விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம்
- ஒப்பாய்வு
பாகம் 1
டாக்டர்.மு.தெய்வநாயகம் எம்.ஏ., பிஎச்டி
திராவிட சமய அறக்கட்டளை.
278.அயன்புரம்,
சென்னை - 600 023.
முன்னுரை:-
அறிஞர்களிடையே, "கடவுள் இல்லை" என்ற கருத்துடைய பெருமக்கள், காலங்காலமாக மனிதசமுதாயத்தில் தோன்றித் தங்கள் கருத்துகளைப் பல்வேறு முறைகளில் வலியுறுத்தி வெளியிட்டுவந்துள்ள போதிலும், "கடவுள் உண்டு" என்னும் உணர்வு இதுவரை அழிக்கப்பட வியலாதஒன்றாக மனித சமுதாயத்தில் விளங்கிக்கொண்டிருக்கிறது. இந்த உணர்வின் தோற்றத்திற்கு ஒருகண்டமோ ஒரு நாடோ ஓர் இனமோ மட்டும் உரிமை பாராட்டிக் கொள்ள இயலாது. உலகம்முழுவதிலும் வாழும் பல்வேறு இன மக்களின் உள்ளங்களிலும் இவ்வுணர்வு நீக்கமற நிலைத்துநின்றுவருகின்றது எனலாம்.
இந்த உணர்வு குறிப்பிட்ட சில கூட்டத்தாரிடையே அவர்கள் அடைந்த பட்டறிவின் காரணமாக,சமயமாக உருவெடுத்துள்ளது. இலக்கியங்கள் முன்னும் இலக்கணம் பின்னும்செல்வதைப்போன்று, இன வரலாற்றுடன் இணைந்த சமய வரலாறுமுன்னும், சமயத் தத்துவக்கொள்கைய பின்னுமாக வெளிப்படுகின்றன எனலாம். உலகில் தோன்றிய எந்தச் சமய தத்துவக்கொள்கைக்கும், நாம் வரலாற்றுப் பின்புலத்தை அறிய இயலும்.
உலக மக்கள் யாவருக்கும் பொதுவான இறையுணர்வு, குறிப்பிட்ட இன வரலாற்றில் சமயமாகஉருவாகும்பொழுது அவ்வினத்தின் மொழி, பண்பாடு, வரலாறு இவைகளின் அடிப்படையில்,பெருகி வளர்கின்ற காரணத்தால் மற்ற இனம், மொழி, பண்பாடு, வரலாறு முதலியவைகளில்இருந்து அது வேறுபட்டதாக எழுகின்றது.
உலகப் பெருஞ் சமயங்களுக்கிடையேயுள்ள கொள்கை வேற்றுமைகள், இக்காரணங்களாலேயேநிலைபெறுகின்றன எனலாம். ஒரு நாட்டில் தோன்றிய சமயக்கொள்கை பிறிதொரு நாட்டில்பரவுங்கால், பரவும் நாட்டில் உள்ள மொழி, பண்பாடு போன்றவற்றை ஏற்றுக்கொண்டு பரவியபோதிலும் சமயக் கொள்கைக்குக் காரணமான சமய வரலாறு, அது தோன்றுவதற்குஅடிப்படையாக விளங்குகின்ற இன வரலாற்றிலிருந்து பிரிந்து, தனித்து நிற்க இயலாதாகின்றது,
இந்த நோக்கில் விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம் இம்மூன்றையும் ஒப்பிட்டுஆயும்பொழுது இவைகளுக்கிடையே மொழி, பண்பாடு, இவற்றால் வேற்றுமைகள்காணப்படினும் அடிப்படைச் சமயக் கொள்கையளவில் ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
இந்த ஒற்றுமைக்குக் காரணங்களான, சமய வரலாறும் இன வரலாறும் முயன்று அறிந்து கொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றன.
இந்தியச் சமயக் கொள்கைகளில், சைவசித்தாந்தம் தனித்தன்மையுடன் வீறுகொண்டுவிளங்குகிறது எனலாம்.
சைவசித்தாந்தமாகிய பதினான்கு தத்துவ சாத்திரங்கள் தோன்றுவதற்கு அடிப்படையாகவிளங்கும் சைவ சமயக் கொள்கைகளை வெளிப்படுத்துவதாகப் பன்னிருதிருமுறை உள்ளது.பன்னிரு திருமுறை தோன்றுவதற்குக் காரணமாக விளங்கியது, தமிழகத்தில் எழுந்த பக்திஇயக்கமாகும்.
