தேவன் ஒருவராமூவரா?
போதகர் பி.வி. பவுலி
அதிகாரம் 1 (2)
பரிசுத்த ஆவி தேவன்தான் என்பதற்கான ஆதாரங்கள்:
1. நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும் தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? (1 கொரி.3:16). உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமா யிருக்கிறதென்றும் 1 கொரி.6:19ல் வாசிக்கிறோம். இதில் தேவன் என்பதையும், பரிசுத்த ஆவி என்பதையும் ஒரே அர்த்தத்தில்தான் சொல்லப்பட்டுள்ளது.
ii. யாத்.17:7ல் கர்த்தரை பரீட்சை பார்த்ததின் நிமித்தம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதே சம்பவம் எபி.3:7-9 வரை பார்க்கும் போது பரிசுத்த ஆவியை பரீட்சை பார்த்தார்கள் என்று பார்க்கிறோம். இதிலிருந்து கர்த்தர் என்றும் பரிசுத்த ஆவி என்றும் சொல்லுவது ஒரே தேவனைத்தான் என்பதை அறிந்துகொள்
ளலாம். iii. கர்த்தரே ஆவியானவர் கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கு விடுதலையுண்டு (2 கொரி.3:17). இங்கு ஆவியானவர்தான் கர்த்தர் என்று பார்க்கிறோம்.
iv. வெளிப்படுத்தின விசேஷத்தில் சபைகளுக்கு எழுதும்போது இயேசு சொல்வதாக ஆரம்பத்திலும், ஆவியானவர் சொல்வது என்று முடிவிலும் சொல்வதை 2,3 அதிகாரங்களில் பார்க்க முடியும். இதிலிருந்து இருவரும் ஒன்றுதான் என்பதை அறியலாம்.
v, எரே.17:13ல் கர்த்தர் ஜீவ ஊற்று என்றும் அதே வார்த்தை பயன்படுத்தி ஆவியானவர் ஜீவ ஊற்று என்று யோவா.7:37, 38 வசனங்களில் பார்க்கலாம்.
vi. 1 கொரி.12:4-11 வரையிலான வசனங்கள் பார்க்கும்போது ஆவியானவர், கர்த்தர், தேவன் என்று மூன்றுவிதமாக வருவதைப் பார்க்கலாம். ஆனால் 6ம் வசனத்தில் இவையெல்லாம் செய்வது ஒரே தேவன் தான் என்றும் 11ம் வசனத்தில் இவையெல்லாம் செய்வது ஆவியாவர் தான் என்று சொல்வதையும் பார்க்கமுடியும். இதிலிருந்து பரிசுத்தஆவியும், தேவனும் ஒன்று என்பதை எந்த சந்தேகத்தற்கும் இடமின்றி அறியலாம்.
2. பரிசுத்த ஆவியின் தெய்வீக கிரியைகள்:
1. தேவன் எல்லாம் சிருஷ்டித்தார் என்று வாசிக்கிறதுபோல பரிசுத்த ஆவியும் எல்லாம் சிருஷ்டித்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது (சங்.33:6, 104:29,30; யோபு 33:4).
ii. பரிசுத்த ஆவி உயிப்பிக்கிற ஆவி என்று சொல்லப்பட்டுள்ளது ரோம.8:11
.iii. தேவன் எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் இருப்பதுபோல பரிசுத்தஆவியும் ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் இருப்பதாக சொல்லப்பட்டுள்ள து (சங்.139:7-10).
iv. பரிசுத்தாவியை ஜீவ ஆவி என்று சொல்லப்பட்டுள்ளது (ரோம.8:2)
V. தேவன் நித்திய நித்தியமாக இருப்பதுபோல பரிசுத்தஆவியையும் நித்தியஆவி என்று சொல்லப்பட்டுள்ளது (எபி.9:14)
.vi. தேவன் ஜீவன் கொடுப்பதுபோல பரிசுத்த ஆவியும் ஜீவன்கொடுக்கமுடியும் என்று எசே.37:1-10 வரையிலான வசனத்தில்பார்க்கலாம்.
