முற்பிதாக்களின் காலம், கி.மு. 1921-1706

முற்பிதாக்களின் காலம்,
கி.மு. 1921-1706

ஆபிரகாம் அழைக்கப்பட்டது முதல் எகிப்துக்கு
இடம் பெயர்ந்தது வரை
ஆதி. 11:27-50:26

அறிமுகம் எபிரெயர்களின் ஊழியம்.-

மீட்பர் பற்றிய மங்கலான
முதலாவது வாக்குத்தத்தத்தை, (மனித) இனத்திற்கான நம்பிக்கையின்
ஒளிக்கதிரை நாம் (ஆதி. 3:15)ல் கண்டுள்ளோம். (ஆனால் இந்த) நம்பிக்கை
யானது, ஜலப்பிரளயத்திற்கு முன்பிருந்ததும் (ஜலபிரளயத்திற்கு)
காரணமுமாயிருந்த மோசம் போக்கும் செயல்களின் மத்தியில் ஏறக்குறைய
மரித்துப்போன நிலையில் இருந்தது. பெரு வெள்ளத்திற்குப் பிறகும் கூட
வானமானது மீண்டும் ஒருமுறை இருள் படர்ந்ததாயிற்று. நைல் மற்றும்
ஐப்பிராத்து பகுதிகளில் இருந்த தொடக்க கால நாகரீகங்கள் மற்றும்
பேரரசின் இருக்கைகள் மிக இழிவான விக்கிரகாராதனைகளின்
மையங்களாயின. ஏதோ ஓரிடத்தில், யாரோ ஒருவரால், மெய்யான ஒரே

தேவனுக்கான ஒரு நிலைப்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும் அல்லது மனித
இனம் நம்பிக்கையற்ற வகையில் இழந்து போகப்படும். இதுவே எபிரெயர்
களின் மிக மேன்மையான ஊழியமாய் இருந்தது. சற்று காலத்திற்கு தேவன்
காம் மற்றும் யாப்பேத்தின் இனங்களினூடாகக் கடந்து செல்கின்றார். அவர்
மாபெரும் செமிட்டிக் (சேமின்) இனத்தையும் கூட அந்த இனத்தின்
கல்தேயக் கிளையில் உதித்த ஒரு தனிக் குடும்பத்தைத் தவிர, அவ்வினத்தின்
ஊடாகவும் கடந்து செல்லுகிறார். தேவனைப் பற்றிய அறிவை உயிருடன்
காத்துக் கொள்வதற்காகவும் மற்றும் இறுதியாக, வாக்குத்தத்தம் பண்ணப்
பட்ட "வித்தின் மூலமாக எல்லா இனங்களையும் தேவனுடைய ஐக்கியத்
திற்குத் திருப்பிக் கொண்டு வருவதற்காகவும் - இப்படிப்பட்டது தெய்வீக
நோக்கமாய் உள்ளது - அவர் இவ்வாறு செய்கிறார். இது முதல், ஆர்வ
நோக்கானது மனிதர்களின் மீதுள்ளதைக் காட்டிலும் நிகழ்ச்சிகளின்மீது
அதிகமாய் மையப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு சிலர் மட்டுமே
தொடப்படுகின்றனர். பரிசுத்த வரலாற்றாளர், நூற்றாண்டுகளின்
இடைவெளியை பெருநடையிட்டுக் கிடக்கின்றார், அவர் நினைவு
கூரத்தக்க நிகழ்ச்சிகளின் சிகரத்திலிருந்து சிகரத்திற்கு இவ்வாறு கடந்து
செல்லுகின்றார். இந்த இடத்திலிருந்து, ஆர்வ நோக்கானது மனிதர்களில்
மையம் கொள்ளுகிறது; வரலாற்றின் பிரதான ஓட்டமானது எபிரெயர்கள்
என்ற தனிப்பட்ட இனத்தளவுக்குக் குறுகிவிடுகிறது, மற்றும் இது .
தொடர்ந்து முழுமையாக வளர்ந்தேறுகிறது. இந்தக் கால கட்டத்தின்
வரலாறானது எபிரெயர்களின் யாத்திரைப் பிதாக்களான ஆபிரகாம்,
ஈசாக்கு, யாக்கோபு மற்றும் யோசேப்பு என்ற மாபெரும் முற்பிதாக்கள்
நால்வரின் வரலாற்றைப் பின்பற்றித் தொடருகின்றது.