பக்தி இயக்கம் எழுவதற்கு உந்துசக்தியாக இருந்தது எது என்னும் வினாவிற்குத் தெளிவானவிடை இதுவரை காண இயலாமல் இருந்தது.
அவ்வாறே எல்லாச் சமயங்களாலும் உரிமை பாராட்டப்படும் திருக்குறளின் அடிப்படைத்தத்துவக் கருத்துகள் தோன்றுவதற்குப் பின்புலமாக இருந்த சமய வரலாறு, இன வரலாறுஎன்னவென்பதை அறிந்துகொள்வதிலும் பலவிதச் சிக்கல்கள் இருந்து வந்துள்ளன.
பொதுவாக இந்திய நாகரிகம் ஆரியம். திராவிடம் என இரண்டாகப் பகுக்கப்பட்டுநோக்கப்படுகிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று கொடுத்தும் கொண்டும் வளர்ந்துள்ளன.
இதனால் திராவிட நாகரிகத்தையும் ஆயும் ஆய்வாளர்கள், திராவிட நாகரிகத்தில் வந்து கலந்தபுதிய கருத்துகளை, ஆரியக் கருத்துகள் எனவும், ஆரிய நாகரிகத்தில் கலந்துள்ள புதியகருத்துகளைத் திராவிடக்கருத்துகள் எனவும் இதுவரை முடிவுசெய்து வந்துள்ளனர்.
மேலே கண்ட முடிவு சமயக் கருத்துகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எழுந்துபரவிய சைவவைணவச் சமயங்கள் எழுவதற்குக் காரணமான பக்தி இயக்கத்தைத் தோற்றுவித்தமூலக் கரு எது என்பதைக் காணுவதில் அறிஞர்களிடையே சிக்கல்கள் இதுவரைஇருந்துவந்துள்ளன.
தமிழகத்தில் எழுந்த பக்தி இயக்கத்தின் மூலக் கருவிற்கு ஆரிய வைதீகத்தில் இணைப்புக் காணமுயன்ற முயற்சி, அதிகமாக நடைபெற்று வந்துள்ளது. இதன் பயனாகச் சைவ வைணவச்சமயங்கள் ஆரிய வைதீகத்தின் கிளைகள் என்னும் எண்ணம் அறிஞர்களிடையே பரவலாக உள்ளது எனலாம்.
ஆனால், ஆரிய இன வரலாற்றையும் ஆரிய வேதங்களையும் ஆரிய சமயங்களையும் ஆராய்ந்தபெருமக்கள், சைவ வைணவச் சமயங்கள் ஆரிய சமயத்திலிருந்து வளர்ந்த எளிய வளர்ச்சிகள்அல்ல எனவும் அவை திராவிட மூலக் கூறுகள் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
திராவிட இன வரலாற்றையும் திராவிட சமய வரலாற்றையும் ஆழ்ந்து ஆராயும்போது.இச்சமயங்கள் திராவிட இன வரலாற்றில் மட்டுமே எழுந்து பரவிய சமயங்கள் எனக்கொள்ளுவதற்கு இடமில்லை.
சைவ வைணவ சமயங்களின் எழுச்சிக்கு முற்பட்ட சங்க காலத்தில், வடக்கிலிருந்து ஆரியநாகரிகமும் மேற்கிலிருந்து யவன நாகரிகமும் தமிழகத்தில் பரவியுள்ளமையைத் தெளிவாக அறியஇயலுகின்றது. இதுவரை தமிழக சமய வரலாற்றை ஆராய்ந்த அறிஞர் பெருமக்களிடையே,தமிழகத்தில் காணப்பட்ட புதிய கருத்துகளை, ஆரிய நாகரிகத்தோடு மட்டும் ஒப்பிட்டு ஆயும்போக்கு வளர்ந்துள்ளதேயன்றி, யவன நாகரிகத்தோடு ஒப்பிட்டு ஆராயும் போக்கு வளரவில்லை.
யவனர்களாகிய கிரேக்கர், உரோமர், யூதர், சீரியர் இவர்களோடு தமிழகத்திற்குச் சங்க காலத்தில்இருந்த நெருங்கிய வணிக உறவு, அண்மைக் காலம் வரை முழுமையாக வெளிப்படாமையேஇதற்குக் காரணம் எனலாம்,
இப்பொழுது கிடைத்துள்ள புதிய வரலாற்று அறிவின் அடிப்படையில் சங்க காலம், அதற்குப்பிற்பட்ட சமய காலம் இவைகளை நாம் ஆராயும்போது, சைவ வைணவ சமயங்களைஉருவாக்கிய பக்தி இயக்கத்தின் மூலக்கருவை, ஆரிய சமய வரலாற்றோடு மட்டும்ஒப்பிடுவதுடன் நிறுத்திவிடாது, யவன சமய வரலாற்றுடனும் ஒப்பிட்டுக் காணுவதுஇன்றியமையாததாகின்றது.
