சங்கீதம் 9 விளக்கவுரை


சங்கீதம் 9 விளக்கவுரை





9:1-20 சுருக்கம்


தலைப்பு: 'தேவனுடைய நியாயத்தீர்ப்புக்காக ஜெபமும் துதியும்.

வா. 1-2 துதி.
வச.3-6 என் துதி?
வச. 7-8 நியாயத்தீர்ப்பு.
வச.9-10 கர்த்த ரே தஞ்சம்,
வச.11-12 துதித்து அறிவியுங்கள்.
வச. 13-14 தனக்காக ஜெபம்,
வச.15-17 துன்மார்க்கரின் முடிவு.
வச, 18 எளியவன்.
வச.19-20 நியாயத்தீர்ப்புக்காக வேண்டுதல்.





வசனங்களுக்கான விளக்கம்


கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன், உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.
சங்கீதம் 9:1

உம்மில் மகிழ்ந்து களிகூருவேன், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
சங்கீதம் 9:2

9:1-2 கர்த்தரை முழு இருதயத்தோடும் துதித்து அவரைப்பற்றி மற்றவர்களிடம் விவரமாகக் கூறிய தாவீதைப்போன்று நாம் துதிக்கிறோமா? அவருடைய அதிசயங்களை மற்றவர்களுக்கு
விவரமாக எடுத்துரைக்கிறோமா? அவர் நமக்குச் செய்து ! அதிசயங்களை நாம் விவரிக்க விவரிக்க அவ்வாறு விவரிப்பதற். கான அதிசயங்களை மேலும் அவர் நமக்குச் செய்வார். !


நீர் என் நியாயத்தையும் என் வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய்ச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறீர்.
சங்கீதம் 9:4

9:4. மற்றவர்கள் நம்மைத் தவறாகப் புரிந்துகொள்ளும்போதும் தவறாகக் குற்றஞ்சாட்டும்போதும், நமது செயல்களும் கருத்துகளும் புறக்கணிக்கப்படும்போதும் கர்த்தரைத் தேடுவோம். அவர் பாவற்றையும் சரி செய்வார்.





9:7-12 இப்பகுதியில் வரும் கர்த்தரின் செயல்கள் ஒவ்வொன்! றையும் தனித்தனியாக எழுதித் தியானித்து நன்றி செலுத்துங்கள் ! இப்பகுதியில் நாம் நம்புவதற்கேற்ற வாக்குறுதிகள் உண்டு, அவற்றை வேதத்தில் அடிக்கோடிடலாம். சிக்கலான நேரங்களில் கர்த்தர் நமக்கு அடைக்கலம் தருகிறவர், நம்மை அவர் கைவிடு வதில்லை என்பவற்றிற்காக ஊக்கமாக நன்றி செலுத்துவோமாக. கர்த்தர் நியாயத்தீர்ப்பு செய்யும் நாள் உண்டு என்பதைக் 'கருத்திற்கொண்டு வாழ்வோமாக.


இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவைகளை நினைக்கிறார், சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார்.
சங்கீதம் 9:12

9:12 கர்த்தருடைய பிள்ளைகளுக்கு எதிராகச் செயல் புரிகிறவர்களுக்கு நியாயத்தீர்ப்பு உண்டு. இரத்தப்பழிகளைக் குறித்து கவனமாக விசாரித்துத் தீர்மானிக்கப்படும்.


மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படிக்கு,
சங்கீதம் 9:13

9:13 கர்த்தரின் ஒரு பெயர்: 'மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தர்' என்பதாகும். இப்பெயரைச் சொல்லித் துதி ! செலுத்தி இந்த வசனத்திலுள்ள இருவித வாசல்களைத் தியானிப்பீராக..


தேவரீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும்.
சங்கீதம் 9:14

9:13-14 தேவன் தனக்கு உதவி செய்யவேண்டும் என்று வேண்டிக்கொள்கிற அநேகர் தனக்கு நன்மை கிடைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கேட்கின்றனர். தாவீதோ கர்த்தரு டைய இரட்சிப்பினால் மகிழ்வதற்கு மட்டுமின்றி அவருடைய துதியை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுகிறதற்காகவும் தனக்கு உதவி கேட்கிறார். கர்த்தர் உமக்குச் செய்கிற நன்மைகளை எடுத்துக்கூறி ஊழியம் செய்கிறீரா? உம் விண்ணப்பங்களின் நோக்கம் என்ன?


ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழந்தார்கள், அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய காலே அகப்பட்டுக் கொண்டது.
சங்கீதம் 9:15

9:15 மக்கள் செய்யும் தீமைகள் இதபின், அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் கேடு விளைவிக்கும். இந்த தேர் உணராமல் இருக்கிறார்கள்,


கர்த்தர் தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார், துன்மார்க்கன் தன் கைகளின் செய்கையிலே சிக்கிக் கொண்டான். (இகாயோன், சேலா.)
சங்கீதம் 9:16

9:16 இகாயோன் என்பது தியானி என்ற பொருள் கொண்டதாகக் கருதப்படுகிறது.


துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
சங்கீதம் 9:17

9:17 கர்த்தர் நல்லவர் என்பது உண்மைதான். ஆனால் நரகம் | என்று ஒன்று உண்டு, அது வெறுைைாபிக்காது இதைக் கூறி பாவத்தில் இருப்பவர்களை எச்சரிப்போமாக


எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை, சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப் போவதில்லை.
சங்கீதம் 9:18

9:18 அரசாங்கங்கள், அதிகாரிகள், செல்வந்தர்கள் போன்றவர்கள் எளியவர்களை மறக்கலாம் தேன் அவர்களைத் தம் ஆனால் எளியவர்களாயிருப்பார்கள் ஏன் பார்க்கவிருந்தாலும் தேவனை மறந்தவர்களாக பார்த்தாலும் இதில் நாகத்திற்குச் செல்லவேண்டும்

9:19-20 இப்பகுதியிலுள்ள விண்ணப்பங்களை ஏறெடுப்பீராக.


ஜாதிகள் தங்களை மனுஷரென்று அறியும்படிக்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், கர்த்தாவே. (சேலா.)
சங்கீதம் 9:20

9:20 கர்த்தருடைய மகத்துவத்தை உணராததால் அவருக்கும் அவருடைய மக்களுக்கும் எதிராக அநேகர் செயல்படுகின்றனர். கர்த்தருக்கு முன்பாகத் தாங்கள் எல்லாவிதத்திலும் மிகவும் குறைந்தவர்கள் என்பதையும் திடீரென மரணமடைய நேரிடலாம் என்பதையும் நினைவிற்கொண்டால் அவ்வாறு செய்ய மாட்டார்கள்,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.