ஜலப்பிரளயத்திற்குப் பிந்திய காலம், கி.மு. 2348-1921

ஜலப்பிரளயத்திற்குப்
பிந்திய காலம்,
கி.மு. 2348-1921

ஜலப்பிரளயத்திலிருந்து ஆபிரகாம்
அழைக்கப்பட்டது வரை
ஆதி. 8:10 -11:26






1. இரண்டாம் தொடக்கம் (ஆதி. 8:15-9:29).-

பேழையானது மனித
இனத்தின் இரண்டாம் தொட்டிலாயிற்று. அதிலிருந்து நோவாவும் அவரது
குடும்பத்தாரும் ஒரு பு
திய தேர்வு நிலைக்கு முன் சென்றனர்.

அ. பலி பீடமும் உடன்படிக்கையும்.-

நோவா சுத்தமான
மிருகங்களின் ஒவ்வொரு வகையிலும் எவ்வேழு ஜோடிகளைப் பாதுகாத்து
வைத்திருந்தார். பேழையை விட்டு வெளியேறியதும், சுத்தமான ஒவ்வொரு
மிருகத்திலிருந்தும் பறவையிலிருந்தும் பலி செலுத்துவதற்காகப் பலிபீடம்
ஒன்றைக் கட்டியெழுப்பியதே அவரது முதல் நடவடிக்கையாயிருந்தது.
அவரது ஆராதனையை ஏற்றுக்கொண்ட வகையில், தேவன் நோவாவுடன்
ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தி, அதைத் தம்முடைய வாக்குத்தத்தத்தின்
வண்ணமிக்க வானவில்லினால் முத்திரையிட்டார். அந்த உடன்படிக்கை
யின் முக்கிய கருத்துக்கள் பின்வருமாறு:
(1) இனி வெள்ளப் பெருக்கு
இராது;





(2) மனிதன் பலுகிப் பெருகி பூமியை நிரப்ப வேண்டும்;
(3) விலங்கு
களை உணவாகக் கொள்வது உறுதிப்படுத்தப்பட்டது;
(4) கொலைக்கு
மரண தண்டனை என்பது மனித வாழ்வின் பரிசுத்த தன்மையை
அமுல்படுத்தியது.
ஆ. நோவாவின் மகன்களுடைய அடைவிடம்.-





நோவாவின்
வரலாற்றில் முடிவு நிகழ்ச்சிகள் அவர் மதுபானத்தினால் மயக்கமடைதல்,
காமின் மரியாதையற்ற வெட்கக்கேடான செயல், மற்றும் சேம், யாப்பேத்
ஆகியோரின் அதிக தன்னடக்கமான/நாகரிகமான நடக்கை ஆகியவை
களாய் உள்ளன. இதன் இயல்பான நேர்மாறுள்ள செயல்கள் அவர்களின்
மாறுபட்ட அடைவிடங்கள் பற்றிய நோவாவின் தீர்க்கதரிசனச் சித்தரிப்பு
களின் நிகழ்ச்சியாயின:
(1) கானானுக்கு சாபம் (காமின் சந்ததிக்கு),
(2) சேமுக்கு ஆசீர்வாதம்,
(3) யாப்பேத் பெருக்கமடைதல்.

2. இனங்களின் தொடக்கம் (ஆதி. 10).-

ஆதியாகமம் 10ம் அதிகாரம்
இனங்களின் இயல் மீதான மிகப் பழமையான ஆதாரம்/அதிகாரமுடைமை
யாக உள்ளது. இது நோவாவின் மகன்களுடைய சந்ததியாரையும்
அவர்களின் பரவுதல்களையும் பற்றி (விவரம்) தருகின்றது.

(1) காமுக்கு
நான்கு மகன்கள் பிறந்தனர், இவர்கள் ஐப்பிராத்து நதியின் கீழ்ப்பாகத்
திலும், நைல் நதியின் சமவெளிகளிலும் குடியமர்ந்தனர். ஹேமாட்டிக்/
காமின் இனம் என்பதே மிகத் தொடக்க கால நாகரிகங்களாய் இருந்தன.
(2) சேமின் ஐந்து மகன்கள் தென்மேற்கு ஆசியாவில் குடியமர்ந்தனர்.
அவர்கள் ஐப்பிராத்தில் இருந்த காமின் தொடக்க கால இனத்தவரை
வெற்றி கொண்ட கல்தேயர்களின் முன்னோர்களாய் இருந்தனர்; அசீரியர்
கள், சீரியர்கள், அரபியர்கள் மற்றும் எபிரெயர்கள். இவர்கள் பேரரசுகளின்
அடுத்த மாபெரும் குழுக்களைத் தோற்றுவித்தனர்.

