Type Here to Get Search Results !

அடிமைத்தனத்தின் காலம், கி. மு. 1706-1491

அடிமைத்தனத்தின் காலம்,
கி. மு. 1706-1491


எகிப்துக்கு இடம் பெயர்ந்ததிலிருந்து
வெளியேற்றம் வரை
யாத்திராகமம் 1-14

I. எபிரெயர்கள் அடிமைத்தனத்தில் இருந்த
காலத்தில் எகிப்து.
பழங்கால எகிப்தின் வரலாறு சில வேளைகளில் (பின்வருமாறு) மூன்று
கால கட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது:

1. பழைய பேரரசு. அறியப்படாத பழங்காலத்திலிருந்து கி.மு. 2100 வரை
2. மத்திய கால அல்லது ஹிக்ஸோஸ் பேரரசு, கி.மு. 2100-1650
3. புதிய பேரரசு, கி.மு., 1650-525 ஹிக்ஸோஸ்கள் வெளியேற்றப்பட்ட
பிறகு பெர்ஸியப் பேரரசினால் எகிப்து முழுவதுமாக எடுத்துக் கொள்ளப்
படுதல் வரை.

முதலாவது கால கட்டத்தில், மேனெஸ் என்பவர் எகிப்தின்
கீழ்ப்பகுதியில் இருந்த இனங்களை ஒன்று படுத்தி/பலப்படுத்தி மெம்ப்பிஸ்
என்ற மிகப் பழைமையான தலைநகரைத் தோற்றுவித்தார், மற்றும் இவர்
எகிப்தின்மீது ஆட்சி செலுத்திய முப்பத்தியொரு அரச பரம்பரைகளில்
முதலாமவராக இருந்தார். (பல) நூற்றாண்டுகளுக்குப் பின்னர், நான்காம்
அரச பரம்பரையைச் சேர்ந்தவர் மாபெரும் பிரமிடுகளைக் கட்டி
யெழுப்பினார். இன்னும் பிற்காலத்தில் பன்னிரெண்டாம் அரச பரம்பரை
யைச் சேர்ந்தவர் அதிகாரத்தின் இருக்கையை எகிப்தின் மேல்பகுதியில்

இருந்த தெபெஸ் என்ற இடத்திற்கு மாற்றினார், அங்கு அவர்கள் (இந்த)
முதல் காலகட்டத்தின் மகா மேன்மையான புகத்தைத் தொடங்கி
வைத்தனர்.

மத்திய காலப் பேரரசின் ஹிக்ஸோஸ் அல்லது மேய்ப்பர் அரசர்கள்
ஆசியாவிலிருந்து ஊடாடிய செமிட்டிக் இனத்தவராயிருந்தனர். அவர்கள்
வல்லமையுள்ள ஒருங்கமைப்பாளர்களாக இருந்த போதிலும், முதலில்
பண்படாத காட்டு மிராண்டிகளாகவே இருந்தனர், அவர்களின் ஆளுகை
யின் கீழ் எகிப்திய நாகரிகமானது ஒரு கிரகணத்தை (மறைக்கப்படுதலை)
அனுபவித்து பாடுபட்டது.
ஹிக்ஸோஸ்களை வெளியேற்றி புகழ் பெற்ற பதினெட்டாவது அரச
பாரம்பரியத்தைத் தோற்றுவித்த அமோசிஸ் என்பவரால் புதிய பேரரசு
தொடங்கப்பட்டது, இப்பாரம்பரியத்தில் எகிப்தியரின் அலைக்சந்தர்
எனப்படும் மூன்றாம் தோத்மெஸையும் உள்ளடக்கும். இது, பத்தொன்ப
தாவது அரச பரம்பரையுடன் (சேர்த்து) எகிப்திய வரலாற்றின் மிக
உன்னதமான சகாப்தத்தைக் கொண்டிருந்தது. (இந்த அரசாட்சியின்)
முற்பகுதியில் கல்தேயாவிலிருந்து எபிரெயர்கள் (இங்கு) இடம் பெயர்ந்து
வந்த நிகழ்ச்சி நடைபெற்றிருக்கலாம், மற்றும் அவர்கள் (இந்த) மத்திய
காலத்தின் பிற்பகுதியில் எகிப்துக்கு இடம் பெயர்ந்திருக்கலாம். இது
ஆபிரகாம், யோசேப்பு, மற்றும் யாக்கோபு ஆகியோரை பார்வோன்
அக்கறையுடன் நடத்தியதற்கு காரணமாக இருக்கும். செமிட்டிக்
இனத்தவர்கள் தங்களுக்குள்ளாக, அந்நியர்கள் மீதான எகிப்தியரின்
வெறுப்புணர்வைப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