இந்த ஆய்வு அத்தகைய ஒப்பிட்டுக் காணும் ஆய்வின், ஒரு தொடக்கமாகவே அமைந்துள்ளதுஎனலாம்.
விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம் ஆகிய மூன்றும் மிகப் பரந்துபட்ட கடலெனவிளங்குவனவாகும். இம்மூன்றையும் முழு அளவில் ஒப்பிட்டுக்காண எனக்கிருக்கும் அறிவும்வாழ்நாளும் போதா. முப்பெரும் வைரங்களாக விளங்கும் இம்மூன்றையும் இணைத்து நிற்கும்இழையை மட்டுமே இங்குக் காண முயன்றுள்ளேன். வருங்கால ஆய்வுகளே இதைவிடவிளக்கமான ஆழ்ந்த பரந்த உண்மைகளை வெளிப்படுத்தும் என்று நம்புகின்றேன்.
இயேசு பெருமானின் பன்னிரு மாணவர்களில் ஒருவரான தோமா, யவனர்களில் ஒருவராக,இயேசு பெருமானின் நற்செய்தியைச் சங்ககாலத் தமிழகத்தில் பரப்பியமையும், அதன்அடிப்படையில் எழுந்த புதிய சமயக் கருத்துகளின் எழுச்சியும் கி.பி. 16-ஆம் நூற்றாண்டுக்குட்பின்னர் வணிகத்திற்காக வந்த ஐரோப்பியர்களால் பரப்பப்பட்ட ஐரோப்பிய வழிக்கிறித்தவத்திற்கு ஆதரவாக வந்த வீரமாமுனிவர், ஜி.யு. போப் போன்றவர்களால் உய்த்துணர்ந்ததன்மையும் தொடர்ச்சியும் முதல் இயலில் நோக்கப்படுகின்றன.
திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடைய "ஊர்" என்னுமிடத்திலிருந்து புறப்பட்ட ஆபிரகாம்என்பவருடைய பரம்பரையில், எழுந்த யூத இன வரலாற்றில் தோன்றிய யூத சமயத்தின் வரலாறுயூத சமயத் திருமறையாகிய பழைய ஏற்பாட்டில் பேசப்படுகின்ற தன்மையும், அடிமைத்தளையிலிருந்து தங்களை மீட்கும் இறையரசன் தோன்றுவதற்காக அவர்கள் கொண்டிருந்தஎதிர்பார்ப்பும், யூதராகத் தோன்றிய இயேசு கிறித்துவில் நிறைவேறி, அதனால் ஏற்பட்ட உலகமக்களுக்கான நற்செய்தி, உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதும் இரண்டாம் இயலாகியவிவிலியத்தில் ஆயப்படுகின்றன.
கிரேக்க மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட உரோமர்களின் ஆட்சியின்கீழ் வாழ்ந்தயூதராகிய இயேசுவில் வெளிப்பட்ட நற்செய்தி, சங்க இலக்கியத்தில் கிரேக்க ரோம யூதரைச்குறிக்கும் யவனர் என்ற மக்களின் வழியாகத் தமிழகத்தில் பரவியமை யவனர் வழி தமிழகத்தில்கிறிஸ்தவம் என்னும் தலைப்பில் பார்க்கப்படுகின்றது,
இயற்கை நெறிக் காலமாகிய சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்குச் சமய உணர்வையூட்டிசமயநெறிக் காலத்தைத் தமிழகத்தில் தோற்றுவித்த பெருமை, சமயம் கலந்த அறநெறி நூலாகியதிருக்குறளுக்கு உண்டு. இது, "திருக்குறள்" என்னும் தலைப்பின்கீழ் ஆயப்படுகின்றது.
இயல்புடைய மூவராகிய கடவுள், வான், நீத்தாரைக் கூறும் திருக்குறளால் உந்தப்பட்ட பக்திஇயக்கத்தின் கனிகளாக விளங்கும் சைவ வைணவ சமயங்களும், சைவம் உருவாகிய பன்னிருதிருமுறை தோன்றித் தொகுக்கப்பட்ட போக்குகளும் அவற்றின் அடிப்படையில் சித்தாந்தசாத்திரங்கள் பதினான்கு தோன்றியமையும், வேற்றுக் கொள்கையினரால் பன்னிரு திருமுறையும்சித்தாந்த சாத்திரங்களும் ஊடுருவப்பட்டுள்ளமையும் சைவத்தை உருவாக்கியவர்கள்வேற்றுமக்களால் கீழாக நோக்கப்பட்ட தன்மையும் சைவ சித்தாந்த சாத்திரம் என்னும்தலைப்பின்கீழ் ஆராயப்படுகின்றன.
விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் இவை மூன்றற்கும் தொடர்புடைய புலால் மறுத்தல்பிறவி சுழற்சிக் கோட்பாடு ஆகிய இரண்டும் "ஒப்பாய்வு-1” என்னும் பகுதியில் ஒப்புநோக்கப்படுகின்றன.
விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் இவை மூன்றற்கும் தொடர்புடைய புலால் மறுத்தல்பிறவி சுழற்சிக் கோட்பாடு ஆகிய இரண்டும் "ஒப்பாய்வு-1" என்னும் பகுதியில் ஒப்புநோக்கப்படுகின்றன,
உலகப் படைப்பு: வீழ்ச்சி, குருவாதல், தவத்தினில் உணர்த்தல், மீட்பு, திருக்கூட்டம், முக்திபோன்ற சமய அடிப்படை உண்மைகள் மூன்றுடனும் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன.
இவ்வாய்வின் விளைவாகப் புலப்படுத்தப்பட்டுள்ள புதிய செய்திகள்:
1. திராவிடப் பண்புடன் கூடிய ஆபிரகாமின் வழி வந்த கோயில் வழிபாட்டுச் சமயங்களாவளர்ச்சியடைந்த யூத கிறித்தவ சமயங்களின் அடிப்படையில் தமிழகத்தில் எழுந்இயக்கமே பக்தி இயக்கமாகும்.
2. பக்தி இயக்கத்தின் பயனாகத் தோன்றிய தமிழ்ச் சமயங்களாகிய சைவமும் வைணவமும்ஆரிய வைதீகத்திலிருந்து எழுந்த சமயங்கள் அல்ல.
3. சைவ தத்துவங்களாகிய அத்வைதமும் சைவசித்தாந்தமும் வைணவத் தத்துவங்களாகிவிசிட்டாத்வைதமும் துவைதமும் திராவிட மக்களிடையே தோன்றியவை, அவை ஆரியவைதீக சமயங்களிலிருந்து உருவானவை அல்ல.
4. ஆதிக் கிறித்தவத்தின் அடிப்படையிலெழுந்த திராவிடச் சான்றோர்களாகிய சைவசித்தாந்நூலாசிரியர்களும் சித்தர்களும் ஆரிய வைதீகத்தை எதிர்த்தமையாஇழிவுபடுத்தப்பட்டுள்ளனர்.
5. சங்க இலக்கியங்களில் காணப்படும் யவனர்களின் வழி வந்தவர்களே இன்றுநம்மிடையே உள்ள சீரியக் கிறித்தவர்கள். இடைக்காலத்தில் இவர்களுக்குத் தனி நாஇருந்தது. தன்னாட்சி உரிமையுடன் விளங்கினார்கள்.
6. கிறித்தவம் கி.பி. 16-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் தமிழகத்தில் பரவிய சமயமன்றஇந்தியாவில் பிற்கால ஐரோப்பிய வழிக் கிறித்தவம், இந்திய மக்களிடையே செல்வாக்குபெறவியலாமைக்கு, இந்தியாவில் பரவியிருந்த ஆதி கிறித்தவத்தை அது அறியாமலுபுரியாமலும் உணராமலும் புறக்கணித்தமையே காரணமாகும்.
7. திருக்குறளில் புதிராய் இருந்துவந்த பாயிர அமைப்பு முறையும் ஐந்தவித்தான், வால்நீத்தார், இயல்புடைய மூவர் போன்ற சொற்றொடர்களும் புதிர் நீங்கித் தெளிபெற்றுள்ளன,
8. தோமா தமிழகத்திற்கு வந்து ஆற்றியுள்ள சிறப்புத் தொண்டுகள், வரலாற்று விளக்கத்துடாபுலப்படுத்தப்பட்டுள்ளன.
9, மயிலாப்பூரிலுள்ள தோமா புதைக்கப்பட்ட இடம், தமிழகத்திலுள்ள ஆகிறித்தவர்களுக்கும் பிற்காலக் கிறித்தவர்களுக்கும் இடையேயுள்ள தொடர்கஇணைக்கும் பாலமாக விளங்கிக்கொண்டிருக்கிறது.