I. ஆபிரகாமின் வாழ்வு . (ஆதி. 11:27-25:10.)

“விசுவாசத்தின் தகப்பன்” என்ற வகையில் மற்றும் எபிரெய இனத்தைத்
தோற்றுவித்தவரான ஆபிரகாம், எல்லாக் காலங்களிலும் மாபெரும்
பாத்திரங்களில் ஒருவராய் இருக்கிறார். அவருடைய வாழ்வானது
இயல்பாகவே பின்வரும் இரண்டு பிரதான பிரிவுகளில் அடங்குகிறது:
(1) அலைந்து திரிதல்கள்,
(2) எபிரோனில் குடியமர்ந்த வாழ்வு.

1. அலைந்து திரிதல்கள்.-

அ. தொடக்க கால இருப்பிடம்.-

ஆபிரகாம்,
தொடக்க கால ஆசியாப் பகுதியின் நாகரிகத்தினுடைய இருப்பிடமான
ஐப்பிராத்து நதியின் கீழ் பாகத்தில் இருந்த ஊர் என்ற ஊரைச் சேர்ந்தவ
ராவார். அது தொடக்கத்தில் ஹெமேட்டிக் அல்லது டர்னியன் இனத்தவரு
டையதாயிருந்தது, பின்பு வெற்றி கொள்ளப் படுதலினால் அது செமேட்டிக்
(சேமின் சந்ததியார்) இனத்தவருடையதாயிற்று. அது விக்கிரகாராதனை
செய்யும் ஊராய் இருந்தது என்பது தெளிவு (இ.வ. ஆதி. 11:31; யோசு. 24:2).

ஆ. அழைப்பும் உடன்படிக்கையும் (ஆதி. 12:1-3).--

இங்கு அவர்
(ஆபிரகாம்) தன் வீட்டையும், இனத்தையும், சொந்த நாட்டையும் விட்டு
இனி அறியப்படுத்தப்படப் போகிற நாட்டை நாடிச் செல்லும்படிக்கு
தேவனுடைய அழைப்பைக் கேட்டார். இந்த அழைப்பும் இதன் விளைவும்
மத ரீதியாக/மார்க்க ரீதியாக (ஆதியில் ஏற்பட்ட) வீழ்ச்சி முதற் கொண்டு
(நடந்த) மிக முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. இந்த அழைப்புடன்
தேவன் தம்முடைய உடன்படிக்கையை இணைத்தார். இது நான்கு வாக்குத்
தத்தங்களைத் தழுவிக் கொண்டிருந்தது:

(1) ஒரு பெரிய இனம்; இது
எபிரெய அல்லது யூத மக்களில் நிறைவேறிற்று.

(2) ஒரு மாபெரும் பெயர்.
நிம்ரோத்களும், பார்வோன்களும், இராயர்களும் தாங்கள் வாழ்ந்திருந்த
வேளைகளில் உலகளவில் ஒரு மாபெரும் இடத்தை நிரப்பியிருந்தார்கள்,
ஆனால் அவர்களில் எவர் ஒருவரும் வரலாற்றில் மிகப் பரந்த
அடையாளத்தை விட்டுச் சென்றதில்லை அல்லது (மக்கள்) இனத்தின்மீது
தம்மைப் பற்றியும் தமது கருத்துக்களைப் பற்றியும் அதிகமான மனப்பதிவு
களை விட்டு சென்றதில்லை. யூதர், கிறிஸ்தவர், முகம்மதியர் என்ற மூன்று
மாபெரும் மதங்கள் ஆபிரகாமை (தங்கள்) விசுவாசத்தின் தகப்பனாகப்
பின்னிட்டுக் கண்ணோக்குகின்றன.

