தீத்து நிருபம் (வேத பாடங்கள்)
பாடம் 2(3): கண்காணிகளின் தேவை (வ. 10-16)
தேவன் ஒரு பொழுதும் காரணம் எதுவுமின்றி ஒரு தேவையையும்கொடுத்ததில்லை. பெற்றோர்களின் தேவைகளில் பகுத்தறிவுக்குரியகாரணங்களைப் பிள்ளைகள் காண வேண்டியது அவசியமாய் இருப்பதுபோலவே, சகோதரர்கள், தங்களின் பிதாவானவர் தமது பிள்ளைகளிடம்நிபந்தனைகளை ஏற்படுத்துவது ஏன் என்பதைக் காண வேண்டியதுமுக்கியமானதாக உள்ளது. தேவன் கேட்டுக் கொள்கின்றது நியாயமானதாகவே உள்ளது.
நிலையில்லாத உறுப்பினர்கள் தங்களின் சூழ்நிலையினால் ஜெயிக்கப்பட படுவார்கள் (வ. 10-14)
மூன்று வகைகளில் (ஏதாவது) ஒன்றில் பலர் பொருந்துவதாகப் பவுல்அறிவித்தார் - மற்றும் அவர்கள் யாவரும் கலகம் விளைவிப்பவர்களாய்இருக்கின்ற னர் (1:10, 11).
சிலர் "அடங்காதவர்களாய்"!? இருக்கின்றனர். இவர்கள் தங்கள்நடக்கையைக் கடிவாளமிடும் அல்லது கட்டுப்படுத்தும் எந்தக் கொள்கைகளையும் எதிர்க்கின்றனர். இவர்கள் காரணமின்றி கலகம் செய்பவர்களாய்/அடங்காதவர்களாய் உள்ளனர். அவர் செயல்படுவதற்கு மாறாக, மறுசெயல்புரிவார்கள், உறவு படுவதற்கு மாறாக மீறி நடப்பார்கள். அவர்கள்
சத்தியத்திற்குப் பதில் கலகத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர்!
இந்த மக்கள் "வீண் பேச்சுக்காரர்களுடன் "கே இணைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் ஏராளமாகப் பேசுவார்கள், ஆனால் இவர்கள் பயன்மிக்கஏதொன்றையும் கூறுவதில்லை. அவர்கள் கூறுகின்றவை (இருதயத்தை)புண்படுத்தலாம், ஆனால் அது உதவியாய் இராது. இந்தப் பேச்சாளர்கள்எவ்வளவு நேரத்தை வீணாக்கினார்கள் என்பதையும் நல்லதல்லாதகாரணத்திற்கு இவர்கள் எவ்வளவு செவிகளைச் சிறைப்பிடித்தார்கள்என்பதையும் கர்த்தர் மட்டுமே அறிவார்!
அடுத்த குழுவினர் இன்னும் அதிகமான அபாய அளவில் இயங்குகின்றனர், ஏனெனில் இவர்கள் “மனதை மயக்குகிறவர்களாய்" 29,இருக்கின்றனர். இது தேவனுடைய மக்கள் ஆரோக்கியமான உபதேசத்தின்மீது கட்டப்பட்ட விசுவாசத்தினால் வாழ்வதற்கு மாறாக மாம்சஇச்சைகளைத் திருப்திப்படுத்துவதற்காக உணர்வுகளால் செயல்படும்படிஅவர்களை இயக்குவதற்கு வழிநடத்துகின்ற அருட்கொடை முயற்சிகளைகுறிப்பதாகக் காணப்படுகின்றது. இப்படிப்பட்ட அபாயகரமான மனம்மயக்குகிறவர்கள் மந்தையின் மத்தியில் உள்ளனர் என்ற உண்மையானது1:9ல் விவரிக்கப்பட்ட வகையில் தகுதிப்பட்டுள்ள மனிதர்கள் இருக்கவேண்டியதன் அவசியத்தை முக்கியத்துவப்படுத்துகின்றது.
