தேவன் ஒருவராமூவரா?
போதகர் பி.வி. பவுலி
அதிகாரம் 2(1)
1. வேதம் கூறும் திரியேக தேவன்:
நாம் மேலே பார்த்த வேதவாக்கியங்களின் அடிப்படையில் பிதா குமாரன்பரிசுத்தஆவி ஆகிய மூவரையும் தேவன் என்று சொல்லப்பட்டாலும் மூன்றுதேவர்கள் இல்லை என்பதையும் ஒன்றாகிய திரியேக தேவனைக்குறித்துதான் வேதம் கூறுகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.ஏனென்றால் (மத்.28:19)ல் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று சொல்லப்பட்டாலும் இவர்களுடைய நாமங்கள் என்று சொல்லி முடிக்காமல், நாமத்தில்என்று ஒருமையில் சொல்லப்பட்டடுள்ளதால் இந்த மூன்று ஆள் தன்மைஇருந்தாலும் ஒரு தேவன்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இரண்டாவதாக ஆதி.1:26ல் தேவன்; தன்னை நாம் என்று அழைக்கிறார்.ஆனால் நாம் என்கிற பண்மை சொல் சொன்னாலும் நம்முடைய சாயலாக,ரூபமாக என்கிற ஒருமைச்சொல் தொடர்ந்து வருவதால், நாம் என்றுசொல்லக்கூடிய மூன்று ஆள் தன்மை இருந்தாலும் ஒரே ஒரு தேவன்தான்என்பதால் சாயல்கள் என்றும், ரூபங்கள் என்றும் சொல்லாமல் ஒருமைச்சொல்லில் முடிக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.
மூன்றவதாக ஆதி.3:22ல் நம்மில் ஒருவரைப்போல என்று பார்க்கிறோம்.நம்மில் என்றும், ஒருவரைப்போல் என்றும் சொல்வதாலும் ஒருவரிலும்அதிகமான ஆள்தன்மையுடைய தேவன் ஆனாலும் ஒரே தேவன் தான்உண்டு என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
இன்னும் 1 யோவா.5:7ல் பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர்,பிதா, வார்த்தை , பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; என்று பார்க்கிறோம். ஆதலால் வேதாகமம் கூறும் தேவன்ஒருவர் மட்டும்தான் என்பதையும், ஆனால் மூன்று ஆள் தத்துவம் உடையவர்என்பதையும் சரியாக புரிந்துகொள்ள முடியும். ஆனால் திரியேக தேவனைஉலகிற்கு அறிவித்தவர்கள் அதை தவறாக விளங்கி அறிவித்திருப்பதினால்சிலர் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்ததும் அல்லாமல் பலவிதமானபிரிவினைகளுக்கும் அது காரணமாகிவிட்டது.
ஆரம்பத்திலிருந்து திரியேக தேவனைக்குறித்த விளக்கம் கொடுக்கப்பட்டபோது தவறாக விளக்கினது நிமித்தம் அன்றிலிருந்து இந்த நாள்வரைக்கும் அந்த தவறையே பின்பற்றி வருவதால் அந்த தவறை திருத்தும்படியான விளக்கத்தைத்தொடர்ந்து கொடுக்கிறேன்.
முன் விதி இல்லாமல் கீழ்வரும் காரியங்கள் படிக்கும் யாவரும் வேதாகமம்கூறும் திரியேக தேவன் என்கின்ற உண்மையை புரிந்துக்கொண்டு சத்தியதேவனை ஆவியிலும் உண்மையிலும் ஆராதித்து நித்திய ஜீவன் பெற்றுக்கொள்ளும்படி இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாகும்.
தொடர்ந்து நாம் படிக்கப்போகும் காரியங்கள் ஒரு புதுமையான காரியம்போல தோன்றும். ஆனால் அது புதுமையானதல்ல மிகவும் பழமையானதும்,வேதாகமம் கூறும் உண்மை என்பதையும் நாம் அறிந்து கொள்ளமுடியும். எந்தமுன் விதிகளும் இல்லாமல் உண்மையை அறிய வேண்டும் என்கிறவாஞ்சையோடு இந்த புத்தகத்தையும், பரிசுத்த வேதாகமத்தையும் படிக்கும்யாவருக்கும் பரிசுத்தாவியானவர் உண்மையை விளக்கி சகல சத்தியத்திலும்வழி நடத்துவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வேதாகமம் கூறும் பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்கிற வார்த்தைகள்நாம் படிக்கும்போது மனிதராகிய நமக்கு உடனே நினைவில் வரும் காரியம்நமக்கு உலகில் இருக்கும் தாய், தகப்பன், பிள்ளை முறைகள்தான். ஆனால்உண்மை என்னவென்றால், ஆதியில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்கிறபேரில் தேவன் அறியப்படவில்லை. மனிதனுக்குப் புரிந்துகொள்ளும்படியாகதேவன் இந்த வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார் என்பதே உண்மை.
குமாரன் என்றும், இயேசு என்றும் அறியப்படுவதற்கு முன்னமே அவர்வார்த்தை என்றுதான் அறியப்பட்டிருந்தார். வார்த்தை என்கிற பெயரில்அறியப்பட்டவர்தான் மாம்சத்தில் நமக்குள்ளே வாசம் பண்ணினார் என்றுயோவா.1:14ல் வாசிக்கிறோம். ஆதலால் வார்த்தையாக அறியப்பட்டவர்எப்போதிலிருந்து குமாரன் என்றும், இயேசு என்றும் அழைக்கப்பட்டார்என்பதை நாம் ஆராய்ந்து அறியவேண்டும். யோவா.1:1ல் “ஆதியில்வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்தவார்த்தை தேவனாயிருந்தது” என்று வாசிக்கிறோம். இங்கு ஆதியில்என்கிற வார்த்தை எதைக் குறிக்கிறது?
