II. ஈசாக்கின் வாழ்வும் பண்பும். (ஆதி. 24:1-28:9.)

II. ஈசாக்கின் வாழ்வும் பண்பும். (ஆதி. 24:1-28:9.)

1. ஈசாக்கினுடைய வாழ்வின் தன்மை.-





ஈசாக்கினுடைய வாழ்வு
பற்றிய வரலாறு விரைவிலேயே கூறப்படுகிறது. இது ஒரு புறம் அவரது
தகப்பனுடைய வாழ்வின் வரலாற்றுடனும், மறுபுறம் அவரது மகனான
யாக்கோபின் வரலாற்றுடனும் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஈசாக்கின்
வாழ்வுக் காலம் ஆபிரகாமின் (வாழ்வின் கடைசி) எழுபத்தி ஐந்து வருடங்
களுடனும், யாக்கோபின் (வாழ்வின் முதல்) நூற்றிருபது வருடங்
களுடனும் மேற்கவிந்து/ஒரு சேர அமைந்துள்ளது. இவரது வாழ்வின்
முக்கிய நிகழ்ச்சி ஒவ்வொன்றும் அவர்களின் (வாழ்வின் முக்கிய நிகழ்ச்சி
களுக்கு) அதிகம் ஏற்புடையதாக உரித்தாகுகின்றது. இவர் வரலாற்றுப்
பாத்திரம் என்ற வகையில், அவர்களினால் நிழலிடப்படுகின்றார். இவர்

எதிர்ப்பு இல்லாமலும், அமைதியை நேசிக்கும் தன்மையுடனும் தம்மைப்
பலியாக ஒப்புக்கொடுக்கும்படி தமது தந்தைக்கு இணங்குகின்றார், இவரது
தாயார் வாழ்ந்த வேளையில் இவர் அவளது செல்வாக்கின் கீழிருந்தார்
என்பது உறுதியாக உள்ளது, மற்றும் அதன் பிறகு இவர் தமது மனைவியின்
செல்வாக்கிற்கு உட்படுகின்றார், மற்றும் பிலிஸ்தியர்களுடன் (தமது)
கிணறுகளுக்காகப் போராடுவதற்கு மாறாக அவற்றை ஒன்றுக்குப் பின்
ஒன்றாக அவர்களுக்குக் கொடுத்து விட இணங்குகின்றார். நூற்று எண்பது
ஆண்டுகள் கொண்ட அவருடைய நீண்ட வாழ்வானது தென் தேசத்தில்
எபிரோனில் அல்லது அதற்கருகில் முடிந்தது. அவருடைய வாழ்வானது
ஆபிரகாமினுடையதைப் போல கருங்கல் வார்ப்பாகவோ அல்லது
யாக்கோபினுடையதைப் போல கொந்தளிப்பான அனுபவமாகவோ
இருந்ததில்லை. இன்னமும், வாக்குத்தத்தத்தின் மகன் என்ற வகையிலும்,
வாக்குத்தத்தங்களின் உடன்படிக்கையின் வாரிசு என்ற வகையிலும் அவரது
தகுதி நிலையானது (அந்தக்) கால கட்டத்தின் நான்கு முற்பிதாக்களின்
மத்தியில் மதிப்பிற்குரிய இடம் கொண்டுள்ளது. இவர் ஆபிரகாமின்
மேன்மைமிக்க விசுவாசத்தில் நடக்கின்றார், மற்றும் ஆபிரகாமுடனான
உடன்படிக்கையைப் புதுப்பிப்பதற்காக தேவன் இவருக்கு மீண்டும்
மீண்டும் தரிசனமாகின்றார்.

2. இவரது திருமணமும் குடும்பமும்.-





ஆபிரகாமின் சகோதரரான
நாகோர், ஊரிலிருந்து குடும்ப இடம் பெயருதலில் ஐப்பிராத்து மீது ஆரான்
வரை சேர்ந்து வந்தார் அல்லது பின்பற்றித் தொடர்ந்தார். அங்கு (ஆரானில்)
அவர் தங்கி விட்டார். விக்கிரகாராதனைக்காரர்களாகிய கானானியருடன்
குடும்ப இணைப்பு எதையும் ஏற்படுத்தப் பயம் அடைந்த ஆபிரகாம்,
மிகவும் நம்பிக்கைக்குரிய தமது வேலைக்காரனை ஆரானில் இருந்த
நாகோரிடத்தில் அனுப்பினார். அவர் அங்கிருந்து பெத்துவேலின் மகளான
ரெபேக்காளை அழைத்து வந்தார், அவள் ஈசாக்கின் மனைவியாகவும், ஏசா
மற்றும் யாக்கோபு என்ற இரட்டைப் பிள்ளைகளின் தாயாகவும் ஆனாள்.