இம்மூன்று குழுவினருமே சேதப்படுத்துகிற மற்றும் அழிக்கின்றவகையில் ஆத்துமாக்களின் மீது செல்வாக்குச் செலுத்துகின்றனர் என்பதுதுன்பகரமானதாக உள்ளது. பவுல் விவரித்த கலகம் விளைவிப்பவர்கள்,"முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப் போடுகிறவர்களாய்” (1:11)இருந்தனர்; அதாவது, அவர்கள் முழுக்குடும்பங்களின் விசுவாசத்தைஅழித்துக் கொண்டிருந்தனர். ஏதாவதொரு ஆத்துமா சபையை விட்டுச்செல்லுகிற பொழுது, அது ஆழ்ந்த வருத்தத்திற்குக் காரணமாக உள்ளது;ஆனால் முழுக்குடும்பங்களுமே புறம்பாக வழிநடத்திச் செல்லப்படும்பொழுது, மீட்புக்கான நம்பிக்கை மிகக் குறைந்த அளவே உள்ளது.இவ்வகையான செயல்பாடுகள் சபையில் நடப்பதையும், அது மூப்பர்கள்அல்லது சகோதரர்களால் கண்டு கொள்ளாது விடப்படுவதையும் தேவன்தடை செய்கின்றார்! “தாங்கள் போதிக்கக் கூடாத விஷயங்களை அவர்கள்போதிப்பதால், ” அவர்கள் 1:9ன் ஆரோக்கியமான உபதேசத்தை எதிர்த்துநின்றனர். ஆதாயத்திற்கான ஒரு கூற்றானது பவுலின் பலத்த கண்டனத்தைப்பெறத் தகுதி பெற்றிருந்தது: அவர்கள் “இழிவான ஆதாயத்திற்காக” கள்ளபோதனைகளை மேம்படுத்திக் கொண்டிருந்தனர்.
பிறகு பவுல், கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கிரேத்தாவில் வாழ்ந்தமதிக்கத்தக்க ஒரு கவிஞரான எப்பிமெனிடெஸ் என்பவரைத்தேர்ந்தெடுத்து, கிரேத்தர்கள் "பொய்யர், துஷ்ட விலங்குகள், பெருவயிற்றுச் சோம்பேறிகள்” (1:12) என்ற வகையில் கெட்ட பெயர்பெற்றவர்கள் என்ற அவரது சாட்சியத்தைத் தேர்ந்தெடுத்தார். “அவர்களில்ஒருவராகிய” தீர்க்கதரிசி என்பவர் அவர்களை விமர்சனம் செய்வதைக்காட்டிலும் புகழ்ந்துரைப்பதே அதிகம் சாத்தியம் உள்ளதாய் இருந்திருக்கும்,ஆனால் அவர்களை அவர் கண்டனம் செய்திருந்தார்.
"அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்து கொள்” (1:13) என்று பவுல்கட்டளையிட்டார். இந்தப் பணி ஒப்படைப்பை நிறைவேற்ற வசனத்தைப்பற்றிய அறிவும் மாபெரும் தைரியமும் தேவைப்படுகின்றது. ஆனால் இதுஒரு கட்டளையாக/மிக முக்கியமானதாக உள்ளது என்பதை நினைவில்வையுங்கள், மக்களின் ஆத்துமாக்களும் முழு இல்லத்தவர்களும் ஆபத்துக்குள்ளான நிலையில் இருக்கின்றனர். இதே ஆத்துமாக்கள் "விசுவாசத்தில்ஆரோக்கியமுள்ளவர்களாகும்படி" மாற்றம் அடையலாம்.
கடிந்து கொள்ளுதலுக்கான தெய்வீக கட்டளையானது, (1) பயத்தில்தூரமாய் நிற்பதால், (2) இது எவ்வளவு மோசமானதாக உள்ளது என்றுபேசுவதினால், (3) தவறு செய்பவர்களிடத்தில் பேசுவதற்கு மாறாகஅவர்களைப் பற்றிப் பேசுவதினால், அல்லது (4) அவர்களிடம் பேசி,ஆனால் அவர்களைப் போலவே அடங்காதவர்களாவதினால் நிறைவடையச் செய்யப்பட முடியாது. பக்குவமற்ற சகோதரர்கள் இவ்வழிகளில் ஒன்றுஅல்லது அதிகமானவற்றில் பதில் செயல் செய்யலாம். இந்தப் பணிஒப்படைப்பைக் கையாள்வதற்கு ஆவிக்குரிய வகையில் நீங்கள் தேவையானவற்றை பெற்றிருக்கிறீர்களா?
