கிறிஸ்துவின் செயல்
நித்திய ஜீவனுக்கான நம்பிக்கையைப் பெற்றெடுக்கிறது (தீத்து 1)
"நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்கு படுத்தும்படிக்கும் ...பட்டணங்கள்தோறும் மூப்பர்களை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக்கிரேத்தா தீவிலே விட்டுவந்தேனே” (தீத்து 1:5).
பொய்யுரைக்க முடியாத தேவனால் காலம் தொடங்குவதற்குமுன்பாகவே நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டது. பொய்யர்கள் என்றும்பெரு வயிற்றுச் சோம்பேறிகள் என்றும் அறியப்பட்டிருந்து, அந்தக்கணத்துக்காக மட்டும்/அந்த வேளைக்காக மட்டும் பெருமளவில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வாக்குத்தத்தத்தின் தனிச்சிறப்புதான் எப்படியுள்ளது (1:12)! பவுல் தீத்துவுக்கு எழுதிய நிருபத்தின்தொடக்கத்திலும் முடிவிலும் அவர், கிறிஸ்தவர்களாய் ஆகியிருந்தகிரேத்தர்கள் உலகப் பிரகாரமானவைகளுக்கு அப்பால்
கண்ணோக்கி,நித்தியத்தின்மேல் தங்கள் நம்பிக்கையைக் கட்டி எழுப்ப வேண்டும் என்றதமது விருப்பத்தை விளக்கியுரைத்தார் (1:2; 3:7).பவுல் தமது நிருபத்தை, கிறிஸ்துவினிமித்தமான செயல்பாடுகளின்கவனம் செலுத்துதலிலும் தீத்து எவ்விதம் கிரேத்தர்களை மீட்பின்பக்குவத்தை நோக்கி இயக்க முடியும் என்பதிலும் தொடங்கினார் (1:1-4).அவர் கண்காணிகளுக்கான தகுதிகள் மற்றும் தேவை குறித்து விவரிக்கையில்(1:5-16), சபையில் தொடர்ந்த வழிகாட்டுதலுக்கான அவசியம் பற்றிக்கவனம் கொடுத்தார். கிரேத்தர்கள் தங்கள் கலகம் விளைவிக்கும் வாழ்விலிருந்து மீட்கப்பட முடியும், தக்க வழிகாட்டுதலுடன் அவர்கள் உண்மைநிறைந்த தேவபக்தியுள்ள வாழ்வை நடத்த முடியும் என்பதைப் பவுல்அறிந்திருந்தார்.
பாடம் 1: கிறிஸ்துவின் செயலும்மீட்பும் (1:1-4)
பவுல் விசுவாசத்தில் தமது “உத்தம குமாரனுக்கு” (இந்நிருபத்தை )எழுதுகையில், கிறிஸ்துவில் மீட்பின் சாதகநிலை மற்றும் சாத்தியக் கூறுஆகியவற்றை உடனடியாக முன் வைத்தார்.
மீட்பின் வழி (வ. 1)
பொருளாதாயக் கொள்கையிலிருந்து தேவபக்தியுள்ள சிந்தனைக்குக்கடந்து செல்வதற்கான வழியானது வசனம் 3ல் பட விளக்கம் போல்தரப்பட்டுள்ளது: “தேவ பக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவு.”பவுல் தம்மை "அப்போஸ்தலர்'' என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் முன்பு, தாம் தேவனுடைய “ஊழியக்காரராய்” இருந்ததாகக்கூறினார். ஒருவர் நல்ல ஊழியக்காரராய் இருக்க மனவிருப்பம்கொண்டிராத வரையில், அவர் இயேசுவுக்கு ஒரு நல்ல செய்தியாளராய்இருக்க முடியாது.
அடுத்து பவுல் தேவனுடைய தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள்(அதாவது) “தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்” என்பவர்களின்விசுவாசத்தைப் பற்றிப் பேசினார். இது இரட்சிக்கப்படும்படிக்குகுறிப்பிட்ட மக்களை தேவன் முன் குறித்து (தெரிந்து கொண்டு), பிறரைஆக்கினைத் தீர்ப்புக்கு உட்பட்டவர்களாய் இருக்கும்படி இரக்கமற்றவகையில் முன் குறித்தார் என்ற கால்வினீய உபதேசமாய் இருப்பதில்லை.தேவன் மக்களை மீட்க ஒரு திட்டத்தைக் கொண்டிருந்தார், மற்றும்மீட்புக்கான அவருடைய திட்டத்தை யார் ஏற்றுக் கொள்வார்கள் என்பதைஅவர் முன்னறிந்தார். தம்மை மதிப்பவர்கள் மற்றும் நீதியைச் செய்விப்பவர்கள் என்று அவர் அறிந்திருந்த மக்கள் “தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்”அல்லது இரட்சிக்கப்படும்படி அவர் முன் குறித்தவர்கள் ஆவார்கள்.