II. கொடுமைப்படுத்தப்படுதல்.

எகிப்தியர்களிடம் எபிரெயர்கள் உயர்வான சலுகைகளைப் பெற்றுக்
கொள்வதுடன் ஆதியாகமம் முடிவடைகின்றது, அடிமைகளின் இனத்து
டன் யாத்திராகமம் தொடங்குகின்றது. எகிப்திய நாடானது “அடிமைத்
தனத்தின் வீடானது.” இதுவரை கடந்து சென்ற பரிசுத்த வரலாற்றின்படி,
இவைகள் இடைப்பட்டுக்கிடந்த அமைதியான நூற்றாண்டுகளாய்
உள்ளன.' அரச பரம்பரைகள் எழுச்சியுற்றிருக்கலாம், வீழ்ச்சியுற்றிருக்
கலாம், தொலை தூரத்தில் யுத்தங்கள் நடத்தப்பட்டிருக்கலாம், மேன்மை
மிக்க ஆலயங்களின் சிதிலங்கள் உலகத்தை இன்னமும் பிரமிப்பில்
ஆழ்த்துகிற, அவைகள் கட்டி எழுப்பப்பட்டிருக்கலாம், ஆனால் உலக
மகிமை மாத்திரமே தெய்வீகப் பதிவேடுகளில் இடம் பெறுவதில்லை.

தொகுத்துரைக்கப்பட்ட வரலாற்றில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
மீட்பின் பரிணாமத்தில் ஒரு புதிய முன்னேற்றத்திற்கான செயல் தாக்கத்தின்
வேளை இன்னமும் வராதிருந்தது.
கடைசியில், "யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில்
தோன்றினான்” (யாத். 1:8). மாபெரும் பயன்கள் விரைவில் மறக்கப்
படுகின்றன. சாலாமிஸின் பதினான்கு ஆண்டுகளுக்குள்ளாக, தெமிஸ்
டோக்கிள்ஸ் நாடு கடத்தப்படுகிறார்; வாட்டர்லூவின் பதினேழு ஆண்டு
களுக்குள்ளாக வெல்லிங்டன் கோமகன் இலண்டன் கும்பல் ஒன்றினால்
தாக்கப்பட்டார். நூற்றாண்டுகள் காலமானது எபிரெயரான யோசேப்பி
னால் அளிக்கப்பட்ட மாபெரும் பணியின் கருத்தை அழித்திருந்தது பற்றி
நாம் வியப்படைவது மிகவும் அரிதான விஷயமாகும். “புதிய அரசன்”
அநேகமாக, செமிட்டிக் ஹிக்ஸோஸ்களை எகிப்திலிருந்து துரத்தி சொந்த
நாட்டின் ஆட்சியாளர்களை மீளக்கட்டியெழுப்பிய புரட்சியையே
சுட்டிக்காண்பித்துள்ளார் என்று நாம் கருத இடமுண்டு). முதலாம் சேட்டி,
இரண்டாம் இராம்சேஸ் மற்றும் மெனேப்தா ஆகிய மூன்று அரசர்களே
அடிமைத்தனம் மற்றும் கடந்து செல்லுதல் காலங்களில் ஆண்ட
பார்வோன்களாயிருக்க வேண்டும், இவர்கள் யாவரும் பத்தொன்பதாம்
அரச பரம்பரையின் அரசர்களாய் இருந்தனர். சேட்டி என்ற பார்வோன்
எபிரெயர்களின் வளர்ச்சி பற்றி எச்சரிக்கை செய்து, படையெடுப்பையும்
மற்றும் ஹிக்ஸோக்களின் நீண்ட கால வன்முறையாக அதிகாரத்தைக்
கைப்பற்றும் செயலையும் மீண்டும் நினைவுபடுத்தி, எபிரெயர்களின்
ஆவியை முறித்துப் போடத் தீர்மானம் செய்தார். அவர்களை அவர் செங்கல்
சூளைகளில் தங்களுடைய உழைப்பை வீணாக்கும்படிக்கு மட்டுப்
படுத்தினார்; இருந்தாலும் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். கடைசியில்
அவர் (எபிரெயர்களுக்குப்) பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தையையும்
நைல் நதியில் வீசி எறியும்படி கட்டளையிட்டார். பின்பு விடுவிப்பவர்
வந்தார்.