விவாதம் மற்றும் குழப்பத்தின் உச்சத்தில், "யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவி கொடாமல்” (1:13) அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதேபவுலின் நடைமுறை வேண்டுகோளாய் உள்ளது. உணர்வெழுச்சியானவேளைகள் மற்றும் (அதிகமான பேச்சுக்களை எப்போதும் கொண்டுள்ள)திருத்தும் சூழ்நிலைகள் ஆகியவற்றில், உண்மைகளுடன் கற்பனைக்கதைகள் கலந்து விடுதலைக் கொண்டிருத்தலும், தெய்வீக ஆணைகளைஇடமாற்ற மனித தேர்ந்து கொள்ளுதல்களை/சிறப்புரிமைகளை அனுமதிப்பதும் சுலபமானதாக உள்ளது. ஆரோக்கியமான உபதேசத்தில்புத்திகூறுதல் மற்றும் இழிவான ஆதாயத்திற்காக (கள்ள போதனை)உரைப்பவர்களைக் குற்றம் உணர்த்தும் ஆகிய இரண்டையும் செய்யக்கூடிய பக்குவம் வாய்ந்த மனிதர்களை நாம் கொண்டிருக்க வேண்டும்.
உறுப்பினர்கள் தங்கள் சூழ்நிலைக்கு மேலாக எழும்பிநிற்க முடியும் (வ. 15, 16)
நமக்குள்ளாக நாம் நினைக்கின்ற வகையிலேயே நாம் இருக்கின்றோம்(நீதி. 23:7). நாம் என்னவாக இருக்கிறோம், நாம் யாராக இருக்கிறோம்என்பது உள்ளானதாக - வெளியானதாக அல்ல - உள்ளது. இது நமதுசெயல்களையும் பதில்களையும் தீர்மானிக்கும். மாசுபடிந்த கிரேத்தாவில்அப்பொழுதும் கூட, “சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்”(1:15) என்று பவுல் எழுத முடிந்தது. சுத்தமான நபர் தடை செய்யப்பட்டவற்றுக்கு முன்பாகத் தம்மைத் தாமே கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்,கண்டனம் பண்ண விரைவுபடும் நியாயத்தீர்க்கும் ஆவியைத் தவிர்க்கமுடியும், பொல்லாங்கு நிறைந்த சூழலினூடாக மாசற்ற பண்புடன் கடந்துசெல்ல முடியும்.
சுத்தமான தன்மை என்பது “அசுத்தமான நிலையில் இருப்பதை விட(அதிகம்) விரும்பத்தக்கதாக உள்ளது. பிரச்சனையானது இயல்பில்இரட்டையாக உள்ளது. அசுத்தமானவர்கள் சிந்தையிலும் (இனியும்சரியாகச் சிந்திப்பதில்லை), உணர்விலும் (இனியும் அக்கறை கொள்வதில்லை) பாதிக்கப்பட்டுள்ளனர். 1தீமோத்தேயு 4:1-3 வசனப்பகுதியானதுவஞ்சிக்கிற ஆவிகளுக்குச் செவி கொடுத்து, மனச்சாட்சியில் சூடுண்டவர்களைப் பற்றிப் பேசுகிறது.
இது மனித குலத்தின் இயல்பான ஓட்டமாக அல்லது நடக்கையாகஇருப்பதில்லை. "சாயம்” என்பதற்கு ஒப்பான ஒரு சொற்றொடரைப் பவுல்பயன்படுத்தியதென்பது, இயல்பான அல்லது சாதாரணமான ஒன்றுஇயல்புக்கு மாறானதாக மற்றும் அசாதாரணமானதாக மாற்றப்பட்டுள்ளதை விவரிக்கின்றது. அதைக் காட்டிலும் மேன்மையானவர்களாகவே நம்மை தேவன் வடிவமைத்தார். இதை எபிரெயர் 5:11 உடன்இணைவாக்குங்கள், அங்கு அதை எழுதியவர், சிலர் “கேள்வியில் மந்தமுள்ளவர்களாய்” ஆனதாகக் குற்றம் சாட்டினார். மனிதன் அவ்வாறேபிறக்கவில்லை. தேவன் மனிதனைச் செம்மையானவனாகவே படைத்தார்.துரதிர்ஷ்ட வசமாக, "மனிதன் அநேக உபாய் தந்திரங்களைத் தேடிக்கொண்டான்” (பிர. 7:29). மனிதனிடத்தில் தேவனால் வடிவமைக்கப்பட்டமேன்மையை மீண்டும் கட்டி எழுப்ப உதவுதல் என்பதே தீத்துவுக்குக்கொடுக்கப்பட்ட ஊழியமாகவும் சுவிசேஷ ஊழியர் ஒவ்வொருவரின்முன்பாகவும் அமைத்து வைக்கப்பட்ட ஊழியமாகவும் உள்ளது!