(3) ஒரு நாடு; இது எபிரெயர்களால்
கானான் நாடு சுவாதீனம் கொள்ளப்பட்டதில் நிறைவேறியது.

(4) எல்லா
இனங்களின் மீதுமான ஒரு ஆசீர்வாதம்; இது ஈராயிரம் ஆண்டுகளுக்குப்
பின் கிறிஸ்துவுக்குள்ளும் சுவிசேஷத்தின் உலகளாவிய அறிவிப்பிற்குள்ளும்
நிறைவேறியது. எப்பொழுதும் விரிவடைந்து கொண்டிருக்கும் வட்டங்
களில் இது இன்னமும் நிறைவேற்றத்தின் செயல்முறையில் உள்ளது.

இ. இடம் பெயருதல்.-

ஒவ்வொரு தனிச்சிறந்த இனத்தின் வாழ்வும்
அதன் இடம் பெயருதலில் வேரூன்றியிருக்கிறது; ஆனால் மிகச் சில இடம் -
பெயருதல்களே எபிரெயர்களுடையதைப் போன்று மத ரீதியாக/மார்க்க
ரீதியாகத் தனிச்சிறப்புடையதாக அல்லது வரலாற்று வெளிச்சத்தில் மிகத்
தெளிவாகக் கிடப்பதாக உள்ளன. எழுபத்தி ஐந்து வயதில், உறவினர்
மற்றும் நாட்டுடன் உள்ள கடுமையான பிணைப்புக்களை அறுத்து தான்
எங்கு போகிறோம் என்பதையே அறியாமல் புறப்பட்டுச் செல்ல வீரமிக்க
விசுவாசம் அவசியமாயிருந்தது. "விசுவாசத்தினாலே ஆபிரகாம் ...
கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்
போனான்” (எபி. 11:8). இப்படிப்பட்ட ஒரு மனிதர் நீடித்திருக்கும் ஒரு
இனத்தைத் தோற்றுவிக்கப் பொருத்தமானவராகவும்/தகுதியானவராகவும்
- தேவனுடன் ஒருமைப்பாடு என்ற மேன்மை மிகுந்த சத்தியத்திற்கு இடம்
அளிப்பவராகவும் இருந்தார்.
அவர் (ஆபிரகாம்) தனது தந்தையான தேராகு, அனாதையாயிருந்த
லோத்து என்ற தனது சகோதரன் (ஆரானுடைய) மகன், மற்றும் தனது
மனைவியான சாராய் ஆகியோருடன் ஐப்பிராத்தின் மேல் பகுதியில் இருந்த
ஆரானுக்குக் கடந்து சென்றார். அங்கு தேராகு இறந்து போனார், மற்றும்
ஆபிரகாம் இன்னமும் தெய்வீக அழைப்புக்குக் கீழ்ப்படிந்து ஐப்பிராத்து
நதியின் பள்ளத்தாக்குப் பகுதியை விட்டு கானான் நாட்டுக்குக் கடந்து
சென்றார். இப்பொழுது அவர் ஒரு அந்நிய நாட்டில், வேற்றினத்தவர்
மத்தியில் இருக்கின்றார். சீகேம் என்ற இடத்தில் தேவன் அவருக்குத்
தரிசனமாகி உடன்படிக்கையைப் புதுப்பிக்கின்றார்: “உன் சந்ததிக்கு இந்தத்
தேசத்தைக் கொடுப்பேன்” பின்பு இது நாடாக உள்ளது. இடம் பெயருதல்
செய்து முடிக்கப்பட்டுள்ளது.


