தேவன் ஒருவரா மூவரா?
(இஸ்லாமியர்களுக்கான பதில்)
போதகர் பி.வி. பவுலி
அதிகாரம் 1 (1)
எத்தனை கடவுள் உண்டு?
A. ஓரே ஒரு தேவன் (கடவுள்) தான் உண்டு. ஆதாரங்கள்:
1. இஸ்ரவேலே கேள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (உபா .6:4),
2. நான் முந்தினவரும் நான் பிந்தினவருந்தானே; என்னைத் தவிர தேவன் இல்லையென்று இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய
அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார் (ஏசா.44:6). 3. நானே கர்த்தர் வேறொருவர் இல்லை, என்னைத்தவிர தேவன் இல்லை (ஏசா.45:5).
4. ... தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது; நானே கர்த்தர் வேறொருவர் இல்லை (ஏசா.45:18),
5...நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து நானே பூமியைப் பரப்பினவர் (ஏசா.44:24).
6. கர்த்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை... (உபா.4:35).
7. ஆகையால் உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன் அவரைத் தவிர ஒருவரும் இல்லை (உபா.4:39),
8.:.. நீர் ஒருவரே தேவன் (சங்.86:10).
9. நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்... (உபா.32:39).
10. ...என்னைத்தவிர தேவன் உண்டோ ... (ஏசா.44:8),
11. ... எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை எனக்குப்பின் இருப்பதும் இல்லை (ஏசா.43:10).
12. கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார்; அந்நிய தேவன் அவனோடு இருந்ததில்லை (உபா.32:12)
13. ... ஒரே தேவன் நம்மை சிருஷ்டித்ததில்லையோ?... (மல்.2:10).
14. ... ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்று அறிந்திருக்கி றோம் (1 கொரி.8:4).
15. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு ... (1 கொரி.8:6).
16. தேவன் ஒருவரே... (1 தீமோ .2:5).
17. ... தேவனோ ஒருவர் (கலா.3:20).
18. ... தேவன் ஒருவரே (ரோம.3:30).
19. எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு... (எபே.4:6).
20. ... இஸ்ரவேலே கேள் நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் (மாற்.12:29).
21. ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும் ( யோவா.17:3). இத்தனை வசனங்களும், இன்னும் பல வசனங்களும் ஒரே ஒரு தேவன்தான் உண்டு என்பதை ஆணித்தரமாகச் சொல்லப்பட்டுள்ளது. இப்படியிருக்கையில் இயேசுவையும், பரிசுத்த ஆவியையும், கடவுள் அல்லது தேவன் என்று எப்படிச் சொல்லலாம். இது எல்லாருக்குள்ளும் நியாயமாக எழக்கூடியக் கேள்விதான். இதற்கு வேதாகமத்திலிருந்து கிடைக்கும் பதில் என்ன என்பதையும் பார்ப்போம்.
B. வேதாகமத்தில் யாரையெல்லாம் தேவன் என்று சொல்லப்பட்டுள்ளது
1. வயிறு அவர்களுடைய தேவன் என்று (பிலி.3:19)ல் பார்க்க முடியும். வயிறு தேவனாக இருக்கமுடியுமா? இங்கு உண்மையான சத்தியங்களை மறைத்து வைத்து ஜனங்களை வஞ்சித்து வயிற்றுப் பிழைப்பு நடத்து கிறவர்களுக்கு, அவர்களுடைய தேவன் வயிறு என்று சொல்லப்பட்டுள்ளது. மற்றபடி மெய்யான தேவன் வயிறு என்று சொல்லப்படவில்லை.
2. "...நீ அவனுக்கு தேவனாக இருப்பாய்" (யாத்.4:16). இங்கு ஆரோனக்கு மோசே தேவனாக இருப்பான் என்று பார்க்கிறோம். அடுத்ததாக "பார் உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்"
(யாத்.7:1). இங்கு மோசேயை பார்வோனுக்கு தேவனாக்கினேன் என்று பார்க்கிறோம். இந்த இரண்டு இடங்களிலும் மெய்யான தேவன், மோசேயைக் குறிப்பிட்ட ஒரு வேலைக்காக நியமிக்கிறதும், அந்த வேலையோடுள்ள உறவில் ஆரோனுக்கும், பார்வோனுக்கும் மோசே தேவனாக செயல்படும் அதிகாரம் மோசேக்கு ஆண்டவர் கொடுப்பதும் பார்க்க முடியும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு சிலர் மேல் அந்த அதிகாரம் அவர்கள்மேல் பயன் படுத்தலாம் என்பதேயல்லாமல் மோசே தேவனல்ல என்பதை அந்த வேதப்பகுதி படிக்கும் பகுத்தறிவுள்ள யாரும் புரிந்துகொள்ளக்கூடிய காரியம் தான். ஆதலால் மோசே தேவனல்ல என்பதற்கு வேறு விளக்கம் தேவை யில்லை .
