வியியியம் திருக்குறள் சைவ சித்தாந்தம் - ஓர் ஒப்புயர்வு திராவிட மூலக்கருத்தில் மும்மூர்த்தி வழிபாடு

வியியியம் திருக்குறள் சைவ சித்தாந்தம் - ஓர் ஒப்புயர்வு





திராவிட மூலக்கருத்தில் மும்மூர்த்தி வழிபாடு

கடவுளை மும்மூர்த்திகளாக அமைத்து வழிபடும் முறை, பக்தி இயக்கக் காலத்தில் முழு உருவம்
பெற்றுச் சைவ வைணவ சமயங்களாக மலர்ந்தது.

"வெறுமையிலிருந்து எதுவும் தோன்றுவதில்லை" என்பதற்கு இணங்க மும்மூர்த்திகளாகக்
கடவுளை அமைத்து வழிபடும் முறை, தமிழகத்தில் பக்தி இயக்கக் காலத்தில் தோன்றுவதற்குத்
தகுந்த பின்னணி இருந்திருத்தல் வேண்டும். இயற்கை நெறிக் காலத்தில் தமிழகத்தில் தோன்றிய
சங்க இலக்கியங்களில் காணப்படும் திராவிட வழிபாட்டு முறைகளில் "நடுகல் அல்லது
தெய்வமுமில்லை"16 என்னும் கோட்பாடு காணப்படுகிறது.

கிறித்துவுக்கு முற்பட்ட பழந்திராவிட நாகரிகத்தில், வளர்ச்சியடைந்த ஓரிறைக் கோட்பாடுடைய
சமயத்தை, நாம் காண இயலவில்லை . தமிழக இலக்கிய வரலாற்றிலும், சமயக் கருத்துகளிலும்
சமய இலக்கியங்களை அறநெறிக் காலத்திற்குப் பின்னரே நாம் காண நேரிடுகின்றது. இயற்கை
நெறிக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களைச் சமய நெறிக் காலத்திற்கு வளர்ச்சியடையச் செய்த
பெருமை அறநெறிக்கால நூல்களுக்கு - சிறப்பாகத் திருக்குறளுக்கு உண்டு.


சமயநெறிக் காலத்திற்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் வளர்ச்சி பெற்றுள்ள தெளிவான
சுடவுள் கோட்பாட்டைத் திருக்குறளில் மட்டுமே நாம் காண இயலுகிறது, திருக்குறள் பாயிரத்தின்
முதல் மூன்று அதிகாரங்களும், கடவுளை மும்மூர்த்திகளாக அமைத்து வழிபடும் பக்தி இயக்கச்
சமயங்கள் தோன்றுவதற்கு அடிப்படை வித்தாக அமைந்துள்ளன.

கடவுளின் அருவ நிலை, அருவுருவ நிலை, உருவ நிலை ஆகிய மூன்று நிலைகளையும்,
திருக்குறளின் பாயிரத்தின் முதல் மூன்று அதிகாரங்களும், வாழ்த்திச் சிறப்பித்துப்
பெருமைப்படுத்துகின்றன. உருவக் கடவுளின் வாழ்த்தாக நீத்தார் பெருமையும், அருவக்
கடவுளின் வாழ்த்தாகக் கடவுள் வாழ்த்தும், அருவக் கடவுளில் இருந்து உருவக் கடவுள்
தோன்றுவதற்குக் காரணமாக விளங்கும் இறைவனின் அருட்சக்தி வாழ்த்தாக வான் சிறப்பும்,
அமைக்கப்பட்டுள்ள இணைப்புத் திருவள்ளுவரின் மூவொரு கடவுள் கோட்பாட்டை
விளக்குவதாக அமைந்துள்ளது.

திருவள்ளுவர், "ஐந்தவித்தான்" என்னும் பெயரால் அருவக் கடவுளாகிய இறைவனையும் (குறள்.
6), உருவக் கடவுளாகிய "நீத்தாரையும்" (குறள். 25) ஒருவராக்கிக் காட்டியிருக்கும் தனிச் சிறப்பு
எண்ணிப் பார்ப்பதற்குரியது.

உயிரினும் ஓம்பப்படும் ஒழுக்கம் (குறள். 131), யார் யார்க்கும் அமைவதற்குக் காரணமாக
விளங்கும் வானாகிய இறைவனின் அருட்சக்தியை (குறள். 20) இறைவனின் அருவ
உருவங்களுக்கு இடையே சிறப்பித்திருக்கும் தன்மை ஆழ்ந்து நோக்கத்தக்கது.

அருவக் கடவுளையும் உருவக் கடவுளையும் இறைவனின் அருட்சக்தியையும் விளக்கிக்
காட்டுவதற்காக எழுந்த உருவக் கதைகளே, பிற்காலத்தில் புராணங்களாக உருவம் பெற்றன.

திருக்குறளுக்குப் பிற்பட்ட காலத்திலேதான் சிவன், விஷ்ணு, சைவம், வைணவம் என்னும்
பெயர்கள் தோற்றம் பெற்றன. இறைவனுக்கு மனைவி, மக்கள் உண்டு என்னும் உருவகக்
கதைகள் எழுந்தன.

