தீத்து நிருபம் (வேத பாடங்கள்)
பாடம் 2(1): கிறிஸ்துவின் செயலும் கண்காணிகளும் (1:5-16)
பவுல், கிரேத்தாத் தீவின் ஒவ்வொரு சபைக்குழுமத்திலும் தகுதிவாய்ந்த மூப்பர்கள் இருக்க வேண்டுமென்று விரும்பினார். சபை இவ்வாறுவளர வேண்டுமென்றே தேவன் வடிவமைத்தார். கிறிஸ்துவின்செயல்பாட்டை கீழாக்க வேண்டும் என்ற பிசாசின் முயற்சிகளின்காரணத்தினால், சபைக்கு நிலைப்புத் தன்மையும் பலமும் வாய்ந்த மனிதர்கள் தேவைப்படுகின்றனர் (1 கொரி. 16:13; எபே. 4:11-16; 6:10-18). அந்தஉண்மையை வசனம் 10 மற்றும் 11 ஆகியவை மறு உறுதிப் படுத்துகின்றன.
கண்காணிகளைக் குறித்து பணிஒப்படைப்பு (வ. 5)
சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல், கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றவிசுவாசிகளை உண்டாக்குதல், அல்லது சபைகளை நிலைநாட்டுதல்ஆகியவற்றுடன் ஒரு சுவிசேஷ ஊழியரின் ஊழியம் நிறைவடையப்பட்டிருப்பதில்லை. ஒவ்வொரு சபையிலும் தகுதி வாய்ந்த மூப்பர்கள்நியமிக்கப்படுமளவுக்கு இந்தப் படிநிலைகள் உறுப்பினர்கள் மத்தியில்வளர்ச்சி/பக்குவம் விளைவிக்கும் பொழுதுதான் ஒப்புவிக்கப்பட்டஊழியம் நிறைவடைகின்றது (1:5), பிள்ளைகள் தேவனுடைய நோக்கங்களில் தக்க வகையில் பக்குவமடைவதற்காக தேவனால் தரப்பட்டஏற்பட்டின் பாகமாகப் பெற்றோர்கள் இருப்பது போலவே, தகுதி வாய்ந்தமூப்பர்கள் தேவனுடைய குடும்பத்தில் பக்குவம் வாய்ந்த நடத்துனர்களாயிருந்து கிறிஸ்துவுக்குள் குழந்தைகளாயிருப்பவர்கள் தெய்வீக இயல்பைமேம்படுத்துகையில் பாதுகாக்கப்பட்ட, ஞானமுள்ள, நன்கு ஒருங்கமைக்கப்பட்ட வளர்ச்சிக்கான சூழ்நிலையை பெறும்படி உறுதிப்படுத்தக்கூடியவர்களாய் உள்ள னர் (அப். 20:28; 1 பேது. 5:1-8; 1 தெச. 5:11-18;எபி. 13:7, 15-17).
பவுல் தமது பணி ஒப்படைப்பின் தனிச் சிறப்பை உணர்ந்தறிந்தவராய்,இதை ஒரு முன்னுரிமையாக முன்னிறுத்தினார். “இந்தக் காரணத்திற்காகவே"10 பவுல் தீத்துவை கிரேத்தாவில் விட்டு வந்தார். தயவு காட்டுதல்அல்லது சந்தோஷம் கொடுத்தல் என்பதே இந்த வார்த்தையின் அடிப்படைக் கருத்தாக உள்ளது. இங்கு தரப்பட்ட பணி ஒப்படைப்பானது,திறன் உள்ள சுவிசேஷ ஊழியர் மூலமாக வேதாகம ரீதியான உருவாகுதலிலும் சத்தியத்தினால் உருக்கொடுத்தலிலும் தன்னைத் தானே வழி நடத்தும்சபைக்கு நற்கனி அளிக்கின்றது.