சில ஆண்டுகளாக ஆபிரகாம் இடம் விட்டு இடம் அலைந்து திரிந்து
கொண்டுள்ளார். அவர்
(1) பெத்தேல்,
(2) தெற்கு,
(3) எகிப்து,
(4) தெற்கு,
(5) பெத்தேல்
ஆகிய பகுதிகளில் பயணப்பட்டார். இங்கு லோத்தும்
ஆபிரகாமும் பிரிகின்றனர்: லோத்து யோர்தான் சமவெளியில் சோதோமை
நோக்கிக் கூடாரம் இடுகின்றார், மற்றும் சோதோமில் குடியமர்வதில்
முடிகின்றார்.
(6) ஆபிரகாம் தெற்கில் எபிரோனுக்கு (நீங்கிச்) செல்லுகின்
றார். இது அதிகமாய்க் குடியமர்ந்த வாழ்க்கையின் மையமாகின்றது.
ஆனால் கடைசி வரையிலும் அவர் கூடாரங்களிலேயே வாழ்ந்திருந்தார்.
ஒவ்வொரு இடத்திலும் அவர் (தமது) பலிபீடத்தைக் கட்டியெழுப்பி
யிருந்தார். கூடாரமும் பலிபீடமும் அவருடைய கானான் வாழ்வின்
பண்பாய் இருக்கின்றன.

2. எபிரோனில் குடியமர்ந்த வாழ்வு.

இந்தக் கால கட்டத்தின்
பிரதான நிகழ்ச்சிகள் பின்வருமாறு:
அ. கல்தேயப் படையெடுப்பு.-

எலாமித்திய வம்சம் ஒன்று
கல்தேயாவை ஆண்டு கொண்டிருந்தது. பேராசைமிக்க இந்த வம்சமானது
தங்கள் நாடு பிடித்தல்(செயல்களை தொலை தூர மேற்கில் யோர்தான்
பள்ளத்தாக்கு வரையிலும் தள்ளியிருந்தது. யோர்தான் (பகுதிகளில் இருந்த)
சிற்றரசர்கள் இந்த நுகத்தைப் பன்னிரெண்டு ஆண்டுகளாய்ச் சுமந்திருந்து,
அதற்குப் பின்னர் கலகம் செய்தனர். கல்தேயாவின் ஆட்சியாளராய் இருந்த
ஏலாமியனான கெதர்லாகோமேர் இந்தப் புரட்சியை நொறுக்கிப் போட்டு,
லோத்து உட்பட சோதோமின் மக்களை (அடிமைகளாய்) பிடித்துச்
சென்றான். ஆபிரகாம் பயிற்சி பெற்ற முன்னூற்றுப் பதினெட்டு வேலை
யாட்களுடன் (அவர்களைத்) தொடர்ந்து துரத்திச் சென்று அடிமைகளை
மீட்டுக் கொண்டு வந்தார். அவர் திரும்பி வருகையில் மெல்கிசேதேக் என்ற
தெளிவாய் அறியப்படாத ஆசாரிய அரசரால் சந்திக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்
பட்டார். இவருக்கு ஆபிரகாம் தசம பாகம் செலுத்தினார்.

ஆ. ஆகாருடன் திருமணம்.

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மகன்
பிறந்திராத நிலையிலேயே வருடங்கள் பல கடந்து சென்றன. ஆபிரகாமும்
சாராளும் வயது முதிர்ந்தவர்களாயினர். சாராளுடைய ஆலோசனைப்படி
ஆபிரகாம் தங்கள் வேலைக்காரியான ஆகாரை இரண்டாவது மனைவி
யாக்கிக் கொண்டார். அவள் இஸ்மவேலுக்குத் தாயானாள் மற்றும்
அரபியர்களின் முன்னோரானாள்.