இந்து சமயத்தில் உள்ள கடவுளர் பெயர்களையும், அவர்களுக்கு இடையே கூறப்படும்
உறவுகளையும், அவர்களைப்பற்றி எழுதப்பட்டுள்ள புராணங்களையும் நாம் ஆழ்ந்து
நோக்குங்கால், அவை வெறுமையிலிருந்து உருவாகவில்லை என்பதையும், இறைவனைப் பற்றிய
அடிப்படைத் தத்துவத்தை விளக்குவதற்காக நாளாவட்டத்தில் ஏற்பட்ட விளக்கக் குறிப்புகளே
அவை என்பதையும் அறியலாம். அன்பாகிய இறைவனை அப்பனாகவும், அருளாகிய இறைச்
சக்தியை அம்மையாகவும் காண முயன்றது தமிழ் உள்ளம். அன்பும் அருளும் இணைந்து
மக்களுக்கு வெளிப்பட்ட இறைவனின் உருவமே மனித உருவில் தோன்றிய குமரக் கடவுளானார்,

கிறித்தவம் கூறும் தந்தை (Father), மகன் (Son), பரிசுத்த ஆவி (Holy Spirit) என்னும்
கோட்பாட்டிற்கும் "அப்பன்", 'அம்மை", "மகன்" என்னும் கோட்பாட்டிற்கும் அதிக
வேற்றுமையில்லை. தந்தை, மகன் என்னும் குடும்ப உறவுப் பெயர்களில், தந்தையிலிருந்து மகன்
தோன்றுவதற்குக் காரணமாக விளங்கி, தந்தையையும் மகனையும் இணைக்கும் உறவுப் பாலமாக
விளங்குபவள் தாயே, அருவக் கடவுளாகிய தந்தையிலிருந்து உருவக் கடவுளான மகன்
தோன்றுவதற்கு, இடையில் நிற்கும் அருட்சக்தியாகிய தாயாகப் பரிசுத்த ஆவி எண்ணப்படுகிறது
எனலாம்.

விண் என்னும் அடிமூலத்திலிருந்து "விண்டு","விஷ்ணு" உருவானதாகக் கூறப்படுகிறது." "விண்'.
என்பதும் "வான்" என்பதும் வேறுபட்ட பொருளுடையவை அல்ல.

இறைவனின் மூன்று நிலைகளில் அருவ நிலையையும் உருவ நிலையையும் ஆணாகக்
கூறும்போது, அருவுருவ நிலையையும் ஆணாகக் கொள்ளுதலே சிறப்பு என்னும் நிலையில்
அப்பன், அம்மை, மகன் என்னும் குடும்ப உறவுப் பெயர்களுக்குப் பதிலாக சிவன், விஷ்ணு,
பிரம்மா என்னும் மும்மூர்த்திக் கோட்பாடு உருவாயிற்று எனலாம். இம் மும்மூர்த்திக்
கோட்பாட்டிலும் தந்தை, மகன் என்னும் அடிப்படை உறவுநிலை பாதுகாக்கப்பட்டு
வந்துள்ளமையைப் புராணங்கள் வெளிப்படுத்துகின்றன. குமரன் என்றாலும் பிள்ளை என்றாலும்
பொருள் ஒன்றே. "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்" என்பார் திருமூலர். அன்பு
சிவமாகிய அப்பன், அருட்சக்திவழியாக ஈன்றெடுத்த பிள்ளையாகக் குமரன் காணப்படுகின்றார்
என்பதை விளக்குவனவாகச் சிவனுக்குச் சக்தி வழியாகக் குமரன், பிள்ளையார் என இரு மக்கள்
உளர் என்னும் கதை உருவாயிற்று.





சக்தியின் ஆண் வடிவமாகக் கொள்ளப்பட்ட விஷ்ணுவும் தாய்மைப் பண்பிலிருந்து
விடுபடவில்லை . ஐயப்பனின் தாயாக விஷ்ணுவும் தந்தையாகச் சிவனும் கூறப்படுகின்றனர்.
பிரம்மன் விஷ்ணுவின் வயிற்றில் தோன்றியவர் என்பர். விஷ்ணுவும் சக்தியும் உடன்பிறந்தவர்கள்
- சிவனுடைய உடலின் ஒரு பகுதியாக விளங்குபவர்சுள்.

சிவனுக்குச் சக்தி வழியாக இரு பிள்ளைகள், விஷ்ணு வழியாக இரு பிள்ளைகள் என்னும்
உறவுகளும், சக்தியையும் விஷ்ணுவையும் ஒன்றாக்கி ஆண், பெண் என்னும் பால்
வேறுபாடுகளுக்கு அப்பால் உள்ளதாக்கிக் கிறித்தவம் கூறும் தந்தை, மகன் இவர்களுக்கிடையே
சொல்லப்படும் ஆண்-பெண் என்னும் பால் வேறுபாடுகளுக்கு அப்பாலுள்ள "பரிசுத்த ஆவி"
என்னும் தன்மையோடு இயைந்ததாகக் காட்டப்படுகிறது.