III. மோசேயின் பிறப்பும் ஊழியமும்.

எல்லாவற்றிலும் எல்லாமுமாக, ஒரு நாட்டுப் பற்றாளர், கவிஞர்,
விடுவிப்பவர், பிரமாணத்தைக் கொடுப்பவர், வரலாற்றாளர், மனிதர் என்ற
வகையில் மோசே, வரலாற்றில் மாபெரும் பாத்திரமாக உள்ளார்.

பதினெட்டாவது மற்றும் பத்தொன்பதாவது அரச பரம்பரைகளின்
பார்வோன்கள் தங்கள் மாபெரும் செய்கைகளை கருங் கற்பலகைகளில்
செதுக்கி விட்டுச் சென்றனர். இருப்பினும் அவர்களின் பெயர்கள் சமீபத்தில்
தோண்டியெடுக்கப்பட்ட பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த சடலங்களின்
புகைப்படங்கள் என்ற வகையில் நிழல் ரூபமாக மட்டுமே உள்ளன. மோசே
தமது பதிவேட்டை ஒரு இனத்தின் மீதும் ஒரு மதத்திலும் எழுதி வைத்தார்,
அவரது பெயரானது, பெருமைமிக்க பார்வோன் தேவனுடைய மக்களை
(நாட்டை விட்டு) செல்வதற்கு அனுமதிக்கச் சம்மதித்த வேளையில் அவர்
சுழன்று எழும்பிய அந்த இரவு வேளையைக் காட்டிலும், முப்பத்து மூன்று
நூற்றாண்டுகளுக்குப் பிறகு (இன்று) மாபெருமையுடன் விளங்குகின்றது.
அவரது வாழ்வானது இயல்பாகவே மூன்று சம அளவான பிரிவுகளில்
அடங்குகின்றது: எகிப்தில் நாற்பது ஆண்டுகள்; மீதியான் நாட்டில் நாடு
கடந்த நிலையில் நாற்பது ஆண்டுகள்; இஸ்ரவேலின் விடுதலையாளராக,
நடத்துனராக மற்றும் ஒருங்கமைப்பாளராக நாற்பது ஆண்டுகள். அவரது
வாழ்வின் கடைசி நாற்பது ஆண்டுகள் அவரது மக்களின் வரலாறாக
உள்ளது, அது அடுத்த கால கட்டத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது.

1. எகிப்தில் நாற்பது ஆண்டுகள்.-

அ. அவரது பிறப்பும் கல்வியும்.

லேவி கோத்திரத்தைச் சேர்ந்த அம்ராம் மற்றும் ஏகொபேத் என்ற தேவபக்தி
யுள்ள பெற்றோருக்கு மோசே பிறந்தார். அவர்களின் முந்திய பிள்ளை
களான மிரியாமும் ஆரோனும், சேட்டியின் கொலைத்தன்மை கொண்ட
உத்தரவு இடப்படு முன்பே பிறந்தார்கள் என்று காணப்படுகின்றது.

அவர்களின் மூன்றாவது குழந்தை பிறந்த போது நிலைமை அப்படியிருக்க
வில்லை . அவரது பிறப்பு மூன்று மாதங்கள் வரையிலும் அதிகாரிகளிடத்தில்
(விஷயம் தெரிந்து விடாமல்) இரகசியமாய்க் காக்கப்பட்டிருந்தது. இனியும்
அதை இரகசியமாய் வைக்க முடியாதென்ற நிலை வந்த பொழுது, அந்த
அழகுமிக்க குழந்தை நாணற் பெட்டியில் வைக்கப்பட்டு நைல் நதியில்
ஒப்புவிக்கப்பட்டது. அக்குழந்தையைப் பார்வோனின் மகள் கண்டெடுத்து
தத்தெடுத்துக் கொண்டு, அதற்கு மோசே என்று பெயரிடுகின்றாள்.

பலவீனமான அந்த (நாணற்) கை வேலைப் பெட்டியையும் அதில் இருந்த
விலைமதிப்பேறப் பெற்ற சுமையையும் பின்தொடர்ந்து சென்ற மிரியாம்,
அக்குழந்தைக்குப் பாலூட்டி வளர்க்க ஒரு தாதியை அழைத்து வருவதாகக்
கூறி, தனது சொந்தத் தாயையே அழைத்துக் கொண்டு வருகின்றாள்.

