தீத்து நிருபம் (வேத பாடங்கள்)
பாடம் 2(2): கண்காணிகளுக்கான தகுதிகள் (வ. 6-9)
''அடுத்ததாகப் பவுல், மூப்பருக்கான தகுதிகளின் பட்டியல் ஒன்றைக்கொடுத்தார். "குற்றம் சாட்டப்படாதவராயிருக்க வேண்டும்” என்றவார்த்தைகள் எவ்வாறு இந்தப் பட்டியலின் தொடக்கத்தில் (மற்றும்மீண்டும் வசனம் 7ல்) உள்ளன என்பதைக் கவனியுங்கள். இந்தப்பண்பானது மூப்பரின் வாழ்வில் காணப்பட வேண்டிய மற்ற ஒவ்வொருபண்பு நலனையும் எடுத்துரைப்பதாகவும் தகுதிப்படுத்துவதாகவும்இருப்பதால் இவ்விதமாய் (குறித்து) வைக்கப்பட்டுள்ளது (1:6-9).
“குற்றஞ் சாட்டப்படாதவர்”
I. ஒரு குடும்பஸ்தர் என்ற வகையில்
1, ஒரே மனைவியை உடைய கணவராய் இருக்க வேண்டும் (Gk.:mias gynaikas aner), ஒரு பெண்ணைக் கொண்ட மனிதர்.
2. அடங்காதவரென்றோதுன்மார்க்கரென்றோ பெயரெடுக்காதவிசுவாசமுள்ள பிள்ளைகளைப் பெற்றவர்கள்.
II. சொந்த வாழ்வின் வகையில்
எதிர்மறை -
3. தன்னிஷ்டப்படி செய்யாதவர்
4. முற்கோபமில்லாதவர்
5. மதுபானப் பிரியமற்றவர்
6. அடியாதவர்
7. இழிவான ஆதாயத்தை இச்சியாதவர்
நேர்மறை -
8. அந்நியரை உபசரிக்கிறவர்
9, நல்லோர் மேல் பிரியமுள்ளவர்
10. தெளிந்த புத்தியுள்ளவர்
11. நீதிமான்
12. பரிசுத்தவான்
13. இச்சையடக்கம் உள்ளவர்
III. போதிப்பதின் வகையில்
14. உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகின்றவர்
15. ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்தி சொல்லுகிறவர்
16, எதிர் பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ண வல்லவர்
ஒருவர் “நல்லதொரு வாழ்வை வாழ்வதினால் மட்டும் இந்தத்தகுதிகளை பெற்றிருக்க முடியாது. போதகர் என்ற வகையில் அவர்“வல்லவராய்”
இருக்க வேண்டும். ஒருவர் “புத்தி கூற”
வல்லவராய்இருப்பதற்கு அவர், வசனத்தில் திறனும் பலனும் உள்ளவராய் இருக்கவேண்டும் என்பது நிச்சயமாகவே அவசியமானதாக உள்ளது. முன் கூறப்பட்ட தகுதிகள் யாவையும் உண்மையான வசனத்தை ("ஆரோக்கியமானஉபதேசத்தை") உறுதியாய்ப் பற்றிக் கொள்பவர்களால் பெற்றிருக்கப்படவேண்டியவைகளாக உள்ளன. இன்றைய நாட்களில், எத்தனை மூப்பர்கள்தேவையில் உள்ள ஆத்துமாக்களிடத்தில் - ஒருவருக்கு ஆறுதல் கூறி,இன்னொருவருக்கு புத்திகூறி, இன்னொருவரைக் களிப்பூட்டி, இன்னொருவரைப் பெலப்படுத்தி, இன்னொருவரை அறிவுறுத்தி - ஊழியம் செய்துமற்றும் இவை எல்லாவற்றினாலும் அவர்களுக்கு முன்பாகத் தேவனுடையவசனத்தைத் திறந்து காட்டக் கூடியவர்களாய் இருக்க முடியும்? நேர்மறையான இந்த வேண்டுகோளானது வெறுமனே ஒரு நல்ல வாழ்க்கைஎன்பதைக் காட்டிலும் அதிகமானவற்றைக் கேட்கின்றது.