ஆதி.1:1ல் ஆதியில் என்று சொல்லும்போது தேவன் சிருஷ்டிக்கஆரம்பித்ததான அந்த சமயத்தைக்குறிக்கும். ஆனால் யோவா.1:1ல் ஆதியில் என்று சொல்லும்போது எத்தனையோ கோடிக்கணக்கான வருடங்களுக்குமுன்னே தேவன் எதையும் சிருஷ்டிக்காத அந்த நாட்களைக் குறிக்கிறது.இங்கு ஆதியில் என்று சொல்வதால் ஒரு குறிப்பிட்ட காலத்தைக்குறிக்கின்றன. ஆனால் இங்கு சொல்லப்பட்ட வார்த்தை அல்லது இயேசு,அதற்கு முன்னமே அதாவது முன்கால நித்தியத்தில் இருந்தவர் என்பதைநாம் அறியவேண்டும். இன்று நாம் காலத்தில் வசித்து வருகிறோம். ஆனால்காலம், நேரம் இல்லாதிருந்த முன்கால நித்தியத்தில் இயேசு இருந்தார்.ஆனால் அப்போது அவருடைய பேர் இயேசு என்றில்லை . மத்.19:5ல் ஆதியில்என்று இயேசு சொல்லும்போது முதல் மனிதராகிய ஆதாம் ஏவாளைசிருஷ்டித்த சமயத்தைக் குறிக்கும். இப்போது நாம் நம் நேரத்திற்குள் வசித்துவருகிறோம். இனி நேரம் என்று ஒன்று இல்லாத காலம் வரும் அது நித்தியம்என்று சொல்லலாம். முன்கால நித்தியம், நேரம், பின் கால நித்தியம்இம்மூன்றும் மனதில் கொண்டு தொடர்ந்துவரும் காரியங்களை நாம்பார்க்கவேண்டும்.
உண்மையிலே பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று அழைக்காத ஒருகாலம் இருந்ததுண்டு (இந்த மூன்று பெயர்கள் இல்லாதிருந்த காலம்தான்உண்டு இந்த மூன்று நபர்கள் இல்லாதிருந்த காலம் அல்ல). ஆதலால் இந்தபெயர்கள் எப்போது உருவானது. தேவனுக்கு ஏன் குமாரன் இருக்கவேண்டும் என்கிற காரியங்கள் நாம் கீழ்வரும் பகுதிகளில் பார்க்கலாம்.
வேதாகமம் கூறும் ஏக சத்திய தேவன் மூன்று ஆள் தத்துவம்உடையவரும், மூன்று ஆள் தத்துவமும் தங்களில் தாங்கள் பரிபூரணமாகவும்இருக்கிறார். இந்த மூன்று ஆள் தத்துவமும் ஒன்றாகத்தான் முன்காலநித்தியத்திலும் காலத்திலும், வரும்கால நித்தியத்திலும் இருக்கிறார். என்பதுவேதம் திட்டமாகவும் தெளிவாகவும் கூறுகின்ற உண்மையாகும். வரும் காலநித்தியத்தில் இந்த மூன்று பெயர்கள் இருக்காது என்றும். மூன்று ஆள்தன்மைக்கும் சேர்த்து ஒரே பெயர்தான் இருக்கும் என்று (சக.14:9)ல் படித்துபுரிந்து கொள்ளலாம். மனிதனோடுள்ள உறவில் மனிதன் புரிந்துகொள்வதற்காக, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்கிற மூன்று பெயர்களில்இந்த மூன்று ஆள்தத்துவங்களை பெயரிட்டு அழைக்கப்பட்டாலும் இந்தபெயர்கள் நித்தியத்தில் இருக்காது குமாரன், இயேசு என்கின்ற பெயரில்அவர் அறியப்படுவதற்கு முன்னமே அவருக்கு வார்த்தை என்கிற பெயர்இருந்தது என்று யோவா.1:1ல் வாசிக்கலாம். வார்த்தை என்கிற பெயரில்கடைசி நாட்களில் இயேசு வெளிப்படுவதும், மற்றும் யாருக்கும் தெரியாதவேறு ஒரு பெயர் அவருக்குண்டு என்பதையும் (வெளி.19:12,13) வசனங்களில் பார்க்கலாம். மூன்று ஆள்தத்துவம் உடையவராக இருந்தாலும் ஒரே ஒருதேவன் தான் உண்டு என்பதை கீழ்வரும் வரைபடங்கள் மூலம் நான்விளக்கும்படி முயற்சிக்கின்றேன்.
இப்படி மூன்று ஆள் தத்துவம் உடைய ஏக சத்திய தேவன் எப்பொழுதுபிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்கிற பெயர்களில் அழைக்கப்பட்டார்? ஏன்அப்படி அழைக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
ஒன்று, இரண்டு, மூன்று என்று முதலாம் ஆள், இரண்டாம் ஆள்,மூன்றாம் ஆள் என்று எண்கள் சூட்டப்பட்டாலும், முதலாம் ஆளுக்குக் கீழ்இரண்டாம் ஆள், இரண்டாம் ஆளுக்குக் கீழ் மூன்றாம் ஆள் என்று அர்த்தம்கிடையாது. இதே எண் மூன்று போட்டிருக்கும் இடத்தில் ஒன்றும்,இரண்டு போட்டிருக்கும் இடத்தில் மூன்றும், மூன்று போட்டிருக்கும் இடத்தில்இரண்டுமாக எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் போடலாம். காரணம்என்னவென்றால் இந்த மூன்று ஆள் தத்துவமும் பூரணமும், எந்த ஏற்றதாழ்வும் இல்லாததும் என்பதை வரைபடத்தின் மூலமாக முன்பே பார்த்தோம்.