இன்றைய இந்து சமயத்தின் முக்கிய கடவுளர்களாகிய சிவன், விஷ்ணு, சக்தி, பிரம்மன், ஐயப்பன்,
குமரன், பிள்ளையார் ஆகியோரைப்பற்றிய புராணங்கள் யாவும் தந்தை, மகன், பரிசுத்த ஆவி
என்னும் கோட்பாட்டை விளக்கிக் காட்டுவதற்கு எழுந்த விளக்கங்களாகவே தோன்றுகின்றன.
இக்கடவுளரின் பெயர்களும் அவர்களைப் பற்றிய தத்துவ விளக்கங்களும், ஆரிய
மூலக்கூறுகளுக்கு மாறுபட்ட திராவிட மூலக்கூறுகளே என்பதும், அத்திராவிட மூலக்கூறுகள்
தோமா வருகையினால் சங்க காலத்திற்குப் பின்னர் எழுந்து பரவியவை என்பதும்
பெறப்படுகின்றன,

வேள்வி நிறைவேற்றக் கோட்பாடு

கிறித்தவத்திற்கு முன்னர் உலகில் தோன்றிய சமயங்கள் அத்தனையையும், இரு பெரும்
பிரிவுகளுக்கு உட்படுத்தலாம்,

மனித சக்திக்கு மேலான தெய்வ சக்தி உண்டு என்று நம்புகின்ற அத்தனை சமயங்களும், இயற்கை
வணக்கமாயினும் ஒரு தெய்வ வணக்கமாயினும் பல தெய்வ வணக்கமாயினும் ஓரிறைக்
கோட்பாட்டுச் சமயமாயினும், ஆடு-மாடு போன்ற உயிர்களைக் கொன்று வேள்வி செய்யும்
வேள்விக் கோட்பாட்டு சமயங்களாகவே இருந்திருக்கின்றன.

கடவுள் கோட்பாட்டை மறுத்து எழுந்த சமணம், பௌத்தம் போன்ற கடவுள் மறுப்புக்
கோட்பாட்டுச் சமயங்கள், வேள்வியை மறுத்து எழுந்த வேள்வி மறுப்புக் கோட்பாட்டுச்
சமயங்களாக விளங்கியுள்ளன. வேள்விக் கோட்பாட்டுச் சமயங்களைக் "கடவுள் கோட்பாட்டுச்
சமயங்கள்", எனவும் வேள்வி மறுப்புக் கோட்பாட்டுச் சமயங்களைக் "கடவுள் மறுப்புக்
கோட்பாட்டுச் சமயங்கள்' எனவும் பிரிக்கலாம்.

கிறித்தவம் தோன்றுவதற்கு முன்னர், கடவுள் கோட்பாடு உடைய எவரும் பலியிடாமல்
இருந்ததில்லை. பலி அல்லது வேள்வியின் சிறப்பை இகழ்ந்தவர் எவருமிலர்.

கிறித்தவம் தோன்றுவதற்கு முன்னர், கடவுள் கோட்பாடு உடைய எவரும் பலியிடாமல் -
இருந்ததில்லை. பலி அல்லது வேள்வியின் சிறப்பை இகழ்ந்தவர் எவருமிலர்.

கிறித்தவம் புதிய ஒரு கோட்பாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. கடவுள் கோட்பாடும்
வேள்வி மறுப்புக் கோட்பாடும் இணைந்த வேள்வி நிறைவேற்றக் கோட்பாட்டுச் சமயமாக அது
அறிமுகமாகியது. கடவுள் இயேசுவாகிய மனிதனாகி, இவ்வுலகில் தோன்றிச் சிலுவையில்
தம்மைப் பலியாக்கினார் என்ற நிலையில், வேள்வியின் சிறப்பை எற்ற வேள்விக்
கோட்பாடாகவும், இயேசு கிறித்துவின் பலிக்குப் பின்னால் ஆடு, மாடு போன்ற உயிர்களைக்
கொன்று செய்யும் பலி தேவையற்றது என்ற நிலையில், வேள்வி மறுப்புக் கோட்பாட்டுச்
சமயமாகவும் உலகிற்கு அறிமுகமாகியது. கிறித்தவம் தோன்றுவதற்கு முன்னர், கடவுளை
வணங்கும் எவரும் வேள்வி செய்யாதிருத்தல் இயலாது என்ற நிலை இருந்தது.

கிறித்தவம் தோன்றியபின், இயேசு கிறித்துவின் சிலுவை மரணத்திற்கு முன்னர் இருந்த
வேள்வியின் சிறப்பை ஏற்றுக் கொண்டு, வேள்வியை ஏற்றுக்கொண்ட வேள்விக் கோட்பாட்டுச்
சமயமாகவும், சிலுவை மரணத்திற்குப் பின்னர் இறைவனுக்கு வேள்வி தேவையில்லை, ஆகவே
இனி வேள்வி செய்வது தவறு என்ற நிலையில் வேள்வி மறுப்புக் கோட்பாட்டுச் சமயமாகவும்
இரண்டும் இணைந்த வேள்வி நிறைவேற்றக் கோட்பாட்டுச் சமயமாக "இயேசுவின் நற்செய்தி"
பரவியது.

இதன் காரணமாகக் கடவுள் கோட்பாட்டிற்கும் வேள்வி மறுப்புக் கோட்பாட்டிற்கும் ஒரு புதிய
இணைப்பு ஏற்படலாயிற்று.

இந்தச் செய்தியின் செல்வாக்கின் காரணமாக மலர்ந்த சமயங்கள், கடவுளை
வணங்குவனவாகவும், உயிர் பலியற்ற வேள்வி மறுப்புக் கோட்பாடு உடையனவாகவும்
உலகிற்கு அறிமுகமாயின.

