IV. யோசேப்பின் வரலாறு. (ஆதி. 37:1-50:26.)

IV. யோசேப்பின் வரலாறு. (ஆதி. 37:1-50:26.)


அறிமுகம்.-






எபிரெய மக்களுடனான யோசேப்பின் உறவானது,
ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோர் கொண்டிருந்த
உறவிலிருந்து வேறுபடுகின்றது. அவர்கள் முழு உடன்படிக்கையின்
மக்களுக்கு முன்னோர்களாய் இருக்கின்றனர்; கருவிலிருந்து விரிவடைந்த
நாடான இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களில் இவர் (யோசேப்பு)
ஒருவராக மட்டுமே உள்ளார். எதிர்காலத்தில்) அந்த இனம் தன்னை
இஸ்ரவேல் என்று அழைத்துக் கொள்ளலாம், ஆனால் யோசேப்பு மட்டுமே
இஸ்ரவேல் இனம் என்றாகி விடாது. யோசேப்பு உடன்படிக்கையின்
மக்களுக்குத் தலைவராயிருக்கவில்லை, மற்றும் யோசேப்பு மூத்த முற்பிதா
என்ற வகையில் உடன்படிக்கையைப் புதுப்பித்துக் கொள்வதற்கு தேவன்
அவருக்குத் தரிசனமாகவில்லை . இருப்பினும் கூட அவரும் அவரது
சகோதரர்களும் முற்பிதாக்களின் காலத்திற்குரியவர்களாய் உள்ளனர்,
அவர்கள் முற்பிதாக்களுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர் (அப். 7:8, 9).

யோசேப்பின் வரலாறு (இருதயத்தை) மிகவும் தொடுவதாயுள்ளது, ம
ற்றும்
அவரது பண்பு பழைய ஏற்பாட்டு வரலாற்றில் எவரொருவருடையதைக்
காட்டிலும் மிகச் சிறந்த வகையில் முழுமையானதாக உள்ளது. இவர்
பழைய முற்பிதாக்களின் மிகச் சிறந்த பண்பு நலன்கள் சிலவற்றை
ஒன்றிணையக் கொண்டவராய் இருக்கின்றார்: ஆபிரகாமின் பலம் மற்றும்
தீர்மானம், ஈசாக்கின் பொறுமை மற்றும் சாந்த குணம், யாக்கோபின்
மென்மையான பிரியம், இவர்கள் யாவருக்குள்ளும் இருந்த விசுவாசம்
ஆகியவை யோசேப்பிடம் ஒருங்கே அமையப் பெற்றிருந்தன. இவரது
வாழ்வானது இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம்: (1) கானானில் அவரது
இளமைப் பருவம்; (2) எகிப்தில் அவரது மனிதப் பருவம்.





1. கானானில் அவரது இளமைப் பருவம்.


இந்தக் கால கட்டத்தின்
நிகழ்ச்சிகள் பின்வரும் இரண்டு உண்மைகளால் வடிவாக்கப்படுகின்றன:


அ. அவருடைய தந்தையின் (இவர்மீது மட்டுமான) நலம் பேணும்
தன்மை .