போதித்தலில் மூப்பரின் பணிப்பொறுப்பின் எதிர்மறை அம்சம் வசனம்9ல் குறிப்பிடப்பட்டுள்ளது: அவர் எதிர்பேசுகிறவர்களால் எதிர்கொள்ளப்படுவார் (மறுத்துரைப்பவர்; KJV). என்ன ஒரு பிடிவாதமான/மாற்றமுடியாத ஆளுமைத் தன்மை! மூப்பர் என்பவர் "கண்டனம்
பண்ண”22 வல்லவராய் இருக்க வேண்டும். கண்டனம் பண்ணக் கூடியஇந்தத் திறமையானது நல்லதொரு வாழ்வை வாழ்வதினால் மட்டும்மேம்படுத்தப்படக் கூடுமா? அது (நல்லதொரு வாழ்வு) கள்ள போதகரைவெளிப்படுத்தி கடிந்து கொள்ளுமா? இவைகள் சபையின் உண்மையானதேவைகளாய் உள்ளன. கூர்மதி கொண்டவரும், “சத்தியத்தின் வசனத்தைமிகச் சரியாகக் கையாள்பவர்” என்று அறியப்பட்டுள்ளவருமாயிருப்பவர்இந்தப் பணிப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டியது அவசியமாய் உள்ளது(2 தீமோ. 2:15). தேவனுடைய மக்களின் மத்தியில் ஊழியம் செய்துஅவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய மூப்பர்களுக்கு இந்தத்தகுதிகள் எவ்வளவாய் நடைமுறைக்குரியவையாய் இருக்கின்றன (எபி.13:17).
மனிதரின் குடும்பத்தைப் பொறுத்தமட்டில், ஒருவர் ஒருபெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு வாழுதல் பற்றிஎவரொருவரும் தவறெதையும் (இது வரையில்) கண்டறிந்ததில்லை. அதுபோலவே, ஒரு மனிதர் "துன்மார்க்கம்”24 அல்லது "அடங்காமை”25என்பவற்றினால் குற்றம் சாட்டப்படாத பிள்ளைகள் உடையவராய்இருத்தல் பற்றியும் எவரொருவரும் தவறைக் கண்டறிய மாட்டார். ஒருமனிதர், நல்லதொரு குடும்பத்தைக் கொண்டிருந்து, அவரதுபிள்ளைகளுக்கெதிராகக் குற்றச் சாட்டுகள் கொண்டு வரப்படமுடியாதிருக்கும் பொழுது, அது சபையாகிய தேவனுடைய குடும்பத்தைக்கவனிக்கும் திறமையுடன் இருத்தலுக்கான ஒரு பிரதானமான படியாகஉள்ள து (1 தீமோ . 3:4, 15).