இ. விருத்த சேதனம் ஏற்படுத்தப்படுதல்.-

ஆபிரகாம் தொன்னூற்
றொன்பது வயதுடையவர் ஆனார். (அவரை விபசாராள் பத்து ஆண்டுகள்
இளையவளாய் இருந்தாள். உடன்படிக்கை வாக்குத்தத்தமானது
இன்னமும் நிறைவேற்றப்படாமலேயே இருந்தது. ஏனெனில் சாராள்
மூலமாகவே வாக்குத்தத்தம் ஏற்படுவதாயிருந்தது, அவள் (இன்னமும்)
பிள்ளையில்லாதவளாய் இருந்தாள். மீண்டும் ஒருமுறை தேவன் தரிசன
மாகி உடன்படிக்கையைப் புதுப்பித்து அதை இரு அடையாளங்களைக்
கொண்டு முத்திரையிட்டார்:

(1) தொடக்கத்தில் ஆபிராம் (உயர்வான
தந்தை), சாராய் (அரசி') என்றிருந்த அவர்களின் தொடக்க பெயர்கள்
ஆபிரகாம் (திரளான இனங்களின் தந்தை), சாராள் (திரளான கூட்டங்களின்
அரசி) என்று மாற்றப்பட்டன;

(2) உடன்படிக்கையின் மக்களுக்கு என்றென்
றைக்குமான சடங்கு முறையாக விருத்தசேதனச் சடங்கு அளிக்கப்பட்டது.

ஈ, சோதோமின் அழிவு.-

யோர்தான் சமவெளியின் நகரங்கள்
மட்டுமீறிய தீயொழுக்கத்தின் ஆழங்களில் மூழ்கியிருந்தன, அவைகளின்
தொடர்ந்து இருத்தலானது சுற்றியுள்ள நாடுகளுக்குக் கெடுதியாக்கின.
தேவன் அவைகளின் அழிவை ஆணையிட்டு, அவற்றின் முடிவை ஆபிர
காமுக்கு வெளிப்படுத்தினார், ஆபிரகாமின் பரிந்துரையானது அந்த நகரங்
களைக் காப்பாற்ற முடியாது போய் விட்டாலும், அது முழுமையாக இழந்து
போகப்படாதிருந்தது. லோத்தின் மனைவி சோதோமை மூழ்கச் செய்த
அக்கினி மற்றும் கந்தகத்தின் பெரும் புயலில் ஏக்கம் கொண்டு
பேராவலுடன் தாமதித்துக் கொண்டிருந்த போதிலும் லோத்து எரியும்
தழலிருந்து பற்றியிழுக்கப்பட்ட கம்பி போல் இருந்தார், லோத்து
சோவாருக்குத் தப்பிச் சென்றார், அவர் தம் சொந்த மகள்களின் மூலம்
மோவாபுக்கும் அம்மோனுக்கும் தந்தையானார், அவர்களின் சந்தியார்கள்
எபிரெயர்களுக்கு நீடித்த (காலமாக) விரோதிகளாய் இருந்தார்கள்.

உ. ஈசாக்கின் பிறப்பும் (அவரைப்) பலியிடுதலும்.