இவ்விதமாகத் தேவனுடைய அருளிரக்கத்தினால், (இஸ்ரவேல்) இனத்தின்
எதிர்கால நண்பர், அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பவர், மற்றும்
ஒருங்கமைப்பாளர் (அக்காலத்தில்) உலகிலிருந்த வற்றிலேயே சாத்தியக்
கூறுள்ள வகையில் மதிநுட்பமான கலாச்சாரத்தில் (அப். 7:22) வளர்க்கப்
படுகின்றார், மற்றும் அவரது சொந்தத் தாயாலேயே அக்காலத்தில் உலகில்
இருந்த மிக மிக மேன்மையான ஆவிக்குரிய விசுவாசத்தில் பயிற்றுவிக்கப்
படுகின்றார்.






ஆ. மோசேயின் தெரிவு:-

மோசே (வளர்ந்து) மனிதராகின்றார். அவரது
எபிரெயத் தோற்றம்/தொடக்கம் என்பதன் இரகசியம் அவருடைய
தாக(வே) உள்ளது. எகிப்திய ஆளோட்டி ஒருவர் எபிரெயர் ஒருவரை
அடித்ததைக் கண்ட அவர் (மோசே) அந்த எகிப்தியனைக் கொன்று, அந்த
உடலை மணலினுள் மறைத்தார். மோசே தனது இரத்தக் குழாய்களில்
அநீதியைப் பொறுக்க கூடாமல் துடிக்கக் கூடிய சூடான இரத்தத்தைக்
கொண்டிருந்தார் என்பதில் ஐயம் எதுவும் இல்லை. ஆனால் அந்தச் செய்கை
யானது அந்தக் கணத்தின் அவசரத்தூண்டுதலினால் ஆனதாயிராதிருந்தது.
எபிரெயர் 11:24-26 மற்றும் அப்போஸ்தலர் 7:23-25 வசனப் பகுதிகளி
லிருந்து இரு விஷயங்கள் தெளிவாய் உள்ளன:

(1) அவர் அடிமைப்படுத்தப்
பட்டிருந்த தம் சகோதரர்களுடன் பாடநுபவிப்பதற்காக எகிப்து
அளிக்கக்கூடிய அந்தஸ்து எல்லாவற்றையும் வேண்டுமென்றே மனப்பூர்வ
மாகத் துறந்து விட்டிருந்தார்;

(2) அவர் இஸ்ரவேலரை விடுதலைக்காகத்
தைரியமாய்ப் போராடுபவர்களாக்குவதற்கு (அவர்களின் உணர்வைத்
தட்டி) எழுப்பலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் காலம்
இன்னும் கனியாதிருந்தது, மற்றும் அவரோ அல்லது அவருடைய மக்களோ
இன்னமும் ஆயத்தமாகவில்லை. விலங்குகள் (அடிமைத்தனக் கொடுமை
கள்) அதிக பாரமாக ஆகியிருக்க வேண்டும், மற்றும் மோசே தாமே தமது
மாபெரும் ஊழியத்திற்கு ஒழுங்கு படுத்தப்பட்டிருக்க வேண்டும். எகிப்து
கலைகளுக்கும் அறிவியல்களுக்கும் சிறந்ததொரு கலாசாலையாக இருந்தது;
மற்றும் அவரது தாயின் மடியில் அவர் மதத்தின் அடிப்படைப் பாடங்களை
மனதில் ஈர்த்திருந்தார்; ஆனால் அவர் தமது மேன்மை மிக்க ஊழியத்திற்குத்
தேவையான யாவும் அளிக்கப்பட்டுத் தயாராவதற்கு முன் தேவனுடன்
அதிக நேரம் தனிமையில் இருக்க வேண்டியிருந்தது. மீதியானின்
பாலைவனத்தில் மற்றும் சீனாய் மலையின் தனிமையில், தேவனைத் தமது
போதகராகக் கொண்ட நிலையில் அவர் தமது பல்கலைக் கழகத்தைக்
கண்டறிகின்றார், தமது பட்டத்தைப் பெறுகின்றார்.