A. பரிசுத்த ஆவிக்கு சொல்லப்பட்ட நாமங்கள் பரிசுத்தஆவிதேவன் தான் என்பதை நிரூபிக்கின்றன.
அநேக வசனங்கள் ஆதாரமாக இருந்தாலும் ஒரு சில வசனங்களை மட்டும்இங்கு எடுத்துரைக்கின்றேன்.a.
a 1 கொரி.3:16ல் தேவனுடைய ஆவி என்று பார்க்கிறோம்
b கர்த்தருடைய ஆவி என்று ஏசா.11:2ல் உள்ளது
c. கர்த்தராகிய தேவனுடைய ஆவி என்று ஏசா.61:1ல் உள்ளது
d ஜீவனுள்ள தேவனுடைய ஆவி என்று 2 கொரி.3:3ல் உள்ளது
e. பரிசுத்த ஆவி என்று லூக்.11:13ல் உள்ளது
f சத்திய ஆவி என்று யோவா.14:17ல் உள்ளது
g. கிறிஸ்துவின் ஆவி என்று ரோம.8:9ல் உள்ளது
h. இயேசு கிறிஸ்துவின் ஆவி என்று பிலி.1:19ல் உள்ளது
i. மகிமையுள்ள ஆவியானவர் என்று தேவனுக்கு ஒப்பானவார்த்தையைக் கொண்டு பரிசுத்த ஆவியைக் குறிப்பிடப்பட்டுள்ளது1 பேது.4:14ல் உள்ளது
j நித்திய ஆவி என்று ஆரம்பமும் முடிவும் இல்லாத அவருடைய நிலையைஎபி.9:14ல்
உள்ள து.
இந்த வசனங்கள் எல்லாம் பரிசுத்த ஆவி தேவன் என்பதை நிரூபிக்கின்றன.
4. பரிசுத்த ஆவியின் தெய்வீகத் தன்மைகள்:
i. உயிர்ப்பிக்கும் ஆவி (யோவா.6:63; ரோம.8:2)
ii. சர்வ வல்லவர் என்று பரிசுத்தஆவியை சொல்வதைப் பார்க்கிறோம் (சக.4:6; யோபு 33:4).
iII. ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் இருக்கக் கூடியவர் (சங்.139:7-10).
iv. நித்திய ஆவி (எபி.9:14).
v. தேவன் பரிசுத்தராய் இருப்பதுபோல இவரும் பரிசுத்தர் என்று மத்.12:32ல் பார்க்கலாம்.
vi. தேவன் சத்தியமாக இருப்பதுபோல இவரும் சத்தியமாக உள்ளார் (யோவா.14:17).
5. தேவன் ஆள் தன்மை உள்ளவராக இருப்பதுபோல் பரிசுத்தாவியும் ஒரு நபராக இருக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள்:
1. பரிசுத்தாவியை ஒரு நபராக அழைப்பதுபோல அநேக இடங்களில் அழைக்கப்பட்டுள்ளது.
a. அவர் என்று பார்க்கிறோம் (யோவா. 15:26, 16:13,14)
b. அவரை என் று யோவான் 16:7,8, 13,14 ஆகிய வசனங்களில் பார்க்கிறோம்
c. தாம் என்று யோவான் 16:13ல் பார்க்கலாம்,
ii. ஒரு நபருக்கு இருக்கக்கூடிய செயல் திறன்கள் பரிசுத்தாவிக்கு உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.
a. அறிகிறவர் (1 கொரி.2:10)
b. அவருக்கு என்று சித்தம் உள்ளதாக (1 கொரி.12:11)ல் பார்க்கலாம்
c. அறிவுள்ளவர் என்று (நெகே.9:20)ல் காணலாம்.
d. அவரை துக்கப்படுத்த முடியும் (எபே. 4:30)
iii. ஒரு நபர் செய்யக்கூடிய கிரியைகள் பரிசுத்த ஆவி செய்வதாகச் சொல்லப்பட்டுள்ளது.