III. யாக்கோபின் வரலாறு. (ஆதி. 27:1-49:33.)

யாக்கோபின் இரண்டு பெயர்களுக்கும் அவரது பண்பின்
வேறுபாடுள்ள இரு நிலைகளுக்கும் இணையாக அவரது வாழ்வில் இரு
அத்தியாயங்கள் உள்ளன. முதலாவதில் அவர் யாக்கோபு (எத்தன்)
என்றுள்ளார்; இரண்டாவது பிரிவில் அவர் இஸ்ரவேல் (தேவனுடைய
பிரபு) என்றாகின்றார். அவர் தூதனுடன் போராடி வெற்றி கொண்டு
வெற்றியாளராக விளங்கிய பெனியேல் என்ற இடமே (இவ்விரு
பிரிவுகளையும்) பிரிக்கும் கோடாக உள்ளது. வேறு எந்த முற்பிதாவின்
வாழ்வும் இவருடையது போல கிறிஸ்தவ மனமாற்றத்திற்கு இவ்வளவு
இணையான ஏதொரு விஷயத்தையும் காட்சிப்படுத்துவதில்லை.
மற்றவர் (முற்பிதாக்கள் தொடக்கம் முதல் கடைசி வரை விசுவாசத்தின்
வாழ்வை வாழ்ந்தார்கள். ஆனால் பிரபுவான இஸ்ரவேலோ எத்தனாயிருந்த
யாக்கோபிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மனிதராய் இருந்தார்.






1. எத்தனாயிருந்த யாக்கோபு (ஆதி. 27:1-32:32).-

அ. அவரது பெயர்.

அவரது பிறப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து அவர் யாக்கோபு
என்று பெயரிடப்பட்டார்; குதிங்காலைப் பிடிப்பவன், இன்னொருவரைத்
தடுக்கி விழச் செய்பவர், எத்தன் (ஆள் மாறாட்டம் செய்பவர்). யாக்கோபு
இளையவராயிருந்தும் தேர்ந்து கொள்ளப்பட்ட சந்ததியும் உடன்படிக்கை
யும் அவர் மூலமாகவே இருக்க வேண்டியதாயிற்று; ஆகவே, அவருடைய
பிறப்பின் போது அவ்வாறே முன்னுரைக்கப்பட்டது, “மூத்தவன்
இளையவனைச் சேவிப்பான்."

ஆ. கைவசமாய் பெற்றுக் கொண்ட பிறப்புரிமை.-

ஏசா ஒரு
வேட்டைக்காரராய் இருந்தார்; யாக்கோபு ஒரு "அமைதியான மனிதராக
வும் தோட்டக்காரராகவும் இருந்தார். ஏசா வேட்டையிலிருந்து களைத்துப்
போய்த் திரும்பி வருகிறார், அவர் யாக்கோபின் கூழுக்காகத் தனது
பிறப்புரிமையை கொடுத்து விடத் தயாராய் இருக்கின்றார், இவ்விதமாக
ஒரு கண நேர இன்பத்திற்காக திருப்திக்காக உடன்படிக்கையின்
ஆசீர்வாதத்தை வீசியெறிந்து விடுகின்றார். இப்படிப்பட்ட பண்புடைய
ஒருவர் நீடித்திருக்கும் ஒரு இனத்தைத் தோற்றுவிக்கவோ அல்லது மிக
மேன்மையான ஆவிக்குரிய மார்க்கத்தைத் தோற்றுவிக்கவோ மிகச்
சிறிதளவே பொருத்தமானவராயிருக்கின்றார். “அமைதியான” யாக்கோபு
பிறப்புரிமையையும் உடன்படிக்கை வாக்குத்தத்தத்தையும் விலை
கொடுத்துப் பெறுகின்றார், ஆனால் அவற்றை அவர் பெரும்பசியாயிருந்த
தனது சகோதரனிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றார்.

இ. களவு செய்யப்பட்ட ஆசீர்வாதம் என அழைக்கப்பட்டது.