யூத சமயத்தையும் கிறித்தவ சமயத்தையும் அடிப்படையாகக் கொண்ட இசுலாமிய சமயத்தில், யூத
சமயத்தில் இருந்த வேள்வி செய்யப்படுதல் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் கிறித்தவத்தின்
செல்வாக்கே ஆகும்.

அவ்வாறே வேள்விக் கோட்பாட்டையுடைய வைதிக சமயமும், வேள்வி மறுப்புக்
கோட்பாட்டையுடைய சமண பௌத்த சமயங்களும் பரவியிருந்த திராவிட நாட்டில், ஓரிறைக்
கோட்பாடும் வேள்வி மறுப்புக் கோட்பாடும் இணைந்த "வேள்வி நிறைவேற்றக் கோட்பாட்டுச்
சமயங்கள்" உருவாவதற்கு இயேசுவின் நற்செய்தியே காரணமாக அமைந்தது.





இந்த நோக்கில் நாம் மும்மூர்த்தி வழிபாடாகத் திராவிட மக்கள் இடையே எழுந்த சைவ வைணவ
சமயங்கள் கடவள் கொள்கையுடையன வாகவும், வேள்வியின் சிறப்பை ஏற்றுக்
கொண்டனவாகவும் விளங்கி, நடைமுறையில் வேள்வி மறுப்புக் கோட்பாடு உடையனவாகத்
திகழ்வதற்கு, வேள்வி நிறைவேற்றக் கோட்பாடுடைய இயேசுவின் நற்செய்தியே காரணம்
என்னும் நிலை ஏற்படுகிறது.

இயேசுவுக்கு முன்னர், இந்தியா முழுவதும் செல்வாக்குப் பெற்றிருந்த, கடவுள் மறுப்புக்
கோட்பாட்டையும் வேள்வி மறுப்புக் கோட்பாட்டையுங் கொண்ட சமண பௌத்த சமயங்கள்
வீழ்ச்சியடைந்து, கடவுள் கோட்பாட்டையும் வேள்வி நிறைவேற்றக் கோட்பாட்டையுங் கொண்ட
இன்றைய இந்து சமயக் கடவுளர்கள் வெற்றியடைந்து இருக்கிறார்கள் என்றால், இயேசுவின்
நற்செய்தியே அதற்குக் காரணம் என அமைகின்றது.

வேள்வி நிறைவேற்றக் கோட்பாட்டையுடைய இயேசு கிறித்துவின் நற்செய்தியின் பயனாகத்
திராவிட மக்களிடையே உருவான திராவிட சமயம், இன்று இந்திய சமயங்களோடு
இணைக்கப்பட்டு, இந்து சமயம் என்னும் பெயரால் அறியப்படுகின்றது.

நற்செய்தி நூல்களின் தொகுப்பு

பேதுரு, பவுல் போன்றவர்களால் பாலத்தீனத்தைச் சுற்றியுள்ள நாடுகளில் பரப்பப்பட்ட
இயேசுவின் நற்செய்தி, தோமா இந்தியாவிற்கு வந்த பின்னர் எழுத்துருவம் பெறத் தொடங்கிய
போது, கிரேக்க மொழியில் நூல்கள் உருவாயின. கிரேக்க மொழிச் சொற்களாகிய "கிறித்து",
"கிறித்தவம்" என்ற புதிய பெயர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. கிரேக்க மொழியில் எழுதப்பட்ட
இயேசுவைப் பற்றிய நூல்கள் பின்னர் தொகுக்கப்பட்டுப் புதிய ஏற்பாடாக உருவாயிற்று.

பேதுரு, பவுல் இவர்களால் பரப்பப்பட்ட நற்செய்தி, கிரேக்க மொழியில் எழுதப்பட்டு, கிரேக்கப்
பெயர்களுடன் காணப்படுவதைப் போலவே, தோமாவால் திராவிட மக்களிடையே பரப்பப்பட்ட
நற்செய்தி, தமிழ்மொழியில் எழுத்துருவம் பெற்றுத் தமிழ்மொழிப் பெயர்களுடையனவாக
எழுந்திருத்தல் இயல்பே.

கிரேக்க மொழியில் எழுந்த இயேசுவின் நற்செய்தி நூல்கள், தொகுக்கப்பட்டு
முறைப்படுத்தப்பட்டதைப் போலவே, தமிழ் மொழியில் தமிழ்ச் சூழலில் எழுந்த தமிழ் நற்செய்தி
நூல்களும் தொகுக்கப்பட்டு, முறைப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்,

இந்த நோக்கோடு நாம் பார்க்குங்கால், மும்மூர்த்தி வழிபாட்டிலிருந்து தோன்றிய சைவ வைணவத்
தொகுப்பு நூல்களாகிய பன்னிரு திருமுறையும், நாலாயிரத் திவ்விய பிரபந்தமும் தமிழ் மொழியில்
நம் முன் காட்சியளிக்கின்றன.

