தேவன் ஒருவரா மூவரா? போதகர் பி.வி. பவுலி அதிகாரம் 2(2)

தேவன் ஒருவரா மூவரா? போதகர் பி.வி. பவுலி அதிகாரம் 2(2)





ஆனால் இந்த வரைபடம் மூவொருவராகிய தேவனைக் குறிப்பதற்கு
போதுமானதல்ல. இதில் மூன்று கோடுகள் தனித்தனியே பூர்ணமானதல்ல.
இதில் பரிசுத்த வேதாகமம் கூறும் மூன்று ஆள் தத்துவங்களும் தங்களில்
தங்கள் பூர்ணமானதால் வரைபடம் ஒன்றில் மூன்று வட்டங்கள் எப்படி
ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்த்தோம்.
மனுகுலத்தின் மீட்புக்காக, குமாரனையும், பரிசுத்தாவியையும் பூமிக்கு
அனுப்பும்போது மூன்று ஆள் தத்துவமும் தனித்தனியே பிரிந்ததில்லை என்று
நான் முன்பே சொன்னது நினைவிலிருக்கும். அதற்கான விளக்கங்கள்

தொடர்ந்து பார்ப்போம்.





இந்த வரைப்படத்தில் உள்ளதுபோல் மூன்று பேரும்
தனித்தனியாக ஒருகாலமும் பிரிந்ததில்லை .

குமாரனாகிய தேவன் என்று அழைக்கப்படும் மெய்தேவன் பூமியில்
இருக்கும்போது பிதாவும், பரிசுத்தாவியும் அவருக்குள் இருந்திருக்கிறார்.

அதற்கு ஆதாரமாக வேத வசனங்களை பின்னாலேத் தருகிறேன், வரைபடம்
மூன்றில் உள்ளதுபோல ஒருபோதும் மூவொருவராகிய தேவன் தனித்
தனியே மூன்று ஆள் தத்துவங்கள் பிரிந்து செயல்படுவதுபோல செய்ல
பட்டதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் பொதுவாக
இந்நாள் வரைக்கும் கிறிஸ்தவ உலகம் அப்படித்தான் புரிந்துகொண்டு
மக்களுக்கும் கற்றுக்கொடுத்து வருகிறார்கள். ஆதலால் பிதாவும்,
குமாரனும், பரிசுத்தாவியும் மெய்தெய்வம்தான் என்று சொல்லும்போது
மூன்று கடவுள் இருக்கின்றது போன்ற தோற்றம் அளிக்கிறது. ஆனால்
மூன்று தெய்வம் கிடையாது. ஒரே ஒரு தெய்வம் மட்டும்தான் உண்டு.

இயேசு கிறிஸ்து 100% தேவனாகவும் 100% மனிதனாகவும் இருந்தார் ஏன்
அப்படி இருக்கவேண்டும். இயேசு அப்படி இருந்தாரா? எபி.10:5ல் பிதாவாகிய
தேவன் இயேசுவுக்கு ஒரு சரீரத்தை ஆயத்தம் பண்ணினார் என்றும் அந்த
சரீரத்தை பரிசுத்தாவியானவர் கன்னிகையாகயிருந்த மரியாளின் வயிற்றில்
வைத்தார் என்பது லூக் 1:35லும் பார்க்கலாம்.

1 தீமோ.3:16. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார். அவர் தேவனாக
இருக்கும்போதே மனுகுலத்தின் மீட்புக்காக மனிதனாகவும் வெளிப்பட்டார்
எபி.2:14ஆம் வசனம், "ஆதலால் பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும்
உடையவர்களாயிருக்க அவரும் அவர்களைப்போல் மாம்சத்தையும்
இரத்தத்தையும் உடையவரானார். அதே நேரத்தில் இயேசு பிதாவாகிய
தேவனின் தன்மையின் சுரூபம் என்று எபி.1:3ல் பார்க்கலாம். தேவனுடைய
சாயலாயிருக்கிற கிறிஸ்து என்று 2 கொரி.4:4லும் அவர் அதரிசனமான
தேவனுடைய தற்சுரூபம் என்று கொலோ.1:15லும் பார்க்கமுடியும்.