ஆண்டுகள் கடக்கின்றன. முதிர் வயதான ஈசாக்கு, முற்பிதாக்களுக்குரிய
(தனது) ஆசீர்வாதங்களைப் பொழிவதற்குரிய காலம் வருகிறது. தனது)
பையன்களின் பிறப்பின் போது வெளியாக்கப்பட்ட தெய்வீக நோக்கத்
திற்கு/தீர்மானத்திற்கு மாறாக அவர் அதை ஏசாவின்மீது பொழியத்
தீர்மானித்தார். ஆனால் ரெபேக்காள் உறங்குபவளாய் இருக்கவில்லை.
அவள் ஒரு வஞ்சனையை முன் மொழிகிறாள், யாக்கோபு தனது பெயருக்
கேற்ப, அவளது சூழ்ச்சியின்படி செய்யத் தன்னை ஒப்புக் கொடுக்கின்றான்.
சூழ்ச்சி வெற்றியடைகிறது. பார்வை மங்கலான ஈசாக்கும், அங்கிராமற்
போன ஏசாவும் சூழ்ச்சியால் வெல்லப்படுகின்றனர், மற்றும் அந்த
முற்பிதாவின் கரங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஆசீர்வாதங்களைத்
தருவதற்கு யாக்கோபின் தலையின்மீது வைக்கப்படுகின்றன.

ஈ. ஆரானுக்கு தப்பி ஓடுதல்.-

யாக்கோபு தனது தந்தையிடமிருந்தும்,
தனது சகோதரனிடமிருந்தும், தனக்கு பிரியமான தாயாகிய ரெபேக்காளிட
மிருந்தும் பிரிந்து செல்லுதல் என்பதே அவருடைய முதல் செயல்விளவாய்
இருந்தது. அவனுடைய உயிரைப் பறிக்க ஏசா தேடுகிறான். ரெபேக்காளின்
ஆலோசனைப்படி, ஆரானில் (உள்ள) அவளது உறவினர்களின் மத்தியில்
யாக்கோபுக்கு ஒரு மனைவியைத் தேடுவதற்காக ஈசாக்கு யாக்கோபை
அனுப்புகின்றார். இது ஒரு கவலை தரும் ஓட்டமாக உள்ளது; - இதன்
பின்னால் குழந்தைப் பிராயத்தின் நினைவுகள், தனது சொந்த அற்பத்
தன்மையின் நிழல்கள், ஏசாவின் பழி வாங்குதலின் மாயத்தோற்றம்; இதன்
முன்னால் என்ன (உள்ளதென்று) தேவன் ஒருவரே அறிகின்றார். இரவு
வேளை வருகிறது. அவர் உறங்குவதற்காக விண்மீன்களின் கீழே
சாய்கின்றார். பகலின் நினைவுகளிலிருந்து இரவின் கனவுகள் உருவெடுக்
கின்றன. அவர் தேவனை முற்றிலுமாகக் கைவிட்டு விடவில்லை; அல்லது
அவர் தேவனால் கைவிடப்படவும் இல்லை . ஏணியின் தரிசனத்தில் தேவன்
தம்மை ஆபிரகாமின் தேவனாகவும், ஈசாக்கின் தேவனாகவும், உடன்
படிக்கையின் தேவனாகவும் வெளிப்படுத்துகிறார், மற்றும் அற்பமான,
தவறான, தப்பி ஓடுகிற யாக்கோபுக்கும் கூட அதன் அடைதற்கரிய
அளிப்புகளைப் புதுப்பிக்கின்றார். பயபக்தியும் தாழ்மையும் அடைந்த
யாக்கோபு காலையில் எழுந்து, தனக்குத் தலையணையாயிருந்த கல்லை ஒரு
தூணாக நிறுத்தி, அவ்விடத்திற்குத் தேவனுடைய வீடு என்று அர்த்தப்
படுகிற பெத்தேல் என்று பெயரிடுகின்றார், மற்றும் யாக்கோபு போன்ற
அளித்தலுடனும் கூட இருப்பினும், யெகோவா தமது தேவனாயிருப்பார்
என்று பொருத்தனை செய்கின்றார்.