2 மீதியானில் நாற்பது ஆண்டுகள்.-மோசே, செங்கடலுக்குக் கிழக்கே
இருந்த மீதியான் நாட்டிற்குத் தப்பியோடுகின்றார், ஒரு நாள் மாலைப்
பொழுதில் ஒரு கிணற்றை மூடியிருந்த கல்லின் அருகே அவர் அமர்ந்திருந்த
வேளையில், மீதியானின் ஆசாரியராயிருந்த எத்திரோவின் ஏழு மகள்கள்
தங்கள் மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவதற்காக அவ்விடத்திற்கு
வந்தனர். முரட்டுத்தனமான நாடோடி மேய்ப்பர்கள் சிலர், அப்பெண்
களின் மந்தைகளை விரட்டினர். ஒடுக்கப்பட்ட தமது சகோதரர்களின்
சார்பாக வீறு கொண்டெழுந்த மோசேயின் ஆவி, ஒடுக்கப்பட்ட இப்பெண்
களின் சார்பாகவும்) சற்றேனும் வீரம் குறையாதிருந்தது. தேடப்பட்டு வந்த
"எகிப்தியர்" (மோசே) என்பவரால் தக்க காலத்தில் செய்யப்பட்ட இந்த
உதவியானது ஒரு சாதகமான அறிமுகமாய் இருந்ததாக நிரூபிக்கப்பட்டது.
அவர், எத்திரோவின் மகளான சிப்பொராளைத் திருமணம் செய்து
கொள்கின்றார். நாற்பது ஆண்டுகள் அளவாக அவர் மீதியானில் ஒரு
(மேய்ப்பராக அமைதியான (அத்தொழிலைப் பின்பற்றுகின்றார். அங்கு
அவர் தமது மக்களை வாக்குத்தத்தம் செய்யப்பட்ட நாட்டிற்கு வழிநடத்திச்
செல்ல வேண்டியிருந்த கரடுமுரடான நாட்டைப் பற்றி நன்கறிந்து
பழக்கப்படுத்திக் கொள்ளுகின்றார். கடைசியில், தேவன் எரியும் புதரில்
அவருக்குத் தரிசனமாகின்றார். அவர் (தேவன்) தம்மை "ஆபிரகாம், ஈசாக்கு,
யாக்கோபு ஆகியோரின் தேவன் என்று வெளிப்படுத்துகின்றார்,
முற்பிதாக்களின் யுகத்தின் முழுவதிலும் வலிவான வகையில் செயல்பட
உடன்படிக்கையைப் புதுப்பிக்கின்றார், மற்றும் இஸ்ரவேலரை விடுவிக்கும்
படி மோசேக்கு கட்டளை கொடுக்கின்றார். இப்பொழுது பயம் வளரப்
பெற்ற மற்றும் பேச்சில் தாமதப் போக்கு கொண்ட மோசே, தம்மை அரசர்
களுக்கு முன்பாக அரண்மனைகளுக்கு இட்டுச்செல்ல வேண்டியிருந்த ஒரு
ஊழியத்திலிருந்து பின்வாங்குகின்றார். ஆனால் தேவனிடமிருந்து தமது
சான்றுகளாக இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்கள் என்ற ஆயுதந்
தரிக்கப்பட்ட நிலையிலும், ஆரோன் தமக்காக (மோசேக்காக) பேச
நியமிக்கப்பட்ட நிலையிலும், மோசே எகிப்துக்குத் திரும்புகின்றார்.





IV. மாபெரும் போட்டி.

இப்பொழுது, வரலாற்றிலேயே மிகவும் குறிப்பிடத்தக்கதான போட்டி
தொடருகின்றது. மோசே மீதியான் நாட்டை விட்டுச் செல்லுகின்ற
(வழியில்) போது ஆரோன் அவரைச் சந்திக்கின்றார். அவர்கள் ஒன்றாகத்
தங்கள் சொந்த மக்களின் மூப்பர்களுக்கு முன்பாகச் செல்லுகின்றனர்,
தங்கள் ஊழியத்தை (அவர்கள்) அறியச் செய்கின்றனர், மற்றும் நியமிக்கப்
பட்ட அடையாளங்களைக் கொண்டு அதை உறுதிப்படுத்துகின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்கள் இவர்களின் ஊழியத்தை ஏற்றுக் கொண்டு, தங்கள்
பிதாக்களின் உடன்படிக்கையினுடைய தேவனை பயபக்தியுடன் பணிந்து
கொள்கின்றனர். அவர்கள் பார்வோன் மன்னரிடம் அவ்வளவாக வெற்றி
யடையவில்லை. யேகோவாவின் நாமத்தினால் அவர்கள் (மோசே & ஆரோன்), இஸ்ரவேல் மக்களை யேகோவாவுக்குப் பலி செலுத்துவதற்காக
வனாந்திரத்திற்கு மூன்று நாட்கள் பயணம் செல்ல அனுமதிக்க வேண்டும்
என்று (பார்வோனிடத்தில்) கேட்கின்றனர். அவர் இவ்வளவு மிதமான ஒரு
வேண்டுகோளுக்கு சம்மதித்திருந்தாரானால், பார்வோனுக்கும் (மோசே
யின்) மக்களுக்கும் நன்மையாய் இருந்திருக்கும். விலங்குகள்/கட்டுகள்
(இன்னும் அதிகமாய்) பிணைக்கப்பட்டதும் சுமைகள் அதிகமாக்கப்
பட்டது மே முதல் செயல்விளைவாயிருந்தது. பார்வோனிடமிருந்து
முரட்டுத்தனமான மறுப்பையும் கடினமான உழைக்கும் தமது சகோதரர்
களிடமிருந்து கசப்பான வசவுகளையும் சந்தித்த மோசே தமது கவலை
யினால் செய்வதறியாத நிலையில் இருக்கின்றார். அடிமேல் அடியாக பத்து
வாதைகள் அல்லது "அடிகள்" தொடருகின்றன: தண்ணீர் இரத்தமாகுதல்,
தவளைகள், பேன்கள், வண்டுகள், கொள்ளை நோய், கொப்புளங்கள்,
கல்மழை, வெட்டுக்கிளிகள், காரிருள், முதற் பேறான/தலைப் பிள்ளைச்
சங்காரம்.