இவர் (யோசேப்பு) அவரின் (யாக்கோபின்) முதிர் வயதில் பிறந்த
மகனாய் இருந்தார், இவர் ராகேலுக்குப் பிறந்த முதல் மகனாய் இருந்தார்,
அவளையே அவர் (யாக்கோபு) தனது உண்மையான மனைவியாக
மதித்தார், யோசேப்பு தன்னிலேயே கொண்டிருந்த அன்புகாட்டக்கூடிய
பண்பும் இன்னொரு காரணமாயிருந்தது என்பதில் சந்தேகமில்லை,
யாக்கோபின் ஆழ்ந்த பிரியமானது தன்னைப் பல்வேறு வழிகளில் (வெளிக்)
காண்பித்தது; குறிப்பாக, பிரபுக்கள் அணிவது போன்ற பல வண்ணங்கள்
(அல்லது முழு கை அங்கி) கொண்ட ஒரு மேலங்கியில் - இது ஒரு வேளை
அவர் (யாக்கோபு) பிறப்புரிமையை அவருக்கு (யோசேப்புக்கு) மாற்றுவார்
என்று அர்த்தப்படுத்தியிருக்கலாம் - ஆழ்ந்த பிரியம் காண்பிக்கப்பட்டது.
விரைவிலேயே இதன் செயல்விளைவானது மூத்த சகோதரர்களின்
பொறாமையில் தோன்றியது. அது யோசேப்பைத் தன்னிலேயே பாழாக்கி
விடவில்லை என்பது அவரது இயல்பின் தனிச் சிறந்த பலத்திற்கு ஆதாரமாக
உள்ளது, ஏனெனில் அதிகமான ஈடுபாடு என்பது இழப்பைக் காட்டிலும்/
கை விட்டு விடுதலைக் காட்டிலும் அதிகமான (அளவில்) பண்புகளை
அழித்து விடுகிறது. யோசேப்பு பிற்பாடு தனது தந்தையின் கூடாரத்தில்
வலுவிழந்த சூழ்நிலையில் காட்சிப் படுத்திய ஆரோக்கியமான வளர்
மனிதப் பண்பை மேம்படுத்தியிருப்பாரா என்பது கூடச் சந்தேகமே,


ஆ. அவருடைய சகோதரர்களின் ஆழ்ந்த வெறுப்பு.-






இது
யோசேப்பின் இரண்டு கனவுகளால் வலுப்படுத்தப்பட்டது. ஒரு கனவில்
அவர்களின் கதிர்க்கட்டுகள் அவருடைய கதிர்க்கட்டைப் பணிந்து
வணங்குகின்றன; இரண்டாம் கனவில் சூரியனும், சந்திரனும், பதினோரு
விண்மீன்களும் அவருக்குப் பணிவாக வணக்கம் தெரிவிக்கின்றன - இது
அவர் பிறப்புரிமையை எதிர்நோக்கினார் என்பதற்கான கூடுதலான
ஆதாரமாக அவர்களுக்குத் தோன்றுகிறது. பொறாமை வெறுப்பைப்
பிறப்பிக்கிறது; வெறுப்பு கொலையின் கருமுளையாக உள்ளது. யாக்கோபு
யோசேப்பை எபிரோனில் இருந்த அவர்களின் குலமரபு இல்லத்திலிருந்து
அவரது (யோசேப்பின்) ஆடுமேய்க்கும் சகோதரர்களிடத்தில் அனுப்புகின்ற
பொழுது அவர்களின் வாய்ப்பு வருகின்றது, அவர்கள் சீகேமில் கண்படும்
இடத்தில் தங்கள் மந்தைகளுடன் இருக்கின்றனர். "இதோ, சொப்பனக்
காரன் வருகிறான், நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே
அவனைப் போட்டு, ஒரு துஷ்ட மிருகம் அவனைப் பட்சித்தது என்று
சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும்
என்று பார்ப்போம். * கொஞ்ச காலம் சென்ற பிறகு அவரை (யோசேப்பை)
அவரது தந்தையிடம் மீட்டுக் கொண்டு போக நினைத்த ரூபன், அவரை
(யோசேப்பை) குழியில் போடலாம் என்ற திட்டத்தை முன்மொழிந்தார்.
ரூபன் இல்லாத பொழுது, யூதாவின் ஆலோசனைப்படி யோசேப்பு
எகிப்துக்குச் செல்லும்படி ஒட்டகங்கள்மீது அவ்வழியே பயணம் செய்யும்
வர்த்தகக் குழுவினரிடம் விற்கப்படுகின்றார். வெறுக்கப்பட்ட (பல
வண்ண) மேலங்கியானது ஆட்டுக்குட்டியொன்றின் இரத்தத்திலே
தோய்க்கப்படுகிறது, இது, ஆழ்ந்த அன்புடைய தந்தை, யோசேப்பு காட்டு
மிருகங்களுக்கு இரையாகி விழுந்தார் என்று நம்பும்படி அவரை மோசம்
போக்குகிறது. குடும்பக் குற்றம் மற்றும் துக்கத்தின் காட்சியுடன் திரை
விழுகின்றது.