தூய்மையானவர்கள் சுத்தமான ஒரு ஒட்டத்தை நாடுவார்கள்என்றிருக்கையில், அசுத்தமானவர்கள் தேவனுக்குப் பற்றுறுதியை உரிமைகோருவார்கள், பிறகு இறுக்கம் அல்லது அழுத்தத்தின் கீழ் அவரை“மறுதலிப்பார்கள்"35 (1:16). அவர்கள் தேவபக்தியை நடைமுறைப்படுத்துவதாக வாக்களிப்பார்கள், ஆனால் அதை “அறிக்கையிடுதலை"மட்டுமே செய்வார்கள். எத்தனை பேர், “அது சரியானது என்று நான்அறிகிறேன்” என்று கூறி, பின் உடனடியாக வேறு விதமாய்ச் செய்கின்றார்கள்? அவர்கள் மத்தேயு 7:15-23; 23:2, 3ல் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டும்.
தீத்துவுக்குப் பவுல் எழுதிய நிருபத்தில் தங்க நூலாக இழையோடியிருக்கும் நற்செயல்களுக்கு நேரெதிரான அருவருக்கப்படத்தக்கதன்மையும் கீழ்ப்படியாமையும் கொண்ட மக்கள் “வெறுத்து ஒதுக்கப்படத்தக்கவர்களாய்”37 இருக்கின்றனர். தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்ட ஆத்துமாக்கள் தகுதியற்றவைகளாகும்பொழுது அது எவ்வளவுதுன்பகரமானதாக இருக்கிறது!
குறிப்புகள்:
'அப்போஸ்தலர் (Gk.: apostolos) - ஒரு "செய்தியாளர், கட்டளைகளுடன்அனுப்ப ப்ப டும் ஒருவர்" (C. G. Wilke and Willibald Grimm, A Greek English Leutica of the New Testament, trans, and rev. Joseph H, Thayer [Edinburgh, Scotland: T. & T, Clark,1901; reprint ed., Grand Rapids, Mich.: Baker Book House, 1977], 68), 'தேவ பக்தி(Gk.: eusebeia) - "பயபக்தி, மரியாதை, வேதாகமத்தில் ஒவ்வொரு இடத்திலும்தேவனை நோக்கிய பக்தியுள்ளது, தேவபக்தியுள்ளது, அப். 3:12; 1 தீமோ. 2:2; 4:7,8; 6:5... 2 தீமோ . 3:5" (Thayer, 259); "இருதயத்தின் உடனடி (யாய்ப் பொங்கிவரும்)உணர்வைக் குறிப்பிடுதல் ... மதம், சுவிசேஷத் திட்ட ம்" (Edward Robinson, A Greek& English Leuticon of the New Testament (New York: Harper & Brothers, 183], 307).'நம்பிக்கை (Gk.: elpi.s) - "நித்திய மீட்பின் மகிழ்வும் நம்பிக்கையும் நிறைந்தஎதிர்பார்ப்பு, அப். 23:6 ... நம்பிக்கையின் உறுதிப்பாடும் பலமும், எபிரெயர் 6:11"(Thayer, 205-6). 'தெளிவாக்கப்படுதல் (Gk.: phicaReno) - "மறைக்கப்பட்ட அல்லதுஅறியப்படாதிருந்ததை காணும்படி அல்லது அறியும்படி செய்தல் ... இப்பொழுதுஉண்மை யாக, காணப்படும்படி, உணர்ந்தறியும்படி செய்தல் ... தெளிவாய்உணர்ந்தறியும் படி, முழுமையாய்ப் புரிந்து கொள்ளும்படி, இருத்தல்" (Thayer, 648)."கட்ட ளை (Gk.: epitage) - "உத்தரவு, ஆணை ... 1 தீமோ . 1:1; தீத்து 1:3 ...அதிகாரத்தின் சாத்தியமான ஒவ்வொரு வடிவத்துடனும், தீத்து 2:15" (Thayer, 244),*உத்தம குமாரன் (Gk.: ஓnesias) - "சட்டப் பூர்வமாய்ப் பிறந்த, போலியல்லாத,உண்மையான, உண்மையுள்ள பிலி. 4:3; 1 தீமோ . 1:2; தீத்து 1:4* (Thayer, 119)."