உ. ஆரானில் வாழ்க்கை .-

ஆரானில் யாக்கோபு தனது மாமனின்
வீட்டில் தனது இணையைச் சந்திக்கின்றார், அவரோ, யாக்கோபு
கிணற்றண்டையில் சந்தித்த முதல் சந்திப்பில் நேசித்த ராகேலையும்)
திருமணம் செய்து கொள்வார் என்பதை அறிந்த நிலையில் முதலில் தனது
மூத்த மகளான லேயாளைத் திருமணம் செய்து கொள்ளும்படி அவரை
(யாக்கோபை) அகப்படுத்துகின்றார். வெளிநாட்டில் தங்குவதிலேயே
இருபது ஆண்டுகள் கடந்து செல்கின்றன. கடைசியில், அவர் ஏராளமான
உடைமைகளுடனும் எண்ணிறந்த குடும்பத்துடனும் தமது முகத்தைத் தம்
பழைய இல்லம் நோக்கித் திருப்புகின்றார். அவர் கானானின் கிழக்கு
எல்லைகளுக்கருகில் நெருங்கி வந்த பொழுது, தன்னைச் சந்திப்பதற்காக
நானூறு மனிதர்களுடன் ஏசா அணி வகுத்து வருவதை அறிகின்றார்.
மீண்டும் ஒருமுறை அவரது பாவங்களும், அவரது சகோதரனின் பழி
வாங்குதலும் அவருக்கு முன்பாக எழும்புகின்றது. அவரது ஆத்துமாவானது
தகுதியற்ற தன்மை மற்றும் பலவீனம் ஆகியவற்றினால் மயங்கிச் சுழலு
கின்றது. ஏசாவைச் சமாதானப்படுத்துவதற்காக வெகுமதிக்குமேல்
வெகுமதி (வரிசையாக) அனுப்பப்படுகின்றது. குடும்பம் யாப்போக்கு
நதியை கடந்து சென்றது. யாக்கோபு பெனியேலில் தனித்து விடப்
படுகின்றார். பிறகு அவர் (அங்கு) யெகோவாவின் திகைப்பூட்டும்/விளங்கப்
படாததூதனுடன் இரவு முழுவதும் போராடுகின்றார். கடைசியாக இருள்
மறைகின்றது; பகல் உதிக்கின்றது; சுய சித்தம் கொண்ட யாக்கோபு
இணங்குகின்றார்; பின்பு அவர் விரும்பத்தக்க ஆசீர்வாதத்தை வெற்றி
கொண்ட யாக்கோபு இஸ்ரவேலாக மாற்றம் அடைகின்றார்.

2. இஸ்ரவேல் என்னும் பிரபு.--

இதுமுதல் யாக்கோபு ஒரு புதிய
மனிதனாக இருக்கிறார். சகோதரர்கள் சந்தித்து சமாதானத்துடன்
பிரிகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவர்கள் தங்களின் தந்தை
யினுடைய சவ அடக்கத்தில் இணைகின்றனர். தேவனுடைய அழைப்பின்
பேரில், இஸ்ரவேல் பெத்தேலுக்குத் செல்லுகின்றார். அவருக்கு அன்பான
ராகேல் பெத்லகேமுக்கு அருகே பெஞ்சமீனின் பிறப்பின்போது
மரிக்கின்றாள். அவரது மகன்கள் தங்கள் வன்முறையினால் அவரது
ஆத்துமாவைக் கலங்கச் செய்கின்றனர். அன்பார்ந்த இராகேல் மூலம் பிறந்த
அன்பார்ந்த மகன் யோசேப்பு இருபதாண்டுகளாய் அவரிடமிருந்து இழந்து
போகப்படுகிறார். எகிப்தை ஆண்ட அந்நிய அதிகாரியினால் பெஞ்சமின்
வற்புறுத்திக் கேட்கப்படுகிறார். ஆனால் இந்த இருளின் ஊடாகக் கடந்து
செல்லுகையில் இஸ்ரவேல் யெகோவாவின் கரத்தை விட்டு (பிரிந்து)
செல்லவில்லை. இந்தக் கால கட்டத்தின்போது, அவர் ஒவ்வொரு
இடத்திலும் தனது பலிபீடத்தைக் கட்டியெழுப்பி, ஆபிரகாம், ஈசாக்கு
ஆகியோருடைய உடன்படிக்கையின் தேவனைத் தொழுது கொள்ளு
கின்றார். நாடு விட்டு நாடு செல்லுதல் மற்றும் எதிர்ப்புகள் மற்றும் உடன்
படிக்கையின் மீதான) நம்பிக்கை ஆகியவை அவரது பண்பில் தங்கள்
பணியைச் செய்கின்றன. யாக்கோபு இஸ்ரவேலாகின்றார், மற்றும்
இஸ்ரவேல் பக்குவமாய் முதிர்ந்து, அழகுமிக்க வகையில் (முதிர்)
வயதடைகின்றார். கடைசியில் மேகங்கள் விலகுகின்றன. யோசேப்பும்
பெஞ்சமீனும் அவருக்குத் திருப்பிக் கொடுக்கப்படுகின்றனர். வாழ்வின்
கதிரவன் எகிப்தின் அமைதியில் மறைகிறான், மற்றும் அவரது எலும்புகள்
எபிரோனில் இருந்த அவரது முன்னோர்களின் கல்லறையில் அவரது
தகப்பனின் எலும்புகளுடன் இளைப்பாறுகின்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.