“குறைவாயிருக்கிறவைகளை நிறைவாக்கும்படிக்கு”12 பவுல் தீத்துவைஅழைத்தார். அங்குமிங்கும் சற்றே திருத்தம் செய்து, அல்லது அங்கும்இங்கும் சற்றே ஒழுங்கமைத்து அழகு கூட்டப்படுகின்ற நன்கு பணிபுரியும்ஒரு மோட்டார் வாகனத்தைப் பற்றி நினைத்துப் பாருங்கள். இந்தக்
கருத்துக்களை வனப்பும் திறமையும் அளிப்பதற்காக சபையின் குறைபாடுபற்றிய விஷயங்களுக்கு/விவரங்களுக்கு நடைமுறைப்படுத்திப் பாருங்கள்.இந்த விவரங்களை முறைப்படுத்தி அமைத்தல் என்பது சுவிசேஷ ஊழியரின்ஊழியத்தில் இன்றியமையாத ஒரு பாகமாய் உள்ளது.
பிராந்திய சபை ஒவ்வொன்றிலும் விவரத்தைக் கவனித்தல் என்பதுமுக்கியமான தேவையாக உள்ளது. ஒரு பிராந்திய சபையானது சபைவளர்ச்சி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது, அது தங்கள் முயற்சி மற்றும்நிதிகள் ஆகியவற்றில் 80 சதவிகிதம் தங்களின் கனியில் 20 சதவிகிதத்தைஉண்டாக்கும் ஊழியப் பகுதிகளுக்குச் செலவிடப்பட்டிருக்க, அவர்களின்கனியில் 80 சதவிகிதம் அவர்கள் 20 சதவிகித முயற்சியிலிருந்து வந்திருந்ததைக் கண்டறிந்தது. அவர்கள் அதிகம் செயல் திறனை ஆதாயமடைவதற்காக தங்கள் ஊழியச் செயல்முறைகள் சிலவற்றை ஒழுங்கு படுத்துவதுஅவசியமாயிற்று என்பது தெளிவு. எந்த ஒரு பிராந்திய சபையும்அதிகபட்சம் செயல்திறனுடன் இயங்குவதற்கு நம்பிக்கை கொள்வதற்குமுன்பு, தகவல் சேகரிக்க வேண்டும்.
1. பிராந்திய சபையில் உள்ளவர்களின் வயது வகைகள்/குழுக்களைஅறியுங்கள். பெரும்பாலான உறுப்பினர்கள் அறுபது ஆண்டுகள் வயதோஅல்லது அதற்கு மேற்பட்ட வயதோ உடையவர்களாய் இருக்கின்றார்களா?பெரும்பாலானவர்கள் இருபதுக்கும் நாற்பதுக்கும் இடைப்பட்டவயதுடையவர்களாய் இருக்கின்றார்களா?
2, உறுப்பினர்கள் பெற்றுள்ள குறிப்பிட்ட பயிற்சி என்ன, அவர்கள்பெற விரும்புகின்ற குறிப்பிட்ட பயிற்சி என்ன என்பவற்றை அறியுங்கள்.அவர்கள் மூப்பர்களாயிருக்கும்படி, உதவிக்காரர்களாயிருக்கும்படி,அல்லது வேதாகம வகுப்பின் போதகர்களாயிருக்கும்படி பயிற்சி பெறவிரும்புகின்றார்களா?
3. உறுப்பினர்களின் வீட்டு நிலைமையை அறியுங்கள். எத்தனைதுணைவர்கள் உறுப்பினராய் இல்லாமல் உள்ளனர்? அவர்களின்பிள்ளைகளில் இளம் வயதினர் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிந்துள்ளார்களா?எத்தனை பேர் விவாக ரத்து பெற்றுள்ளார்கள்? எத்தனை குடும்பத்தார்விசுவாசம் நிறைந்தவர்களாகவும் பணி செய்கின்றவர்களாகவும் உள்ளனர்?