பரிசுத்த வேதாகமத்தில் இந்த மூன்று ஆள் தத்துவமும் மாறி மாறி -முதலிடத்தில் வருவதை நாம் பார்க்கமுடியும்.
i. (மத்.28:19) பிதா, குமாரன், பரிசுத்த ஆவி
ii. (1 கொரி. 12:4-6) பரிசுத்த ஆவி, குமாரன், பிதா.
iii. (2 கொரி. 13:14) குமாரன், பிதா, பரிசுத்த ஆவி
vi. (எபே.4:4-6) பரிசுத்தஆவி, குமாரன், பிதா,
v. (வெளி.1:4-6) பிதா, பரிசுத்த ஆவி, குமாரன்.
இன்னும் பல இடங்களிலும் இது மாறி வருவதைப் பார்க்கமுடியும்.இப்போது நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி, காரியம் இப்படியிருக்க ஏன்பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்று அழைக்கவேண்டும்?
பதில்:
வேதாகமம் எப்போதுமே மனிதனுக்கு காரியங்கள் புரிந்துகொள்வதற்காக மனிதனுடைய மொழியில் பேசுவதால் இப்படிப்பட்டபெயர்கள் குறிப்பிட்டு பேசியிருப்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.
இப்போது இரண்டாவது கேள்வி, மனிதனக்கு புரிந்துகொள்ளும்படியாகபேசினாலும் பிதா என்று சொல்லும்போதும், குமாரன் என்றுசொல்லும்போதும் மனிதர்களுக்கிடையில் இருப்பதுபோல குழந்தை பிறப்புதேவனுக்கும் உண்டு என்று அர்த்தமா?
பதில்:
மனிதனுக்கு இருப்பதுபோல தேவனுக்கு குழந்தை பிறப்புக்கிடையாதுயாக்.1:17ல் அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின்நிழலுமில்லை .
ஆதலால் எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் இல்லாத ஏக சத்தியதேவன்மூன்று ஆள் தன்மையுடையவர் என்பதை நாம் பார்த்தோம். காலம் அல்லதுநேரம் இல்லாத நித்தியத்தில் இருக்கிறவர் எப்போது ஏதேனும் ஒன்றுசிருஷ்டிக்கவேண்டும் என்று தன் மனதில் தீர்மானம் செய்தாரோ அந்தநிமிடம்தான் காலம் ஆரம்பமாயின ஏசா.43:13ல் நாள் உண்டாவதற்குமுன்னமே அவர் இருக்கிறார் என்று பார்க்கிறோம். ஏதேனும் ஒன்றுசிருஷ்டிப்பதற்கு முன்னமே தேவனுடைய மனதில் அது உருவாகி பின் அதுஉண்டாக்கப்பட்டது என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். பரிசுத்தவேதாகமத்தை நாம் ஆராய்ந்து படிக்கும்போது முதலாவது தேவ தூதர்களைசிருஷ்டித்தார் என்பதை அறிந்துகொள்ளலாம். எடுத்துக்காட்டாக இந்த
பூமியை அவர் சிருஷ்டிக்கும்போது தேவதூதர்கள் இருந்தார்கள் என்றுயோபு 38:4-7 வரை பார்க்கிறோம். அதற்கடுத்தபடியாகதான் மனிதனைசிருஷ்டித்திருக்கிறார். இதற்கெல்லாம் பரிசுத்த வேதாகமம் சரியானவிளக்கங்களை தருவதுண்டு ஆகிலும் அவைகளெல்லாம் இங்கு விளக்கமாகஎழுத முற்படவில்லை .
இந்த உண்மையான தேவன் ஆரம்பத்தில் முடிவறிகிறவர் என்றுஏசா.46:10ல் பார்க்கமுடியும். உலகத் தோற்றம் முதல் தான் செய்யப்போகும்காரியங்கள் என்னவெல்லாம் என்று அவருக்குத் தெரியும். (அப்.15:18)ஆதலால் உலகில் ஏதாகிலும் ஒன்று சிருஷ்டிப்பதற்கு முன்னமே பிறகு என்னசம்பவிக்கும் என்பதும் அவருக்குத் தெரியும்.
தூதர்களை சிருஷ்டிக்க வேண்டும் என்கிற முடிவு அவர் எடுத்த அதேநேரத்தில்தானே தூதர்களில் ஒரு கூட்டம் தேவனோடு எதிர்த்து தேவசமுகத்தைவிட்டுத் தள்ளப்பட்டுப்போகும் என்பதும் அவருக்குத் தெரியும்.ஆனால் இப்படியாக ஒரு கூட்டம் தூதர்கள் தனக்கெதிராய் செயல்படுமேஎன்று அவர் தாம் எடுத்த முடிவை மாற்றவில்லை. தாம் சிருஷ்டிக்கத்தீர்மானித்த தூதர்களை சிருஷ்டியாமலிருந்ததுமில்லை. ஆனால் இப்படியாகசிருஷ்டிக்கப்பட்ட தூதர்களுக்கு மீட்புமணி எதுவும் செய்யாததினால்முதன்முதலாக சிருஷ்டிக்கப்பட்டு பாவம் செய்த தூதர்களுக்கு மன்னிப்போ,மீட்போ கிடைக்கவில்லை. ஆதலால் அவர்கள் நித்திய அக்கினியில்தள்ளப்படுவார்கள் என்று மத்.25:41ல் பார்க்கலாம். ஆனால் முதலாவதுதேவனோடு கூட இருந்து தேவனுக்கு ஆராதனை செலுத்தும்படிசிருஷ்டிக்கப் பட்ட தேவ தூதர்களில் ஒரு கூட்டம் இப்படி கர்த்தரைவிட்டுவிலகுவதால் அடுத்தபடியாக சிருஷ்டிக்கப்படும் மனிதனுக்கு ஒரு மீட்பின்வழி உலக தோற்றத்திற்கு முன்னமே தேவன் ஆயத்தப்படுத்துகிறார்.அதுதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமான மீட்பு (அ) இரட்சிப்புஆகும்.