(3) யாப்பேத் ஏழு
மகன்களைப் பெற்றார், இவர்களிலிருந்து மேதியர்கள், கிரேக்கர்கள்,
ரோமர்கள் மற்றும் ஐரோப்பாவின் தற்காலத்திய இனத்தவர்கள் யாவரும்
உதித்தனர். அவர்கள் பரவலாகச் சிதறி, ஆயிரக்கணக்கான ஆண்டுகள்
மறைவான வாழ்க்கை வாழ்ந்தனர், ஆனால் இருபத்து நான்கு நூற்றாண்டு
களாக இவர்கள் உலகை ஆளும் இனங்களாய் இருந்தனர்.

3. பாபேல் கோபுரமும் பாஷைகளின் குழப்பமும் (ஆதி. 11:1-9).

நூற்றாண்டுகள் கடக்கின்றன. மக்கள் தொகையானது ஐப்பிராத்து நதியின்
கீழ்பாகமான சிநெயார் பகுதியில் செறிவுடையதாயிருக்கத் தொடங்கு
கிறது. அவர்கள் தங்களுக்குப் பெரும் பெயர் உண்டாக்குதல் மற்றும் சிதறிச்
செல்வதை முன்கூட்டியே தவிர்த்தல் என்ற இரண்டு நோக்கங்களுடன் ஒரு
மாபெரும் கோபுரத்தை (கட்டத்) தொடங்கினர். நோவாவுடன் தேவன்
செய்து கொண்ட உடன்படிக்கையில் விவரிக்கப்பட்ட அவரது நோக்க
மானது பூமியின்மீது அவர்களும், (அவர்களின்) மக்களும் பரந்து விரிய
வேண்டும் என்பதாயிருந்தது. அவர்களின் பாவம் என்பது அவர்கள்
(கட்டிய) கோபுரத்தில் அல்ல, ஆனால் அவர்களின் இருதயங்களிலேயே
இருந்தது. தேவன் அவர்களின் பேச்சை (மொழியை) குழப்பமடையச்
செய்ததன் மூலம் அவர்களின் நோக்கத்தைத் தோல்வியுறச் செய்தார், அது
அவர்களைச் சிதறடித்தது; அதிலிருந்து பாபேல் என்றால் தாறுமாறு
(மொழிக் குழப்பம்) என்றாயிற்று.
4. சேமின் சந்ததியார் (ஆதி. 11:10-26).--

இவ்வசனங்கள் ஐந்தாம்
அதிகாரத்தின் தொடர் பகுதியையும் வளர்ச்சி நிலையையும்
கொண்டுள்ளன. அது ஆதாம் முதல் நோவா உள்ளடங்கலாக சேத்தின்
வம்சா வழியைக் கொடுக்கிறது. இது சேமில் இருந்து ஆபிரகாம் உள்ளடங்
களாக சேமின் வம்சா வழியைத் தொடர்ந்து தருகின்றது. ஒவ்வொரு வம்சா
வழியும் பத்து பெயர்களை அடக்கியுள்ளன/கொண்டுள்ளன. இந்த
வம்சாவழி/தலைமுறைப் பெயர் அட்டவணைகள் குடும்பப் பதிவேடு
களை விட அதிகமான விவரங்களைக் கொண்டவைகளாய் உள்ளன.
இவைகள் வேதாகம வரலாற்றின் அடிப்படையான நோக்கத்தை நெருக்க
மாய் இணைக்கின்றன. உண்மையான மார்க்கத்தின் எழுச்சி மற்றும்
வளர்ச்சி என்பவற்றைக் கண்டறிதலே அந்த நோக்கமாக உள்ளது. அந்த
மேம்பாடானது விசுவாசத்தின் மனிதர்களாகவும் இருக்கின்ற வாக்குத்
தத்தத்தின் வம்சா வழியைத் தொடருகின்றது. இந்த வம்சா வழியில்
மங்கலாக தெரிகிற நம்பிக்கையின் நட்சத்திரமாகவும் தூரத்தில் தெரிகிற
முடிவாகவும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா விளங்குகின்றார்;
ஏனோக்கு, நோவா, ஆபிரகாம் ஆகியோர் (விசுவாசத்தில்) வீரமிக்க
உருவங்களாய் இருக்கையில், அது இந்த முந்திய நூற்றாண்டுகளில் மங்கிய
அளவிற்கு மேலாக உதிக்கின்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.