4. உறுப்பினர்கள் VS. ஆஜராகிறவர்கள் என்ற வகையில் வரும்விகிதத்தை அறியுங்கள்; வேதாகம வகுப்புக்கு வருகிறவர்கள் (ஞாயிறுகாலை) vs. பொதுவான கூடுகை; ஞாயிறு காலை ஆராதனை VS. ஞாயிறுமாலை மற்றும் இடை நாள் ஊழியம்.
5. ஆராதனை பற்றி உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டுள்ளபயிற்சியைப் பற்றி அறியுங்கள். ஆராதனையின் வெளிப்படையானசெயல்பாடுகளில் எத்தனை பேர் பங்கேற்கின்றார்கள்?
6. உறுப்பினர்களின் காணிக்கையளிக்கும் மாதிரியைப் பற்றிஅறியுங்க ள் (அப். 2:42-47; 4:32-5:11; 1 கொரி. 16:1, 2; 2 கொரி. 8; 9).
7, பணம் மற்றும் ஈடுபாடு கொண்டுள்ள உறுப்பினர்கள் என்றவகையில் உள்ளூர் அளவிலும் வெளிநாடுகளிலும் சபையின் வெளிச்சென்றடையும் முயற்சிகளைப் பற்றி அறியுங்கள்.
குறைந்தபட்சம் இந்த அடிப்படைக் காரணிகளையாவது அறியாதவரையிலும், ஒரு பிராந்திய சபை, தான் எவ்வாறு வளர்ந்துள்ளது, அது எங்குவளர்வது அவசியமாய் உள்ளது, அல்லது எங்கு அது "நிறைவடையவேண்டியுள்ள”வற்றைத் தொடங்குவது அவசியப்படுகின்றது என்பவற்றைஅறிய முடியாது.
தீத்து ஒவ்வொரு நகரிலும் "மூப்பர்களை நியமிக்க வேண்டும் என்றுபவுல் விரும்பினார். “நியமித்தல்”14 என்ற வார்த்தையைக் கவனியுங்கள்.இவ்வார்த்தையில் தயாரிப்பு என்பதற்குத் தரப்பட்ட அளவிலானவலியுறுத்தமானது பணிக்கமர்த்துதல் என்பதற்குத் தரப்படவில்லை என்றேகாணப்படுகின்றது. இந்த மனிதர்கள் செயலிலும் எண்ணப்போக்கிலும்மூப்பர்கள் செய்யும்படி அழைக்கப்படும் ஊழியத்தைச் செய்ய தயாராய்இருக்கின்றார்களா என்று காண்பதே சுவிசேஷ ஊழியரின் இன்றியமையாதகடமையாய் உள்ளது.
பிராந்திய சபை ஒன்றின் எதிர்காலத்தைப் பிரதானமான வழியில்திட்டவட்டமாய்ப் பாதிக்கக் கூடிய முடிவுகளும் செயல்பாடுகளும்மென்மையான ஆலோசனைகளை விட அதிகமானவற்றை செயல்படுத்தும்படி) அழைக்கின்றன. இந்தப் பணிப் பொறுப்பைப் பவுல் தீத்துவுக்குக்கொடுத்த பொழுது, இது “ஆணையிடப்பட்டதாக”16 இருந்தது. இதுதீத்துவுக்கோ அல்லது பிராந்திய சபையின் வாழ்வில் தேவைகளையோ,அல்லது ஒழுங்கீனங்களையோ காண்கின்ற எந்த ஒரு சுவிசேஷஊழியருக்கோ தேர்ந்து கொள்ளுதல் என்பதாய் இல்லாதிருந்தது. காலஅட்டவணை எதுவும் அளிக்கப்படவில்லை, ஏனென்றால், பிராந்தியசபைகளின் தேவைகள் மாறுபடும். இருப்பினும், ஒரு சுவிசேஷ ஊழியர்பணிப்பொறுப்பானது செய்து முடிக்கப்படும் வரையிலும் தகுதி வாய்ந்தஇந்த இலக்கை கண்ணோக்கத்தில் காத்திருக்கின்றார்!.