ஒருவர் தேவபக்தியுள்ளவராவதற்கு வசனத்தின் மீது "விசுவாசமும்”வசனத்தைப் பற்றிய “அறிவும்” தேவைப்படுகின்றன, "இயேசுவைவிசுவாசிக்க முயற்சி செய்து, ஆனால் வசனத்தை அறியாத மக்கள்,அஸ்திபாரம் இல்லாமல் ஒரு வீட்டைக் கட்டும் மக்களுக்கு ஒப்பாய்இருக்கின்றார்கள். இதற்கு மறுபுறம், வசனத்தை அறிந்திருந்தும், கிறிஸ்துவின் திட்டம் மற்றும் கொள்கைகளில் விசுவாசத்தைக் கட்டி எழுப்புவதற்காக (தங்கள்) சொந்த (வாழ்வில்) நடைமுறைப் பயன்பாடுகளைமேற்கொள்ளாதவர்கள் குழப்பம் மற்றும் சண்டை ஆகியவற்றிற்கு ஆதாரமூலமாகின்றனர்.
"தேவபக்தியை” அடைதல் என்பதே சீஷர்களுக்கு மீட்பின் இலக்காகஉள்ளது. கிரேத்தர்களின் பொறுப்பற்ற சோம்பேறித்தனத்தின் சூழலுக்குநேர்மாறான வகையில் மக்களை தேவனுடன் ஒரு திடமானஅடிச்சுவட்டில்)யில் வைப்பதென்பதே பவுலின் இலக்காய் இருந்தது.
குறுகிய நோக்கு கொண்ட வாழ்வு முறைக்குப் பதில் அதனிடத்தில் பவுல்சத்தியம், விசுவாசம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை வைத்தார் (1:11-13).
மீட்பின் விளைவு (வ. 2அ)
தேவபக்தியானது நமது கண்ணோக்குகளை எப்பொழுதும்பரலோகத்திற்கு உயர்த்தி “நித்திய ஜீவனுக்கான நம்பிக்கையில்” நம்மைவிட்டு வைக்கும் (1:2அ). கிறிஸ்துவுடன் உயிர்ப்பிக்கப்பட்டுள்ள/எழுப்பப்பட்டுள்ள (ரோமர் 6:3, 4; கொலோ. 3:1, 2) நிலையானது ஒருவர்தம் சிந்தையை பூமிக்குரிய விஷயங்களின்மேல் வைப்பதற்கு மாறாகமேலானவற்றின்மேல் (தம் சிந்தையை) வைக்கும்படி வழிநடத்த வேண்டும்.பொருளாதாயக் கொள்கைக்கு என்ன ஒரு முறிவு மருந்து!
மீட்பின் நம்பகத் தன்மை (வ. 2ஆ)
பவுல் முன்னிறுத்தியது ஒரு திடமான தளத்தின் மீது அமர்ந்துள்ளது,ஏனெனில் இது “பொய்யுரையாத” (1:3) யெகோவா தேவனிடமிருந்துவந்துள்ளது. எபிரெயர் 6:18, “நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப்பற்றிக்கொள்ளும்படிக்கு அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டுமாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்குஎவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்” என்றுகூறுகிறது. இது "பொய்யர்கள்" (1:12) என்று பெயரிடப்பட்டிருந்தமுத்திரையிடப்பட்டிருந்த கிரேத்தர்களுக்கு ஒரு கூர்மையான நேர்மாறாக/முரண்பாடாக இருந்தது. மீட்பு என்பது "உலகத் தோற்றத்திற்கு முன்பாக”(எபே. 1:4-6) இருந்தே தேவனுடைய மக்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டியதாயிருந்த தேவனுடைய திட்டமும் வாக்குத்தத்தமுமாய்நிலைபெற்று நின்றுள்ளது (யோவா. 17:6, 9, 24ஐக் காணவும்),
மீட்பு வெளிப்படுத்தப்பட்டது (வ. 3)
தேவன் தேர்ந்தெடுத்த வேளையில், தேவனுடைய திட்டமானதுஅவருடைய குமாரனால் "அறிவித்தலில்” கொண்டு வரப்பட்டு அறியப்படுத்தப்பட்ட து (1:3; கலா. 4:4, 5; யோவா. 6:44-68; 17:6-21; எபே. 3:3-5;எபி. 1:1-5). அது வெளிப்படுத்தப்பட்டதும் மட்டுமின்றி கிறிஸ்துவுக்குள்தெளிவாக்கவும்பட்டது.* வேத வசனங்களில் எழுதப்பட்டுள்ள புதிய உடன்படிக்கையில், இப்பொழுது நாம், இதற்கு முன் தூதர்கள் கூட காண்பதற்குஅனுமதிக்கப்படாத மகிமையுள்ள ஒரு சுவிசேஷத்தை வாசிக்க முடியும்(1 பேது. 1:10-12; 1 தீமோ. 1:11). நித்திய தேவன் அவருடைய உன்னதமும்பரிசுத்தமுமான இடத்திலிருந்து "... பணிந்தவர்களின் ஆவியைஉயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும்” (ஏசா. 57:15) கீழே இறங்கி வந்தடைந்தார்.