பெயர்கள்

கிரேக்க மொழிப் பெயர்களான கிறித்தவம், கிறித்தவர்கள் போன்றவை காரணப் பெயர்களாகும்.
"மேசியா” என்ற எபிரேயக் காரணப் பெயர், கிரேக்க மொழியில் "கிறிஸ்டாஸ்" என மாறுவது
போன்று, தமிழில் தமிழ்ப் பொருளுடைய காரணப் பெயராக அமைதலே இயல்பு,

மொழி வேற்றுமையும் பண்பாட்டு வேற்றுமையும் பெயர் வேற்றுமையை ஏற்படுத்துகின்றன. ஒரே
பொருள் இருவேறு மொழிகளில் இருவேறு பெயர்களைப் பெறுகின்றது. இருவேறு பெயர்களைப்
பெறுகின்ற காரணத்தால், அவற்றை ஒப்பிடும்பொழுது, பெயர் ஒப்புமையை நோக்காமல் பொருள்
ஒப்புமையையே நோக்க வேண்டியதாய் உள்ளது.

கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இயேசுவின் நற்செய்தி, ஐரோப்பியர்களிடையே பரவி,
செல்வாக்குப் பெற்ற பின்னர், அவர்கள் வழியாக உலகம் முழுவதும் பரவும் வாய்ப்பைப்
பெற்றமையால், கிரேக்கப் பெயர்களாகிய "கிறித்து', "கிறித்தவம்" என்பன உலகம் முழுவதும்
பரவின.

இயேசுவின் நற்செய்தி இன்று உலகம் முழுவதும் "கிறிஸ்தவம்" என்னும் பெயரால்
அறியப்படுகின்ற காரணத்தாலும், தோமாவால் திராவிடப் பண்பாட்டில் விதைக்கப்பட்ட திராவிட
சமயமாகிய இயேசுவின் நற்செய்தி, இன்று இந்து சமயத்தில் உள்ளடக்கப்பட்டுவிட்ட
காரணத்தாலும், இந்தியாவிலுள்ள மற்றச் சமயங்களில் இருந்து அதைப் பிரித்து நோக்குவதற்கு
வாய்ப்பாக "இந்துக் கிறித்தவம்' என்னும் பெயரால் இனி அதை நாம் கூறலாம்.

ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் இந்தியாவில் இருந்த இந்துக் கிறித்தவமாகிய இயேசுவின்
தற்செய்தி, பெயராலும் மொழியாலும் பண்பாட்டாலும் முற்றிலும் வேறுபட்டிருந்த காரணத்தாலும்
பவுல், தோமா போன்றவர்கள் நற்செய்தி பரப்பிய முறைகளிலிருந்து மாறுபட்டுப் படை, பணம்,
அதிகாரம் இவற்றின் துணைக்கொண்டு, ஐரோப்பியர் நற்செய்தியை இந்தியாவில் பிற்காலத்தில்
பரப்ப முயன்றமையாலும், இந்துக் கிறித்தவத்திற்கும் ஐரோப்பிய கிறித்தவத்திற்கும் இணைப்பு
ஏற்படாமல் போயிற்று.

ஐரோப்பியர் வருவதற்கு முன்னர் இருந்த இயேசுவின் நற்செய்தியைப் பின்பற்றிய
அடியவர்களில், இந்தியர்களை இந்துக் கிறித்தவர்கள் எனவும், சீரியர்களைச் சீரியக் கிறித்தவர்கள்
எனவும் வழங்கலாம். ஐரோப்பியர் இங்கு வந்து பாவியபொழுது, அவர்களை ஐரோப்பியக்
கிறித்தவர்கள் எனவும், அவர்கள் காட்டிய ஐரோப்பியப் பண்பாட்டின் வழியில் அவர்களோடு
சேர்ந்த மற்ற இந்திய மக்களை, "ஐரோப்பிய வழி இந்தியக் கிறித்தவர்" எனவும் இனி நாம்
அறியலாம்.

(1)இந்துக் கிறித்தவர்கள் (திராவிடக் கிறித்தவர்கள்)

(2) சீரியக் கிறித்தவர்கள்

(3) ஐரோப்பியக் கிறித்தவர்கள்

(4) ஐரோப்பியர் வழி இந்தியக் கிறித்தவர்கள்

ஆகிய நான்கு பிரிவினரை நாம் பிற்கால இந்தியாவில் காணலாம்.

ஐரோப்பியக் கிறித்தவம் - இந்துக் கிறித்தவம் - சீரியக் கிறித்தவம்

கி.பி. 1498 மே 22-இல் வாணிகத்திற்காக இந்தியாவில் வந்து, முதன் முதலில் கால்வைத்த
ஐரோப்பியக் கிறித்தவரான வாஸ்கோடகாமா, கள்ளிக்கோட்டையிலுள்ள இந்தியக் கோயில்
ஒன்றிற்குச் சென்று, தம் கூட்டத்தோடு வழிபாடு செய்து போர்ச்சுகலுக்குத் திரும்பியபொழுது,

அவருடைய அரசரிடம் தாமும் தம்முடைய கூட்டத்தினரும் இந்தியாவிலுள்ள கிறித்தவக்
கோயிலில் வணங்கியதாகக் கூறியுள்ளார்.18