முதன் முதலாக தேவசமுகத்திலிருந்து தள்ளப்பட்ட தூதர்கள் தவிர மற்றஎல்லாவற்றிற்கும் மீட்பு உண்டு என்பதை ரோம்.8:19-21 வரையிலானவசனங்களை படிக்கும்போது பார்க்கமுடியும்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மூலமாக கிடைக்கும் இரட்சிப்புதிடீரென்று இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே தோன்றின ஒன்றல்லஎன்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
காரணங்கள்:
1, 1 பேது. 1:20ல் உலகத்தோற்றத்திற்கு முன்னமே இயேசுகிறிஸ்து முன்குறிக்கப்பட்டவர் என்று எழுதியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும். -
2. வெளி. 13:8ல் இயேசு உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்டவர்என்றுள்ளது,|
3. 1 கொரி. 2:7,8ல் வசனங்களில் உலகத்தோற்றத்திற்கு முன்னமேநம்முடைய மகிமைக்காக இயேசுவை முன்குறித்தார் என்றுள்ளது.
4. எபே. 1:4, 3:9ல் கிறிஸ்து இயேசுவில் கொண்டிருந்த அனாதி தீர்மானம்என்றுள்ளது.
5. 2 தீமோ, 1:9,10 ஆதிகாலம் முதல் கிறிஸ்து இயேசுவில் நமக்குஅருளப்பட்டக் கிருபை என்றுள்ளது.
இத்தனை வசனங்களும் ஆணித்தரமாக சொல்லும் காரியம்,உலகத்தோற்றத்திற்கு முன்னமே ஏதாகிலும் ஒன்று சிருஷ்டிக்கப்படுவதற்குமுன்னமே தேவன் மனிதனுடைய மீட்புக்காக வழி ஆயத்தப்படுத்தினார்என்பதேயாகும். யோவா. 1:29; 1 கொரி.5:7; வெளி.13:8. இந்தவசனங்களிலெல்லாம் சேர்த்துபடிக்கும்போது ஆண்டவர் இயேசு கிறிஸ்து
உலகத்தோற்றத்திற்கு முன்னமே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என்பதைபுரிந்துகொள்ளலாம்,உல கத்தோற்றத்திற்கு முன்னமே தேவன் ஏற்படுத்திய பாவபரிகாரத்திற்கான ஒரே வழி இயேசு கிறிஸ்து இதை விசுவாசித்துஏற்றுக்கொள்கிறவர்களுக்கு உலகம் உண்டான ஆரம்பத்திலே ஒரு இடம்ஆயத்தப்படுத்தியிருக்கிறார். நம்முடை கண்களுக்குத் தெரியும் இந்த உலகம்சிருஷ்டிப்பதற்கு முன்னமே மற்றும் பல சம்பவங்களும் நடந்துள்ளதை பரிசுத்தவேதாகமத்தில் காணமுடியும்.
அடுத்ததாக தேவனுக்கு எப்போது குமாரன் உண்டாயிற்று இயேசு எப்படிதேவகுமாரன் என்பதையும் பார்க்கலாம், சாத்தான் ஆக்கினைத்தீர்ப்புக்குபாத்திரவானாவதற்கு காரணம் அவனுடைய இருமாப்புதான் என்று(1 தீமோ .3:6)ல் வாசிக்கலாம். ஏசா.14:9-15 வரையிலா என வசனங்களில்பாபேல் அரசனைக்குறித்து சொல்லும் வசனங்களிலும் (எசே.28:1-19,வரையிலான வசனங்கள் தீரு அரசனைக்குறித்துச் சொல்லும் போதும் இந்தஉலகத்தில் வாழ்ந்த ஒரு ராஜாவிற்குச் சொல்லக்கூடிய காரியங்களே
அல்லாமல் மற்றும்பல வார்த்தைகளைக் கொண்டு அவர்களுடையபாவங்களை சொல்வதும், பாபேல் ராஜாவைப் பார்த்து அதிகாலையின்மகனாகிய விடிவெள்ளியே என்றும், நீ வானத்திலிருந்து விழுந்தாய் என்றும்,மற்றும் பல வார்த்தைகள் சொல்வதை அந்த ராஜாவுக்கு பொருந்தவில்லை.ஆதலால் இருமாப்படைந்த அந்த ராஜாவுக்குள் கிரியை செய்த சாத்தானைத்தான் அந்த வார்த்தைகள் குறிக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
எசேக்கியேல் சொல்லும்போது நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேரூப் என்று 14ஆம் வசனத்திலும், கீழே படிக்கும்போதுதிரும்பவும் காப்பாற்றுகிற கேரூபாயிருந்த உன்னை என்று பார்ப்பதினால்இந்த வார்த்தை தீரு ராஜாவைக் குறித்தல்ல என்பதை நாம் உணர்ந்துகொள்ளமுடியும். இப்போது நாம் பார்த்த மூன்று புஸ்தகங்களிலிருந்துதன்னுடைய பாவம் நிமித்தமாக தள்ளப்பட்ட தூதன் எப்படிப்பட்டவன் அவன்செய்த பாவம் என்ன, அவனுக்கு வரும் முடிவு என்ன என்பதை அறிந்துகொண்டோம். தூ தர்களுடைய தலைவனாக இருந்த லூ சிபரையும்அவனுக்குத் துணைாயயிருந்த மற்ற தூதர்களையும் நித்திய அக்கினியில்பங்கடைவார்கள் என்று வேதம் தெளிவாக சொல்கிறதை நாம்வெளி.19: 19,20,21 20 :7-10) வசனங்களில் காணலாம்.