a. தேவனுடைய ஆழங்கள், ஆராய்கிறார் (1 கொரி.2:10)
b, சபையோடு பேசுகிறார் (வெளி.2:7)
c. மனுஷருக்காக பரிந்து பேசுகிறார் (ரோம.8:26)
d. சாட்சி கொடுக்கிறார் (யோவா.15:26)
e. போதிக்கிறார் (யோவா.14:26)
f. பகிர்ந்து கொடுக்கிறார் (1 கொரி. 12:11)
g. ஒரு மனிதனை எடுத்துக்கொண்டு போகிறார் (அப்.8:39)
h. தடை செய்கிறார் (அப்.16:6,7)
i. நடத்துகிறார் (ரோம்.8:14)
j. நியமனம் செய்கிறார் (அப்.20:28)
k. அனுப்புகிறார் (அப். 13:1,2)
l. கண்டித்து உணர்த்துகிறார் (யோவா.16:8)
m. இயேசுவினுடையதை எடுத்து அறிவிக்கிறார் (யோவா.16:14)
n. கூடவே வாசம் பண்ணுகிறவர் (யோவா.14:17)
0. நினைப்பூட்டுகிறார் (யோவா.14:26)
iv. ஒரு மனிதனுக்கு நாம் செய்யும் காரியம் அவர் பகுத்தறிவதுபோல பரிசுத்த ஆவியும் அறிகிறார்.
a. பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள் (ஏசா.63:10)
b. ஆவியானவரை துக்கப்படுத்த முடியும் (எபே.4:30)
c. பரிசுத்தஆவியை பரிகசிக்கவும் நிந்திக்கவும் முடியும் (எபி.10:29)
d. பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் சொன்னார்கள் (அப்.5:3,4)
e. பரிசுத்த ஆவியை தூஷன மான வார்த்தைகளால் பேசமுடியும் (மத்.12:31,32)
f. பரிசுத்தஆவியோடு எதிர்த்து நிற்கமுடியும் (அப்.7:51)
V, பரிசுத்த ஆவியின் நாமம் பிதாவோடும் குமாரனோடும் சேர்ந்து ஏக நாமமாக சொல்லப்பட்டுள்ளது.
a. மத்.28:19ல் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று மூன்றாக இருந்தாலும் பண்மையில் சொல்லாமல் ஒருமையில் நாமத்தில் என்று சொல்லப் பட்டுள்ளது.
b. 2 கொரி.13:14ல் கர்த்தராகிய இயேசு பிதாவாகிய தேவன் என்பவர்களோடு இணைத்து பரிசுத்த ஆவியையும் சொல்வதை பார்க்கலாம்.
இங்கு நாம் பார்த்தவேத வசனங்கள் எல்லாம் பரிசுத்த ஆவி மெய் தேவன் என்பதற்கு தெளிவான ஆதாரங்களாகும்.
7. இயேசுவை தேவன் என்று சொல்வதைப் பார்க்கிறோம் (ரோம.9:5)
1 இயேசு கிறிஸ்து தேவன் என்பதற்கு வேதத்தில் கூறப்பட்டுள்ள தெளிவான வேத வசன ஆதாரங்கள்.
i. வல்லமையுள்ள தேவன் என்று இயேசுவை அழைப்பது ஏசா.9:6ல்
ii. வார்த்யைான தேவன் என்று யோவான்.1:1லும் இந்த வார்த்தைதான் மாமிசத்தில் வெளிப்பட்டது என்று யோவா.1:14லும் பார்க்கலாம்.