1. போட்டியின் இயல்பு.--





இது அடிமைப்படுத்தப்பட்ட இனமொன்
றிற்கும் அவர்களை ஒடுக்கி வைத்திருப்பவர்களுக்கும் இடையிலான
போராட்டம் மட்டுமாக இருந்ததில்லை; இது மோசேக்கும் பார்வோனுக்
கும் இடையிலான ஒரு போட்டியாக இருந்தது. இது யேகோவாவுக்கும்
எகிப்திய தெய்வங்களுக்கும் இடையிலான ஒரு வாக்குவாதமாக இருந்தது.
ஏறக்குறைய ஒவ்வொரு வாதையும் எகிப்தின் இயற்கைச் சீற்றமாகவே
இருந்தது; இருப்பினும், அவற்றின் அற்புதவிதமான பண்பானது அநேக
சூழ்நிலைகளிலிருந்து காணப்படுகின்றது: அவற்றின் கடுமையான நிலை/
தீவிரத் தன்மை , மிகத்துரிதமாக ஒன்றன் பின் ஒன்றாக வருதலில் அவற்றின்
பெருக்கம்; அவைகள் மோசேயின் வார்த்தைகளினால் வந்தன மற்றும்
போயின; முதல் மூன்று வாதைகளில் இஸ்ரவேலர் விதிவிலக்காகக் காக்கப்
படுகின்றார்கள், எகிப்திய விக்கிரக ஆராதனையின் ஏதோ ஒரு வடிவத்தைப்
பின்பற்றியவர்களில் ஏறக்குறைய அனைவருமே அடி பெற்றனர்.

2. போட்டியின் தேவை.

உலகம் முழுவதிலும் ஒரு தனித்த இனம்
தேவனுடைய ஒருமைப்பாட்டையும் ஆவிக்குரிய தன்மையையும் பற்றிக்
கொண்டிருந்தது என்பதை நினைவில் வையுங்கள்; மற்றும் அவர்கள் தங்கள்
விசுவாசத்தையும், இன அடையாளத்தையும் இழந்து போகும் அபாயத்தில்,
அடிமைத்தனத்தில் இருந்தனர். எண்ணிக்கைகள், சொத்துக்கள், கலாச்
சாரம், வல்லமை/அதிகாரம், நூற்றுக்கு ஒன்று என்பதாக அவர்களுக்கு
எதிரானவைகளாய் இருந்தன. ஒருபோதும் இழந்து போகப்படக் கூடாது
என்பதற்கு ஒரு பாடம் தேவைப்பட்டிருந்தது; மற்றும் அது இழந்து
போகப்படாதிருந்தது. எகிப்தின் விக்கிரகங்கள் தூசியாகும்படி நொறுக்கப்
பட்டன அல்லது பழம்பொருள் ஆய்வாளர்களின் பழம்பொருள் காட்சிக்
கூடங்களை அலங்கரிக்கச் சென்றன; இஸ்ரவேலின் தேவன் நாகரிகமடைந்த
உலகத்தினால் ஆராதிக்கப்படுகின்றார். எகிப்தில் நடந்த அடையாளங்களும்
அற்புதங்களும் எபிரெய இலக்கியத்தின் பெரும் பகுதியை நிரப்புவதற்கு
வந்தன. அவைகள் இஸ்ரவேலரைஎல்லா வகையிலும் சங்கடப்படுத்தும் பல
தெய்வ வணக்கத்திற்கு மத்தியில் தங்கள் முன்னோர்களின் விசுவாசத்தைப்
பற்றிப் பிடித்துக் கொள்ளும் மிகுந்த செயல்வலிவுமிக்க சக்திகளை
வடிவமைக்கக் கூடிய இன உணர்வின் கூறுகளாக ஆயின.