கிருபை (Gk charis) - "மகிழ்வு, சந்தோஷம், களிப்பு, இனிமை, வசீகரம், அன்புத்தன்மை ஆகியவற்றை அளிக்கின்ற விஷயம் ... நல்ல சிந்தை, அன்பு செய்யும்இரக்கம், தயவு ... தகுதியற்ற ஒருவர் மீது பொழியப்படும் இரக்கம் ... ஆத்துமாக்களின் மீது தேவன் தமது பரிசுத்த செல்வாக்கைச் செயல்படுத்தி, அவர்களைத்தேவனிடம் திருப்பி, கிறிஸ்தவ விசுவாசத்தில் அறிவில் மற்றும் பாசத்தில்அவர்களைக் காத்து, பெலப்படுத்தி, வளரச் செய்கிற மற்றும் கிறிஸ்தவ ஒழுக்கநெறிகளை செயல்படுத்தும்படி அவர்களைத் தூண்டுகிற அவரது இரக்கம் நிறைந்ததயவுத் தன்மை " (Thayer, 665-66). 'சமாதானம் (Gk cirene) - "சலனமற்ற ஒரு நிலை
... தனி நபர்களுக்கிடையில் சமாதானம், அதாவது இணக்கம், இசைவு ... நல்ஒழுங்கு... பாதுகாப்பு ... வளமை ... கிறிஸ்துவின் மூலமாக மீட்பு உறுதிப்படுத்தப்பட்ட,அதனால் தேவனிடமிருந்து வரும் ஏதொன்றிற்கும் பயப்படாத நிலையிலும்,பூமிக்குரிய தனது பங்கு என்ன வகைப்பட்டதாயிருப்பினும் அதில் திருப்தியடைகிறநிலையிலும் இருக்கும் ஒரு ஆத்துமாவின் சலனமற்ற நிலை”(Thayer, 182), 'பொதுவில்நமது பயிற்சித் திட்டங்கள் (கிறிஸ்தவக் கல்லூரிகள், பிரசங்கித்தலுக்கான பள்ளிகள்,வேதாகம் இருக்கைகள், முதலியன) கிறிஸ்துவின் சரீரத்தில் மூப்பர்களாய்இருப்பதற்கு பக்குவம் வாய்ந்த மனிதர்களுக்கு வரையறைக்குட்பட்ட பாடத்திட்டத்தைக் கொண்டுள்ளன அல்லது அவ்வகைப் பாடத் திட்டங்களே இல்லை.நாம், பிரசங்கியார்களாய், இளைஞர்களுக்கு இயக்குநர்களாய், தனிப்பட்டஊழியத்தின் இயக்குநர்களாய், பாடல் (இசை) போதகர்களாய் மற்றும்ஊழியர்களாய் இருக்கும்படி மனிதர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம், ஆனால்மூப்பர்களுக்கான பயிற்சியை நாம் வாரக் கடைசிக் கருத்தரங்குகளுடன் குறைத்துக்கொள்ள விழைந்துள்ளோம்! இந்த மனிதர்களுக்குக் கீழ்ப்படியும் படியாகவேகர்த்தர் நமக்குக் கட்டளையிட்டுள்ளார், மற்றும் இவர்களே நம்முடைய ஆத்துமாக்களுக்குக் கணக்கொப்புவிப்பார்கள் (எபி. 13:17). கிறிஸ்துவின் உடன்படிக்கையானது பாடத் திட்டத்தை அளிக்கின்றது (1 பேது. 1:1-5; 1 தெச 5:12-22; அப்,20:17-38) ஆனால், நாம் அதை பெரும்பாலும் ஊக்கமாய் படித்ததோ அல்லது தக்கவகையில் போதித்ததோ இல்லை. மூப்பர்களற்ற சபைக்குழுமங்கள் இருந்துள்ளநிலை அல்லது ஒருக்காலும் தக்க வகையில் பயிற்சி பெறாத அல்லது தாங்கள்கொண்டிருக்கும்படி கதறுகிற தெளிவான பணி ஒப்படைப்புகளுக்கு ஆவிக்குரிய
அஸ்திபாரம் தரப்படாத நிலையில் உள்ள சில மனிதர்கள் மூப்பர்களாய் வாழியம்செய்தல் என்பதே இந்தப் புறக்கணிப்பிற்கு செலுத்திய விலையாக இருந்துள்ளது."காரணம் (Gk.: charin) - "சாதகமாயிருத்தல், ... சந்தோஷத்திற்காக ... நிமித்தமாக... 1 தீமோ . 5:14; தீத்து 1:11; யூதா 16... இந்தக் காரணத்திற்காக, எபே. 3:1; தீத்து1:5 ..." (Thayer, 665).