ஆனால், அந்தக் கோயில் அமைப்புப் பற்றியும் அங்குள்ள சிற்பங்கள், ஓவியங்கள் முதலியன
பற்றியும் அங்கு வழிபாடு நடத்தியவர்களின் தோற்றம் பற்றியும் அவர் விளக்கிக் கூறியனயாவும்,
பிற்கால ஐரோப்பிய வழி இந்தியக் கிறித்தவக் கோயில் அமைப்பு முறை, வழிபாடு
யாவற்றினின்றும் வேறுபட்ட இந்தியக் கோயில் அல்லது இந்துக் கோயில் வழிபாட்டு முறையைச்
சார்ந்ததாகும். 19

இந்துக் கோயிலை வாஸ்கோடகாமாவும் அவரது ஆள்களும் கிறித்தவக் கோயிலென நினைத்து,
அங்கு வழிபட்டு இருக்கின்றார்கள். அந்த இந்துக்கள் கிறித்தவத்திற்கு மாறுபட்டவர்களா?
கிறித்தவத்தின் மற்றொரு பிரிவைச் சார்ந்தவர்களா என்பதற்குச் சரியான விளக்கம்
கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 20.

கி.பி. 1498-இல் வாஸ்கோடகாமா வழிபட்ட கோயில், உயர் சாதி இந்துக்களின் கோயில்
என்பதும், உயர் சாதி இந்துக்களின் கோயிலைக் கிறித்தவக் கோயில் என நினைத்து வழிபட்டது .
எவ்வாறு என்பதும் ஆராயப்படுகின்றன.

கோயில் வழிபாட்டையுடைய இந்துக்களை, முதன் முதலில் இந்தியாவில் கால் வைத்த
ஐரோப்பியப் பண்பாட்டை உடைய ஐரோப்பியக் கிறித்தவர்கள், இந்தியக் கிறித்தவர்களாக
ஏற்று. இந்திய முறையில் கட்டப்பட்ட, இந்தியப் பண்பாட்டின் அடிப்படையில் வழிபாடு
நடைபெற்றுவரும், இந்தியாவின் கிறித்தவக் கோயிலாக முழு உள்ளத்தோடு ஏற்று, வழிபட்டு
உள்ளனர்,

இரண்டாம் முறை கி.பி. 1502-இல் வாஸ்கோடகாமா வந்து இறங்கப் போவதை அறிந்த -
இந்தியாவில் வாழ்ந்துவந்த, சீரியப் பண்பாட்டையும் சீரிய நெஸ்தோரியக் கொள்கையையும் சீரிய
வழிபாட்டு மொழியையும் கொண்ட, சீரியா நாட்டிலிருந்து இந்தியாவில் குடியேறி வாழ்ந்து வந்த
சீரியக் கிறித்தவர்கள், போர்ச்சுகீசியருடைய பாதுகாப்பை நாடித் தாங்களே உண்மையான
கிறித்தவர்கள் எனவும், கிறித்தவர்களாகிய போர்ச்சுகீசியரின் மேலாதிக்கத்தைத் தாங்கள்
ஏற்றுக்கொள்ளுவதாகவும், தங்களை நெருக்கிக் கொண்டிருக்கும் இந்துக்களிடமிருந்தும்
இசுலாமியர்களிடமிருந்தும் தங்களைக் காக்க வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டு, தங்கள்
பணிவைக் காட்டத் தங்களை ஆண்ட தங்கள் முன்னாள் அரசளின் செங்கோலைப்
போர்ச்சுகீசியரிடம் ஒப்படைத்தனர்,

அவ்வாறு செங்கோலை ஒப்படைத்ததன் வாயிலாக, இந்தியாவில் உள்ள சுமார் 30,000 சீரியக்
கிறித்தவர்கள் போர்ச்சுகல் மன்னனின் குடிமக்களானதுடன், ஐரோப்பியக் கிறித்தவத்தையும்
ஐரோப்பிய நாகரிகத்தையும் ஏற்க ஆயத்தமாயினர். 21

சீரியக் கிறித்தவர்களுக்கும் போர்ச்சுகீசியக் கிறித்தவர்களுக்கும் கொள்கை, வழிபாட்டு முறை,
கோயில் அமைப்பு முறை, பண்பாடு இவைகளில் வேற்றுமைகள் இருந்தன. தோமாவைப்
பின்பற்றிய இந்திய மக்களாகிய இந்துக் கிறித்தவர்களுக்கும், சீரியா நாட்டிலிருந்து வந்து
குடியேறிய சீரியக் கிறித்தவர்களுக்கும் கொள்கை, வழிபாட்டு முறை. கோயில் அமைப்பு,
பண்பாடு, மொழி இவைகளால் பல வேற்றுமைகள் காணப்பட்டன.

மேலே கண்ட வேறுபாடுகளில் எதையும் அறியாத ஐரோப்பியக் கிறித்தவர்களான
வாஸ்கோடகாமாவும் அவரது கூட்டத்தினரும், கள்ளிக்கோட்டையில் வணங்கிய கோயில்
இந்தியக் கிறித்தவம் அல்லது இந்துக் கிறித்தவம் எனக் கொள்ளலாம்.