வரைபடம் மூன்றில் பார்ப்பதுபோல அவர் புறப்பட்டு வரவில்லை என்று
சொன்னேன். அப்படியானால் அவர் எப்படி புறப்பட்டு வந்தார் என்பதை
விளக்க வேண்டுமல்லவா. அதற்காக சில வரைபடங்களை கீழே வரைந்து
அதன் மூலமாக இந்த காரியங்களை விளக்குகிறேன். வரைபடம் ஒன்றில்
நாம் பார்த்து நினைவில் இருக்கும். ஆகிலும் அந்த படத்தை மறுபடியும் இங்கு
வரைகிறேன்.





வரைபடம் நாலில் நித்தியத்தில் தேவன் எப்படி இருந்தார் என்பதை
பார்க்கலாம். இப்போதும் எந்த மாற்றமும் இல்லாமல் அவர் அப்படியேதான்
இருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். காரணம் அவர்
மாற்றமில்லாதவர் மல்கி.3:6 மற்றும் யாக்.1:17.

இவர் இப்படி பரலோகத்தில் இருக்கும்போதே பூமியில் அவர் மனிதனாக
வந்து மனுகுலத்தின் பாவங்களுக்கு பரிகாரம் செய்தார். இது எப்படி
சாத்தியமாகும் என்று கேட்கலாம். தேவனாலே எல்லாம் கூடும் (லூக்.2:37;
ஆதி.18:14; எரே.32:27; மத்.19:26).

மனிதராகிய நாம் ஓரிடத்தில் இருந்துகொண்டே வேறொரு இடத்தில்
போய் ஒரு காரியத்தை செய்து வர முடியாது. நாம் வேறொரு
இடத்திற்குப் போக வேண்டுமானால் இரண்டு இடத்திலும் ஒரே நேரத்தில்
நம்மால் இருக்கமுடியாது. ஆனால் தேவனானவர் மனிதனுக்கு இருக்கின்ற
இந்த பலவீனம் உள்ளவர் அல்ல. ஆதலால் அவர் பரலோகத்தில்
இருக்கும்போதே மனுகுலத்திற்காக மனிதனாக பூமியில் வந்து மீட்பை
உண்டாக்கினார்.

வரைபடம் ஐந்தில் பார்க்கும்போது மூன்று ஆள் தத்துவம் இருந்தாலும்
அதில் ஒரு ஆள் தத்துவம் மட்டும் வெளிப்படுவதைக் காட்டுவதற்காக
இரண்டு ஆள் தத்துவங்கள் நிழல் போட்டிருப்பதைக் காணலாம். இது
எதைக்குறிக்கிறது என்று கேட்டால் குமாரன் பூமியில் வரும்போது மூன்று
ஆள் தத்துவமுடைய தேவனாக வந்தாலும் இரண்டு ஆள் தத்துவங்கள்
பிரத்தியட்சமாக வெளிப்படவில்லை. பூமிக்கு வந்தவரே குமாரன் என்று நாம்
முன்பே பார்த்தோம். பூமிக்கு வந்தவரில் முன்னமே வார்த்தையாக
இருந்த ஆள் தத்துவம் வெளியரங்கமாயிற்று என்பதினால் பூமிக்கு
வந்த திரியேக தேவனை குமாரன் என்றழைக்கும் அதே நேரத்தில்
முன்னமே வார்த்தையாக இருந்த ஆள் தத்துவமும் குமாரன் என்று
அழைக்கப்படுகிறார் என்பதையும் அறிந்துகொள்ளவேண்டும்.

இங்கு வரைபடம் ஆறில் மூன்று ஆள் தத்துவம் இருந்தாலும் பரிசுத்தாவி
மட்டும் வெளிப்படுவதை காண்பிக்கும்படியாக இரண்டு ஆள்தத்துவங்கள்
நிழல் போட்ட வண்ணம் மறைக்கப்பட்டுள்ளது. மனிதனை சகல
சத்தியத்திலும் வழிநடத்துவதும் பாவம், நீதி, நியாயத்தீர்ப்பு ஆகியவைகளை
உணர்த்துவதும், மறுபடியும் பிறக்கவைப்பதும் பரிசுத்தாவியானவர்
(யோவா.16:13, 16:8, 3:5,6). திரியேக தேவன் குமாரனாக வெளிப்பட்ட அதே
நேரத்தில் பரிசுத்தாவி என்கிற பேரிலும் வெளிப்பட்டார். ஆதலால் மூன்று
ஆள் தத்துவங்களில் ஒருவரை பரிசுத்தாவி என்றும் அழைக்கப்படுவதை நாம்
அறிந்துகொள்ளவேண்டும்.