"குறைவாயிருக்கிறவைகள் (Gk, : 1a leivonta epidiorthosi) - இது பால்வேறுபாடற்ற சொல்லாயுள்ளது என்ற உண்மையானது இது ஏதொன்றாகவும்இருக்கலாம் என்பதை அர்த்தப்படுத்துகின்றது. மூலவார்த்தையான leipo என்பது"விட்டு விடுதல் ... பின்னால், கைவிடுதல் ... தண்டனை அளித்தல், தாழ்ந்திருத்தல்,என்று அர்த்தப்படுகிறது. யாக். 1:4 ... கைவிடப்பட்டிருத்தல் ... யாக். 1:5; 2:15...குறைவு பட்டு அல்லது இல்லாது இருத்தல், தவறுதல் ... தீத்து 3:12 ... 1:5" (Thayer,375). "நிறைவாக்குதல் (Gk.: epiditorthose) - "சரிப்படுத்துதல் அல்லது (ஏற்கனவேதிருத்தி வைக்கப்பட்டுள்ளதுடன்) கூடுதலாகத் திருத்துதல் ... எஞ்சியுள்ளவை, தீத்து1:5" (Walter Bauer, A Greek - English Lexicon of the New Testament and Other Early Christian Literature, 2d. ed., rev. William F. Arndt and F. Wilbur Gingrich (Chicago: Universityof Chicago Press, 1957], 292). "நியமித்தல் செய்யப்படுவதற்கு முன்பு ,குறைவாயிருப்பவற்றை விசேஷமாக சரீரத்தின் இணக்கத்தின் வகையில்அவ்வாறுள்ளவற்றை நிறைவாக்குவதற்கு ஞானத்தைக் கவனித்தல் நல்லதாயுள்ளது.அது செய்யப்படவில்லையென்றால், சபைக்குழுமத்திற்குள்ளாக ஏதேனும்பிரிவினை அல்லது ஒழுங்கின்மை இருந்தால் அதற்கு ஒரு நிரந்தரமான நிலைப்பாடுகொடுக்கப்பட்டு விடலாம். "நியமித்தல் (Gk.: katastenna) - "பதவியில், ...நிபந்தனையில், பண்பில், நடக்கையில் இடுதல்; தீத்து 2:3" (Robinson, 389).15மூப்பர்களாயிருப்பதற்கென்று மனிதர்களைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் நியமித்தல்பற்றிய ஒரு கலந்துரையாடலானது, டெய்ட்ட ன் கீn அவர்கள் எழுதியA Re-Evaluration of the Eldership (Abilene, Tx.: Quality Publications, 19674047 என்ற புத்த கத்தில் காணப்படுகிறது. 1' இயக்குதல்/ஆணையிடுதல் (Gk.: diata$$0) - "முற்றிலுமாகஏற்பாடு செய்தல், முறைப்படியாக செய்து முடித்தல் ... முழுமையும்ஒழுங்கமைத்தல் ... நியமித்தல் ... திருநிலைப்படுத்துதல், கட்டளையிடுதல்"(Robinson, 176); "... குறிப்பிடுதல், கட்ட ளை கொடுத்தல் ... மத். 11:1; 1 கொரி. 16:1...தீத்து 1:5" (Thayer, 142). "1 தீமோ . 3:1-8 & தீத்து 1:6-9ன் மீதான அட்டவணையில்இந்தத் தகுதிகளை பரிசீலிக்கவும், குற்றம் சாட்டப்படாமை (Gk.: dinnexkletos) -"... கணக்கு ஒப்புவிக்க அழைக்கப்பட முடியாமை, கடிந்து கொள்ளப்படாமை,குற்றம் சாட்டப்படாமை, குற்றமற்ற தன்மை ... 1 தீமோ . 3:10; தீத்து 1:6" (Thayer,44). "வல்லமை (Kg.: dinamani) - "வல்லமை கொண்டிருத்தல். சிலவற்றைச் செய்யக்கூடியவராயிருத்தல் ... மாற். 9:22; லூக். 12:26; 2 கொரி, 13:8 ... செய்யத் திறமை,பலம், வல்லமை நிறைந்த; 1 கொரி. 3:2; 10:13" (Thayer, 158-59). "புத்திகூறுதல் (Gk.:parakaleo) - "ஒருவரின் பக்கத்திற்கு அழைத்தல் ... உரையாற்றுதல், பேசுதல் ..உடன்பாடு செய்தல், ஆறுதல் அளித்தல், புத்திகூறுதல் ... தேற்றுதல், ஆறுதலினால்உற்சாக மூட்டி பெலப்படுத்துதல் ... புத்துணர் வூட்டுதல், களிப்பாக்குதல் ...அறிவுறுத்தல், போதித்தல்” (Thayer, 482-83).