இப்பொழுது
ஆபிரகாம் நூறு வயதுடையவராயிருக்கின்றார், சாராள் தொண்ணூறு
வயதுடையவளாய் இருக்கின்றாள். இருபத்து ஐந்து ஆண்டுகளாக அலைந்து
திரிந்து, காத்துக் கொண்டிருந்ததற்குப் பிறகு, வாக்குத்தத்தத்தின்மீது
நிறைவேற்றத்தின் வெளிச்சம் உதிக்கின்றது. சாராள் ஒரு மகனைப்
பெறுகிறாள், அவருக்கு ஈசாக்கு என்று பெயரிடப்பட்டது. ஆனால்
இன்னும் மிகுந்த வலியுள்ள சோதனை அவர்களுக்குக் காத்துள்ளது.
உறவினர்(கள்) மற்றும் நாட்டின் மீதான ஆபிரகாமின் அன்பை அவரது
விசுவாசம் வெற்றி கொண்டிருந்தது. அது (விசுவாசம்) அவரது சொந்த
வாரிசின் மீதான அன்பை வெற்றி கொள்ளுமா? திகைப்பூட்டும் செய்தி
யானது அவரது காதுகளில் விழுகின்றது, "உன் புத்திரனும், உன் ஏகசுதனும்
உன் நேச குமாரனுமாகிய ஈசாக்கை நீ .. தகன பலியாகப் பலியிடு, """
இப்படிப்பட்ட ஒரு கட்டளையானது நமது ஒழுக்கக் கருத்தறிவை/ஒழுக்க
உணர்வறிவை அதிர்ச்சியடையச் செய்வதாய் இருக்கும். இது கடமைகளின்
போராட்டமாய்க் காணப்படும். (ஆனால்) ஆபிரகாமுக்கு இது அவ்வாறு
இருக்கவில்லை, மனித பலி என்பது பொதுவாக இருந்தது; (அந்த) காலம்
அதினால் (மனித பலிகளினால்) நிறைந்திருந்தது. ஆபிரகாம் அதைக் குறித்து
(அறிந்து) பழக்கப்பட்டிருந்தார் என்பதில் ஐயம் இல்லை, போராட்டம்
அங்கு இருக்கவில்லை, மாறாக அது (போராட்டம்), ஒரு புறம் தேவனு
டைய அழைப்புக்கும், ஈசாக்கின் மீதான அவரது அன்பிற்கும், மறுபுறம்
உடன்படிக்கையின் வாக்குத்தத்தத்தின் மீதான அவரது நம்பிக்கைக்கும்
இடையில் இருந்தது. அவர் தமது ஆத்துமாவை அந்த வாக்குத்தத்தத்துடன்
இரும்புக் கொக்கியைப் போல் இறுகப் பற்றிப் பிடித்திருந்தார். மீண்டும்
ஒருமுறை விசுவாசம் வெற்றி பெற்றது (எபி. 11:17-19). இங்கு நாம்
ஆபிரகாமின் விசுவாசம் மற்றும் அனுபவம் ஆகியவற்றின் உச்சகட்டத்தை
அடைகின்றோம், அவரது மகன் காக்கப்பட்டார்; ஏனெனில் தேவன்
உண்மையில் அவரை (ஈசாக்கை) பலியிடுதலை கேட்கவில்லை. அவர்
(ஈசாக்கு) திருமணம் செய்வதையும், அவரைச் சுற்றிலும் (அவரது மகன்கள்.
வளருவதையும் காண்பதற்கு அந்த முற்பிதா உயிர் வாழ்கின்றார். அவர்
(ஆபிரகாம்) சாராளை, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டில் அவருக்குச்
சொந்தமாயிருந்த ஒரே இடமான எபிரோனின் மக்பேலா குகையில்
அடக்கம் செய்கின்றார். கானானில் ஒரு நூற்றாண்டு காலம் யாத்திரைக்குப்
பிறகு அவரும் கூட அவ்விடத்தில் சாக்கு மற்றும் இஸ்மவேல் ஆகியோரால்
அடக்கம் செய்யப்பட்டார்.
உலகமானது ஒரு சில ஆபிரகாம்களையே கொண்டிருந்ததாக
இருந்துள்ளது. இது நித்தியத்தைப் பணயம் வைத்து உலக அனுகூலங்களைப்
பற்றிக் கொள்ளும் லோத்துகள் பலரைக் கொண்டுள்ளது. லோத்தும் அவரது
சந்ததியாரும் விடியற்காலத்து மூடுபனியைப் போல் கடந்து போயினர்;
ஆபிரகாமும் அவருடைய சந்ததியாருமோ உலகத்தின் என்றென்றைக்கு
மான அடைவிடத்தை உருவாக்கியுள்ளனர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.