அதுவரையில் இந்த பூமியிலும் வானமண்டலத்திலும், பரலோகத்திலும்சுற்றித்திரிய அவனுக்கு அனுமதியுண்டு. அது தேவனுடைய நீதி வெளிப்படுத்தும் காரியம். முதல் சிருஷ்டியாகிய தூதர்கள் பாவம் செய்ததால்அவர்களுக்கு மீட்பு இல்லை என்பதையும் அதற்கு பிறகு சிருஷ்டிக்கப்பட்டஎல்லாவற்றிற்கும் மீட்பு உண்டு என்பதையும் நாம் பார்த்தோம். பாவம் செய்ததூதர்களுக்கு மீட்பு இல்லை. ஆனால் மனிதனுடைய பாவத்திற்குப் பரிகாரம்வேண்டும். அது எப்படி சாத்தியமாகும். மனிதன் இதற்கு பெலனற்றவன்என்று ரோம.5:6 சொல்கிறது. ஆதலால் அன்புள்ள தேவன் அன்பாகவேஇருக்கிறவர் மனிதனுடைய பாவத்திற்கு உலகத்தோற்றத்திற்கு முன்னமேபரிகாரம் உண்டாக்கினதுதான் நாம் இயேசுவில் பார்ப்பது.
2. பாவத்தைக் குறித்து வேதம் சொல்வது என்ன?
i. யார் பாவிகள்?
ii. எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களாகி (ரோம.3:23).
iii. ஒரு பாவமும் செய்யாமல் நன்மையே செய்யத்தக்க நீதிமான்பூமியிலில்லை (பிர.7:20).
iv. எல்லோரும் வழி விலகி ஏகமாய் கெட்டுப்போனார்கள். நன்மைசெய்கிறவன் இல்லை , ஒருவனாகிலும் இல்லை (சங்.14:3, 53:3).
v. நமக்கு பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது (1 யோவா.1:8)
vi. அந்தப்படியே நீதிமான் ஒருவனாகிலும் இல்லை (ரோம.3:10).
மேலே நாம் பார்த்த வசனங்கள் எல்லாம் எல்லோரும் பாவிகள் என்கின்றஉண்மையை உறுதியாகச் சொல்வதைப் பார்க்கலாம்.
இரண்டாவது காரியம்:
i. எல்லார் மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக தேவன் எல்லோரையும்கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார் (ரோம.11:32)
.“அப்படியிராதபடியால், இயேசு கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தினாலேபலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படிவேதம் எல்லாரையும் ஏகமாய் பாவத்தின் கீழ் அடைத்துப்போட்டது(கலா .3:22).
இங்கு தேவனே எல்லாரையும் பாவத்தின் கீழ் அடைத்தார் என்றுபார்க்கிறோம். அதினால் எல்லோரும் பாவத்தின் கீழ்தான் என்பதைப்புரிந்துகொள்ளவேண்டும். தேவன் ஏன் அப்படி செய்தார் என்பதற்கு விளக்கம்பின்னாலே எழுதுகிறேன். ஆதலால் தேவனுக்கு முன்பாக எல்லோரும்பாவிகள்தான் என்பதை முதலாவது புரிந்துகொள்க. நான் எந்த குற்றமும்இல்லாதவன் என்று யாரும் தேவனுக்கு முன்பாக நிற்கமுடியாது.
பாவம் செய்த மனிதனக்குத் தண்டனை என்ன, அல்லது பாவம் செய்தமனிதனுடைய முடிவு என்ன?
a. பாவத்தின் சம்பளம் மரணம் (ரோம.6:28).
b. பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும் (எசே.18:4,20)
c. மனிதன் மேலிருந்த தேவ மகிமை நஷ்டமாயிற்று (ரோம.3:23).
d. மனிதன் மெய் தேவனைவிட்டு தூரமானான் (எபே.2:13; கொலோ.1:21)
e. மனிதன் நித்திய காலமாய் இரண்டாம் மரணமாகிய அக்கியும்கந்தகமும் எரிகிற நரகத்தில் தள்ளப்படுவான் (வெளி.20:11-15)
பாவத்திற்கு பரிகாரம் என்ன?
இரத்தஞ்சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு உண்டாகாது (எபி.9:22).மனிதன் பாவம் செய்ததின் மூலமாக அவனுக்கு மரணம் உண்டாயிற்று.இதிலிருந்து அவனை விடுவிக்க இயேசு நமக்காக ரத்தம் சிந்தி மரித்தார்லேவி.17:11ல் பார்க்கும்போது இரத்தத்தில் ஜீவன் இருப்பதால் இரத்தம் பாவபரிதகாரமாகும் என்றுள்ளது. ஆனால் பாவகறை படிந்த மனிதனுடைய ரத்தம்பரிகாரம் செய்யக்கூடியது அல்ல. ஆதலால், பரிசுத்தமுள்ள தேவன்மனிதனாக வந்து நம்முடைய பாவத்திற்குப் பரிகாரம் செய்தார் (எபி.2:14,15,10:10) இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலேஅந்த சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். மற்றும் கீழுள்ளவசனங்களும் படித்து பாருங்கள் (1 யோவா.1:7; எபி.10: 7121920 எபே.1:3,5:2; 1 பேது. 1:18, 19, 3:18, 2:24;) இன்னும் அநேக வசனங்கள் பார்க்க முடியும்.உலகத்தோற்றத்திற்கு முன்னமே நமக்காக முன்குறிக்கப்பட்ட இயேசுவில்விசுவாசித்த மனிதர்கள் முன்காலங்களில் மிருகபலி இட்டுவந்தார்கள்.ஆனால் இனிமேல் அப்படிப்பட்ட பலிகள் தேவையில்லை. முன்காலங்களில்மனிதன் செலுத்திய பலிகள் இயேசு கிறிஸ்துவின் பலிக்கு நிழலாயிருந்தது.