"எதிர் பேசுதல் (Gk, antilego) - "எதிராகப் பேசுதல், ஆதாயத்திற்காகப் பேசுதல்,எதிர்பேசுதல் ... ஒருவர் தமக்கெதிராயிருத்தல், அவருக்குக் கீழ்ப்படியஉடன்படாமை, ... அவருடன் ஏதொன்றையும் செய்ய மறுத்தல்" (Thayer, 50)."கண்டம் செய்தல் (Gk.: elite) - "குற்றம் உணர்த்துதல், கண்டனம் செய்தல்,தவறைச் சுட்டிக்காட்டி வலியுறுத்தல் ... குற்றம், தவறு அல்லது தவறுதல் பற்றியது,பாவம் பற்றியது, 1 கொரி. 14:24... யாக். 2:9... குற்றம் உணர்த்துதலினால் வெளிப் படுத்துதல், வெளிச்சத்திற்குக் கொண்டு வருதல் ... யோவா. 3:20, இ.வ. 21; எபே.5:11, 13 ... கிறிஸ்தவத்தின் கள்ள போதகர்களை வெளிப்படுத்துதல் மற்றும் தவறைச்சுட்டிக் காண்பித்த வலியுறுத்துதல் தொடர்பாகப் பயன்பட்டது. தீத்து 1:9, 13 ...திருத்துதல்; ... வார்த்தையினால் கடுமையாகக் கண்டித்தல், சிட்சித்தல், புத்திகூறுதல், கண்டம் செய்தல்; யூதா2... ஒருவரின் தவறை அவருக்குக் காண்பித்தல் ...சிட்சித்தல், தண்டித்தல் வெளி. 3:19" (Trayer, 202-3). ”மதப் பிரசங்க வட்டாரங்களில்மிகப் புகழ் பெற்ற சபையொன்று தனது "துறவிகளுக்கு" (மூப்பர்கள் உள்ளடங்க -எபி. 13:4ஐக் கவனிக்கவும்) திருமணம் செய்து கொள்வதைத் தடை செய்கிறதுஎன்பது முரண்பாடானதாக உள்ளது, இது கர்த்தருடைய சபையில் மூப்பர்களாகவாழியம் செய்கிறவர்களிடம் (இருக்கும்படி) பவுல் கேட்டுக் கொண்டதற்குநேரெதிரான நிலையாக உள்ளது. ஒருவர் தமது வீட்டு/குடும்ப வாழ்வின் மூலம்தான்தேவனுடைய குடும்பத்தைத் தன்னால் கவனிக்க முடியும் என்பதை நிரூபிக்கின்றார்.உண்மையில், பிசாசானவன் இன்னொரு சபையைத் தொடங்குகிற பொழுது, அதைஅவன் உபதேசத்தை மாற்றுவதன் மூலமே செய்கிறான் (ரோமர் 16:17, 18; 1 யோவார்.4:1; அப், 17:11; 20:28-29). "துன்மார்க்க ம் (Gk, asia) - "கைவிடப்பட்ட மனிதரின்பண்பு, இரட்சிக்கப் பட முடியாதவர்... திருத்தப்பட முடியாத தன்மை ..." ('Thulycer,|82), 'அடங்காமை (Gk: (ர/Naukrox) - "கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படமுடியாதவர், கீழ்ப்படியாதவர், அடங்காதவர், எதற்கும் வளைந்து கொடுக்காதவர்;1 தீமோ . 1:9; தீத்து 1:6, 10" (Thayer, 52). *சுயகட்டுப்பாடு (Gk.: egArates) - "பலமாய்இருத்தல் ... (ஒன்றின்) மீது வல்லமை கொண்டிருத்தல், அடிமைப்படுத்துதல்,கட்டுப்படுத்துதல், கடிவாளமிடுதல், கட்டுப்பாட்டுடனிருத்தல்/விலகியிருத்தல்"(Thayer, 167), "அடங்காமை (Gk: amapotaltos) - "கட்டுப்பாட்டுக்குக் கீழ்ப்ப டுத்தமுடியாதவை, கீழ்ப்படியாதவை பற்றிய விவரிப்பு ... 1 தீமோ . 1:9; தீத்து 1:6, 10 ...குழப்பமுற்ற" (Thayer, 52). "வீண் பேச்சுக்காரர் (Gk; 7sataiologia) - "வெறுமையான,பலனற்ற பேச்சில் ஈடுபட்டுள்ளவர். கனியற்ற சுலந்துரையாடலுக்குத் திரும்புபவர்,1 தீமோ . 1:6" (Arndt and Gingrich, 496); "... வீணாகக் கடுங்குரல் எழுப்புதல்” (Robinson,4446). **மனத்தை மயக்குகிறவர்/வஞ்சகர் (Gk.: phrenapates) - "மனதைவஞ்சிக்கிறவர் ... கெடுத்து வீழ்த்துபவர்... தீத்து 1:10" (Thayer, 657-58). Phrenapataoஎன்ற வினை வடிவத்தின் மீது கலாத்தியர் 6:3ஐ பட்டியலிட்ட தாயெர் அவர்கள்,"apparam என்பதில் உள்ளதைக் காட்டிலும் இந்த வார்த்தையினால் அதிகம் கருத்துமறைவாய் உணர்த்தப்படுகிறது. ஏனெனில் இது கீழ்ப்படுத்துகிற வினோதங்கள்என்ற கருத்தைக் கொண்டு வருகிறது” என்றும் கூடக் கூறினார். ”கவிழ்த்துப்போடுதல் (Gk: untrepo) - "கவிழ்த்துப்போடுதல், அழித்தல், ஒழுக்க ரீதியாக நாசம்விளைவித்தல் தீத்து 1:11" (Thayer, 48).