3. அநேக தேவர்கள் உண்டு என்று (1 கொரி.8:5)ல் பார்க்கலாம். இங்கு சொல்லப்பட்டுள்ள காரியம் உலகமெங்கும் பல பெயர்களில் அநேக தெய்வங்களை மனிதர்கள் வணங்கி வந்தாலும், அவைக ளெல்லாம் தேவனல்ல என்பதையும் ஒரே மெய் தேவன் மட்டும்தான் உண்டு என்பதையும் தான் சொல்லப்பட்டுள்ளது. மாறாக அநேக தேவர்கள் உண்டு என்று வேதம் சொல்லவில்லை.
4. மனிதர்களை தேவர்கள் என்று சங்.82:6ல் பார்க்கலாம். இங்கு மோசேயினுடைய காரியத்தில் நாம் பார்த்ததுபோல நீங்கள் தேவர்கள் என்று நான் சொல்லியிருந்தேன் என்று பார்க்க முடியும். அவர்கள் தானாக தேவர்கள் அல்ல. தேவனுக்குரிய சுபாவங்கள் தங்களில் வெளிப்படுத்துவதன் மூலம், தேவனுக்குரிய வல்லமையும், ஆற்றலும் அவர்களுக்கு இல்லா விட்டாலும் அப்படிப்பட்ட ஒரு மேன்மையை தேவனே அவர்களுக்கு அளிக்கிறார். ஆதலால் மனிதர்கள் மெய்யான தேவனுக்கு ஒப்பானவர்களல்ல என்பதையும் நாம் புரிந்துகொள்ளலாம்.
5. இப்பிரபஞ்சத்தின் தேவனானவர் என்று 2 கொரி.4:4ல் பார்க்கலாம் இங்கு தெளிவாக இவரை தேவன் என்று அழைப்பதை பார்க்கமுடிகிறது. ஆனால் மெய்யான தேவன் என்றல்ல. இப்பிரபஞ்சத்தின் தேவன் என்றுதான் உள்ளது. ஆதலால் இது யார் என்பதை முதலாவது நாம் அறிந்துகொள்ள வேண்டும் 1 யோவா.5:19ல் "உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. அப்படியானால் இந்த பொல்லாங்கன் தான் இப்பிரபஞ்சத்தின் அதிபதி என்பதை புரிந்துகொள்ள முடியும். ஆதலால் இந்த பொல்லாங்கன் யார், முழு உலகமும் என்னுடையது என்று சொன்னவன் யார், என்பதை புரிந்துகொண்டால் இதற்கான பதில்
கிடைத்துவிடும். இதற்காக லூக்.4:5ல் பார்ப்போம். பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையில் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து இவைகள் எல்லாவற்றின் மேலுமுள்ள அதிகாரத்தையும், இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன். இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன், நாம் படித்த மூன்று வசனங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இப்பிரபஞ்சத்தின் அதிபதி என்று சொல்லப்பட்டுள்ளது. சாத்தானைத்தான் என்பதை அறிந்துகொள்ளலாம். அப்படியானால் இப்பிரபஞ்சத்திற்கு தேவனாயிருக்கும்படி அவனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டதுதான். அவனுக்கு அந்த அதிகாரம் இல்லை என்பதையும் அறியலாம்.
ஆதி.1:28ல் ஆதி மனிதனாகிய ஆதாமுக்கும் அவன் மனைவியாகிய ஏவாளுக்கும் இப்பிரபஞ்சத்தின்மேல் அதிகாரம் கொடுத்ததை பார்க்கிறோம். ஆனால் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாததினால் முதல் மனிதனுக்குக் கிடைத்த அதிகாரத்தை சாத்தானிடத்தில் பறிகொடுத்து சாத்தானுக்கு அடிமையான சம்பவம் ஆதியாகமத்தில் காணலாம். ஆதலால் சாத்தான் தேவனல்ல என்பதையும், இப்பிரபஞ்சத்தின் தேவனாகும் அதிகாரத்தை தந்திரமாக மனிதனிடமிருந்து தட்டிப்பறித்தான் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
6. பரிசுத்த ஆவி தெய்வம் என்று பார்க்கிறோம் (அப்.5:3,4). இங்கு மூன்றாம் வசனத்தில் பரிசுத்த ஆவிக்கெதிராக பொய் சொன்னேன் என்று வாசிக்கலாம். ஆனால் 4ம் வசனத்தில் பரிசுத்த ஆவிக்கெதிராக செய்த பாவமானது தேவனுக்கு எதிராக செய்த பாவம் என்று சொல்லப்பட்டுள்ள தால் பரிசுத்தாவியும் தேவனும் ஒன்று என்பதையும், வேதாகமத்தில் பரிசுத் தாவியை தேவன் என்று மற்றும் பல இடங்களில் சொல்வதையும் காணமுடியும்.