மாற்.10:45; 2 கொரி.5:18,19; ரோம.3:25, 5: 8,10,18,19
இப்படியாக எல்லோரும் பாவம் செய்தார்கள் என்றும் எல்லோரையும்மீட்கும்படி தேவன் எல்லோரையும் பாவத்தின் கீழ் அடைந்தார் என்பதையும்நாம் பார்த்தோம். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லைஎன்பைதயும் புரிந்து கொண்டோம். ஆட்டு ரத்தமோ, மாட்டு இரத்தமோஅல்லது வேறு ஏதேனும் உயிரினங்களின் இரத்தமோ மனிதனுடைய பாவபரிகாரத்திற்கு உதவாது. இந்த காரியங்கள் மனதில் கொண்டு நாம்தொடர்ந்து படிக்கவேண்டும்,
3. பாவ பரிகாரத்திற்காக தேவன் என்ன செய்தார்?
ஏக சத்திய தேவனாக எல்லாம் செய்யவல்லவராக இருந்த திரியேகதேவன் மனிதனுடைய பாவ பரிகாரத்திற்கு உலக தோற்றத்திற்கு முன்னமேவழி செய்கிறார் என்பதை நாம் வேதத்திலிருந்து புரிந்துகொள்ளலாம். நியாயபிரமாணம் செய்யக் கூடாததை தேவன் செய்யும்படிக்கு என்று ரோம.8:3ல்சொல்லியிருப்பதின் அர்த்தம் நாம் புரிந்துகொள்ளவேண்டும். மனிதனால்முடியாத காரியம் தேவன் செய்யும்படி முன் வருகிறார். ரோம.5:6ல் நாம்பெலனற்றவர்களாயிருந்தபோது குறித்தக் காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார் என்று பார்க்கிறோம். மனிதனுக்கு இருந்த பலவீனம்என்ன? அவனுக்கு கைபெலம் இல்லையா, கால்பெலம் இல்லையா, அல்லது
ஆள்பலம் இல்லையா, பணபலம் இல்லையா, எதற்கு மனிதனுக்கு பெலம்இல்லை? தன்னுடைய பாவத்திற்கு பரிகாரம் செய்ய பெலம் இல்லை. பாவம்செய்த தூதன் லூசிபர் மூலம் மனிதன் வஞ்சிக்கப்படுவான் என்பதையும்அவனுடைய பாவத்திற்கு அவனாலே பரிகாரம் உண்டாக்க முடியாதுஎன்பதையும் முன்கால நித்தியத்தில் உலகத்தோற்றத்திற்கு முன்னமேதேவனுக்குத் தெரியும். ஆதலால் மனிதனால் முடியாத அந்த காரியம் செய்துநிறைவேற்றி எல்லோரையும் மீட்பதற்காக இயேசு கிறிஸ்துவை முன்குறிக்கிறார். இந்த பொறுப்பு இயேசு ஏற்றுக்கொள்வதற்கு முன்னமே எந்தஏற்றதாழ்வும் இல்லாமல் தேவனுக்கு சமமாக அவர் இருந்தார். இது பிலி.2:6ல்பார்க்கமுடியும். ஏக சத்திய தேவனில் ஒரு ஆள் தத்துவமாக இருந்தஇயேசுவின் மகிமையை குறித்துதான் யோவா.17:5ல் “உலகத்தோற்றத்திற்குமுன்னமே உம்மிடத்தில் உண்டாயிருந்த மகிமை” என்று வாசிக்கிறோம்.
நம் மத்தியில் நடக்கக்கூடிய ஒரு சம்பவம் மூலம் இந்த காரியங்களைவிளக்கும்படி முயற்சிக்கிறேன். இங்கு மூன்று நபர்கள் சேர்ந்து ஒருதொழிற்சாலையை நடத்தி வருகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுவோம்.திடீரென்று அதில் ஒரு வேலை அந்த தொழிலாளர்களுக்குத் தெரியவில்லை.அந்த வேலை சரியான நேரத்தில் செய்யாவிட்டால் அந்த தொழிற்சாலைமூடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த நேரத்தில் அந்த தொழிற்சாலையின்உரிமையாளர்கள் மூன்று பேருக்கும் அந்த வேலை தெரியும். இப்போது அந்தவேலையாட்களை வெளியேற்றிவிட்டு, வேறு ஆட்களை வேலையில்அமர்த்தலாம் என்று நினைத்தாலும் வேறு யாருக்கும் அந்த வேலை செய்யத்தெரியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த உரிமையாளர்களில் ஒருவர்நான் போய் அந்த வேலையைச் செய்து முடிக்கிறேன் என்று சொல்வாரேயானால், அங்கு என்ன நடக்கும் அந்த தொழிற்சாலைக்கு அவர்உரிமையாளராக இருந்தாலும் இப்போது அவர் ஒரு தொழிலாளியினுடையவேஷத்தை எடுத்துக்கொள்ள வேண்டிவரும். இப்படி அவர் செய்வதினால்மற்றவர்களைப் பார்க்கிலும் அவர் சற்றாகிலும் கனத்தில் குறைவுள்ளவராவதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்னுடைய