"கண்டிப்பு (Gk. apolomos) - "... வெட்டுதல் (போன்ற கூற்றுடன்), முற்றிலும் ...முழுமையும் ... தீர்மானமாக, கடுமையாக, 2 கொரி. 13:10; தீத்து 1:13" (Robinson,89), 'கேடிந்து கொள்ளுதல் (Gk: elegche) - கட்டளைச் சொல்லானது இது ஒருசுவிசேஷ ஊழியர் செய்ய வேண்டிய அவசியமான செயலாக உள்ளது என்றுஅர்த்தப்படுத்துகிறது. அவர்களைத் திருத்துதல் அல்லது கண்டனம் பண்ணுதல் (இது1:9ல் "கண்டனம்'' என்பதற்குள்ள வார்த்தையாக உள்ளது) என்பது மேற்கொள்ளப்பட வேண்டிய செயலாக உள்ளது. சுத்தம் (Gk.: katharos) -"சுத்தமாயிருத்தல் ... உடல் ரீதியில் ... அழுக்கின்றியிருத்தல் ... சட்டப்பூர்வமானது,தடை செய்யப்படாதது ... குற்றமற்றது, ஒன்றும் அறியாதது ... உண்மையானது,நேர்மையானது, தீமையை விலக்குவது ... " (Robinson, 362). ''அசுத்தம் (Gk..meniantai) - "இன்னொரு நிறத்தினால் சாயமேற்றுதல், கறைப்படுத்துதல் ...அசுத்தமாக்குதல், மாசாக்குதல், தூய்மைக் கேடு செய்தல் ... உடல்ரீதியான மற்றும்
ஒழுக்க ரீதியான கருத்தில் ... சிற்றின்ப விருப்பம் பற்றியது, யூதா 8 ... தீத்து 1:15..."(Thayer, 414), "மறுதலித்தல் (Gk, aneomai) - "ஒருவர் தாம் எவ்வாறு இருப்பதாகஉரிமை கோருகிறாரோ, அதை மறுத்தலித்தல்; 1 யோவா, 2:22. உரிமையை விடுதல்,புறக்கணித்தல், ஒப்புக் கொள்ளாமை, ... ஒருவர் தம் சொந்த பண்பு மற்றும்அறிவித்தலுக்கு உண்மையற்றிருத்தல், ஒருவர் தம்முடனேயே சீரற்ற வகையில்இருத்தல்... உரிமையை விடுதல், கைவிடுதல்" (Robinson, 95). "" அறிக்கையிடுதல் (Gk..(mologeo) - "இன்னொன்றைப் போல் அதே விஷயத்தைக் கூறுதல், ... ஒப்புக்கொள்ளுதல் ... வாக்களித்தல் ... அறிக்கையிடுதல், அறிவித்தல் ... ஒருவரின்உறுதிப்பாட்டிற்கு இணங்குதல் அல்லது மாறுதல் என்பதை மறைமுகமாய்க்குறிப்பிடுகிறது" (Thayer, 446), வெறுத்து ஒதுக்கப்படத் தக்க (Gk.: adokimos) -"புறக்கணிக்கப்பட்டவர். கண்டனத்திற்குத் தகுதியானவர், ... எனவே தகுதியற்ற,மதிப்பற்ற நபர்கள் பற்றியது, தீத்து 1:16... வீண்" (Robinson, 14).