இன்றையத் தேவை

இன்றையத் தேவை 






 அன்னாளைப் போன்ற தாய்மார். (1சாமு.1:28)*

ஆக்கில்லா பிரிஸ்கில்லாளைப் போன்ற தம்பதிகள். (ரோம.16:3-5)

ஆசாபைப் போன்றப் பாடகர்கள். (1நாளா.15:19; 16:5)

ஆபிரகாமைப் போன்ற தந்தையர் (ஆதி.18:19; 22:12; யாக்.2:23)

இயேசுவை வீட்டில் ஏற்றுக்கொண்டு உபசரித்த மார்த்தாள், மரியாள் போன்ற சகோதரிகள். (லூக்.10:38,39)


 ஈசாக்கைப் போன்ற நல்ல கீழ்ப்படிதலுள்ள பிள்ளையாண்டான்கள். (ஆதி.22:12)

எலியாவைப் போன்ற ஜெப வீரர்கள். (யாக்.5:17,18)

ஏனோக்கைப் போல் நற்சாட்சியாய் தேவனோடு சஞ்சரிக்கிறவர்கள். (எபி. 11:5)

காயுவைப் போன்ற சத்தியத்தில் நடக்கும் அன்பர்கள். (3 யோவா.1-6)

கொர்நேலியுவைப் போன்ற அரசுப் பணியாளர்கள். (அப்.10)

சாமுவேலைப் போல கர்த்தருக்கும், மனிதருக்கும் பிரியமுண்டாக நடக்கும் பிள்ளைகள். (1சாமு.2:26)

தானியேலைப் போன்ற அர்ப்பண மனமுள்ள உத்தம வாலிபர்கள். (தானி.1:8; 6:22)

தேமேத்திரியுவைப் போன்ற நற்சாட்சி பெற்ற விசுவாசிகள். (3யோவா.12)

தேவனை உத்தமமாய்ப் பின்பற்றின காலேபையும், யோசுவாவையும் போன்ற ஊழியர்கள். (உபா.1:36)

தொற்காளைப் போன்ற நற்கிரியைகளை செய்யும் தையற்காரிகள். (அப்.9:36-41)

நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்த பெண்ணைப் போன்ற சிறுமிகள். (2இரா.5:1-3)

நாத்தான்வேலைப் போன்ற கபடற்றவர்கள். (யோவா.1:47)

 நெகேமியாவையும் ஆனானியையும் போன்ற தைரியமான சகோதரர்கள். (நெகே.7:2)




 நோவாவைப் போல் கர்த்தருடைய கட்டளையின் படியே செய்து முடிக்கிறவர்கள். (ஆதி.6:22)

பர்னபாவைப் போன்ற தேவ ஊழியர்கள். (அப்.4:36,37; 11:22-24)

பவுலைப் போன்ற பிரசங்கிமார்கள். (ரோம.1:16; 15:19; அப்:20:19-21; 1கொரி.2:2-7)

 பெரேயா பட்டணத்தாரைப்போல் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்க்கிறவர்கள். (அப்.17:10,11)

 மொர்தெகாயைப்போல் தன் ஜனங்களுடைய நன்மையை நாடுகிறவர்கள். (எஸ்தர்.10:3)

 மோசேயைப் போன்ற தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவர்கள். (எபி.3:2; எண்.16:15; 1சாமு.12:3)

யோசேப்பைப் போன்ற இளைஞர்கள். (ஆதி.49:22)

யோபைப் போன்ற  பக்தர்கள். (யோபு.13:15; 23:10)

யோவானைப் போல இயேசுவின் மார்பில் சாய்ந்திருக்கிறவர்கள். (யோவா.13:23,25; உன்.8:5)

 ரூத்தைப் போன்ற குணசாலிகள். (ரூத்.3:11; நீதி.31:10)

 ஸ்தேவானைப் போன்ற பரிசுத்த ஆவியின் நிறைவுள்ளவர்கள். (அப்.6:5; 7:55)

நன்றி
Bro. R. J. பாரதி டயானா

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.