பதவி பெரிதாகநினைக்காமல் கீழ் இறங்கி வந்து உதவினதினால் எல்லோருக்கும் முன்பாகஅவருடைய மதிப்பு அதிகரிக்கத்தான் செய்யும். ஆனால் இவர் உரிமையாளர்என்பதை அறியாத மற்ற வேலையாட்கள் அவரை தரக்குறைவாகநடத்தக்கூடும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து யார் என்பதை புரிந்துகொண்ட பேதுரு இயேசுவிடம் சொல்லும் வார்த்தை மத்.16:21,22ல் பார்க்கமுடிகிறது. “அப்பொழுது பேதுரு அவரை தனியே அழைத்துக் கொண்டு
போய். ஆண்டவரே இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குசம்பவிப்பதில்லை யென்று கடிந்து கொள்ளத் தொடங்கினான்.” இந்தசம்பவம் எப்போது நடந்தது என்று கேட்டால் இயேசு தன் சிலுவைமரணத்தைக் குறித்து சீடர்களிடத்தில் சொன்னபோது, அதே நேரத்தில்இயேசு யார் என்பதைப்புரிந்து கொள்ளாதவர்கள் இயேசுவை சிலுவையில்அறையும் என்று கூக்குரலிட்டார்கள் என்று நாம் வேதத்தில் பார்க்கமுடியும்(மாற்.15:13; லூக்.23:23;) 1 கொரி.2:8ல் வாசிக்கும்போது தெளிவாகச்சொல்லப்பட்டுள்ள காரியம், “அறிந்திருந்தார்களேயானால் மகிமையின்கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே” இயேசு மெய்யானதேவன் என்பதை அறிந்திருந்தால் அவர்கள் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்கள். அதினால்தான் தன்னை தேவன் என்று காட்டிக்கொள்ளாமல்,மனித குமாரன் என்று தன்னை அறிமுகப்படுத்தினார். பிலி.2:6-8 “அவர்தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்கு சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தம்மை தாமே வெறுமையாக்கி அடிமையின்ரூபமெடுத்து மனுஷ சாயலானார். அவர் மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு மரணபரியந்தம் அதாவது சிலுவையின் மரணப்பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகிதம்மைத்தாமே தாழ்த்தினார்.” இப்படியாக இயேசு, பாவம் நிமித்தமாகநித்திய நரகத்திற்குப்போக வேண்டிய மனிதருக்கு மீட்பு உண்டாக்கினதினால் அவருடைய மதிப்பு கொஞ்சமும் குறையவில்லை.
இப்படியாக மனித குலத்தின் பாவமன்னிப்புக்காக ஒரே மெய்யானதேவன் இறங்கி வந்ததினால் பூமியிலே வந்தவரை தேவகுமாரன் என்று நாம்புரிந்துகொள்ளும்படியாக எழுதப்பட்டுள்ளது. மற்றபடி மனிதர்களிடையில்திருமணம் செய்தோ அல்லாமலோ குழந்தை பிறப்பது போல தேவனுக்குப்பிள்ளை பிறந்தது என்று அர்த்தம் இல்லை. மனுகுலத்தின் மீட்புக்காகதிரியேக சத்தியதேவன் பூமியில் வரும்போது அதில் ஒரு ஆள் தத்துவம்மட்டும் பிரித்து வரவில்லை. பரலோகத்தில் தேவன் எப்படி இருக்கிறாரோஅவரேதான் பரத்தில் மாற்றமில்லாதவராக இருக்கும் அதே நேரத்தில்இன்னொருவராக பூமியில் வந்தார். இதினால் இரண்டு தேவர்கள் என்றுஅர்த்தம் இல்லை. பரலோகத்தில் அவர் சர்வ வல்லமையுள்ள தேவனாகமாற்றமில்லாதவராய் இருக்கும் அதே நோத்தில் அவராலே உலகில் எங்குவேண்டுமானாலும் எந்த சாயலிலும் பிரதியட்சமாய் எந்த காரியமும்செய்யமுடியும். காரணம் அவர் சர்வவல்லமையுள்ள தேவன். அவராலேசெய்யமுடியாத எந்த காரியமும் இல்லை . ஆனால் பூமியில் அவர் வெளிப்படும்போது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்று ஆள் தத்துவமும்
வெளிப்படவில்லை. ஒரே ஒரு ஆள் தத்துவம் மட்டும் வெளிப்படுத்துகிறார்.இது குறித்து பின்னாலே விளக்கமாக எழுதுவேன்.