சீரிய நாட்டிலிருந்து வாழ்வு தேடி வந்த சீரியக் கிறித்தவர்கள், ஐரோப்பியக் கிறித்தவர்களுடன்
கி.பி. 1502-க்குப் பின்னர், பண்பாட்டில் ஒன்றாக இணைக்கப்பட்டதுடன், கி.பி. 1599-இல்
"உதயம் பேரூர்" சபை மன்றத்திற்குப் பின்னர், சீரியக் கிறித்தவர்களுக்கும் இந்துக்
கிறித்தவர்களுக்கும் இடையே இருந்த, அரைகுறைப் பண்பாட்டுத் தொடர்புகளும் முழுமையாகத்
துண்டிக்கப்பட்டன. கி.பி. 1599ஆம் ஆண்டில் உதயம் பேரூரில் நடைபெற்ற சபை மன்றக்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க, சீரியக் கிறித்தவர்களிடம் இருந்த
வரலாற்று நூல்கள் யாவும் அழிக்கப்பட்டன. இந்திய மக்களுக்கும் சீரியக் கிறித்தவர்களுக்கும்
இடையே நிலவிவந்த பண்பாட்டுத் தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டன, கோயில்களில்
தேங்காய் உடைத்தல் போன்ற இந்தியப் பழக்க வழக்கங்கள் வலிந்து நிறுத்தப்பட்டன. இதனால்,
இந்தியாவில் வாழ்ந்த இந்துக் கிறித்தவர்களுக்கும் சீரியக் கிறித்தவர்களுக்கும் இடையே நிலவிய
தொடர்புகளைக் காட்டும் குறிப்புகள், யாவும் அழிக்கப்பட்டு விட்டன.??

கி.பி. 1510-இல் கோவா, போர்ச்சுகீசியர் வசமானவுடன், போர்ச்சுகீசியர் தங்கள் நாகரிகத்தையும்
பண்பாட்டையுமே இந்தியாவில் பரப்ப முயன்றனர். இதன் பயனாகத் தோமாவால்
உருவாக்கப்பட்ட இந்துக் கிறித்தவத்திற்கும், ஐரோப்பிய நாகரிகத்தைப் பின்பற்றிய
ஐரோப்பியவழி இந்தியக் கிறித்தவத்திற்கும் இடையே, பெரும் பிளவு ஏற்படலாயிற்று. அதற்குப்
பின்னர் வந்த டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியர்களும்
போர்ச்சுகீசியரைப் பின்பற்றிய காரணத்தால், தோமாவின் இந்துக் கிறித்தவத்தை அறியும்
வாய்ப்பைப் பின்வந்தவர்கள் முற்றிலும் இழந்தனர்.

தோமா வழியில் வந்த இந்தியக் கிறித்தவம் மறக்கப்பட்டுப் புனித பவுல், புனித பேதுரு
முதலானோர் பரப்பிய ஐரோப்பியக் கிறித்தவமே கிறித்தவம் என்னும் பெயருக்கு உரியது என
எண்ணும் நிலை இந்தியாவில் ஏற்பட்டு விட்டது.

தோமா புதைக்கப்பட்ட இடமான மயிலாப்பூரை கி.பி. 1324-இல் பார்வையிட்ட "ஓடோரிக்"
என்பவர், "தோமாவைப் புதைத்த இடத்தில் கட்டப்பட்டிருக்கும் கோயில், சிலைகளால்
நிறைந்திருக்கின்றது எனவும், கோயிலுக்கு அருகே பதினைந்து நெஸ்தோரியக் கிறித்தவர்களின்
வீடுகள் இருக்கின்றன' எனவும் குறிப்பிடுகின்றார்.23

கி.பி. 1292-இல் மயிலாப்பூரில் தோமாவின் கல்லறையைப் பார்வையிட்ட வெனிஸ் நகரத்து
பிரயாணியான மார்க்கோபோலோ, தோமா புதைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குத் "திருப்பயணம்"
செல்கிறவர்கள், அங்குள்ள கோயிலிலிருந்து புனிதமான திருமண்ணை எடுத்துச் செல்வது
வழக்கம் என்று கூறுகின்றார். இத்திருமண் நோயாளிகளின் நோயைக் குணமாக்கும் ஆற்றலைப்
பெற்றதென அவர் கூறுகின்றார். 24

சீரியக் கிறித்தவர்களுடைய ஆலயத்தினுள் சிலைகள் வைக்கப்படாமல், சிலுவை மட்டுமே
அமைக்கப்பட்டிருந்தது. ஆலயங்களில் மணிகள் அமைக்கப்படுவதில்லை .25,

சீரியக் கிறித்தவர்களின் கோயிலுக்குள் சிலைகள் அமைக்கப் படுவதில்லை என்பதும், ஓடோரிக்
பார்வையிட்ட தோமாவின் கல்லறைக்கு அருகிலுள்ள கோயிலில் சிலைகள்
அமைக்கப்பட்டிருந்தன என்பதும், மார்க்கோபோலோ பார்வையிட்டபோது மயிலாப்பூரிலுள்ள
கோயிலிலிருந்து மக்கள் திருமண் எடுத்து சென்றதும், வாஸ்கோடகாமா வணங்கிய
கள்ளிக்கோட்டை கோவிலில் சிலைகள் அமைக்கப்பட்டிருந்ததையும், அங்கும்
வாஸ்கோடகாமாவுக்குத் திருமண் கொடுக்கப்பட்டமையும், சீரியக்கோயில் அமைப்பிலிருந்து
மாறுபட்ட கிறித்தவக் கோயில் அமைப்புக்கு ஐரோப்பியரின் கோயிலமைப்போடு காணப்படும்
மிக நெருங்கிய ஒற்றுமைக் கூறுகள் ஆகும்.