III. இயேசுவின் சீடனாயிருந்த தோமா இயேச வை தெளிவாக தேவனே என்று அழைக்கிறார் யோவா.20:28,
iv. சர்வத்திற்கும் மேலான தேவன் என்று ரோம,9:5ல் பார்க்கலாம்,
v. மகாதேவன் என்று தீத்து 2:12,13ல் பார்க்கலாம்.
vi, பிதாவாகிய தேவன் இயேசுவை தேவனென்று அழைக்கிறார் எபி.1:8
vil. மெய்யான தேவன் என்று 1 யோவா.5:20ல் பார்க்கலாம்.
vill., சர்வவல்லமையுள்ள தேவன் என்று வெளி. 19:6ல் பார்க்கலாம்,
ix. மகிமையின் தேவன் என்று 1 கொரி.2:8லும்
x, தேவன் என்று அப்.20:28லும் பார்க்கலாம்.
xi. சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் என்று வெளி.21:22ல் பார்க்கலாம்.
மேலே பார்த்த வசனங்களில் எல்லாம் யாராவது ஏதேனும் காரியத்திற்காக இயேசுவை தேவனாக்கினார் என்றில்லை. அவர் மெய்யான தேவன்தான் என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளதை பார்க்க முடியும்,
2. தேவனுக்கு இருக்கக்கூடிய தன்மைகள் இயேசுவில் பார்க்கலாம்.
i. தன்னில் தானே ஜீவன் உள்ளவர் (யோவா.1:14, 14:5)
ii. யாருடைய உதவியும் இல்லாமல் வாழக்கூடியவர் பான் பதை முழு வேதாகமத்திலும் காண முடியும்.
III, பாறாதவர் என்று (எபி13:8)
iv. சத்தியமானவர் என்று (யோவா.14:6) 4 பரிசுத்தர் என்று . (லூக்.1:35}
v. ஆரம்பம் இல்லாதவர் வாள்று (யோவா 1:1; எபி.7:3)
vi, சர்வ வல்லவர் என்று (வெளி 19:6)
vii, சாய்பாம் அறிகிறவர் சான்று (யோவா 21:17, 16:30; கொலே.2:3)
viii. எல்லா இடத்திலும் இருப்பவர் (மத் 18:20; யோவா.1:18, 3:13)
ix. இயேசுவுக்குள் தாள் சகல பரிபூர்ணா மும் என்று (கொwே.t: 19, 2:9)
x. இயேசு நித்தியர் என்று அதாவது என் றும் இருக்கிறவர் என்று யோவா. 1:2}ல் சொல்லப்பட்டுள்ளது.
3, தேவன் மட்டும் செய்யக்கூடிய காரியங்களை இயேசு செய்திருக்கிறார்:
i இயேசு சிருஷ்டி கர்க்கர் (யோவா 1:3; கொயே 1:15 16)
ii. தேவன் எல்லாம் காத்துக்கொள்வதுபோல இயேசுவும் காத்துக்கொள்கிறார் (எபி. 1:3),
iii. பாவங்களை மன்னிக்கிறார் (மாற்.2:5-10)
iv. பாரித்தவர்களை உயிர்ப்பிக்கிறார் (யோவா.6:39-44)(இது லாசருவையும் மற்றவர்களையும் உயிர்ப்பித்த காரியம் அல்ல)
v. மனிதனை உருமாற்றம் அடையச் செய்கிறார் (பிலி.3:21)
vi, நித்திய ஜீவளளிக்கிறார் (யோவா 10:28, 17:2)
vii. நியாயத் தீர்ப்பளிக்கிறார் (யோவா.5:22-27)
viii. மனுஷனை இரட்சிக்கிறவர் அவர் (மத்.1:21; 1 தீமோ .1:15; வெளி.7:10)
v. இயற்கையை கட்டுப்படுத்துகிறார் (லூக்.8:24; மாற்.4:39; மத்.14:25.26)
4. தேவனை ஆராதிப்பதுபோல இயேசுவையும் ஆராதிக்கிறார்கள்
i. சீடர்கள் பணிந்துகொண்டார்கள் (மத்.18:9,17, 14:33)
ii. சாஸ்திரிகள் பணிந்துகொண்டார்கள் (மத்.2:11)
iii. குஷ்டரோகிகள் பணிந்துகொண்டார்கள் (மத்.8:12)
iv. அசுத்த ஆவிகளும் பணிந்துகொண்டன (மாற்.5:6, 7) (இங்கு பணிந்துஎன்பதை ஆராதனை என்றுதான் சரியாக மொழிபெயர்க்கவேண்டும்).