எப்போது தேவனுடைய மனதில் மனுகுலத்தின் மீட்புக்காக தேவன்தானே இறங்கி வரவேண்டும் என்று தீர்மானம் எடுத்தாரோ, அந்த நேரத்தில்அவர் சொன்ன வார்த்தைதான் “நீர் என்னுடைய குமாரன், இன்று நான்உம்மை ஜனிப்பித்தேன்” (சங்.2:7). இப்படியாக திரியேக தேவன் பரத்தில்எந்த மாற்றமும் இல்லாதவராக வீற்றிருக்கும், உலகத்தோற்றத்திற்குமுன்புள்ள அந்த நேரத்தில் மெய்யான தேவன் மனுகுலத்தின் பாவமன்னிப்புக்காக புறப்பட்டதினால் அவரை ஒரே பேரான குமாரன் என்றுசொல்வதை யோவா.3:16ல் பார்க்கலாம். இங்கு சொல்லப்பட்ட அர்த்தத்தில்இயேசு தேவகுமாரனாக இருப்பதுபோல வேறு யாரும் தேவனுடைய புத்திரர்அல்லர் என்பதையும் அறியலாம். மற்றும் எந்த ஒரு சிருஷ்டிப்பும் தேவன்நடத்துவதற்கு முன்னமே மெய்யான தேவனே குமாரனாக புறப்பட்டபடியால்அவரை முதற்பேரானவர் என்று எபி.1:6ல் சொல்வதும், தேவதூதர்களைக்கூட உருவாக்கும் முன்னமே இந்த சம்பவம் நடந்ததினால் கொலோ.1:15ல்சர்வ சிருஷ்டிக்கும் முந்தினபேரும் என்று, வெளி.3:14ல் தேவனுடையசிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
தேவன் தன் உள்ளத்தில் எந்த ஒரு காரியம் தீர்மானம் செய்தாரோ அதுஅந்த நேரத்தில் அவருக்கு நிறைவேறினது போலத்தான், இப்படியாகமனுகுலத்தின் மீட்பு பணிக்காக தேவன் புறப்படும்போது அந்த நேரத்தில்பரலோகத்தில் வீற்றிருப்பவர் பிதா என்றும், அவரே தான் அதேமூவொருவராகிய தேவன்தான் மனிதனுக்காக பாவபரிகாரபலியாக தன்னைஒப்புக்கொடுத்தவரை குமாரன் என்றும் சகல சத்தியத்திலும் மனிதனைவழிநடத்தப் புறப்பட்டவரை பரிசுத்தாவி என்றும் நம்முடைய புத்திக்குபுரிந்து கொள்ளவும், நாம் அழைக்கவும் அந்த பெயர்களை தேவன்வேதாகமத்தில் பயன்படுத்தியுள்ளார். மனிதருக்குள் இருக்கும் உறவுமுறையில் மக்கள் இந்த காரியங்களை புரிந்துகொள்வதற்காக பிதா,குமாரன், பரிசுத்தாவி என்கிற பெயர்களில் தன்னை மனுகுலத்திற்குவெளிப்படுத்தினார். ஆனால் இந்த மூன்று பேரும் பூரணமும், எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாதவர்களும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இதில் எந்தபெயர் சொல்லிதேவன் என்று அழைத்தாலும் மூன்று பேரையும் குறிக்கும்.எந்த பெயர் சொல்லி ஆராதனை செய்தாலும் மூன்று பேரையும் குறிக்கும்,யாரும் தனித்தனியல்ல என்பதை அறியலாம். இந்த காரியத்தை பின்வரும்படங்கள் மூலம் விளக்குகிறேன். இனியாராவது பரிசுத்தாவியின் நாமத்தில்
ஞானஸ்நானம் கொடுத்தாலும் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம்கொடுத்தாலும் இந்த திரியேக தேவனைத்தான் குறிக்கும். ஆதலால்இயேசுவின் பெயர் மட்டும் சொல்லி ஞானஸ்நானம் கொடுத்தாலும்,பிதாவின் பெயர் சொல்லியோ ஞானஸ்நானம் கொடுத்தாலும் திரியேகதேவனைத்தான் குறிக்கும். ஆகிலும் புதிதாக இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு, பிதா, குமாரன், பரிசுத்தாவி என்கிற நாமத்தில் ஞானஸ்நானம்கொடுக்கவேண்டும் என்று வேதம் வலியுறுத்த காரணம், தேவன்மூவொருவராக இருக்கிறார் என் கிற சத்தியத்தை எல்லோரும்புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். எனவே பிதா, குமாரன்,பரிசுத்தாவி என்கிற நாமத்தில் ஞானஸ்நானம் கொடுங்கள் என்றுஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தெளிவாக கட்டளையிட்டிருப்பதால் பிதா,குமாரன், பரிசுத்தாவி என்னும் நாமத்தில் மட்டும் ஞானஸ்நானம்கொடுக்கவேண்டும். மனுகுலத்தின் மீட்பு பணிக்காக குமாரனாகிய தேவன்பூமியில் வரும்போது மூவொருவராகிய தேவனில் ஒரு ஆள் தத்துவம் மட்டும்வரவில்லை. மூன்று ஆள் தத்துவமுடைய தேவன் நித்தியத்தில் எப்படிஇருந்தாரோ அவ்வண்ணமாகவே அவர் பூமியில் வந்தார். பூமியில்வரும்போது மனுகுலத்தின் பாவபரிகாரத்துக்காக மனிதனாக வந்தார்.ஆனால் ஒரு காலமும் மூன்று ஆள் தத்துவமும் தனித்தனியாகபிரிவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் எபி.1:6ல் குமாரனைபூமிக்கு பிரவேசிக்க பண்ணும்போது என்றும் யோவா.14:26ல் பிதாஅனுப்பப்போகிற பரிசுத்தாவி என்றும் பார்க்கிறோம். இந்த வசனங்களும்மற்றும் பல வசனங்களும் படிக்கும்போது மூன்று ஆள் தத்துவமுடையதேவன் மூன்று நபர்களாக தனித்தனியே செயல்படுவதுபோல நமக்குத்தோன்றும். ஆனால் மூன்று ஆள் தத்துவமும் தனித்தனியே அல்லஎன்பதைப் பின்வரும் பகுதியில் ஆதாரத்துடன் விளக்குகிறேன்.
திரியேக தேவன் எப்படி ஒன்றாக இருக்கிறார் என்பதை முன்பேவரைபடம் மூலம் காட்டினேன். ஆனால் அது அப்படிதானா, உங்களுக்குஎப்படித் தெரியும் என்று கேட்கக்கூடும். நம்முடைய புத்திக்கு நாம்புரிந்து கொள்ளும்படியாக இந்த வரைபடம் மூலம் விளக்குகிறேன்என்பதேயல்லாமல் ஆண்டவர் எப்படி இருக்கிறார் என்று என்னைஅழைத்துக்கொண்டுபோய் காண்பிக்கவில்லை.
பொதுவாக வேதபண்டிதர்கள் தேவஇயல் கற்றுக்கொடுக்கும்போதுமூவொருவராகிய தேவனை திரிகோணம் மூலம் எடுத்துக்காட்டுவதுண்டு,