மயிலாப்பூர் கோயில், தோமாவைச் சிறப்பிப்பதில் சீரியக் கிறித்தவத்தையும் இந்துக்
கிறித்தவத்தையும், இணைத்திருந்த போதிலும், கோயில் அமைப்பு முறை, வணக்கமுறை,
கோயிலுக்குள் சிலையை வைக்கும் முறை முதலியனவற்றில் சீரியக் கிறித்தவத்திற்கும், இந்தியக்
கிறித்தவத்திற்கும் இடையே வேறுபாடுகள் பல இருந்தன என்பதைக் காட்டுகிறது. இவ்வகையில்
சீரியக் கிறித்தவத்திற்கு மாறுபட்ட - சிலைகளோடு கூடிய மயிலாப்பூர் கோயில் வாஸ்கோடகாமா
வணங்கிய கள்ளிக்கோட்டைக் கோயிலோடு ஒற்றுமையுடன் காணப்படுகின்றது.

இந்த ஒற்றுமை சீரியக் கிறித்தவத்திற்கு மாறுபட்ட ஐரோப்பியக் கிறித்தவத்தோடு
இணைந்துள்ளது. இதனால், இந்தியாவிலிருந்த சீரியக் கிறித்தவத்திற்கும், இந்தியாவில் வழி
வழியாக இருந்து வந்த இந்து கிறித்தவத்திற்கும், இடையே இருந்த அகன்ற இடைவெளியையும்,
ஐரோப்பியக் கிறித்தவத்திற்கும் இந்துக் கிறித்தவத்திற்கும் இடையே இருந்த நெருங்கிய
ஒற்றுமையையும் நாம் அறிய இயல்கின்றது. இந்த ஒற்றுமைக் கூறுகளே ஐரோப்பியக்
கிறித்தவரான வாஸ்கோடகாமாவைக் கள்ளிக்கோட்டையிலுள்ள இந்துக் கிறித்தவக்
கோயிலுக்குள் எவ்விதத் தயக்கமுமின்றி வழிபடுவதற்கு ஏவியுள்ளது.

வாணிகத்திற்காகவும் ஆதிக்கம் செலுத்துவதற்காகவும் வந்த ஐரோப்பியர்களை 30,000 சீரியக்
கிறித்தவர்கள் வரவேற்றுத் தங்களை அவர்களுடைய குடிமக்களாக இணைத்துக்கொண்டு,
அவர்களுடைய மேலாதிக்கம் பரவுவதற்குத் துணைநின்ற காரணத்தால், இந்துக் கிறித்தவத்திற்கும்
ஐரோப்பியக் கிறித்தவத்திற்கும் தொடர்பு ஏற்படாமல் போயிற்று. இந்துக் கிறித்தவமும்
ஐரோப்பியக் கிறித்தவமும் பிளவுண்டன.

கி.பி. 1510-இல் ஐரோப்பியர்களான போர்ச்சுகீசியர், கோவாவை வெற்றிகொண்டதிலிருந்து
போர்ச்சுகீசியரின் செல்வாக்கு ஓங்கியது. இவர்கள் இந்திய நாகரிகம், பண்பாடு இவைகளைப்
புறக்கணித்து, இந்தியரைப் போர்ச்சுகீசிய மயமாக்க முனைந்தபோது, அவர்களைப் பின்பற்றி
இந்திய நாகரிகம், பண்பாடு இவைகளைப் புறக்கணித்த மக்கள் "பரங்கிகள்" என இந்திய
மக்களால் புறக்கணிக்கப்பட்டனர்.

ஆதி இந்தியக் கிறித்தவத்திற்கும் பரங்கி மார்க்கத்திற்கும் இடைவெளி மேலும் விரிவடைந்தது. 28

இந்தப் பெரிய இடைவெளியின் காரணமாக, இந்தியாவில் புனித தோமையரால் இந்தியப்
பண்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்துக் கிறித்தவம், பின்னர் வந்த ஐரோப்பிய
வழி இந்தியக் கிறித்தவத்தைத் தன்னுடன் எவ்விதத்திலும் தொடர்பில்லாத அந்நிய நாட்டுச்
சமயமாகக் கருதி ஒதுக்கியது. அவ்வாறே இந்தியாவில் ஐரோப்பிய மயமாக உருவாக்கப்பட்ட
ஐரோப்பிய வழி இந்தியக் கிறித்தவமும் நாகரிகம், பண்பாடு, நடை, உடை, பாவனை
எல்லாவற்றிலும் ஐரோப்பியரைப் பின்பற்றித் தாங்களே உயர்ந்தவர்கள் என்ற தவறான
எண்ணத்தில், இந்துக் கிறித்தவத்தை இருள் நிறைந்த சமயம் எனவும் நாகரிகம், பண்பாடு
இவைகளில் குறைபாடுள்ளது எனவும் ஒதுக்கியது. இதன் காரணமாக இரண்டுக்கும் எண்ணிப்
பார்க்கவும் இயலாத அளவுக்குப் பிரிவு ஏற்பட்டுவிட்டது. இதனால், இரண்டையும் இணைத்துப்
பார்ப்பவர்களை, மற்றவர்கள் இகழ்ச்சிக் குறிப்போடு நோக்கும் போக்கு வளர்ந்துவிட்டது,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.