இந்த மீட்பானது பவுலின் மூலமாக அறிவிக்கப்பட்டது. இவ்வழிமுறையில் நாம் தெய்வீக “கட்டளையை” பெற்றோம். பவுல் பயன்படுத்திய
சொற்றொடர், இது ஒரு பணி ஒப்புவிப்பாக இருந்தது என்பதில்அவருக்கிருந்த ஆர்மிக்க அறிவைச் சுட்டிக் காண்பிக்கிறது. தேவனுடையசெய்தியைக் கொடுப்பதற்கு வெளியில் அடியெடுத்து வைத்து, அந்தச்செய்தியை உண்மையுடன் கையாள வேண்டும் என்று தங்கள் மீதுவிதிக்கப்பட்ட கட்டளையைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் அதைச்செய்பவர்களுக்கு ஐயோ (2 தீமோ . 2:15; 1 பேது. 4:11).தேவன் கட்டளைகளைக் கொடுத்துள்ளார் என்ற உண்மையானது“பிரமாணங்கள் இல்லை” என்ற எந்தக் கோட்பாட்டையும் நீக்கிப்போடுகின்றது! வாழ்க்கைக் கடலில் திசை காட்டும் கருவி எதுவும் இன்றிதத்தளிக்கும்படி நாம் விடப்பட்டிருப்பதில்லை. எது சரியானது, எதுதவறானது என்பதை நாம் அறிய முடியும். தேவனுடைய நீதி வெளிப்படுத்தப்பட்டுள்ளது, அந்தியைப் பொறுத்தமட்டில் தேவனுடையகோபமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நாம் சாக்குப் போக்குகள்எதுவுமற்றவர்களாய் இருக்கிறோம் (ரோமர் 1:16-20). இந்தக் கட்டளைகளில் பலவற்றை நமக்குத் தரும்படி பவுல் தேவனால் தேர்ந்து கொள்ளப்பட்டிருந்தார், அவற்றை நாம் புரிந்து கொள்ள முடியும் (எபே. 3:3-5).
மீட்பைப் பெறுகின்றவர் (வ. 4அ)
பவுல் தீத்துவை ஒரு மும்மடங்கான வழியில் பாராட்டினார். (1) அவர்நித்திய ஜீவனின் நம்பிக்கையை எல்லா மக்களுடனும் பகிர்ந்து கொள்ளத்தொடர்ந்து நடக்கிற மகிமையுள்ள ஊழியத்தில் பங்கேற்பாளராய்இருக்கும்படி சிலாக்கியம் பெற்றிருந்தார். (2) பவுலினால் தீத்து, "என் உத்தமகுமாரன்” என்று விவரிக்கப்பட்டார் (1:1). தீத்து தனது கீழ்ப்படிதலைப்போலியானதாக்கவில்லை; அவர் தேவனுடைய உண்மைப் பிள்ளையாய்இருந்தார் (யோவா. 3:3-5; 1 கொரி, 12:13; கலா. 3:26, 27; மாற். 16:15, 16).(3) தீத்து “பொதுவான விசுவாசத்தில்” இருந்தார் (இது "பொதுவானவிசுவாசத்தின்படி" என்று அர்த்தப்பட முடியும்). பவுலும் தீத்துவும் தேவனுடன் உடன் ஊழியர்களாய் இருந்தனர் (1 கொரி. 3:9). அவர்கள் அந்தவிசுவாசத்தின் ஆர்வத்தில் ஊழியமும் செய்திருந்தனர். இந்த மீட்புபெறப்படும் பொழுது, பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்!
மீட்பின் பலன்கள் (வ. 4ஆ)
"பிதா” என்ற வகையில் தேவனும், "இரட்சகர்” என்ற வகையில் இயேசுவும், நம்மாலே நாம் ஒருக்காலும் அடைய முடிந்திராத தெய்வீக சுதந்தரம்/வாரிசுரிமை மற்றும் பாவங்களிலிருந்து மன்னிப்பு என்ற இரட்டைபயன்கள் அறிவிக்கின்றனர். மீட்புடன் மாபெரும் பலன்கள் வருகின்றன."கிருபை என்பது அவற்றில் ஒன்றாக உள்ளது. கிருபை என்பது"சமாதானத்திற்கும் தேவனுடைய படிக் கல்லாக உள்ளது (1:2ஆ.தீத்துவுக்கு எழுதின நிருபத்தின் இந்த அறிமுகத்தில் பவுல் கொடுத்தபடி, மீட்பின் ஆசீர்வாதங்கள் வேத வாக்கியங்களின் ஏவுதலைஎதிரொலிக்கின்றன.