v. சர்வ சிருஷ்டிகளும் இயேசுவை ஆராதிப்பது வெளி.5:8-14ல் பார்க்கலாம்
vi. முதல் நூற்றாண்டில் இயேசுவின் நாமத்தை எங்கும் தொழுதுகொண்டார்கள் (அப்.9:10-14; 1 கொரி.1:2)
.vii. ஸ்தேவான் இயேசுவை தொழுதுகொண்டான் (அப்.7:59)
vii. தேவ தூதர்கள் இயேசுவை தொழுதுகொண்டான் (எபி.1:6)
ix. ஏசாயா பார்த்த தரிசனத்தில் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர்,பரிசுத்தர் என்று சொல்லி சேராபீன்கள் ஆராதனை செய்ததுஇயேசுவைத்தான் என்பதை யோவா.12:41ல் வாசிக்கிறோம்.
x. 1 பேது.4:11ல் மகிமை என்றைக்கும் தேவனுக்கு என்று சொல்லும் பேதுரு2 பேது.3:18ல் மகிமை இயேசுவுக்கு என்று சொல்வதால்அப்போஸ்தலனாகிய பேதுரு இயேசுவை தேவனாக ஆராதித்தார்என்பதை புரிந்துகொள்ளலாம்.
xi. எல்லா முழங்காலும் அவருக்கு முன் முடங்கும் (பிலி.2:10)
xii. என்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் (ரோம.9:5)
5. பிதாவாகிய தேவனைக்குறித்துச் சொல்லப்பட்டகாரியங்கள் இயேசுவைக் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது.
i. இராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும் (1 தீமோ.6:15; வெளி.17:14)
ii. அல்பாவும் ஒமேகாவும் வெளி.1:8ல் பிதாவாகிய தேவனையும் 11ம்வசனத்தில் இயேசுவையும் சொல்லப்பட்டுள்ளது.
iii. பிதாவாகிய தேவனை கர்த்தர் என்று சொல்லியிருப்பது போலஇயேசுவையும் கர்த்தர் என்று பல இடங்களிலும் சொல்லப்பட்டுள்ளது 1தீமோ.1:1,2, 12-14 மற்றும் பல இடங்களிலும் பிதாவை கர்த்தர் என்றுசொல்வதை பார்க்கலாம். ஆனால் 1 கொரி.8:6ல் ஓரே கர்த்தர்இயேசுதான் என்று பார்க்கிறோம் 1 தெச.1:6, 2:1, 14:16 மற்றும் பலஇடங்களிலும் இயேசுவை கர்த்தர் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளதைநாம் பார்க்கமுடியும்.
6. பிதாவாகிய தேவனுக்கு இயேசு சமமாக இருக்கிறார்:
i. தேவனுக்கு சமம் என்று (பிலி.2:6)லும்
ii. தேவனுடைய மகிமையின் பிரகாசம் என்று எபி.1:3லும்
iii. பிதாவாகிய தேவனுடைய தன்மையின் சொரூபம் என்று எபி.1:3லும்
iv. தேவனுடைய எல்லா பரிபூர்ணமும் இயேசுவில் என்று கொலே. 1:19, 2:9வசனங்களிலும்» தேவனும் இரட்சகரும் என்று 2 பேது. 1:1லும் பார்க்கலாம்.