2. எகிப்தில் அவரது (முழு) மனிதப் பருவம்.-


அ. அவரது அடிமை
வாழ்வு.-


பார்வோனின் தலையாரிகளுக்கு அதிபதியான போத்தியாரின்
அடிமை என்ற வகையில் அவரது (யோசேப்பின்) திறமையும் உண்மைத்
தன்மையும் விரைவிலேயே அவரைத் தமது எஜமானரின் வீட்டாருக்குத்
தலைவராக்குகின்றது. அவரது உண்மை /ஒழுக்க நெறியே அவருக்கு அழிவு
தருவதாகப் பயமுறுத்துகிறது. போத்தியாரின் மனைவியினால் தவறாகக்
குற்றம் சாட்டப்பட்ட யோசேப்பு சிறையில் அடைக்கப்படுகின்றார்.


ஆ. அவரது சிறைவாழ்வு.-


யோசேப்பு நம்பிக்கையிழந்து கீழே
உட்கார்ந்து விடுகிற மனிதராக இருக்கவில்லை. சிறைக் கம்பிகளுக்குப்
பின்னால் இருக்கையிலும் கூட துணிவுடனும் உதவி செய்யும் பண்பு
டனும் இருந்த அவர், மீண்டுமாக நம்பகத் தகுந்த இடத்திற்கு எழும்பு
கின்றார். சக கைதிகள் இருவரின் கனவுகளுக்கு அர்த்தம் விளக்கிக் கூறிய
திலிருந்து அவர் பார்வோனின் கனவுகளுக்கு விளக்கம் கூறும்படி அழைக்கப்
படுகின்றார். அது பூமியின் மிகவும் பெருமை வாய்ந்த அரசின் ஏறக்குறைய
மிக உன்னதமான அதிகாரத்திற்குப் படியெடுத்து வைக்கும் கல்லாயிருந்
ததை நிரூபிக்கின்றது.


இ. அவரது அரசவை வாழ்வு:-


யோசேப்பு, எகிப்தின் ஆளுநர் என்ற
வகையில், பார்வோனின் கனவுகளினால் முன் நிழலிடப்பட்ட ஏழாண்டு
கள் பஞ்ச காலத்திற்கு எதிராக, வளமான ஏழாண்டுகளில் தானியத்தை/
கோதுமையைச் சேர்த்து வைக்கின்றார். வளமான வருடங்கள் கடந்து
செல்லுகின்றன; பஞ்சமான ஆண்டுகள் வருகின்றன, அவற்றுடன் தானியத்
திற்காக யோசேப்பின் சகோதரர்கள் வருகின்றனர். இப்பொழுது (இது)
அவருடைய வாய்ப்பாக உள்ளது. அவர்களை ஒற்றர்கள் என்று அவர்
பிடித்து வைக்கின்றார். சிமியோனைப் பிணையமாக வைத்துக் கொண்டு
மற்றவர்களை அவர் விடுவிக்கின்றார், ஆனால் பெஞ்சமீனை அழைத்துவரா.
விட்டால் மீண்டும் அவர்களைக் காண்பதற்கு அவர் மறுத்து விடுகின்றார்.
முதிர் வயதான முற்பிதா (யாக்கோபு) முதலில் பெஞ்சமீனை விட்டுப் பிரிய
மறுக்கின்றார்; ஆனால் பசி என்பது கடினமான எஜமானராய் உள்ளது,
(எனவே) கடைசியாக அவர் யூதா உத்திரவாதம் அளிக்க முன் வந்ததன்
பேரில் (பெஞ்சமீனை) அவர்களுடன் அனுப்பச் சம்மதிக்கின்றார்.
அவர்களின் இரண்டாம் வருகையின் போது.