3, போட்டியின் முடிவு.-

கடைசி அடி விழுகின்றது. மரணத்தின் தூதர்
அரண்மனையிலிருந்து சிறைச்சாலை வரை எகிப்தின் கதவு ஒவ்வொன்றை
யும் தட்டுகின்றார், முதற் பிறந்தவர்கள் யாவரும் மரணம் அடைந்து
கிடக்கின்றனர். ஆனால் எபிரெயரின் எளிய இல்லங்கள் பாதுகாப்பாக
உள்ளன. அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து பஸ்காவை ஏற்படுத்தினார்
கள். ஆட்டுக்குட்டி கொல்லப்படுகின்றது; அதன் இரத்தமானது எபிரெய
விசுவாசத்தின் அடையாளமாக கதவு நிலைக் கால்களில் தெளிக்கப்
படுகின்றது. பஸ்கா பண்டிகை கடைப்பிடிக்கப்படும் இல்லங்களுக்கு
மேலாக, திகைப்பூட்டும் தூதர் துன்பம் எதுவும் தராமல் கடந்து செல்லு
கின்றார். எகிப்திலிருந்து மாபெரும் கூக்குரல் எழும்புகின்றது. விலங்குகள்
(கட்டுகள்) வீழ்கின்றன, இஸ்ரவேலர்கள் விடுதலையை நோக்கி முன்னாகச்
செலுத்தப்படுகின்றனர், பார்வோனின் இருதயம், கடைசியாக ஒருமுறை
கடினப்படுத்தப்படுகின்றது. அவர் பின்தொடருகின்றார்; இஸ்ரவேலர்கள்
தங்களுக்கு முன்பாகச் செங்கடல் இருக்க, மலைகளின் அசுத்தத்தில்/
அசுத்தக் குவியலில் சிக்கிக் கொள்ளுகின்றனர்; கடல் பிரிகின்றது; இஸ்ர
வேலர்கள் (அதனூடாகக்) கடந்து சென்று காக்கப்படுகின்றனர்; எகிப்தியர்
கள் பின்தொடருகின்றனர், மற்றும் அவர்கள் கடலில் மூழ்கடிக்கப்
படுகின்றனர்.

V. எகிப்தில் சஞ்சரித்ததின்
செயல் விளைவு.

எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்ததென்பது கசப்பாய் இருந்தது
எனினும் /போலவே, அது (பின்வரும்) முக்கிய விளைவுகளையும்
நிகழ்த்தியிருந்தது:

1. அது இஸ்ரவேலை ஒரு இனமாக்கியது.

அவர்கள் பன்னிரெண்டு
நாடோடிக் குடும்பங்களாக எகிப்தில் நுழைந்தார்கள். யாக்கோபும் அவரது
நேரடிப் பின் சந்ததியினரும் எண்ணிக்கையில் எழுபது பேர்களாய்
இருந்தார்கள். வேலைக்காரர்கள் உட்பட, அந்த முழு இனமும் எண்ணிக்
கையில் இரண்டு அல்லது மூன்று ஆயிரமாய் இருந்திருக்கலாம். அவர்கள்
கானானிலேயே இருந்திருந்தால், நிச்சயமாய் அவர்கள் அலைந்து திரியும்
பன்னிரெண்டு சிறு இனங்களாக உடைந்து போயிருப்பார்கள். மக்கள்
நெருக்கம் அதிகமாயிருந்த நாட்டில், ஒடுக்கப்படுதலின் கனத்த கரத்தின் கீழ்
தங்கியிருந்ததென்பது அவர்களை ஒரு இனமாகக் கச்சிதமாய்க் கட்டி
எழுப்பிற்று.