மூப்பர் தமது சொந்த/தனிப்பட்ட வாழ்வைப் பொறுத்தமட்டில் பலதகுதிகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இந்தத் தகுதிகளைவாசிக்கின்ற செயல், மூப்பர்கள் செய்ய வேண்டிய வேலையில் அவைகள்(தகுதிகள்) எவ்வாறு பொருந்துகின்றன என்பது பற்றி நமது மனதில்ஆழமான பதிவுகளை ஏற்படுத்துகின்றன. ஒன்று கூடி இணைக்கப்பட்டுள்ள, பின்னப்பட்ட உறவுமுறைகளைக் கொண்டுள்ள, மனிதஉடலின் உறுப்புக்களைப் போன்ற தன்மை கொண்ட மக்களுடன்மூப்பர்கள் ஈடுபாடு கொண்டுள்ளனர் (1 கொரி. 12:12-27). எதிர்மறைப்பட்டியலில், “தன்னிஷ்டப்படி” செய்யும் ஒரு ஆத்துமா பிறருடையஆர்வங்களைக் கவனிப்பதற்குப் பதிலாகத் தனது சுய ஆர்வங்களையேகவனிப்பதாக இருக்கும் (எபி. 13:17; பிலி. 2:19, 20). “முற்கோபம்கொள்ளுகிற" ஒருவர், ஒழுங்கற்று நடக்கின்ற ஆத்துமாக்களுக்குப் புத்திகூறுகையில் அமைதியாய் நிலைத்திருக்கப் தகுதியற்றவராக இருப்பார்(1 தெச. 5:12-14). மதுபானப் பிரியரோ அல்லது அடிக்கிறவரோ, மந்தைக்குஒரு நல்ல மாதிரியாய் (1 பேது. 5:3) இருக்க மாட்டார் என்பது நிச்சயம்.மூப்பர்கள் பிராந்திய சபையின் நிதிநிலை சார்ந்த விஷயங்களைக் கையாளவேண்டியவர்களாய் இருப்பதால் (அப். 11:30), மூப்பர் “இழிவானஆதாயத்தை இச்சிப்பவர்” என்ற நிலையில் இருந்தால் அது எவ்வளவாகஏற்பில்லாததாயிருக்கும்! (யோவா. 12:4-6ஐக் காணவும்).
நேர்மறையான தனிப்பட்ட பண்புகள் ஒரு மூப்பரை அவருக்கு
ஒப்புவிக்கப்பட்ட பணிப்பொறுப்புகளுக்குத் தயார் செய்ய இதே அளவுக்குசமமாகப் பொருந்துகின்றன. அந்நியரை உபசரித்தல் என்பது, விலகிச்செல்லும் ஆடுகளிடம் நெருக்கமாயிருக்கும் (லூக், 15:3-7ஐக் காணவும்) ஒருமேய்ப்ப ருக்கு ("pastor"; எபே. 4:11; அப். 20:28) இயல்பான விஷயமாய்உள்ளது. அவர் மந்தைக்கு "நற்செய்தியை” ஊட்டி, பிற உறுப்பினர்கள்பின்பற்றிச் செல்ல தர அளவை ஒன்றை அமைக்க வேண்டியிருப்பதால்,நிச்சயமாகவே அவர் நல்லோர்மீது பிரியமுள்ளவராய் இருக்க வேண்டும்.தெளிந்த புத்தியுள்ளவராயிருத்தல் (சுய அடக்கம் கொண்டிருத்தல்) என்பதுஎவரொருவரும் "தீமைக்குத் தீமையைச் செய்யாதபடி ” பார்த்துக் கொள்ளவேண்டிய மனிதருக்குத் தகுதியுடையதாக இருக்கின்றது (1 தெச 5:15).சண்டையிடுகிறவர்களைக் (தீத்து 3:10) கையாண்டு ஒழுங்கு படுத்துகிறமனிதர் உறுதித் தன்மையும் நியாயமும் உள்ளடங்குகிற நீதியுள்ளவராகஇருத்தல் என்பது நிச்சயமாகவே அவசியமாகிறது. இரவும் பகலும்கண்ணீரோடு சகோதரருக்குப் புத்தி சொல்லுவதற்கான (அப். 20:31, 35)ஆவிக்குரிய ஆழமானது, மூப்பர்கள் “அர்ப்பணிப்பு உடையவர்களாகவும்சுய கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டியது ஏன் என்பதைவிளக்கப்படுத்தும்.
மூப்பர்கள் செய்யும்படி தேவன் ஒப்படைத்துள்ள ஊழியத்திற்குஇந்தப் பண்புகள் எவ்வளவாய் ஏற்புடையவைகளாக உள்ளன! பவுல்தொடருகையில், மூப்பர்கள் அவ்வாறு தகுதிப்பட வேண்டியது ஏன்என்பதை இன்னும் காண்பித்தார்.