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்கு திரும்புவாய்”, “செத்துக்கொண்டே சாவாய்” என்பதே (ஆதியாகமம் 3:19, 2:17, மார்ஜின் காண்க).
அந்த ஸ்திரியின் வித்து, எவ்விதத்திலும் ஏதோ ஒரு காலத்தில் மீட்பை உண்டாக்கும் (ஆதியாகமம் 3:15) என தேவன் வாக்குத்தத்தம் பண்ணினார் என்பது உண்மையே. எனினும் அது துல்லியமல்லாத மற்றும் தெளிவற்றதான மங்கலான நம்பிக்கையையே கொடுத்தது. கட்டளை விதிமுறைக்கும், நீதிக்கும், இசைவாக, தேவன் அவர்களோடு கடினமாக இடைபட்டிருந்தாலும், அவர்களிடம் பரிவிரக்கம் கொண்டிருந்ததுமட்டுமல்லாமல் கடைசியாக நீதி தவறாமல் அல்லது தனது நியாயமான மரண தண்டனையை புறக்கணியாமல் துன்பம் துடைப்பார் என்பதை அப்போதைய வாக்குத்தத்தம் தெளிவாக தெரிவிக்கவில்லை.