2. அது அவர்களை நாகரிகப்படுத்தியது.-

அவர்கள் கானானின்
நாடோடிகளை விட்டுச் சென்றனர். அவர்கள் எந்த அளவுக்கு நாகரிகம்
கொண்டிருந்தனர் என்பதை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். ஆனால்
அவர்கள் எகிப்தில் இனியும் வெறும் மேய்ப்பர்களாக மட்டுமே
வாழ்க்கையைத் தொடர முடியாதிருந்தது. எகிப்து ஒரு விவசாய நாடாகவே
உள்ளது, அது எப்பொழுதும் இவ்வாறே இருந்திருக்க வேண்டும். மேலும்
அது ஆயிரம் ஆண்டுகள் அளவாக உலகின் மதிநுட்ப வாழ்வு மற்றும்
பொருளாதாய நாகரீகம் ஆகியவற்றில் தலைமை நிலையில் இருந்து வந்தது.
இப்படிப்பட்ட ஒரு பள்ளியில் நீண்ட காலம் சஞ்சரிப்பதற்கு எபிரெயர்கள்
மிகவும் வரம் பெற்ற மக்களாக இருந்தார்கள். விசேஷமாக மோசே,
"எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டார் (அப். 7:22);
ஆனால் ஆசரிப்புக் கூடாரம் கட்டப்பட்ட விவரத்திலிருந்து (யாத். 25-40)
அவர் தமக்குக் கீழ் திறமைமிக்க தளபதிகளைக் கொண்டிருந்தார் என்பது
தெளிவாகின்றது.

3. அதன் முடிவு நிகழ்ச்சிகள் இன விசுவாசத்தில் அவர்களை
உறுதிப்படுத்தின.-

அவர்கள் எகிப்திலேயே நிரந்தரமாய் இருக்கத் தொடர்ந்
திருந்தால், கடைசியில் அவர்கள் இன விசுவாசத்தையும் இன அடையாளத்
தையும் இழந்து போயிருப்பார்கள். ஆனால் எகிப்து, இஸ்ரவேலர்கள்
ஒருபோதும் மறந்து போயிராத பாடங்களை யெகோவா எழுதிய கரும்
பலகையாக ஆயிற்று. விக்கிரகாராதனைக்குள் மீண்டும் மீண்டும் திரும்பிச்
சென்று கொண்டிருந்தாலும், நீண்ட காலத்தில்/ஓட்டத்தில் அவர்கள்
(தங்கள்) இன விசுவாத்திற்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தனர். மற்றும்
இப்பொழுது அவர்கள், ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும் இருநூறு
ஆண்டுகள் அளவாக பரதேசிகளாய்ச் சஞ்சரித்த கானான் நாட்டை வெற்றி
கொண்டு உடைமையாக்கிக் கொள்ளத் திரும்ப வேண்டியதாயிருந்தது.
ஆனால் அது உடனடியாக நடக்கக் கூடியதல்ல. ஒரு சில நாட்கள்
பிரயாணம் செய்தாலே அவர்கள் கானான் நாட்டிற்குள் வந்து சேர்ந்திருக்க
லாம். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டை அடைவதற்கு
முன்பு ஒருங்கமைப்பு ஊழியமும் நாற்பது ஆண்டுகள் அளவாக அவர்களை
ஒழுக்கத்திற்கு உட்படுத்துதலும் இடைப்பட்டன.

குறிப்புகள்

'எகிப்தில் (அவர்கள்) சஞ்சரித்த காலத்தின் அளவு என்பது தீர்க்கப்படாத
பிரச்சனைகளில் ஒன்று ஆகும், எபிரெய வேதாகமத்தில் இது நானூறு (மிகச்சரியாக
நானூற்று முப்பது ஆண்டுகள் என்று கூறப்பட்டுள்ளது, இ.வ. ஆதி. 15:13; யாத்.
12:40, 44; அப். 7:6. செப்துவஜிந்த்(வேதாகமத்தில் யாத், 12:40, 41, இதைத்
தொடர்ந்து பவுல் கலா, 3:17ல் கூறும் கூற்றில் கானான் நாட்டில் முற்பிதாக்கள்
அலைந்து திரிந்தது உட்பட நானூற்று முப்பது ஆண்டுகள் என்றுள்ளது. 'யாத். 3:6
'கடந்த இடம் பற்றிய மிகச் சிறப்பான கலந்துரையாடலுக்கு மெக்கார்வியின்
"வேதாகமத்தின் நிலங்கள்/நாடுகள்" என்ற புத்தகத்தில் பக்கம் 438-443ஐக் காணவும்,
'இவ்விடத்தில் உன் அவர்கள் "wrought” என்று எழுதியுள்ளார்.




Post a Comment

0 Comments