இவ்விதமாக பிதா, குமாரன், பரிசுத்தாவி என்கிற பெயர்கள் எப்படி
வந்தது என்பதை நாம் புரிந்துகொண்டோம். மனுகுலத்தின் பாவத்திற்காக
பூமியில் வந்த மெய் தெய்வம் தன்னை தேவன் என்று காட்டிக்கொள்ளாமல்
மனிதனாக வெளிப்படுத்தினார். ஆனால் தன்னுடைய தெய்வீகத்தன்மை
எல்லோரும் புரிந்துகொள்ளும்படியாக அவருடைய செயல்கள் அநேகம்
இருந்தது உண்டு. மனித குலத்திற்காக தன்னைத்தானே பலியாக
ஒப்புக்கொடுக்கும்படி அவர் வந்ததினால் அதிக நேரங்களிலும் ஒரு
சாதாரண மனிதனுக்குரிய, பசியும், தாகமும், சோர்வும், உள்ளவராக
காணப்பட்டார். காரணம் மனிதனுடைய பாடுகளும் துக்கங்களும்,
வேதனைகளும், எல்லா பாவங்களும், அக்கிரமங்களும் அவர் சுமந்து தீர்க்க
வேண்டியதாக இருந்தது.

"மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய
துக்கங்களை சுமந்தார்,...நம்முடைய மீறுதலின் நிமித்தம் அவர் காயப்பட்டு
நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு
சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய
தழும்புகளால் கு ண மா கிறோம். அவர் தம்முடைய ஆத்து மா  ைவ
மரணத்திலூற்றி அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு அநேகருடைய
பாவத்தை தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதின்
நிமித்தம்...” (ஏசா.53:4,5,12).

“நாம் பாவங்களுக்கு செத்து நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு
அவர்தாமே தமது சரீரத்தில் நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமந்தார்"
(1 பேது.2:24).

“நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத
அவரை நமக்காக பாவமாக்கினார்" (2 கொரி.5:21),

“குற்றமில்லாத ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற
இரத்தத்தினாலே மீட்கப்பட்டவர்களென்று அறிந்திருக்கிறீர்களே. அவர்
உலகத் தோற்றத்திற்குமுன்னே குறிக்கப்பட்டவராயிருந்து தமது மூலமாய்
தேவன் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்த கடைசி காலங்களில்
வெளிப்பட்டார் (1 பேது. 1:19,20).

இந்த இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து முதல் உயிர்த்தெழுந்தவராக
பரலோகத்தில் இப்பொழுதும் மனித குலத்திற்காக பரிந்து பேசிக்
கொண்டிருக்கிறார். இப்பொழுது நாம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற
காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். காலம் இல்லாத நித்திய வாழ்வு
இனிவரும் , அப்பொழுது இயேசு மனித சரீரத்தில் வந்ததுபோல் இல்லாமல்
மனிதனுடைய இரட்சிப்பிற்காக வருவதற்கு முன்னமே இருந்தபடியாக
இருப்பார் என்று விசுவாசிப்பதற்கு சில வசனங்களை ஆதாரமாக
இருப்பதைக் காண்பிக்கிறேன் (யோவா.17:5; எபி.1:3,4; 10:12; எபே.1:21;
கொலோ.2:10)-இந்த வசனங்களில் எல்லாம் பிதாவின் வலது பாரிசத்தில்
குமாரன் இருக்கிறார் என்றும் (வெளி.22:1)ல் வாசிக்கும்போது ஒரே
சிம்மாசனத்தில் இருக்கிறார் என்றும் பார்க்கிறோம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.