யோசேப்பு தமது பான
பாத்திரத்தை பெஞ்சமீனின் (தானியச் சாக்கு முட்டையில் வைக்கச் செய்து,
சகோதரர்கள்மீது திருட்டுக் குற்றம் சாட்டுகின்றார். பிறகு அவர்கள்
தங்களுக்கு நேர்ந்த பெருந்துன்பங்களைத் தங்கள் குற்றத்துடன் தொடர்பு
படுத்தத் தயாரானபொழுது மனச்சாட்சி எழுப்பப்படுகிறது, கடைசியில்
யூதா மாண்புமிக்க வகையில் தம்மையே பெஞ்சமீனுக்குப் பதிலாக
அடிமையாக ஒப்புக்கொடுக்கின்றார், யோசேப்பு தம்மை அறியப்படுத்து
கின்றார், மற்றும் அவர்களின் குற்றத்தைத் தாராள குணமாக மன்னிக்
கின்றார். யாக்கோபு (எகிப்துக்கு அழைத்து வரப்படுகின்றார், மற்றும்
உடன்படிக்கையின் மக்கள் எகிப்தில் இருக்கையில் காலம் முடிவடைகிறது.
ஆனால், யோசேப்பு எகிப்திலேயே மரித்து அடக்கம் செய்யப்பட்டாலும்,
மரிக்கும் வேளையில் அவர் கொடுத்த கட்டளையானது (ஆதி. 50:24, 25),
உடன்படிக்கை (யின்) வாக்குத்தத்தங்களிலும் தம் மக்களின் எதிர்
காலத்திலும் அவர் விசுவாசம் எவ்வளவு உறுதியாய் உள்ளது என்பதைக்
காண்பிக்கிறது.
யோசேப்பின் நல்லொழுக்கம் ஒரு ஒருமையான நேர்மையாக உள்ளது.
அவர், கற்பனை செய்யப்படக் கூடிய ஒவ்வொரு சோதனைக்கும்
ஆளானார்; அவரது தந்தையின் ஒரு தலைப்பட்சமான பாசம், சகோதரர்
களின் பொறாமை மற்றும் முற்றிலுமான சேதம், சுத்தமற்ற பெண்ணொருத்
தியின் பொய்க் குற்றச்சாட்டுகள், ஒழுக்கமுடைமை குற்றத்தின் தண்டனை
யைச் சுமத்தல், மதிப்பும் வல்லமையும்/அதிகாரமும் திடீரென்று உயருதல்,
ஒவ்வொரு தவறுக்கும் பழி தீர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு - இவை
அவரது வாழ்வில் இடர்ப்பாடுமிக்க அனுபவங்களாய் இருந்தன. வேறு எந்த
மனிதரும் எக்காலத்திலும் இவ்வளவாய்ச் சோதிக்கப்பட்டதில்லை; வேறு
எவரும் இவ்வளவாய் வெற்றியடைந்ததுமில்லை. மனித குல மன்னிப்பின்
வரலாற்றில் இவர் மிக உன்னதமான முன்னுதாரணமாய்த் திகழுகின்றார்;
ஆபிரகாம் கூட தமது விசுவாசத்தில் இவ்வளவு சீராக வெற்றியடைந்த
தில்லை. பிறகு ஏன் யோசேப்புக்கு மாறாக ஆபிரகாம் "விசுவாசத்தின்
தந்தை" என்று மதிப்பளிக்கப்படுகின்றார்? ஏனெனில் அவர் "விசுவாசப்
பயணத்தின் கொலம்பஸ்" ஆக இருந்தார் என்பது தெளிவு. அறியப்படாத
சமுத்திரங்களில், அறியாத நாட்டை நோக்கி ஆபிரகாம் பயணம் செய்தார்.
யோசேப்போ, ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும் இருந்து நிறைவேற்றிய
வெளிச்சத்தில் தமது பயணத்தை மேற்கொண்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.