7, பிதாவாகிய தேவன் இயேசுவை தேவன் என்றும் கர்த்தர்என்றும் அழைப்பதை வேதத்தில் தெளிவாக பார்க்கமுடியும்.
i. (சங்.110:1; எபி.1:8) கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி என்றும்
ii. சகரி.3:2ல் கர்த்தர் உன்னை கடிந்துகொள்வாராக என்றும்
iii. ஓசியா 1:7ல் அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே என்றுபிதாவாகிய தேவன் சொல்வதைப் பார்க்கலாம்.
iv. (சகரி.10:12) நான் அவர்களைக் கர்த்தருக்குள் பலப்படுத்துவேன்அவர்கள் அவருடைய நாமத்தில் நடந்துகொள்வார்கள் என்று கர்த்தர்சொல்லுகிறார். இந்த வசனத்தில் பிதாவாகிய தேவன் இயேசுவைகர்த்தர் என்று சொல்வதைப் பார்க்கலாம்.
v எல்லா நாவும் இயேசுவை கர்த்தர் என்று அறிக்கை செய்யும்படிபிதாவாகிய தேவன் அவரை உயர்த்தினார் (பிலி.2:11)
.மேலே நாம் வாசித்த வசனங்கள் இயேசு மெய்யான தேவன் என்பதற்குத்தெளிவான ஆதாரங்களாக இருக்கின்றன.
8. பிதாவாகிய தேவன் என்று 1 கொரி.8:6ல் பார்க்கிறோம்.
1. பிதாவாகிய தேவன் என்று சொல்லப்பட்டுள்ளது.
i. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு (1 கொரி.8:6)
ii. நம்முடைய பிதாவாகிய தேவன் (ரோம.1:3)
iii. பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக (பிலி.2:11)
2. பிதா என்று பலரும் அழைத்திருக்கிறார்கள்:
i. இயேசு கிறிஸ்து அவரை பிதா என்று அழைத்திருக்கிறார் யோவா.17:11
ii. விசுவாசிகள் அவரை பிதா என்ற அழைக்கலாம் (மத்.6:9; கலா.4:1)
iii. இஸ்ரவேல் ஜனத்திற்கு அவர் பிதா (ஏசா.63:15)
iv. இரக்கங்களின் பிதா என்று அவரை அழைக்கிறார் (2 கொரி.1:3)
v. ஜோதிகளின் பிதா என்று யாக்.1:17லும்
vi. ஆவிகளின் பிதா என்று எபி.12:9லும்
vii. மகிமையின் பிதா என்று எபே.1:17லும் பார்க்கலாம்
3. பிதாவாகிய தேவனும் ஆள்தன்மையுடையவராக இருக்கிறார்
i. ஒரு நபர் நடந்து வருவதுபோல் நடந்து வருகிறார் (ஆதி.3:8)
ii. முகர்ந்து அறிகிறார் (ஆதி.8:21)
iii. ஆராய்கிறவரும் அறிகிறவருமாக இருக்கிறார் (1 நாளா.28:9; சங்.139:1-6)
iv. ஆலோசனை செய்கிறவர், அல்லது திட்டங்கள் தீட்டுகிறவராகஇருக்கிறார் (ஏசா.46:10; ஆதி.1:26)
v. சீர்தூக்கிப் பார்க்கிறார் (நீதி.5:21)
4. பிதாவாகிய தேவனின் செயல்பாடுகள்:
i. சிருஷ்டிக்கிறார் (ஆதி.1:1)
ii. ஏற்கனவே சிருஷ்டித்த பொருளிலிருந்து வேறு ஒன்று சிருஷ்டிக்கிறார்(ஆதி.2:19)
.iii. பாதுகாக்கிறார் (சங்.66:9; நீதி.2:8)
iv. பராமரிக்கிறார் (யோபு 12:10; சங்.147:9)
v. ஆளுகை செய்கிறார் (சங்.103:19)
vi. இரட்சிக்கிறார் (1 தீமோ.1:1; 2 சாமு.22:2)
vii. நியாயத்தீர்ப்பளிக்கிறார் (ஆதி.18:25),
5. பிதா குமாரன் பரிசுத்த ஆவி மூன்றும் தனித்தனியே ஆள்தன்மைஉடையவர்கள்தான்.
i. (மத்.3:16,17)ல் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, தனித்தனியாகப்பார்க்கிறோம்
ii. (மத்.17:5)ல் பிதா குமாரன் தனித்தனியாகப் பார்க்கலாம்
iii. குமாரனும் பிதாவும் (யோவா.11:41)
iv. குமாரனும் பிதாவும் (மத்.11:25)
v. நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால் என்று (யோவா.14:12)ல்பார்ப்பதில் தனிநபர்கள் என்று புரிந்துகொள்ளலாம்.
vi. நான் பிதாவை வேண்டிக்கொள்வேன் (யோவா.14:16)
vii. பிதா குமாரன் பரிசுத்த ஆவி (யோவா.14:26)
viil. குமாரன் பிதா (லூக்.23:34).
இன்னும் அநேக காரியங்களை எடுத்துக்காட்ட முடியும். ஆகிலும்இறையியல் ஒரு பெரிய காரியம். அதில் எல்லா பிரிவுகளையும் இங்குவிளக்கிக்கூற முடியாது. இது ஒரு கேள்விக்கான பதிலாக எழுதுவதால்மிகமுக்கியமான சில குறிப்புகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரைநாம் பார்த்த வேத வாக்கியங்களிலிருந்து வயிறு, மோசே, அநேக தேவர்கள்,மனிதர்கள்.
மரித்தவர்களுடைய ஆவி என்று சொல்லும் அசுத்தாவிகள்,இப்பிரபஞ்சத்தின் பிரபு முதலியவைகள் மெய்யான தேவன் என்றுசொல்லப்படவில்லை என்றும் ஆனால் பிதாவையும், குமாரனையும்,பரிசுத்த ஆவியையும் மெய் தேவன் என்று தெளிவாக வேதம் சொல்கிறதுஎன்பதையும் பார்த்தோம்.இப்போது நமக்குள் எழக்கூடிய மிக முக்கியமான கேள்வி, மூன்றுதேவனா அல்லது ஒரே தேவனா, வேதம் முரண்பாடான காரியங்களைபோதிக்கின்றதா.
கீழ்வரும் பகுதிகளை பொருமையுடன் படிக்கும்போதுஇதற்கான பதில் கிடைக்கும். தொடர்ந்து படிக்கும்படி பணிவுடன்கேட்டுக்கொள்கிறேன்.


இயேசு கிறிஸ்து யார்?
ReplyDeleteகேள்வி: பிதாவாகிய தேவன் நமக்காக இறங்கி வரமுடியுமா? அவர் யார் என்பதை அறியமுடியுமா?
பரிசுத்த வேதாகமத்தை ஆராய்ந்து பாருங்கள்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யார் என்கிற சத்தியங்களை விளங்கிக்கொள்ளுங்கள்.
யோவா 14:7 என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
யோவா 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். I and the Father are ONE.
I கொரி 15:47 முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
சத்தியம் என்ன: பிதாவும் குமாரனும் ஒருவர் என்பதே வேதத்தில் உள்ள சத்தியம்.
எச்சரிக்கை: பிதாவாகிய தேவனை அறியமுடியாதென்றும்; பிதாவாகிய தேவன் இறங்கி வரமுடியாதென்றும்; அவர் வரவில்லை என்றும் சொல்கிற திரித்துவ உபதேசத்தின் (Trinity teaching) விளக்கமும், போதகமும் மனிதனுடைய இரட்சிப்பை கேள்விக்குறியாக்கும் சாத்தானுடைய தந்திரங்கள், வஞ்சிக்கப்படவேண்டாம்! எச்சரிப்படையுங்கள்!!
மேலேயுள்ள வசனங்கள் உங்களுக்கு தெளிவை தரவில்லையா? ஒரே ஒரு வழியுண்டு; கீழேயுள்ள வசனத்தை வாசியுங்கள். பின்னும் வேதாகமத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யார் என்பதை தேடுங்கள்; பிதா குமாரன் என்கிற உவமையான வார்த்தைகளின் கருத்தை அறிந்துகொள்ளுங்கள். உண்மையான வாஞ்சையுடன் கர்த்தரையே கேளுங்கள், பிதாவை உங்களுக்கு வெளிப்படுத்தவும் நீங்கள் அவரை அறிந்துகொள்ளவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
மத் 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.